4 Dec 2014

சிம்னி விளக்கு,,,,


பூப்போட்டசேலைகள்என்றால்செவ்வந்தியக்காவுக்குமிகவும்பிடித்திருந்தது. எப்பொழுதிலிருந்து அப்படியானது என்பது அவளுக்கு நினைவில் இல்லை

அவளதுமாமன்முத்துச்சாமிபூப்போட்ட பாவடையும்,அதே நிறத்தில் ப்ளைனா கஒருதாவணியும்எடுத்துவந்திருந்தான்அவள்வயதுக்குவந்தநாளன்றில்.அவளு க்கு அது மிகவும் பிடித்திருந்தது.அன்று அவள்சிரித்த சின்னசிரிப்புவீடு முழுவ தும் எதிரொலித்துப் பரவியதாக/

வீட்டின் நடையிலிருந்து உள்ரூம்வரைஇருந்தவர்களுக்கு அந்தச்சிரிப்பு சொல் லிச் சென்ற அர்த்தம் பலவாய் பிரதிபலித்துத் தெரிந்தது.சின்ன வானவில் சிவந்து போகிற அளவுக்கு?சிவந்து போகலாம் சரி.அதற்காக,,,,,,,,,?

அவன்அன்றுகேலியாகசொல்லிவிட்டுச்சென்றஒற்றைவார்த்தைஇன்று வரை அவளது மனதில் நிழலாடுகிறதுதான்.தலை நிறைந்து வைத்திருந்த பூவும், உடல் நிறைந்த அலங்காரமும் ,விசேஷத்திற்கு வந்திருந்த கூட்டமும் கலை ந்த பின்பும் அவன் மாமன் முத்துச்சாமி காதில் சொன்ன ரகசியம் இன்றும் மனம் இனித்துக்கிடப்பதாகவே/

நாக்கினடியில் ஒட்டிக் கிடக்கிற மிட்டாயின் ருசியைப் போலவே இனித்து கிடப்பதாக/ மனம் பாவி வியாபித்த நினைவுகளின் இனிப்பும்,கரிப்பும் ஒரு சேர உருத்தரித்துஉருக் கொண்ட நாட்களின் நகர்வுகளில் செவ்வந்தியக்கா தாவணியை விட்டுசேலைக்குமாறிய நாளில் அவள் கட்டியது அவளது மாமா முத்துச்சாமி கொடுத்திருந்த பாவடையும் தாவணியும்தான்/

அவளுக்காகவே “கம்ப்யூட்டரில் புதிதாய் டிசைன் போட்டு வாங்கிவந் தேன்” என அவன் சொன்ன பொய்யான வார்த்தைகளுடனும், வார்த்தைகளின் ஈரத்து டனும்மடித்து வைத்து இன்றும் பீரோவில் பத்திரமாக இருக்கிறது பாச்சா உருண்டை வாசம் வீச/

அது எப்படி நடந்தது எனத்தெரியவில்லை.ஏன் நிகழ்ந்தது என்பதையும் மனம் ஏற்றுமகிழிந்து கொள்ளும் நிலையிலெல்லாம்இல்லை.ஆனாலும்மனதில் பூத் து விரிந்திருந்த மலரின் மலர்வாக அவளுள் சேலைகளில் பூத்திருந்த பூக்களி ன் வாசமும்,நிறங்களும்/

பெரிது ,பெரிதாய் முளைத்திருந்த பூக்களும், சின்னச்சின்னதாய்அரும்புவிட்டு சிரிக்கிற பூக்களும் அவளது சேலையில் எப்பொழுதும் பார்க்கக் கிடைக்கும். அவளும் அம்மாதிரியான புடவைகளில் அதுவும் சிவப்புக்கலர் காண்பித்த புடவையில்வெள்ளையாய்பூத்திருந்தபூக்களிலும்அதன் அருகில் கைகோர்த்து நின்றசின்னசின்னப்பூக்களிலும்அதன்நிழலிலுமாய்மனம்பறிகொடுத்துஒட்டிக் கொண்டிருந்தாள்.

நூர்ஜஹான்டீச்சர்கட்டிவருகிற பப்போட்ட புடவைகள் செவ்வந்தியக்காவுக்கு மிகவும்பிடிக்கும்.

கறுப்புக்கலர் புடவையில் பெரிது,பெரிதாய் பூத்திருந்த வெள்ளைப்பூக்கள், சிவப்பு நிறப் புடவை யில் பொடிப்பொடியாய் நிறைத்து நின்ற கலர்ப்பூக்கள் இவை எல்லாமும் அவள் மனதை ஆக்ரமி த்து பூப்போட்ட புடவைகளின் மீது ஆசை ஏற்படகாரணமாய் இருந்தது.

ஆனால்அதே நூர்ஜஹான் டீச்சர் ஆறாம் வகுப்புக்கு சரித்திரப்பாடம் எடுக்கப் போனநாளொன்றில் கேட்டகேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என ஒரு மாணவனின் கால் வீங்க அடித்து விட்டாள்.

வலது கால்,முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடைப்பட்ட கெண்டைசதைப் பகுதி இருந்தஇடம்.புசுபுசுவெனவீங்கிப்போனதுகால்.அவசரத்திற்கு பள்ளியில் இருக்கிறமுதல்உதவிசிகிச்சை மருந்தை போட்டு விட்டு அவனை ரிக்க்ஷாவி ல் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
 
அன்றிலிருந்து மூன்று நாட்கள் நூர்ஜஹான் டீச்சர் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு வந்த நாளன்று பூப்போட்ட சேலைக்குப் பதில் ப்ளைன்சேலையைத் தான் கட்டி வந்தாள்.

மாணவனைஅடித்தநாளில்டீச்சரின்கணவனுக்கும்,டீச்சருக்கும்சண்டை,டீச்சர்இப்படிபூப்போட்ட புடைவையுடனும்,மிகையானமேக்கப்புடனுமாய்வேலைக்குச்செல்வதுடீச்சரின் கணவனுக்குபிடிக்கவில்லை.வழக்கம்போலபள்ளிக்குக்கிளம்பியடீச்சரைகண வரின் வாய்வார்த்தை இப்படித் தான் கொக்கிபோட்டு தடுத்திருக்கிறது. “பள்ளிக் கூடத்திற்கு வேலைக்குப் போறியா, இல்ல,” ,,,,,, ,,,,,,என்கிற திராவகச் சொல் அவளை சுட்டு விட அந்த கோபம்தான் மாணவனின் கால் வீங்க காரண மாய் அமைந்து போனது எனச் சொல்லி இருக்கிறாள் பள்ளி நிர்வாகத்திடம்/

நிர்வாகத்திடம்அப்படியொருகாரணத்தைச்சொன்னநாளிலிருந்து செவ்வந்திய க்கா படிப்பை நிறுத்தி விட்டு பள்ளியை விட்டு வெளியே வருகிற நாள் வரை நூர்ஜஹான் டீச்சர் கட்டியிருந்த பூப்போட்ட புடவை அவள் நினைவை விட்டும்,கண்களை விட்டும் அகலாததாய்/

அப்பாவின்நிலையறிந்துஅவரிடம்ஏதும்கேட்கமாட்டாள்.அவருடையவேலை,அவரின் சம்பளம், வாரத்தில் ஒரு நாள்,அல்லது இரண்டு நாள் அவருக்குஇல்லாமல் போகிற கூலி வேலைஎன மற்றமற்றதெல்லாம் கணக்கில் கொண்டு அவரை அவள் ஒன்றும் கேட்பதில்லை அம்மாவிடம் தான் எல்லாம். “ஏய் மூதி நீ என்ன சின்னப்புள்ளையா,நாளைக்குஇன்னொருத்தன்வீட்டுக்குபோகப்போறஇன்னும் வீட்டு நெலம தெரியாம திரியிற. ஒனக்குப் பின்னாடி ஒருத்தி நிக்குறா வயசுக்கு வந்துங்குறத மனசுல வச்சிப்பேசு.இன்னும் சின்னப் புள்ள மாதிரி சேலவேணும்நோலவேணும்ன்னு,நெசவுபண்ணுற வுங்ககிட்டசொல்லி மொத ல்ல பூப்போட்ட சேலை நெய்யி றத நிறுத்தச்சொல்லணும்,அப்பத்தான் நீயி வழிக்குவருவ”எனஅவளதுஅம்மாவைவாள்செவ்வந்தியக்காபுடவை கேட்கை யில்.

ஆனாலும் செவ்வந்தியக்கா விடாப்பிடியாகதனதுதீப்பெட்டி ஆபீஸ்வேலைச் சம்பளத்தில் மிச்சம் பிடித்து தள்ளி முள்ளி கண்ணைக்கசக்கி ஒரு புடவை எடுத்து விடுவாள்.

அவளுடன் படித்த மகேஸ்வரியும், சுமதியும்,மாடத்தியும் இப்பொழுது புடவை கட்டிக்கொண்டி அல்லது இன்னும் பாவடைதாவணியில்தான் இருப்பா ர்களா எனத்தெரியவில்லை,மூன்றுபேரில்மகேஸ்வரிமட்டும்தான்ஒல்லியாக இருப் பாள். மற்றஇருவரும்கொஞ்சம்பூசினார்ப்போலஅவர்களுக்கு ம் என் வயது இருக்கும்தானேபின் எப்படி?,,,,,,,அவர்களும்என்னைப்போலசேலைக்கு மாறியி ருப்பார்கள்.

மூன்றாம்வகுப்புகதிரேசன்சார்தான்அடிக்கடிசொல்வார்மாடத்தியையும்,சுமதி
யையும்பார்த்து/ஏய்பிள்ளைகளா,ரெண்டுபேரும்என்னஇன்னும்சின்னப்புள்ளைக ளா?வீட்ல சொல்லி காலகாலத்துலரெண்டுபேருக்கும்சேலைஎடுத்துக் குடுக்க ச் சொல்லுங்க, என்பார்.

இப்போதுஅவர்கள்எங்கிருக்கிறார்கள்,எப்படியிருக்கிறார்கள்,கல்யாணம்ஆகி
யிருக்குமாஅல்லதுஇன்னும்படித்துக்கொண்டுதான்இருப்பார்களாஇல்லைஎன்னைப்போலஏதாவது ஒருதீப்பெட்டிஆபீஸின்புழுக்கத்தில்தஞ்சம்அடைந்திருப்பார்களா?தெரியவில் லை.

அவர்களின்நினைவுஇப்படிஅவளில்மையம்கொள்கிறநாட்களில்அவர்களுடன் சேர்ந்து படித்த படித்த பாடங்கள் அவள் மனதில் இனிப்பு தடவியவையாய்/ அவர்களுடன் பகிர்ந்து சாப்பிட்ட சாம்பார் சாதத்தின் ருசியும்,முகம் கோணி சப்புக்கொட்டவைக்கிறஊறுகாயின் சுவை இன்னும் மனம் இனித்துக் கிடக்கிற வையாகவே/இதில் மகேஷ்வரி தனிரகம்,சுமதியக்காவைப்போலசெவ்வந் திய க்காவுக்குஅவர்கள்குடியிருக்கிறவீட்டைசுத்தமாக வைத்திருக்க பிடித்திருந்த தைப் போல அந்த வீதியில்உள்ள அனைவரையும்பிடித்திருந்தது. வீதியில் உள்ள வீடுகளின் சிலர் வீட்டுவாசலில் இவளே வலியச்சென்று கோல மிடு வாள்.

அப்படியாய்தான் இன்னும் மகேஸ்வரியும் இருக்கிறாள் அல்லது இருப்பாள் என்பதைஉறுதிப் படுத்த யாருக்கு மனுப் போட்டுவிசாரிப்பதுஎனத் தெரிய வில் லை.

இளையராஜாவின் பாடல்களைகேட்பது போல இது ஒன்றும் எளிதாகத் தெரிய வில்லை அவளுக்கு/

அவளுக்கு அப்படி ஒரு பித்து அந்தப்பாடல்களின் மீது.வேலைக்குப் போகிற வழியில் எங்கு அந்தப்பாடல்களைகேட்க நேர்கிற சமயங்களிலும் அப்படியே நின்று விடுவாள்அல்லது அவளது நடை நிதானப்பட்டுவிடும்.

அவள் குடியிருக்கிற தெருவில் பூத்திருந்த காகித மரத்தின் ரோஸ் நிறப்பூக்க ளும், வெண்மை சொன்ன பூக்களும் அவள் முணுமுணுக்கிற பாடல்களை காற் று வழியாய் சொல்லிச் செல்லும்.

இதை சைக்கிள் கடை முருகேசன் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான். ஏற்கனவேஅவன்ஒருபாட்டுப்பிரியன்.ஆனால்அவனுக்கானால்கண்ணதாசன்  பாடல்கள் மீது ஒரு மெல்லிய அல்ல கனமான ஈர்ப்பு உண்டு.

அவன் எங்கு போனாலும் அவனுடன் ஒட்டிக்கொண்டதாக ஒரு சின்ன சோனி டேப்ரிக்கார்டர் இருந்து கொண்டேயிருந்தது.

அவன் செவ்வந்தியக்காவின் வீட்டை கடந்து போகிற போது காற்றில் தவழ் ந்து வந்து அவளது செவி நுழைந்து இதயம் தொடுவது அவனது டேப்ரிக்கார் டரிலிருந்து தவழ்ந்து வந்த பாடலாக இருந்தது.

குப் கலரில் தொள,தொளப்பாய் ஒரு பேண்டும், மிருதுவான வெளிர் கலரில் ஒரு சட்டையும் அணிந்திருந்த அவன் அவனைப்போலவே அவனது சைக்கி ளையும் பளிச்சென்றே வைத்து இருப்பான்.

அவுட்ஆப்பேசன் ஆகிப்போன நேரத்தில் கூட செவ்வந்தியக்கா ரெட்டை ஜடை போட்டு ஒற்றை ரோஜாவை சொருகிக்கொண்டு காட்சிப்படுவாள்.

முருகேசனின் கடை செவ்வந்தியக்காவின் வீட்டிலிருந்து நடந்தால் ஐம்பதடி தூரத்தில்வந்துவிடக்கூடியதாய்இருந்தது.அந்தவழியாகத்தான்செவ்வந்தியக்கா தினமும்தீப்பெட்டி ஆபீஸ் போய் வருவாள்.போகும் போதும் வரும் போதும் முருகேசனின் கடை வருவதற்கு பத்தடிக்கு முன்பாகவும்,கடை கடந்த பின்பு பத்தடி பின்பாகவும்செவ்வந்தியக்கா வின் நடை நிதானிக்கும்.
 
முருகேசனின்கடையிலிருந்துவருகிறபாட்டைகைபிடித்தும்,மனம்பிடித்துமாய்
கூட்டிச்செல்லும் அந்நேரம் சைக்கிள் கடையிலிருந்து வருகிற பாடலின் சப்தம் கூடும்.

முத்து ரீகன் டாக்கீஸில் தரைடிக்கெட்டில்மகேசுடன் உட்கார்ந்துபடம் பார்த்த நாட்களில் வந்த கூடிகுறைந்த பாடல்களின் ஒலி இப்பொழுது முருகேசனின் கடையிலிருந்து.

இப்படியாய்கூடியும்,குறைந்துமாய் வந்த பாடலின் சப்தங்கள் செவ்வந்தியக்கா திருமணமாகிப் போன நாட்களின் நகர்வன்றிலிருந்து முருகேசன் கடையிலி ருந்து கேட்கவில்லை.

செவ்வந்தியக்கா திருமணமாகிப் போனஆறுமாதங்களில்தனது தாய் வீட்டிற் கே வந்து விட்டாள் கணவனைக்கூட்டிக்கொண்டு.அங்கு பிழைப்பிற்கு ஆதா ரம் இல்லை என/

இப்போது கணவன்மில்லிலும்,செவ்வந்தியக்காபழையதீப்பெட்டிஆபீஸிலுமா ய் வேலை பார்க்கிறாள்.

திருமணமாகிப் போனஇடத்திலிருந்துபழையபடியும் தனது தாய் வீட்டில் பதிய னிடப்பட்ட செவ்வந்தியக்காஎப்பொழுதும்போலதனதுதெருவிலிருக்கிற குழந் தைகளின் மனதில் படம் பிடித்துமாட்டப்பட்டும்,பெரியவர்களின் மனதில் அன் பால்அர்ச்சிக்கப்பட்டும்கொண்டிருக்கிறாள்.அவ்வளவுவறுமையிலும்சந்தோசத் திலும் இருந்த போதும் கூட/

4 comments:

 1. யாருக்கும் ஒரு பூப்போட்ட சேலை மேல் ஆசை வந்துவிடும் இதைப் படித்து முடிக்கும் போது.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் எழில் மேடம் ,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
   பூப்போட்ட சேலை மீது ஆசை வருவதையும்
   சேர்த்து எழுத்தின் மீதும்
   வந்துவிட்டால் நலமாய் அமையும்/

   Delete
 2. /// இளையராஜாவின் பாடல்களைகேட்பது போல /// ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete