அப்பாக்களின் இறப்பு தவிர்க்க முடியாததும் நடப்பதும்தான் என்றா லும் கூட
அவர்களின்இழப்புஎற்படுத்திவிட்டுச்செல்கிற வெற்றிடம் மிகப்பெரியாதாகவே.
நண்பரின் அப்பா இறந்து போகிறார் ஒரு அதிகாலைப்பொழுதாக என போன் வந்த வேலை காலை 8.00 அல்லது 8.05 இருக்கலாம்,
என்னஇப்பொழுதுஐந்துநிமிடம்முன்னப்பின்ன,,,என்கிறசொல்லாக்க ங்களை கடிகாரங்களும், நேரம்காட்டிகளும்ஏற்றுக்கொள்வதில்லை.
வட்ட வடிவ கடிகாரத்திற்குள்ளாய் அடைபட்டுக்கிடந்த முட்கள் மூன்றும்
சிறியது, பெரியதும்,விநாடி முள் எனவுமாய் தனி ரகம் காட்டி ஓடிக்
கொண்டிருந்தது.டிக்,டிக்,டிக்,,,,,,ஒன்று போல் அது எழுப்பும் தாளலயம்.
படுக்கையை விட்டு எழாமல் உட்கார்ந்து கொண்டே கேட்பதற்கு நன்றாக இருந்தது.
நண்பரின் நண்பர்தான் போன் பண்ணியிருந்தார்.மதுரைக்காரர்
அவர்.ஒருஅசந்தர்ப்பத்தில்இவனுக்குநண்பரானவர்.மதுரையில்புத்தக க்
கண்காட்சிக்கு சென்றிருந்தஒருநாளில்இவன்சந்தித்த எழுத்தாள
நண்பர்நான்கொண்டுவந்திருக்கும் பிரியாணியை சாப்பிட்டே ஆக வேண்டும் நீங்கள்
எனஇவன் உட்பட மூன்று பேரையும் பார்த்துச் சொன்னார். அந்த மூவரில்
ஒருவர்தான் இன்று காலையில் போன் பண்ணீய நண்பர்.
அவர் பார்க்கும் கட்டிடக்கலை பொறியாளர் வேலைக்கும் அவரது பேச்சுக்கும்
எந்தவித சம்பந்தமும் இருந்திருக்கவில்லை, எந்த வித மேல்ப்பூச்சும்,வர்ணமும்
இல்லாதஅவரது பேச்சும்,அன்பும் வாஞ்சை யும் மிகுந்த அவரது நடவடிக் கைகளும்
அவரை பார்த்தவுடன் பழகச்சொல்வதாய் இருக்கும்,எந்தவித கட்டுமானமும் அற்ற
அவரது யதார்த்தமான பழக்கம் இன்று வரை அவரை அருகிலிருக் கிற நட்பாய் வைத்து
பார்க்க வைத்திருக்கிறது. அன்று பூத்த நட்பு இன்றுவரை மணம் வீசுவதாக/
காலைஏழுமணிக்கு வந்ததாகசொன்னார்,ஆஸ்பத்திரிலிருந்து ஆம்பு ல ன்ஸ் வேனில்
வந்திருக்கிறார்கள்.வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக தங்க ளுக்கு போன்
பண்ணுகிறேன் என்றார்.
முதல் வேளையாய் படுக்கையை விட்டுஎழுந்துகுளித்துக் கிளம்ப வேண்டும். மனைவி
கொடுத்த டீயிலும்,மகன் பேசிய பேச்சிலும் கவனம் குவியவில்லை. நணபரின் வீடு
இருக்கிற சூலக்கரை மேடு, புது பஸ் டாண்ட் டீக்கடை நண்பர்கள்,தோழர்கள்
மட்டுமே மனம் நிரம்பிப் போயிருக்க முதலில் கிளம்ப வேண்டும் என படுக்கையை
விட்டு எழுந்தவனாய்/வருவதுதானே இழப்புகள்,இதற்காகப்போய்,,,,,, எப்படி
இருக்கிறார் அல்லது எப்படி இருப்பார் நண்பர் எனத் தெரிய
வில்லை,இடிந்துபோய்உட்கார்ந்திருப்பாரா,நடந்ததைஇயல்பாய்
ஏற்றுகொண்டிருப்பாரா,தெரியவில்லை,இழப்புகள் சாஸ்வதமானதா ,அல்லது தற்செயலா
என்பதைப்பொறுத்துத்தானே எல்லாமும்/
வாராது வந்த மழைபோல் இன்று ஒரு நாள் விடுப்பு கிடைத்திருக் கிறது. தேவைப்
படுகிற நேரத்திற்கு விடுப்பு எடுத்தது போய் கிடைக்கிறநேரத்திற்கு தேவையை
நகர்த்திக்கொள்கிற கட்டாயம் ஆகிப்போன தேவை.
8.00 லிருந்து 8.05ஆகிப்போகிறது அதற்குள்ளாக/ அதற்குள்ளாய் என்ன அவசரம்
நேரங்களை கட்டுபடுத்த இயலாமல் இப்படி சடுதியாய் கடந்தால் எப்படி? கொஞ்சம்
சோம்பேறியான என்னைப் போலானவர்கள் அப்புறம் எப்படி எந்த சாக்குப்போக்கு
சொல்லி தப்பிப்பது?எழுந்தவுடன் மென்று துப்ப வேண்டும் கடிகாரத்தை அல்லது
கூடிய சீக்கிரம் வேறொரு கடிகாரம் வாங்கிவிட வேண்டும். நம்மின் இசைவிற்கு
வராத ஒன்றை வைத்திருக்க வேண்டுமா என்ன இனியும்,,?
வெளியேதூறலாய் பெய்து கொண்டிருந்த மழை கொஞ்சம் வலுத்தது போலத்
தெரிந்தது.நேற்றைக்கு முன் தினம் அறிவித்தபுயல் இன்னும் விடாமல் தொடர்கிறது
பிடிவாதமாய் அம்மாவின் சேலையைப் பற்றிக் கொண்டு அடம் பிடிக்கிற
குழந்தையாக/
இனி மழை வாசம் நம்மை எட்டித்தொட வேண்டுமானால் இது மாதிரியான புயல்
வந்தால்தான் உண்டும் போலும்.சம்பந்த சந்தர்ப்ப த்தில் வந்து வந்து போகிற
காதலியின் நினைவு போலவும்,மனம் பிடித்தவர்களது உருவம் போலவுமாய்/
சரம் சரமாய் இறங்கிக்கொண்டிருந்த மழையை கையில் டீடம்ளரு டன் அமர்ந்துபார்த்துக்கொண்டிருந்தான்.முன்வாசலில்அமர்ந்துவேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவனை பனிடத்தூவலாய் போர்த்திய மழைச் சாரலை விடுத்து
வீட்டினுள்ளே எழுந்து போக மனம் வரவில்லை. மென் சூடான உடலில் பட்ட குளிர்
நீர் துளிகள் உடலை சிலிர்க்கச் செய்வதாக/
மண்ணில் விழுந்த பெருந்தூறலின் துளிகள் மண்பிளந்து சின்னச் சின்னதானபள்ளமடிக்கஅந்தப்பள்ளத்தைபக்கத்தில்விழுந்தமழையின்
துளிஓடோடிச் சென்று மூடிவிட இன்னுமொன்று அதனருகிலேயே பெய்ய என இருந்த
மழையின் தண்ணீர்கொஞ்சமாய்பெருக்கெடுத்து குளம்கட்டிக் காண்பிக்கி றதாய்/
மனோகரியக்காவுக்குமழை எப்போதுமேபிடித்திருந்தது. இப்படியான தொரு
மழைப்பொழுதின் மாலை வேளையில் கிணற்றில் தண்ணீர் இறைக்கப்போன மனோகரியக்கா
கால் வழுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டாள்.
எப்பொழுதுதண்ணீர்எடுக்கப்போனாலும்மனோகரியக்காசெண்பகாவை
கூட்டிக்கொண்டுபோகாமல் இருந்ததில்லை. செண்பகாவும் அவளும் தான் எப்பொழுதும் பசைபோட்டது போல் ஒட்டிக் கொண்டு திரிவார்கள்.
இவனுக்குத்தெரிந்து இளந்தாரிப் பிள்ளைகள் யாரும் அந்த ஊரில் அப்படி
ஒட்டிக்கொண்டு திரிந்ததாய்சான்று ஏதும் இல்லை. கண்மாய்க்கு குளிக்கப் போக
,துணி துவைக்க பம்புசெட் கிணறு தேடி அலைய,நல்ல தண்ணி கிணற்றுக்குதண்ணீர்
எடுக்கப்போக, ஆனா, கீனாகடைக்குசாமான்வாங்கப்போக,,,,,எனஅனைத்திலும்இவர்களது
பேச்சும்,நடப்பும் செய்கைகளும் ஒன்றாகவே இருக்கும்.
ஆனாக்கீன்னா கூட வைவார்,”ஏய் கழுதைகளா,என்ன ரொம்பவுந்
தானபொணைஞ்சிக்கிட்டேதிரியிரிங்க,பேசாமஒருதணுக்கே வாக்கப்பட்டுப்
போயிருங்கடி”.என/
அவர்களுக்கு மட்டும் எப்படிஇப்படி உடுத்த வாய்க்கும் எனத் தெரிய வில்லை.
ஒரே கலரில் தாவணி,பாவாடை அணிய /அந்த ஊரில்
அப்படியாரும்அணிந்துஇதுவரைபார்த்ததாகயாரும்சொல்லிகேள்விப் படவும் இல்லை.
மனோகரியக்கா வாயால் சப்புக்கொட்டியும், தலையசைத்தும் பாடும் பாடல்களை
செண்பகா வெகுவாகவே ரசிப்பதுண்டு.செண்பகா ரசிக்கிறாளோ இல்லையோ யாரையாவது
சின்னப்பிள்ளைகளை கூட்டி வைத்து தினமும்ஒருபாடலாவது சப்புக்கொட்டிக்கொண்டு
பாடாவிட்டால் மனோகரிக்கு தூக்கம் வராது அன்றைய தினம்,அந்த
சின்னபிள்ளைகளின் கூட்டத்தில் செண்பகாவும் இருப்பாள்.
அம்மாவுடன் பககத்து ஊருக்கு அவசர வேலையாய் சென்றிருந்த
செண்பகாஅன்றுவரகொஞ்சம் தாமதமாகிப்போய் விட்டது. அதற்குள் ளாக சின்னப்பிள்
ளைகளை கூட்டி பாடிவிட்டாள்.அது எப்படி நான் இல்லாமல் பாடலாம் என செண்பகா
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஒருவாரம் மனோகரியக்கா வுடன்
பேசவில்லை.கடைக்கு தனித்தனியாய் சரக்கு வாங்க வந்த மனோகரியக்காவிடமும்,
செண்பகாவிடமும் ஆளுக்கொரு மிட்டாயைக்குடுத்து பழம் விடச்
சொன்னார்.அன்றைக்கு இரவு முழுவதும் தூங்காமல் மனோகரி யக்கா செண்பாவின்
முன்னாக பத்துபாடல்கள் வரை பாடினாள்.
கண்மாய்க்கரையின்கல்லடுக்கியபடிகளின் ஓரம் சீமக்கருவேலை முட்களுக் குள்ளாய்
அமர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருக்கும் அவளது மாமனை செண்பகாவுக்கு
ரொம்பவே பிடிக்கும்.
”அவனப்போகச்சொல்லு இத்துப்போனவன,என்ன ஒரு புள்ள இப்பிடி யாதிரிவான்,தறுதலையா,ஒருஅளவு,சளவுஇல்ல,கழுதப்பயசோத்தத்
திங்கிறானாவேறெதாவதும்திங்கிறானாதெரியலையே,பொழுத்துக்கும்
இதுதானாபொழப்பு,” என்று ஊர் சொன்ன போதும் கூட சரி செண்ப காவுக்கு மாமனைப்
பிடிக்கத் தான் செய்தது.சரியாக துவைக்காத கட்டம் போட்ட கைலியுடனும்,கசங்கிய
சட்டையுடனுமாயும் அவன்
திரிந்தநாட்களிலும்சரி,தலைநிறைந்தபோதையுடனாலும்,அரைகுறை
தள்ளாட்டத்துடன்அவன் திரிகிற நாட்களிலும் சரி ”என்ன மாமா சாமி
அருளேறிச்சா”என்கிற ஒற்றைக்கேள்வி தவிர்த்து அவன் மீது கோபப்பட்டதில்லை
செண்பகா/
அவனும் எவ்வளவு போதையிலும் அவ்வளவு உளறலிலும் செண்பகாவை பார்த்து விட்டால்
கப்சிப் ஆகி விடுவான்.பயம் என இல்லை. கட்டிப் போட்டு விடுகிற அன்புதான்
எனச்சொல்லலாம்.
”ஏய் என்னால ஒங்கப்பன் எனக்கு ஒன்னைய கட்டி வச்சாலும் சரி. வைக்
காட்டினாலும் சரி.நான் ஒன்னைய வீடு புகுந்து வந்து தூக்கிட்டுப் போயி
தாலிகட்றேனா இல்லையா பாரு,நாங்கெல்லாம் பத்துபேரு மல்லுக்கு நின்னா லும்
ஒத்தையா நின்னு சமாளிக்கிற ஆளு நானு பாத்துக்கஆமாம்ஒங்ப்பன்ட்ட சொல்லி
வையி,அடுத்த வருசம் இதே தேதியில நீயி எனக்கு பொண்டாட்டி ஆமாம்” என்பான்.
”அதெல்லாம் இருக்கட்டும் நீயி ஒண்ணும் அம்புட்டு தூரம் போக
வேணாம்.இல்லைன்னா அவ்வளவுயோசிக்கவும்வேணாம். மொத ல்ல வேலைக்குப்போயி
நாலுகாசுசம்பாரிக்கிற வழியப்பாரு,இந்த குடி கூத்து, சீட்டாட்டம்,
கண்மாய்க்கரை,வேலிப்பொதரெல்லாம் விட்டுரு.கவுரவமா பொழைக்கப் பாரு, அப்புறம்
எங்கப்பா ஒனக்கு என்னைய கட்டி வப்பாரு.கட்டிக்குடுக்குறாறோ இல்லையோ,நான்
வந்துர்ரேன் ஓங்கூட” என அவளது மாமனுடன் சரி வாயாடுவாள்.
ஊர்மந்தையில் அல்லது செண்பகா வீட்டு தெருமுக்கில் தினசரி நடப்பதைப்
பார்த்து பேசாதவர்கள் பாக்கியில்லை.தெனமும் இந்த கூத்தா,இப்பிடி தெனசரி
அக்கப்போரு பண்ணிக்கிட்டு இருக்குறவன ஏன்னு கேக்கக் கூடா தா,யாராவது
இவனப்பாத்து நாலு புள்ளைக கெட்டுப்போகும், ஆமாம்,,,,,,, ,” எனச்
சொல்பவர்கள் அவனது பச்சைக் கலர் ஹெர்குலிஸ் சைக்கிளின் மிதியை மறந்து
போனார்கள் என நினைக்கிறான்.அவனது சைக்கிளின் கேரியர் செண்பகாவுக்காகவே
செய்யபட்டது போல இருக்கும்.அல்லது அப்படி நினைத்துக் கொள்வான்,
”கெண்டக்காலு நரம்பு தெறிக்க அவன் மிதிக்கிற சைக்கிள் மிதி லேசுப்பட்ட தா”? எனப்பேசாதவர்கள் மிகவுமே குறைச்சல்.
மொழு,மொழு கடை குடிக்கிற தேநீர் சுவை நாவின் சுவையறும் புகளில் படர்ந்து
கிடக்க அதே மனலயிப்பில் 12 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து வேலைக்கு வருகிற
நேரங்களில் காலையில் அம்மா போட்ட பழைய சோற்றையும்,மதியம் வயர் கூடையில்
இருக்கிற டிபன்பாக்ஸில் சோற்றுக்குள்ளாய் புதைத்து வைத்திருக் கிற
வெங்காயத்தையும்,அன்றாட வீட்டுப்பாடுகளையும் நினைத்த வனாய் வேலைக்குப்போய்
வருகிற அவன் உடுத்தியிருக்கிற உடை கள் போலவே அவனது சைக்கிளும் பளிச்சென
இருக்கும்.
எத்தனைநாள்தான்ஊராருக்குதெரிந்தும்,தெரியாமலும்புதர்க்காட்டிலும்,
கண்மாய்க்கரைமேட்டுஅய்யனார்கோவிலுமாகசந்தித்துக்கொள்வது.
அன்று டவுனுக்கு போய் இருவரும் சேர்ந்து சினிமா பார்க்க வேண் டும் என போன வாரம் பார்த்துக்கொண்ட போது பேசிக் கொண்டார் கள்.
செண்பகா பக்கத்து ஊர் வரை நடந்து போய் அங்கிருந்து டவுன் பஸ்ஸேறி சென்று
விட்டாள்.அவளது மாமன் அவளுக்காக டவுனில்
காத்திருந்தான்,மனோகரியக்காவுக்குக்கூடஇந்தவிஷயம் தெரியாது. செண்பகாவும்
அவளது மாமனுமாய் சினிமா பார்த்து விட்டு இரவு பத்து மணிக்கு மேல்
சைக்கிளில் வருகையில் செண்பாகாவின் அப்பா சொசைட்டி அருகில் வைத்து மறைத்து
விட்டார்,
அவர் கையில் ஆளுயரக்கம்பு,கோபத்தில் வார்த்தைகளுடன் சேர்ந்து கொண்
டது.இருட்டில் தெரியவில்லை.எங்கு விழுந்தது, எப்படி விழுந்தது அடி என/
மறு நாள் மனசு பிடிக்காமல் செண்பாகாவின் அப்பாவும் அம்மாவும் அவனை வீட்டில்
போய் பார்த்திருக்கிறார்கள் கறிச்சோறுடன். செண்பகா மாமனின்
அம்மாவுகென்றால் அழுகையான அழுகை யில்லை அப்படி ஒரு அழுகை,
“அப்படி அவன் என்னன்னே தப்பு பண்ணீட்டான்,ஏங் புள்ள அப்பா இல்லாத புள்ளைய
எனக்கு அண்ணன்ஸ்தானத்துல இருக்குற நீங்கள்லாம்
சேந்துபாத்துகுவீங்கங்குறநம்பிக்கையில மண்ணள்ளிப் போட்டூங்களேண்ணேஏங் பையன்
ஓன் புள்ள மேலயும்,ஓங் புள்ள ஏங் மகன் மேலயும் உசுரயே
வச்சிருக்காங்கன்னுதெரியும். அப்புறம் ஏன்னே,,,,,,,இல்லஎனக்கு புடிக்கலன்னு
ஒருவார்த்தசொல்லீருந்தா வெலகிப்போயிருப்பானே, இப்பிடியா, புள்ளயரத்தம்
கண்ணிப் போக அடிக்கிறது.என்ன மதினி நீங்களாவது ஒரு வார்த்த சொல்லீருக்க
வேணாமா அவருகிட்ட/ ஒங்களுக்குத்தான் தெரியுமுல்ல விஷய ம்,,,,,,,” என அழுது
கொண்டே பேசியவளின் முன் செண்பாகாவின்
அம்மாவும்,அப்பாவும்தலைகுனிந்தவர்களாய்நின்றுகொண்டிருந்தார் கள்/
”மன்னிச்சிக்கோதங்கச்சி,நிதானமில்லாமநடந்துக்கிட்டேன். வயசாச் சில்லமா
தடுமாறுது புத்தி அதும் போக ஊருல நாலு பேரு நாலு மாதிரி பேசும் போது
வாதிக்கிதுல்ல மனசு,சரிம்மா மாப்புள இப்ப எங்க இருக்காரு,அவரு கால்ல
வேணாலும் விழுறேன்:,என அவர் கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வெளியே
போயிருந்த செண்பகா வின் மாமன் வந்து விட்டான்,
“வாங்கமாப்புள,தப்புப்பண்ணீட்டேன்பெரிசா,வேறஒருதப்பையும்
பண்ணப்பாத்தேன். நல்ல வேலையா பொண்னுக்கு வேற யெடத்துல பையன பாக்கலா முன்னு
நெனைச்சேன்.அப்பறமா மனோகரி சொன்னப்பெறகுதான்விஷயமே தெரிஞ்சிச்சி,அப்பறமாதா
முழுசா நம்புனேன்.ஏங்வீட்டுக்காரி சொன்னப்பக் கூட என்னமோ ஒங்க மேல இருக்குற
மதிப்புல சொல்றான்னு நெனச்சே ன்”,என்றவரின் பேச்சை மறித்து :எனக்கு
ஒண்ணும் இல்ல மாமா,அம்மாதான் கெடந்து ஒழலுது.நேத்து ராத்திரியில
இருந்துஅழுகையானஅழுகையில்லை, ஒரே அழுக,யெடையில யெறந்து போன எங்க அப்பா
ஞாபகம் வந்துருச்சி. அதையும் சேத்து வச்சி,,,,,,ராத்திருயெல்லாம் ரெண்டு
பேரும் ஓரு பொட்டு தூங்கல,சரி செண்பகா எப்பிடி இருக்கா,
பிடிவாதக்காரி,இன்னும் ஒரு வாய் பச்சத்தண்ணி கூட குடிச்சிருக்க
மாட்டாளே,,,,?”
”சரிமாப்புளபெரிய தப்பு ஒண்ணு நடந்து போச்சு,மன்னிச்சிக்கங்க/ இவ்வளவு
தூரம் ஏங் மக மேல ஆசை வச்சிருப்பீங்ன்னு நெனைச்சிக் கூடபாக்கல, நானும்
இப்பிடித்தான்,நீங்க ரெண்டுபேராவதுஉள்ளூரு, ஏங் சம்சாரம் பக்கத்து ஊரு,ஆள்
சொல்லி விட்டுட்டா,நானும் பாக்கப் போயிட்டேன் வரிஞ்சி கட்டிக் கிட்டு,ஒரு
நா சாயங்காலமா, அதுக் குள்ளஅவங்கப்பனுக்கு சேதி தெரிஞ்சி போயி அவரும்
இப்பிடித் தான் ஆள் ஒயர கம்போட வந்துட்டாரு, அப்புறம் மறு நாளைக்கு மறுநா
பொண்ணு குடுக்குறேன்னு ஆளு மூலமா தூது விட்டாரு, அப்பிடி அவரு தூது
விட்டதுலயிருந்து இன்னையோட இவள கட்டிக் கிட்டு வந்து 22 வருசம்
ஆகிப்போச்சு. இந்த 22 வருசம் கழிச்சும் அன்னைக்கு அவரு வந்த மாதிரி நானும்
வந்துட்டேன் நேத்து ஒங்க முன்னாடி.சரி பட்ட அனுபவம் பேசுது.மாப்புள தப்பா
நெனைக்கக் கூடாது,அடிச்சேங்குறதுக்காகஇல்ல,காலையிலியிருந்துவீட்லஒலை
கொதிக்கலைன்னுகேள்விப்பட்டேன்,கறிச்சோறு கொண்ணாந்துருக்
கேன்.கோவிச்சிக்கிறாமஎடுத்துச்சாப்புடணும்.செண்பாவும்சொல்லி
விட்டுச்சி,நீங்க இங்க சாப்டாத்தான் அவ அங்க பச்சத்தண்னியாவது குடிப்பா”.என
போய்விட்டார்.
இவ்வளவு நடந்த பின் சும்மா இருப்பாளா செண்பகம்? வாய்ப்புக் கிடைக்கும்
போதெல்லாம்மாமனைப்பார்க்கபோய் வந்தாள்/ வீட்டில், ரோட்டில் ,கண்மாய்க்
கரையில்,அய்யனார் கோவிலில்,,,,, என/
அன்றாடம் மடிப்பு கசங்காமல் உடுத்தாவிட்டாலும் ஒருநாள் கட்டம் போட்ட கைலி
அடர் நிற சட்டை என்றால் மறு நாள் பூப்போட்ட கைலி வெளிர் நிற சட்டை
உடுத்திப்போவான்,”டேய் போறது கொத்த வேலைக்கு,என்னவோ கலெக்டர் வேலைக்கு
போறது போல மினிக்கிக்கிற” என்பார்கள் அவன் மொழு,மொழு கடையில் டீக்
குடிக்கிற வேளையில்,”இருக்கட்டும்,என்ன இப்ப எல்லாரும் கலெக் டர் ஆயிட்டா
அப்பறம் கொத்தனார் வேல பாக்குறது யாரு”என மெல்லிய சிரிப்பொன்றில் அந்த
பேச்சை கடந்து போய் விடுவான். அப்படியெல்லாம்கடந்துபோனவனா இப்பிடி என ஊர்
பேசிக் கொண்டிருந்த நாட்களில் செண்பகா மாமனிடமிருந்து கற்றிருந்த
வார்த்தைகளில் ஒன்றிரண்டை கதை திரித்து பேசுவது போல மனோகரியக்காவுடன்
பேசுவாள்.
மனோகரியக்கா,மனோகரியக்கா என பேச்சை நூற்று அப்படியே அவளை தனியே
கூட்டிக்கொண்டு போய்விடுவாள்.தனியாக என்றால் ஆளரவமற்ற திண்னையிலும்,போஸ்ட
மரத்தடியிலுமாக நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். பேச்சினூடாக வருகிற கமுக்க
மான சிரிப்பொலி பரஸ்பரம் இருவரது தாய்மார்களுக்கும் பயமேற் படுத்த அவர்கள்
வந்து கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.
“என்னவாம்ரெண்டுபேரும்அந்தானிக்கிரொம்பத்தானாம்,,,,,,,,,, இந்தச்
சிரிப்பெல்லாம்நல்லதுக்கில்ல.பாத்துகங்க.ஆமாம்என்றவாறு இழுத் துக் கொண்டு
போய்விடுவார்கள்.அதிலும் செண்பகாவின் அம்மா ரொம்பவே கவலைப்படு வாள்.
”ஒழுங்காகொத்தனாருவேலைபாத்துக்கிட்டிருந்தவந்தான்இவ மாமன், என்ன கெரக சாரமோ
என்னவோ,ஆவனப்புடிச்சி இப்பிடி
ஆட்டுது.கட்டடத்துலயிருந்துவிழுந்துகாலொடிஞ்சிபோனதுலயிருந்து
தான்இப்படிஆகிப்போனான். அவன் பொழச்சதுமறுபொழப்புதான்னா லும்இந்தப் பொழப்பு
பொழைக்கிற துக்கு பேசாம செத்தேபோயிரு க்கலாம்ன்னு தோணும்/”
’வேலைக்குப்போக முடியாம வைத்தியம் பாத்துட்டு வீட்டுல
கெடந்ததாலதொத்திக்கிட்ட கண்மாக்கரைப்பழக்கம் இன்னய வரைக் கும் தொடருது
அவன் ஒடம்பு சரியான பிற்பாடும் கூட,எந்த பாவிப் பரப்பான்கண்ணு பட்டுச்சோ
கொஞ்சமா தொட்டுக்கோ, தொடைச்சிக் கோன்னு இருந்த குடிப்பழக்கம் மத்த சகவாசம்
கூடிப்போச்சி” என்பாள் மனோகரியக்காவின் அம்மாவிடம் செண்பகாவின் அம்மா/
இப்படியாய் செண்பகாவைப்பற்றி மனோகரியக் காவின்அம்மாவும், மனோக
ரியக்காவைப்பற்றிசெண்பகாவின்அம்மாவும்பேசிக் கொள் ளாத நாட்களும், படாத
கவலைகளும்இல்லை என இருந்த நாட்க ளின் நகர்வில் ஒன்றில்தான் மனோகரியக்கா
கிணற்றில் விழுந்து விட்டாள்.
கிணற்றைச்சுற்றிலுமாய்படர்ந்துகிடக்கிறபாசம்வெயில்நேரங்களில் காய்ந்து
விடுமானாலும் கூட மழை நேரங்களில் பிடிவாதம் காட்டியும் தன் படர்வு
காட்டியுமாய்/
எப்போதுகவனமாகத்தான்கால்வைப்பாள்கிணற்றைச்சுற்றிஇருக்கிற
கருங்கல்தளத்தில்/அன்றைக்குஎன்னகவனப்பிசகுஎனத்தெரியவில்லை,
அல்லதுசெண்பகா உடன் வராத வருத்ததில் இருந்து விட்டாளா எனப் புரியவில்லை.
அவள் கிணற்றில் விழுந்த வேளை கிணற்றில் ஓரளவு தண்ணீர் கிடந்ததால் அடி
ஒன்றும் பலமில்லை.
காட்டு வேலைக்கு கூலிக்குப்போன மனோகரியக்காவின் அப்பா அந்நேரம் வரை
வீட்டிற்குதிரும்பவில்லை.கிணற்றைச்சுற்றிஇருந்த வீட்டில் இருந்த ஆட்கள்
யாருக்கும் அவ்வளவு ஆழக் கிணற்றில் இறங்க துணிவில்லை.
சேதி கேள்விப்பட்டு செண்பகாவின் அப்பாதான்வயக்காட்டில் இருந்து ஒடி
வந்தார்,அவர் வருவதற்குள்ளாக கயிறு,ஏணி, இதியாதி, இத்தியாதி எல்லாம்
ரெடியாக இருந்தது.
அரை மணி நேர போராட்டத்திற்குப்பிறகு மனோகரியக்கா மேலே கொண்டு
வரப்பட்டிருந்தாள்.கிணற்றடியில் ஊரே கூடியிருக்க, மனோகரியக்காவின்
அம்மாவும் பக்கத்து ஊருக்கு மாமனின் குடியை மறக்கடிக்க மருந்து வாங்கப் போன
செண்பகாவும்,அவளது அம்மாவும் அழுது கொண்டிருந்தார்கள். மனோகரியக்கா
மயக்கம் தெளிந்து கண் விழித்துக்கொள்கிறாள்.
ஆனால்செண்பகாவின் அப்பா மயக்கமாகிவிடுகிறார்.அவருக்கு எப்பொழுதாவது வருகிற
ஜன்னி கிணற்றடியிலேயே வந்து விடுகிறது.நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால்
வந்து விட்டதுஅது என்றார்கள்.அவரவர்களுக்கு த்தெரிந்த கை வைத்தியம் எதுவும்
சரிபண்ணிவிடவில்லை.
உள்ளூர் வைத்தியத்திற்கு கட்டுப்பாடாத ஜன்னி அவரை டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும் வழியில் அவரது உயிரைப் பறித்து விடுகிறது.
ஒற்றைப்பெண்ணான செண்பகாவைஅவளது மாமனுக்குக்கட்டிக் கொடுக்கலாம் என்கிற அவளது அப்பாவின் நினைப்பில் மண் விழுந்து மலையாகிப் போனது.
அவளதுஅம்மாவின்சொந்தத்திலேயேசெண்பகாவாக்குப்பட்டுப்போய்
விட்டாள்.
புது பஸ்டாண்டின் அருகே வந்த போதுதான் ஞாபகம் வந்தது. மாலை வாங்க வில்லை என்பது/
இங்கு மாலை கிடைக்குமா எனத்தெரியவில்லை. பஜாருக்குத்தான் போக வேண்டும்,போய்கொண்டிருந்தான்
.அப்பாக்களின்மரணம்தவிர்க்கமுடியாதுதான்அல்லதுஏற்படுவதுதான்
என்றாலும்கூடஅவர்களின் இழப்பு ஏற்படுத்திச் சென்று விடுகிற வெற்றிடம்
மிகவும் பெரியதாகவே/
8 comments:
.அப்பாக்களின்மரணம்தவிர்க்கமுடியாதுதான்அல்லதுஏற்படுவதுதான் என்றாலும்கூடஅவர்களின் இழப்பு ஏற்படுத்திச் சென்று விடுகிற வெற்றிடம் மிகவும் பெரியதாகவே....
அருமை அண்ணா...
நிறையத் தொட்டுச் செல்லும் நீண்ட கதை...
வணக்கம் சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சிலவற்றை காலம் மறைத்து விடும்...
எல்லோரது வாழ்விலுமே நடைபெறும் அப்பாவின் மரணத்தில் ஏற்படும் வாழ்க்கை மாற்றம் செண்பகாவின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் செண்பகாவிற்கு முதல் காதல் மறந்துவிடுமா என்ன..!
நான் இழந்ததையும் நினைவுறுத்துச்
சிறிது நேரம் கலங்கவைத்துப் போனது
அற்புதமான படைப்பு
(வாக்கியத்தை முடிக்காமல் விட்டுச் செல்வதை விட
முடித்துவைத்துப் பார்த்தால் கிடைக்கும் முழுமையை
ஒருமுறை பரிட்சித்துப் பாருங்களேன் )
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்,நன்றி வாக்களிப்பிற்கு/
வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment