26 Nov 2014

கரம் மசாலா,,,,,,

அப்போதெல்லாம்மிக்சிஇருக்கவிலை.கிரைணடர்கிடையாது.அயோடின் உப்பு இல்லை.அஜினோமோட்டோ கிடையாது. கரம் மசாலாக்களும், பாவ்பாஜிகளு ம் கிடையாது.

ஆட்டு உரலும் அம்மிக்கல்லும் மட்டுமே.விவசாய வெலைகளுக்கும், இன்ன பிறகூலிவேலைகளுக்குமாய் சென்று விட்டு உடல் நிறைந்த உழைப்பின் அலு ப்புடன் வீடு வந்து சேருகிற அவர்கள்காலத்தில்அம்மிக்கல்லும்,ஆட்டுஉரலும் மட்டுமே இருந்தது.

இல்லாத அல்லது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் கொஞ்சம் மட்டுமே இருக் கிற அரசலவை அதில் இம்புட்டு,அதில் இம்புட்டு,,,,,,என எடுத்து அம்மி யி ல் வைத்து அரைக்கிற போது தப்பித்துப் போகிற தேங்காய்ச் சில்லை கைப் பிடித் திழுத்து அம்மியில் வைத்து அதன் தலையில்நச் நச்செனதட்டிஅரைத்தெடுத்து அதன் கை மணத்தையும் குழைத்தெடுத்துபோட்டு தாழித்து சமைத்து இட்ட நமதுஅம்மாக்களும்,பாட்டிகளும்தந்தஉணவில்இருந்த ருசி இப்போது இல்லை யே,,,?என்கிற கேள்வி நம்முள் அன்றாடம் எழுவதும்,எழுந்து மரிப்ப தும் தவிர்க்க இயலாமல் போகிறது.

இத்தனைக்கும் இப்போது இருந்தது போல அப்போது கேஸ் அடுப்பு இல்லை, குக்கர் இல்லை.இது போன்ற ,முள் கரண்டியோ அல்லது நான் ஸ்டிக் பாத்தி ரங்களோ,அல்லது சமையல் அறையை அடைக்கிற இன்ன பிற தேவையான அல்லது தேவையற்ற பாத்திரங்களோ எதுவும் இல்லை.

குக்கரின் மூணு விசில் சத்தம்,பால்க் குக்கர் இட்லிக் குக்கர்,இடியாப்பக்குழாய் மற்றும் முறுக்குப்பிழிகிற சாதனங்கள் போன்ற விஞ்ஞான அறிவின் எந்த நீட் சியும்தன்அறிவைசமையலறாய்க்குள்ளாகஇவ்வளவுஅவசரமாகநீட்டாதகால மது.

கம்பங்கஞ்சியும்,கேப்பைக்கூழும்,சோளத்தோசையும்வரகுஅரிசிச்சோறும்மிக மிக அரிதாக நெல் அரிசிச்சோறுமாய் பொங்கிக் கொண்டிருந்த சமையலறை யில் நமது தாய்மார்கள் அடைகொண்டிருந்த நேரமது.

செம்மண்கொண்டுமொழுகப்பட்டஅடுப்பில்எரியாதவிறகையும்,புகையும்பருத் தி மாரையும் வைத்து கனமான இரும்பு ஊது குழாயால் புகை சூழ ஊதி, ஊதி கண்களில் நீரை கட்டி வைத்துக் கொண்டும்,கண்களை கசக்கிக்கொண்டுமாய் சமையல்செய்கிறஇடத்திற்குவெகுஅருகாமையாகவும்சமையல்செய்கிறவளி ன் உடல் மற்றும் அந்த இடமெங்குமாய்ஒட்டி உறவாடியபடி சிந்திக் கிடக்கிற காய்கறித் துண்டுகளும்,வெங்காய சருகுகள் என இன்னும் இன்னமுமான சாப்பிடு பொருட்களின் மிச்சத் துண்டுகளுடன் தீபாவளி,பொங்கல் அல்லது ஏதாவதுவிஷேசநாட்களில்மட்டும் சுட்டெடுக்கப்படுகிற தோசை,இட்லி போன் ற பலகாரங்களை சுட்டெடுத்த தாய்மார்கள் அன்று சமையலில் தந்த ருசி இன்று இருக்கிற நவீன சமையல் யுகத்தில் இல்லையே?

”ஏய் இன்னைக்கு அவுக வீட்ல தோசயாம்த்தா,,,,,,,,,,”என ஊர் பூராவும் பேச்சு அரை படுகிறநாளில் சுட்டெடுக்கப்படுகிற அரைஇஞ்ச் கணத்திலான கம்புமாவு தோசையும்,சோளத்தோசையும்கையகலஇட்லியும்சுட்டெடுத்தகைகளில்பொதி ந்திருந்த சமையலின் மணத்தையும்,ருசியையும்,ஆரோக்கியத்தையும்இன்று பீட்ஸாக்களும்,பர்க்கர்களும்இன்னபிறவையான,,,,,,,ஆகாரங்களும்நமதுஉணவு முறையாக அவசர,அவசரமாக மாற்றி வைக்கப்பட்ட இந்த நாளில் அம்மா, பாட்டி காலங்களில் இருந்த சமையலின் கைமணம் இப்போது காணக் கிடைக் காத அரிய பொருளாக ஆகிப்போனதே அது ஏன் என்பதே இந்த நேரத்தின் வருதமாயும் ,கேள்வியாகவும் இருக்கிறது.

11 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தொடக்கம் முதல் முடிவு வரை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.
எனது பக்கம்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் நண்பரே! பிசாவும், பர்கரும் இடம் பிடித்தாலும் தற்போது ராகியும், கம்பும்ம் சோளமும் உடலுக்கு நல்லது என தலை தூக்க ஆரம்பித்துள்ளன ஆனால் என்ன விலை அதிகமாக......ராகி, கம்பு பர்கர் என்றோ, பிசா என்றோ வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்போதுதான் ராகி ப்ரெட் என்றும வந்துவிட்டதே அதனால்தான்..

”தளிர் சுரேஷ்” said...

இப்போதைய உணவு முறைகள் உடல் நலத்தை கெடுப்பதாக அல்லவா அமைந்துவிட்டது! நல்ல பகிர்வு! நன்றி!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
எங்களது ஊர்ப்பக்கம் கேப்பை வடை
எல்லாம் விற்றார்கள்.பின் காலப்போக்கில்
அது காணாமல் போனது அல்லது குறைந்து போனது.

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

அம்மியில் பொருட்களை வைத்து அரைப்பதை தாங்கள் விவரிக்கும்போதே,
இன்று இந்நிலை இல்லையே என்று மனம் ஏங்குகிறது.
துரித உணவை உண்டு, நோய் நொடிகளையும் துரிதமாகவே பெற்று வருகிறோம்
அருமை நண்பரே

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

அம்மியில் அரைத்துச் சாப்ப்பிடுவதில் இருந்த ஒரு சுவை இப்போது இல்லையே....

விச்சு said...

தங்களின் ஆதங்கம் புரிகிறது. இது காலத்தின் மாற்றம். மறுபடியும் பழையகாலம் வந்து கொண்டிருக்கிறது.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/