16 Oct 2014

மஞ்சள்வெயில்,,,,, அலுவலகம்முடிந்துவிட்டநேரமது.எல்லாவேலைகளையும் முடித்துவிட்டதிருப்தியுடன்வெளியில் வந்து விட்டிருந்தான்.

இடது தோள் தாங்கியிருந்த கறுப்பு நிற பை,வலது கையில் இருந்த கறுப்புக்கலர் ஹெல்மெட் இவைகளுடன் அவன் நின்றிருந்த இடம் அலுவலக வாசல்படியாக இருந்தது.

இது ஒன்று,சற்றே இடைஞ்சலாக, கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு திரிவது போல வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.கொஞ்சம் பிசகினால் கூட கீழே விழுந்து அடிபட்டு விடக்கூடும், அல்லது தவறி கீழே விழுந்து விடக்கூடும்.

பார்த்துப்பார்த்தும்,பயந்து,பயந்தும் மனம் தயங்கியுமாய்  இப்படி ஒன்றை தூக்கியும் பாதுகாத்தும் கொள்ளவேண்டிய துர்பாக்கிய நிலையில் சம்பந்தபட்டவர்கள்.

இல்லை கொஞ்சம் அஜாக்கிரதை கலந்து இருந்து விட்டால் ஹெல்மெட் திருட்டுப்போய் விடுகிறது,இல்லை தவற விட்டு விட வேண்டியதாகிபோகிறது.

திருட்டுக்கொடுத்தும்,தவறவிட்டுவிட்டும் ஆன பின்பு ஏற்படுகிற குற்ற மனநிலைக்கு ஆளாக வேண்டாமே என்கிற ஊயர் நவிற்சி மனோ நிலையில் இப்படி ஜாக்கிரதையாக கையில் வைத்துக் கொண்டே திரிய வேண்டியிருக்கிறது.

இல்லையெனில் மறந்து போய் அலுவலகத்திலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டால் போலீஸிடம் பிடிபட்டு பைன் கட்ட வேண்டியதாகிபோகிறது.

ரோடு,ரோட்டை ட்டிவலதுபுறஓரத்தில்வரிசையாகபதியனிடப்பட்டிருந்தகட்டிடங்களின்நடுவாய் அமர்ந்திருந்த அவனது அலுவலக வாசலில்தான் நான் நின்றிருந்தான்.

சிவப்புக்கலர் பூசப்பட்டிருந்த நடை வாசல் அதன் படிகள்,படியை ஒட்டியும் நடையை ஒட்டியு மாய் போடப்பட்டிருந்த பட்டையான கைபிடிக்கம்பி என இருந்த நடையிலிருந்து அவன் இறங்குகிறவேளையும் நடைமீது படர்ந்திருந்த மாலைவெயிலும் ,வெயில் பட்டுத்தெறித்த அவனது உடல் நிழலும்  கைபிடித்து அழைத்துச்சென்ற வேளையுமாய் அங்கு வந்து சேர்ந்தவள் அலுவலக த்தில் வேலை செய்பவர்களுக்கு டீக்கொடுப்பவரின் மகள்.

8ம் வகுப்புபடிக்கிறாள்.வயதுக்கேற்ற உயரமும் ,உடலும் கொண்டிருந்த அவள் இப்போது வரை பாடங்களை மனனம் செய்து விட்டும் எழுதி விட்டும்தான் வருகிறேன் எனவும் பரிட்சை லீவு தினங்கள் என்பதால் ஒரே வகுப்பில் படிக்கிற எங்களுக்கு பாடத்தில் இருக்கிற சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வேண்டியுமாய் ஒரே இடத்தில் ஒன்றாய் அமர்ந்து  எழுதி படித்துவிட்டுமாய் வருகிறோம்.என சிமிண்ட் தரையுடன் காட்சியளித்த பக்கத்துதெருவைக் காட்டினாள்.

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தெருவ சுத்தமா கூட்டி தண்ணி தெளிச்சி வச்சிருந்தோம்.இப்ப அதுல ஒக்காந்து எழுத தோதா இருந்துச்சி,தரையெல்லாம் ரொம்ப சுடல,ஒக்காந்து எழுதுற பக்குவத்துலதான் இருந்துச்சி.அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல.படிக்கிறத விட படிக்க வேண்டியவைகள எழுதுறதும்,இப்பிடி எழுதும் போது அவை பாதியும்,மீதியுமா மனசுல தங்கீர்றதும் சௌகரியமாகிப்போறதும் அது நம்ம காலத்தின் நிஜமாகிப்போறதும் ரொம்பவும் நல்லதாய் ஆகிப்போகுது என சொல்லியவாறே வந்த அவள் “ஹை,ஹேல்மெட்டா சார் என கையிலிருந்ததை வாங்கி அதன்னுள்ளே பார்க்கிறாள்.

இப்படியும்,அப்படியுமாக திரும்பித்திரும்பி பார்த்து விட்டும் உள்ளே கையை விட்டு ஹெல்மெட்டின் உட்புறமாய் இருக்கிற ஸ்பான்சின் மென்மையையும்,அதிலிருந்து தொங்குகிற கயிற்றையும்,அதன்நுனியில்இணைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற பட்டனையும் வேகமாக அழுத்திப் பார்த்து விட்டு வேகமாக தலையில் மாட்டிக்கொள்கிறாள்.

சார் நல்லாயிருக்கா என கேட்டவாறே ஹெல்மெட்டின் முன்பக்க கண்ணாடியை இறக்கி விட்டு விட்டு ஸ்டைல் காட்டி நிற்கிறாள்.ரோட்டில்சென்றதன்வயதைஒட்டியபிள்ளைகளிடம் தலையை  ஆட்டி,ஆட்டி நன்றாகயிருக்கிறதா எனக்கேட்கிறாள்.

சிறிதுநேரம் பட்டாம் பூச்சியொன்று வானத்தில் வட்டமிட்டு ரீங்காரமடித்துக்கொண்டது போலவும் தன் இறக்கையில் கலர் பூசிக்கொண்டு அழகு காட்டி சிரித்துக்கொண்டு தன்னையும் தனதழகை யும் பார்க்க வேண்டியும் தவமிருந்ததை கடந்து சற்றே தூரத்தில் நின்ற இருசக்கரவாகனத்தை தள்ளிக்கொண்டு வந்து அவளது அருகே நின்றபோது ஹெல்மெட்டை கழட்டி அவனிடம் தருகிறாள் மனமில்லா மனதோடும்,இந்தாங்க போட்டுட்டு பத்தரமா போயிட்டு வாங்க என்கிற வார்த்தைகளுடனுமாய்/

கொடுத்தஅவளதுகைகளும்,வாங்கியஅவனதுகைகளுக்குமாய்உள்ளடக்கிபறிமாறப்பட்ட உறவு ஷணநேரத்தில் மறைந்து போனதாய் பதிவாகிறது அந்த கணத்தில்/

கொடுத்து விட்டுப்போய் விட்டாள் மென்மை பூத்த சிரிப்ப்புடன் என வலது கையால் வாங்கிய ஹெல்மெட்டை தலையில் அணியப்போன நேரம் ஹெல்மெட்டின் உட்புறமாய் ஒட்டியிருந்த ரோஜாப்பூ ஒன்று சின்னதாய் என்னைப்பார்த்து சிரிக்கிறது.

அதுஅவளுடைய தலையிலிருந்த பூவாயிருந்திருக்க வேண்டும்.ஒட்டி உலர்ந்திருந்த பூவை கையெலெடுத்த நேரம் என் பார்வை என்னையறியாமல் அவளை நோக்கித் திரும்புகிறது.

இருந்த பூ ஒன்று உதிர்ந்து போன தடையத்துடனான தலையை சுமந்து கொண்டு தாவித் தாவிச் செல்கிறாள்.

அட,,,,,,,,,,ரோஜாப்பூவை உதிர்த்த ரோஜா ஒன்று இதழ் விரித்துச்செல்கிறது.

4 comments:

 1. ரசிக்க வைத்த கதை சார்.. சிம்பிளாக அழகாக இருக்கிறது,...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜெயசீலன்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. என்ன ஒரு ரசனையுடன் எழுதப்பட்ட கதை நண்பரே! ஒவ்வொரு வரியும் ரசிக்கும்படி உள்ளது மென்மையான தென்றல் காற்றில் தவழ்ந்து வரும் நறுமணம் போல.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசிதரன் அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete