காலைஎழுந்தவுடன்எனதுமனைவி,பிள்ளைகளிடமெல்லாம்கூடசொல்லி விட்டேன்.அவர்களும் அனுமதித்துவிட்டார்கள்.
ஆறு மணிக்கு எழுந்து ஏழரை மணிக்கு பின்பாக குளித்து எட்டரை மணிக் குள்ளாக வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என்பது நேற்றைய இரவு எனது திட்டம்.
இன்று காலை காலன் கொஞ்சம் மனமிறங்கி அனுமதித்ததனால் கிளம்பி விட் டேன் சீக்கிரம்.மனைவி வாசலில் வந்து வழியனுப்பி வைத்தாள்.பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டார்கள்.
இரண்டு நாட்களாய் எடுக்காமலிருந்த இருசக்கரவாகனத்தை துடைத்து சுத்தம் செய்து கண்ணாடியை திருப்பி சரிசெய்து வைத்து விட்டு கிளம்புகிறேன்.
வீடு கடந்து,தெரு திரும்பி,சாலையை அடையும் முன்பாக அதனுடனான சிறு பேச்சில்மனம்கலக்க விட்டு விடுகிறேன்.பெட்ரோல்,ரிப்பேர்,சர்வீஸ், ஆயில், மெக்கானிசம் என்பதை தாண்டி அது தரும் கிலோமீட்டர் ஓட்டத்திலும் போகு ம் சொகுசிலுமாய் மனம்லயித்து இப்படி அவ்வப்போது கொஞ்சமாய் பேசிக் கொள்வதுண்டு.மெயின்ரோடு வந்து விட்டால் கண்ணுக்கும்,சாலைக்கும் நூல்கட்டும் வேலை நடந்து விடும்.
பார்வையைஅக்கம்,பக்கம்முடியாது.பஸ்,லாரிஇருசக்கரவாகனங்கள்,சைக்கிள்கள்,
பாதசாரிகள் என கடக்கிற சாலையில் ஊர்பவனாகநேர்கோட்டுப்பார்வையில் விழிகளை பதித்தவனாக/
தான் செல்லும் வேலைக்கு பஸ்பயணம் ஏற்றதல்ல.தவிர இப்போதுள்ள உயர் ந் து போன கட்டணத்திற்கு ம்ஹீம்,,,,,,. முதல் ரயில்வே கேட்டின் அருகில் ஒருவரையும்,மார்க்கெட்டின் அருகில் சென்று மற்றொருவரையுமாய் பார்க்க வேண்டும்.
ஒருவர் பெயிண்டர்.மற்றொருவர் டீக்கடை வைத்திருப்பவர்.டீக்கடைக் கார ரிடம் பெயிண்டர் வரலாம்,பெயிண்டரிடம் டீக்கடைக்காரருக்கு என்ன வேலை இருந்து விட முடியும். ஆனால் இருந்ததே.
இருவரும் நல்ல நண்பர்களும் தோழர்களும்.வேலை முடிந்த நேரத்தில் அவரும்,கடை முடிந்த நேரத்தில் இவருமாய் தினசரி ஒரு இடத்தில் சந்தித்து பேசிக்கொள்வார்கள் வேறெதிலாவது ஒரு கடையில் டீ வாங்கி குடித்தவாறு/
அவர்களது பேச்சில் வக்கிரம் இருக்காது.சுய பச்சாதாபம் இருக்காது.தன் வயப்படுத்துதல் இருக்காது.ஒருவரை,ஒருவர் நோகடிக்கும் பேச்சும் போட்டி யும் மனமீறலும்,முரண்பாடும் இருக்காது.தென்றல் தவழ்ந்த்து போல் இருக் கும்.
அவர்களது பேச்சின் நேரத்தில் பூக்கள் மலரும்.மொட்டுகள் வெடிக்கும், பறவைகள் கீச்சிடும்,மரங்கள் தலையசைக்கும்.மழை தூவானம் போடும். இப்படியான ஒரு பேச்சை தினசரி என இல்லாவிட்டாலும் வாரத்தின் இரண்டு நாட்களில் பேசி மகிழ்ந்து கொள்வார்கள்.நல்ல மனம் வாய்க்கப்பெற்றவர்கள் என சொல்லுமளவு/
இருவருமாய் தான் சார்ந்திருந்த இயக்க போராட்ட தினநகர்வுகளில் சிறை சென்ற நினைவுகள்,சிறைசாலை தந்த தழும்புகள்,காயங்கள்,அதை ஆற்ற ஆற்றாமையுடன் அலைந்த நாட்கள்,இதை தாண்டிய காயங்கள்,கசப்புகள் என பல்வேறாக நிழலாடினாலும் கூட அவர்களது மனது இன்றும் இளமை யாகவும்,இனிமையாகவுமே/
அப்பொழுதெல்லாம் காலையில் இருந்த வாழ்க்கை சூழல் மதியம் இருந்ததி ல்லை அவர்களுக்கு.மதியம் இருக்க வாய்க்கப்பெற்றது மாலையில் இருக் காது.மாலையில் இருப்பது இரவில் கண்ணுகெட்டாத தூரமாய்.
இப்படியான அவர்களது இளமை வாழ்க்கையை இயக்கத்திற்கு அர்பணித்தி ருந்த நாட்களை அவர்கள் இன்றும் இனிமையாகவே நினைக்கிறார்கள். அந்த நினைவுகளை தவறு எனச் சொல்லி முழுதாக ஒதுக்கி விட முடிவதற்கு இல்லை.
காலைஒன்பதுமணிவாக்கில்சென்றால்பெயிண்டரைபார்த்துவிடலாம்.அவரைப் பார்த்து பேசி முடித்த கையோடு டீக்கடைகாரரையும் சந்தித்து விடலாம்.
டீக்கடைக்காரரை இரண்டு மாதங்களுக்கு முன்பாக பார்த்தது. உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறேன் என கடும் பிஸியாகிவிட்டார்.நேற்றுக்காலை அவரது கடையை கடந்து வேகமாக சாலையில் விறைகையில் “தோழர்” என முதுகுக்குப்பின்னால் அவரது குரல் கேட்டது.
நடந்து முடிந்த தேர்தல் நேற்றுதான் அவரை கடை திறக்க அனுமதித் திருக் கிறது போலும்.வாங்கி வைத்த பெயிண்ட் மூடி சீலிடப்பட்ட டப்பாக்களில் ஆறு மாதங்களுக்கு மேலாய் அடைந்து கிடக்கிறது.
தஞ்சாவூருக்கு மாறுதல் ஆவதற்கு பத்து நாட்கள் முன்பாக வாங்கியது.பணி மாறுதல் உத்தரவு வரும் முன் எல்லா வேலைகலையும் முடித்து விடலாம் என்கிற நினைப்பிருந்தது.ஆனால்,,,,,,,,,,,,,,,/
அப்படி இருந்த நிறைவேறாத நினைவ இப்போது நிறைவேற்றிப்பார்க்கலாம் என ஆசை.
அந்த ஆசை மிகுதியினால்தான் பெயிண்டரைப்பார்த்து விட்டு அப்படியே டீக்கடைக்காரரையும் பார்க்க வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறேன்.
பெயிண்ட் டப்பாவின் மூடியை பூப்போல லேசாக,மிக,மிக லேசாக திறந்து அதை வாரி எடுத்து வீட்டின் சுவர்களுக்கு பூசி அழகூட்ட வேண்டும்.நேற்று போகாமல் விட்ட டீக்கடைக்கு இன்று போக வேண்டும்.
முன்னவரைபார்ப்பதுவேலைநிமித்தமாகவும்,பின்னவரைப்பார்ப்பதுடீசாப்பிட
மட்டும் அல்ல.கொஞ்சமாகவும்,பிரியமாகவும் பேசிக்கொள்ளவுதான்,
ஏனென்றால் நானும் அவர்கள் இருவருக்கும் நண்பனும்,தோழனும்/
9 comments:
வணக்கம்
அண்ணா.
கதைக்கருவை அருமையாக நகர்த்தி நிறைவு செய்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன் அண்ணா
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
அருமையாக போனது கதை வாழ்த்துக்கள் நண்பரே,,,,
வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சுவையான விவரிப்பு! வாழ்த்துக்கள்!
சிறந்த பகிர்வு
தொடரட்டும்
வணக்கம் Yarlpavanan Kasirajalingam சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமையான கதை....
வாழ்த்துக்கள் அண்ணா....
வணக்கம் சே குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment