ஒன்றல்ல,இரண்டல்ல20ற்குமேற்பட்டஇடங்களிலாய்விழுதுவிட்டுபரந்ததாய் காணப்பட்டதை ஆலமரம்என்பதை தவிரவேறுஎன்னபெயரிட்டுஅழைக்க?
அகன்றுவிரிந்து பரந்த மரமாய் மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளை பரப்பி பூவும் பிஞ்சும் இலையும்தலையுமாய் நிறைந்து நிற்கிற அதன் வளர்ச்சியும் பரப்பும் ஆகுருதியும் காலூன்றி விழுதிறங்கி நின்றஅதன் கம்பீரமும் பார்க்க கண்ணுக்குகுளிர்ச்சியாயும்அழகு பூத்துச்சிரித்துமாய்/
ஒற்றையாய்நிற்பனுக்குத்துணையாய்பக்கவாட்டாய்முளைத்துச்சேர்ந்துகொண் டகைபோல இருபது இடங்களிலுமாய் இருபது விதமாய் பருமன்காட்டியும் தடித்துமாய் தரைஇறங்கிநின்று காட்சிப்பட்டதாய்நின்றிறங்கிய விழுதுகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் காட்சிப்பட்டுக்கொண்டே,,, ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து நின்றது போலும் சுற்றி வளைத்துக்காட்சிப்பட்டது போலவுமாய்/
அவைகளை பார்க்கப்பார்க்க திகட்டாது போலும், அப்படி இருந்தது.ஒன்று குச்சியாய்ஒன்று தடித்து, ஒன்று சப்பட்டையாய்,மற்றொன்றுஉருண்டையாய் எனபலவாய் பரிமாணம் காட்டி நின்றிருந்த விழுதுகளின் மீது பொடிப் பொடி யானசல்லிவேர்களைப்போன்றபக்கவாட்டுச்சிம்புகள்முளைத்துக்காணப்பட்ட வையாய்/அவைவிழுதுகளின்மீதுமுளைத்துப்படர்ந்திருந்ததாஇல்லை,விழுதுக ளை இறுக்கிப்பிடித்துக்காத்து வந்ததா, தெரியவில்லை. அதனிடம் தான் போய் கேட்கவேண்டும் ,மரமே மரமே எப்படி இருக்கிறாய் நீ என்ன செய்கிறாய் அன்றாடங்களில் உன்நகர்வும் வளர்வும் என்ன,எத்தனை ஆண்டுகளாய் இங்கு இருக்கிறாய் நீ,மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளைபரப்பி ஆகுருதியாய் உன்னை நிலை நிறுத்திக் கொண்டது எப்போது?உன்னை கொண்டு வந்து இவ்விடத்தில் பதியனிட்டார்களா அல்லது நீயாக சுயம்புவாய் தப்பிப்பிழைத்து முளைத்துவந்தாயா,பாந்துகிடக்கிறஅத்துவானவெளிகளிங்கிலுமாய்தன்னெழுச் சியாய்முளைத்துக்காணப்படுகிறஉன்னின்அழகுபிறரால்ஈர்க்கப்பட்டிருக்கிறதா? இல்லை கண்டுகொள்ளப்படமால் விடப்பட்டிருக்கிறதா எனக்கேட்க வேண் டும்.
தடித்த இலைகளின் மறைவில் நின்று சிவப்பாகிய பழங்களை தின்ன வருகிற பறவைகளைஎன்னசொல்லிக்கொஞ்சுகிறாய்அல்லதுஎன்னசொல்லிஉன்னில் அடைகாத்துக் கொள்கிறாய் நீ,என அதைப்பற்றிநினைத்த கணம் அதனருகில் சென்றுபார்க்கவும் அதனுடன் மனம் போன போக்கில் உறையாடவுமாய் வந்து விடுகிறதுஆசை.மனம் முளைத்து கிளர்ந்து விட்ட ஆசையை உடனே செயல் படுத்தி விடவேண்டும் என்கிற ஆசையினால் மரத்தைச்சுற்றிப்பார்க்கும் ஆவ லில் அதன் அருகில் போய் வாஞ்சை பொங்கபார்த்தும்தொட்டுமாய்உணர்ந்த கணம் உடல் லேசாய் சில்லிட்டுச்சிலிர்த்ததாய்/மண்ணை மூடியும் பசுமை போர்த்தியுமாய்த் தெரிந்த தரை முளைத்துத்தெரிந்த புற்களையும் பச்சைகளை யும் படம் போட்டுக்காட்ட அதனடியிலாய்த்தெரிந்த கரிசல் மண்ணின் கருமை ஈரம்கொஞ்சம்சேர்ந்தாற்ப்போல்நின்றால்பாதங்களினடியில்வேர்விடச்செய்து விடும் போல் பொதும்பி இருந்ததாய்.
நின்றுபார்த்தான்,தொட்டுப்பார்த்தான்.வருடிப்பார்த்தான்,அதன்நிறமும் பட்டை படர்ந்திருந்தமேனியும்பார்க்கநன்றாகவேஇருந்தது,அப்படியேசுற்றும்முற்றும் பார்த்தவனாய் அதன் அடியில் குனிந்து போய் முத்தமிடுகிறான், இன்று கிளம் பினால் மரத்தை நெருங்கஒரு நாள் ஆகும் போலிருக்கிறதேஎன்கிறஎண்ணம் சுமந்தவனாய் இறங்கிச்செரிந்த விழுதுகள் அனைத்தையும் தாண்டி மரத்தை நெருங்குவதுசற்றே கஷ்டமாகத்தான் இருந்தது,நெருங்கி விட்டான் விடாமல்/ அந்த நெருக்குதலே அந்த நேரத்தில் மிகபெரிய ஆறுதலாயும் மிகப்பெரிய மிகப் பெரியதொரு தேவைமிக்கதாயும்/அது ஏனோ அப்படியாய் ஒரு மனோ நிலைசமயாசமயங்களில்வாய்த்துப்போகிறதுதான்,
அந்தஆல்தான்இவன்கண்ணில்பட்டதாய்முதல்முதலாக/நகரத்திலிருந்துஇருபது அல்லது18கிலோமீட்டர்கள்தாண்டிஇருந்தஅந்தகிராமத்திற்குள்ளாய்நுழையும் போது/
மிகச்சரியாகவந்துவிடுங்கள்பத்துமணிக்குதுவங்கிவிடும்நிகழ்ச்சி.எனசகோதர இலக்கியஅமைப்பின்அழைப்புதவிர்க்க முடியாததாகிப்போனசுபமுகூர்த்தமல் லாதஒருஞாயிறின்காலைவேளையாய்விருதுநகரிலிருந்துகிளம்பும்போது மணி காலைபத்தாகியிருந்தது.
நல்லவேலைஜேம்ஸ் டீக்கடையில் தோழர் நின்றிருந்தார், கறுப்பு வெள்ளைச் சட்டையில். அதுவும் பார்க்கஅவருக்குநன்றாகவே இருந்தது, பொது நலச்சிந்த னைகளுக்குதன்னைத்தத்துக்கொடுத்துவிட்டமனிதராய்அவர்,நல்லபழக்கமும் இனியஸ்நேகமும்,படரும்தோழமையும்கொண்டவர்,பரஸ்பரம்வணக்கங்களை பரிமாறிக்கொண்டபின்னாய்கிளம்புகிறார்கள்.இருவருமாய்ஒரேவண்டியிலேறி. அவர் வண்டியின் சாரதியாயும் இவன் பின்னமர்ந்து செல்கிறவனாயும்/(நல்ல சாரதி நல்லப்பின்னமர்வுகொண்டவன் அடப்போயா,வண்டிக்கு வாயிருந்தால் இப்படிச் சொல்லியிருக்கலாமோ,,,)
இங்கு வண்டி என்பதை இருசக்கரவாகனம் எனபொருள்படுத்தி அழைக்குமாறு கேட்டுக்கொண்டவாறேகாற்றைக்கிழிக்காமல்மெதுவாகவேபயணப்படுகின்றனர் ஒரு மரத்துப்பறவைகள் இரண்டு ஒன்று சேர்ந்துபயணிக்கிறதெனபறந்து விரிந்த காற்று வெளியிடம் தகவல் சொல்லிக் கொண்டு. சொல்லிக் கொண்டு போனதகவலும்அப்படிஒன்றும்பிரயோஜமற்றுப்போய்விடவில்ல.நன்றாகவே இருந்தது.பச்சைசுமந்திருந்தகாடுகளைப் பார்த்தவாறே செல்ல.
ஞாயிற்றுக்கிழமைக்குஅப்படிஒருகுணம்உண்டாஎன்ன,தெரியவில்லைசரியாக, இருப்பினும்அப்படித்தான்போலும்என்பதுபோலாய்நினைத்துக்கொண்டும்மனச் சமாதானம்கொண்டவனாயும்ஆகிப்போகிறபோதுஞாயிற்றுக்கிழமைகள்சோம் பல்களையும்அல்லது தோல்தடித்ததனத்தையும் விட்டுவிட்டு செல்வதாகவே இவன் நினைத்துக்கொள்வதுண்டு,
வெகு காலத்திற்கு முன்பிருந்து. அது இன்றும்அப்படித்தான்ஆகிப்போனதென ருசுவாகிப்போனதாய் காட்சிப் பட்ட வேளைகாலைமணி8.00, உடல்போர்த்தி யும் சோம்பல் ப்ளஸ் குளிர் ப்ளஸ்,ப்ளஸ்,,,,,,,,என ப்ளஸ்களாய் நிறைய சேர்த்துக் கொண்ட கூட்டல்களின் தொகை எட்டு ப்ளஸ் ஆகிப்போன வேளை எழுந்து கொண்ட அவன் முதலில் முழித்ததுஒரு டம்பளர் டீயின் முகத்தில் தான், இது தான் பிரச்சனையாய் இருக்கிறது இப்போது, மனைவி மக்கள் கூட இருக்கிற நண்பர்களும் கூட சொல்கிறார்கள் சமயத்திலும் அடிக்கடியுமாய்.
டீயைக் குறையுங்கள் என ,இவன் வழக்கமாய் போய் வைத்தியம் பார்க்கிற டாக்டர் கூடச்சொல்லி விட்டார்,டீ மட்டும் இல்லை.உங்களது பழக்க வழக்கங் களையேஅடியோடுமாறிக்கொள்ளுங்கள்இல்லையெனில்சிரமம்தான்,என்றார்,
ஆனாலும் பழகிய பழக்கம் விட்டுவிடமுடியவில்லை எளிதாக.ஊரே தூங்கிக் கொண்டிருக்கிறபணிரெண்டுமணிக்குஎழுந்தமர்ந்துஏதாவதுபடித்துக் கொண்டி ருக்கவுமாயும்அல்லதுஏதாவதுடைப்பண்ணிக்கொண்டிருக்கவுமாயும்ஒன்றும் இல்லையென்றாலும்கூடஏதாவதுநினைவுடன்திறந்தவாய்மூடாமல்தொலைக் காட்சியில்மனம்பிடித்தபாடல்களைக்கேட்டுவிடவோமுடிந்துவிடுகிறதுதான்.
கடும் குளிர் கடும்வெக்கை அல்லது தூக்கம் பிடிக்காத இரவுகள் எல்லாவற் றையும்இப்படியாய்கடத்தி வந்து விடுகிற இவனை டீப்பிடித்தாட்டுகிற நேரங்க ளில் இப்படியாய்வந்துவிழுகிறவார்த்தைகளையும் பழக்கத்தையும்மீறாமுடி யாதவனாயும்சேர்த்துவைத்துக்கொண்டவனாயும்டீக்குடித்துக்குளித்துமுடித்து விட்டு அவசர அவசரமாய் மனைவி கொடுத்த அன்புடனான பூரியைசாப்பிட்டு விட்டுகிளம்புகையில்நேரம்அவ்வளவுஆகிப்போனதைதவிர்க்கமுடியவில்லை தான்,
நகரம்நகரம் சார்ந்தவாழ்க்கை அது சார்ந்த நகர்வு அது சார்த்த இருப்பு என்கிற கனமானஇருஇருப்புக்குள்ளாய்இருத்திப்போய்விட்டவாழ்க்கையில்இப்படியா ய்கிராமத்துமண்ணையும்அதுகாத்துநிற்கிறமரத்தையுமாய்பார்க்கமுடியவில்லை தான்,
சென்ற மாதம் ஒரு வேலை நாளில் விடுப்பெடுத்துக் கொண்டு அம்மாவைப் பார்க்ககிராமத்திற்குப்போனபோதுகண்மாய்க்கரையில்நின்றஇச்சிமரங்களைப் பார்த்ததுதான்.
கண்மாயின் கரையே ரோடாக இருப்பதால் அவ் வழியாகத்தான் போக வேண் டும் .பஸ் போகிற சாலையாயும் அதுவாகவே காட்சிப்பட்டு/ முன்பெல்லாம் ரோடு அகலப்பட்டு இருக்கும்,நிறை கண்மாயில் தண்ணீர் கிடக்கும் போதும் மழை தண்ணீராய் வானம் பொத்துக் கொட்டிய அடை மழை காலங்களிலும் கூட ரோடு இவ்வளவு அரிப்புக்குள்ளாகி குறுகிப் போனதில்லை.இப்பொழுது ரோட்டில்இருசக்கரவாகனத்தைஓட்டிச்செல்வதற்கேலேசாககைநடுங்குகிறது. பதட்டப்பட்டுப்போகிறது மனது,
சென்ற முறை ஊருக்குச்சென்றிருந்த போது இதே கண்மாய்க்கரை மேட்டில் தான் மாப்பிள்ளைகண்ணபிரானைப் பார்க்க முடிந்தது.மாப்பிள்ளை என்றால் சொந்தமெல்லாம் இல்லை வேற்று ஜாதிகளுக்குள்ளாய் உறவுமுறைகளை முடிந்துவைத்துக்கொண்டிருக்கும்கிராமங்களில்இவனதுகிராமமும் ஒன்றாய்/ அதில் இவனிடம்ரத்தமும்சதையுமாய் அவனது ஒட்டிகொண்ட பழக்கங்களில் மாப்பிள்ளைகண்ணபிரானும்ஒருவனாகிப்போனான்,அன்று இவனும் இவனது மனைவியுமாய்த்தான் சென்று கொண்டிருந்தார்கள்.இரு சக்கரவாகனத்தை ஓட்டுபவள் அவளாகவும்,பின்னால்அமர்ந்து கொண்டு செல்பவன் இவனாகவு மாய் இருந்தான்,
நடுகண்மாய்க்கரையில்இருந்தமூன்றாவதுஇச்சிமரம்அருகே செல்லும் போது தான் கண்மாய்க்குள் இருந்து வந்த கண்ணபிரான் அடி என்ன மாப்புளை இது எங் தங்கசிய வண்டிய ஓட்டவிட்டுட்டயா,நல்ல ஒடம்பு நோகாத ஆளுயா நீயி,ஒழுக்கமா யெறங்கி வண்டிய நீயி ஓட்டப்பாரு,ஏம்மா தங்கச்சி அவந்தான் சொன்னான்னாநீயும் அவன் பேச்ச கேட்டுக்கிட்டு வண்டிய ஓட்டிக் கிட்டு வர்ர தாக்கும்அவனபின்னாலஒக்காறவச்சிக்கிட்டு யெறங்குமா மொதல்ல, யெற ங்கி அவன ஓட்டச்சொல்லி நீயி பின்னாடி ஒக்காந்துட்டுப்போ,,,, எனச்சொன்ன வனிடம் இல்ல மாப்புள அவதான் ஆசைப்பட்டா,என எத்தனை சொல்லியும் கேட்காதவனாய் சென்று விடுகிறான்,காட்டுக்குப்போகிறேன் மாட்டுக்கு புல் புடுங்க என.
அவனது மகளை கூடப்பிறந்த அக்காவின் பையனுக்குத் தான் கல்யாணம் செய்து கொடுத்திருந்தான்,அக்காவும் அதே ஊர்தான்,அக்கா வாக்கப்பட்ட ஊரில் அக்காவின் பையனுக்கே பெண்னைக்கொடுக்காவிட்டால் என்ன என ஊராரும் இவனைப்போல பலர் சொல்லியும் கூட கேட்கவில்லை அவன், எதுனாஒண்ணுன்னாபேசிக்கிறலாம்.வாதிச்சிக்கிறலாம்.அக்காஇருக்குபாத்துக் கிரும் பத்தரமா,என்கிறஅவனது சொல்கட்டே அவனிடம் திருமண விஷய மாய் பேசியவர்களை ஒன்றும் பேச விடாமல் வாய்பொத்தியிருக்கச் செய்தது.
அக்காவின் பையன்,மகளது விருப்பம் இன்னும் இன்னுமாய் இரண்டு குடும் பங்களுக்குள்ளுமாய் நிறைந்துபோயிருந்தஆசை எல்லாம் கைகோர்த்திருந்த ஒரு நிறை நாளில்மாப்பிளையின்அக்காபையனைக்கூட்டிக் கொண்டு வந்து விட்டாள்.சம்பந்தி வீட்டில் கை நனைக்க.தம்பி வீடுதானே,தம்பி பெண் தானே, சம்மதித்தால் கூட்டிக்கொண்டு போய் விடுவோம் இப்பொழுதே என்கிற முடிவுடனானபேச்சைமடியில்கட்டிக்கொண்டுதான் வந்திருந்தாள். என்னதான் உரிமைஇருந்தாலும்அதுக்காகஇப்படியெல்லாம்பண்ணக்கூடாது.என்கிற சொந்த பந்தங்களின் பேச்சு போட்ட அணைதாண்டி இரண்டு மாதங்கள் கழித்து நடந்ததிருமணம்ஒருவருடத்தில்மாப்பிள்ளைகண்ணபிரானைதாத்தாஆக்கியி ருந்தது.
நரை கூடிப்போன ஆளாக மாறிப்போன அவனது வாழ்நாட்களின் நகர்வுகள் பெற்றகட்டிக்கொடுத்தஊருக்குப்போய்பார்ப்பதும்வருவதும்,பிள்ளைகளுக்கும் பேரனுக்குமாய்ஏதாவதுபண்டங்கள்வாங்கிப்போவதுமாய்எனஉருமாறிப்போனது.
காடுகரைவேலைசம்பாத்தியம் என்பதையெல்லாம் மறந்தே போனான் கிட்டத் தட்ட/அவனது சொந்த ஊர் கிட்டத்தட்ட மகளைக்கட்டிக்கொடுத்த ஊர் போல வே ஆகிப்போனது,என்ன இது இப்பிடி செஞ்சா எப்பிடி,ஒன்னைய நம்பித்தான கட்டிக்குடுத்தோம் புள்ளைய,இப்ப கைய விரிச்சா எப்பிடி, என்றவர்களிடம் என அக்காவிடம் அவன் கேட்டபோது நீயிதான பாக்குறயில்ல,ஓம்புள்ள லட்ச ணத்த,மட்டுமருவாதியில்லாமபேசக்கத்துக்கிட்டா,ஒழுக்கம்இல்லமொதல்ல, இதெல்லாம்கூடவந்துரும்காலப்போகுலன்னுநெனைச்சிக்கிட்டுருந்தவேலை யிலகுடும்பத்துக்குள்ல நிக்காத ஆளாப்போயிட்டான்னு தெரிய வருது மூணா வது ஆள் மூலாம.இப்பத்தான் ஒரு கொழந்தைய கையில வச்சிக்கிட்டு இருக் குற வேளையிலஇப்பிடிமோப்பம்கண்டுதிரிஞ்சான்னா என்ன செய்ய சொல்லு, நானு ஓங்கிட்ட சொல்லக்கூடாது சங்கடப்படுவ,பெத்தவன் மனசு புண்ணாகிப் போகும்ன்னுஒன்னும்சொல்லாம இருந்துட்டேன், நீயீ வாரண்னைக்கி மட்டும் பேசாமஇருக்காவாலச்சுருட்டிக்கிட்டு,நீயி அங்கிட்டுப் போன தும் ஆரம்பி ச்சிருறா பாத்துக்க,ஏங் பையன் ஒரு வாயில்லா பூச்சிஅவஎன்னசொல்றாளோ அதான் வேத வாக்குன்னு இருந்து பழகிட்டான்,ஒரு வேளை அவன் செய்யிற கொத்தனார் வேல,அவன் அழுக்காத்திரியிறது எதுவும் பிடிக்கலையோ என்ன வோ,,,,,,எனகண்ணபிரானிடம் அவனது அக்கா சொன்ன ஒரு மாதம் கழித்து மகள் தீ வைத்துக்கொண்டுஇறந்துபோனாள் கண்ணபிரானின் மகள்.
இவனும் போயிருந்தான் அவனது மகளை மயானத்திற்கு கொண்டு செல்லும் போது/இவனுக்குச்சொல்லிவிட்டிருந்தான்அவன்.அலுவலத்தில்போய்அப்பொ
ழுதான்பையைஇறக்கிவைத்துவிட்டுநிமிர்கிறான்,செய்திவந்துவிட்டது, இவன் போனதும் அழுதான் இவனது தோளில் சாய்ந்து கொண்டு, என்ன சொல்லியும் தேற்றமுடியவில்லை இவனால்/விட்டுவிட்டான் அழுகட்டும் என/ஆற்றாது அழுத கண்ணீராய் மயானம் வரை கண்ணீர் குளமாய் வந்தவன் மயானத்தில் வந்து ஒத்தப்பொண்ணப்பெத்து இப்பிடிதீக்கு தின்னக் குடுத்துட்டேனே” என மகளின் சடலம் வைக்கப்பட்டிருந்த தகன மேடையின் மேல் போய் விழுந்து விட்டான், அன்று அப்படி விழுந்தவனை ஊருக்குப் போகும் போது இச்சி மரத் தடியிலாய்பார்த்தது இன்றுதான். இந்த ஆலமரத்தைப் பார்க்கையில் ஏனோ அவனது ஞாபகம் வந்து போவதாய் /
14 comments:
tha.ma 2
மெல்ல மெல்லப் படர்ந்த சோகம்
முடிவைப் படிக்கையில் மொத்தமாய்
மனதை ஆக்கிரமித்துக் கொண்டது
மொத்தத்தில் தங்கள் பாணியில் சொன்னால்
மனதைக் கவர்ந்ததாய்.....
மனம் கனத்தது...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்கருத்துரைக்குமாக/
வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி வாகளிப்பிற்கு சார்/
அருமை வாழ்த்துகள்
நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்
வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும் வாழ்த்திற்குமாய்/
பலநேரங்களில் ஏதேனும் பொருட்கள் பழையதை ஞாபகப்படுத்துவதாய்.. ஆனாலும் சோகம்தான்.
சோகத்தை தாங்கள் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது.
வணக்கம் விச்சு சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கஜம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
த ம மூன்று
நன்றி வாக்களிப்பிற்கு சார்/
Post a Comment