அவனுக்கு என்ன வயதிருக்கும்
எனத் தெரியவில்லை.
அவன் படிக்கிற பள்ளியில்
இருக்கும்தங்கும்விடுதியில்
இடம் வேண்டி
விண்ணப்பிக்க வந்திருந்தான்.
எட்டாம் வகுப்பு படிக்கிறானாம்.
கை கால்கள் குச்சிகுச்சியாய்
தெரிய முகம் வாடி,
உடல் மெலிந்து
வாடிப் போய் தெரிந்தான்.
புது நிற மேனியில்
எண்ணெய் வழிந்திருந்த
வியர்வை பிசுபிசுப்புடன்
காணப்பட்டவன்
அணிந்திருந்த பள்ளி சீருடையும்
நைந்து அங்கங்கே
நூல் பிரிந்து தொங்கி தெரிந்தது.
நடப்பும் பேச்சும் இன்னும்
பிஞ்சுப் பருவத்தை தாண்டவில்லை.
படிப்பில்எப்பொழுதும்
முதலிடம்தானாம்.
ஆனால் நடப்பு வாழ்க்கையில்
எப்பொழுதும் கடைசி நான்கு
இடங்களுக்குள் இருப்பவனாகவே/
அதுதான் அவனை
இலவச தங்கும் விடுதி
நோக்கி நகர்த்தியிருக்கிறது.
அது வேண்டி விண்ணப்பிக்க
வந்த இடத்தில்தான்
அவனை பார்க்கிறேன்
அரசு அலுவலகம் ஒன்றின்
இருக்கமான சூழலில்.
இங்கு பணம் கட்டி
முத்திரை வாங்கித்தான்
விண்ணப்பிக்கவேண்டுமாம் விடுதிக்கு.
“அதற்கு லஞ்சம் கேட்கிறார்கள்
நான் என்ன செய்யட்டும் இப்பொழுது”
என கையை பிசைந்து நின்றவனிடம்
“எவ்வளவு எனக் கேள்
கொடுத்துவிடலாம்”
எனக் கூறியவாறே
அவனது அருகாமையாய்ப்
போய் நிற்கிறேன்.
4 comments:
சிறந்த பதிவு
தொடருங்கள்
வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
படிப்பில்எப்பொழுதும்
முதலிடம்தானாம். //
ஏழையின் படிப்புக்கு உதவ லஞ்சம் கொடுக்க முன் வந்தது நெகிழ்வு.
வணக்கம் கோமதி அரசு அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment