Oct 22, 2014

மென் முத்தம்,,,,,வடையை பிய்த்துத் தின்ற கரங்களுக்கு ஒரு மென் முத்தம் தர வேண்டும்.

முத்தம்தருவதெனமுடிவாகிப்போன பின் ஏன் மென் முத்தம் எனத்தெரியவில்லை. அழுத்த மானஒரு முத்தமாகவே கொடுத்து விட்டுப்போக வேண்டியதுதானே என்கிறீர்களாஅதுவும்  சரிதான்.கொடுக்கிறமுத்ததில்மிச்சம் வைத்து அதை  எங்கே கொண்டு போய் சேமிக்க? எந்த வங்கியும்,எந்த ஒரு தனியார் நிதி நிறுவனமும் ஏற்றுக் கொள்ளவும்அதைசேமித்துவைத்து கொள்ளவும் இயலாதுதானே?

ஒன்றல்லஇரண்டல்ல,மிகச்சரியாகமூன்றுமுத்தங்கள்கொடுக்கலாம்.என்பதுஅவனதுநினைப்பாய்/

தினசரி காலையிலும்மாலையிலுமாய் பதிவாய்டீக்குடிக்கிற கடையது.இன்றல்ல நேற்றல்ல போன வாரத்தின் ஒருநாளில் மாலை வேளை வழக்கம் போலவே அந்தக்கடையோரம் நிற்கிறான்.மழைக்குஒதுங்கிநிற்கிறபள்ளிப் பிள்ளைகளைப் போல கைகட்டாமலும் பேண்ட் பாக்கெட் இரண்டில் கையை நுழைத்தவாறுமாய்/

மண்பூத்தும்தார்ஓடியுமாய்கறுத்துநீண்டிருந்தசாலை.அதன்மீதுசென்றவாகனங்கள்மனிதர்கள் அனைவரையுமாய் பார்த்த விழியின் குவி மையத்தை எடுத்து கடைக்குள் வைத்த போது அங்கொரு பாட்டி அமர்ந்து வடை கூட அல்ல,பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அந்நேரம் அதுதான் காணக்கிடைத்ததாய்/

பானாப் பட பெஞ்சுகள் போடப்பட்டிருந்த கடையின் உள் வெளியது.சற்றே விரிந்து தெரிந்த வெளியில்அமர்ந்துடிபன்சாப்பிட இரண்டு பெஞ்சும்,அமர்ந்து கொள்ளவும் டீ சாப்பிடவுமாய் ஒன்றுமாய் என மூன்று பெஞ்சுகளைப்போட்டிருந்தார்கள்.

பத்துக்கு பத்தடி வெளி இருக்கலாம்.வலது ஓரமாய் கடையின் உள் வெளி,இடது ஓரமாய் டீப்பட்டறை,அதன்பின்னேசமையலறைஇருக்கலாம்எனநினைக்கிறேன்.கையின் கிடுகு வேயப் பட்டிருந்த கூரை மீதிருந்து புகை வந்தது.

அன்றைக்கு என்னமோ டீ நன்றாகஇருந்தது.வரிபோட்டகண்ணாடிக்கிளாஸினுள்ளேமுக்கால் அளவேநிரம்பியிருந்தகலர் திரவம் நாவின் சுவையறும்புகளை தீண்டி ஒவ்வொரு மிடராய் உள்ளே போன போது ஆ,,,,ஆயாசம்/

உடலின்களைப்பைமட்டுமல்ல,உள்ளத்தின்களைப்பையும்போக்குகிறசக்திஅந்த திரவத்திற்கு உண்டு போலும்.டீயை உறிஞ்சியவாறே திரும்பவுமாய் கடையினுள்ளேபார்வையைநீட்டிய போதுஒருபிளாஸ்டிக்தட்டில்ஊற்றபட்டிருக்கிறசட்னியில்இரண்டுபஜ்ஜிகளைவைத்துசாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.மூதாட்டி.நடு,நடுங்கியகைகளுடனும்,சுருக்கம்விழுந்தமுகத்துடனுமாய்/

பஜ்ஜிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அந்த முதிய கரங்களுக்கு ஒரு மென் முத்தம் தர வேண்டும்.இந்த தீபாவளி திருநாளில்/

11 comments:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் வாழ்த்திற்கு/

   Delete
 2. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி வாழ்த்திற்கு/

   Delete
 3. Replies
  1. நன்றி வாக்களிப்பிற்கு/

   Delete
 4. அழகிய நடை! மென்முத்தம் என்றவுடன் வேறு ஏதோ நினைத்து...முடிவில் அருமை!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசிதரன் சார்,
   நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

   Delete
 5. மென்முத்தம் அழகு....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜெயலட்சுமி மேடம்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. வணக்கம் அண்ணா...

  தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

  வலைச்சர இணைப்பு
  http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html

  நன்றி

  ReplyDelete