30 Apr 2014

டீ சாப்பிடுவோமா,,,,,,?

           

கடைகளின்பரந்த,சின்னவெளியெங்கும்மழைபெய்துகொண்டிருக்கிறது.

டீக்கடைகள் எப்பொழுதும் ஏழைகளின், உழைப்பாளி மக்களின் சொர்க்கமாகவும் அவர்களது வேடந்தாங்கலாகவும் ஆகித்தெரி கிறது. 
அது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிடப்பட்டதா? என்பதெ ல்லாம் வேண்டாம் இங்கு. 
உடலும் கையும் காலும் உரமேறிப் போயிருக்கிற உழைப்பின் மக்களான மூடைதூக்குபவர்களிலிருந்து அரசு ஊழியர்கள் வரைஅங்குவராதவர்களும்,அவரகள்பரிமாறிக்கொள்ளாத விச யங்களும் கிட்டத்தட்ட இல்லை எனலாம். 
அதிலும் வாரக் கடைசியான சனிக்கிழமை மாலைகளில் தனிக ளை கட்டிவிடும் இந்த டீக்கடைகள்.அப்படி என்ன விசேஷம் இந்த டீக்கடைகளில்?அன்றுதான் கொத்தனார்,சித்தாள் போன்ற உதிரித்தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா/ 
வாரம் முழுவதும் தனது ரத்தத்தை வியர்வையாக சிந்தி பல கட்டிடங்கள் எழும்ப செங்கலும்,மண்ணும் சுமந்தவர்களும் இத ர பல தொழிலாளர்களும் தங்களது உழைப்பிறகான பலனா ன ஊதியத்தை பெற்று மனம் நிறைந்து வீடு போகிற வேலையின் நடுவாந்திரமாய்இப்படிதென்படுகிறடீக்கடை களில் அடைக்கள மாகிற,இளைப்பாரிக்கொள்கிற பொழுதுகள் பொன்மாலை பொ ழுதுகளாய் ஆகியும் தெரியவுமாய் செய்கின்றன. 
அப்படி தெரிகிற வேலைகளில் எழுகிற பேச்சுக்களும்,பிறக்கிற சொல்லும்,வடிவம் கொள்கிற உற்சாகமும்,பூக்கிற புதுத் தெம் பும் அவர்களை ஒரு குடிக்கும்,ஒரு கடிக்கும் அங்கே அனுப்பி வைத்து விடுகிறது. 
குடும்பவிஷயங்கள்,அலுவலகவிசயங்கள்,நட்பு,தோழமைஇன்ன பிற என அந்த இடத்தில் அரைபடாத விஷயங்கள் ரொம்பவும் குறைவும், விதிவிலக்குமாக/ 
டீக்கடைகள் அமைந்திருக்கும் இடங்களும்,அதன் விலாசமுமே இதற்கு முழு நீள மெளன சாட்சியாக/ 
ஒரு அரசு ஊழியர் சொல்கிறார். “எப்பப்பாத்தாலும் இதே பொழ ப்பா  போச்சு,வேல குவிஞ்சு கெடக்குது,ஆள் சாட்டேஜ், கூடிப் போன வொர்க்லோட் எல்லாம் ஆள அமுக்குது.நீங்க நினைக் கிற மாதிரி இல்ல ,ஒங்க ஆபீசுல எப்படின்னு தெரியல எங்க ஆபீசுல வேலைகொல்லுது ஆள/ நாலு ஆள் வேலைய ஒரே ஆள் செய்ய வேண்டியிருக்கு,எங்க போயி முட்டுறதுன்னு தெரியல,இருக்குற டெம்பரவரி ஸ்டாப்பயாவது பெர்மணென்ட் பண்ணி விடலாம்.அதவிட்டுட்டு இப்பிடி வேலய பாத்துக்கி ட்டு, இருக்குறவுங்களயும் வீட்டுக்கு அனுப்பீட்டு எரியிற தீயில இன்னும் கொஞ்சம் எண்ணைய ஊத்துற மாதிரி வேலைய செஞ்சிட்டு இருக்காங்க”என அவர்களும்,,,,,,,,
“யெறக்குற லோடுக்கு அன்னன்னைக்கு காசு குடுத்தாவுள்ள நல்லாயிருக்கும் வேலை செய்யிறதுக்கு,சேத்து வச்சி ஒரு வார கழிச்சுக்குடுத்தா வீட்டுக்கும்,கைச்செலவுக்கும் என்னா,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,கொண்டு போறது? எங்க மொதலாளி இன்னைக்கு கூலி தரலையின்னு சொன்னா கேக்கப்போறானா கடைக் காரன்” என கோபமாக லோடும்மேன்களும்,,,,,,,,,,,
“புள்ளைக்கு விசேசம் வச்சிருக்கு,விக்கிற வெலவாசியில ஒரு அம்பது பேர கூப்புடனும்னாக்கூடயோசிக்க வேண்டியிருக்கு. என்னசெஞ்சிஎப்பிடிசமாளிக்குறதுன்னுதெரியல.எப்பிடிசுத்தினாலும் சொந்ததக்காரங்களே அம்பது பேரு பக்கத்துல வருவா ங்க,இன்னும்நம்மளோட பழகுன ஆட்கள்,அக்கம்,பக்கம் எல்லா ம் இருக்கு,முழி பிதுங்கிப்போகுது”,,,,,,,,,,,,,,,,,, என அன்றாட சம்பாத்தியர்களில் ஒருவருமாய் மாறி,மாறி தனது ஆதங்களை கொட்டிக்கொண்டிருக்கிற நேரத்தில் வந்த பெட்டிகடைவைத்தி ருக்கும் நண்பர் ஒருவர் சொல்வதையும் செவிசாய்க்க நேரிடுகிறது. 
“உள்ளதுலேயே எங்க பொழப்புதான் ரொம்ப கஷ்டமான பொழப்பு அண்ணாச்சி,சீப்பட்டபொழப்பு, அன்னையிலயிருந்து இன்னைய வரைக்கும்வாழைப்பழத்துக்கு லாபம் 50 பைசாதான். சிகரெட்டு,பீடிக்குரொம்ப கொறஞ்ச லாபம்தான்,கலர் பாட்டில்ல எல்லாம் அவுங்களே வெல அடிச்சிக்குடுத் துர்றாங்க. நாங்க பெருசா எதுவும் பண்ணீற முடியாது.அப்பிடி பண்ணுனா யேவா ரம் படுத்துரும்”,,,,,,என ஒருவருமாய் மாறி,மாறி தனது ஆதங் களை பேசிக்கொள்கிற இந்த நாட்களின் நகர்வுகளில் மழை பெய்கிறது.வெயில் அடிக்கிறது. பெருங்காற்றையும் கூட கரம் கோர்த்துக் கொண்டு. 
வாகனங்களும்,மிதிவண்டிகளும்,பாதசாரிகளுமாய்கலந்துசெல் கிற புழுதி பறக்கிற சாலையில் நடக்கிற எல்லாவற்றையும் பார்த்தவாறே ஒரு குடியும்,ஒரு கடியுமாய் டீ,ஒரு அல்லது இரண்டு வடை என கலந்து கட்டி சாப்பிட்டு தைப்பாறி செல்கிற நாட்களின் ஒன்றில்தான் டீ விலை ஒரு ரூபாய் கூடியிரு க்கிறது. 
சாதாரண சின்ன நகரங்களில் இப்படி.பெரிய நகரங்களின் பிடியி ல் இருக்கிற கடைகளில்இரண்டுரூபாயிலிருந்துமூன்று ரூபாய் வரை ஏறியிருக்கலாம்.எப்படி என தெரியவில்லை என்கிற ஆதங்கத்துடன் டீயையும் வடையையும் கடித்தும் குடித்தும் கொண்டுமாய் கலைந்து செல்கின்றனர். 
டீக்கடைகளின் பரந்த,சின்னவெளியெங்கும் மழை பெய்துகொ ண்டிருக்கிறது.மேகம் அடர்ந்திருக்கிறது.ரோடுகளில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது.மனிதர்கள்குடை பிடித்துக் கொண்டும், ரெயின் கோட்டைப்போட்டுக்கொண்டுமாய் ஓட்டமும்,ந டையு மா ய் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 
டீக்கடைகளில்பாலும்வெந்நீரும்கொதித்துக்கொண்டிருக்கிறது.


                             அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். 

20 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

மேதின சிறப்பு பதிவில் சொல்லிய ஏழைகளின் கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்....

என்பக்கம் கவிதையாக.
எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான அருமையான
மேதின சிறப்புப் பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

unmaiyanavan said...

"//டீக்கடைகள் எப்பொழுதும் ஏழைகளின், உழைப்பாளி மக்களின் சொர்க்கமாகவும் அவர்களது வேடந்தாங்கலாகவும் ஆகித்தெரி கிறது.//" - இந்த டீக்கடை எல்லோருக்குமே சொர்க்கமாகத்தான் இருக்கிறது.
என்னதான் வெளிநாட்டில் வேலை பார்த்காலும், இந்தியா வரும்போது, டீக்கடையில் டீயை குடிக்கும் சுகமே தனி தான்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இயல்பாக டீக்கடை உண்மையில் பலரும் கலந்துரையாடவும் விவாதமும் செய்யும் களம். அழகாக விவரித்திருக்கிறீர்கள்.

vimalanperali said...

வணக்கம் டி என் முரளிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சொக்கன் சுப்ரமணியன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி ரமணி சார்.வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

”தளிர் சுரேஷ்” said...

டீக்கடைகளின் வர்ணிப்பு சிறப்பு! நன்றி!

ஜீவன் சுப்பு said...

படம் அட்டகாசம் .

ஏன் திருக்குறள் மாதிரி ஒரு வார்த்தையும் இன்னொரு வார்த்தையும் இணைந்து வருகிறது ... வாசிப்பதற்கு சிரமமாக இருக்கிறது

கரந்தை ஜெயக்குமார் said...

மே தின வாழ்த்துக்கள்
அதென்னவோ தெரியவில்லை
டீ கடைகளைப் பற்றி வர்ணிப்பதென்றால்
தங்கள் எழுத்து கூடுத்ல் மெருகேருகிறது
நன்றி நண்பரே

Pandiaraj Jebarathinam said...

உழைக்கும் மக்களுக்கான கதை சிறப்பு..

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜீவன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜே பாண்டியன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

டீ என்றாலே உங்கள் ஞாபகம் வராமல் இருப்பதில்லை...

வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துர்ரைக்குமாக/

Unknown said...

Very very nice wonderfull village nature .