புது படம் அது. நாளைக் காலை ரீலீஸ். தமிழகத்தின் முண்ணனி வரிசையில்
இருக்கிற கதாநாயகன் நடித்த படமது. தியோட்டர் முன்கூடியிருந்தார்கள் ரசிகர்கள்.
நன்றாகயிருந்தால் அவர்கள் அனைவருக்கும் 20பதிலிருந்து 30ற்குள்ளாக இருக்கலாம் வயது.
பரவாயில்லை.எந்த வேற்றுமைகளற்றும் இப்படி ஒன்றாக் கூடி பணிபுரிய வைத்திருக்கிறது இந்த ரசிகர் மன்றம் அவர்களை .
வீட்டில் ஒரு குடம் தண்ணி
எடுக்க மறுக்கிறவர்கள் கூட இங்கு வந்து தன் மனதில் வரைந்து ஆதர்ச புருசனாய்
ஏற்றுக்கொண்ட தன் கதாநாயகனுக்காய்
இப்படிபழியாய்கிடப்பதுஒருவிதத்தில்ஆச்சரியம்ஊட்டினாலும்,இதுமாதிரியானசெயல்பாடுகளில்ஒருவிதத்தில்வேற்றுமைமறந்தஒற்றுமையிலிருக்கிறார்கள்எனசந்தோசப்படாமலிருக்கமுடியவில்லை.
அது அந்த நடிகரின் பால் ஏற்பட்ட
ஈர்ப்பு மனோபான்மையா அல்லது இப்படி எதிலாவது ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டு பணிபுரிவதில் இருக்கி ற
ஆர்வமாதெரியவில்லை.
கூடியிருந்த அனைவருமே ஊதாக்கலர் ஜீன்ஸ்,அதற்கு ஏற்ற கலரில் சட்டை. அல்லது டீசர்ட்,தலை நிறைந்த முடி, ஸ்டைலான பார்வை தங்களைஒழுங்கு படுத்தி கலக்கலாய் காண்பித்துக்கொண்டார்கள்.
அவர்களது பெயருக்கு முன்பாகவோஅல்லது பெயருக்கு பின்பாகவோ கதா நாயகனின் பெயர் ஒட்டி நெசவிடப்பட்டுத் தெரிந்தது.
அதில் அவர்களுக்கிருந்த உலக சந்தோசம் வேறெதிலும் இல்லை எனக்கூட
சொல்வார்கள்கேட்டால்.ஆனால்யாரும்கேட்பதுதான்இல்லை
நீண்டு கருத்த ரோடு.ரோட்டின்இரண்டு புறமும்கட்டியிருந்த பிளாட்பாரத்தின் ஓரம் அமர்ந்திருந்த
கட்டிடங்களின் முன்பாக விரிக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் கதாநாயகன் அழகு
காட்டிக் கொண்டிருந்தான் பல கோணங்களில்/
பத்துக்குப்பத்து,பத்துக்குபணிரெண்டு,எட்டுக்குஆறு,,,,,,,,,,,,,,என
பல்வேரான அளவுகளில் கதாநாயகன் குடிகொண்டிருந்த பேனர்களை நான்கு பக்கமும்
மடிக்கப்பட்டிருந்தசட்டங்களில்ஒட்டி அதற்கு கைபிடியாக இரண்டு மூங்கில்க ளை
பிணைத்துத் தைத்து தூக்கி ஊணிக் கொண்டிருந்தார்கள்.
பரபரப்பாகவும்,பேச்சும்,சிரிப்பும்,சிகெரெட் புகையாகவும் கும்பலாய் ஊர்ந்து
கொண்டிருந்த ரசிகர்ளிடம் தயக்கமாய் வந்து நின்ற அவர் கேட்கிறார்.
“கூரை வீடு,மழைக்கு ஒழுகுது,இது
மாதிரி பழசு,கிழசுஏதாவதுஇருந்தா குடுங்க தம்பி,ஒங்க பேரச்சொல்லி கூரை
மேல் போட்டுக்கிருவேன்” என்கிறா ர்.
அவரின் கெஞ்சலான
கேட்டல்,ரசிகளின் மௌனப் பார்வை,பரஸ்பரம் இருவ ரின் பார்வை
பரிமாற்றம்,,,,,,,,,,என நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாளைக் காலை
பாலாபிஷகம் பண்ண வேண்டும் என நினைத்து தூக்கி ஊனப்போன பேனரை கழற்றி அவரது
கையில் கொடுத்து விடுகிறார்கள்.
அவர்எல்லோருக்கும் கும்பிடு
போட்டுவிட்டு நகர்கிறார். அவர்செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அனைவரிலும்
தரையில் படர்ந்திருந்த ஈரம் ஏறி கசிந் ததாய் தெரிந்தது.
10 comments:
நல்லுள்ளம் கொண்ட ரசிகர்கள்...
வணக்கம்
அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னமோ போங்க:(((( தலைவர்களும் மாறுவதாய் இல்லை.....இந்த ரசிக ஜனங்களும் மாறுவதாய் இல்லை:((
வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக.
மாறுவார்கள் நிச்சயம் நேற்றைய
தீவிர சினிமா ரசிகனை
இன்று பாருங்கள் அவன் நிலையில்
மாற்றம் இருக்கும்,
மாறிக்கொண்டே செல்வதுதானே எல்லாம்,,,/
வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இப்ப்டியும் ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன?
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.
மனிதர்களில் ஒருசாரார்தானே ரசிகர்கள்.
நேற்ரைய ரசிகனை இன்று
உற்றுப்பார்த்தால் அவனிடம் மாறுதல்
தென்படுவதுண்டு,மன மாறுதலுக்கு
உட்படுபவன் ரசிகனும்தானே/
கற்பனை அருமை..
த ம நான்கு
வணக்கம் மது சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment