ஒரு வாய் சோற்றுக்குத்தானே இந்தப்பாடு,இத்தனை ஓட்டம்?
காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகிறவரைநகர்கிறஒவ்வொருவரின் நகர்வும்,அசைவும் உழைப்பும் அதற்காகத்தானே?
தஞ்சாவூரில் போய் தனியாளாய் இருந்து உடல் நோயால் சிரமப்பட்டதும்,ராம நாதபுரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டபோதும் இந்த சோற்று வாயின் மூலத்திற்குத்தானே?
கைகட்டி, வாய்ப்பொத்தி, வணக்கம்சொல்லி, பல்லிளித்து, அவமானப்பட்டு
கூனிக்குருகி,,,,,,,,,என எத்தனை எத்தனையானவைகளை (நாம் வேலை பார்க் கிற அலுவலகங்களிலிருந்து சின்னகாசாப் போடுகிறபையன் வரை)நெஞ்சி லும் மாரிலும்,முகத்திலும்,முழுஉடலிலுமாய்தாங்கிஇடம்,பொருள், ஏவல்பார் த்து அனுசரித்து,வளைந்து நெளிந்து மனம் ஒப்பாத விஷயங்களைக்கூட ஏற்று க் கொண்டு முனை மழுங்கி மொன்னையாய் வாழ பழகிகொள்வதின் உள் ளுள்“சோறு”என்கிறபதம்கண்டிப்பாகஅடைபட்டுக்கிடக்கிறதுதானே? கவள ங்களாகவும்,கனமாகவும்/
“ஒருசாண்வயித்துக்குத்தானஇந்தப்பாடுஎன்கிற சொல்லும்,பேச்சும், பொருள் படலும்காதில்கேட்கிறஇடங்களிலும்,கண்பார்க்கிற நேரங்களிலும் நம் ஓட்டத் தையும்,உழைப்பையும் பார்க்கிற வேலையையும் சம்பாதிக்கிறதையும் மனது சட்டென ஒப்பிட்டுபார்க்கிறது.
அரிசி,பருப்பு,அரசலவு என நீள்கிற மாதாந்திர முதல் நாள் சிட்டைகளின் இதரத்தேவைகளில் வெகு முக்கியமாய் தனது இடத்தை முதலில் வந்து பதிவு செய்து கொள்வது சோறுதானே?
கணவன்,மனைவி,இரண்டுபிள்ளைகள்(உடன்தாய்,தந்தையர் இருந்தால்/
பெரும்பாலும்இப்போதுதான்அப்படிஇருப்பதில்லையே,தாய்தந்தையரை அவர் களது அந்திமக் காலத்தில் தனியே விட்டு விடுவதுதானே காலம் கற்றுத்தந்த உயர்ரக(?/) நாகரீகமாக இருக்கிறது.)என இருக்கிற குடும்பத்தில் மூன்று வே ளைக்கும் பணிரெண்டு தட்டுகள் கழுவ வேண்டும் என்பதுவே கணக்காக இருக்கிறது.இதில்பின்னம்,தசமம்எல்லாம்பின்தள்ளப்பட்டு/பழையசோறிலிருந்து பீட்ஸாவரை அப்படித்தான்/
கையேந்தி யாசகம் கேட்கிறவர்கள் முதல் குளிரூட்டப்பட்ட கார்களில் செல்கிறவர்கள் வரைக்க்கும் எல்லோருக்கும் பொதுவானதாகவே/
என்னயாசிக்கிறவர்களுக்கெனகுடும்பம்இல்லை.குடியிருக்கவீடில்லை. ஆனால் அவர்களுக்கென வயிறு இருக்கத்தானே செய்கிறது.அது ஒரு சாணா கவும் அல்லது சுருங்கிய நிலையில் இருக்கிறதாகவும் இருக்கலாம்.
சாப்பாடு,உணவு,டிபன் இப்படியான எல்லா வகையான உணவுக்கும் மூலமா னதாக சோறே பெரும் உருவெடுத்து நிற்பதாக/
ஒருசாண்வயிற்றில்சோறுமேலடுக்கிலும்,இட்லிஅதன்கீழுள்ளஅடுக்கிலும்,
தோசை,பிரியாணிமட்டன்,சிக்கன்என்கிறவைஅடுத்தடுத்ததனித்தனிகீழ் அடுக்குகளிலும் வரிசைக்கிரமாக அடுக்கப்பட விட்டுவிட முடிவதில்லை.
நன்கு பசி எடுத்து கண்களெல்லாம் பஞ்சடைந்து போன குளிரூட்டப்பட்ட காரில் செல்கிறவருக்கு ஒரு கவளம் பழைய சோறே தேவாமிர்த மாயும், யாச கம் கேட்டுப்பெற்ற உயர் ரக சாப்பாடு யாசகருக்கு சாதாரணமானதாயும்தான் பசி எடுக்கிற நேரத்தில் தெரிவதாக/
அவர்களுக்குமட்டுமாஅது?பாரம் சுமக்கிற உடல் உழைப்புத்தொழிலாளியிலி ருந்து குளிரூட்டப்பட்ட காரில் அமர்ந்து பணிபுரிகிற அதிகாரிகள் வரை இப்படி த் தான் தெரியவும்,காட்சிப்படவும் செய்கிறார்கள்.
அலுவலகம் விட்டு வந்த ஒரு மாலை நேரமாய் வழக்கம் போல ரோட்டோர பாய் கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தேன்.
எப்பொழுதும் சாப்புடுகிற கடைதான்.டீ மாஸ்டரிலிருந்து வடை போடுகிறவர் வரை எல்லாம் பழகியவர்களே/எளிமையின் பக்கம் இருந்த ஈர்ப்பு இந்த டீக்க டையிலுமாக/
ஒரு டீ,வடை(பிரியப்பட்டால் மட்டுமே வடை)கொஞ்சம் வேடிக்கை,,,,,, என சிறிது நேரம் நின்று டீக்குடித்து விட்டு அந்த இடத்தை கடப்பது எனதுமாலை நேர வாடிக்கையாய்/
இந்த வாடிக்கை அன்று மட்டும் தவறுமா என்ன?தவறவில்லை.ஆனால் இடறி விட்டது. காலை மட்டுமல்லஅன்றும் அப்படித்தான் கொஞ்சம் டீயும், வேடிக் கையுமாக இடது கையை மார்மீது கட்டி வலது கையில் டீக்கிளாஸை பிடித்து நின்றிருந்தேன்.அப்படி நின்று டீக்குடிப்பது எனது பொதுவான வழக்கமாகி இருந்தது.
பழகிப்போன எத்தனையோ பொதுப்பழக்கங்களில் புத்திக்குப்பிடித்து செய்கிற விஷயங்களுள் இதுவும் என்னிள்/
கட்டிய கையை எடுக்காமலேயே டீயை குடித்து முடிக்கப்போகிற தருவாயில் வந்த பிச்சைக்காரி தனியாக வந்து விடவில்லை.
தோளில் ஒன்றும் முதுகில் கட்டிய தூளியில் ஒன்றுமாக இரண்டு பிள்ளை களை சுமந்து கொண்டு வந்தாள்.
அது தவிர ஒரு சிறு பையனும்,சிறு பெண்பிள்ளையுமாய் அவளை சுற்றிச் சுற்றி வளைய வந்து கொண்டும்,கையிலிருந்த கர்ச்சிப்பினாலும்,கிழிந்த துணி யினாலும் தரையில் விரித்து,விரித்து விளையாடிவாறுமாய் இருந்தார்கள்.
எண்ணை காணாத தலையும்,அழுக்கான உடலும்,உடை நிறைந்து அப்பிப் போயிருந்த அழுக்குமாய் தெரிந்த அவர்களுக்கு L.K.G,,,U.K.G,,, கிண்டர் கார்டன் அட்மிஷன்,இண்டர்வியூ,செலக்க்ஷன்,படிப்பு,வேலை,குடும்பம்,ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ,தேர்தல் என்கிற இத்தியாதி,இத்தியாதிகளும் சட்டதிட்டங்களும் தெரியுமா,அறிவார்களா அதையெல்லாம் அவர்கள்?
பசியால் கண்களெல்லாம் பஞ்சடைந்து,காதடைத்து,வயிறு பிராண்ட,உடல் படுத்த எண்சாண் உடம்பையும் குறுக்கி யாசகம் கேட்கிறவ ளினதும்,ச ற்றுத் தள்ளி ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த அவளுடன் வந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளின் அந்நேரத்தைய தேவை என்னவாக இருக்க முடியும்?ஒரு கவளம் சோறை தவிர்த்து?
அவர்களுக்குத்தெரியுமா?அதிகாலை மூணுமணிக்கு விருதுநகரில் பஸ் ஏறி மாட்டுத்தாவணியில் பஸ்மாறி திருப்பத்தூரில் காலைக்கடன் கழித்து விட்டு தஞ்சாவூர் சென்று அங்கு வாரம் பூராவும் அனாதை போலான மனோநி லையில் மனைவி மக்களை பிரிந்துஇருந்தமொன்னையானமனோபான்மை/?
பார்க்க கௌரவமான வேலையிருந்தது. தங்குவதற்கு வசதியாய் அறை இருந் தது.செலவழிப்பதற்கு பணம் இருந்தது.சாப்பிடுவதற்கு ஹோட்டல் இருந்தது. இ த்தனை இருந்தும் காலை எழுந்ததும் ஆபீஸ்,இரவு முழுக்க அறை வாசம் தவிர வேறில்லை என வாய்க்கப்பெற்றவனாகஇருந்ததை/
வாரம் முழுவதும் அப்படியிருந்து விட்டு வாரக்கடைசியில் மூச்சைபிடித்து பஸ் ஏறி ஆறரை மணி நேர பிரயாணத்திற்குப்பின் இரவு பத்தரை மணிக்கு வீடு வந்து பிள்ளைகளின் உச்சி மோந்து விட்டு மனைவி கையால் சாப்புடுகிற ஒரு வாய்சோறே அந்நேரத்தேவையாய் இருந்திருக்கிறது எனக்கு/
டீக்கடையில் என்னிடமும்,பிறரிடமும் யாசகம் கேட்டவளின் நிலையும் என து வாழ்நிலையும் பெரும்பாலும் சோற்றை நோக்கியும்,சோறு திரட்டுவதாக வுமே உள்ளது பெரும்பாலும்.
சற்று உள்ளீடாய்போய் பார்க்கையில் ஒருவாராய் சோற்றுக்கும் அதை திரட்டி சேர்ப்பதற்க்காவும் தானே இந்தப்பாடு என தோன்றுகிறது.
7 comments:
உலகமே சுற்றி சுற்றி வந்தாலும்
சொந்த வீட்டில், மனைவி மக்கள் சூழ
வீடடுத் தரையில் படுத்துகிடப்பதன் சுகமே சுகம்தானே
தம1
வணக்கம் கரந்தை ஜெயகுமார் சார்,
நன்றி வருகைக்கும்,.கருத்துரைக்குமாக/
நன்றி வாக்களிப்பிற்கு சார்/
ம்... உண்மை...
ஒரு சாண் வயிற்றுக்காக ஒவ்வொருவரும் படும் பாடு !
வணக்கம் பகவான் ஜி அவர்களே
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment