14 Oct 2014

முன்னகர்ந்த பொழுதில்,,,,,



          
சற்றேநகர்ந்தமர்ந்தஇடம் ஜேம்ஸ்மணியின் டீக்கடையாய் இருக்கிறது. புது பஸ்டாண்டுக்கு அருகாமையில் இருக்கிற டீக்கடையாய் உருக்கொண்டிரு ந்த அது.

எப்பொழுதுமனிதர்களைச்சுமந்தும்அவர்களதுவாழ்க்கையையும்பேச்சுக்களை  யும்பதிவுசெய்தவாறு/நன்றாகஇருஎன்னிடம்வந்து ஒரு ஸ்டார்ங் டீ குடித்தா ல் உடலில்சோர்வுண்டு கிடக்கிற புத்துணர்வு நரம்புகள் எல்லாம் விழித்தெ ழிந்து கொள்ளும்.ஒன்றொன்றாய்,ஒன்றொன்றாய் தட்டிஎழுப்பிவிடப்படுகிற நரம்புஒன்றன்பின்ஒன்றாய்விழித்துக்கொள்கிறகாட்சியின் சினிமா ஸ்கோப் பான அகலம் பார்த்தே கூடவருபவர்கள்சிலிர்த்துக் கொள்வார்கள்.அல்லது கடையில்டீக்குடித்துக்கொண்டுநிற்பவர்கள்தன்னைஅப்படியாய்காட்டிக்கொள்ளமுயல்வார்கள்
வாரம்முழுவதுமாய்இல்லாவிட்டாலும்கூடவாரத்தில்இரண்டுஅல்லதுமூன்று நாட்கள்அந்தக்கடைக்குபோகிறபாக்கியம்இவனில்வாய்த்துப் போகிறதுண்டு தான்.

பாலத்துஇறக்கத்தில்முடிவில்இருந்த போக்குவரத்துசிக்னலில்இவனது இரு சக்கரவாகனம்நின்றபோதுஇவன்வயதொத்தவர்கள்கிட்டத்தட்டஒருஇரண்டு பேராவாதுநின்றுகொண்டிருந்தவர்களில்இருந்தார்கள்.பெரும்பாலுமாக அவர் கள் லேசானகண்ணைஉறுத்தாதகலரிலேயே சட்டைஅணிந்திருந்தார்கள். ஒருவன்ஹெட்செட்மாட்டிகொண்டுசெல்லில்பாட்டுகேட்டுக்கொண்டிருந்தான். இதுமாதிரியானஇளைப்பாறுதல்கள் சற்றே நிற்கிற இடத்தில் கூட தேவைப் படுவது ஒருவித அந்தியந்த மனோநிலை தான்.போக்குவரத்து ஒழுங்கு பண்ணிக்கொண்டிருந்த போலீஸ்காரர் சப்தம் போட்டார் அந்தப்பையனைப் பார்த்து. 

நான்குமுனையிலுமாய்தன்பரப்புகாட்டிநின்றசாலைமீதுவரிசைகாட்டிஒன்றன் பின்ஒன்றாய்நின்றவாகனங்கள்ப்போக்குவரத்து போலீஸ்க்காரர்கை காட்டி ய திசையிலும் பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்த எதிர்முனை நோக்கி யுமாய் விரைந்து கொண்டிருந்தது, இவனது இருசக்கர வாகனத்திற்கு பின் னால் நின்ற லாரி  ஓயாமல் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தது.

இந்தநேரம்போய்ஏன்இப்படியாய்ஹாரனைசப்தமாய்ஒலிக்கவிட்டுக்கொண்டிரு
க்கிறார்.லாரியின்டிரைவர்?சுத்தியிருந்தவர்களும்அங்கிருந்தஆட்டோஸ்டா
ண்ட்டிரைவர்களுமாய்சப்தம்போடவும்முகம்  சுளிக்கவும் டிரைவர் சப்தமிடு வதை நிறுத்திவிட்டார்.என்ன ஆச்சரியம் சப்தம் நிறுத்தப்பட்டதும் சிக்னல் விழுந்து விட்டது.போலீஸ்க்காரரும் கைகாட்டினார். 

ஆறு மணிக்கு அருகில் இருக்கலாம்,அல்லது அதைத்தாண்டிய கொஞ்ச மானபொழுதுஇருக்கலாம் என வைத்துக்கொள்ளுங்களேன். அருப்புக்கோட் டைடூமதுரை ரோடுஅது.எப்பொழுதுமேநாற்பதுகிலோமீட்டர்வேகம் தாண்டி வந்து இருசக்கரவாகனம் ஓட்டி பழக்கமில்லை.

பாலவனத்ததில்குடித்தஒருடீயின்ருசி இன்னும் நாவின் சுவையறும்புகளில் இருந்துஅகலாதபொழுதிலுமாய்வேகம்காட்டிவந்துகொண்டிருந்தபோதுதான் இவன்ரோட்டைவிட்டு இடது புறமாய் சற்று தள்ளிஉட்புறமாய்அமைந்திரு ந்தகான்வெண்ட் பள்ளிக்குசற்று தள்ளி ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளாகிக் கிடந்தது. அதன் அருகில்35வயதுமதிக்கத்தக்கஒருவர்ரத்தக் காய த்துடன்அமர்ந்திருந்தார்.நாடியில்அடிபட்டிருந்தது.கைகாலெல்லாம்சிராய்ப்புக் காயங்கள்.பெரியவண்டி அது,இருசக்கரவாகனத்தின் முன் சக்கரத்தில் சாய் ந்துஅமர்ந்திருந்தார். வெள்ளைச்சட்டை,கருப்புப்பேண்ட்,புது நிறமாய் தெரிந் தார்.வானம் செந்நிறம் காட்டிய படர்வாய் மாலை வேளையை அவசர அவசரமாய் முடிப்பது போல் காட்சிபட்டுத்தெரிந்தது.சுற்றிலுமாய் இருக்கிற காடுகள்ஏதும்விளைச்சலற்று வெற்றுப்பிரதேசமாயும்,பிளாட்ப்போடப்பட்டு மாய் விரிந்து படுகிறதாய்/

தூரத்தில் தெரிந்த கண்மாயின் கரை சற்றே உயர்ந்து கண்பட்ட பொழுதில் தூரத்துப்பறவைகள் வரிசைகாட்டி பறந்து சென்று கொண்டிருந்தது. சரிந்தி றங்கியகண்மாய்க்கரையின் நீட்சியில்கடைசியிலாய் இருந்தவெற்று வெளி யின் பரந்துபட்டசதுரத்தில்மடைநீர் செல்வதற்காய் வெட்டப் பட்டிருந்த சதுரவெட்டுக் கிடங்கு தொட்டு சாலையில் இடப்புறமாய் நீண்ட வெற்று வெளியே அவர் கிடந்த வெளியாய் இருந்தது.

வரும் போதேதூரத்திலிருந்து யூகிக்க முடிந்தது.விபத்துதான்நடந்திருக்கும் என/ இவன் இரு சக்கரவாகனத்தை சாலையின் ஓரமாய் நிறுத்திவிட்டு கையில்தண்ணீர்பாட்டிலுடன்விரையும்போதுஅவரைச் சுற்றி ஆணும் பெண் ணுமாய்கூட்டமாய் நின்றிருந்தார்கள்.அவர் அந்த கான்வெண்ட் பள்ளி யில் பணிபுரிகிற வாத்தியார் எனச்சொன்னார்கள். பள்ளியை விட்டு சாலை க்கு ஏறித்திரும்புகையில் எதிரே வந்த தனியார்பஸ் தட்டிவிட்டுவிட்டது என்கி றார்கள்சிலர்.அதெல்லாம்இல்லை, அவர் ஸ்கூலில் இருந்து வரும்பொழுது சாலைஏறுகிறதிருப்பத்தில்வண்டியைவேகமாக திருப்பிவிட்டார் என்கிறார் கள். இன்னும் சிலர்.எது உன்மை என அவரே சொன்னார்.

தப்பு என் பேரில்தான். வண்டியின்ஹேண்டில்பாரைஒட்டி சாப்பாட்டு டப்பா வைதொங்கவிட்டிருந்தேன்.வண்டியைதிருப்புகையில்அது கேண்டில் பாருக் கும் பெட்ரோல் டேங்கிற்கும்ஊடாய்சிக்கிக்கொண்டது.ஆகவே வண்டியை ஒடித்துத் திருப்பமுடியாமல்இப்படிசாலையில் லாத்தித் திருப்பியதால் இது போல ஆகிப் போனது என்றார். பரவாயில்லை இது மட்டுக்குமாய்/ நான் லாத்தித்திருப்பியநேரம்எதிரே வந்த பஸ் டிரைவர்பஸ்சை பிரேக் போட்டும் திருப்பியும் ஓடை யில் இறக்கி விட்டார், இல்லையென்றால் இந்நேரம் நான்பஸ்சின்டயருக்கடியில் போய் இரண்டுதுண்டாகியிருப்பேன் என்றார். அந்தநிலையிலும் நாடியில் வழிகிற ரத்தத்தை துடைத்துஅவரால் சிரிக்க முடிந்தது.

கூடிவிட்டிருந்தஅவருடன்கூடபணிபுரிகிறவர்கள்ஆளாளுக்குதண்ணீர்கொடு க்கவும்,தைரியம்கூறவுமாய்இருந்தார்கள்.அதற்குள்ளாய்வந்துவிட்டிருந்தகான்
வெண்ட்வேன்அவரைஏற்றிக்கொண்டுஆஸ்பத்திரிக்குவிரைந்தது.

வேன்கிளம்பி சென்றபின்தான்பார்க்கிறான்சாலையை,/சாலையில்தப்பும்
தவறுமாய்ஓடித்தேய்ந்திருந்தபஸ்டயரின்தடமும்,சீரில்லாமல் ஓடித்தேய்ந்தி ருந்த இருசக்கர வாகனத்தின் டயர் ஓடித்தேய்ந்திருந்த தடமும் தெரிந்தது.
ஊதாகலர் காட்டிய பெஞ்சும் பச்சை வர்ணம் காட்டி தனதுஇருப்புசொன்ன இரு பெஞ்சுகளும் சற்றெ பழுதாயும் பெயிண்ட மங்கியுமாய்/

டானாப்படஅமர்ந்திருந்தஇருபெஞ்சுகளில்ஒன்றில்தான் இவனது இருக்கை, அது ஊதாக்கலராய்இருக்கிறது.இவன்அமர்ந்திருந்தஇடத்தின்அருகாமையா யும்,பக்கவாட்டயும்  பெஞ்சின் ஓரம் சிதைந்து தெரிந்தது சற்றே/

இதுஎந்தமரம்,இதைச்செய்தவரின்மனோநிலைஅந்நேரம்எப்படியாய்இருந்திருக் கக் கூடும் எனத்தெரியவில்லை.

விளைச்சல்கள்எங்கிருந்துவருகின்றன எனத் தெரியவில்லை ,மாறாக நாம் வாங்குகிறகாய்கறிகள்,பழங்கள்கடையிலிருந்து தான் கிடக்கின்றன என்பது தாண்டி இப்பொழுது சிறு பிள்ளைகளுக்குஎதுவும்சொல்லத்தெரியவில்லை, அதை கல்விக்கூடங்களும் கற்றுக்கொடுப்பதில்லை எனஎழுத்தாளர்ஒருவர் மனம் வெம்பி ஒரு வாரப்பத்திரிக்கையில் எழுதியிருந்தது ஏனோஇந்நேரம் ஞாபகம் வந்து போவதாக/

பெஞ்சில்சம்மணமிட்டுதான்அமர்ந்திருந்தான்.இவன்எங்குடீசாப்பிடப்போனா லும்தோதுப்படுகிறஇடங்களில்சம்மணமிட்டுதான்அமர்ந்திருந்திருக்கிறான். தற்செயலாக அது இவனில் அமைந்ததாஅல்லது இவன் விரும்பி ஏற்றுக் கொண்ட பழக்கமா எனத்தெரியவில்லை.

உளுந்த வடை,அதிரசம்,தேங்காய் பன் இவன் கடைக்கு வந்த வேளையில் இவன்கண்பட்டதுஇவை மூன்றுமாய் இருந்த போதும் கூட இவனது ஓட்டு அதிரசத்திற்காய்இருந்தது.அது என்னவெனத்தெரியவில்லை. இனிப்பைக் கண்டால் மயங்கிப்போகிற மனம் இன்னும் இந்த 51 லுமாய் விட்டொழிந்த பாடாய் இல்லை.என்ன இப்பொழுதுஅளவைகொஞ்சம் குறைத்திருக்கிறான்.
எடுத்துக்கடித்துத்தின்று கொண்டிருந்த அதிரசத்தின்இனிப்புநாவறும்புகளில் பட்டுஅடங்குமுன்னாய் வந்து விடுகிற டீயை ஆவி பறக்ககுடித்துக்கொண் டிருந்தவேளையிலாய் அகலப்படுத்தப்பட்ட சாலையின்இருமருங்கிலுமாய் நிறுத்தப்பட்டிருந்தசைக்கிள்மற்றும் இருசக்கரவாகனங்கள் வரிசையாகவும், வரிசை தப்பியுமாய்/

கடையின்முன்புறமாய்நின்றிருந்தவைகளில்சிவப்புவர்ணம்காட்டிவீற்றிருந்த ஸ்கூட்டியின் மேல் பட்டுப்படர்ந்த பார்வை ஒன்றல்ல, இரண்டல்ல என காட்சிபடர்வுகளை விரித்துச்செல்வதாக/ சாலையின் ஊடுபாவாய் சென்று கொண்டிருந்த இரு சக்கரவாகனங்கள் தன் விரைவு காட்டியும் இரண்டு அல்லது ஒருவரையாவது சுமந்து கொண்டுமாய்/ வீதி வீடு ரோடு மண் என விரிந்த வீதியின் வலது ஓரமாய் தெருவின் முனை தொட்டு இரண்டா வதாய்அமைந்திருந்த கட்டிடத்தில் இருந்த மருத்துவ மனைக்குப்போய் இர ண்டு மாதங்களுக்கு மேலாய் ஆகிப் போகிறதாய்/ 

அவர் சொல்லியிருந்தார்,முன்பொருமுறையாயாயும் ஆறு மாதங்களுக்கு முன்பாயும்/ஒரு ஞாயிற்றுக்கிழமையாய் கொஞ்சம் முன்னறிவித்து விட்டு வாருங்கள்,நானும் ரெடியாக இருக்கிறேன்.இரண்டு மூன்று மணி வேளை தங்களதுமுழுஉடலைஎனதுமருத்துவ பரிசோதனைக்கு ஒப்படைத்து விடுங் கள்.என/

சரிதான்அவர்சொல்வதும்இத்தனைவியாதிகளைசுமந்துகொண்டிருக்கிற உடல் வைத்தியம் தேடி வந்தமர்கிற இடமாய் இது இருக்கிறது.

அப்படியாய் வருகிற பொழுதுகளிலெல்லாம் சற்றே நகர்ந்தமர்கிற இடமா ய் ஜேம்ஸ்வசந்தனின் டீக்கடை இருக்கிறது.     

2 comments:

Anonymous said...

நல்ல பதிவுக்கு நன்றி சார்..

vimalanperali said...

வணவணக்கம் ஜெயசீலன்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/