3 Jul 2014

அரிசிமாவும்,உளுந்த மாவும்,,,,,,,,,,,,

வெயிலுப்பாண்டிதோழர் வடையது.உளுந்த வடை,கண்ணுக்கு குளிர் ச்சியாகமினுமினுப்பாய்காணக்கிடைக்கிறவிதவிதமானவடைகளின் எண்ணிக்கையை அவரது கடை எப்போதுமே காட்டியதில்லை.
ஏன் தோழர் அப்படி?அது அப்படித்தான் தோழர், அவர்களால் அது மட்டுமே சுட முடிகிறது. அதுதான் சுடுகிறார்கள். நாங்களும் வாங்கு கிறோம்.லாபம்கருதிமட்டுமல்ல,வேறுசிலவிஷயங்களையும் உள்ள டக்கிப்பார்க்கவேண்டியுள்ளது அதில்.
அதனால்தான் வாங்குகிறோம்,விற்கிறோம்,எடுத்து சாப்பிடுங்கள் தோழர் நன்றாக இருக்கும் என்பதை விட இருதயச்சுத்தியுடன் இருக் கும்.
அழுத்தி பிசையப்பட்ட மாவும், வெட்டிப் போடப்பட்ட வெங்காய துண்டுகளும்,உருவிப்போடப்பட்ட கருவேப்பிலை மற்றும் கொத்த மல்லி இலைகளும் மட்டும் கொண்டதல்ல இந்த வடை.
ஒழுங்கற்ற வட்ட வடிவத்தில் பள்ளமும்,மேடுமாய் ஒரு பக்கம் வீங் கி யும்,ஒரு பக்கம் வற்றியுமாய் காணப்படுகிற வடைகளை சுட்டெடு க்கிற கைகளுக்கு சொந்தக்காரியின் உழைப்பும்,வேர்வையும், அவள து வாழ்க்கை முனைப்பும்இதில் உள்ளடக்கி இருக்கிறது தோழர். ஆகவே ,,,,,,,,,,,,,,,ப்ளீஸ் எடுத்துச் சாப்பிடுங்கள்.முடிவில்லையா ஒரு விதமாக ஏளனமாய் பார்ப்பதை நிறுத்துங்கள்,என கடைசி வாக்கி யத்தை மனதினுள்ளும்அதற்கு முந்தியதை வெளிப்படையாகவும் பேசிய வெயில் பாண்டி தோழர் இன்னும் வெயில் பாண்டியாகவே/
பரவாயில்லை,சொந்தமாக டீக்கடை வைத்து ஒரு டீ மாஸ்டரை வேலைக்கு வைத்துகொள்கிற அளவு கடை விரிவாக்கமும்,ஓரளவு வசதியும் வந்து விட்ட போது கூட அவர் இன்னும் மாறாத மனித ராகவே/
எங்களின் சகஊழியர் ஒருவர்தான் சொல்லுவார். எங்களது தொழிற் சங்கத் தலைவரைப்பற்றி பேசிகொண்டிருக்கும் போது. அவர் மாரிக் கனி அல்ல,என்றுமே மாறாத கனி என/
அந்த ரகத்தில் தோழர் வெயில் பாண்டியையும் சேர்த்துக் கொள்ள லாம் தைரியமாக. யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். சம்பந்த பட்டவரும் ஒன்றும் சொல்ல மாட்டார் எனவே நம்புவோம்.ஓம் நம் பிக்கையாய நமக/
தோழர் வெயிலுப்பாண்டி சொன்னார் என்பதற்காக மட்டுமல்ல. வே லை முடிந்து கிளம்புகையிலேயே மனதுள் வரிந்து கொண்ட முடிவு தான் அது.வெலுப்பாண்டி கடையில் இன்று டீ சாப்பிட வேண்டும்.
இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன்.பின்னால் புலிப் பாண்டி அமர்ந்திருந்தான்.
எனதுபால்யநண்பன்.திடீரென,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ரகம்.எப்போது சிரிப்பான்,
எப்போது முறைப்பான் எனத்தெரியாது. லிப்ட் கேட்டு ஏறியவன் மிகவும் சிறப்பான குணத்துக்கு(?/)சொந்தக்காரன்.
அவனது தேவையும் பேச்சும்,செயலும்,சொல்லும் பெரும்பாலும் பணத்தை சுற்றியே இருக்கும்.அவன் நிலையிலிருந்து பார்த்தாலும் மிகவும் சரியற்றதாக இருக்கிற செயலுக்கு சொந்தக்காரன்.
ஒருசமயம் ஏதோ பெட்டிக்கடையில் வாழைப்பழம் வாங்கிக் கொ ண்டுதிரும்பிகொண்டுதிரும்பினேன்,அப்போதுதான் கடையின் நடை யை நெருங்கிய அவனை பார்த்து சிரித்த போது என்னை ஏற இற ங்கப்பார்த்து விட்டு காறி தரையில் உமிழ்ந்தான்.
அன்று அவன் உமிழ்ந்த எச்சிலின் ஈரம் இன்னும் காயாமலேயே எனது மனதில் ஆறாத வடுவாக /
அப்படியான ஆறாத வடுவை என்னுள் ஏற்படுத்தி சடுதியில் நகர்ந்து விட்ட அவன் பின்நாட்களில்அந்தவடுவைஅழிக்க முயற்சி செய்கி றான்.
ரோட்டில்பார்க்கையில்,வண்டியில்விரைகையில்,எங்காவதுஎதிர்படு கிறதருணங்களில்வளைத்துவளைத்துவணக்கம்சொல்கிறான்,சிரிக்கி றான்,குழைகிறான்.
காரணம் நான் பதவி உயர்வு பெற்று விட்டேனாம்.எனது நிலை உயர் ந்து விட்டதாம்.அதனால் உங்களிடம் கூடுதல் ஒட்டுதல் என எந்த வித கூச்சமும் இன்றி சொன்னவனைபார்க்கபரிதாமாக இருந்தது.
பரிதாபப்பட்டுஎன்ன செய்ய?அப்படித்தான் பாதிக்கும் மேற்பட்டு தெரி கிறார்கள்.பின்எதற்குஅனாவசியமாய்கவலைப்பட்டுக்கொண்டு? என அவனதுசிரிப்புக்கும்,வணக்கத்துக்கும்,குழைவுக்கும்நானும்சிரித்தும்,  வணக்கம் சொல்லியுமாய் வைப்பேன்.
நடு வழியில் ஏறியவன் நடு வழியிலேயே இறங்கிக்கொண்டான் ராமர் கோயில் அருகில்/
வண்டியில் பெரும் பாரம் குறைந்த மாதிரியிருந்தது என்கிற நினைப் புடனேயே வெயிலுப்பாண்டி கடையில் நின்றேன்.
அன்பின் மனிதர் அவர்.எப்போது போனாலும் ஒரு டீ மட்டுமே எனது குடித்தலாய் இருக்கும்.சமயங்களில் இரண்டு டீ.
இன்று எண்ணெய் மினுங்க தட்டில் இருக்கிற வடையை பார்த்த வுடன் எடுத்து சாப்பிட வேண்டும் போல ஒரு ஆசை.
நான்கடையினுள் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து கைக்கெட்டும் தூரத் திலிருந்து வடையை தொட்டு தடவி எடுக்கையிலேயே தெரிந்து போகிறது.இது மெதுவான வடை என்று/
இந்தவடைக்குமத்தியில் துளையிட்டகைகளுக்குசொந்தக்காரி இந்த கடைக்குப்பின்னால் உள்ள பகுதியில்தான் குடியிருக்கிறாள் எனவும் இங்கிருக்கிற நான்கைந்து கடைகளுக்கு அவள்தான் வடை சப்ளை எனவுமாய் சொன்னார் வெயிலுப்பாண்டி.
ஒருவடை 2.50எனபோடுகிறாள். நாங்கள்3.00 ரூபாய்க்கு விற்கிறோம். எங்களுக்கு கிடக்கிற பைசா 50திற்காக மட்டுமல்ல,இந்த தள்ளாத வயதிலும் அடுப்பில் வேகும் சனாதன விதவைதாயான அவளது வாழ்க்கை இந்த வடையை நம்பித்தான் இருக்கிறது, ஆகவே எடுத்து சாப்பிடுங்கள் தோழர்/
இரண்டுவடைகளைசேர்ந்தடியாகசாப்பிட்டதில்வயிறுஒத்துக்கொள்ள
வில்லை.ஊதிக்கொண்டது காற்றாடித்த பலூனாக/ விட்டால் உடம் பிலிருந்து பிய்த்துக் கொண்டு தனியாக காற்று வெளியில் பறந்து திரிய ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. பலூனும் உருண்டை ,வயி றும் உருண்டை.அப்பா உங்களுக்கு தொந்தி வைத்து விட்டது. தொப்பை,தொப்பை,தொப்பை ,,,,,,,,என கேலிபண்ணுவாள்.சமயத்தில் அவனை சுற்றி வந்து கும்மியடிப்பாள்.பூ ஒன்று கை விரித்து நட மிடுவதுபோலிருக்கும்பார்ப்பதற்கு/அவள்காற்றுவெளியில் பறந்து போய் வயிறை மீட்டுக்கொண்டு வருவாளா?கேட்கலாம் அவளிடம். இப்படி ஒன்று நிகழ்ந்து போனது எனக்கு இந்த நேரத்தில் இன்ன இடத்தில் என்று சொன்னால் தன் ஓட்டைப்பல் தெரிய சிரிப்பாள். கன்னத்தில்விழுகிறகுழியில்அரைப்படிஎண்ணெய்ஊற்றலாம்போலி ருக்கிறது. சொன்னால் அதற்கும் சிரிப்பாள். மறுபடியும் குழி. மறு படியும் எண்ணெய்,,,,,,,சொல்லல்,குழி எண்ணெய்,,,,,யப்பா போதும் சிரிப்பைநிறுத்துநீ.ஒவ்வொருதடவைக்குமாய்விழுகிறகுழிக்குஅரைப் படி என்றால் எங்கே போவது? இந்த மாதபட்ஜெட் அவ்வளவுதான், தாக்கல்செய்துமுடிந்து போனது,பலசரக்குக்கடை, பாத்திரச்சீட்டு, தேனம்மாள் ஸ்டோர்,ஜவுளிக்கடை,LIC கேபிள் டீ,வி எல்லாம்  முடிந்துதேதி20ஐஎட்டுப்பிடிக்ககை நீ ட்டிக்கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில்இப்படி,,,,?“அப்பநாங்கபடுறஆசைக்கும்,நடந்துக்குறநடப்புக்கும் அளவு வச்சிக்கிரனுமாப்பாமகள்ஆமாப்பா, கண்டிப்பா அப்பிடித்தான். இல்லாதவுங்கவீட்லமட்டுமில்லநம்மளமாதிரிநடுத்தரவர்க்ககுடும்பத் துலபொறந்துட்டாலும்இதுதான்கதி,இருக்குற தையும்,ஆசையையும் சுருக்கி வாழப்பழகிக்கிரணும், ஆமாம்எனசொல்பவனைஏறிடும் மகளை அவன் பார்ப்பதும்அவள் திரும்பவும் கன்னம் குழி விழ சிரிப்பதும்வாடிக்கையாகிப்போனது.வாழ்க வளமுடன்/ ஒல்லியாய் வெடவெடப்பாகஇருக்கிறமகளை”நல்லாசாப்புடு,தெம்பா இரு,ஒடம் ப ப்பாரு காத்தடிச்சா பறந்துருவ போலயிருக்க”என்பான் அவன். ஊம் நீங்க மட்டும் எப்படி இருந்தீங்களாம் முன்னாடி?போன வருசம் வரைக்கும் ஒடம்புல இருக்குற எலும்பு வெளியில் தெரியிற மாதிரி இருந்தீங்க.இப்ப ஒரு வருசமா ஒக்காந்து பாக்குற வேல கெடைச்ச ஒடனே இப்பிடி ஆகிப்போட்டீங்க/-மகள். “ஆமா நானு ஆயிட்டேன். நான் என்ன செய்யட்டும்?ஒங்க அம்மா கொணாந்து சாப்புடு, சாப்பு டுன்னு திணிக்கிறா.அப்புறம் தொந்தி வைக்காம என்ன செய்யும்? நீயும் நல்லாசாப்புடு,ஒனக்கு தொந்திவைக்காட்டி கூட ஒடம்பாவது தேறுமா,இல்லையா?ஒங்க அம்மா ஒனக்கு வைக்க வேண்டிய சாப்பாட்டையும்சேர்த்து ஒங்க அக்காவுக்கு வச்சிர்றா போலயிருக்கு. என மனைவியை ஏறிடுவான். “என்னைய எதுக்கு ஒங்க பேச்சுக்கு ஊடால இழுக்குறீங்க?என்னைய வம்புக்கு இழுகாட்டி ஒங்களுக்கு ஒரக்கம் வராதே என்பாள்பதிலுக்குமனைவியும். “ஆமாம்ஒன்னைய வம்புக்கு இழுக்குறாங்க,இழுக்க மாட்டாம. பத்துபவுன் நகையையும், ஒட்டுச்சடையையும் வச்சி ஒன்னய ஏந்தலையில கட்டீட்டாங்க”- அவன். “ஏன் ரெண்டு பவுந்தான் போட்டாங்கன்னு கூட சொல்லுங்க, என்ன கொறஞ்சி போச்சாம்இப்ப”?மனைவி. “அப்பிடித்தான் சொல்லு வேன், மைக் போட்டு சொல்லுவேன், தெரு முக்குல போயி சொல்லு வேன்,ஊரு மத்தியில நின்னு ஓன்னு கத்தி சொல்லுவேன். எங்க சொந்தக்காரங்ககிட்டசொல்லுவேன்,ஒங்கசொந்தக்காரங்ககிட்ட சொல்லுவேன்,”அவன்.“சொல்லுங்க,சொல்லுங்க,,,,அப்பிடியேசொல்லி
க்கிட்டேபோயிகௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியில பைத்தியக்கார வா ர்ட்ல சேந்துருங்க. இத்தன வயசுக்கப்புறம்இப்பிடிஎல்லாம் யோசி க்கிற ஆளு என்னைய ஏன் கட்டுனீங்க, வேற ஒருத்திய கட்டீர்க்க வேண்டியதுதான”?அவள். என்ன செய்யச் சொல்ற.ஒன்னய பொண் ணு பாக்க வந்த நாள்ல கொஞ்சம் புத்திய கடன் குடுத்துட்டேன்.இப்ப கெடந்து அனுபவிக்கிறேன்.”-அவன். “அப்பிடி என்ன அனுபவிக்கிறா ராம் ஐயா பெருசா”?அவள். “ஆரம்பிச்சுட்டீங்களாஒங்கதிரு விளை யாடலஎனஇரண்டுமகள்களும்சிரித்துக்கொண்டு விளையாடப் போ ய் விடுவார்கள் அல்லது தொலைகாட்சியில் ஆழ்ந்து போவார்கள். தொலைக்காட்சிநிகழ்ச்சிகளில்அவர்களுக்குமிகவும்பிடித்தது,,,,,,,,,,,,,,,,, ,,,,என்கிற ராகத்துடன்வருகிறவிளம்பரமும்,மற்றும்சிறுவர் சிறுமி கள் வருகிற நாடகமும்,சினிமாவும் மட்டுமே/ பெரியவள் பேருக்குத் தான் பெரியவள்,ஆனால் இன்னும் சிறியவளாகவே/பேச்சு செய்கை, நடவடிக்கை,எல்லாவற்றிலுமாய்.அவளதுஅம்மா கூட தினசரி திட்டு கிறாள். “என்ன இன்னும் சின்ன நொட்டச்சி மாதிரி.நாளைக்கு வேற வீட்டுக்கு போகப்போற.போற யெடத்துல எங்களத்தான் சொல்லு வாங்க புள்ளய வளத்து வச்சிருக்குற லட்சணத்தப் பாருன்னு” .என் பாள். அட விடும்மா, தினசரி அக்காவ இப்பிடி சொல்லிச்சொல்லியே அமுக்கி வச்சிட்டீங்க.ஸ்கூல்ல ஹாக்கி டீம்ல வெளையாட போ றேங்குறா,இப்பிடி என்னத்தையாவது சொல்லி தலையிலதட்டி அவள உக்காரவச்சிர்றீங்க.கல்யாணம்,போற யெடம்,பேச்சுன்னு,,எ ன்பாள் சின்ன மகள். அவளது பாட்டி கொடுத்திருந்த காசில் வாங்கிய சுடிதாரைத்தான் அணிந்திருந்தாள்.அது அப்படித்தான், அவர்களுக்கு ள்/ இப்படி பாட்டி கொடுப்பதும், பேத்திகள் வாங்கிக்கொள்வதும் வாடிக்கையாகிப் போனது. இப்படியாக ஓடுகிற பேச்சுகளுக்கு மத்தி யில்தான்தொலைக்காட்சியும்ஓடிக்கொண்டிருக்கும்.பேச்சுப்பாதி,தொ லைக்காட்சிபாதிஇன்னபிறபாதிஎன மாறி,மாறி ஓடிக் கொண்டிரு க்கிற நிகழ்வுகளுக்கு மத்தியில் நகர்கிற பொழுதாக இருக்கிற வீட்டின் அன்றாடங்கள் பார்க்க மிகவும் நன்றாகவும் சற்றே கலவரம் கலந்துமாய்/எனமிதந்தநினைவுகளுடன்வீடுவந்துகொண்டிருக்கிறேன். இரண்டுவடைகளைசேர்ந்தடியாக சாப்பிட்டதில் வயிறு ஒத்துக்
கொள்ளவில்லை

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கொல்லாமல் இருந்தால் சரி...

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

”தளிர் சுரேஷ்” said...

டீக்கடையில் ஆரம்பித்த விவரணை வீட்டு நிகழ்வுகளில் தொடர்ந்து ரசிக்கவைத்தது! சிறப்பான ஒன்று! நன்று!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

நல்லதொரு பதிவு நண்பரே,,,,,

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி,
நன்றி வருகைகைகும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

வழக்கம்போல் அருமையான பதிவு நண்பரே
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாகளிப்பிற்கு சார்/