16 Jun 2014

செவ்வந்தி,,,,

செவ்வந்தியக்காவுக்கு அவளது

மூன்றாம் வகுப்பு டீச்சரை மிகவும் பிடிக்கும்.

ஆறாம் வகுப்பு படித்த போது கதிரேசன் சார்

கற்பித்த பாடங்களை இன்னும் சொல்லி மகிழ்வாள்.

பள்ளித்தோழிகளான மகேஷ்வரியும்,

சுமதியும்,மாடத்தியும்,சுரேந்திரனும்,

கருப்பசாமியும்,பன்னீர்ச்செல்வமும்,இப்போது

 எப்படியிருக்கிறார்கள்,எங்கிருக்கிறார்கள்என
தெரியவில்லை என்பாள்.
கூடவே அவர்கள் பள்ளி நாட்களில் சாப்பிட்ட 
சாப்பாடு,உடை பற்றியுமாய் நிறையப் பேசுவாள். 

செவ்வந்தியக்காவுக்கு அவர்கள் குடியிருக்கிற 
வீட்டை சுத்தமாக வைத்திருக்க பிடித்திருந்ததைப்
போல அந்த வீதியில் உள்ள அனைவரையும்

பிடித்திருந்தது.

வீதியில் உள்ள வீடுகளின் முன் சிலர் வீட்டு
 வாசலில் இவளே வலியச் சென்று கோலமிடுவாள்.

அந்த வீதியின் குழந்தைகள் மனதில்

செவ்வந்தியக்கா படம் பிடித்து மாட்டப்பட்டிருந்தாள்

என்றால் பெரியவர்களின் மனதில் அன்பால் 
அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருந்தாள்.

எட்டாம் வகுப்புடன் படிப்பைநிறுத்திவிட்ட
அவள்தான்பார்க்கிற தீப்பெட்டி ஆபீஸ்
வேலையை சலிப்பின்றியே செய்கிறாள். 

செவ்வத்தியக்காவுக்கு சினிமா பாடல்கள்

என்றால் படிக்கிற காலத்திலிருந்தே உயிர்,

அது போலவே சினிமாக்கள் பற்றியும்,

வாராந்திர,மாதாந்திரிகளில் வருகிற

கதைகளைப் படிக்கிற தருணங்கள்

மிகவும் இனிமையானது என்கிறாள்.

தன்னுடைய புடவைகளில் மலர்ந்து 
சிரிக்கிற பூக்களைப்போலவே வீதியில் 
உதிர்ந்து கிடக்கிற காகிதப்பூக்களையும், 

பன்னீர்ப்பூக்களையும் இணைத்துத்தொடுத்து

மகிழ்வாள்.

பதினெட்டு முடிந்து பத்தொன்பதை எட்டித்
தொடப்போகிற வயதில் அவள் இருக்கிற 
வறுமையிலும்,சந்தோசத்திலும் அந்த 
வீதியில் யாரையும் இன்னும் 
பார்த்து விடமுடியவில்லை.

2 comments:

Pandiaraj Jebarathinam said...

செவ்வதியக்கா சந்தோசமா இருக்கணும்.. அருமை..

vimalanperali said...

வணக்கம் ஜெ பாண்டியன் சார்,
நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/