அகன்று விரிந்த வட்டமான தோசைக் கல்லின் (புரோட்டாசுடுகிற கல்லும்
அதுதான்)வலது ஓரமாய் கைலெடுத்த முட்டையை லேசாக,,,, மிக மிக லேசாக எங்கே உடைந்து விடுமோ
என்கிற கூச்சத்துடன் உடைப்பதற்காய் தட்டுகிறார்.
டொப்,,,,,டொப்,,,,,டொப்,,,,,மூன்றாவது தட்டில் மெலிதான
கோடு போட்டது போல லேசாக உடைந்த முட்டையை விரித்து கல்லின் ஓஈமாய் ஊற்றுகிறார். மலர்ந்து விரிந்த பூவைப்போல கைவிரித்துப்பரவுகிறது மஞ்சள கருவுடன்
கலந்த வெள்ளை முட்டை.
ஏற்கனவே இரண்டு வெந்து கொண்டிருந்த தோசைகளுக்கு சிறிதான
தோசைகளுக்கு அருகாமையாக ஊற்றிய ஆப்பாயில் நன்றாகவே இருந்தது பார்ப்பதற்கு.
அரிசிமாவும் உளுந்தமாவும் கலந்தரைத்த மாவில் சுட்ட தோசைகளுக்கு
மத்தியிலாகவும்,
ஓரத்திலுமாகவும் சுவையாக சாப்பிடசுட்டெடுத்தமாஸ்டர் தோசையை தங்கக் கலரிலும்,
ஆப்பாயிலை பொன்முறுவலாகவும் சுட்டெடுத்து கடைக்குள் அனுப்புகிறார்.
பரவாயில்லையே,இதுவும்பார்ப்பதற்குநன்றாகதானேஇருக்கிறது”எனகடையின்
ஓரம் கைகட்டி நின்றவனாக சொல்லியிருந்த புரோட்டாப் பார்சலை வாங்கிக்
கொண்டு திரும்புகிறேன்.
எரிந்து தகித்துக்கொண்டிருந்த அடுப்பின் முன்னே கட்டம்
போட்ட கைலியும்,அடர் கலரில் சட்டையும்அணிந்திருந்த புரோட்டா மாஸ்டர் தோசைகளையும்,கல்லின்
ஓரமாய் உடைபடுகிற முட்டைகளிலிருந்து பிறப்பெடுக்கிற ஆப்பாயில்களையும் சுட்டெடுக்கிறார்
அனுதினமுமாய்,
அடுப்பின் தணலில் வெந்தவராக/
அரிசிமாவும்,உளுந்தமாவும்கலந்தரைத்தமாவில்அன்றாடங்களின்நகர்வில்சுட்டெடுக்கிறதோசையும்,இட்லிகளும்,முட்டைகளை
உடைத்துஅவர்சுடுகிறஆம்லேட்டுகளும்,ஆப்பாயில்களும்
மைதாவைஉருட்டிப்பிசைந்துசுடுகிறபுரோட்டாக்களும்நம்போல் சாப்பிடப்போகிறவர்களின்
வயிற்றை நிரப்ப அன்றாடம் கடைக்குள்ளாய் அனுப்பப்படுகிறது/மாஸ்டருக்கு,,,,,,,,,,,,,?
3 comments:
/// மலர்ந்து விரிந்த பூவைப்போல... // ஆகா...!
மாஸ்டர் வாழ்வும் சிறக்கட்டும்...
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வெந்தணல் சுட்டது தோசையை மட்டுமல்ல, அவர் தேகத்தையும் தான்..//
அருமையான காட்சிப்படுத்தல்.
Post a Comment