1 Jul 2014

அதிகாலைப்பெருவெளி,,,,,,,

கோழிகள் மேயும் பெருவெளி
எப்பொழுதும் பரபரப்பாகவே/
பச்சைவிரித்தும்
குப்பை குளங்களுடனுமாய்
தெரியும் வெளியில்
முட்கள் முளைத்தும்,
கொடிகள்தளைத்துமாய்.
மண் வாசனையும், ஈரத்தன்மையுமாய்
இருக்கிற வெளியில்எப்போதும்
கொண்டைச்சேவல்களும் ,
கோழிகளும்,குஞ்சுகளுமாய்/
தலையில்சிகப்பு கொண்டை
வைத்த சேவலும்,
குனிந்த தலை நிமிராமல்
மேய்ச்சலில் கவனம் காட்டுகிற  
போந்தாக் கோழியும்
அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம்
ஆஜராகி விடுகிறதுண்டு.
மேய்ச்சலில்கவனம் காட்டுகிற
அவைகள் குஞ்சுகளுடனும்,
குடும்பத்துடனுமாய்
சமயங்களில் என்னை ஏறிட்டும் பார்க்கிறது,
சில நேரம் சிரிக்கிறது,
சில நேரம் பேசுகிறது,
சில நேரம் என்னருகில்
வருவது போல நடிப்புக்காட்டி
நகர்ந்து விடுகிறது.
கிடைத்ததை பொறுக்கித் தின்றும்,
கிடைக்காததை
கிண்டித்தின்று விட்டுமாய்
நகர்ந்து விடுகிற
அந்த உறவுகளைதரிசிக்க
தினசரி அதிகாலையில்
எழுகிறேன் நான்.

5 comments:

Unknown said...

நம்மிடம் இருந்து பிடுங்கி தின்ன நினைக்கும் உறவுகளை விட இந்த உறவுகள் எவ்வளவோ மேல் !
சேவலின் கூவல் சுப்ரபாதமாய் ஒலிக்கும் அதிகாலை நேரத்தை நானும் ரசிக்கிறேன் !
த ம 2

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை அண்ணா...

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே.குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/