23 Jan 2015

ப்ளாங்கி,,,,,,,

தரையை பெருக்கும்போதுஅவர்களைபற்றியதானநினைப்புவருகிறதுஎனக்கு.

வீட்டின்பக்கவாட்டாகஇருந்தவெட்டவெளியில்நின்றவேப்பமரம்,புளியமரம், பன்னீர்மரம், அசோகமரம் என வகைக்கொன்றாய் இருந்த இடத்தைதோட்டம் என்றோம்.

மரங்களின் இலைகள் பச்சையாயும், மஞ்சளாயும், பழுத்தும் காணப்படுகிறது. மண்பிளந்து,துளிர்த்து,வளர்ந்து,கிளைபரப்பிபூத்துகாய்க்கிறசமயங்களில்இப்படி யான உதிர்வுகளை அவைஎதிர்பார்த்திருக்குமா தெரியவில்லை.

மண்ணும்,கல்லும்,இலைகளும்,பூவும்தூசியுமானவெளிஎதைச்சொல்லிஅழுத்து கிறதெனவும் பிடிபடவில்லை.

நாற்பது பவுன் நகை,நாற்பதினாயிரம் ரொக்கம் என்றார்கள்.அந்த காலத்தில் அதுபெரியவிஷயம்தான்..வீட்டின் ஒரே பெண் வாரிசு .

வழி வழியாக கொண்டுவந்த நகைகளை வைத்து பணத்தை எப்படியோ புரட்டி கட்டிக்கொடுத்தார்கள்.

“கா காசுன்னாலும் கவர்மெண்ட் உத்தியோகம்” என்கிற சொல்லாடல் மயக்கத் திலும்,அழுத்ததிலுமாய்செய்துவித்ததிருமணம்இப்போதுபஞ்சாயத்தில்நிற்கிறது.
கூட்டிஅள்ளும்உதிர்ந்தபூக்காளாய்,இளைகளாய்தூசியாய்,கல்லாய்,மண்ணாய் அவளது வாழ்க்கை சிதறுண்டு.

அவள்,அவள்எனச் சொன்னது அவளது தங்கையைப் பற்றி.

சொன்னவளுக்குவயதிருக்கலாம்முப்பதிலிருந்துமுப்பத்திஇரண்டிற்குள்ளாக.
சிவந்தநிறம்,களையானமுகம்,ஆளைஅடிக்கிறஅழகுஎனஇல்லையென்றாலும் பார்க்கபாந்தமாகத்தெரிந்தாள்.அணிந்திருந்தசேலையும்,ஜாக்கெட்டும்மேட்சிங் கற்று குப்கலர்களில் சாதாரணமாக.

எண்ணை வழிந்திருந்த முகத்தில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டவைத்திருந்தாள். அரைகுறையாக இருந்த கூந்தலை அவசரகோலத்தில் அள்ளிமுடிந்திருந்தாள்.
பேச்சிற்குதக்கவாறு கைகளின்அசைவும், முகபாவனையும்.

”அவளுக்குஒருவழிபண்ணனுமில்ல” என்றவாறு உள்ளேநுழைகிறாள். அவள்  எங்களது வங்கியின் வாடிக்கையாளர்.

கட்டிடத்தின்முகப்பில்நின்றகம்பிகேட்,அதைதாண்டியமரக்கதவு,அதையும்தாண் டி வந்தால் கண்ணாடி கிளாஸ் போட்ட நீளமான மரக்கவுண்டர்.அது வங்கிக ளுக்கேயென கண்டுபிடிக்கப்பட்டது போலும்.

அதன்பின்னே அமர்ந்திருக்கும் நான்.கிளார்க்,மேலாளர் என நீண்டிருந்த சின்ன தான வரிசை.

அவள் என்னை நோக்கிதான் வந்தாள்.நான் பொதுவாகவே நான்,எனது என மட்டும் இல்லாமல் பதினைந்து அடி நீள கவுண்டரில் இருக்கும் மூன்று கம்யூட்டர்களிலும் மாறி,மாறி வேலைபார்ப்பவனாக இருப்பதால் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் என்னை நோக்கியே.
அவளும் அது மாதிரிதான். அவளது எண்ணம்,அதன் மீதான் படர்வு அவதானிப்பு எல்லாம் சுமந்தவளாய் வந்திருக்க வேண்டும்.
வீடு,வீடு தாண்டி நடை,நடை தாண்டி நீண்டு கிடந்த தெரு,தெருவில் கால் பதித்த மனிதர்கள்,மனிதர்களின் தடம் வாங்கிக்கிடந்த மண்,மண்கீறி ஓரங்களில் முளைத்துக்கிடந்த பச்சைகள் என எல்லாவற்றின் மீதிலும் தனது எண்ணப் படர்வுகளை படரவிட்டவாறும்,போர்த்தி எடுத்தவாறும் வந்திருக்க வேண்டும்.
துருவேறியகம்பிக்கிராதிகளும்,அழுக்கேறி நின்ற மரக்கதவும்,எனக்கு முன்னாலிருந்த மரக்கவுண்டரும் அதையே முன் மொழிந்தது.
எத்தனைநாள்நினைவோ,எத்தனை நாள் சுமத்தலோ?அதையெல்லாம் ஒன்று திரட்டி ஒற்றை சொல்லாக இறக்கி பிரயோகித்து விட்டாள்.
எல்லாம்பூபதிசம்பந்தப்பட்ட பிரச்சனையாய்த்தான் இருந்தது.அவளது தங்கை மாப்பிள்ளைதான் பூபதி.

பூபதிநேற்றுகூடபேசினான்.அண்ணேஎங்கஇருக்கீங்க,ஆஸ்பத்திரியிலயா
என்றான் செல்போனில்.

“என்னது இது ஆரம்பப்பேச்சே அபசகுணமாக இருக்கிறதே”?என்கிற சலிப்பில் “என்னண்ணே,என்னவிஷயம்”? என்கிறேன்.”ஹார்ட் ரொம்ப வலிக்குதண்ணே. விருதுநகர்பஸ்டாண்டுலஇருக்கேன்.இனிமேதான்ஆஸ்பத்திரிக்கு போகணும் னே”, என்கிறான். முழுதண்ணியில் இருந்தான்.

அவனதுஅளவுக்கு“முழு”என்பது எவ்வளவு எனத் தெரியவில்லை.அது எப்படி என தண்ணியில் கற்று தெளிந்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். எண்ண னே,என்ன சொல்றீங்க?என்கிற அதட்டலான குரலோடு போனை கட் பண்ண சொல்லிவிட்டு ராமராஜீக்கு போன் பண்ணினால் அவனைப்பற்றிய அவரது பேச்சின் பதிவு வேறுமாதிரியாக இருந்தது.

“அவனுக்கு நெஞ்சுவலியும் இருக்காது,.........இருக்காது.எவனாவது கடன் குடுத் தவன்தேடிவந்திருப்பான்,தொந்தரவுக்குஆத்தமாட்டாமஇங்கிட்டுதப்பிச்சுவந்தி ருப்பான்.தண்ணியை போட்டிருப்பான்.

ஆபிசுலயிருந்துதப்பிச்சுவந்ததுக்குஏதாவதுசாக்குவேணுமில்ல.அதான்ஓங்கிட்ட இப்படி பேசியிருப்பான்” என்றார்.

“அதுசரிஒனக்குஎதுக்காகபோன்பண்ணுனான்,நெஞ்சுவலின்னாநேராஆஸ்பத்தி ரிக்குபோறதவிட்டுட்டு,க்ளாஸ்போர்எம்ப்ளாயி பூராம் இப்படித்தானப்பா இருக் கீங்க.மொதல்ல அவன்பொண்டாட்டிய விட்டுநாலுமிதி மிதிக்கச்சொல்லணும் அவன அப்பத்தான் உருப்படுவான் ராஸ்கல்” “இல்ல அவனப் பத்தி முழுசா ஒனக்குத்தெரியாது.வாங்குறசம்பளத்தப்பூராவும்தண்ணியடிச்சுதொலைச்சிட்டு  வெளியிலகடன்கப்புன்னுஅலைஞ்சா?அவன்அலையிறதுமட்டுமில்லாமஅவன் வீட்டுக்காரிய விட்டு என்னையமாதிரி ஆள்கள்ட்ட கேட்க விடுறது,அது பாவம்
அப்புராணி.வாய்திறந்தா நாலு வார்த்தைக்கு மேல பேசமாட்டேங்குதுஅது  அவனுக்கு ரொம்ப செளகரியமாப்போச்சு”என்றார்.

ராமராஜ் பூபதியுடன் வேலைபார்க்கும் கிளார்க்.

பூபதிக்குபோன்பண்ணினேன்மனசுகேட்காமல்.எதிர்முனையில்அவன்போதை கலையாமல் பேசினான்.இப்ப ஒண்ணுமில்லண்ணே, ஆஸ்பத்திரிக்குப் போயி ஊசிபோட்டுட்டுகிளம்பீட்டுஇருக்கேன்.ஒங்கள“ட்ஸ்ட்ரப்”பண்ணுனதுக்குசாரி  ண்ணே என முடித்தான்.

அவன்பேச்சினது முடிவின் தொடர்ச்சியாகஅவள் வந்திருக்க வேண்டும் இப்பொழுது.

நேத்து இங்க வந்திருந்தாராமில்ல?,என பேச்சை மாற்றும் விதமாக கேட்டேன். ஆமாம் வந்திருந்தாரு,வந்திருந்தாரு,அவரு வந்த வரவப் பாத்தா நாய் கூட என்னான்னுகேட்டிருக்காது.அப்படி ஒரு மணத்தோடவந்தாரு, நெற தண்ணி யோட ரோட்ல கெடந்தவர எங்க வீட்டுக்காரருதான் தூக்கீட்டு வந்தாரு.வந்த கோவத்துல செருப்புட்டு நாலுபோட்டு படுக்க வச்சாரு, அன்னைக்கு பூராம் புள்ளைங்க சாப்புடல, தூங்கல,வெளையாடல இவரையேவெறிச்சு,வெறிச்சு பாத்துட்டு நின்னுக்கிட்டு இருந்துச்சுக, நல்ல அழகு வாஞ்ச புள்ள,அப்புராணி புள்ள,சீரழிச்சுட்டாரு,இனியும் அவரு கூட வாழனுமா அவன்னு பேசிமுடிக்கப் போறம் இன்னைக்கு.

“வருசமெல்லாம்சோத்துக்கும்,துணிமணிக்கும்,கைசெலவுக்கும்,இவன்ட்டலோல் பட்டு,புடுங்குப்பெத்து,சீரழிஞ்சு,சின்னாபின்னபட்டு,கருமாயப்பட்டுஅலையுறது க்கு ஒரேயடியா எங்க வீட்ல வந்து இருந்துட்டு போகட்டும்னு பேசலாம்ன்னு இருக்கோம்”.என முடித்தாள்.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான முடிவு...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கதை நகர்வும் முடித்த விதமும் சிறப்பு..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

மனிதர்களைப் பேசி நகரும் கதையில் தீர்க்கமான முடிவு...
அருமை அண்ணா...

உஷா அன்பரசு said...

நீங்க கதைக்கு வைக்கும் தலைப்புகளை மிகவும் ரசிக்கிறேன்...அன்றாட சின்ன சின்ன நிகழ்வுகளைகூட ரசனையுடன் சொல்லும் சிறப்பான எழுத்துக்கு சொந்தக்காரர் விமலன் சார்...

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

மகிழ்நிறை said...

இப்படி பட்ட கணவரிடம் அன்போடு நடந்துகொள்வதுதானே நம்நாட்டு பெண்களுக்கு வழங்கப்படும் அறிவுரை. கல்(கள்)லானாலும் கணவன்:((((((

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.