2 Sep 2014

எலிப்பொந்து,,,,,
சுவிட்சைப்போட்டால்லைட்எரிகிறது.லைட்டைப்போட்டால்சுவிட்ச் எரியு மா,,,,,,,,? தெரியவி ல்லை அல்லது எரியாது என்பதுதான் இதன் பதிலாக இருக்கிறது.எதைப் போட்டாலும் எதுவும்எரியும்அல்லது எரியச் செய்யலாம் எனச் சொல்லிச் செல்கிறது இன்றைய முன்னே றிய விஞ்ஞான உலகம்.

அவர்கள் அவன் வேலை பார்க்கிற அலுவலகத்திற்கு வந்த காலை 10.15 மணிக்கு தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கூட இன்னமும் ஒருவர்எனவாய்பிரிந்து நான்காய் காட்சிப் பட்டார்கள்.

தந்தைக்கு இருக்கலாம்வயது 55.மகன்கள் இரண்டு பேருக்குமாய் சேர்த்து 50 க்குள் ளாய் இருக்கலாம் வயது என வைத்துக் கொள்ள லாம்.

அண்ணன் அவன் எனக்கு எனச்சொன்னவருக்கு 22 இருக்கலாம் வயது. இன்னும் திருமணமாகவில்லை. ஒரு தனியார் மில்லுக்கு வேலைக்குச்செல்கிறேன் என்கிறார். நெடித்த ஒல்லியான உருவம். பூசினார் போலத்தெரிந்த அவருக்கு சிவப்புக்கலர் போட்ட சட்டை யும் ஆஸ்க்கலர் பேண்டும் நன்றாகத்தான் இருந்தது.

நாம் கூட இப்படி ஒரு காம்பினேஷனைமுயற்சி செய்து பார்க்கலா மோ?எடுத்துவைத்ததுணியும்,ரெடிமேடில்எடுத்தசட்டையும் தைப்பத ற்கும்,போடுவதற்கும் நேரமில் லாமல் இருக்கிறதுதான்.

mrpnஜவுளிக்கடையில்எடுத்தது.தவணைக்குவாங்கிய துணி.”கறுப்புக் கலர் பேண்ட் போட்டு நாளாகிப்போனதுதான் ரொம்பவுமே” என்கிற ஆதங்கத்தில் எடுத்தது. தைக்க இனி ஒரு நல்ல முகூர்த்த நாளாய் பார்க்க வேண்டும். முன்பு வழக்காமாய் தைத்த டெய்லர் இப்போது மனதுக்குள்ளாய் வந்து போகிறார் பேண்ட தைக்க வெண்டும் என நினைக்கையில்,பழைய மேனேஜர் ஒருவர் சொன்ன சொல் ஒன்று மனதினுள்ளாய்/அவரெல்லாம் பேண்ட் தைப்பது பிளாட்பாரம் கடையில் தானாம். அதுவும் நன்றாகத்தான் இருக்கும் உயரம் சற்றே குறைந்து தெரிந்த அவருக்கு/ இதில் உயரம் என்ன?உயரம்கம்மி என்ன,,,,,,?பொருந்திப்போவதுதானே முக்கியமாய்/ அந்த முக்கியம் பேண்ட் சர்ட்டில் மட்டும்தானா?இல்லை ,,,,,,,என்றார் ஜவுளிக்கடை யில் அவனுக்கு பேண்ட் பிட் எடுத்துக் கொடுத்த கடையின் வேலைக் காரர்.

அவர்அப்படித்தான் இப்படி விலைக்குறைவாய் துணிகள் அமைவது
எப்பொழுதாவதுதான்.இதெல்லாம்லாட்டில்வருகிறதுணிகள்மொத்தம் காட்டும் இவற்றை தனியாய் பிரித்தெடுத்து கொண்டு வருகையில் இந்த விலைக்கு நாங்கள் கொடுக்கவும், நீங்களும் உங்களைப் போன் றவர்களும்வாங்கிக்கொள்ளமுடிகிறது.இதெல்லாம்ஒருவிதஅதிர்ஷ் டமே/ எனச்சொன்ன கடைக்காரர் அடர்க்கலரில் சட்டை அணிந்திருந் தார்.

துணிக்கடையில் வேலை செய்கிறவர்கள் தனது சட்டை பேண்டின் நிறம் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள் போலும். சரி என்ன இப்போதுஅதனால் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் துணியை மடித்துக்கொடுத்து மிக கவனமாய் அதற்கு பில் எழுதிக் கொடுத்த கடை வேலையாளின் நிறத்தைதான் இவரும் கொண்டிரு ந்தார். உழைப்பாளிகளுக்கு ஏது தனி நிறம்.எல்லாம் ஒரே கலர்தான் போலிருக்கிறது.என்கிற நினைப்புடன் அவரை பார்த்தபோது அவரது கறுத்தநிற கையில்முளைத்துத்தெரிந்த முடிகளுக்குள்புடைத்துத் தெரிந்த நரம்புகள் அவர் கை யை ஆட்டிப்பேசுகையில் வேர்வையு டனும், எண்ணை பிசுக்கு பட்டுமாய்/

அவ்வளவு எளிதாய் யாருக்கும் வாய்த்து விடாத முகம் அவரது முகம்.சிரித்த முகம். ஒரு அடி எடுத்து வைத்தாரானால் ஒன்பதடிக்கு அவரது நடை நீளும் போல/ அவ்வளவு பரபரப்பாய் தெரிந்தார்.

அவர் நடுவாய் நிற்க அவரது தந்தை அவரின் இடது பக்கமாயும், அவரது அண்ணன் வலது பக்கமாயும் உடன் வந்தவர் அவர்கள் மூவரின் பின்னாலுமாய் நின்றார்.

தொங்கு மீசை வெள்ளையாய் நரைத்துத் தெரிய பளீச்சென்ற சிரிப் பில் கரை ஓடிய பற்களுடனும்,கல்லி ஜிப்பா வேஷ்டியுடனுமாய் காட்சிப் பட்டுத் தெரிந்தார் தந்தை. கல்லி ஜிப்பா அந்தக்காலத்தில் மைனர்களுக்கும்,நிமிர்ந்துதெரிந்தவர்களுக்குமாய்சொந்தமானஉடை யாய் அடையாளப்படுத்திப்பார்க்கப்பட்டது.

அவர்களின் பிரதிபலிப்பாய் கணுக்காலுக்கு ஏற்றிக்கட்டிய வெள்ளை வேஷ்டியும், கள்ளிஜிப்பாவுமாய்கைகால்களில்முளைத்துத்தெரிந்த நரைத்தோடிய முடியுடனுமாய் தெரிந்தார்.அவர் கையில் வைத்திரு ந்த சேமிப்புப்பத்திரங்கள் இரண்டும் பணம் போட்டிருந்த தவணைக் காலம்முடிந்ததைஅறிவித்தது.ஆகவேமறுமுறையுமாயும் திரும்பவு மா ய் இதை கால நீட்டிப்பு செய்து தாருங்கள் எனக்கூறுகிறார்.

ஒன்று எனது பெயரிலும்,மற்றொன்று எனது மூத்தமகன் பெயரிலு மாய் இருக்கிறது” என அவர் தந்த இரண்டு சேமிப்புப்பத்திரங்களும் தலா 50ஆயிரம்,50ஆயிரம் எனச் சொல்லிச்செல்கிறது.

அதில் ஒன்று பத்திரத்தைக்கொடுத்த தந்தையின் பெயரிலும் மற்றொ ன்று அவரது மூத்த மகன் பெயரிலுமாய் இருக்கிறது.இப்போது தந் தை சொல்கிறார்,எனது பெயரில் உள்ள பத்திரதை எனது பெயரி லேயே புதுப்பித்தும்,காலநீட்டிப்பு செய்தும் தாருங்கள் ,எனது மூத்த மகன்பெயரிலுள்ளதைஎனதுஎனதுஇளையமகன் பெயருக்கு மாற்றிக் கொடுங்கள்.ஏனென்றால் அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்கிறார்.சரியில்லாமல் போன உடல் நிலை எப்பொழுது சரியாகும், அதற்கு என்ன வைத்தியம், அவரது உடலில் ஓடோடி வந்து ஒட்டிக் கொண்ட நோய் என்ன?எதுவும் அவர்களுக்கு சொல்லத் தெரியவில் லை.

”இப்பக்கூட ஆஸ்பத்திரியில போயி காம்பிச்சுட்டுதான் வர்ரோம். நாளுக்கு நாள் மெலிஞ்சிட்டே போறான்.சோறு தண்ணி எதுவும் சரியா சாப்புடமாட்டேங்குறான். ஆஸ்பத்திரியில என்னமோ பேரு சொல்லி அந்த நோயின்றாங்க/ஒண்ணும் புரியல,ஏற்கனவே ரெண்டு காதும் கேக்க மாட்டேங்குது.இப்பத்தான் ஒரு வாரம் பெட்ல படுத்தெந்திருச்சி வந்துருக்கான்”எனச்சொன்ன அவனது தந்தை மிக உறுதியுடன் மூத்த மகன் பெயரிலுள்ள பத்திரத்தை இளைய மகன் பெயருக்கு மாற்றிக் கொடுக்குமாறு கூறிவிட்டும் பத்திரங்கள் இரண்டை கொடுத்து விட்டுமாய் அமர்கிறார்.

அவர்கள் அனைவரும் ஒன்றாக அமரவும் தனித்து நின்ற நோய்வாய்ப்பட்டவர் என சித்தரிக்கப்பட்டமூத்தமகன்மட்டும்தனியாகஅமர்கிறார்.நீட்டாகதேய்த்த வெள்ளைக் கலரில் கோடு போட்ட சட்டை,பூப்போட்ட டிசைன் கைலியுடன் காட்சிப்பட்ட அவர் அவர்கள் சொன்னது போலவே மிகவும் மெலிந்தேதான் காணப்பட்டார்.அவர் படித்தி ருந்த 8ஆம் வகுப்பு வரையான படிப்பு அவரது நோயைப்பற்றிய அறிவை அவருக்கு தெளிவுபடுத்தியிருந்தது.பெரிதாக ஒன்றுமில்லை சரிபடுத்திவிடக்கூடிய ஒன்றாகத் தான் தெரிகிறது என்பது புலனாகிறது அவர் பேசிய பேச்சின் மூலக்கூறிலிருந்து/

முன்னேறிய நவீன மருத்துவ உலகம் கேன்சர் நோயாளியைக்கூட புத்துருவாக்கம் செய்து அவர்களை மனம் நிறைந்த நம்பிக்கையுடன் உலகில் நடமாடவிட்டி ருக்கிறபோது மூத்த மகன்,,,அவருக்குள் குடிகொண்டிருக்கிற நோயெல்லாம் பெரிய விசயமே இல்லை என்றே படுகிறது.

அவ்வப்போதோ சிற்சில சமயங்களிலோ அவர் சாப்பிட முடியாமல் போவதும்,காது கேட்காமல் இருப்பதும்,மெலிந்து கொண்டே போவ தும் அவர்குணப்படுத்தமுடியாதநோயாளி எனமுடிவுசெய்யவைத்து விடுகிறது.

வீட்டில்அவருக்கெனதனிசாப்பாடுத்தட்டு,தனிடம்ளர்,தனியானபடுக் கை,தனியான போர்வை,பாய் தலையணை இத்தியாதி இத்தியாதி,,,,,, ,,,,,,எனஇருந்ததும்,ஊர் அவரை இன்னும்,இன்னுமாய் ஒதுக்கி வைத் ததுமே எனது நோயை அதிகப்படுத்திக் காட்டி இருக்கிறதே தவிர அவர்கள் சொன்னது மாதிரி குணப்படுத்த முடியாத நோய் ஒன்றும் என்னிடம் குடிகொண்டிருக்கவில்லை. என மூத்த மகன் சொன்ன சொல் அவர்கள் கொடுத்த சேமிப்புப்பத்திரத்தை கால நீட்டிப்பு செய்து கொடுத்த பிறகும் வெகு நேரம் மனதை விட்டு அகலாமலேயே/

2 comments:


 1. சிறந்த பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசி ராஜன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete