22 May 2014

விநாடி முள்ளின் நகர்வுகள்,,,,,2


இரண்டுவாரங்களாகிப்போனது.கடந்தஞாயிறின்அதிகாலை வேளை யாக புறப்பட்டார்கள். அவனும் அவனது மனைவியுமாக/

சொந்தக்காரர்கள் கல்யாணம், திருமங்கலத்தில் வைத்து. மண் டபத் தின் பெயர் கூடஏதோ சொன்னார்கள். பத்திரிக்கையை எடுத்துப் பார்க்க வேண்டும்.பத்திரிக்கைஒருசிறிய அளவிலானபோர்வையை போலிருந்தது,

சென்ற வாரம் தபாலில் வந்திருந்தது.தபாலில் வந்த பத்திரிக்கை அழைப்பு தானே?அவசியம் போகத்தான் வேண்டுமா என்ன?,,,,,,,,,,, என்கிற முன் பின் யோசனைக்கெல்லாம் வழி வைக்காமல் கிளம்பி விட வேண்டும் என்கிற உந்துதலில் பைபாஸ் ரோட்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு இவனும் மனைவியுமாக போய் வந்தார்கள்.

பிள்ளைகளை அவனது அக்கா வீட்டிற்கு சனிக்கிழமை இரவே அனுப்பியபின்அன்றைய இரவின் ஒற்றைத்தூக்கம் தூங்க நேரமாகிப் போகிறது. (ஆமாம் சரியாக தூக்கமற்ற நாட்களின் இரவுகளை அடையாளமிடுவது அப்படித்தான்.ஒற்றை தூக்கம் சுமந்த இரவு.)

நேற்றைக்கெல்லாம்இரவுதூங்கரொம்பவும்தான்நேரமாகிப்போனது.  நோயுற்றவரின் இரவு வேளையைப்போல/ பரவாயில்லை ,தூக்கம் வருகிற நான்கு மணி வரைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கைகொடுத்தன.கொஞ்சம்சிரிப்புகொஞ்சம்செய்தி,நிறைய பாடல்கள்  எனகேட்டவாறேபடுத்திருந்தான்.SPBயும்,ஜானிகியம்மாவும்,சுசிலாம் மாவும்,பி.பீசீனிவாசும்,இளையராஜாவும்ஏ.ஆர்ரஹ்மானும்,எம்,எஸ்வி யுமாக பாடல்கள்,இசை என கலந்து கட்டி மனதையும்,காதையும் ,நிறைத்துக்கொண்டிந்த வேளையில் நடிக நடிகையர் திலகத்திலி ருந்து MGR ஜெமினி கணேசன் என தென்பட்டு இன்றைய இளம் நாயக,நாயகியர்கள் வரை காட்சிப் பிம்பங்களாய் கண் நிறைந்து போனார்கள்.

செண்பகாவின் மானுக்கு பாடல்கள் என்றால் உயிர்.அதிலும் நாட்டுப் புறப் பாடல்களின் லயங்களுக்கு மனதை அடகு வைத்து விடுவான். எங்கோ வெகுதூரத்திலிருந்துகாற்றில்மிதந்துவருகிற பாடல்களில் லயித்துப்போனமனோநிலையில்ஆடிக்கொண்டிருக்கிறசீட்டாட்டாத் தில்கவனத்தை விட்டு விடுவான்.வைவார்கள்கூட் டாளிகள்,”ஒனக் கெல்லாம்எதுக்குடாசீட்டாட்டம்,புத்தியும்,கவனமும்இங்கஇருக்கணு ம்டா,பேசாமா ஒரு டேப் ரெக்கார்டர வாங்கிவச்சிட்டுஉக்காந்துக்க நாளெல்லாம் பாட்டிக் கேட்டுக்கிட்டே இரு/ நல்லாயிருக்கும், என்பார்கள்.

பதிலுக்கு செண்பாகவின் மாமன் போங்கடா பொசகெட்ட பயலுகளா என்ற படி போய்விடுவான்,போகிற அவன் நேராக வெறெங்கிலுமாய் போய் விடுவதில்லை.செண்பகம்இருக்கும்இடம் தேடி போவான். அல்லது மனோகரியக்கா வி ன் மூலமாய் தகவல் சொல்லி விடுவா ன்.தகவல் கிடைத்ததும் செண்பகம் என்ன வேலையாக எங்கு இருந்தாலும் சரி வந்து விடுவாள். பின்னே கூப்பிட்டனுப்பியது மாமனாச்சே,வரமாட்டாளா,என்ன என்பார்கள் பரஸ்பரம் அவர்கள் இருவரின் மனம் தெரிந்தவர்கள்/

சினிமா போய்விட்ட வந்த அன்று இரவு அப்பா சபதம் போட்டு மாமனை அடித்ததற்கு பின்னாடியும் அதன் பின்னாய் உனக்குத்தான் செண்பகம் என அடித்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு கறியும் சோ றும் தந்து விட்டு வந்த நாளன்றுக்கு அப்புறமாய்செண்பகம் மிகவும் மனத்துணிவு கொண்ட வளா ய் ஆகிப் போனாள்.

இப்பஎன்ன கட்டிக்கிறப்போறவரத்தான பாக்கிறேன்,என்கிற சொல் தாங்கியும் மன சமாதானத்துடனும்தான் போவாள்.அப்படியாய் போ கிற நாட்களில் அவனும் பளிச்சென்றுதான் இருந்திருக்கிறான் கூடுமானவரை/

வழக்கமாய் அவனிடம் காணப்படுகிறகசலைத்தனங்கள் இருந்ததி ல்லை , செண்பகத்தை காணவருகிற தினங்களில் மட்டும்/நல்லதாக உடுத்துவான் நல்லதாக பேசுவான்,நல்லதாக நினைப்பான், நல்லவ னாகவே இருப்பான், ஒயின்ஷாப் பக்கமே போகமாட்டான்,அல்லது தலையைக்கூட திருப்ப மாட்டான். அந்த சிந்தனை மனதில் இருந் தாலும் அதன் முகத்தில் காறி உமிழ் ந்து விடுவான்.அன்று இரவு சொசைட்டி அருகில் செண்பகாவின் அப்பாவிடம் அடிபட்ட போது பாட்டுசுமந்த டேப்ரிக்கார்டரின் சப்தம்தான் அவர்களை காட்டிக் கொடுத்திருக்கிறது.

அவனது சைக்கிளில் எப்பொழுது மே ஒரு சின்ன டேப் ரிக்கார்டர் இருக்கும். அந்த டேப்ரிக்கார்டர் பாட்டு அவன் மொழு, மொழு கடை யில் டீ சாப்பிட்டு முடித்ததிலிருந்துஆரம்பித்துஅவன்வேலை செய்கி ற தளம் வரை சென்று முடியும்/ சமயத்தில் வேலைத் தளத்திலும் கூட பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

மனோகரியக்கா கிணற்றில் விழுந்த அன்று கூட அவன் டேப்ரிக்கார் டரோடு எங்கோ அலைந்து கொண்டிருந்ததாகத்தான் சொன்னார்கள். அன்று மனோக ரியக்காவை தூக்க கிணற்றுக்குள் குதித்து இறந்து போன செண்பகாவின் அப்பாவினதுமரணத்திற்குப் பின்பும்,செண்பா காவைவேறுஇடத்தில்கல்யாணம் கட்டிக்கொடுத்த பின்பும் செண்ப காவின் மாமா பாடல் கேட்பதையே நிறுத்தி விட்டான்,

இப்பொழுதெல்லாம் அவனிடமிருந்து பாடகர்களும் இசையமைப் பாளர் களும் வெகு தூரம் போய்விட்டார்கள். மனதிற்கு மருந்திட்ட பாடல்கள்யாவும்இப்போதைக்கு அவனிடமிருந்தோ அல்லது அவன்  பாட ல்களிடமிருந்தோ விலகி இருந்தான்.

நேற்று மதியம் ஒரு இரண்டு மணி நேரம் தூங்கியிருப்பான்.அல்லது ஒண்ணரை மணி நேரம் இருக்கலாம்.அது முழு தூக்கமா அல்லது அரை தூக்கமா என பிரித்தறியா முடியாநிலை.

ஒரு மனிதனின் தூக்கத்தை மூன்றாக அல்லது நான்காக பிரித்துப் பார்க்க லாம் என்கிறார் அவனுக்குத்தெரிந்த நண்பர் ஒருவர்.இதில் ஆழ்நிலை தூக்கம் என்பது அதிகாலை நேரம் ஏற்படுவதுதான் என்கிறார் மருத்துவரும் நண்பருமான அவர்.

நேற்று மதியம் தூங்கிய தூக்கம் ஒரு வேளை ஆழ்நிலை தூக்கமாகக் கூட இருக்கலாம் அல்லது வீட்டைப்பற்றி அலுவலகத்தைப் பற்றி,அம்மாவைப் பற்றி ,இவனது மனைவினது உடல் நிலை பற்றி,பிள்ளைகளின் படிப்பு, வேலைபற்றி என நீண்ட நினைவுகளும் கேட்ட,பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமாய் இணைந்து கை கோர்த்து தூக்கத்தை இரவு கடந்து அதி காலை நான்கு மணிவரை எட்டி நீட்டிக்கச்செய்து விடுகிறதாய்/

நேற்றுக் காலை எழுந்ததிலிருந்தே சற்று தாமதமாகத்தான் இருந் தான். தினப்படியான அல்லது வழக்கமான வேலைகளில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அல்லது மாறுதல் தெரிந்தால் சற்றே மந்த மாகவும் எரிச்சலாகவும்ஆகிப்போகிறதுண்டு. கூடிபோய்விட்ட அலு வலக வேலைகளும் இதர இதரவாய் சேர்ந்து கொண்ட ஒன்றிரண் டுமாய் இவனது எண்ண அலைகளை அலைபாய விட்டவாறே இருந்ததுண்டு.அதில் பாதியே இவனது தூக்கம் கெடுத்துப் போய் விடுகிறதாய்/ இதுதவிர இவனது மனைவி சொன்னது போல் ”உலகத் திலேயே ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி டீக்குடிச்சிட்டு படுக்குற ஒரே ஆளு நீங்களாத்தான் இருப்பீங்க”என்றதும் கூட ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கலாம்.. இவன் தூக்கத்தை பாதிக்க/ போக பாழாய்ப்போன எண்ணங்கள் சில பலவாய் படுக்கையில் விழுந்ததும்தான் படமெடுக்கின்றன பெரிதாய்/ எடுத்த படம் எடுத்தது தான்.மடக்கவோ கீழ் போடவோ முடியவில்லை.

கடந்த ஒரு வாரமாய் கம்ப்யூட்டரின் முன்னமர்ந்து டைப் அடிக்கா ததும் பெரிதாய் ஏதும் படிக்காததும் கூட இவன்கோபத்திற்குஅல்லது எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம்,இவன் ஒன்றும் பெரிதாய் படிப்பவனில்லை அல்லது அதற்காக மெனக்கெடுகிறவனும் இல் லை. ஏதோ பத்துக்கு ரெண்டு பழுதில்லாத வகையில் பார்த்துக் கொள்வான்.

அது அவனுக்குள் ஏற்பட்ட தன்னியல்பான நிகழ்வா அல்லது திட்ட மிட்ட மனவரைவுஏதேனுமா?தெரியவில்லை. மாவட்டச் செயலாளர் தான்சொன்னார்.ஒருமுறைஏதோபேசிக்கொண்டிருக்கையில்/ என்ன தான் வேலை இருந்தாலும் ராத்திரி படுக்கைக்கு போறதுக்கு முன் னாடி பத்து நிமிஷமாவது படிச்சிருவேன் என்றார்.நேரம் கிடைக்கிற பொழுதுகளில் அந்த பத்து நிமிடம் இரண்டு மூன்று மணி நேரமாகக் கூட உருவெடுக் கும் என்பார்.

ஒரு வேளை அது போல வாய்க்காதோ வாய்ப்புகள் ஏதேனுமென்கிற மன அரிப்பும்,ஏக்கமும் கூட தூக்கத்தைப்பறித்திருக்கலாம்.

இப்படியாய் தூக்கம் பாதித்த இரவொன்றின் மறுநாளாகத்தான் நண்ப ரின் அப்பா இறந்து போனார் என்பதாய் போன் வந்தது.என்ன செய்ய இப்பொழுது அலுவலகத்திற்கு கிளம்புகிற நேரமாய்/போன் பண்ணி யவரிடம் எந்நேரம் எடுப்பார்கள் என கேட்க மறந்து போனான்.இனி இதற் காக மெனகெட்டு கேட்பது எப்படி சரியாய் இருக்கும் என்கிற மனோ நிலையில்விட்டு விட்டான்.அநேகமாக சாய்ங்காலமாகத்தா ன் இருக்கும். லீவு கிடைத்தால் பார்ப்போம் அல்லது சாய்ங்கால மாய் போய் கலந்து கொள்ளலாம் என மனைவிடம் சொன்னபோது அவள் சொன்னாள் என்ன இது நெருங்கிய நண்பர் என்கிறீர்கள், அவரது வீட்டுக்காரியத்தில் கலந்து கொள்ள லீவு எடுக்கத் தயங் குகிறீர்களே இப்படி என்றாள்.அவளது சொல்லிலும் ஞாயம் இல்லா மல் இல்லை.

ஆனால் பாலாவின் அப்பா இறந்து பொழுது தெரிந்திருந்தும் கூட போகஇயலவில்லைஇவனுக்கு/.இத்தனைக்கும்பாலாவைபத்துவருடங் களாக இவனுக்குத்தெரியும்.ஏதோ ஒரு மனோ நிலை,என்னதான் அவசரமாகமருத்துவரிடம்போகவேண்டியிருந்தாலும்,மற்ற வேலை கள் சில முளைத்துத் தெரிந்த போதும் கூட போகாதது தவறு தான். ஏதோ ஒரு மனோ நிலையின் தவறான உச்சம் மட்டுமல்லாது அந்தி யத்தில் நிகழ் கிற ஏதோ ஒரு சலன மனோநிலை காரணமாகக்கூட போக இயலவில்லை இவனுக்கு.

இத்தனைக்கும் எந்நேரம் எடுப்பார்கள்.எந்த மயானம் என்றெல்லாம் விசாரித்து வைத்திருந்தான்..அந்த விசாரிப்பெல்லாம் பொய்யாய் போய்விட்டது. சிலமணி நேரங்களில்/

அலுவலகத்திலிருந்து திரும்பும் போது சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த மரண அறிவிப்பு சுவரொட்டிகளைப்பார்த்து யாரென முடிவு செய்ய முடி யாத மனோநிலையினனாய் போய்க்கொண்டிருந்த பொழுது எதிரில் தென்பட்ட நண்பர்கள் சிலர் இன்னார்தான் அவர் என போஸ்டர்பற்றிச் சொன்னார்கள்.அடடா இந்த ஏரியாவில் இனி நல்ல தாய் ஒருஜாக்கெட் தைக்க ஆள்இல்லாமல் போய்விட்டாரே, எனத் தான் முதலில் தோனியது.

கடந்தபத்துநாட்களாகவேகடைபூட்டியிருந்தது,உடல்நிலை சரியில் லாமல்போய்விட்டஅவரைஆஸ்பத்திரியிலேயேவைத்துப்பார்த்தி ருக்கிறார்கள். நெஞ்சுச்சளி, பத்து நாட்களுக்கு முன்பு வரை சமாளித்துப் பார்த்திருக்கிறார்,சும்மா இல்லை அவரும்.கடை திறக்க சட்டை,பேண்ட் தைக்க,பஜார்போய்தையல் ஜாமன் வாங்கி வர,,,,,,, என இருந்திருக்கிறார். முடியாமல் கடையிலேயே படுத்து விட்ட மறுநாள்தான்ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்கள்.

லேடீஸ் ஜாக்கெட் தைக்க அவரைப்போல இந்த ஏரியாவில் ஆள் இல்லை என்றார்கள்.இனி யாரைப்பார்த்து எங்கு தைப்பது எனத் தெரியவில்லை.என்கிற அடையாளப்படுத்துதலோடு இருந்த 65 வயதுக்காரரின் இறுதிச் சடங்குக்கு போகமுடியாத வருத்தம் இன்று வரை இவனில் உறைந்து போயே/ஆனாலும் நல்ல சாவுதான் அவரது சாவு.பிள்ளைகள் எல்லாம் செட்டிலாகி பேரன் பேத்திகளை மடியில் போட்டு கொஞ்சி விளையாடிவிட்டு இறந்து போகிற பாக் கியம் அவருக்கு வாய்த்திருந்தது பெரிய விஷயமாகவே/

ஒரு வழியாக லீவு கிடைத்து விடுகிறது .வீட்டிலிருந்த படியே ரொம்ப கழிவிறக்கத்துடனான பேச்சு பிரயோகத்தில் இவனது உயர திகாரியிடம் பேசி லீவு வாங்கி விட்டான்.முதலில் ரவியிடம் சொல்ல வேண்டும். நண்பரின் அப்பா இறந்து போனதை/

அவருக்குபோன் பண்ணியபோது மாவட்ட நூலகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன்,வந்து விடுகிறேன் பெட்ரோல் பங்க் அருகே, போய்விடலாம் இருவருமாய் சேர்ந்து எனச்சொன்னவர் வரும் பொழுது மறக்காமல் மாலை வாங்கி வந்து விடுங்கள் என்றார். தெரிந்த கடை என்றால் சௌகரியமாக வாங்கலாம் என நினைத்துச் சென்ற கடையின் உரிமையாளர் இவனைப்பார்த்து ஏறிட்டு சிரிக்கக் கூட இல்லை.

திருமணமான புதிதில் அங்குதான் பூ வாங்குவான்.இவன் சைக்கி ளைப் பார்த்ததும் பூக்கடைக்காரர் ரெடியாக பூவை எடுத்து வைத்து விடுவார். நூறு மல்லிகைப்பூ அது எவ்வளவு பெறும் சார்,அதை மெனக்கெட்டு எடுத்துக்கொண்டு போகாவிட்டால் என்ன?என்கிற கடைக்காரரின் பேச்சுக்கு சிரித்து வைப்பான் மெலிதாக/

இப்படித்தான் பூ வாங்கிய ஒரு நாள் அதை மனைவிடம் கொடுக்கா மல் மறுநாள் ஆபீஸிற்கு கொண்டு போய்விட்டான்.அப்ப கொண்டு போன பூவை ஒரு வாரம் கழித்து அது வாடி வதங்கிய பின்பாகத்தான் பூவைச் சுற்றியிருந்தவாழைஇலையுடன் எடுத்து வெளியே போட்டான். அதைப் பூக்கடைக்காரரிடம் சொன்னபோது சப்தமாய் சிரித்தார்.

அன்று அப்படிச் சிரித்த அவர் இன்று அவனைப்பார்த்து தலையைக் கூட அசைக்காதது என்னவோ போல் இருந்தது.போகிறார், நமக்கெ ன்ன குடுக்குற காசுக்கு மாலையைத்தந்தால் போதாதா,அவராக பேசினால் பேசட்டும், இல்லையென்றால் நம்மபாட்டுக்கு போயிக் கிட்டே  இருக்க வேண் டியது தான்.50ரூபாய் என்றார்கள் மாலை/
இவனுக்கொன்றும்,ரவிக்கொன்றுமாய்வாங்கிக்கொண்டுசென்றான்.
கடைக்காரபையன்ஒருவன்தான்மாலையைகட்டிகொடுத்தான்.கலெக் ட்ரேட்பஸ்டாப்பில் மாரியப்பன் கடை டீ நன்றாக இருந்தது. தேவைப் படுகிற நேரங்களில் எதுவும் நன்றாக இருக்கும் போல் இருக்கிறது.

நண்பரின் வீட்டைக்கண்டு பிடிப்பதேபெரும்சிரமமாகிப் போனது. மிக வும் பரமப்பிரயத்தனப்பட்டுத்தான் போனார்கள்.

இன்னும் அவ்வளவாக ஆட்கள் வந்திருக்கவில்லை,வீட்டின் முன் வாசலை ஒட்டிபந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். இருசக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்தி விட்டு மாலையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பும் போது நண்பர் வந்தார்.

“கொஞ்சம்சேர்லஉக்காருங்கசார்,எங்கப்பாயெறந்தஒடனேகண்ணை தானம் பண்ணனுன்னு பிரியப்பட்டாரு,அவரோட கடைசி ஆசை நெறைவேறிக்கிட்டு இருக்கு,உள்ள,அது முடிஞ்ச ஒடனே போகலாம் சார் என்றார்.

அப்படியே அவரது கைப்பிடித்தவாறே சேரில் அமராமல் இருவரு மாய் நின்று கொண்டிருந்தார்கள் அவரிடம் ஒன்றும் பேசக்கூடத் தோணாமல்/
இரண்டுவாரங்களாகிப்போனது.கடந்தஞாயிறின்அதிகாலை வேலை யாக புறப்பட்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கல்யாணத்திற்கு, இவனும் மனைவியுமாக போய் வந்து/

6 comments:

 1. வணக்கம்

  தொடக்கம் முதல் முடிவு வரை கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. நகர்வுகள் வலிகளுடன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete