6 Jan 2015

சொல்லூக்கி,,,,, (பாகம் 2)


தங்களின்இறுதியடக்கம் மாலை எனச்சொன்னமுத்தமிழன்அவர்கள்எந்நேரம் எனச்சொல்ல மறந்து விட்டார் என நினைக்கிறேன்.

அவர் மறந்து போனாரா அல்லதுஅவர்சொன்னதைநான் மறந்து விட்டேனா தெரியவில்லை.அதனால்என்னஇப்பொழுதுஅவரால்மட்டுமில்லையாராலுமே இதுபோலான நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட சரியான நேரம் குறிப்பிட்டுச் சொல்லி விடமுடியாதுதான்.ஆகவேஅவருக்குபோன் பண்ணிக்கேட்கிற போது சொல்கி றார். ஆறு மணி சுமாருக்கு இருக்கலாம் வாருங்கள் என/

அவரதுபேச்சை ஏற்று அலுவலகம் விட்டு வெளியில் பார்த்தபோதுமெலிதாக பெய்துகொண்டிருந்த தூறலுடன்கை கோர்த்து சில்லிட்ட காற்று மென்நடனம் ஆடியதாய் பட்டுத்தெரிகிறது.

மணிஐந்துபத்துஆகிறது,இந்நேரம்கிளம்பினால்சரியாகஇருக்கும்.அங்குபோய்ச் சேர/

நான்வேலைசெய்தஅலுவலகம்இருந்தரயில்வேபீடர்ரோட்டிலிருந்துதங்களின் வீடு இருந்த பைபாஸ் சாலைவரைக்குமாய் எப்படியும் இரண்டு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கலாம்.சரி இருசக்கரவாகனம்தானே சென்று விடலாம் சடுதி யான நேரத்தில் என்கிற முடிவுடனாய் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த நேரம் தூறல் கொஞ்சம் குறைந்திருந்ததாய்/

இன்று காலையில் தான்நல்லவெயில் அடித்தது.காலையில் அலுவலகத்தி ற்கு சைக்கிளில் வருவதற்கு முன்பாக வேர்த்துவிட்டது. (தஸ்புஸென மூச்சு வாங்கியது கிளைக்கதை.பதவி உயர்வான நாளிலிருந்து இன்றுவரை கூடிக் கொண்டேவந்து விட்டதுதான் உடல்.குறிப்பாகதொந்தி போட்டுவிட்டது. உடல் எடையும் கூடிப் போய் விட்டது.வீட்டில்மனைவிகூடகேலி பண்ணுவாள். என்னது முன்பெல்லாம் என்னை கேலிபேசுவீர்கள்.இப்பொழுது உங்களது உட லை நீங்களேகவனிக்காமல் விட்டுவிட்டு விட்டது ஆச்சரியமாயும் கேள்விக் குறியாயும் சங்கடம் சுமந்துமாய் தெரிகிறதே/இத்தனைக்கும் நீங்கள்உடற் பயிற்சி,யோகா,வாக்கிங்,,,,,,எனக்கற்றுத்தெரிந்தவர்.அப்படிஇருந்தபோதும்கூட ஏன்இப்படி வம்பாக்கிக் கொள்கிறீர்கள் உடலை?முன்பை விட சோம்பலாகித் தெரிகிறநீங்கள்அதை உதறிவிட்டு மீண்டு வரவேண்டும்.பழைய மாதிரி ஒல்லி யாகவும் சற்றே அழகாகவுமாய்/ என்கிற மனைவியின்பேச்சை ஏற்று இப்பொ ழுதுஎன்னவந்துவிட்டால்போகிறது பழைய மாதிரியாய் என மனம் எடுக்கிற முடிவைஉடல்செயல்படுத்திப்பார்க்கமறுக்கிறது..அல்லதுதள்ளிப்போடுகிறது.)

அலுவலகத்திற்குள்போய்பேன்காற்றில்அமர்ந்தநேரம்வியர்த்த வியர்வையும்  வாங்கிய மூச்சும் கொஞ்சமாய்ஆசுவாசம் கொள்கிறதுதான்,

ஒருவாரத்திற்குசற்றுமுன்புவரைஇப்படியாய்வேர்க்கவில்லை.இன்னும்இருக் கிறது குளிர் மாதங்கள்இரண்டு.”தைமாசம்தரையெல்லாம் குளிரும் மாசி மாசம் மச்சு வீடும்குளிரும்”என்கிற சொல் தாங்கிய மாதங்களான இரண்டில் இன்னும்தைமாதம் பிள்ளையார் சுழிகூடப்போடவில்லை. அதற்குள்ளாக பெய் த மழையும்பெருமழையாகஅல்லாமல்தூறலாகவும் பெரும் தூறலாகவும் பெய்து தன் கடமையைமுடித்துகண்ணைஇறுக்க மூடிக்கொண்டது தான்.

நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை ஆனால் பயிர் பச்சை விளைந்து போனது. விளைந்துகிடக்கிறஅரிசியையும்காய்த்துக்கிடக்கிறகாய்கறிகளையும் சமைத் துச் சாப்பிடவும் குடிக்கவுமாய் தண்ணீர் வேண்டுமே,அதற்கு இப்பொழுது பங்க ம் வந்துவிடும்போலிருக்கிறதே எதிர்வரும்வெயில் காலத்தில்/ எனநினைத்த வாறே மெலிதாய் பெய்து கொண்டிருந்ததூறலைகீறிக்கொண்டு கிளம்புவனா கிறேன். தங்களின்வீடுநோக்கி.

மாலை நேரம் என்பதால் நான் வந்து கொண்டிருந்தநேரத்திற்குபோக்குவரத்து சற்றேஜாஸ்திதான்.பொதுவாகஇம்மாதிரியாய்வெளியில்போகிறபோதுபஜார்ப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கப்பெறுகிற சமயங்களில் நான் போகிற பள்ளிப் பக்கமாய்போவதுவழக்கமாயிருந்தது.

சென்றவாரம்கடைக்குடீக்குடிக்கப்போயிருந்தபோதுடீக்கடைபாய்தனதுமகளு க்குதிருமணம்எனபத்திரிக்கைக்கொடுத்தார்.திருமணம் நடக்கவிருக்கிற இடம் பற்றிக்கேட்டபோது பள்ளியின் அருகில் இருக்கிற பள்ளிவாசலில் என அம்புக் குறியிட்டார்.இடம்தெரியுமாசார்.அந்தசாலையில்வந்துஅப்படியேநேராகத் திரும்பினால் என மேப்ப் போட்டுக் காண்பித்தவரை இடை மறித்துத் தெரியும் பாய் நான்படித்தபள்ளிஅருகே இருக்கிற பள்ளிவாசல்தானே தினமும் காலை யிலும் மாலையிலுமாய் கேட்டபாங்கு ஒலி காதிலும்,பண்டிகைக்காலங்களில் வாங்கிகுடித்தநோன்புக்கஞ்சியின்ருசிநாவின்சுவையறும்புகளிலுமாய்ஒட்டிக் கிடக்கிறது தானே இன்னும்/ அப்புறம்எப்படிபள்ளிவாசல்மறக்கும் பாய்?

ஒருசமயம்பள்ளிவாசலின்வலதுபுறம்ரோட்டைவிட்டுசற்றுத்தள்ளிகீழேயிருக் கிறகிணற்றில் தூர்வாருகிறார்கள் எனசிறுவர்கள் சொன்ன பேச்சைக்கேட்டு கிணற்றினுள்ளே எட்டிப்பார்த்த பொழுது ஆட்கள் வேலை செய்யாத தண்ணீர் அற்ற வெற்றுக் கிணறுதான் கண்ணுக்குத்தட்டுப்பட்டதாக/

எட்டிப்பார்த்துரோட்டில் போன மனிதர்களின் சப்தத்தால்விரட்டுப்பெற்று வந்த துவேமிச்சமாகிப்போனது.அன்று/அந்தநாட்களின்ஞாபங்களும்ஊரின்அடையா ளமானஅந்தப்பள்ளியும்அதில்படிக்கிறசமயங்களில்தலைமைஆசிரியரிலிருந்து என்சிசிமாஸ்டர்வரை நன்றாக அமைந்து போன ஆசிரியர்க்குழுவும் அங்கு படித்தமாணவ,மாணவிகள்பலபேரைசெப்பனிட்டு சரிசெய்தது. போல் என்னை யும் சரி செய்தது எனச்சொன்னபோது டீக்கடை பாய் சார் நான் படித்ததும் அதே பள்ளி,அதே தலைமையாசிரியர்,அதே ஆசிரியர்க்குழுதான் என்ன நான் உங்க ளுக்கும்ஒருவருடம்சீனியர்என்றார்,அப்புறமாய்குடித்தகிளாஸைகீழேவைக்க மறந்து பள்ளியையும் பள்ளியின் பெருமைகள் பற்றியுமாய் பேசிக் கொண்டிரு ந்தோம்.

அவருடன்படித்தமகேஸ்பெயிலாகிஎட்டாம் வகுப்பிலேயே தங்கிவிட்ட போது நான் எட்டாம் வகுப்பிற்குள் நுழைபவனாகிப்போகிறேன்/

அந்த வகுப்பில் ஒரு சிலருக்கு இருந்தது போலவே மகேஷின் மேல் எனக்கும் ஒருஈர்ப்புஇருந்தது,அதுஎப்படிகாதலாகிவிடமுடியும்எனத்தெரியவில்லை. இன்னும்சொல்லப்போனால்அப்படியானஒருவார்த்தைக்குஅர்த்தமேதெரியாது என இருந்திருந்தகாலம்,தெருவில் ஒட்டப்படிருக்கிறச்சினிமாப் போஸ்டரில் நெருக்கமாய்இருக்கும்நாயகன்,நாயகியின்படங்களைக்கூட வெகு ரகசியமாய் பார்த்துமகிழ்ந்தகாலம்/அப்படியானநேரங்களில்அடுத்தபெஞ்சில்முதுகைக்
காட்டிஅமர்ந்திருந்தமகேஷைநான்அவ்வளவுநெருக்கத்தில்பார்த்துவியந்ததில் ஆச்சரியம்ஏதும்இல்லைதான்,எனதுபக்கத்தில்அமர்ந்திருந்தரமேஷ்தான்சொன் னான்,இந்த ஐடியாவை.

அவள் பெரும்பாலுமாய் பேனா,பென்சில்,ரப்பர் என ஏதாவது ஒன்று கொண்டு வரமாட்டாள்.அப்படிகொண்டுவராத நேரங்களில் நீ ஆபத்பாந்தவனாக மாறி விடு என்றான்.அப்படியாய் மாறிப்போய் கையில் புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணனாக,ஊர் மெச்சுகிற நல்லவனாக என நம்பி உருமாறி நின்ற போது அவள் என்னை திரும்பிக்கூடப்பார்க்கவில்லை,இத்தனைக்கும் நான் அவசரத் திற்குக்கொடுத்த பேனா,பென்சில் ரப்பர் மற்றும் சேப்டிப்பின்னின் உரு அர்த்த மற்றதாகிப்போனது,சரி விட்டுவிடுவோம்.

அவளுக்குகண்பூராவும்P.T பீரியடில் புல்லப்பஸ் எடுக்கப்பயப்படும்கோபால் மீது இருந்தது,P.Tமாஸ்டர் ஆறுமுகக்கண்ணனின்கண்டிப்புஸ்கூல் காம்பவுண் டைத் தாண்டியும்பிரபலம்.

ஒருசமயம்ஹெட் மாஸ்டர்அவரைஅழைத்துகொஞ்சம் கண்டிப்பைக் குறைத் துக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் விரண்டுவிடுவார்கள் பிள்ளைகள். நம் மைப்பார்த்துஎனச்சொன்னஹெட்மாஸ்டரையேமுறைத்துப்பார்த்துபயமுறுத்தி யவர்ஆறுமுகக்கண்ணன்.அவரின்பீரியடில்அவர்சொன்னதைஅடிதப்பாமல்செய்கிற மாணவர்களில்நானும்ஒருவனாய்/

ஆனால்அவரைப்பார்த்ததுமாய்ஒண்ணுக்குப் போய் விடுகிற அளவிற்கு பயப்ப டுகிற கோபால் அன்று புல்லப்ஸ் எடுக்க வேண்டும். P.T பீரியடில்,அவனுக்கு முன்னதாகநான்தான் எடுத்துக் கொண்டிருந்தேன் புல்லப்பஸ்,எடுத்து முடித்து கீழே இறங்கியதும் அடுத்ததாய் நின்ற கோபால் புல்லப்ஸ்க்கம்பத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை,எல்லோரையும் போல் அவனால் தாவிப்பிடிக்க முடிய வில்லை,தரையிலிருந்து.இரண்டுமூன்றுமுறைஅவன்தாவிப்பார்த்துதோற்றதைப்பார்த்தP.Tவாத்தியார்ஸ்போர்ட்ஸ்ரூமிலிருந்துஒருஸ்டூலைஎடுத்துக்கொண்டு வரச்சொன்னார்,

இன்னொருP.Tமாஸ்டர்உண்டு.அவர் இப்படியெல்லாம் செய்ய மாட்டார், கம்பத் தைஎட்டிப்பிடிக்கத்தவ்விக்கொண்டிருப்பவனைப்பார்த்துதலையிலடித்துக்கொ ண்டுவிட்டுவிடுவார்,அதற்குகோபால்மட்டுமில்லைமகேஷீம்சேர்த்துசந்தோஷ
ப் பட்டுக்கொள்வாள்.கோபால் விளையாடப்போகும் போது அவள் மனம் பூராம் விளையாட்டு மைதானத்தில்மட்டுமே இருக்கும் ,அந்நேரம் நடக்கும் வகுப்பு அவளுக்கு எட்டிக்காய் க்கசப்பாய் மாறிப்போகும்.P T முடிந்து அவன் வந்தால் தான் அவளுக்கு உயிரே/

கரெக்டாகஅவளதுகிளாஸ்ஜன்னலிலிருந்துபார்த்தால்பிளேகிரவுண்ட்தெரியும். அந்த கிரவுண்டில்தான் அவளது உயிர் இருக்கும்,கோபால் விளையாடி விட்டு வரும்வரை,வாரம்இருமுறைநடக்கும்P.Tபிரியடில்கோபாலுக்குவாய்ப்பதும் பிடித்ததும் லேசான விளையாட்டுக்களே/மனம் போல் மாங்கல்யம் என்கிற சித்தெல்லாம் ஆறுமுகக்கண்ணனிடம் செல்லவில்லை,கிரவுண்டுக்கு வந்து விட்டால்அவர்சொல்லும்விளையாட்டுக்களைவிளையாடியே ஆகவேண்டும். இல்லையென்றால்கிரவுண்டுக்கு வரவில்லை என குறித்து வைத்து விடுவார்,

அதற்குப்பயந்தே பெரும்பாலுமாய் P.T பீரியடுக்கு வந்து விடுகிற கோபாலனை அன்று ஸ்டூலில் ஏற்றிவிட்டு விட்டார் ஆறுமுகக்கண்ணன். ஸ்டூலில் இருந்து புல்லப்பஸ்கம்பத்தை எட்டிப்பிடித்தவன் கால்கள்இரண்டையும்மடக்கிதொங்க ஆரம்பித்துவிட்டான்,ஸ்டூலைஅவன் காலடியிலிருந்து எடுக்கச்சொன்ன மாஸ் டர் டேய் காலைத்தொங்கப்போட்டுட்டு புல்லப்ஸ எடுடா ஒழுக்கமா என அரட்டஆரம்பிக்கவும்கீழேதரைப்பார்த்தவாறேகால்கள் இரண்டையும் தொங்கப் போடாமல்மடக்கியவாறேஅழுதுகொண்டிருந்தான். கம்பத்தில் தொங்கியவாறே/ P.Tமாஸ்டரும்கோபம்பொறுக்கமாட்டாமல் பிரம்பைக் கொ ண்டு இரண்டுஅடிகூட அடித்துப்பார்த்துவிட்டார், ஆனாலும்அழுகையும் நிப்பா ட்டாமல் கீழே தரையைப் பார்ப்பதையும் விடாமல் ஒரு சேர செய்து கொண் டிருந்தான்,

என்ன நினைத்தாரோ P.Tமாஸ்டர், ஸ்டூலைக் கொண்டுவரச் சொல்லி அவனை இறக்கிவிட்டுவிட்டார்.ஒருவேளைகீழேவிழுந்துகை,காலில்ஏதேனும்அடிபட்டு விட்டால்யார்பதில்சொல்வதுஹெட்மாஸ்டருக்கு.என்கிறஅவரதுநினைப்பின் மூலமாய் தப்பித்தான் அன்று தப்பித்தான் கோபால்.

அன்றுமகேஷ்P.T மாஸ்டரை வைத வசவிற்கும்,கருவிய கருவிற்கும் அளவில் லை.அப்படியெல்லாம்கோபால் மீது அபிமானமாய் இருந்தவள் தீடீரென பள்ளி யைவிட்டுநிற்கும்போதுகோபாலிடம்சொல்லிக்கொள்ளாமலேயே போய் விட் டாள்.

அவள்பள்ளியைவிட்டுநின்றஅன்றிலிருந்து நான்படித்து வெளியேறுகிற வரை என்னுடனேயேபயணித்துப்படித்தகோபால்இப்பொழுதுஎங்கிருக்கிறான்,மகேஷ் எங்கிருக்கிறாள் எனத்தெரியவில்லை என பாயுடன் பேசிய நினைவு சுமந்த பேச்சுகள்தாங்கியும்,இப்படியானநினைவுகளைஅசைபோட்டவனாத்தான்வந்து கொண்டிருந்தேன்தங்களது வீடு நோக்கி/

தங்களதுவீடிருக்கும்ஏரியாவைநெருங்கிவிட்டேன்கிட்டத்தட்ட.ஆனால்தங்களது வீடுதான்தெரியாது.ஒரு முறைநண்பருடன் வந்து போனது மறந்து விட்டது, சரி கேட்போம்சிறிதுதூரம்போய்யாரிடமாவது.என சிறிது நகன்ற வேளையில் தென்படுகிறது தங்களது வீடு,வீடு கூட அல்ல வீடு இருக்கும் சந்து.சந்தின் முனையில் அதன் எதிர்ப்புறம் என தெருவை மறைக்காமல் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக்ச்சேர்களில் அமர்ந்தும் நின்றுமாய் பேசிக்கொண்டிருந்தார்கள் 100 க்கும் மேற்பட்டவார்கள்.

அவர்கள்யாரும்தங்களின்உறவினர்களாய்த்தெரியவில்லை,எல்லாம் நண்பர் கள் தோழர்கள்மற்றும்அக்கம்பக்கத்தவர்களே,இருபக்கமுமாய் அடுக்கப்பட்டி ருந்த வீடுகளைவகிந்து போன நான் வண்டியை நிறுத்துவது எங்கு எனதேடிக் கண்டு பிடித்துஒருவீட்டின்முன்பாய் நிறுத்திவிட்டு அங்கு நின்றிருந்த ஓரிண் டு பேர்களுக்குவணக்கம்சொல்லிவிட்டுகைகட்டிநின்றுகொண்டிருப்பவனாய்,

நான்நின்றுகொண்டிருந்ததிசைக்குஎதிர்த்தாற்ப்போல்இருக்கிறசுவற்றில்தங்க ளுக்கு ஒட்டப்பட்டிருந்த கண்ணீர்அஞ்சலி போஸ்டர்கள் இரண்டு ஒன்றின் மீது ஒன்று உரசிக்கொண்டு ஒட்டப்பட்டிருந்ததாய் ,ஒன்று ரசிகர்மன்றத்தினரா ல் அடித்துஒட்டப்பட்டிருந்தது,இன்னொன்றுநட்புவட்டாரத்திலிருந்துஒட்டப் பட்டிருந்ததாய்/ஒருபோஸ்டரின்ஓரத்தின் மீது இன்னொரு போஸ்டர் ஒட்டப் பட்டிருந்ததாய், இப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தாரா னால் கோபம் வந்து விடுகிறது அவருக்கு/,

அவர்தொழில் முறையில்போஸ்டர்ஒட்டுபவர்,ஒரு போஸ்டருக்குஇவ்வளவு ரூபாய்என்பதுஅவரதுகூலி.ஆனால் அப்படி அவர் தொழில் முறையாய் ஏனோ தானோஎன ஒட்டிக் கொண்டு போக மாட்டார்,போஸ்டர் ஒட்டுவது ஒரு கலை என்பார்.சினிமாப்போஸ்டர்,ஒருகல்யாணநிகழ்ச்சிபோஸ்டர்,ஜவுளிக்கடை
விளம் பரப்போஸ்டர் எனமூன்றுவகையான போஸ்டர்களைஒரேநேரத்தில் ஒட்டுவார்,ஜவுளிக்கடைக்கு எங்கிருந்து எந்தஏரியா வரைஎனவும், கல்யாணப் போஸ்டர் எதுவரை ஒட்ட வேண்டும் எனவும்,சினிமா போஸ்டரின் ஆதிக்கம் எதுவரை இருந்தால் நல்லது முடிவு செய்பவராக அவர் இருந்தார்.அவரது முடி வையும்கடைக்கார்களும்,போஸ்டர்ஒட்டக்கொடுத்தவர்களுமாய்ஏற்றுக்கொண் டவர்களாக இருந்தார்கள்.

அவர்சொல்வார்,போஸ்டர்ஒட்டிஒட்டிஒருதெருவிலிருக்கிறவீட்டின்சுவரிலிருக் கிற மாடக்குழிமூடிதொப்,தொப்எனசப்தம் கேட்கும்.ஒரு இடத்திலானால் சுவற் றிலிருந்துஒன்றின்மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை பிய்த்தெடுத் தப் போது கிட்டத்தட்ட நான்கு இஞ்ச் கனத்திற்கு இருந்தது என்றார்.

அப்பொழுது அப்படியாய் இருந்திருக்கிறது போஸ்டர்களின்தேவை என்கிறார், பிளக்ஸ்போர்டுவந்திராத காலமாய்அது.இப்பொழுதுபோல் அப்பொழுதெல்லா ம் காசுக்கு போஸ்டர் ஒட்டுபவர்கள் மிகவும் கம்மியே அவரவர்கள் கட்சியின் போஸ்டர்களை அவரவர்களே ஒட்டிகொள்வார்கள்/ சினிமா போஸ்டர்களை தியேட்டரில்வேலைசெய்பவர்கள்ஒட்டுவார்கள்.இப்படிஅவரவர்வேலைகளை அவரவரேசெய்து கொண்டிருந்த காலங்களை விடுத்து இப்பொழுது எங்களைப் போலானவர்கள் தேவைப்படுகிற நேரமாய் இருக்கிறது இன்று/அதனால்தான் நாங்கள் தேவைப்படுகிறோம்.இது போலான வேலைகளுக்கு என அன்று ஒரு நாள் அவர் சொன்னது தங்களதுகண்ணீர் அஞ்சலிப்போஸ்டரைப் பார்த்தது மாய் ஞாபகம்வருகிறது,

அந்த ஞாபகத்துடனும் மிதமிஞ்சிய நினைவுகளுடனுமாய் தங்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்கிறவனாகிறேன்/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்வுகள் நெகிழ வைக்கிறது தோழரே...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

மனதை கனக்கச் செய்யும் நினைவுகள்

Rathnavel Natarajan said...

மிகவும் நெகிழ வைக்கிறது.