31 May 2014

குழல் விளக்கு,,,,,,



சாவி வாங்க வேண்டி வந்ததினால் அங்கு வந்தேன்.இல்லையெனில் வந்திருக்க மாட்டேன்.

ஒரு டீ நாவின் சுவையறும்புகள் மீது படர்ந்து தொண்டைக் குழி வழியாக இறங்கிசுவைகொடுக்கிறதாக/அல்லதுதிருப்தியோ, மன நிம்மதியோ கொள்ளச் செய்வதாக/

காளியம்மா வீடு,பெருமாள் சாமி டீக் கடை,சிந்திக்கிடந்த மண் விரி ந்து கிடந்த சாலை.அழகர்சாமி டீக்கடை, எல்லாம் கடந்து பஸ் டாப்பிற்கு போன ஐந்தரை மணிப்பொழுதிற்கெல்லாம் இப்பொ ழுது நீங்கள் ஊர்ப்போக பேருந்துஇல்லை.இன்னும் கால் மணி யிலிருந்து 20 நிமிடங்கள் வரை ஆகலாம். அதுவும் சரியாக வந்தால் கால் மணி நேரம் கொஞ்சம் நேரம் பிசகினால் கூடகால் மணி நேரம். அல்லது ”சரி”கொஞ்சமாய்நொண்டியடித்தும்நீட்டித்துப்போயும் விட்டால் கூட அரை மணி வரைஆகலாம்அதிலும் மழை காலம் என்றால் கேட் கவே வேண்டாம். எப்பொழுது பஸ் வருகிறதோ அப்பொழுது ஏறிக் கொள்ளவேண்டியதுதான்.பயணித்துக்கொள்ளவேண்டியதுதான்  என்கிறார் அங்கிருக்கிறஒருவர்.

பஸ்ஸிற்குள்ளாய் வரிசையாய்அடுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் படர்ந்துஅமர்ந்தோஅல்லதுசாய்ந்தமர்ந்தோபஸ்ஸினுள்ளாய் இருக் கிற சகபயணிகளையும்,ஓட்டுனரையும், நடத்துனரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணி க்க வேண்டியதுதான்.

பிங்க்கலரில்பஸ்சினுள்ளாய்அடித்துப்போர்த்தப்பட்டிருந்தமைக்காவும்,
அதற்கேற்றவர்ணத்தில்இருந்தபேருந்தின் இருக்கைகளும், பேருந்தி னுள்ளாய் நடப்பட்டிருந்த உயர்ந்து நின்ற சில்வர் கம்பிகளுமாய் பார்க்க நன்றாகவே இருந்தன,கூடவேடிரைவர்கண்டக்டர்அணிந்தி ருந்தயூனிபார்மும்/பயணிக்கிறமனோநிலைக்கேற்றதாய்பேருந்தினு ள்ளாய்ஒலிக்கிறபாடல்கள் அமைந்து போவது தற்செயல் ஒற்றுமை யாய்/

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அவனில் ஒரு டீ அருந்தினா ல் நன்றாக இருக்குமே என மிதந்த எண்ணத்தின் கைபிடித்துச்சென்று மாரிச்சாமி கடையில் ஒரு டீ சாப்பிட்டவனாய் அமர்ந்திருந்த பொ ழுது விழிப் படர்வில் காட்சிப்பட்டு மையம் கொண்டதாய் மாரிச்சாமி விறகுடைப்பது தென்படுவதாக/

பழையஏர்க்கலப்பைபோலஇருந்ததுபார்ப்பதற்கு,.சீமைக்கருவேலைத்
தூர்,மஞ்சனத்திக் கட்டை,இன்னும் மரத்தூர்கள்எனநிறைய கிடக்கும் அவரது கடைக்கு பக்கவாட்டாய் கிடக்கும் வெற்றிடத்தில்/பக்கத்தில் அவர் வளர்க்கும் அல்ல, அவர் கறி போடுவதற்காய் கம்பி வலை போட்டகூண்டில்அடைத்துவைத்திருக்கிறகோழிகள்கூண்டினுள்
சுற்றியவாறு/சமயத்தில் வெளியே திறந்து விட்டிருப்பார்.கிண்ண த்தில் வைத்திருக்கிற அரிசியையும்,பக்கத்தில் சின்னக்கிண்ணத்தில் இருக்கிறதண்ணீரையும் கொத்திக்கொண்டிருக்கும் கோழிகள் அப்பா வியாக/

கரையின் மேல் அமைந்திருந்த கடை அது. எவ்வளவு வேகமாக டீப் போட்டார். அதை எவ்வளவு வேகமாக இவனுக்குக்கொடுத்து விட்டு எப்பொழுது அந்த அவர் வேலைக்கு தலைக்கொடுப்பவராய் ஆகிப் போனார் என்பது அந்த தக்குனூண்டு இடத்தில் தொக்கி நிற்கிற கேள்வியாகவே/

மனம் தாங்கி நெற்றி முன்னால் நின்ற கேள்வியை தூரப்போ அந்தப் பக்கம்,,,,,,,,,,?உழைக்கிறவர்களால்இருக்கமுடியாதுசும்மா,கைகாலை கட்டிப் போட்டால் கூட கட்டிய கயிறை எதன் உதவியுடனாவது அறுத்துக் கொண்டு வந்து வேலைசெய்யப்போய்விடுவார்கள். உடல் மன நிலையை பொருட் படுத்தாமல்/

”அழுதுக்கிட்டிருந்தாலும்உழுதுக்கிட்டிருக்கணும்”.என்கிற உழைப்பா ளியின் கூற்றுப்போல டீக்கொடுத்துவிட்டுப்போய் விறகுடைத்துக் கொண்டிருந்தவரை எதுவும் கேட்கவும் அவரிடம் எதுவும் சொல்ல வும் தோணாமல்குடித்த டீக்கானகாசைசரியாக மூடாத கடலை மிட்டாய் பாட்டிலின் மீது வைத்துவிட்டு நகரவும், பஸ் வரவுமாய் சரியாக இருந்தது.

கூட்டமில்லாதபஸ்ஸில்அப்படியேஅருப்புக்கோட்டைவரை சென்று காய்கறி ஏதேனும்வாங்கிவந்து விடலாம் .அங்கு கொஞ்சம் சௌகரி யம் என்றார்கள். என்கிற எண்ணத்தை இடை மறித்ததாய் பாலவன த்தத்தில் வைத்து விட்டு வந்த இருசக்கரவாகனம் ஞாபகம் வர அங் கேயே எடுத்தும் விடுகிறான் டிக்கெட்டை/

இப்போழுது பஸ்ஸில் செல்லாமல் இருசக்கரவாகனத்தில் சென் றால் படர்ந்து நீண்டிருக்கிற சாலை சாலையின் வெம்மை குளிர்ச்சி அதன் நீளம் அகலம் சாலையின் இருபக்கமுமாய் இறங்கி ஓடுகிற ஓடைகள், ,ஓடைகளை ஒட்டி படர்ந்து பாவிக்கிடக்கிற விளை நிலங் கள்.அதில் தன் ஆகுருதி காட்டியும் வளர்ச்சி காட்டியுமாய் நிற்கிற மரங்கள் முளைத்துத் தெரிகிற செடிகள், படர்ந்து நின்றி ருக்கிற பச்சைகள் என நிறைந்து காணப்படுகிறவைகள் கண் நிறைந்து காட்சிப்படும்.இப்படியானகாட்சிகளை உள்வாங்கியவனாய் சென்று கொண்டிருந்த ஒரு நாளில்தான் சாலைப்பணியாளர் கோட்டையும் ,ராமச்சந்திரனும்,வீரநாகுவுமாய்சாலையோரத்தில் இருந்த முட்செ டிகளை வெட்டி அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் வரும் போது ஒன்றும் தெரியவில்லை.சாலையோரத்தில் முட்ச் செடிகள் தலையாட்டுவது மட்டுமே தெரிந்தது. ஆளுயரத்திற் கும் மேலாக வளர்ந்து நின்ற முட்ச்செடிகளின் உள்ளே நின்ற வீரநாகுவும்,,கோட்டையும் ,ராமச்சந்திரன்என மூவருமாய் நின்றது தெரியவில்லை.அருகில் போனதும் தான் சப்தம் வருகிறது.அடர்ந்து நிற்கிற முட்செடிகளைத்தாண்டி.அது கோட் டையின் குரலாகவும், வீரநாகுவின் சிரிப்பாயும் ராமச்சந்திரனின் பேச்சாவு மாய் இருக்கி றது.நிறுத்திவிடுகிறேன்இருசக்கரவாகனத்தை.அன்பும், பாசமும், வாஞ்சையும்நிறைந்தபேச்சுக்களை கேட்டுஎத்தனை நாட்களாகிப் போனது. போகிற போக்கில்படர்கிறஎண்ணங்கள் எவ்வளவாயினும் அதன் மேனி முழு வதுமாய் படர்ந்து பாவுகிற நினைவுகளாய் இவர்க ளைப் போன்றவர்களை அவ்வப்பொழுது பார்த்துக் கொள்ள முடிகி றது போகிற வருகிற வழியெங்கிலுமாய்/ என்கிற ஆறுதலான சிரிப் புடன் “இப்படிமுள்ளுக்குள்ளெல்லாம் திரிகிறீர்களே,பூச்சி பொட்டு ஏதும்”,,,,? “இருக்கும் தான் தோழர் அது இல்லாத இடத்துலயா நாம இருக்கம் அததொந்தரவு பண்ணாத வரைக்கும் அது நம்மள ஒண் ணும் செய்யாது.போகுது தோழர் நல்லவிதமா, போகுற வரைக்கும் போகட்டும்”/என்கிற அவர்களது சொற்கட்டின் மூலமுடிச்சை பிடித் தவனாய் கிளம்பிவிடுகிறான்.

அன்றுஅவர்களைப்பார்த்தபிறகு,அதிகமாய்அவர்களைபார்க்கவாய்க்க
வில்லை. அப்படி அவர்களுக்குள்ளாய் ஏதும் இருப்பதாய் நினைத்துக் கொள்கிற நாட்களில் சக்தியண்ணன் கடையில் குடிகிற டீயுடன் முடிந்து போகும் அந் நிகழ்வு. அப்படியாய் முடிகிற நிகழ்வின் முடிச்சு டீக்கடைக்குவந்துபோகிற அன்றாடர்ளை பிரதிபலிப்பதாய்/

கொடுத்த பத்து ரூபாயைதிருப்பக்கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய் சில்லறை யாக இருந்தால் கொடுங்கள் என்றார் கண்டக்டர். இதயம் இருக்கிற இடது பக்கமாய் அமைந்திருந்த சட்டைப்பைக்குள் கை விரல்கள் இறங்கி தேடிய ஆழ்ந்த தேடலுக்குப்பின்னால் பிடி பட்ட இரண்டு ரூபாய் காய்ன்கள் இரண் டையும்,ஒரு ரூபாய் காய்ன் ஒன் றையுமாய் தேர்ந்தெடுத்து நூல்க்கோர்க் காமல் கொடுத்தபோது வாங்கிக் கொண்ட கண்டக்டர் பாலவனத்தம் வந்து விடும்சிறிது நேர த் தில் இறங்கிக் கொள்ள ரெடியாகிக்கொள்ளுங்கள் மனோ ரீதி யாக என்கிறார்.தட்டமுடியுமாஅவரின்பேச்சை.நடத்துனர் ஆயிற்றே/
நடத்துனர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டியிருக்கிறது.

அதன்படி நான் இறங்கிச்சென்ற இடம்பாண்டியனின்டீக்க்கடையாய்/ அதனால்என்னஇப்பொழுதுபலசரக்குக்கடை,பால்ப்பண்ணை,ஒர்க்‌ஷாப்,,,,,,,,, அந்த வரிசையில் டீக்கடை இருக்கக்கூடாதா என்ன?இருக்கட்டும் அப்பொழுதான்தோதாகவும் நன்றாகவும் இருக்கும்.இவன் போன்ற டீ விரும்பிகளுக்கு.
உடல் பொருள் ஆவி அனைத்தையும் டீக்கு கொடுத்து விட்ட பிறகு வாழுகிற நிமிடங்களை அதுவே பிரதான கணமெடுத்து ஆக்ரமித்துக்
கொள்வதாக/

சீக்கிரமே போகவேண்டும்,பெர்மிஷன் போட்டு விட்டேன்.இங்கிருந் து ஊர் போக வண்டியில்லை.என்ன செய்யலாம் சொல்லுங்கள் என சகஊழியர்இவனைக்கேட்டபொழுதுஎனதுபேண்ட் பாக்கெட்டிலிருந் தஇருசக்கரவாகனத்தின் சாவிஅவரதுகைக்கு மாறுகிறது.கண்கட்டி வித்தை ஏதேனும் இல்லாமல்/

பாலவனத்தம்போய்பாண்டியன்கடையில் நிறுத்திவிட்டுநகருங்கள்  நீங்கள் செல்லவேண்டிய திசை நோக்கி என முன்னறிவிப்பு ஏதுமி ல்லாமல் அவரிடம்சொல்லிவிட்டுஇப்பொழுது பஸ்சில் வந்து இறங் கிய இடம்பாண்டியனின் கடையாய்/

”டீ சாப்புடுறீங்களா சார்” என அவர்கேட்டகேள்விக்கு மறுப்பேதும் சொல்ல மனம் வரவில்லை சற்றைக்கு முன்னான நிமிடங்களில்டீக் குடித்துவிட்டு வந்த போதும்கூட/

”தத்தன்னத்தானா,,,,,,நெருங்கி வந்து”,,,,,,பாண்டியனின்கடைக்கு எதிர் வரிசை வீட்டிலிருந்து மிதந்து வருகிறது பாடல்/

ஆமாசார்,பஜ்ஜிபோடலஇன்னைக்குபொம்ளையாளுகேரளாவுக்கு
போயிருக்குஒருகேதத்துக்கு/இந்தாஎதுத்தகடைகாளியப்பன்
இருக்கார்ல்லஅவரோடமாமனாருக்குநேத்துகாலையிலஆக்ஸி
டெண்டாம்,பாஜார்லபோயிக்கிட்டுஇருந்தவரபின்னாடிவந்தலாரிக்காரன் வந்துஇடுச்சிட்டானாம்,தலையிலபெளமானஅடியாம்,கால் ரெண்டும் நொறுங்கிப் போச்சாம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க, சாய்ங்காலமே யெறந்து போனாராம்.கேதம்கேட்டுப் போனவுங்க மத்தியானமே கெளம்பீட்டாங்களாம்.அங்கயிருந்துஇங்க வர ஒரு ஆறு மணிநேரமாகுமா சார்.என்றார்இவனிடம்/

“தேவை தேவிபார்வை,,,,,தத்தன்னதானா”,,,,,,,,,பாண்டியனின் பேச்சை
ஊடறுத்ததாய்தொடர்கிறதுபாடல்.பாண்டியன்கொடுத்தடீயின்மிடறு களை உள் விழுங்கிக் கொண்டிருந்த நேரம் வண்டி வீட்டுக்கிட்ட நிக்குது சார் என சாவியைக்கொடுத்தார்.

“சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி”,,,,,

“நாளைக்கு பஜ்ஜி போட்டுருவோம் சார், எது ஒண்ணும் இல்லாதப்ப தான் அதுக்குகெராக்கி கூடிப்போகுது,இல்லைன்னாஅதோட அரும தெரியுது சார். இந்தா இருக்கிறஊர்லபேய்ஞ்சமழை இங்ககாணோம். பாருங்க என்றார்.

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது,,,,,,,,,,,,டீக்கு காசு கொடுத்து விட்டு கிளம்புகிறான்,பாடலின்கைபிடித்தாவனாயும், பாண்டியன் பேசிய பேச்சைஅசைபோட்டவனாயும்/

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// இதயம் இருக்கிற இடது பக்கமாய்... //

நிகழ்வுகள் அருமை ஐயா....

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Pandiaraj Jebarathinam said...

அருமையான காட்சிப்படுத்தல்..

இராய செல்லப்பா said...

மனத்தில் நெடுநேரம் தங்கிவிடும்படியான காட்சியமைப்பை வரிகளுக்குள் சிறைப்படுத்தும் வித்தை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது...!

vimalanperali said...

வணக்கம் ஜெ பாண்டியன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் செல்லப்பா யாகசாமி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Nagendra Bharathi said...

அருமையான காட்சிப் பதிவு

vimalanperali said...

வணக்கம் நாகேந்திரபாரதி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Rathnavel Natarajan said...

உழைக்கிறவர்களால்இருக்கமுடியாதுசும்மா,கைகாலை கட்டிப் போட்டால் கூட கட்டிய கயிறை எதன் உதவியுடனாவது அறுத்துக் கொண்டு வந்து வேலைசெய்யப்போய்விடுவார்கள். உடல் மன நிலையை பொருட் படுத்தாமல்/
அருமையான பதிவு. நன்றி.