வேறெதையும் விடவும் நெற்பயிரைப்பார்க்கையில் சந்தோஷமாகிப்போகிறது தான் மனது.
கரம்விரித்த ஒற்றைப்பயிரில் கொத்தாய் பூத்திருக்கிற
நெல் மணிகளைப் பார்க்கையில்தலையசைத்துபக்கத்தில்அழைக்குமாறு இருக்கும், கண்மாய்க்
கரையில் நடந்துச்செல்கையிலோ அல்லது சைக்கிளில் போகும் போதோ/
நெல்மணிகளின்நிறைந்ததலையசைபார்த்துக்கொண்டேகண்மாய்க்கரையில்
சென்று கொண்டிருந்த ஒரு குளிர் நாளின் மாலை வேலையில் இவனுக்கு முன்னால்போன எலியண்ராமச்சந்திரன்அண்ணனைகுரல் கொடுத்து நிற்கச் செய்திருக்கிறான்,பின்னால்சென்றுகொண்டிருந்தஇவன்முன்னால்எலியண்
ராமச்சந்திரன்
சென்று கொண்டிருக்க அவரின் முன்னால் இரண்டு அல்லது ஒருஅடிதூரத்தில்சின்னதாய்பாம்புஊர்ந்து போக்கொண்டிருந்தது,கண்மாய்க் கரையின் குறுக்காக.
பின்னால்போய்க்கொண்டிருந்தஇவன்எழுப்பியசப்தம்அவருக்குகேட்டிருக்கவி ல்லை.ஓடிப்போய் கைப்பிடித்திழுத்து தடுத்துவிட்டான்,
இன்னும் இரண்டடி எடுத்து வைத்திருந்தால் பாம்பின் மேல்மிதித்திருப்பார்.நல்லவேளைநீவந்த வேளைஎனநெகிழ்ந்துபோனார்,இப்பொழுதுவரைஎங்குபார்த்தாலும்நெகிழ்ச்சி
யாய்சொல்வார்அதை.பாம்புகடியிலகாப்பாத்துனதம்பிஎன,/
அவரது அந்தப்பேச்சே ஒரு நடிகனின் அசைவை ஒத்தது
போல் இருக்கும்.
வீட்டைவிட்டுஅவர்வெளியேவருகிறார்என்றால்
அவரது கை கண்டிப்பாக டிரான்சிஸ்டரைசுமந்துகொண்டுவரும்.சிறியதானகையடக்கமர்பிரேடியோ
விற்கு தோல்உறைபோட்டு வைத்திருப்பார்,அவர்
வேலைக்குச் செல்கிற நேரங்களில்கூடஅவரதுஉடல்உறுப்புபோலஅவரதுகூடவேஒட்டிக்கொண்டிருக் கும்.
ட்ரான்ஸிஸ்டரும்.எலெக்ட்ரீசியன்வேலைதான்.அவரது,வயர்,திருப்புளி,
கொரடு,ப்யூஸ்க்கட்டைஎனநிறைந்திருக்கிற அவரதுபையில்ட்ரான்ஸிஸ்டர் வைக்க தனிஒரு ஓரமாய் இடம் உண்டு.அல்லது அதற்கென தனிப்பை
வைத்திருப்பார்.
வருடம்முழுவதுமாஇருக்கும்எலெக்ட்ரீசியனுக்குவேலை.அதுவும்அந்த நேரத்தில்?
அதுஅல்லாதகாலங்களில்காடு கரைக்கு மண்
வெட்டி வேலை,பாத்தி கட்ட, களை எடுக்க,உழவு போட,மரம் வெட்ட,கிணறு தூர் வார என போகிற
நேரங் களிலும் இவர் கூடவே ரேடியோவும் பயணிக்கும்,இதில் கிணறு வெட்டு வேலைக்குப் போகிறதினத்தன்றுமட்டும்மறக்காமல்
ரேடியோவை வீட்டில் வைத்து விட்டுப் போய்விடுவார்.சேறு சகதி ஆகிப்போகும் என்பார் கேட்டால்/
அவர்அப்படிஎந்நேரமும்ரேடியோவும்கையுமாய்திரிவதால்அவரை நிறையத் தெரிந்தவர் என்றும் இந்தா போறாரு புத்தி சிகாமணி என்றும் முன்னே
விட்டுபின்னேபேசுவார்கள்.நாட்டுநடப்புசெய்திஎனஏதாவது பற்றி அவரிடம் கேட்டுவிளக்கம்
பெறும் போது வாய்ப்பேச்சு முற்றி சமயத்தில் சண்டை யாகிப்போவதும்உண்டு. வாய்ச்சண்டைதான், அவர் இருக்கிற ஒல்லியான
ஒடிசல் உருவத்திற்கு எங்கிட்டு கைகலப்பு என ஊருக்குள் பேசிக் கொள் வார்கள்.
இவனது ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவும்
பெரும்பாலுமாய் சைக்கிளில் செல்லவே வாய்த்திருக்கிறது இவனுக்கு/
இவன்ஏதாவதுஉடல்நலக்கோளாறுஎனடாக்டரிடம்செல்லும் போதெல்லாம் மறக்காமல்அந்த ஹோமியோபதி டாக்டர் அதைத்தான் இவனிடம் சொல்லி யி ருக்கிறார்
சொல்கட்டாய் இறக்கி.
இவனின் பழக்க வழக்கத்தின் மீது,இவனதுநடத்தையின்
மீதும்டாக்டருக்கு மரியாதைஏற்பட்டுவிடவிடஇவனிடம்அதிகஅக்கறைகொண்டுபேசியிருக்கிறார்,
போய்ச்சொல்கிறஉடல்நலகுறைவிற்குமருந்து மட்டுமே சொல்லாமல் இது என்றால் இது,பொதுவாக
இப்படி இல்லாமல் இப்படி இருங்கள் இந்தந்த விஷயத்தில் என்பது மாதிரியான ஆலோசனகளைச் சொல்லி
கூடவே கண்டிப்பாக நீங்கள் ஒரு லூனாவாவது வாங்கிக்கொள்ளுங்கள்,இனியும் மாங்,மாங்கென
சைக்கிள் மிதிப்பது சரியாகாது என்பார்.அவர் சொல்லின் கைபிடித்துப்போய் உடனே ஒரு லூனாவின்
சக்கரம் கூட வாங்கிக்கொள்ள முடியாதபொருளாதாரவசதியில்இருந்த இவன் சிரித்துக்கொள்வான்
அவரது பேச்சுக்கு/
பஸ்ஸில்என்றால்கட்டிப்போட்டதனத்துடன்தான்செல்லவேண்டும்,சமயத்தில் கட்டியகயிறுகளின் இறுக்கம் உடலை சிரமப்படுத்தி விடுவதாக அது
ஒரு பெரியஇம்சையாகவேஇருந்திருக்கிறதுஇவனுக்குள்பஸ்ஸில் போக நேர்கிற கணங்கள் தோறுமாய்/
அதுவும் எப்.எம் ரேடியோ கூட இல்லாத டவுன்பஸ் ஓடிய நேரம்.
பஸ்ஸிற்குஉள்ளேஎன்றால்அடைக்கப்பட்டபார்வை.பஸ்சினுள்ளாய்இருபக்க
மும்அடுக்கபட்டிருக்கிறசீட்கள்,அதன்மேல்போர்த்தியிருக்கிறகவர்கள்,அதில் அமர்ந்திருக்கிறமனிதர்கள்
பஸ்ஸினுள்ளாய்நட்டுவைக்கப்பட்டது ஒற்றை சில்வர்மரம் போல் இருக்கிற கம்பிகள்.அதன் அடியில்பஸ்சின்
தரையோடு சேர்ந்துமுறுக்கப்பட்டிருக்கிறநட்டுகள்,அவற்றில்இரண்டுலூசாயும், இறுக்கப் பட்டுமாய்தெரிபவை,,,,எனஇத்தியாதி இத்தியாதி என்பவற்றுடன் சேர்ந்தமர்ந் திருக்கிற டிரைவர், கண்டக்டர்,
எனஅனைவரையும்தவிர்த்துவேறொன்றும் இல்லைபார்ப்பதற்குஎன்பதுபோல் விழிகளை வெளியே
அனுப்பி எவ்வளவு நேரம்தான்பஸ்ஸிற்குவெளியில்தெரிகிறமரங்களையும்,மற்றவைகளையுமா ய் பார்த்துக் கொண்டிருப்பது?
சைக்கிளில்சென்றால்இந்ததொந்தரவேஇல்லைஅதுபயணிக்கும்
தூரம் வரை விழிகளைக்கழட்டிஅனுப்பலாம்,அதனுடன்சேர்த்துசிந்தனையையும்நூல்க்கட்டி நூற்துஅனுப்பலாம்அந்தஒருசௌகரியத்திற்காகவேபெரும்பாலுமாய்சைக்கிளி ல் செல்வதை இவன் விரும்பியிருக்கிறான்.
அவசரமாய்சென்றுகொண்டிருந்தஒருமழைநாளின்காலைவேளையாய்
கண் மாய்க்கரையின்இருபக்கமுமாய்இருந்தஇச்சிமரத்தின்வலதுஇரண்டாவதின் கீழாக சாட்டையாவின் மனைவி நின்றிருந்தாள்.அவளைப் பார்த்தவுடன்
என்னம்மாதர்மக்கப்பலுஎனகேட்கவேஆசைஇவனுக்கு,ஆனால்கேட்கவில்லை, முறையில்இவனுக்குஅத்தைவேண்டும்அவள்,ஆனால்இவனிடம்பேசும்போது அவள்இதையெல்லாம்கடைபிடிக்கமாட்டாள்.ஆனால்வரம்புமீறவும்மாட்டாள். தெரியும்அவளுக்கு,யாரிடம்என்னபேசுவது,என்னபேசினால்என்னவாய்ஆகும் என/
அதனால்மூச்,,,,பார்ப்பர்வகளும் சொல்லிவிடுவார்கள்.
இன்னார் புள்ள அவன், நீயிவாட்டுக்குஒன்சேட்டத்தனத்த அவன்கிட்டகாட்டீறாத ஆமாம். என,அவள்எப்படிஅத்தைநமக்குஉறவுமுறையாஎன்னஎனஅம்மாவிடம் இவன் கேட்டபோது அதெல்லாம் இல்லை .பொழைக்க
வந்த யெடத்துல அவங்க வேற,நம்ம வேறயின்னு ஜாதி அளவுல இருந்தாலும் கூட கிராமத்துல இன்னைஅளவுலமுடிஞ்சிஇருக்கிற ஒறவு மொறைகள்ல இதுவும் ஒண்ணா இருக்குஒண்ணுக்கொண்ணு ஆதரவா,
என்றாள் ஒரு முறை அம்மாவிடம் கேட்டபோதுஒட்டையாவின் மனைவியை ப்பார்க்கிற சமயங்களிலெல்லாம்
இதுவும் கூடவே சேர்ந்து ஞாபகத்தில் இழுபட்டுக்கொண்டு வருவதாக/
அன்றைக்குசைக்கிளில்சென்றுகொண்டிருந்தஇவனை நிறுத்தி மருமகனே, இந்தகொய்யாப்பழக்கூடையஅப்பிடியேடவுன்லயிருக்குறகடையிலதள்ளிவிட்
டுட்டுப்போயிருங்க,கொஞ்சம்லேட்டாபோனாக்கூடகொய்யாப்பழம்விக்காது. ஏதோஇதுலகொஞ்சம்கெடைச்சின்னா அத்தைக்கி ரெண்டு செலவுக்கு ஆகிப் போகும் என்றாள்.அன்று அவன்செய்தஉதவிக்குஅவளதுகண்கள்பணித்தது இன்றவுளவும் இவனது நினைவில்/
இலக்கற்றுஅமர்ந்துடீ.விபார்த்துக்கொண்டிருந்தான்.நேற்றுநண்பகலின்நடுப்
பொழுதொன்றில்.இவனதுஅருகாமையில்மகனும்மகளுமாய்இருபக்கமுமாய் அமர்ந்திருக்க மனைவி நடை
வாசலில் அமர்ந்திருந்தாள்.
கட்டியிருந்தசேலைஎடுப்பாய்இருந்தது.புள்ளிகள்வைத்துபூத்திருந்தசேலையில்
இடையிடையாய்ஓடிக்காட்டியகோடுகளும்,கட்டங்களும்கட்டத்திற்குள்ளாய் இழுக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்த
வர்ணமும்இருந்தது.பூத்தபூவின்மலர்வு சேலையிலாஅல்லதுசேலையின்மலர்வுபூத்தபூவிலாஎன்பதுதெரியவில்லை.
அவள்அமர்ந்திருந்தஇடத்தைச்சுற்றிலுமாய்
உதிர்ந்து செறிந்திருந்த பூக்கள் உடுத்தியிருந்த சேலையில் சென்று மலர்வது பின் விழுந்து
படர்வதாயும் மாறி மாறித்தெரிந்த நிகழ்விற்கு பின்னான அவளது செய்கை இதுவாகவே இருந்திருக்கிறது.சற்றேபொறுங்கள்உங்களது விளையாட்டு பொழுது போக் கெல்லாம்வைத்துக்கொள்ளலாம்அப்புறமாய்/முதலில்கீழேவிழுந்துகிடக்கிற நீங்களெல்லாம்போய்உங்களதுஇடத்தில்அமர்ந்து கொள்ளுங்கள்
சமர்த்தாய்/ அதுவிடுத்துஇப்படி என்னைச்சுற்றி அழகு காட்டி வீற்றிருந்தால்,,,,,,? போய்
அமருங்கள் அவரவர்இடத்திலும் ,கிளையிலும் மற்ற இடங்களிலுமாக என பூக்களைப்பார்த்துபொய்க்கோபம்சொன்னஅவளின்மீதும்அவளது அருகாமை யிலுமாய்பற்றிப்படர்ந்தவெயில்நடைவாசல்கதவுமீதுபடர்ந்துமீதமிருந்ததை அள்ளித்தெளித்ததாய் காட்டியது.
லேசாகசாத்தியிருந்தநடைவாசல்கதவுகட்டியிருந்தரோஸ்க்கலர்திரைத்
துணியைபின்தள்ளிக்காட்டியதாய்இருந்தது,திரைத்துணியின்கலரும்
சேலையின்கலரும்ஒன்றாகவே/அதிலிருந்தபூக்கள்கூடசேலையில்தெரிவு
பட்டுப்போய்/
திரைத்துணியின்பூக்கள்மீதுபட்டுத்தெரித்தவெயில்மனைவியையும்நனைத்து தரை படர்ந்ததாக/
நடுவிலுள்ளவள்தான்சொன்னாள்.”வெயில்பட்டுத்தெரியிறபோதுஅம்மா
கூடுதல்அழகாதெரியிறாங்க”.அய்நல்லாயிருக்கு”,என்றவளாய்இவன்மடியில் சாய்ந்தாள்.
கையில் அள்ளிய சாப்பாட்டின் கவளம் அப்படியே இருந்தது.
வேறெதையும்விடநெற்பயிரைப்பார்க்கையில்சந்தோஷமாகிப்போகிறதுமனது.
6 comments:
அருமையான நடை...
அழகான எழுத்து...
ஆழமான பார்வை...
வாழ்த்துக்கள் அண்ணா...
அருமை
அருமை
நண்பரே
தம 1
வணக்கம் சே குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணகம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சைக்கிளில்சென்றால்இந்ததொந்தரவேஇல்லைஅதுபயணிக்கும் தூரம் வரை விழிகளைக்கழட்டிஅனுப்பலாம்,அதனுடன்சேர்த்துசிந்தனையையும்நூல்க்கட்டி அனுப்பலாம்அந்தஒருசௌகரியத்திற்காகவேபெரும்பாலுமாய்சைக்கிளி ல் செல்வதை இவன் விரும்பியிருக்கிறான். // இயல்பான நடையில் நீங்கள் சூழலை வர்ணிப்பது இன்னும் அழகாக்குகிறது வாசிப்பை.
வணக்கம் ரிஷபன் சார்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
Post a Comment