27 May 2014

ஒரு சொல் ஒரு ஓசை,,,,,,,

      
ஒரு போட்டோ ஸ்டூயோவின் பெயர் பலகை அது.ஜீன்ஸ் பேண்ட் போட்ட இரண்டு சிறுவர்கள் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அலுமினிய ஏணியின் முதல் படியில் ஒருவனும் மேல் படியில் இர ண்டாவது சிறுவனுமாய் அமர்ந்திருந்தார்கள்.

இரண்டாவது படியில் அமர்ந்திருந்த முதல் சிறுவன் முதலாவது படியில் அமர்ந்திருந்த சிறுவனை விட கொஞ்சம் புஷ்டியாகவும், வளர்த்தியாகவும்.முதல் சிறுவனின் தோள் மீது சாய்ந்து கொண்டு அவனது தலை மீது தலை வைத்திருந்தான் இரண்டாவது சிறுவன். சிறுவர்கள் சிரிப்பதும்,நாம் பார்ப்பதுமெல்லாம் சரிதான்.அதற்காக உடை கூடவா ஒன்று போல உடுத்தி இருக்க வேண்டும்? தரையில் பதிக்கப்பட்டிருந்த சிமெண்ட் கற்களில் படிந்திருந்ததூசியும், மண்ணு ம் சிரித்த சிறுவர்களை முகம் சுளிக்க வைக்கவில்லை.

நண்பனுக்கு ரத்தப் பரிசோதனை எடுப்பதற்காக அங்கு சென்றிருந் தோம். T L R சாலையில் இருந்த ரத்தப்பரிசோதனைநிலையமது. பெரும்பாலுமாய்நிரம்பிவழிகிறகூட்டத்துக்குமத்தியில்தன்னை பொ தித்துக்கொள்கிற ரத்தப்பரிசோதனை நிலையத்திற்குள்ளாக நாங் கள் நுழைந்த போது ஆச்சரியம் நான்கைந்து பேர்களே இருந்தார்கள்.

வரிசையாய் போடப் பட்டிருந்த சேர்களில் வலது சாரி ப்ளாஸ்டிக் சேர்களையும்,இடது மரப்பெஞ்சுகளையும்காட்டிகொண்டிருந்ததாய்/ இப்போதெல்லாம் இதுமாதிரியானமரப் பெஞ்சு களைப் பார்ப்பது அரிதாகிப் போனது.

எங்களதுஅலுவலத்தில் ஒரு மரபெஞ்ச் இருந்தது.சுற்றிலும் நான்கு பக்கமாக ஊதா நிற கோடு இழுத்தது போல மைக்கா ஒட்டப்படிருக்க நடுவில்அரைவெள்ளைக்கலர்காட்டி பார்க்க நன்றாக இருந்தது பளிச்சென/

அதையே வெகு நேரமாக உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் சொன்னார் உடன் வேலைபார்ப்பவர்.“ இப்பிடித்தான்எங்க வீட்ல கொத்தனார்வேலைநடந்துகிட்டு இருக்கும் போது ஷெல்ப் வேல பாத்தவரு கரண்டிய வச்சி அப்பிடி,இப்படின்னு ரெண்டு திருப்பு திருப்புனாரு, ஆகாஎன்னஆச்சரியம்.நல்லதா ஒருடிசைன் வந்துருச் சி. அப்படியானஆட்களாலசும்மாசாதாரணமா வேல செஞ்சிட்டுப் போக முடியாது.அது மாதிரிஒருஆளாஇருப்பாருன்னு நெனைக்கி றேன்  இந்தபெஞ்சசெஞ்சவரு.பாத்தாலே தெரியலையா கை வேலை யோட தெளிவ.”என்றார்.அது போலவேதான் காட்சிப்பட்டது நான் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் பார்த்த மரப் பெஞ்சும்/ அது தச் சரின்கைவண்ணமாஅல்லதுநிலையத்துக்காரர்களின்எண்ணவெளிப் பாடா தெரியவில்லை.

நண்பரிடம்சொல்லிவிட்டுவெளியேவருகிறேன்.வெளியேவந்ததும்எனது
கண்களும், கால்களும் நோக்கிய இடமும்,சென்ற இடமும் டீக்கடை யாக இருந்தது.
அது என்ன அப்படி தெரியவில்லை. டீக்கடைகளைப்பார்த்த்தும் அப் படி ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது .அவசரத்திற்கு கடன் கொடுத்த புத்தி மாதிரி இப்படி ஆகிப்போகிறது. சுவையால் உந்தப்படுகிற நாக்கும், நின்று குடிக்கிற போதுகிடைக்கிற ஆசுவாசமும்தான் இப்படி செய்ய வைகிறது போலும்.

பாய்கடைக்குப்போகலாம்.அங்கேயென்றால்பக்கத்துசார்லஸ்கடையில் கடலை மிட்டாய் அல்லது முறுக்கு சாப்பிட்டு விட்டு மறக்காமல் ஆனந்த விகடன் புத்தகம் வாங்கிவந்து விடலாம். அவரிடம் வாங்கி னால் தான்உண்டு.இல்லையென்றால் மறந்துபோகிறது. அல்லது உடலும்,மனமும் சேர்ந்து போத்திக் கொள்கிற சோம்போறித்தன த்தால்எங்கும் போய் வாங்குவதுமில்லை. வாங்கலாம் எனத் தோணு வதுமில்லை.அவர் கடைக்கு எதிர் வரிசையில் இருக்கிற அக்கா கடையில் வேறொரு புத்தகம் வாங்குவேன்.

அக்காகடைக்கு பெயர்க்காரணம் தெரியவில்லை. ஆனால் பாய் டீக்கடைக்கு அருகிலிருக்கிற சார்லஸ் கடைபாய் கடைஎனத்தான் அறியப்படுகிறது. சார்லஸீக்குமுன்னதாக சிக்கந்தர் பாய் வைத்தி ருந்த கடையது. டீக்கடைக்காரருக்குச் சொந்தக்காரர் வணக்கம்பாய் என்றால்வயிறுகுலுங்கசிரிக்கிறமனிதர்.வாழைப்பழங்களில்அத்தனை ரகங்கள் இருக்கக் கூடும் என அவரது கடையைப்பார்த்துத்தான் நான் அறிந்து கொண்டேன்..கடையின் முகப்பில்கொக்கி மாட்டி தொங்க விடப்பட்டிருக்கிறவாழைப்பழத்தார்களுக்குப்பின்னால்நிற்கிறவரின் சிரிப்புச்சத்தம் கேட்கும் போதுதான் அவர் அங்கிருக்கிறார் என்பதே தெரியவரும். அப்படி பழத்தார்களின் பின்பு நின்று வியாபாரம் செய்தவர் திடீரென ஒரு நாளில் கடையை காலிசெய்த போது பலரும்பலகாரணம்சொன்னார்கள்அண்ணன்தம்பிபங்குப் பிரிவினை தான் கடையின் வியாபாரத்திற்கு வேட்டுவைத்துவிட்டதென சிலர் சொன்ன அன்று சார்லஸீக்கு கை மாறிய கடையைத்தான் நாங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அங்கு இப்போது ஆளை மறைக்கிற அளவு வாழைப்பழத்தார்கள் இல்லை.

ரத்தப் பரிசோதனை நிலையத்தை விட்டு இரண்டு அல்லது மூன்று எட்டுகள் எடுத்து வைத்திருப்பேன்.சார் வணக்கம்என்கிறகுரல் பிரேக் கிடஅழுந்தகால்பதித்தவனாய்நிற்கிறேன்.குரல்வந்த திசை சக்கரைச் சாமியைஅடையாளமிடுறது.

“நல்லாயிருக்கீங்களா சார். என்றவராய் விளக்குக் கம்பத்தினடியில் நின்றிந்திருந்தார்.
மாலைமயங்கிஇரவைகொண்டுகைகோர்த்துக்கொண்டுவந்துகொண்டி
ருந்த வேளையது. தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தது. விளக் கின்வெளிச்சத்தில்பிரகாசித்த அவரது முகம் இடது பக்கம் வெளிச்ச ம் காட்டியும் வலது பக்கம் நிழல் காட்டியுமாய்/

அவரது கால் பாதம் நன்றாக இருந்தவரை எங்கு போனாலும் சைக்கிள்தான்.சிவப்புக்கலர் ஹெர்க்குலிஸ் சைக்கிள் அது.அவரது மகளுக்காய் பள்ளிப்பிராயத்தில் வாங்கியது என்றார் முன்னொரு நாளில்/ வீட்டிலிருந்து கிளம்பி விட்டாரென்றால் அவரது கையில் சைக்கிளும் சட்டைப்பையில் பாடல் ஒலிக்கிற செல்போனும் இருக் கிறதுஎன்று அர்த்தம். இத்தனைக்கும் அவர் வசிக்கிற பாண்டியன் காலனியிலிருந்து தடுக்கி விழுந்தால் மினி பஸ்,ஆட்டோ டவுன் பஸ் என நிறைந்திருகிறவசதிகள்இருந்தபோதும்கூட அவைகளை ஓரக் கண்ணால் கூட பார்த்தில்லை அவர். “ஒடம்புல தெம்பு இருக் குற வரைக்கும் அடுத்தவுங்க உதவியையோ, மத்தவங்க கையை யோ எதிர்பாக்கக்கூடாது சார்”.எனச் சொல்பவர் அவரது வலது கால் பாதம் நன்றாக இருந்தவரை அப்படித்தான் இருந்தார். காலில் வந்த புண் ஆறாமல் இருந்த பொழுது டாக்டர் அவருக்கு சக்கரைச் சத்து இருக்கிறது என்பதை உறுதி செய்தார்.டாக்டரின் பரிந்துரைப்படி ரத்தப்பரிசோதனை, வைத்தியம் என எடுத்துகொண்டிருந்த நாட்க ளில் ஆறாமல் மேலும் சீழ் வைத்த புண் கால் முழுவதுமாய் பரவி நிற்கிறது.

வேறு வழியேயில்லை, ஆபரேஷன்தான் பண்ண வேண்டும் இல் லையெனில் பாதம் வழி சலம் ஏறி விடும்,அப்புறம் காலுக்குச் சிக்கல் என்றார்டாக்டர். ஆபரேஷனில் வலது பாத்தின் முன் முனையை ஐந்து விரல்களோடு வெட்டி எடுத்து விட்டார்கள்.

ஒருவாரம் ஆஸ்பத்திரியில் இருந்தார்.பத்து நாட்கள்வீட்டில் ஓய்வு, பதினோராவதுநாளிலிருந்து கொஞ்சம் வெளியில் நடக்க ஆரம்பி த்தவர் எங்கும் வெளியில் போக யாரையாவது எதிர்பார்த்து கொண் டும் பஸ்ஸிலும் ஆட்டோவிலுமாய் பயணிக்கிறவர் ஆகிறார்.
“எண்ணன்னே,இப்ப ஒடம்பு எப்பிடியிருக்கு?என்ன இங்க நின்னுக் கிட்டிங்க?-நான்“ஆமா சார் அப்பிடியே வந்தேன் பஜாருக்கு/ சொந்தக் காரப்பையன் ஒருத்தன் கூட வண்டியில வந்தேன் என் னை ய இங்கன நிறுத்தி வச்சிப்புட்டு அவன் ஒரு சோலியா போயிருக்கான் இந்தா வர்ரம்ன்னுட்டு/அவன்வரவும்கெளம்பணும்.

சேல மகளுக்கு எடுத்தது. கட்டிக்குடுத்தயெடத்துல இருந்து வந்துட் டா நெரந்தரமா. நல்லபயன்னுநம்பித்தான்கட்டிக்குடுத்தோ ம்.ரொம்ப தூரமும் இல்ல,ரொம்ப பக்கமும் இல்ல. சொன்னவுங்க பேச்ச நம்பிமோசம்போயிட்டோம்.எந்நேரமும்குடியொடதிரியிரவனோட
எப்பிடி பொழப்பு நடத்துவா பாவம். பொறுத்துப் பொறுத்துப் பாத்தவ வந்து நிக்குறா நெறமாசமா/ பிடிவாதமா திரும்பப்போக மாட் டேங்குறா?எங்களுக்கு என்ன கணக்குன்னா அவள ஒரு நா, ஒரு பொழுதாவது மாப்புள வீட்டுல கொண்டோயி விட்டுட்டு அப்பிடியே புள்ள பொறப்புக்கு கூட்டிக்கிட்டு வந்துரலாம்ன்னு நெனைப்பு.ஆனா அவசொல்றா அங்க கொண்டோயி வம்பா என்னைய விட்டிங் கின் னா நாண்டுட்டுச் செத்துப்போயிருவேன்னு/ என்ன செய்ய சார், நடுத்தொண்டையில நிக்குற வெசமா,,,,,,மெல்லவும் முடியாம முழு ங் கவும் முடியாம தவிச்சிகிட்டு இருக்கேன்.சார்.
எனக்குஒங்களப்பாக்குறப்ப்யெல்லாம்ஒருஆசைமனசுக்குள்ள கெட ந்து ஓடிக்கிட்டேயிருக்கும் சார்.அந்த ஆசை ஞாயம்தானா இல்லை யான்னு தெரியல, ஆனா ஒங்களப் பாக்குற நேரங்கள அப்பிடி ஒரு ஆசை மனசுக்குள்ள மொளவிடுறத தவிக்க முடியல/. ஒங்கள மாதிரி ஒருநல்ல ஆளு எனக்குமாப்புள்ளையா வாக்கலையேங்குற நெனப்பு தான் சார் அது.ஆனா காலம் வேற மாதிரி வார்த்தைகளாலபதிவு பண் ணீட்டுப்போயிருச்சி வாழ்க்கைய/இப்ப அத எது பண்ணி சரி செய் யிறதுன்னு எனக்கும்தெரியல.வந்த மகளும் சொல்ல மாட்டேங்கு றா. சரிசார்வுடுங்க அத/இப்பிடியேபேசுனாபேசிகிட்டே இருப்பேன். வாங்கடீ சாப்புடலாம். என பேசிக் கொண்டே சென்றவர், டீக்குடித்துக் கொண்டிருக்கும் போது சொன்னார்.
சார் எனக்கு ஒரு சின்ன ஆசை.அதுரைட்டா, தப்பான்னுதெரியல,” ஒங்களநான் மாப்புளைன்னு கூப்பிட்டிக்கிரட்டுமா?,,,,

7 comments:

Unknown said...

'சரிங்க மாமா 'ன்னு நீங்க சொல்லி இருந்தா ...உங்களை நானும் நல்ல மனுஷன்னு ஒத்துக்குவேன் !
தம 1

Yaathoramani.blogspot.com said...

சரியென்றுதான் சொல்லியிருப்பீர்கள்
மிகவும் ரசித்துப்படித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.

Rathnavel Natarajan said...

நெகிழ வைத்த அருமையான பதிவு.
நன்றி. வாழ்த்துகள்.

Swathi said...

நல்ல பதிவு...உங்கள் எழுத்தின் நடை நன்று. என் பிளாக் ம் பாருங்கள்
http://swthiumkavithaium.blogspot.com/