30 Dec 2014

மணிக்கொச்சம்,,,,,,


 அமர்ந்திருந்தமேடைஅப்படிஒன்றும்பெரிதாயும்பிரமாண்டம்காட்டியுமாய்இருந்
திருக்கவில்லை.ஆனாலும் மனம் பிடித்திருந்ததாய் மேடையின் அகலம் அது தாங்கியிருந்தகம்பிகளின்உருஎனஎதுவுமற்றுதன்தரையில்வெறுமனேபிளாஸ்
டிக் சேர்ப்போட்டு இப்படியாய் அமர்ந்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது.

இவர்கள் இதுவரைக்கும் அமைத்திருந்த மேடையும் இவன் பார்த்திருந்த அரசி யல் கட்சிகளின் மேடையும்இதுவரைபிரமாண்டம் தாங்கியேஇருந்து வந்துள் ளதாய் தென்பட்டிருக்கிறது.அப்பொழுதெல்லாம் இவன் மீட்டிங்க் கேட்க வந்தி ரு ந்த சமயம்மேட்டையைப்பார்க்கவாய்த்ததில்லை.அவ்வளவுகூட்டம், கூட்ட மென்றால்இவனுக்குஅலர்ஜியாகஇருந்தபோதிலும்கூடமீட்டிங்கேட்கவேண்டு ம்என்கிறமுடிவோடுகூடஅல்ல,மீட்டிங்கிற்குவந்திருந்ததலைவரானநடிகரைப் பார்க்கவே வந்திருந்தான்,வந்தப் பிறகுதான்தெரிந்தது, வந்திருக்கக் கூடாது இங்குஎன.அப்படியொருகூட்டத்திற்குள்ளாய்போகலாமாவேண்டாமாஎனயோசி த்துக்கொண்டிருந்தநேரத்தில்போய்விட்டார்கள்.இவனுக்கானால்கூட்டத்தைப் பிளந்துப்போக தைரியமில்லை.இரவு ஒன்பதுமணிக்கெல்லாம் வந்து விட்டார் கள் ,ஏழு மணிக்கெல்லாம் தலைவர் வந்து விடுவார் என்கிற போஸ்டர், தட்டிப் போர்டின் முன்னறிவிப்பை ஏற்று/

இவனுக்கு பழக்கமாகிப்போனது, மீட்டிங் நடக்கிறபொட்டலுக்குபக்கத்து வீதி தானே,அதனால்ஏழுமணிக்கெனபோடும்தலைவர்களின்வருகைபத்துஅல்லது பணிரெண்டுமணிக்கு மேல்தான் நிகழ்கிறது,அதுவே இவனது மனதில் தங்கிப் போனகாரணத்தால்அன்றுலேட்டாகத்தான்வந்திருந்தான்.எப்பொழுதும்தனியாக வருபவன்இன்றுதம்பியுடனும்அவனதுபள்ளித்தோழனுடனுமாய்வந்திருந்தான்.

சுற்றியிருக்கிறகோயில்கடைகள்,மைதானம்அதன்விஸ்தீரணம்,ஸ்தூபி,,,கடை கள்இன்னும்இன்னுமாய்நிறைந்துதெரிந்தமனிதர்கள்எல்லாம்இவன்இதற்கு
முன்கண்டிருந்ததாகவேஇருந்தபோது கூடஅப்பொழுது ஆச்சரியமாய்த் தெரிந் தது, பார்ப்பதற்கு/கூட்டத்தை பிளந்து போய்விட்ட தம்பியும்.இவனது பள்ளித் தோழ னும் எங்கு இருப்பார்கள் இந்தக்கூட்டத்தில் அவர்களை எப்படிப்போய் தேட, எங்கு போய் கண்டு பிடிக்க?வீட்டிற்குத்தெரிந்தால் தோலை உரித்து தொங்கப் போட்டுவிடுவார்கள்.முடிந்தால்கொஞ்சம் உப்பையும் சேர்த்துத் தடவி விட்டு விடுவார்கள்.

அரை முழ உயரத்திற்கு நீளமாய் உருட்டப்பட்டஒல்லியான பொட்டலத்தில் நின்ற பத்து அல்லது பதினைந்து கடலைப்பருப்பை விலை கொடுத்து வாங்கி தின்று கொண்டே தேடியபோதுவந்துவிட்டார்கள் கழுகுக்கு மூக்கில் வேர்த் தது போலாய்/ அப்படி யெல்லாமா வேர்க்கும் கழுகுக்கு?பெரியவன் ஆன பின் கழுகு தங்கும் இடத்திற்குப்போய்ப்பார்க்க வேண்டும்,அல்லது யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.

நல்லவேளையாய் தோல் உரிப்புஉப்புத்தடவல் எல்லாம்இல்லை.வந்தவர்கள் இரண்டுபேரும்சொன்னார்கள்,நடிகர்வரநேரமாகுமாம்வாபோகலாம். நேரமாகி ப் போனது,அம்மா தேடுவார்கள்,கூடவே இவனதுஅம்மாவும் சேர்ந்து என அவன் சொன்ன போது இன்னொரு கடலைப் பருப்புபொட்டலம் வாங்கிக் கொண்டுவீட்டிற்குப்போனார்கள்.வீட்டில்இதுபோல்அடிக்கடி நடப்பதுதான்என ஓரளவுக்கு மேல் தேடாமல் விட்டு விட்டார்கள். இருந்தாலும் இத்தனை மணிக்குள்ளாய் வீடு போவது ஒரு தர்மம் என இவனாய் முடிவுபண்ணி போய் விடுவான் அத்தனை மணிக்குள்ளாக/

அன்று ஒருநாள் அவ்வளவு நேரமாகிப்போனது இவனுக்குள்ளாய் கொஞ்சம் வருத்தம்தருவதாகவே/தவிரதண்ணி போட்டுக்கொண்டுஅலப்பரை பண்ணுப வர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.இப்படியாய் தண்ணி போட்டு விட்டு ஐந்தாறு பேராக வந்த ஒரு கூட்டம் தான் இவர்களது பக்கத்துதெருவிலிருந்து ஒரு அண்ணனை அடித்து இழுத்துக்கொண்டு போனார்கள் ,ஏன் அப்படிப் போனார்கள்எதற்காகஎனத்தெரியவில்லை.
அடித்துஇழுத்துப் போனவர்கள் அட்ட காசம் செய்கிறவர்களாயும், அடிவாங்கி யவர்கள்அடங்கிப்போகிறவர்களாயுமே காட்சிப் பட்டுத்தெரிந்தஅந்தக்கணம் . அடி வாங்கியவரின் முகம் வீங்கிப்போயிருந்தது உதடு கிழிந்து ரத்தம் சொட்டியது,வேடர்களின் கையில் சிக்கிய பறவையாய் உடல்குறுகிப்போயும் தலைகுனிந்தவாறுமாயும்வேதனையுடனுமாய்இழுக்கப்பட்டுசென்றுகொண்டி ருந்த அவனின் பின்னாக அவனது அம்மாவும் அக்கா போல் ஒருவரும் அழுது கொண்டேபோனார்கள்.ஏய்ஓடிப்போயிருங்கஒழுங்கா,இல்லைன்னாஇவனோட சேத்துஒங்களயும்அடிச்சிஇழுத்துக்கிட்டுப்போகவேண்டிவரும்,பாத்து க,என்ன தைரியமிருந்த எங்க வீட்டுப் புள்ளை கேக்குது ஓம்ப் புள்ளைக்கு, காதலிப்பா னா சும்மா,கல்யாணம் வரைக்கும் இல்ல பிளான் பண்ணியிருக்கான் .நல்ல வேளைநாங்கதேடிவந்தவேளைஓங்மூத்தபுள்ளஇல்ல,இருந்துருந்தான்அவன உயிரோடவச்சி கொளுத்தீருப்போ ம். அவன் தம்பிய அடிக்கிற அடியில அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல எங்கன இருந்தாலும் வரணும். இல்ல இவன் செத்தான் என்றவாறு அவர்கள் சென்றபின்னாய்காதலித்தஅண்ணன்வந்தான்.

நான்போய்தம்பியை கூட்டி வருகிறேன் கிளம்பிப்போனவனை தடுத்து விட்டா ர்கள்அவனதுதெருக்காரர்கள், சும்மா இருடா,இப்ப நீயி அங்க போனா அவுங்க ஒன்னயஅடிச்சேகொண்ணுருவாங்க,வேண்டாம்எனத்தடுத்தும்அவன் போய்க் விட்டான் தம்பியை கூட்டி வர,அவன் ஒற்றை ஆளாய் அப்படியாய் போகவும் தெருவே அடியோடுகிளம்பி விட்டது ஆணும் பெண்ணுமாய்/அப்படி அவர்கள் போன சிறிது நேரம் கழித்து வரும் பொழுது கூடவே தம்பியை கூட்டி வந்து விட்டிருந்தார்கள்.இத்தனையையும்வரிசையாய்நிறுத்தப்பட்டிருந்தகைவண்டிக ளுக்குப்பின்னால்அமர்ந்துகொண்டுதான்கவனித்துக்கொண்டிருந்தான், இன்று/

அவனது தம்பியும் பள்ளித்தோழனும் உடன் வரவில்லை.இப்படி மத்தியான வேளையில கூப்புட்டைன்னா எப்பிடி போயிட்டு வா நீ மட்டும் என அவர்கள் சொல்லி விடவும் இவன் மட்டும் வந்து அமர்ந்திருந்தான் ,இன்று காலையில் போகவில்லை.லீவுதானேஎனவிளையாட்டுப்போக்கில் இருந்து விட்டான், செது க்குமுத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் இவனும் பள்ளித்தோழனும் தம்பி யுமாய்/சனி ஞாயிறு லீவுகளில்தான் இதுபோல் விளையாட்டுகளுக்கு புத்துயிர்ஊட்டமுடிகிறது.விளையாட்டுமுகச்சிதெரியவில்லை,காலைஎழுந்து முகம் கழுவியவுடன் வந்தது,அப்படியே செட்டில் ஆகிவிட்டான். விளையா டுகிறஇடத்திலேயே/விளையாடிய களைப்பு முடிந்தும் ஜெயித்த புளிய முத்துக் களை எண்ணிக்கொண்டு பெருமிதத்துடன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு முடித் ததும் வயிறு ஊதி முட்டியது.ஆகா காலையில்.,,,,,,,,,/

வீட்டில்பாத்ரூம்இருந்தும்கூடவெளியில்போய்வாய்க்காலில்இருந்துவருவது இவனதுவழக்கமாய்இருந்துவிட்டது.வீட்டில்இருக்கிறபாத்ரூம்மிகவும்சின்னது தான்.இவன்அடிக்கடிபோனதில்லை,கைவண்டிகளுக்குப்பினால்ஓடுகிறவாய்க்காலில் ஆய்ப்போய்விட்டுவந்துகால் கழுவ மட்டுமே பாத்ரூமைப்பயன்படுத்திப் பழிகி யிருக்கிறான் இதுநாள்வரை,இப்பொழுது போய் திடீரென பாத்ரூமைப் பயன் படுத்தச்சொன்னால் எப்படி சரியாக வரும்\

இவனது பள்ளித்தோழனும் இவனுடன்தான் வருவான்,அவர்களது வீட்டிலும் ஒருபாத்ரூம்இருந்தது,அதுகொஞ்சம்பெரியது,விளையாடப்போகிறநாட்களில் ஒருசிலதினங்களில்பார்த்திருக்கிறான்.இவனுக்குஅப்படியெல்லாம்வீட்டுக்கு
ள்ளாய்அமர்ந்துவிளையாடப்பிடித்ததில்லை எப்பொழுதும்/

மாதமாய்இருக்கிறஅவனதுஅக்காவெளியில் வேறெங்கிலுமாய் நடந்து போய் பொழுதுபோக்க முடியாத குறையைத் தீர்க்க இப்படி, சின்ன பிள்ளைகளைக் கூட்டிவைத்துக்கொண்டுவிளையாடிக்கொண்டுஇருப்பாள்.

நிறைமாதம்போலிருக்கிறது.வீட்டைவிட்டுவேறெங்கிலுமாய்அசையமுடியாம
லும்ஆசைகளுக்குஅணைபோடமுடியாமலுமாய்தன்னைஓரித்தில்இறுக்கமாய்
இருத்திக் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடும்என்றான்.ஆனால் இவன்விளையாடப்போனஇரண்டாம் நாளிலேயே அவளுக்குவலிஎடுத்து விட் டது,

ரிக்‌ஷாகூப்பிடஇவனதுபள்ளித்தோழன் போயிருந்தான்,இவனது தம்பி வேறெ ங்கோ கடைக்குப்போயிருந்தான்.இவனும் பள்ளித் தோழனின் அம்மாவும்தான் ரிக்‌ஷா வந்த நேரம் வீட்டிலிருந்தார்கள்.ரிக்‌ஷா ஏறப்போகிற நேரம் பாத்ரூம் போக வேண்டும் எனச்சொல்லிவிட்டாள் அக்கா, இவனும்அம்மாவும் மட்டுமே தனித்துவிடப்பட்டவர்களாய்/

என்னசெய்யஅக்காவை கைத்தாங்கலாய் பிடித்துக் கொண்டு போக முடியாது போலிருக்கிறது.அப்படியேபஞ்சுப்பொதிபோல்வலிதாங்காமல்அமர்ந்து விட்ட அக்காவைஎப்படிஇப்பொழுதுபாத்ரூமுக்குக்கூட்டிப்போவதுஎனத்தெரியவில்லை. இவன்தான்போய்பக்கத்துவீட்டுப்பாட்டியைகூட்டிவந்தான்,அவளுக்குவயதுஇருக்கும்எழுபதுக்குக்குறையாமல்.அவள்வந்துஒன்றும்அக்காவைகைத்தாங்கலாக கூட்டிப்போய் விடப்போவதில்லை,ஆனாலும் ஒரு யோசனைக்காகத்தான் வந்தான் கூட்டிக் கொண்டு/

பாட்டிவரும் போதே கையில் ஒருபெரியகோப்பையுடன் வந்துவிட்டாள், துணி அலசிப்போடுவார்களே,அது போலானதொரு டப்பாவாய் இருந்தது அது. வேக வேகமாய் வந்தவள் கதவை இழுத்துச்சாத்திவிட்டு இவனையும் ரிக்‌ஷாக்கார ரையும் வீட்டுக்கு வெளியே கொஞ்சம் இருக்கச்சொல்லிவிட்டுதண்ணீர் நிரம் பிய கோப்பையுடன் வெளியே வந்தாள்.அக்காவின் அம்மா அவளைக் கையெ டுத்துக் கும்பிட்டாள்.இத்தனைவருடங்களாய் பேச்சு வார்த்தை அற்றிருந்த குடும்பம்.இப்பொழுதுஇவன்மூலமாய்பேசியிருக்கிறார்கள்எனநினைக்கையில் இவனுக்குக்கொஞ்சம் பெருமிதமாய் இருந்தது.

அக்கா ரிக்க்ஷாவில்ஏறி உட்காரவும் கடைக்குப் போயிருந்த தம்பியும் இவனது பள்ளித் தோழனுமாய் வந்து விட்டார்கள்.ரிக்‌ஷாவில் அக்காவுக்குப்பக்கத்தில் அவளது அம்மா அமர்ந்து சென்ற காட்சி இப்பொழுதும் கண்ணில் நிற்பதாக/

அதிகாலை என்றால் தெரியாது .இருட்டு வேளை, மூணாம்பேருக்குத் தெரியா மல் போய் வந்து விடலாம். பதினோரு மணியாகிப் போனஇந்தமுன் மதியப் பொழுதில்எப்படி,,,,,?ஐடியா,கைவண்டிகள்நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறஇடத்தி ற்குப்பின்னாய் ஓடுகிற வாய்க்காலில் இருந்து கொள்ளலாம்,கைவண்டி மரப்பில் ஆள் இருப்பது தெரியாது வெளியே என உட்கார்ந்திருக்கும் போது காட்சிக்குப்படுகிறதாய்த்தான்இது,இந்தகளோபரத்தில்எப்படிடவுசரை கையில் பிடித்துக்கொண்டுஅம்மணமாய்ப்போவது,இல்லை எவ்வளவு நேரம்தான் இப்ப டிஉட்கார்ந்திருப்பதுஎன்கிறஎண்ணம்தாங்கிசங்கடப்பட்டுக்கொண்டிருந்தவேளை பள்ளித் தோழன் வந்துசைஸாககூட்டிப்போனான் இவனது அம்மா சொல்லி விட்டார்கள்என/

அன்றிலிருந்து இன்றுவரை தண்ணி போட்டவர்களைக் கண்டாலே பயம்தான். சரி இப்பொழுதுஎப்படிப்போவதுவீட்டிற்கு, முருகன்கோயில்தாண்டியதும்
ஓட்டம்எடுத்துவிடவேண்டியதுதான்வழக்கம்போல/.அதுவரைக்குமாய்இருக்கு ம்மனிதநடமாட்டம்அதுதாண்டியதும்இருக்காது.தம்பியிடமும்பள்ளித்தோழனி டமும் சொல்லியிருந்தான்.அன்றிலிருந்துஇன்றுவரைஇருட்டில் நடப்பதாய் இருந்தால் கிளம்பிய இடத்திலிருந்து வீடுவரைக்கும் ஒரே ஓட்டம்தான்.

சேர்த்து வைத்திருந்த காசு கரைந்து விட்டது, இப்படியே கொஞ்சம் சேர்த்து வைத்துஅம்மாவிடம் பத்துரூபாயைமுழுதாகக்கொடுக்கலாம் என்கிறஇவனது எண்ணத்தில் இப்போது மண்,இனிமேல்இதுபோலான மீட்டிங்கிற்கு வரவேக் கூடாது.எனஅன்று எடுத்தமுடிவு பெரியவன் ஆனபின்னாய் காணாமல் போய் உள்ளதுதான்.

இப்பொழுதுபோலெல்லாம்இருந்திருக்கவில்லைஅப்பொழுதுமேடையமைப்ப து. நீளமாயும்,அகலமாயும் தன் உருக்காட்டிக் காட்சிப்படுகிற பலகைகளை ஒன்றுபோல்தரை விரிப்பு போல் பரப்பி கீழே தரை ஊன்றியிருக்கிற மரக்கால் களுடன்சேர்த்துஆணியடிப்பார்கள்.பொறுக்கியெடுக்கப்பட்டஆணியைஒவ்வொ ன்றாய் பரப்பப்பட்ட பலகைகளின் மீது அறையும் போது பலகை அழகாய் காட்சிப்பட்டுவிரிவதைப்பார்க்கஜோடிக்கண்களில்கோடிப்பார்வை வேண்டும்.

மல்லப்பா கிருஷ்ணன்அண்ணன்தான்இதைச் செய்வார்.அவர் அடிப்படை யில் கட்டிடங்களுக்குசென்ட்ரிங் போட பலகை அடிப்பவர்.அவரை பொறுத்தளவிற் கு இரண்டுக்கும் ஒரே வித்தியாசம்தான் சொல்வார்.சென்ட்ரிங் போடுவதற்கு பலகை அடைக்கும் போது கட்டிடத்திற்கு மேலே போட வேண்டும்.மேடை போடும்போதுகீழேதன்தரையிலிருந்துமேலேம்பியதாய்குறிப்பிட்ட உயரத்திற் கு காண்பிக்கவேண்டும்.அதை விடஇதில்தான் காசுக்கூடக்கிடைக்கும் என்றா லும்அவர் விரும்புவது மேடையமைப்பதை விடவீட்டிற்கு சென்ட்ரிங் போடுவ தற் காய் பலகை அடைப்பதையே/

மேடைக்காய்அமைக்கப்பட்டபலகைகளை மறு நாளில் அல்லது இரண்டொரு நாளில்பிரித்துவிடுவார்கள்.ஆனால்வீட்டின்சென்ட்ரிக்காய்அடிக்கப்படுகிற
பலகைகள்அதன்மேற்கூரைஅமைக்கப்பட்டப்பின்தான்பிரிக்கப்படுகிறது. அந்த வகையில்எனக்குதிருப்திஎன்கிறார்மல்லப்பாகிருஷ்ணன்அண்ணன். இன்னும் சொல்லப்போனால்வீட்டுவேலைகளைவிடமேடைஅமைப்பதில் தான் எனக்கு சம்பளம் அதிகம் கிடைக்கும் என்றாலும்கூட வீட்டுக்கான சென்ட்ரிங் பலகை கள்அடிப்பதேஎனக்குவிருப்பம்என்கிறார்.

இவனும்பாலசேகருமாய்த்தான்அவரைப்பார்க்கப்போயிருந்தார்கள்.முக்குராந்தலுக்கு அருகிலிருக்கிற ஏதோ ஒருபெயர் தெரியாததெருவில்தான்அவரது வீடு இருந் தது.வீட்டைவிடபலகைகள்கம்புகளைப்போடுவதற்கு நிறைய இடத் தை ஒதுக் கியிக்கியிருந்தார்.இதுதான்சார்எனக்குச்சொத்து இதுகதான் எனக்கு பொழப்புக் குடுக்குது என்றார்.

நாங்க இருக்க கொஞ்சம் இடம் போதாது,அதான் வீட்ட சின்னதாயும் இந்த சாமான்க கெடக்குற யெடத்த பெரிசாவும் ஆக்கி வச்சிருக்கோம்,நானு ஏங் பொண்டாட்டி புள்ளங்களுக்கு இது போதாது என கேள்வியாய் கேட்டவரின் வீட்டின்முன்இருந்தவெளியைமூங்கில்தப்பைவைத்துஅடைத்துக்கட்டிஅழகாக் கியிருந்தார்.

சாணித் தண்ணீர்கரைத்துதெளிக்கப்பட்டிருந்தவெளி நடுவிலாய் அடையாளப் பட்டுத் தெரிந்த வீடு ஓடு வேயப்பட்டு சிறியதாய்/போதும் சார் இது நமக்கு பொழப்புக்குடுக்குற இந்தச்சாமான்கள வைக்கிறதுக்கு இந்தயெடம் வாய்ச்சது நான்செஞ்சபெரியபுண்ணியம்.இல்லைன்னாவீடுஒருபக்கமுமா,இந்த சாமான் ங்க வைக்க ஒரு பக்கமுமா யெடம் தேடீட்டு அலையணும்.அதுக்கு ஒரு வாடகை இதுக்கு ஒரு வாடகைன்னு சேத்துவச்சிக்குடுக்கணும்.தவுர சாமான் கள எங்கோயோ வச்சிட்டு வீட்ல இங்க நிம்மதியா ஒறங்க முடியாது பாத்துக் கங்க,

வீட்டுக்காரருவாடகைக்குவிடும்போதுசொல்லீட்டுத்தான்போனாரு,பழையவீடு தாம்பா,நல்லாவச்சிப்பாத்துக்கவீடுபாழடஞ்சிடக்கூடாது.சொன்னாங்கஒன்னையப்பத்தி.நல்லாவீட்டவச்சிக்குவைன்னு,அதான்வீடு தேடிக்கிட்டிருந்த ஒன்னைய க் கூப்புட்டு அனுப்புனேன்னு சொல்லி சொற்ப வாடகைக்கு விட்டுப்போனாரு.

இப்ப அவரு ஆந்துராவுல இருக்காரு,என்னைய நம்பி வீட்டவிட்டுட்டுப் போன துக்கு நானும் நம்பிக்கையா நடந்துக்குறேன்.அவரும் என்னைய முழுசா நம்புறாரு.வீடும்இந்தயெடமும்சுத்தமா இருக்குதுன்னா அதுக்கு ஏங் பொண்டா ட்டியோட ஒத்துழைப்புதான் முழுக்காரணம்.அவ இல்லைன்னா நான் இல்ல, அந்த அளவுக்கு என்னைய மட்டுமில்ல வீட்டயும் நல்லா பாத்துக்குவா என அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதுகளில் காற்றுவழியாகமிதந்துவந்த சினிமாப்பாடல் கேட்க நன்றாகயிருந்தது.

இளையராஜாவும்எஸ்பிபாலசுப்ரமணியனும்,ஜானகியும்சேர்ந்துபாடலைநெய்தி ருந்தார்கள்.மனம்பிடித்ததாயும்கைபிடித்துசென்றதாயும்இருந்தஅந்நேரத்தையப் பாட்டு அடுத்த தெருவிலிருந்த டீக்கடையிலிருந்துதான் கேட்டுக் கொண்டிரு ந்தது.

இவன்அந்தப்பக்கமாய் வந்தாலோ போனாலோ அங்குதான் டீக்குடிப்பான். நன்றாக இருக்கும் டீ.நகரில் சில கடைகளில் மட்டுமே காணவும் சாப்பிடவும் கிடக்கிற கேக் அவரிடம் அந்தகடையில் அந்தக்கடையில்க்கிடைத்தது.அங்கு செல்வதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாய்/

கிராமத்துப்பலகாரம்என்றால் அப்படி ஒருகிறுக்கும் பிடிப்பும்இருந்திருக்கிறது இவனுக்குள்ளாய் என்பது அங்குடீக்குடிக்கப்போன கணங்களில் ருசுவாகிப் போனது.ராமநாதனும்இவனுமாய்சுஸ்யம்தேடியலைந்தகதையைச்சொன்னா ல் யாரும் நம்பமாட்டாகள் அல்லது சின்னப்பிள்ளைத்தனமாய் இருக்கிறது என்பார்கள்.

வாரத்தின்இறுதி நாளானசனிக்கிழமையாய்பார்த்து இவனும் அவருமாய் பணி புரிந்த அலுவலகத்திலிருந்து கிளம்பிப்போய்விடுவதுதான்.சுஸ்யம் தேடி/

நல்ல பசி நேரம் அன்றொரு நாள் மதியம்கிளம்பி விட்டார்கள் இருவருமாய் சைக்கிள்எடுத்துக்கொண்டு/

இவன் அப்பொழுதான் டிபன் பாக்சைத் திறந்து சாப்பிட உட்கார்ந்திருந்தான். திறந்து குவித்தக் கை சாப்பாட்டை எடுக்கப் போகிற நேரம்/ வந்து விட்டார் ராமநாதன்.”ஏய்ஏய்எந்திரி வாப்போவோம் என்றார்.எங்கே என இவன் அவரிடம் கேட்டு நிதானிப்பதற்குள் வாப்போவோம் என இழுத்துக்கொண்டு போய்விட்டார்.அவரதுவேகத்திற்குஇவனால்சைக்கிள் மிதிக்கமுடியவில்லை. வேகமாக ஓட்டினார்.பஜார்,கூட்டம்,மனிதர்கள்,என எல்லாம் விலகி நீரிடைச் செடிகளினூடே விரைந்து நீந்துகிற மீனாய்ச்சென்றார். இவனுக்கானால் நல்ல பசியில்இழுத்துவந்துவிட்டார்.என்கிறகோபம்வேறு,போகட்டும்அவரதுவேகத் தில்அவர்போய்எங்காவதுநிற்கத்தானேவேண்டும்.அப்பொழுதுபார்த்துக்கொள்ள
லாம்.விட்டுவிட்டான்,நினைத்ததுபோலவேஓரிடத்தில்நின்றுபோன்பண்ணினார்.என்ன வென கேட்டபோது கேள்விப்பட்டேன் சுஸ்யம் கிடைக்கிறது ஓரிடத்தில்.என போய்க் கொண்டிருக்கிறோம் அதை நோக்கி, வா விரைவாக/ பசி அயர்ச்சி யெல்லாம்பார்க்காதே என்கிற அவரது சொல்தாங்கி விரைந்த சமயம் பஜாரின் கடைசியில் நின்றிருந்தார்.

ராமநாதன் சைக்கிளில் ஓட்டுவதைப் பார்த்தவர்கள் சொல்லக்கேட்டதுண்டு. பயங்கரஸ்டைல் லுக்குல கதாநாயகன் மாதிரியில்ல போறாரு.இப்பிடிப்போற இவருக்குகதாநாயகிஇல்லையேகைவசம்எனஅவரிடமாய்சொல்லவில்லை.சரி என அவரை த்தொட்டு பின் தொடர்ந்த போது அவர் அம்புக்குறியிட்டு நின்ற இடம் சுஸ்யம் சுட்டுவிற்கிற பாட்டியின் முன்பாய் இருந்தது.கரைக்கப்பட்ட மாவு சட்டியில் பாதி நிறைந்திருக்க அவிக்கப்பட்டபயறும்கடைலைப்பருப்பும் பாசிப்பருப்பும் வெள்ளமும் கலந்து பிசையப்பட்டிருந்த பயறு வகைகள் ஒரு சில்வர் சட்டியில் இருந்தது.பருப்பு வடை உளுந்த வடை உருண்டை ,,,,,,என ரகத்திற்கொன்றாய் சுட்டுமுடித்துவிட்ட பாட்டி அப்பொழுதுதான் சுஸ்யம் சுட தயாராகிக்கொண்டிருந்தாள்.

பிசைந்து வைத்த இனிப்பு உருண்டையை எடுத்து மாவில் முக்கி கொதித்து முட்டை விட்டுக்கொண்டிருந்த சட்டியில் போடப் போனார். நின்றுவிட்டார் ராமநாதன் அவர் முன்னாக,ப்போய்/

பாட்டிஏறிட்டுராமநாதனைப்பார்த்துவிட்டுசட்டியைக்காண்பிக்கிறார்.காய்ந்துக் கொண்டிருக்கிற சட்டியில் வெந்து கொண்டிருக்கிறது சுஸ்யம்தின்னலாம் வாங்கிசற்றேபொறுத்தீர்களானால்/என்பதுபோல்சைகைசெய்தவளிடம்அன்று வாங்கிச்சாப்பிட்டசுஸ்யத்தின்ருசிடீக்கடைக்குப்போகிறஒவ்வொருதினங்களி லும் இனிக்கிற நினைவாய் நாவின் சுவையறும்புகளில் ஒட்டிக்கொண்டு/

                                                                                                                        
                                                                                                                                 தொடரும்,,,

14 comments:

மகிழ்நிறை said...

புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா! வழக்கமான சொற் தோரணம் மிக அருமை

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் எழுத்துக்கள் போலவே இணைத்த படமும் அட்டகாசம்...!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வாழ்த்திற்கு/

vimalanperali said...

நன்றி சார்,வாக்களிப்பிற்கு/

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைவருக்குமாய்/

விச்சு said...

மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.புத்தாண்டு வாழ்த்துக்கள்/
சிறக்கட்டும் 2015

Thulasidharan V Thillaiakathu said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அன்புடனும், நட்புடனும்

துளசிதரன், கீதா

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/