26 Jan 2015

ஊளுந்த வடை,,,,,

இப்படியாய்மதியவேளையின் ஒண்ணரை மணிப்பொழுதில் ரோட்டோர டீக் கடையில் நின்று டீ சாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது.கூடவே ஒரு வடையின்சேர்மானமும்இருந்தால்சேமம்எனஎண்ணலாகாது,
சாப்பிடவேண்டும்.மணிஇரண்டுஅல்லதுஇரண்டரையாவதுஆகிப்போகலாம்
சாப்பிடுவதற்கு.அதற்குள்ளாகப்போய்போய்எதற்குஒருவடையைசாப்பிடு
வானேன்.அனாவசியமாக.தவிரகாலைடிபனேதாமதமாகத்தான்சாப்பிட்டான் .வயிறு இன்னும் கும்மென இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமைதானே இன்றுசாப்பிடலாம் சற்றே தாமதமாக, அதற்குத் தான்அனுமதியிருக்கிறதுசட்டரீதியாக மிடில் கிளாஸ் என்கிற உட்பிரிவில்/
அல்லது மனோரீதியான சிறுமாற்றத்தில்எனஇவன்நினைத்துசாப்பிட்ட வே ளை காலைமணி பதினொன்றை தாண்டியிருந்தது, 
மனைவிகூடசப்தம்போட்டாள்.இப்பிடிசாப்ட்டீங்கீன்னாஒடம்பு என்னத்துக்கு ஆகுறதுஎன/நாங்கள்லாம்இன்னும்கொஞ்சநேரத்துலமதியச்சாப்பாடு சாப்புட போறோம்.எனவும்/
ஆமாம்அப்படித்தான் ஆகிபோகிறது வாரநாட்களின் இறுதியிலான ஞாயிறு களில்/ வாரம் முழுவதுமாய்வேகுவேகுவெனஉழைத்தஉழைப்பின்களைப்பு அன்றுஒருநாளில்தான்இளைப்பாறும்மனோநிலைபெற்றுஉருக்கொண்டு விடுகிறதாய்,.அல்லது ரிலாக்ஸாகிப்போகிறதாய்/ இப்படியாய் களைப்பாய் உருக்கொண்டமனதுக்குவடிகாலாய் நீண்ட தூக்கமும் சற்றேயான இளைப் பாறுதலுமே என ஆகிப்போகிறது.
இதுபோகமுதல்நாள்இரவுதாமதமாய்தூங்கிக்கொள்ளலாம் என்கிறமன முன் அனுமதி கிடைத்துவிடுகிறதிருப்தியோடு தூங்கி எழுகையில் இப்படியாய் ஆகிபோகிறதுதான்.
உளுந்த வடை,பருப்பு வடை மசால் வடை உடன்சேர்ந்துகாணப்படுவதாய் பஜ்ஜிகள்கொஞ்சம் என இரண்டுஅலுமினியட்ரேக்களில் குவிந்துக் காணப் பட்டதாய்/
இதேகாலைவேளை என்றால் நான்குஅல்லது ஐந்து ட்ரேக்களில்இருக்கும் வடைகள். வடைகளின் ஒவ்வொரு ரகத்திற்குமாய் ஒவ்வொரு தட்டு என இருக்கும் ஐந்து ட்ரேக்களில் எப்பொழுதுமே ரவாப்பணியாரத்திற்கென நிரந் தரமாக ஒரு தட்டை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.
அதிகாலையின் நான்கு மணிக்கெல்லாம் தட்டு நிறைந்து காணப்படுகிற ரவாப்பணியாரம் மில்களின் நைட் ஷிப்ட் முடிந்து வீடு போகிறவர்களுக்கு உதவும். அல்லது நைட் ஷிப்ட் முடிய இன்னுமாய் ஒரு மணி அல்லது அரைமணிநேரமேஇருக்கிறபோதுஒருடீயுடன் சேர்ந்த பணியாரங்கள் இரண் டு அல்லது மூன்று என்கிற கணக்கில் சாப்பிடுவதற்காய் பார்சல்கள் போகும்.
நைட்ஷிபட்பார்த்து முடிந்து போகிறவர்களுக்குஇதுஒரு பெரும் பிரச்சனை யாய் எப்பொழுதுமேஇருந்ததுண்டுதான்.”அதிகாலைவேளையின்கபகபவென பசிக்கிறவயிற்றுக்கு ஏதாவதுபோடவேண்டும்,போடவேண்டும்என்ன  போட் டேஆகவேண்டும்.இல்லையெனில்பசிமூளைக்குப்போய்அதைத்தூண்டி மென்கோபத்திலிருந்து,பெரியதானதுவரைவரவைத்துவிடும்,ஜாக்கிரதை”என்கிற எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டே இப்படியெல்லாமுமாக எனச் சொல்கிற அவர் கள் பசிக்கு ஆற்றமாட்டாமலும்,பழக்க தோஷத்தாலும் இப்படியாய் செய்து விடுவதும் உண்டு. 
இன்னும்சிலபேர் இருக்கிறார்கள் .இரவு ஷிப்ட்டின் போது இடையில் சாப் பிடுவதற்காய் கொண்டு வந்தசாப்பாட்டைமிச்சம் வைத்து அதிகாலையில் ஷிபட்முடியப்போகிற வேளைக்கு சற்று முன்பாய் சாப்பிட்டுக் கிளம்புவா ர்கள்.
பாண்டியன் ஆயில்மில்லில்வேலைபார்க்கும்போதுதான் இவனுக்குள்ளாய் அப்படி ஒரு பழக்கம் வந்தது,அதை விதைத்தவன் உடன்வேலை பார்க் கிற பரமசிவம்,இவன்,
பரமசிவம் கோட்டைப்பட்டி மாமா, கங்கா அத்தை எல்லாம் ஒரே ஊர்க் கார்கள்,இவர்கள்தவிர்த்துடவுனிலிருந்துநான்குபேர்எனஇரவு ஷிப்ட் வேலை யை இவர்கள்எட்டு பேரும்தான் பார்த்தார்கள்.மில் முதலாளி கூடச் சொல் வார் ”என்னப்பா பரமசிவம் எட்டு பேர் கொண்ட கூட்டணியா,நீங்க கூடிப் பேசுனாமில்லுலநைட் ஷிப்ட் வேலை நடக்கவிடாம பண்ணீருவீங்க போல இருக்கே/இதஇப்பிடியேவிடக்கூடாதே,ஆரம்பத்துலயேவாலவெட்டிவைக்க ணுமே” என்பார்.முதலாளியின்அந்தப்பேச்சுக்குபரமசிவம்சிரித்துக்கொண்டே ஏதாவதுபதில்சொல்லுவான், அப்படியே அவர்களுக்கு தேவையானதையும் கேட்டு வாங்கிக் கொள்வான், காரியம் சாதிக்கிறதுல கெட்டிக்காரனப்பா நீயிஎனச்சொல்லும்முதலாளிக்குப் பரமசிவத்தை பிடித்திருந்தது. பரமசிவத் தைவைத்துமுதலாளிக்கும், முதலாளியை வைத்து பரமசிவத்திற்கும் பரஸ் பரம்ஆக வேண்டிய காரியங்களே அவர்களது உறவை தக்கவைத்துக் கொ ண்டதாக.
ஒரு நாள் இரவு ஷிப்ட்டின் போது கோட்டைபட்டி மாமா கங்கா அத்தை யின்பின்னாலேயே ஓடைப்பக்கமாய் போய்விட்டார்,என்ன, அவர்களுக்குள் ளாய் பல நாட்களாய் இருக்கிற பழக்கம் இது .இவனைத்தவிர இரவு ஷிப்ட் பார்க்கிற எல்லோருக்குமேஅது தெரிந்திருந்தது.பரமசிவம்கூட ஒரு தடவை சொல்லிப் பார்த்தான். 
“வேண்டாம்வேலபாக்குறயெடத்துலஇப்படி என.”ம்ஹீம்” கேட்கிற வழியைக் காணோம்.அவர்களிருவரும்/இதில் கோட்டைப்பட்டி மாமாவைக்கூட சொ ல்லி விடலாம்,கங்கா அத்தை இருக்கிறாளே ம்ஹீம்,,,,,,,,அவர்கள் இப்படி போய்வருவதைமில்முதலாளிஒரு நாள் பார்த்து விட்டார்.”அட சண்டாளத் தனமே/இந்தச்சோலியில யெறங்கீட்டீங்கன்னா உருப் படாமப் போகுமே மில்லு. அதான பாத்தேன்.சமீப நாட்களா ரெண்டு பேரும் ஒண்ணுக்கு பின் னாடி ஒண்ணா மில்லு விட்டு வெளியே போறதும் அப்பு றமா கொஞ்ச நேரத்துலதிரும்பிவாரதுமா இருக்குறத.சரி ஒங்க தேவை அப்பிடியாக் கூட இருக்கலாம்,அததொழில்ப்பண்றயெடத்த்துலயாவச்சிக்கிறது.கிறுக்கு,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,இந்தபரமசிவம்கூடஇதஏங்கிட்டகவனப்படுத்தாமஉட்டுட்டானே? ஊர்ப் பாசமா”,என முதலாளி நிறைய பேசியபோதுதான் இவனுக்குத் தெரிந்தது, இப்படி ஒன்று நீண்ட நாட்களாய் ஓடிக்கொண்டிருக்கிறது என.
கோட்டைப்பட்டிமாமாவின்வேலையையும்,கங்காஅத்தையின்வேலையையு ம்சேர்த்துஇவன்எத்தனைநாள்செய்திருக்கிறான்.கடைசியிலஅதுஇதுக்குத் தானா தூ,,,,,,,,,என இவன் மீதே இவன் காறி உமிழாத குறையாய் அலுத்துக் கொண்டநாட்கள் உண்டு.
அம்மாதான்சொல்வாள்.”ஏன்இப்பிடிபோயிகஷ்டப்படுறபேசாமஇங்கன காடு கரைகள்லகெடைக்கிறவேலைகளபாத்துக்கிட்டுஇருக்கவேண்டியதுதான, சரி நீ சொன்னாலும் கேக்க மாட்ட இங்க எங்க வேல இருக்குன்னுசொல்லுவ, அதெல்லாம்கூடகெடக்கட்டும்விடு.அத்ததானன்னு சொல்லீட்டு அந்த கங்கா கூடரொம்பப்பழகாதஜாக்கரதையா இரு”என்பாள்,ஏன் எனக் கேட்டால் பரம சிவத்திடம்கேட்டு தெரிந்து கொள்,இதையெல்லாமாபெத்ததாயிசொல்லீட்டு ருக்க முடியும்”என்பாள். 
இவன்.இரவு ஷிப்ட் முடிந்து கிளம்பும் போதே மில்லிலேயே குளித்து விடு வான்.அன்றுஒருநாளின்இரவுஷிப்ட் முடித்துவிட்டுகுளிக்கக்கிளம்பப் போகி றநேரமாய்பசியில்கிறுகிறுவெனவந்துவிட்டது,தள்ளாடிகீழேவிழபோனவனை கங்காஅத்தைதான் கைத்தாங்கலாய் கூட்டிகொண்டு போய் மரத்தடியில் உட்காரவைத்துவிட்டுஓடிப்போய் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து முகத் திலடித்து குடிக்கக் கொடுத்தாள்.
அன்றுபரமசிவம்சொன்னதுதான் இன்றுவரை அவன் கடை பிடிக்கும் பழக்க மாய் இருந்து வருகிறது.இரவு ஷிப்ட்டின் போது இடை வேளையில் சாப்பு டுகிற சாப்பாட்டில் கொஞ்சம் மிச்சம் வைத்து ஷிப்ட் முடியப் போகிற நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது என்பதை.அப்படியாய் கொண்டு வராதவர் களுக்குகைகொடுக்கிறதாய்டீக்கடைகளின்ரவாப்பணியாரங்களும், டீயும்இரு ப்ப தாகஎன்பான் பரமசிவம் என்னுடன் சாப்பிட்டுக் கொண்டே/
ரோட்டின் வடக்குப்பக்கமாய் இருக்கிற பர்மாக்கடையும் ரோட்டின் கிழக் குப் பக்கமாய் இருக்கிற தோழர்கள் டீஸ்டாலும் அதிகாலை நாலு மணிக் கெல் லாம் ரவாப்பணியாரத்துடன்ரெடியாகிவிடும்.
அந்தக் கடையின் டீ மாஸ்டர் தான் சொல்வார்.”சார் நாலுமணிக்கு கடை தெறக்குறதுன்னாநான்எத்தனமணிக்குஅடுப்பப்பத்தவைக்கணும்ன்னுபாருங்க, மூணு மூணேகாலுக்காவதுகடைக்குவரணும்.அப்படிவர்ணும்ன்னா வீட்டுல ரெண்டு மணிக்காவது எந்திருக்கணும்.ராத்திரி ஒருமணிக்கு மேல தூக் கமேவராது.சார் எனக்கு/தூங்கீராமஎந்திருச்சி கரெக்ட் டயத்துக்கு கடைக்கி ஓடணுமேங்குற நெனைப்புல கெடந்து ஒழலும் மனசு. படுக்கை யில பெறண்டுக்கிட்டே இருப்பேன்.கரக்டா ரெண்டு மணியானதும் என்னயறிம படுக்கையிலஇருந்துஎந்திரிச்சிஒக்காந்துருவேன்.அப்பிடியேபடுக்கையசுருட்டி வச்சகையோடதலையில ரெண்டு தண்ணிய ஊத்திக் கிட்டு ஓடியாந்துரு வேன்.
”இப்பிடித்தான்ஒருதடவநேரமாகுதுன்னுசைக்கிள்லவேகமாவந்துக்கிட்டிருந்
தேன், பஸ்டாண்டு முக்கு வளையிரப்ப என்னைய மாதிரிவேகமா வந்த டீ மாஸ்டரும்அவரும்கடைக்குப்போகவேண்டியவர்தான்.பாண்டியன்காலனியில இருந்துவர்றவரு,நானும்அவசரமானமனோ நிலையிலசரியா கவனிக்கல, அவரும்நானும்எதுத்தெதுத்தாப்லமோதிக்கிறமாதிரிஆகிப்போச்சி.அவரு கொ ஞ்சம் சுதாரிச்சி ரெண்டு பிரேக்கையும் புடிச்சி கீழ சாய்ஞ்சதால ரெண்டு பேரும்எந்த சேதாரமுமில்லாம தப்பிச்சோம்.கீழ விழுந்த அவர தூக்கி விட் டு நைட்டு புரோட்டாக்கடையில தண்ணிவாங்கிக்குடுத்துஅவரு கூட அவருவேல பாக்குற கடைவரைக்கும் போயி விட்டுட்டு வந்தேன். அவருக் குன்னாபாவம்,மொழங்கால்லயும்,மொழங்கையிலையும்நல்லஅடி.விழுந்த வேகத்துல கையிலயும்,கால்லயும் செராச்சிருச்சி.கைலி மொழங்கால் கிட்டநஞ்சிகிழிஞ்சிபோச்சி/மத்தபடி பெருசா ஒண்ணும் இல்ல.அன்னையில யிருந்துஇன்னைய வரைக்கும் ரோட்டுலஎங்க பாத்தாலும் சிரிச்சிக்குவாரு. அன்னைக்கி மத்தியானம் வேல முடிஞ்சிபோகும்போதுஅவருகிட்டகொஞ்ச ம் திண்பண்டம் வாங்கிக் குடுத்துட்டுப்போனேன். ஒங்களுக்காக இல்லாட் டாலும் வீட்டுல புள்ளைங்களுக்கு குடுங்கன்னுசொல்லி குடுத்துட்டு வந் தேன்” என்பார்.
இந்தடீக்கடைவாசலிருந்தபோதுதான்ஒருநாள்டாக்டர் போன் பண்ணியிருந் தார்.டாக்ரென்றால் அது ஊருக்கு இவனுக்குபிரெண்ட்அல்லதுதோழன் அல் லது போடா, வாடா,,,,,,,தோள்கொடுக்கும் தோழனாயும் தோள் கேட்கும் நல் லமனிதனாயும்இருக்கிறவர்.மிகவும் சிரமப்பட்ட குடும்பத்திலிருந்து டாக்ட ருக்குப்படித்து வந்தவர், ஊசி மருந்து மாத்திரைகூட அவரிடம் அப்புறம் தான்.கனிவானபேச்சும்அன்பானஉபசரிப்பும்கவனிப்புமேஅவரதுஅடையாளமா
கிப்போனது.எதுக்குஅனாவசியாமாஅதுகளப்போட்டு,,,,,,தேவைன்னாநானே
தர்ரேன்என்பார்.அப்படிச்சொல்பவர்சமயங்களில் ஒரே ஊசி மாத்திரையாய் கொடுத்துத் தள்ளிவிடுவார்.
கேட்டால்“இப்பிடிக்குடுக்கைலையின்னாநம்மளபைத்தியகாரங்கன்றாங்க, சரி நம்மமட்டும்எதுக்கு கோவணம் கட்டணும்ன்னு விட்டுருவேன். தவிர நான் ஒண்ணும் வெறும் ஆளு இல்லையில்லப்பா”. என்பார்,,,,,அவரின் இந்தப் பேச்சும் நடப்பும் கண்டிப்பும், கறாரும் அவரிடம் வெகுசில நாளைக் கே காணப்படும்.அப்புறமாய் ஆரம்பித்து விடுவார் அவரது தாராளங்களை.
அப்படியாய்திறந்தமனதும்நல்லமனதும்வாய்க்கப்பெற்றஒருவரைஸ்னேகித
ராகபெற்றிருப்பதுஇவன்பெற்றபாக்கியமே/டீயைக்குடித்துவிட்டுகாசுகொடுக்
கையில் இவனைக்கவனித்த டீக்கடைக்காரர் வடை கட்டுமா சார் என்றார், இவனதுபார்வைமுழுவதுமாய் வடைத்தட்டில் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து/. இப்படியாய் மதிய வேலையின் ஒண்ணரை மணிப் பொழுதில்
ரோடோரடீக்கடையில்நின்று டீ சாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது.. 

6 comments:

 1. வணக்கம்
  கதையை படித்தவுடன் பசி தீர்ந்து விட்டது.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. Replies
  1. வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. பரந்த மனது கொண்ட நண்பர் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete