6 Nov 2014

கிடுகு,,,,,,,

அந்த பத்து ரூபாயெல்லாம் எந்த மூலைக்கு/ஒரு டீ ஆறு ரூபா,ஒரு வடை இரண்டரை ரூபாய்,நாவுக்கு கொஞ்சம் ஆசை வந்து இன்ன மும் ஒரு வடை சேர்த்து சாப்பிட்டு விட்டால் 5+6=11 ஆகிப்போகிறது.
அந்தப்பத்துடன்அதிகமாகஒருரூபாய்நாம்தான் கொடுக்க வேண்டியி ருக்கும்.

எங்களதுஅலுவலகத்தின்உள்ளூர்கிளைக்குஒருவேலையாகசென்றிருந்
தேன். நான் மற்றும் எனது இரு சக்கர வாகனத்துடன்/

காலை பத்து மணிக்கு செல்லவேண்டியநான்எட்டுமணிக்கெல்லாம் சென்று விட்டேன்.

வாசலை ஒட்டி ஒன்று ,இரண்டு என எண்ணினால் வருகிற முப்பத் திரண்டு படிக்கட்டுகளை கடந்து மேலேறி சென்றால் காட்சிப்படுகிற அலுவகத்தை அன்றாடம் சுத்தம் செய்பவள், நல்ல மனுசி/

அம்மா பெண் இரண்டு பேருமாய் சேர்ந்தே வருவார்கள் வேலைக்கு. இன்று அவளைக்காணோம்.

“என்னம்மா,ஒங்கம்மாவேலைக்குவரலையா”?என்றகேள்விக்கு“இல்ல சார்,கெளவிமூணுமாசமா சாதனையா முடியலைன்னு படுத்துரு ச்சி, நாந்தான் கெடந்து இப்பிடி அல்லாடுறேன்.எனக்கும் ஒடம்பு அப்பிடி க்கப்பிடித்தான்சார்இருக்கு.என்னசெய்ய,ஏதோகஞ்சிகுடிக்கனுமில்ல,  பொழப்ப ஓட்டனுமில்ல”என்கிறாள்.

அவள்குடியிருக்கிறபகுதிஇங்கிருந்துஇரண்டு கிலோமீட்டர் தொலை வில்இருக்கிறது.

சின்னதாக ஒரு குடிசை.கோவில் இடத்திலிருந்த தீப்பெட்டி அளவி லுள்ள வீட் டில் அவள்,அவளது அம்மா இரண்டு தம்பிகள் என நால்வ ரும்அந்தவீட்டுக்கே உரிய பண்ட பாத்திரங்களும் மற்றும் பாய் தலை யணைகளுடன்/
“சின்னவன் எங்கனையும்,உருப்படியா வேலைக்கு எதுவும் போகல சார்,சும்மாஊரச்சுத்தீட்டுபெறக்கித்தின்னுட்டு திரியுது. பெரிவயன்தா ன்ஏதோஒத்தாசையாஇருக்கான்.ஒடம்புசரியில்லாததாலகல்யாணம் ஏதும்பண்ணிவைக்கமுடியல.என்னையப்பத்திதான்ஒங்களுக்கு தெரியுமேசார்,ஒடம்புசரியில்லாதவன்னு”எனசொன்னவளுக்கு இன் றைக்கெல்லாம் இருந்தால் முப்பது வயதிற்குள்ளாக இருக்கலாம்.

பூஞ்சை உடல்,சிவந்த மேனி, முகம் ஊதி, தலை பெருத்து உதடுகள் காய்ந்து வெடிப்புற்றுகண்களில் ஈரமற்றுப்போய் ஒல்லியாய் கைகா லெல்லாம் சூம்பிப் போய் நின்றாள்.மழைக்கு நனைந்த கோழியை போல/
அவளுள்குடிகொண்டுஅவளைமெல்ல,மெல்லஅரித்துதின்றுகொண்டி
ருந்ததுஎதுவெனதெரியவில்லை.ஆனாலும்அவள்நோய்வுற்றிருந்தா ள் பாவம் என அவளது தோற்றமே முன்னறிவித்து சென்று விடும்.

காலையில்எட்டுமணிக்கெல்லாம்அலுவலகவாசலுக்குவந்து விடுவாள்.

அவளால்அலுவலககதவைதிறந்துசட்டரைதூக்க முடியாது. யாராவ து சாலை யில் செல்கிற பாதசாரிகள் அல்லது பக்கத்து ஆஸ்ப த்திரியின் வாட்ச் மேன் எனஇவள்மேல் இறக்கம் கொண்டு கதவை திறந்து விட்டால் மட்டுமே உண்டு.

இரும்புசட்டர்ரோலிங்க்கதவுஅதுதிறந்துமேலேதூக்கிவிடவேண்டும். பூட்டும் போது யாராவது பூட்டிக்கொள்ளக்கூடும்.

மற்றபடிஇப்படித்தான்உள்ளூரில்இருக்கிறஅலுவலகஊழியரிடம்உள்ள சாவி யை வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்து விடுவாள்.

ஐந்து வருடங்களுக்கு முன் அவன் அங்குபணியாற்றிய போது தெரி ந்துகொண்டதுதான்,அவளைப்பற்றியும்,அவளதுகுடும்பத்தைப் பற்றி யுமாய்/

அவர்கள் பரிதாபம் கண்டு அவ்வப்போது கையில் பத்து,இருபது என கொடுப் பதுண்டு.

அந்தக் கொடுத்தலில் அவளது கஷ்டம் தீர்ந்து விடப்போவதில்லை. அல்லது அவளது பிரச்சனைகள் சரியாகிவிடப்போவதில்லை.

ஆனாலும் அவனுக்கு ஒரு உந்துதல் அல்லது அவர்களின் பால் ஏற்ப ட்டகளி விரக்கம்.கொடுத்து விடுவான், “போகும் போது டீசாப்பிட் டுக் கங்க” என/

"சார் சம்பளத்த கொஞ்சம் கூட்டித் தரச் சொல்லுங்க சார். கட்டு படியாகல, மாசத்துக்கு வெறும் 450 ரூபாய வச்சிக்கிட்டு என்னதான் பண்ணமுடியும் சார்" என்பாள்.

“யம்மாஎன்னாலமுடிஞ்சதுஇதுதாம்மா,அப்பப்பஅஞ்சுபத்துகுடுத்துக்
கிடலாம்,ஏதாவது ஆத்திர அவசரம்ன்னா நீங்களும் கேட்டுக்கிறலா ம். நானும் குடுத்துக் கிரலாம்.

இதத்தவுரஇதுலஒண்ணும்செய்யமுடியாதஆளாய்ருக்கேம்மா”என்பான்.

இத்தனைக்கும்வாரா,வாரம்வெள்ளிக்கிழமையானால்அலுவலகபரப்பு
முழுவ தையும் தண்ணீர் விட்டு அலசி விடுவாள். மேஜை நாற்காலி களை சுத்தமாக துடைத்து வைப்பாள்.

அவனும்சகஊழியர்கள்எல்லோரும் வருவதற்குள்ளாக அலுவலகம் பளிச் சென இருக்கும்.

அப்படியெல்லாம்வைத்திருந்தஉழைப்பிற்குசொந்தக்காரிஅதேவேலை
யிலும்,அதேசம்பளத்திலுமாய்இருந்த நாட்களில் அவன் அந்த அலுவ ல கத்திலிருந்து மாற்றாலாகி வேறுஅலுவலகத்திற்குசென்று விட் டான்.

அதன் பின் இன்று காலை ஒரு வேலையாக இந்த பக்கம் வந்திருந்த அவன் உள்ளூர் அலுவலகத்தின் பூட்டப்பட்டிருந்த கதவின் அருகில் அமர்ந்துயாராவது வருவார்களா,கதவை திறந்து தருவார்களா”?என் கிற எதிர்பார்ப்புடன் இரு ந்த போதுதான் அவன் சென்றான்.

கதவை திறந்து கொடுத்து விட்டு அவளது கையில் டீ செலவுகென பத்து ரூபாய் கொடுத்து விட்டு நகரும் போதுதான் கவனிக்கிறான்.

பாதாளச் சாக்கடைக்காய் தோண்டப்பட்டு இன்னமும் சரிபண்ணப் படாமல் இருக்கும் சாலையை/

14 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை அண்ணா... வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

மேலே உள்ள செம்மறியைப் பார்த்து ஓடி வந்தேன். :-)
கதை நன்றாக இருக்கிறது. செம்மறிக்கும் கதைக்கும் என்ன தொடர்பு!! எதையாவது படிக்கத் தவறிவிட்டேனா!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
தங்களின் தனித்துவ எழுத்தில் அருமை

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இமா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மற்ற்படி கதைக்கும்,செம்மறிக்கும்
ஏதும் தொடர்பு எல்லாம் இல்லை,
ஒரு உருவகப்படுத்திப்போடுவதுதானே?
படங்கள்/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவில் இணைக்கும் படம் எல்லாம் எங்கிருந்து எடுக்கிறீர்கள் சார்...?

திண்டுக்கல் தனபாலன் said...

தளத்தின் அமைப்பை மாற்றி விட்டீர்கள்... அதனால் தமிழ்மணம் இல்லை... இணைத்து தருகிறேன்...

KILLERGEE Devakottai said...

நல்ல பதிவு நண்பரே,,,

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
தமிழ் மணம் இணைக்க வேண்டும்,
உங்களது உதவிக்கும் நன்றி சார்/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்க சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

படமெல்லாம் எடுப்பது கூகுளிலிருந்துதான்.
திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி,வணக்கம்/

Yaathoramani.blogspot.com said...

மிகவும் ரசித்துப் படித்தேன்
தலைப்பும் முடித்த விதமும்
ஏனோ அதிகம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்