துப்பரவு,,,,,,
செதுக்கிய புல்லின்அடர்த்திகனம் கொண்டு காணப்பட்டதாய்/ எப்படி செதுக்கப்போகிறேன்இதை அல்லது இது என்னால் முடியுமா,,,,?என யோசித்த வேலை அரை மணி அல்லது முக்கால் மணிப்பொழுதில் முடிந்து போகிறது எனது மனைவியின் உதவியுடன்.
“முந்தாநாள் பெய்தமழையில்நேற்று முளைத்த காலானைப் போல” என்ற சொல்லுக்கு இணையாக15நாட்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையில்(இரண்டு ,மூன்று நாட்கள் மாலையிலும், இரவிலு மாக)முளைவிட்டு செழித்திருந்த செடிகளும்,புற்களுமாய் இப்போது மளமளவென்று வளர்ந்து அடர்ந்து நிற்கிறதே இப்படி?என்கிற மனோ நிலையுடன் அதை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தவேளையில் இதை இன்று வெட்டி விட வேண்டும்,விட்டால் ரோம்பவுமாய் வளர் ந்து பூச்சிகளும்,கொசுக்களுமாய் அடைந்து தொல்லை கொடுக்கக் கூடும் கடுமையாக/
வீட்டின் முன்பாய் வீதியைத்தாண்டி ஆடுகளும் மாடுகளும் பறவை களும், புழுப்பூச்சிகளும், பறவைகளும் சமயத்தில் பாம்புகளும் கீரிப் பிள்ளைகளுமாய் ஊர்ந்து திரிந்த வெற்று வெளி முழுவதும் புல் முளைத்தும் செடிகள் வளர்ந்தும் அடைந்து தெரிந்ததாக/
பச்சைப்போர்வைவிரித்ததுபோலவும்,பட்டு போர்த்தியது போலவுமா ய் இருந்த அவ்வளவு பரந்த வெளியை ஒன்றும் செய்ய இயலாது என் தனியாள் ஒருவனால்/
ஏனென்று கேட்கவும் சுத்தம் செய்யவும் ஆளில்லாத வெற்று வெளி அது.தவிர எங்கள் வீதியிலிருக்கிற அனைத்து வீட்டின் சாக்கடை நீரும் தஞ்சம் கொள்கிற இடமாய் அது.
விளைநிலங்களாய் நிலை கொண்டிருந்த இடத்தில் வீதி விரிந்து வீடுகள் நிலை கொண்டது போக மிச்சம் கிடந்த பரந்து விரிந்த வெளி யில் ஏக்கர் கணக்காய் விரிந்து கண்ணுக்கு காட்சி தருகிறது, கூட வேதன்மேனிமுழுவதும் சீமைக்கருவேல முட்செடிகள் முளைக்க விட்டு/
அதைநான்ஒருவன்மட்டுமேசுத்தம் செய்து முடிப்பதென்றால்,,,,,,,,,,,,? முடியாதுதான்,தவிரஅதில்ஊர்ந்துதிரிகிறஎறும்புகளும்,புழுப்பூச்சிகளும்
பரஸ்பரம்நலம்விசாரித்துக்கொண்டும்கைகுலுக்கிக்கொண்டுமாயும், அதில்மேய்ந்து திரிந்த ஆடுகளும்,மாடுகளும் தன் உறவையும், நட்பையும் புதுப்பித்துக்கொண்டு எங்கள் நட்பு போய் விடக்கூடும் நீங்கள் இதை சுத்தம் செய்தால் எனச்சொல்லக்கூடும் அல்லது ஒன் று கூடி எங்காவது உயர் இடத்தில் சென்று மனுக்கொடுத்து விடக் கூடும் என்கிற உயர் நவிற்சி எண்ணம் காரணமாகவும் என்னால் முடியாது அவ்வளவு பெரிய வேலையை செய்ய?என்கிற முடிவுட னும் வீட்டின் முன்புறம் வீதியைத்தாண்டி வீதியின் கரையில் கோடு இழுத்தது போல காணப்பட்ட புற்களை மட்டும் செதுக்கி விடலாம் என மண் வெட்டி எடுத்து செதுக்கினேன்.
இழுத்திருந்த கோடு அடர்த்தியாயும் கனமாயும் கணுக்கால் அளவுக் கு வளர்ந்தும் பரந்து போயுமாய்/
நினைத்தது போல அவ்வளவு லேசாக இருக்கவில்லை வேலை. தவி ர மண் வெட்டி தொட்டும் வேலை செய்தும் ஒரு வருடத்திற்கு மேலா கிப் போகிறது ஏன் அப்படியெனத் தெரியவில்லை.
மிகுதியாகிப் ன சோம்பேறித்தனமா அல்லது பல வேலைகளிலும், நினைவுகளிலும் தட்டிப் போன விஷயமா தெரியவில்லை.
கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக மறந்து போன கைநழுவ விட்ட உடல் உழைப்பிற்கு இன்று பிள்ளையார் சுழி இட்டு விடலாம் என்கிற உயரிய நினைப்புடன் செய்ய ஆரம்பித்த வேளையது.
ஓங்கித்தூக்கியகையின்வேகத்துடனும்இருகையிலுமாய்இறுகப்பற்றி யிருந்த மண்வெட்டியின் விரைந்திறங்கிய விசையுடனும் செதுக்கப் பட்டுக்கொண்டிருந்த புல் மற்றும் செடிகளை வெட்டி செதுக்கச் செது க்க வழிவிட்டு தன்னை சுத்தமானதாய் காட்டிக்கொண்டிருந்த தரை யை செதுக்கி நிமிர்ந்த போது உடலெங்கும் வழிந்து கோடுகளாய் தெரிந்தவியர்வையும், ஓங்கிஇரைத்த மூச்சும் நிற்க வெகு நேரமாகிப் போனது.
வெட்டியமண்வெட்டியையும்,சுத்தமாகிப்போனவெளியையும்வெறித் தவாறு வீட்டின் வாசலில் அமர்ந்துஆசுவாசம்கொண்ட போது சுத்தப் பட்ட வெளி என்னைப்பார்த்து கண் சிமிட்டியதாய்/
சுத்தம்சோறுபோடும்என்பதுஇதுதானே?சோறுபோடுகிறதோ,இல்லை யோ,,,,,,? சந்தோசம் கொள்ளச்செய்து விடுகிறது..
7 comments:
// நட்பு போய் விடக்கூடும் நீங்கள் இதை சுத்தம் செய்தால் எனச்சொல்லக்கூடும்... //
ஆகா...!
சுத்தமாக வைத்துக்கொள்வது கூட ஒரு வகை சந்தோசமே... (மனதையும்கூட)
வண்ணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார், நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை! நான் கூட இப்படி ஒரு காலத்தில் வீட்டை சுற்றி வளர்ந்த புற்களை வெட்டியது உண்டு! இப்போது களைப்புதான் ஏற்படுகிறது!
சுத்தம் சுகம் தரும்
தொடருங்கள்
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் காசிராஜலிங்கம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment