#வெட்ட வெட்ட தழைக்கிறது
சலூன்காரரின் வாழ்க்கை/
#உரிக்க உரிக்க வருகிறது பட்டையாய்
மரம் வெட்டுபவனின் வாழ்க்கை/
#கிளைகள் நிறைந்த இலைகள்
அடர்ந்து தெரிகிறது வாழ்க்கை/
#குழைந்தைகள் விளையாடுகின்றனர்
பறவைகள் பறந்தமரும் சப்தம்/
#பொங்கிப்பிரவகிக்கிற வெள்ளம்/
பயிருக்காய் கால்வாயில் ஓடுகிற தண்ணீர்/
#மைதானத்துக்குருவி
ஒற்றையாய் கூவுகையில்
துணைகழக்கிறது என்னை/
#காலை வேளை சுப்ரபாதம்
பால்க்காரரின் சைக்கிள்மணிச்சப்தம்/
#மனம் நிறைந்த இனிப்பு
தூரத்துக்குயிலின் ஓசை/
#ஊர் மைதானத்தில் கூட்டம்.
மைக் இல்லாமல் பேசிக்கொள்கிறார்கள்
கண்களால் மட்டுமே இருவர்/
#மரம் வரைகிறபென்சிலின் நுனியில்
துளிர்த்து நிற்கிறது துளிர் இலைகள் இரண்டு/
#அருள் வந்த சாமி அவள் மேல் இறங்கியதாம்/
என்ன இப்பொழுதுகெட்டுப்போனது,.
இறங்கிவிட்டுப்போகட்டும்
அவள் ஆடிய ஆட்டம் யாருக்காக என
அவனுக்கு மட்டுமே தெரிந்திருந்திருந்தது,
#கன்னம் சிவந்திருக்கிறது
குழந்தை இட்ட முத்தம்.
#நால்முனைசாலைச்சந்திப்பில்
சிவப்பு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன
தவழ்ந்து வந்து கொண்டிருந்தது குழந்தை/
#கொட்டும் அருவியில் வண்ணக்கோலம்
சிறுவர்கள் குளிக்கிறார்கள்/
#யாரது வீட்டுக்கு வெளியே?
தென்றல் வாசலைக் கடக்கிறதாம்/
#தூரத்தில் என்ன சப்தம்?
பூக்கள் வெடித்துச்சிரிக்கிறதாமே
கூடவே வெக்கமும் கொள்வதாய் தகவல்/
#மண் பிளந்து நின்றது
இரு இலைகள் காட்டிய பெருமரமொன்று/
#வீட்டுக்கு வெளியில் வெளிச்சம்
நிலா கடந்து போகிறது தன் பாதையை/
6 comments:
அருமையான கவிதை மழை
நனைந்தன என் மனம்.
வணக்கம் கில்லர்ஜி.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
வணக்கம் காசிராஜலிங்கம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சிக்கெனச் சிறிய வரிகளில்
நச்செனத் தந்த நற்கருத்து!
மிக மிக அருமை!.
வாழ்த்துக்கள்!
வணக்கம் சகோதரி இளமதி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment