இடதுக்குத்தெரியாமல் வலது கையில் ஒட்டிக்கிடக்கிற மண்துகள்கள்
உதிர்ந்துவிடுகின்றன,கையில்மெலிதாயும்அடர்ந்துமாய்இருக்கிறபூனை முடிகளிலிருந்தும் அது
அல்லாத வெற்று இடங்களில் இருந்துமாய்/
கையில்அடர்ந்து நிற்கிற மென் முடிகளை எடுத்துவிடலாம் ஷேவிங்
பண்ணும்போதுஎனநினைப்பதுண்டு வெயில் நேரங்களிலும் அதிகமாய் வியர்த்து உப்புப்படிந்து
விடுகிற பொழுதுகளிலுமாய்/ ஆனால் என்ன தான்கறாராகமுடிவெடுத்தாலும்அதை அமுல் செய்ய நினைக்கையில் வருகிறமனப்பிணக்கும்இன்ன பிறவுமாய் ஏதோதோ யோசிக்க வைத்து எடுத்தமுடிவை
அமல்படுத்தவிடாமல் செய்து விடுகிறதுதான்.
மென்மைபூத்தசிறுசிறுபூக்களைப்போல பூவோ காயோ கனியோ ஒட்டி யவையும்எடுத்தவையும்உதிரத்தானேவேண்டியிருக்கிறது.இடம்
முழுவ துமாய் பூத்துக்கிடக்கிற பூக்களாயும் முளைத்துத் தெரிகிற செடிகளா யும்அல்லாமல்
அவைகள் ஒரு சிறு செடியாய் முளை கொண்டு மண் கீறி துளிர்விட்டு முளை கொண்டு இலைகளும்,
காம்புகளுமாய் நிற்கி ற போது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதுதான்.
பரந்துக்கிடக்கிற பொட்டல் பூமியில் பச்சை ரத்தம் பூசி களி
நடனம் புரிகிறவைகளாய் துளிர்த்து நின்று தலையாட்டுகிற செடிகள்.சைக்கிள் ஷெட்டின் ஓரமாய்
முளைத்து விடுகிறன சொன்ன சொல்லையும் மீறி/
சென்ற வாரம் சற்று தாமதமாக விழித்தெழுந்திருந்திருந்த ஞாயிறின்
காலை கொல்லைப் பக்கமாய் வந்து முகம் கழுவுகையில் பிள்ளை யார்சுழியிடுகிறது.அப்படிஒன்று.இட்டசுழியின் நீட்சி ஒரு முடிவு நோக் கி நகர்கிறது.மெல்ல மெல்லஅடியெடுத்து வைத்து/
அடுத்ததடுத்ததாய்பெய்தஇரண்டு,மூன்று பெருந்தூறல் மழைக்கு
காத்தி ருந்தது போல் கைவிரித்து முளைத்து விடுகிறது செடிகள். ஒன்றல்ல இரண்டல்ல,கொல்லைப்புற
வெளி பூராவும் விதைத்துப் பாவிய விதை போல் பெயர் தெரியாத செடிகளும் லேசாய் எட்டிப்
படர்வதற்காய் கரம் நீட்டிய கொடிகளுமாய் சிறு சிறு இலைகாட்டியும் அதனுள்ளாய் ஒட்டிக்கிடக்கிற
தக்ணூண்டு அளவிலான அதன் பூக்கள் காட்டியுமாய்/
வீடுகட்டி கட்டி குடிவந்த புதிதிலிருந்து இன்றுவரைஅவனில்நிறைவே றாத கனவாக நீடித்துகொண்டே வந்திருக்கிறதாய் அது. வெற்று வெளி யாய்கிடக்கிற வீட்டின்
பக்கவாட்டுவெளியைச்சுற்றி வேலியடைத்து உள்ளே முழங்கால் உயரத்திற்கு வெளியெங்கிலுமாய்
செம் மண் நிரப்பி அதில் நீள்வாக்கிலும் சதுர சதுரமாயும் பாத்திகட்டிஅதனூடாய் கையில்
மண் வெட்டியுடன் மென் நடை நடந்து நிறம் காட்டி
நிறைந்து நிற்கிற செடிகளுக்கும், மரங்களுக்கும் ஊடாய்உடல் நிறை உழைப்புடன், வியர்வைவாசனையுடனுமாய்
அடையாளம் கொ ண்டு திரிய ஆசைப்பட்டிருக்கிறான்.ஆனால் செய்யவில்லை. செய்ய வும் முடியவில்லை
அல்லது வாய்க்கவில்லை. அல்லது வீட்டைச் சுற்றி லுமாய் இருக்கிற சீமைக்கருவேலை முள்ளுக்
காட்டிலிருந்து பூச்சி பொட்டுஎன வந்து போய் தங்கிப்பழகிவிட்டால் பின்வேறெங்கிலுமாய் போகாதுஎன்கிறகுறுக்குயோசனையும்வரஇது
தோதுப்படாது, பாதுகாப் பற்றஏரியாவில்இதுலாயக்கற்றதுஎன்கிறநினைப்பினூடாகநகர்ந்துபோன நாட்கள்இன்று
வரை நிறைவேறாக் கனவைமெல்ல மெல்ல நகட்டிக் கொண்டு
வந்து விட்டதாக/
அன்றுஒரு நாள் மென் மதிய நேரமாய் துணி துவைத்துக் கொண்டி ருந்தமனைவியின்சப்தம்டீ.விபார்த்துக்கொண்டிருந்தஇவனைப்
பிடித்து இழுத்து வருகிறது.பின்னால்வந்துபார்த்தால்கொல்லைக் கதவு திறந்து கிடக்கிறது.கொஞ்சம் தள்ளி பூசப்பட்டிருந்த சிமெண்ட் தரையில் துணி துவைத்துக்கொண்டிருந்தவள் எழுந்து
நின்று கொண்டிருந்தாள். உடல் பதற/
கையெல்லாம் வியர்வை நடுக்கம், உடல் பதற்றம் தொற்றிக்கொள்ள ஏற்கனவே வியர்வையால்
நனைந்த உடலுடன்இருந்தஅவளின் உடல் பதற்றத்தில் இன்னும் உடல் நனைந்து தெரிகிறது.
திறந்திருந்த கொல்லைப் புற கதவுக்கும் அவள் நின்றிருந்த துணி துவைக்கிறஇடத்திற்கும்
இடையிலாக இரு பெரிய பாம்பு ஒன்று நெளி ந்தாய் படமெடுத்தவாறு, நாக்கை, நாக்கை வெளி நீட்டி
கண்விரித்து உருட்டி நிற்கிறது.இழுத்து வைத்து அளந்தால் எப்படியும் ஒரு ஐந்து அல்லது
ஆறடி இருக்கலாம்.
பயமாக இருந்ததுபார்ப்பதற்கு.படமெத்தவாறேஊர்ந்துவருகிறது இவன் நிற்கிறகொல்லைப்புறவாசல்
இருக்கும் திசைநோக்கி/ கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என மனைவி தூரத்திலிருந்து போட்ட
சப்தம் இவனில் கொஞ்சம்பதட்டப்படவைத்ததாகவே/
கதவைப்பூட்டிக்கொண்டுபின்புறம்நோக்கிஓடுகிறான்,மனைவியின்பாதுகாப்பையும்கணக்கில்எடுத்துக்கொண்டு/இவன்போவதற்குள்ளாகபாம்பும்
நெளிந்து போய் விட்டது.
கல்லைஎடுத்துக்கொண்டுஇவன்பின்னால்ஓடியும்கூடபிரயோஜனமற்றுப் போய்விட்டது.அடுத்தவீட்டு
சந்திற்குள்ளாய் நுழைந்து போய் விட்டது.
கண்ணம்மாவின்கணவன்பெத்தண்ணசாமிஇறப்புக்குப்பின்இவன்கொஞ்சம்கவனமாய்இருக்கஆரம்பித்துவிட்டான்எனச்சொல்வார்கள்ஊர்க்காரர்கள்.
கண்மாய்க்கரைஓரக்காடு,சம்பளத்துக்குப்பேசிஇரண்டுட்ராக்டர்கள் உழவுக்குப்போனார்கள்,அவர்கள்உழவுக்கு போன அன்றிலிருந்து பத்து நாட்கள்கழித்து அங்கு சோளம் விதைக்க வேண்டும் எனபேசிக்
கொண் டிருந்தார்கள். காட்டுக்கார்கள்.
சம்பளம்பேசியாயிற்று,இன்று தோது இல்லை.நேற்று இரவு கண் விழி த்து ட்ராக்டர்
உழுகப் போயிருக்கிறது. அதனால் நாளை இரவு போய்க் கொள்ளலாம், பெத்தண்ணசாமியின் ட்ராக்டரும்,கூட
ஒரு ட்ராக்டரும் வரும் எனபேசி மறுநாள் இரவு காட்டில் கால் வைத்திருக்கிறார்கள். முதலாவதாய்
கூட வந்தவன் ட்ராக்டர், இரண்டாவதாய் பெத்தண்ண சாமியின்ட்ராக்டர்,முதலாமவன்இளைஞன்,கொஞ்சம்வேகமானவன்.அவ
னே போகட்டும் முதலாவதாக/ பெத்தண்ணசாமியாகியநான்பின்னால் வந்து கொள்கிறேன் என அவனிடம்
சொல்லிவிட்டு வேலையை ஆரம்பிக்கிறார்கள். பின்னும் பின்னுமாய் போய்க்கொண்டிருக்கிறது
ட்ராக்டர்கள். உழவு.போகட்டும் போகட்டும் என வேகம் கூட்டிசென்று கொண்டிருந்தபொழுதுவேளைநடுநிசியாகிவிட்டது.இருவருமாய்ட்ராக்ட ரைநிறுத்திவிட்டுகொண்டுவந்தசாப்பாடைசாப்பிடச்சென்றார்கள்.சாப்பி ட்டு முடித்து ஒண்ணுக்கு இருக்கப்போன பெத்தண்ணசாமி இருட்டில் கிடந்தபாம்பை மிதித்து விடுகிறான். விஷப் பாம்பு போலும் அது, கடித் துவிட்டு நகன்றதை வைத்துதான்அதுபாம்பு என முடிவு செய்து சப்தம் போட்டிருக்கிறான்
முதலாமவனைக் கூப்பிட்டு/.
ட்ராக்டரில்ஏறிஉழுதுகொண்டிருந்தவனுக்குஅந்தசப்தம்கேட்கவில்லை. என்ன செய்ய பின்னே
அங்கேயே கண் கட்டிமயங்கி விழுந்திருக்கிறா ன்,ஒண்ணுக்குப்போனவனைரொம்பநேரமாய்க்காணவில்லைஎன
பெத்த ண்ணசாமியுடன் வந்தவன் ட்ராக்டரை நிறுத்தி விட்டு வந்து பார்த்த போது பெத்தன்னசாமி
இறந்து கிடந்திருக்கிறான்.அன்று அவன் காட் டில்இறந்துகிடந்த நாளிலிருந்து இன்றோடு
வருடங்கள் நிறைந்து ஓடி விட்டது.
அவனது பையன் இப்பொழுது ஹரியானாவில்வேலைபார்க்கிறதாய்ச் சொன்னார்கள்.நன்றாகஇருந்தான்
கண்ணுக்கு லட்சணமாக/ அவனது அம்மா ஒரு முறைபேசிக்கொண்டிருக்கும்போதுசொன்னாள். இப்பொழு தான்நிம்மதியாக இருக்கிறது,இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வை த்து விட்டால் நான் நிம்மதியாய்
சாவேன் என/ஒரு விதவைத் தாயின் இத்தனை வருட மனபாரம்அவளது ஒற்றை பேச்சில் தெரிந்தது.
மடிப்புகலையாமல் பேண்ட் சட்டையை போட்டுக்கொண்டு ஏன் இப்படி யெல்லாம்?வேண்டுமாஇதுஉங்களுக்கு?உங்களது
வேலையை பார்த்துக் கொண்டுசெல்லுங்கள்நிறுத்தியிருக்கிற சைக்கிளை எடுத்துக் கொண்டு.
பேண்ட் சட்டையில்ஏதாவதுகறையாகிப்போனால்அல்லது அழுக்காகிப் போனால்துணிதுவைக்கையில்அதோடுமல்லுக்கட்டுவதுயார்?ஏன்அதை யெல்லாம்போய்அனாவசியமாக/ போங்கங்க,ஒங்க வேலையப் பாத்து க்கிட்டு என மனைவி
சொன்ன போதுஎரிச்சல் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது லேசாக/என்னசெய்ய எட்டிப்பார்த்த
எரிச்சலை சப்தமில்லா மல் உள்தள்ளிவைத்து விட்டவனாய் கிளம்புகிறான் சைக்கிளை எடுத் துக்
கொண்டு/
இனிகூடஅந்த கனவை நிறைவேற்றலாம். நேரமும், காலமும்தூரமும் அதிகம்ஒன்றும்ஆகிப்போய்விடவில்லைதான்என்கிறநினைவுடனேயே மண்வெட்டியை கையிலெடுக்கிறான். பின் புற
வெளியை சுத்தம் செய் தே ஆகவேண்டும் என்கிற முடிவுடன்/
தரை தெரியாமல் பச்சைகம்பளம் விரித்தது போலிருந்த உயிர்ச் செடி களின் மேல் மண்வெட்டியை
பலம் கொண்டிஇறக்கியபோதுசுள்ளிட்ட வெயில் உடல் பரவி சூடேற்றியதாக/
அன்று வெட்டிய செடிகளின் மிச்சச்சொச்சமாயும்,அதன் வேர் தாங்கி மண் துளைத்து
வந்துமாய் இங்கு நிலை கொண்டிருக்கிற செடிகளில் ஒன்றிரண்டைபிடுங்கிஎறியலாமேஎன்கிற
நினைப்புடன் இருந்த போது தான் அசரீரீயாய் வந்து விழுகிறது மனைவியின் குரல்.
முளைத்துக்கிடக்கிறசெடிகள்ஒன்றிரண்டை பார்த்துவிட்டு எப்படிக் கிள ம்ப வெற்று
மனதினனாய்/அதுதான்பிடுங்கி விட்டான்.வழக்கம் போல். அவசர முலாம் பூசி அலுவலகம் கிளம்ப
வீட்டின் நடை இறங்கு கையில் தென்பட்ட சைக்கிள் ஷெட்டின் தரையோரமாய் முளைத்துக் கிடக்கிற
செடிகள் கண்ணை உறுத்த பிடுங்கி எறிகிறான் அவைகளில் ஒன்றிரண்டை/
அப்படிஎறியப்பட்டசெடிகள்இவனின்மென்கரம்பட்டஎந்தஉணர்வுமில்லா மல் மெதுமெதுவாய்
முகம் வாடி கறுத்து விழுகிறதாய். அப்படியாய் விழுந்த செடிகள் ஒன்றிரண்டை நுனிவிரல்
பிடித்து உள்ளங்கையில் வைத்துவாஞ்சையுடன்பார்த்துக்கொண்டிருக்கும்போதுஉள்மனம் இரைச் சலிடுகிறது.நேரமாகிப்
போகிறது. அலுவலகத் திற்கு கிளம்பவேண்டும் சீக்கிரம் அதை விடுத்து ,,,,,,,என/கிளம்புகிறான்
அலுவலகத்திற்கு/
கையிலிருந்தமென்மைபூத்தசெடிகளையும் வாசம் நிறைந்த மண்ணை யும்தட்டிவிட்டவனாக/இப்படித்தான்அவசர கதியில் பயணித்துக் கொண் டிருக்கிறது வாழ்க்கை.மண்மணத்தையும் அவைகளிலிருந்து
பூத்து நிற்கிற செடிகளின் மணத்தையும் கவனிக்க நேரமின்றி அல்லது விருப்பமின்றி/
11 comments:
இன்றைக்கு அனைத்தும் அவசரம் தான்... அந்த தாயின் எண்ணம் விரைவில் நிறைவேறட்டும்...
நிகழ்வுகள் நம்மை பழைய நினைவுகளுக்குள் கொண்டு செல்லும்! அருமையான விவரிப்பு! வாழ்த்துக்கள்!
வணக்கம்
இறுதியில்சொன்ன வரிகள் உண்மைதான் காலம் மாறிவிட்டது... அண்ணா. தாயின் எண்ணம் நிறைவேறட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தாயின் எண்ணம் விரைவில் நிறைவேறட்டும்...
தம 3
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி வாக்களிப்பிற்கு
கரந்தை ஜெயக்குமார் சார்.
சிறப்பான விபரணம்
வணக்கம் சந்திரகௌரி சிவபாலன் அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
காட்சிப்படுத்துதல் நன்று...எண்ணங்கள் நிறைவேறட்டும்..
வணக்கம் ஜெ பாண்டியன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment