27 Oct 2014

சிக்கி முக்கிக்கல்,,,,,,,படுத்திருந்த நான்கும் நான்கு திசை நோக்கி கால் பரப்பியும் தன் அயர்ச்சி காட்டியுமாய்/இவ்வளவுஅயர்ச்சியும், தன்னை மறந்த தூக்கமுமாய் இருக்கு மோஎனபிறரைஎண்ணவைத்தகாட்சியாய்விரிவு பட்டுத் தெரிகிறதாய் அது. 

காலையில்சாப்பிட்டுமுடிக்கவேமணிபத்தரையாகிப்போகிறது.நல்லஇட்லி வெண்மையில்திரும்பவும்வலியச்சென்று வெண்மை பூசியது போல் இலகு வாயும் மிருதுவாயும்/

இத்தனைக்கும்இட்லிக்குக்கரைவிடுத்துஇட்லிசட்டியில்அவித்தெடுத்ததுதான். ஒரேஒருதடவையோரெண்டுதடவையோஆசைக்கோளாறுபோலகுக்கரில் சுட்டெடுத்திருந்தாள்இட்லியை.அதுவும்நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் சட்டியில்சுட்டெடுக்கிறசௌகரியமும்,லாவகமும்குக்கரில்இல்லைஎன்றாள் மனைவி.

செல்வ சிதம்பரம் பாத்திரக் கடையில் வாங்கியது.மாதத்தவணைச் சீட்டில்/, மாதத்திற்கு 200 வீதம் கட்டியது. வழக்கமாய் சீட்டு முடியும் போது வீட்டில் இல்லாதபொருள் ஏதாவதொன்று அல்லது இரண்டு ஞாபகம் வரும். சீட்டுக் கட்டியபணம்போககையிலிருந்தகொஞ்சத்தையும்சேர்த்துப்போட்டு வாங்கி வருவாள்.ஏதாவது ஒண்றிரண்டு பாத்திரங்கள்.இந்தத்தடவை அப்படி ஏதும் இல்லாத பொருள் தட்டுப்படவில்லையா,அல்லது ஞாபகப் பிசகு ஏதேனும் ஏற்பட்டு விட்டதா, எனத்தெரியவில்லை.

பஜாருக்குப்போனவள் சீட்டு முடிந்தது ஞாபகம் வர இட்லிகுக்கரைஎடுத்து வந்து விட்டாள்.போலும்,இவனுக்கு அது தெரியாது.

இவன்அலுவலகம்முடிந்துபோகும்போதுகடைக்காரரிடம்கேட்டு வைத்தான். இவனுக்கானால் நீண்ட நாளாய் மனதுள் உதைக்கும் ஒரு நினைவு/ஜுஸர் ஜாருடன் நல்லதான ஒரு கம்பெனி மிக்ஸி வாங்க வேண்டும் என/அது இவன்நினைத்துஇரண்டுவருடங்களுக்கும்மேலாய் அமையவில்லை. எப்படி யும்எடுத்துவிடலாம்இன்று.அதற்கானவிலைமாடல்,என்னகம்பெனிஎனபார்த்து வைத்து விட்டு வந்து விட்டால் கையிலிருந்து எவ்வளவு போட வேண்டி வரும்என்ன என்பது போலான உள் விபரக்கணக்குகளுக்குள்ளும், பட்ஜெட் டுக்குள்ளுமாய்வந்து கொள்ளலாம் என்கிற நினைப்பில் நடை ஏறியவுடன் பாத்திரக்கடை முதலாளி சொல்லி விட்டார்.”சார் மதியமே வந்து அவுங்க இட்லிக் குக்கரவாங்கீட்டுப்போயிட்டாங்கஎன/

அவர்எப்பொழுதுமேஇவனிடம்முதலாளியாய்பேசியதில்லை.இவனும்அவரை முதலாளியாய்பார்த்ததில்லை.மெலிதானஒருசிரிப்பு,ஆழ்ந்தகீற்றுப்போலான ஒரு பார்வை, வாங்கசார் எப்படியிருக்கீங்க என்கிற ஒற்றைசொல்உதிர்வு என்கிறஅளவீட்டுக்குள்ளானநார்மல்பார்வையும்பேச்சும்அவரிடம்எப்பொழுதும் அதிர்வுறாமல் காணப்பட்டே/

ஒருவேளைஇவனுக்குமட்டும்தான்அப்படிகாட்சிப்படுகிறாரா?அல்லது பொது வாகவே அவரது பழக்கமே அப்படித்தானா என்பது இவனுக்கு புலப்படா மல் இருப்பதாக/ 

அப்படிபுடிபடுகிறபொழுதுகளில்நெஞ்சம்தொடுவதாய்அமைந்துவிடுகிறதுண்டு அவரதுபேச்சு/இவனதுவேலை,வேலைபார்க்கும்ஊர்,வேலை நேரம் வேலை யின்தன்மைவேலைப்பளுஉடன்வேலை பார்ப்பவர் எண்ணிக்கை அலுவலக த்தில் நிலவுகிற பழக்க வழக்கம், வீடு,வீடு இருக்கிற ஏரியா ஏரியாவில் புழங்குகிற வீட்டு வாடகை,நிலத்தின் விலை என எல்லாம் விசாரிப்பார். ஒரு முதலாளியாய் கல்லாவில் அமர்ந்து கொண்டு இத்தனையும் விசாரிக் கிற நேரங்களில் கடையில் வேலை பார்க்கிறவர்கள் இவரை ஒரு மாதிரி யாய் அந்நியமாய் பார்ப்பதை உணர முடியும். 

சென்றமுறைஇவன்கடைக்குவந்தபொழுதுஇருந்தவேலைக்காரப்பெண்இப்பொ ழுதுஇல்லை.அதுஅப்படித்தான்ஆகிப்போகிறது.என்பதாகவேநினைக்கிறான். நிரந்தரமாய்அல்லதுஆறுமாதங்களுக்குஒருமுறையாவதுமாறிக்கொண்டே இருக்கிறார்கள்.இந்தமுறைபோகும் போதுஇளவயதில்ஒருபெண்இருந்தாள். ”ஓரளவுஅவர்களுக்குகட்டுபடியாகிறசம்பளம்தான்தருகிறேன்.நான்,ஆனாலும் நிரந்தரமாய்இங்குவேலை பார்க்க ஆளில்லைதான். இதில் அவர்களைச் சொல்லியும்குறைவில்லை.எனக்குஅதற்குமேல்தரவும் சக்தி இல்லை.கடை வாடகை,கரண்ட்பில்,வேலையாள்சம்பளம்இத்தியாதி,இத்தியாதிஎல்லாம் போகஅவ்வளவுதான்முடிகிறது என்னால் என்கிறார் பாத்திரக் கடைக்காரர்.

மனைவிவாங்கிச்சென்றஇட்லிக்குக்கரின்நினைவுடனும்அதன்விலையையும், கடைக்காரர்சொன்னசொல்தாங்கியுமாய்வெளியில்வந்தபோதுகடையின்முன் வாசலில் அகலமாய் வாய்திறந்து ஓடிய சாக்கடை மீது அவரது கடையின் நடை இருப்பது தெரிந்தது.அதன் மீதுதான் இவன் நின்றிருந்தான். 

பக்கத்தில்வலதுபுறமாய்இருந்தஷோரூமில்இரண்டுவருடங்களுக்குமுன்பாய் ஷீலிங்பேன்வாங்கவந்தபோதுஅந்தக்கடையின்முதலாளிநடந்துகொண்டநடப் பையும்பாத்திரக்கடைமுதலாளியின்பழக்கத்தையும்அங்குபோகிறஒவ்வொரு முறையுமாய் நினைத்துப்பார்க்கத்தோணிவிடுகிறது./

நன்றாகவும் ருசியாகவும் இருந்த இட்லியைசாப்பிடவயிறுதான் இல்லை. 5.45க்குஎழுந்ததிலிருந்துஇட்லிசாப்பிடுகிறஉட்காருகிறஒருமணிமுன்பு வரை மூன்றுடீயை சாப்பிட்டுவிட்டிருந்தான்.அதிகமல்ல இப்பொழுதெல்லாம் வர வரகொஞ்சமாய்டீசாப்பிடுவதுகூடவயிற்றுக்குஒத்துவரவில்லைதான்.ஆனாலும் பழகிய பழக்கம்,தோஷம் விடமாட்டேன் என்கிறதாய்/.

பத்துவருடங்களாய்ஒட்டிக்கொண்டுவிட்டபழக்கத்தைஅவ்வளவுஎளிதாகவிட்டு விடமுடியவில்லைதான்.அதன்பலன்தானோஎன்னவோநகரில்புதிதாய் எங்கு டீக்கடை திறந்தாலும் உடனே போய் ருசி பார்க்கச்சொல்லி விடுகிறது. டீக் கடைடீமாஸ்டர்அவர்கள்பயன்படுத்துகிறடீத்தூள்எல்லாம்பார்ப்பான்,டீக்குடித்து விட்டுகிளம்பும்போதுவெகு ரகசியமாக டீமாஸ்டரிடம் டீத்தூள் எங்கு வாங் கியது என கேட்டுத்தெரிந்து கொள்வான். முடிந்தால் மறுநாளே வீட்டுக்கு வாங்கிபோய்விடுவான்.மதுரைபேருந்துநிலையத்தில்அப்படிவாங்கியடீத்தூள் இன்னும்பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. 

ஸ்ரீ சாயிமெடிக்கல்ஸ்இறக்கமேஇவன் போக வேண்டிய இடமாய் இருந்தது. ரோட்டைவிட்டுவலது புறமாய் இருந்த வெற்று வெளி தாண்டி நின்ற கட்டி டமே சாயி மெடிக்கல் எனப்பட்டது.மருந்துமாத்திரைவாங்கிக்கொள்வதற்கு மட்டுமல்ல,ஆத்திரஅவசரத்திற்குசெல்போனுக்குரீ சார்ஜ் பண்ணிக் கொள்வ தும் அங்குதான்.ஒரு ரூபாய் அல்லது அதற்கு அதிகப்பட்ட தொகை செல் போனில்பேலன்ஸ்இருக்கும்போதே போன் பண்ணிச் சொன்னால் போதும். அவரே ரீ சார்ஜ் பண்ணி விடுவார்.அது போலான பழக்கம்.அது உள்ளூரில் இருக்கும்போது மட்டும் என இல்லை.தஞ்சாவூரில் பணி புரிந்த நாட்களி லும் கூட தொடர்ந்தது.

கடைக்காரரைபார்க்கிறபொழுதெல்லாம்இவனுக்குள்ளாய்எழுந்தெழுகிறநினை ப்பு தவிர்க்க முடிவதில்லைதான்.பார்க்க ஆள் ஹீரோ மாதிரி இருக்கிறாரே என்பதும், ஹீரோக்கள் எல்லாம் நம்மிலிருந்து வந்தவர்கள்தானே வேறு எங்கிருந்து வந்திருக்க முடியும்என்கிறநினைவும்ஒரு சேரஅடுத்தடுத்தாய் வந்தமர்வதுதவிர்க்க முடியாமல் போகிறதுதான்.”சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி”,,,,,,,,,பாடலும் இன்ன பிற பாடல்களுமாய்ரீங்கரிக்கஅதன்நினைவுடன்அவரைகடந்து போன கணங்கள் நிறையவே/

முன்பு மருந்துக்கடை கருவாட்டுக்கடைக்குப்பக்கத்தில் இருந்தது. காம்ப்ள க்ஸ் கடைக்கு பக்கத்தில் இருந்த அவரது மருந்துக்கடைக்கு இடது கைப் பக்கம் பெட்ரோல் விற்கும் கடை இருந்தது.வலது பக்கம் கருவாட்டுக் கடை.கருவாடு வாங்கிக் கொண்டு அடுத்ததாய் மருந்து வாங்கிக்கொண்டு வந்திருக்கிறஇருசக்கரவாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு அநேகம் பேர் செல்வதை இவன் பார்த்திருக்கிறான்.

எல்லாம்நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. .பிங்க் கலர் அடிக்கப்பட்டி ருந்த பெட்ரோல் கடையில் தீ விபத்து ஏற்படுகிற நாள்வரை/

யாரும்இல்லாதமதியநேரமாய் பெட்ரோல் கடையை பூட்டிவிட்டு சாப்பிடப் போய்விட்டநேரம்.மருந்துக்கடையில்வியாபாரமும்மந்தமாய்நடந்துகொண்டி
ருந்தமென் மதியப் பொழுது.கருவாட்டுக்கடையை மூடுவதற்காய் அந்தப் பெண்எடுத்து வைத்துக் கொண்டிருந்தநேரம்.மந்தகாசப்பொழுதின்சோம்பல் சூழ்ந்தவேளையாய்பூட்டப்பட்டிருந்தபெட்ரோல்க்கடையின்ஷட்டர்வழியாக புகைவந்ததைக்கண்டும்தீவாசம்வந்ததைக்கண்டுமாய்கடையைவிட்டு வெளி யேஓடிவந்துவிட்டார்மருந்துக்கடைக்காரர்.மாத்திரைவாங்க நின்று கொண்டி ருந்த ஒருவரை அவசர அவசரமாக அப்புறமாய் வரச்சொல்லிவிட்டு/

போலீஸ்,தீயணைக்கும்வண்டிஎனவந்துவிட்டசற்றுநேரத்திற்கெல்லாம் பெட் ரோல்க்கடைக்காரரும்வந்துவிட்டிருந்தார்.மருந்துக்கடைக்காரர்தான்விஷயத் தின்தீவிரமறிந்து பெட்ரோல்க்கடைக்காரரை அங்கிருந்துபோகச் சொல்லி விட்டார்.பக்கத்துக்கடைக்காரர்எனமருந்துக்கடைக்காரரிடம்தான்தீவிரமாய் விசாரி த்தார்கள் போலீஸ்க்காரர்கள். தீயணைப்பு வண்டிகளை அவர்தான் அனுப்பிவைத்தார்.பெண் என்பதால் கருவாட்டுக்கடைக்காரம்மாவை விசாரி க்கவில்லை.அன்றிலிருந்து சரியாக பத்தாவது நாளில் இங்கு இடம் மாறி வந்தவர்தான்.

இது ஓரளவுக்கு நல்ல இடமாய் நல்ல கடையாய்/கடை முன் இரு சக்கர வாகனங்கள் சைக்கிள்கள் நிறுத்த இருந்த வெற்றிடம் தாண்டி வரிசையாய் இருந்த காம்ப்ளக்ஸ் கடைகள் என எல்லாம் வீற்றிருந்தது.சைக்கிள் கடை, டீக்கடை,பலசரக்குக்கடை,காய்கறிக்கடை,,பிராய்லர்க்கடைமீன்விற்கிறகடை என அடுக்கப்பட்டிருந்தவைகளுக்குமத்தியிலாககிளினிக் இருந்ததுதா ன் ஆச்சரியமாக/

நண்பருக்குவைத்தியம் பார்ப்பதற்காய் ஒரு முறை கிளினிக்குசென்றிருந்த பொழுதுடாக்டரேசொன்னார்.சின்னக்கட்டிடம்தான் இட வசதியில்லைதான். வருகிறவர்களுக்கும்சங்கடம்,எனக்கேகூடசங்கடம்தான்.பாத்ரூம் கூட போக முடியவில்லை அவசரத்திற்கு என்றார்.வருகிறவர்களிடமெல்லாம் அது பற்றிவலியுறுத்துகிறநான் அதை பின்பற்ற முடியாமல்போவதுசங்கடமான விஷயமாகவே/

அதுபற்றி அவர்கொடுத்த மருந்துச்சீட்டுடன் மருந்துக்கடைக்காரிடம் வந்து நின்றபோதுநம்மளப்போலசின்ன ஊர்கள்லபரவாயில்லசார்,பெரியஊர்கள்ல நெலம இன்னும் மோசம் என்றார்.  

உடல்முழுவதுமாய்பிரவ்ன்க்கலர் முடிபோர்த்திகாலில்மட்டுமாய்வெள்ளை வர்ணம்காட்டியநாய் கிழக்கு நோக்கி படுத்திருந்ததாய் .இவனது இருசக்கர வாகனத்தைநிறுத்திவிட்டுஅதைக்கடந்து போகையில் கேட்கிறது மெதுவா க அல்லது சொல்கிறது மிக மிக லேசாக/

இவனும் வந்த வேலையை விட்டுவிட்டு நாயின் பேச்சோசைக்கு காதை கழட்டிக்கொடுக்கிறான்.நாய் சொல்கிறது,இப்படியெல்லாம் நடு ரோட்டிலும் குப்பை மேடுகளிலுமாய் சுற்றித்திரிந்து கொண்டிருந்து விட்டு தெருவுக்குள் குறுக்கும்நெடுக்குமாய்திரிந்துமனிதர்களைபயமுறுத்திக்கொண்டிருந்துவிட்டு இப்படியாய்கடைகள்முன்பும் மனிதர்கள் நடமாடித்திரிகிற வெளிகளிலுமாய் திரிந்தால்எப்படி,,,,எனநிறைந்தகேள்விகளைஎழுப்புகிறார்களே,உங்களைப்போ
ன்றவர்கள்,,,நீங்கள்வரும்போதுகூடஉங்களிடம்ஒருவர்பேசிக்கொண்டிருந்
தாரே கோபமாகவும்,வேகமாகவும்/ஏன்அப்படியெல்லாம் பேசுகிறார் அவர்?

தெருவில்திரிகிறஎங்களையெல்லாம்நகராட்சியோஅல்லதுபஞ்சாயத்தோ
பிடித்துக் கொண்டுபோய்கொல்ல வேண்டும்எனச்சொல்கிற அவர் எங்களது பிறப்புபற்றியும்,இருப்பு பற்றியும்,இறப்பு பற்றியுமாய் கவலை கொள்ளாதது ஏன்தெரியவில்லை.,,,,,,,எனச்சொல்லவும்வெள்ளைரோமத்தினூடாய்கறுப்பு வர்ணம் பூத்தநாயும்திசைக்கொன்றாய்படுத்திருந்த இன்னபிறநாய்களுமாய் சேர்ந்து  குரல் எழுப்புகின்றன இவனிடம் கேள்விகேட்டு/

4 comments:

 1. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசிராஜன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. தங்களின் வலைப்பக்கம் வண்ணமயமாக இருக்கிறது..!வாழ்த்துக்கள் ..!
  mahaasundar.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகா சுந்தர் சார்,
   நன்றி வாழ்த்திற்கு/

   Delete