9 Aug 2014

ஈசல்,,,,,

            

காபி கொண்டு வருகிறவர் மீதோ அதை கொதிக்க வைத்து தயாரிக்கிறவர்கள் மீதோ எனக்கு எந்த விதகோபமும், வருத்த மும் இல்லை. 
கசப்பான,அடர்த்தியான,திகட்டலானஅதன்சுவைமீதுகூடஅவ்வளவு வெறுப்பில்லை. 
ஏனோ பிடிக்கவில்லை மனதிற்கு எனபதை எல்லாம் தாண்டி அது விலை கூடிய பானம் அல்லது ஆங்கிலேயர் பானம் என்பது வே காரணமாகிப்போகிறது அதை வெறுக்க. ஆனாலும் வேறு வழியில்லை குடித்துவிடுகிறேன். 
தினசரி காலை 10.30மணியிலிருந்து10.45ற்குள்ளாகவும்,மாலை 4.00 மணியிலிருந்து 4.30திற்குள்ளாகவும் நான்வேலைபார்க்கிற அலுவலகத்திலுள்ள 5 பேருக்கும் காபி வரும். 
கலர்மங்கிப்போனசில்வர்டம்ளர்,அளவானஅளவிலும்சிறியதாகவும்/ அதனுள்ளேதான் நாங்கள்குடிக்கிற திரவம்(காபி) அடர்த் தி யானகலரில்/ 
ஒன்று,இரண்டு,மூன்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என கடந்து எனக்கு வருகிற போதுஅஷ்டகோணலானமுகத்துடனும்,மனத்துடனும்,சிரிப்புடனுமாய் வாங்கிகுடித்துக் கொள்கிறேன். 
வேண்டாம் என முடிவெடுத்துவிட்டால் அதை உடனடியாக செய்து விட முடிவதில்லை. 
அப்படிஒருபழக்கமும்இதுவரைகைவரப்பெற்றதில்லை.“விலை அதிகம்,நன்றாக இல்லை,ஏமாற்றுகிறார்கள், பிடிக்க வில் லை” என்கிற மாதிரியான நிறைய காரணங்கள் இருந்தாலும் ,கண்முன்னே விரிந்தாலும் கூட கசப்புகலுடனோ அல்லது சமா தானம் செய்து கொள்கிற மனப்பாங்குடனோ அங்குதான் போய் நிற்கிறேன். 
நான் எனது என இல்லாமல் நாம்,நமதுஎன யோசிக்கிற பொது புத்திகூட அப்படியான எனது செயலுக்கு காரணமாக அமைந்து போகலாம் கூட/ 
எங்களது அலுவலகம் அமைந்திருக்கிற தூரத்திலிருந்து பத்தடி தூரத்தில்தான் எங்களது அலுவலகத்திற்கு காபி சப்ளை ஆகிற டீ கடை இருந்தது. 
கடையின்பெயர்வேறொன்றாகஇருந்தாலும்ஈசல் கடை என்பது வே நிலைத்துப்போனது. 
சிறு பிள்ளையிலிருந்து பெரிய மனிதர்கள்வரைஅப்படித்தான் சொன்னார்கள். 
காலையிலிந்து மதியம்1அல்லது 2 மணிவரை இயங்குகிற டீக்க டையில் இட்லி, வடை, மொச்சை,போண்டா,மிக்சர் பக்கோடா சமயத்தில் எப்பொழுதாவது “பால் பன்”என கிடைக்கும். 
இட்லி வடை என்றால் காரச்சட்னி,தேங்காய் சட்னி, சாம்பார், மொச்சை, வடை என்றால் அதற்கேற்றார்ப்போல,,,,,,,,,,/ 
கொஞ்சம் தூக்கலாக வற்புறுத்துபவர்களுக்கு கூடுதலாக ஒரு கரண்டி சாம்பார்.பருப்பும்,கடலைமாவும் கலந்து கட்டியிருக்கி ற சாம்பாரை ருசிக்க ஒரு கூட்டம் வரும் தனியாக/ 
அது அவருக்குதனியாகதெரிந்துபோவதுண்டு.அதிகாலைஐந்து, ஐந்தரைக்கு கடை திறந்ததிலிருந்து,இட்லிக்கு, வடைக்கு,சட்னி க் கு, என கடையில் போய் சரக்கு வாங்கவும் அடுப்பில் வேலை செய்யவும் என மாறி,மாறிஆளாய் பறந்து கொண்டிருப்பதனா லும் அவரின் பெயர் ஈசல் என ஆகிப்போனதாய்அறிகிறேன் இந்தநேரத்தில்/ 
மச்சான்,மாமா,அண்ணன்,தம்பி,சித்தப்பா ,பெரியப்பா,அதை ,மதி னி என கலந்து கட்டி உறவுகளிடமும், பிறரிடமும் (அனைத்து ஜாதியினரும் கலந்து வாழ்கிற கிராமங்களில் இன்றளவும் ஒருவருக்குள் ஒருவர் முறைவைத்து கூப்பிட்டு சொந்தம் கொண்டாடுகிற கிராமங்களில் அதுவும் ஒன்றாய்) அவர் இறக் கை கட்டித்திரிகிற நேரங்களில் நெசவிடுகிற பேச்சில் பூத்து மலர்கிற உறவு அவரை பொத்திவைத்திருக்கும் பத்திரமாக/ 
“வாப்பா நம்ம ஈசல் கடதான,வா ஒரு வடையும் டீயும் சாப்புட்டுட்டுப் போகலாம் என கையில் காசில்லாதவர்கள் கூட அவர்களது பெயரில் உள்ள கணக்கை நம்பியும் ஈசலை நம்பியுமாய் டீ சாப்பிட வருவதுண்டு. 
டீ,காபி,மொச்ச,பால்பண்ணு,சேவு,மிச்சரு,,,,,,,என எல்லாம் கேட்கிறவர்களிலும் வாங்கி சாப்பிடுவர்களிலும் பாதிக்கும் மேற்பட்டோர் காசு கொடுப்பதில்லை. 
காசு என்னாச்சுப்பா?டேய் காசக்குடுடா,கணக்கு ஏறிக்கிட்டே போகுதில்ல,,,,,என்கிற அவரது கஷ்டமான தர்மசங்கடமான கேட்டலுக்கு அதெல்லாம் தருவமப்பா/காசு என்ன ஓடியா போ குது,,,,,,?ம்,,தரமாட்டோம்/இப்ப என்ன ஐயா கஞ்சிக்கு இல்லாம இருக்கீங்களாக்கும்,,,,,,,?என்பது போன்ற இடக்கான,எள்ளலான பேச்சுக்களே அவரது கேட்டலுக்கு பதிலாக வரும். 
அந்தபதிலுக்குஈசலின்சலிப்பும்“இனிமேடீக்குடிக்ககடப்பக்கம் வந்துராதீங்க”,,,,என்கிறபேச்சும்,பெருமூச்சுமிகுந்தசொல்பிர யோகமுமே பெருமூச்சாக வெளிப்படும்.
அவரது பெருமூச்சை சொல்லின் வெளிப்பாடாக கேட்டவர்கள் “அட சும்மா இருங்க,ஒங்களுக்கு வேற வேலை இல்ல,” என மொத்தமாய் சிரித்து விட்டுப் போவார்கள். 
அவர்களில் நான்கைந்து பேர்கள் சரிதான் விடப்பா,அதான் சாய ங்காலம் ஒண்ணா ஒக்காந்து சரக்கடிக்கும் போது எல்லா கணக்கும்நேராகிப்போகும்என மனதுள் நினைத்தவாறும் சொல்  லி யவாறும் போய்விடுவார்கள். 
அவர்களதுஎள்ளலும்,புறந்தள்ளலும்.நகைச்சுவையாககலந்துவிடுவதுண்டு.அவர்களும்ஈசலுமாய் கலந்து தண்ணீ அடிக்கிற சாயங்காலப்பொழுதுகளில்/ 
அப்படியான உறவுடனும்,ஸ்னேகத்துடனும்,நட்புடனும் பழகி தனது உழைப்பை விரித்து ஆல்போல் நின்றிருந்த அவரின் கடை அந்த கிராமத்திலிருந்த எல்லோருக்கும் உரிமையானதா யும்,நட்பானதாயும்/ 
“சரி,சரி வா,,,கையில இருக்கும் போது குடு,ஏதொ ஒரு கொணத் துல பேசீட்டா,அப்பிடியே போயிர்றதா? கோவிச்சிட்டு போறமா திரி”என்கிறஅவரதுசரிக்கட்டலானபேச்சும்,பொத்துதலுமேஅந்தக் கடையைநிலைகொண்டு ஊன்றச்செய்திருக்கிறது. 
அப்படியான ஊன்றலும் ,நிலைநிறுத்தலுமாய் இருந்த கடையி லிருந்து அவரது மறைவிற்குப்பின் அன்றாடம் காலையிலும், மாலையிலுமாய் வருகிற காபியை குடிக்கிற போதுதான் இந்த சிந்தனை மேலிடுகிறது. 
இன்றைக்கு ஒரு சிறுமி காபி கொண்டு வந்தாள்.கொண்டு வந்த தை வைத்து விட்டு போய் விட்டாள். 
பள்ளிக்கு லீவு விட்டுவிட்டபோதும் பள்ளி சீருடையை அணி ந்து கொண்டு வந்திருந்த அந்த பட்டாம் பூச்சி காபியை கொண்டு வந்து வைத்து விட்டு பறந்துவிட்டது. 
ஒரு பூ,,, புயலாய் புயலாய் நுழைந்து விட்டுப்போனதைபோல ஆகிப்போன நிமிடங்களில் காபியைப்பற்றிய சிந்தனையும் மறந்து போகிறது. 
காபி கொண்டு வருகிறவர்கள் மீதோ,அதை தயாரிப்பவர்கள் மீதோ எனக்கு எந்தவித கோபமும், வருத்தமும் இல்லை இப்பொழுதுவரை/

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கதை நகர்வு சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் அண்ணா.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

அருமையான பதிவு

MTM FAHATH said...

அருமை நண்பரே