6 May 2014

மென்பனித்தூவல்,,,,


     
வெற்றுடம்பில் பற்றிப்படர்ந்து குத்திய குளிர் ஊசிகளின் முனைகளாய்உடலுக்குள் பரவுகிறது.
கை,கால் ,உடல் என முழுவதுமாய் பரவி எட்டித்தொட்டு கரம் நீட்டிய குளிர் சற்றெ பெருத்துத் தெரிந்த தொந்தியை ஏதும் செய்ய மறந்து விடுகிறது.குழித் தொந்தி என்கிறார்கள் அதை. எனக்கிருந்தது குழி அல்லாத தொந்தியாக இருக்கலாம்.
நேற்றும், இன்றும் என இரண்டு நாட்களாய் தொலைக்காட்சியும்,செய்திதாள்களும் மற்றும் வானிலையும் சேர்ந்து அறிவித்திருந்த புயல் நேற்றிரவிலிருந்தே மழையை பதியனிட்டிருந்தது.
நேற்றிரவு தூக்கம் வராத பொழுதிலும் மின்சாரம் தன் விழிகளைஇறுக மூடிக்கொண்ட நேரத்திலுமாய் தூக்கம் வராமல் வராண்டாவில் அமர்ந்திருந்தபொழுது மழையின் வாசனை ----யையும் சப்தத்தையும் உணரமுடிகிறது.உணர்ந்துவிடமுடிகிறசப்தம், நுகர்ந்து  விட முடிகிற வாசனை என வாசல் கேட்டின் பின் புலத்தில் அமர்ந்திருக்கிற ஒற்றை மனிதனாய் மின்சார வெளிச்சமற்ற அந்த இருளிலும் புலன்களை வெளியனுப்பி மழை பெய்வதை உறுதி செய்து கொள்கிறேன்.
மிகவும் பெரிதாயும் அல்ல,மிகவும் சிறிதாயும் அல்ல,வானத்திற்கும்,பூமிக்குமாய் நட்டு வைத்திருந்த மென்வெள்ளிக் கம்பிகளாய் விடாதும் ஒரே சீராகவும் பெய்து கொண்டிருக்கிறது  மழை.
மழை,மழை,மழை,,,,,,,,,,,மழை இல்லையேல் ,,,,,,,,,,,மழை,மழை,மழைதான் எனஎந்தவிதஅர்த்தமும் பொருளும் அற்று ஊற்றெடுத்துப்பாடத்தோணுகிறது.அது மட்டுமா? அதிராமல் மெல்லச் சொட்டுகிற மென் மழைத்தூறலில் உடல் நனையவும் மனம் பிடித்தவர்களை உடனழைத்து கொண்டுகுதித்துகும்மாளமிடவுமாய்ஆசை.தந்தானே,தந்தானேதன்னனான்னா னானே என்கிற பாடலையும்  கவி வரிகளையும் மனதில் கொண்டு.
10.30 க்கு ஆட்கொண்ட தூக்கம் 11.30க்கு காணாமல் போய் விடுகிறது.பாயை விட்டு எழுந் தமர்ந்து இருட்டை சிறிது நேரம் வெறித்தமர்ந்தவாறு பார்த்துகொண்டிருக்கையில் மின் சாரம் போய் விடுகிறது. மிகச்சரியாக12.00மணியின்இரவுப்பொழுதில் .இனி கடிகாரத்திற்குள்ளி ருக்கும்  சின்ன  முள்ளின் துணை கொண்டு பெரியமுள்ளும்,பெரிய முள்ளின் துணை  கொண்டு சின்ன முள்ளும் ஒன்றின் உதவியுடன் ஒன்றுமாய் ஒன்றினைந்து மணி ஒன்றை எட்டித் தொடும்  வேளையில்தான் மின்சாரம் உயிர் பெறும்,இதில் கொடுமைஎன்னவென்றால் உயிர்பெற்றமின்சாரத்தின்உதவியுடன்இயங்கிறமின்விசிறியின்காற்றுதூக்கத்தை கொணர்ந்து  என்னில்புகுந்துஎன்னை ஆட்கொள்கிற வேலையாய்ப் பார்த்து திருபவும் இரண்டு மணிக்கா ய்  மின்சாரம் தந்து இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும்.உட தொட்டகாற்றும் தூக்கத்திலிருந்த கண்விழிகளுமாய்மின்சாரம்நின்றுபோனதும்தன்ஒத்துழையாமையைவெளிக்காட்டஆரம்பித்து  விடும்.
அப்படியானதொரு இரவில் தூக்கம் வராமல் வராண்டாவில் அமர்ந்திருந்து விட்டு தூக்கம் கண்களை அழுந்த இழுத்து சொருகிற நேரமாய் எழுந்து வீட்டினுள்ளே வருகையில் உயிர் பெற்றதாய் மின்சாரம்.
வீட்டினுள்ளே சுழன்ற மின்விசிறியின் வேகம் சற்றே வேகப்பட்ட்தாய் தெரிகிறது, எனக்குத்தான் அப்படித்தோணியதா அல்லது அதன் சுழற்சியே அதுதானா என்கிற நினைப்புடன் எழுந்து வீட்டினுள்ளேவருகையில் வீட்டின்  வெளியேபெய்த மழைகரம் பற்றிஎன்கூடவேவருவதாய்நினைப்பெனக்கு/ஆ,,சில்லிட்டுப்போகிறதுமனம்.மனசுக்குள்  மழை. கரம் பற்றி வந்த மழையை தனியே கழற்றி விட்டு,விட்டுவீட்டுனுள்ளே வருகையில் எதிர்ப்பட்டபேனின்காற்றுஈரப்ப்பதமாய்மேனிதொட்டு/  
தலையில் பனிக்குல்லாவை மாட்டிக்கொண்டு தூங்கச் செல்கிறேன்.மணி அதிகாலை மூன்றைதொட்டு விட்டவேளையில்.அப்போது தூங்கினேன்,எப்போது எழுந்தேன்என்பதெல் --லாம் யாருக்கும் தெரிய கூடாத ரகசியமாக/
இப்பொது மணி ஒரவு 9.15.சாப்பிட்டு முடித்து விட்டு பூப்போட்ட கைலியும் சட்டை அணியாத வெற்றுடம்பில் பற்றிப் படர்ந்த குளிரின் முனைகள் மட்டுமல்ல, மெல்லிய காற்றும் காற்று சொல்லிப் போன செய்தியும்/ஆகா கேட்கவே நன்றாக இருக்கிறதே/ இது மாதிரி இருந்தால் அனு தினமும் எனது வெற்றுடம்பில் குளிர்பற்றிப் படர சம்மதமே எனக்கு/

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! ரசித்தேன்...

இது போல் தினமும் இருந்தால் மகிழ்ச்சி தான்...

Pandiaraj Jebarathinam said...

மழையுடன் சிலாகிப்பு
வெற்றுடம்புடன் பனிக்காற்று
இதை ரசிக்கவைத்த
மின்வெட்டென
சிலிர்ப்பூட்டும் வரிகள்..

இனிமையான இரவுகள் இப்படிதான் இருக்கவேண்டும்...

vimalanperali said...

வனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைகுமாக/

vimalanperali said...

வணக்கம் ஜே பாண்டியன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Pandiaraj Jebarathinam said...

"சார்" பட்டமெல்லாம் வேண்டாமே..