20 Nov 2014

முகமன்,,,,


பெற்றோர்கள் வைத்த பெயரும் நிலைக்காமல்அவனாக வைத்துக் கொண்ட புனைப் பெயரும் நிலைக்காமல் இப்போதுஅதுவேநிலையாயும்சாஸ்வதமாயு ம் ஆகிப்போனது.

தோழர்,தோழர்,தோழர்,,,,,,அடபோங்கப்பா,எங்குபோனாலும்யார்மத்தியிலும், மனித வாசனை நிலைகொண்டுள்ள எந்த இடத்தில் நின்றிருந்த போதிலும் அல்லது தலைகாட்டுகிற தருணத்திலுமாய் அப்படித்தான் ஆகிப்போகிறது.

இத்தனைக்கும்அவன்ஒன்றும்அப்படியானவார்த்தைஅடையாளப்படுத்தப்பட்ட கட்சியிலோ, அல்லது தொழிற்சங்கத்திலோஉறுப்பினராகக்கூட இல்லை.

அல்லது கட்சியில் நிலை கொண்டுள்ள பதவிகளில் எதிலும்இல்லை. பின் ஏன் அப்படி எனவும் தெரியவில்லை.

பள்ளியில்படித்துக்கொண்டிருந்தகாலங்களில்தரையில்கிடக்கிறதுண்டுபேப் பரைகையிலெடுத்துபடிக்கிறபழக்கமும்,புரட்டிப்பார்க்கிறதனமும்இருந்தது போலவும்,திருமுருககிருபானந்தவாரியாரின்சொற்பொழிவுகளைகேட்டுப்பழகி யது,பொட்டலில்அரசியல்கட்சிகளின்கூட்டம் என்றால் திறந்தவாய் மூடாமல் நின்றதும்இன்றுவரைதொடர்கிறது.வெவ்வேறுவடிவங்களிலும்,ரூபங்களிலு
மாய்/
 
 (இன்றுமனைவியின்சொற்பொழிவேபெரிதாகஇருக்கஅதைக்கேட்கவே24மணி
நேரமும்சரியாகிப்போகிறது.அப்புறம்வேறென்னகேட்பது?)

அலுவலகம்,அலுவலகம்விட்டால்பஜார்,நண்பர்கள்,தோழர்களின்சந்திப்பு,பேச்சுடீக்கடை,காய்கறிக்கடை எல்லாம் முடிந்துவந்த பொழுதுகளிலும்,ஏதாவது ஓய்வு கிடைக்கிற வேலைக ளிலுமாய் தொலைக்காட்சி மற்றும் கணிணி யின்உதவியோடுகேட்பது தான் சொற்பொழிவு,பாட்டு,நாடகம்என,,,சரிவிட்டு விடலாம்.

ஆனால் நிலை கொண்ட பேரை என்ன செய்ய? ஒன்றும் செய்ய வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள் என்கிறாள் அவனது மனைவி.

அதற்கு மேல் பேசினால் “ரொம்ப அறுக்காதிங்க, ஓட்ட ரெக்காடு மாதிரி பேசுன தையேபேசிக்கிட்டு/அதான்காய்கறிக்கடையிலிருந்து,டீக்கடைவரைக்கும்அப்
பிடித் தான் பேராகிப்போச்சுன்னு சொல்றீங்கிள்ல,அப்புறம் என்னவாம்? இப்ப நானும்ஒங்கள தோழர்ன்னு கூப்புடலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என் கி றாள்.

“கணவர்தோழாவா?”“ஐய்ச்சக்கா”,அதுவும்நன்றாகத்தான்உள்ளது.ஆனால்கண்க ளைஉருட்டிக்கோண்டு இடுப்பில் கைவைத்து முறைக்கிற பழக்கம் மட்டும் போகமாட்டேன்என்கிறது.ஒருபெண்மனைவிஎனமறுஉருறுவாய்ஆகிப்போன நாளிலிருந்துஇப்படித்தான் போலும்/

ஆகட்டும்,ஆகட்டும்.இல்லையென்றால்முக்கால்வாசி வீடுகளில்இந்த
ஆண்களின்தொல்லைபொறுக்கமுடியாது.நிற்கிறஇடங்களிலெல்லாம்டீக்குடிக்க,சிகரெட்குடிக்கஎனஆரம்பித்து
விடுவார்கள்.

அவனுக்குத்தெரிந்துஒருவர்தான்அணிந்திருக்கிறவெள்ளைச்சட்டையில் சிக ரெட்புகைபடிந்துகாணப்படுகிறார்எந்நேரமும்அவரும்அவனைகூப்பிடுவது தோழர்  எனவே/

அதற்காக சொந்தக்காரர் கூட இப்படியா அழைக்கவேண்டும்? அரசுப் போக்கு வரத்தின்நடத்துனர்அவர்.

அவனது ஊரில்தான் சம்பந்தம் பண்ணியிருக்கிறார்.தாராபுரத்துக்காரர் பெண் ணைஅவருக்குபேசிமுடிக்கையில்மாமனார்வீட்டில் தாண்டவமாடிய வறுமை யை இவர் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

நல்ல பெண்,அவள் படித்தும்,முடிந்தும் வைத்திருந்த டீச்சர் ட்ரெயினிங் படிப்பு என்கிற இரண்டு மட்டுமே போதும் என அவளை மணம் முடித்துக்கொண்டு வந்திருந்தார்.

இன்றுஅவள்ஒரு கிராமத்துப்பள்ளியில் தலைமை ஆசிரியர்.அழகும், அறிவு மாய் இரண்டு பிள்ளைகள்.படிப்பு வேலை,பொறுப்பு என நகர்கிற குடும்பம். கண் நிறைந்த மனைவியையும்,பிள்ளைகளையும் தன் மனதில் தாங்கி நகர் கிற அன்பு மனிதராக உருக்கொண்ட அவர் அவனுக்கு அண்ணன் முறை வேண்டும்.

அவன்,இருசக்கரவாகனம் மற்றும் கொஞ்சமாய் மடியில் கட்டிப்போன எண்ண ங்களுடனுமாய் தங்கமுத்து தோழர் கடையில் போய் வண்டியை ஸ்டாண்ட் போட்ட போது பின்னிருந்து முதுகு தொட்ட “வணக்கம் தோழர் என்கிற குரலு க்கு சொந்தக்காரராய் அவர் இருந்தார்.

“அண்ணே, வாங்கண்ணே,நல்லாயிருக்கீங்களா,எங்க வேலை செய்றீங்க?வீடு எங்க இருக்கு? பிள்ளைங்க என்ன பண்றாங்க?டீச்சர்எப்பிடிஇருக்காங்க?என கேட்டமறுகணம்“நல்லாயிருக்கேன்தோழர்” எனஆரம்பித்துவீடுமனைவி, பிள் ளைகள்எனஒருமூச்சுபேசிமுடித்தார்.மூச்சுக்கு,மூச்சுதோழர்,தோழர்,தோழரே,,/
ஒருடீ,ஒருவடை,மிஞ்சிப்போனால்ஒரு முறுக்கு இதுதான் அவனது டீக்கடை மெனு/

அலுவலகம்முடிந்துவரும்போதுபாலவனத்தத்தில்தான்ஒருடீக்குடித்திருந்தான்.  10கிலோ மீட்டருக்குள்ளாகவா அடுத்து ஒரு டீக்கேட்கிறது?

வெறும்டீக்காகமட்டுமாபோகிறான்.இல்லையில்லை.கொஞ்சம்பழக்கத்திற்காக, கடையில்கேட்கிறபாட்டுக்காக,இன்னும்மனம்லேசாகிப்போகிற வேறு பல விசயங்களுக்காகவும்/

கனக்கிறஅல்லதுகுழப்புகிற இல்லையேல் மனம் பிசைகிற எண்ணங்களு டன் அங்கு போய் அமர்ந்தால் உள்ளே இறங்குற நேரம் டீயின் மிடறுகள் ஒவ்வொ ன்றுக்குமாய் அவிழ்ந்து சிதறிப்போகிற மனதை அள்ளி முடிய பிரியமி ல்லா மல் அப்படியே அங்கேயே விட்டு விட்டு வந்து விடுகிற நல்லதனம் மிகவும் பிடித்துப்போகஅங்கேயேஅமர்ந்துவிடுவான்.

“டீ,டீ,டீதானாஎந்நேரமும்?விட்டா24மணிநேரமும்பக்கத்தில்பாய்லரை வைத்து க்கொண்டுட்யூப்போட்டு உறிஞ்சிக் கொண்டிருப்பாய்போலிருக்கிறேதே?”என கேலி பண்ணுவார் அவனது நெருங்கிய உறவினர். அது மாதிரிதான் ஆகிப் போனது அவனது கதையும்/

மேம்பாலம் இறங்கி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த போது எதிர்ப்பட்ட வெளியை ஏறிடும் போது உதித்த எண்ணமே டீ சாப்பிடலாம் என்ப து/

பாலத்திலிருந்து கருத்து நீண்டு இறங்கிய சாலை,சாலையின் மேடு பள்ளங் களிலும்,சின்னசின்ன குழிகளிலுமாய் பெயர்ந்து கிடந்த கற்கள் அதன் மீது படர்ந்து கிடந்த தூசி,அழுக்கு,மண்,மாலை வெயில் என எல்லாம் கடந்தும், பிரிண்ட்அவுட்எடுக்கிறகம்யூட்டர்சென்டரில்பேசாமல்கேட்டதற்கும்,சொன்னத ற்கும்தலையாட்டியும்,சைகை காட்டியுமாய் பேசிய பெண்,அவளது அழுத்தம் படர்ந்த முகம் என்கிறவற்றுடன் நான்கு முனை சிக்னலை கடந்து வந்த போது செயல் பாட்டுக்குள்ளான எண்ணத்துடன் தங்கமுத்து தோழர் கடையில் போய் அமர்ந்த போது பார்த்த மனிதராய் அவர்/

நல்ல மனிதர்.முன்பு பார்த்ததை விட இப்போது நன்றாகயிருந்தார்.எட்டு முழ வேஷ்டி,முழுக்கை சட்டை.திறந்து காணப்பட்ட கழுத்து பட்டன் வழியாக டீ சர்ட்டோ,பனியனோ தெரிந்தது.

எப்போது பார்த்தாலும் பளிச்சென்று சிரித்து பேசக்கூடிய அன்பின் மனிதர் ஒட்டுதல் மிக்கவர்,அவர்தான் எனக்கும் சேர்த்து டீ சொன்னார்.அவன்,அவர் மற்றும் அவருடன் வந்திருந்த சாமிக்கண்ணுக்குமாய் சேர்த்து/

தட்டில்அடுக்கப்பட்டிருந்தவடைகளைப்பார்த்தான் ஐந்தாறுகிடந்தது. பாக்கெட் டில்அடைக்கப்பட்டிருந்த முறுக்குகளைபார்க்கிறான்.பை நிறைந்து தெரிகிறது.

வடையையும்,முறுக்குகளையும்வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் டீயைநீட்டியகரம் அன்பின் மனிதருடையதாய் இருந்தது.

ஒன்றும்பேசத்தோன்றா சங்கடத்துடன் டீயை குடித்துக் கொண்டிருந்த நேரத்தி லும்பேசிக்கொண்டிருந்தபொழுதிலுமாய்அவர்சொன்ன“தோழர்”என்கிற வார்த் தை பதங்களுக்கு அவனுடைய பதில்ப் பேச்சு அண்ணன்,அண்ணன் என்பதா கவே இருந்தது.

அப்படிஅவர்கூப்பிட்டும்,பேசியும்கொண்டிருந்த வேளையில் அவனுக்கு அடுத் தடுத்து வந்த போனில் “வணக்கம் தோழர்” என்கிறார்கள் எப்பொழுதும் சார் என கூப்பிடகூடியவர்கள் கூட/

கணக்கிட்டுப் பார்த்தால் இன்று காலையிலிருந்து எதிர்ப்பட்ட, பேசிய இருபது க்கும்குறையாதவர்களில்பத்துக்கும்மேற்பட்டோர்கள்சொன்னதுதோழர்,,,தோழர்,,, தோழரே,,,,,,,,,,/

இருபதுக்குள்அடங்கியபத்தைதாண்டியபதினைந்தைத்தொட்டமனங்களில்அவ
ன்அப்படித்தான்பதிவாகியிருக்கிறான்.“தோழர்”என/அதுவும்நன்றாகவேஉள்ளது உயிர்ப்புடன்/

10 comments:

 1. வணக்கம்
  மிக அற்புதமாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. தோழர் எனும் போது ஒரு உரிமை மனதில் நிழலாடி மகிழ்விக்கும் தோழரே...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. “தோழர்”என/அதுவும்நன்றாகவேஉள்ளது உயிர்ப்புடன்///
  இந்த வார்த்தையும், இந்த உறவும் தனிதான். தனித்துவம் வாய்ந்த ஒன்று...அற்புதமான படைப்பு தங்கள் எழுத்தில்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசிதரன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஹலோ நண்பரே,
   நன்றி வருகைக்கு/
   உலக ஹலோ தின வாழ்த்துக்கள்/

   Delete
 5. தோழர் - அருமையாக இருக்கிறது. அப்படி அழைப்பதில் ஒரு அன்பு இருக்கிறது.
  அருமையான பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரத்தின வேல் நடராஜன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete