29 Jan 2015

கவசம்,,,,

விருதுநகர் டூ மதுரை சாலை அது. நாற்கரச்சாலையின் வசதியை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டதாயும்/

இன்றைக்குபேருந்தில்போய்க்கொள்ளலாம்எனஇருசக்கரவாகனத்தை வாகனக் காப்பகத்தில் நிறுத்திவிட்டுவெளியேவருகிறேன் கையில் டோக்கனுடனும், வண்டியின் சாவியுடனுமாய்.

இதுஇரண்டாவதுசாவி.மெக்கானிக்கின்கையைக்காலைப்பிடித்துவாங் கியடூப்ளிக்கேட் சாவி இது.முதல் சாவிக்குப் பின் ஸ்பேர் சாவியும் தொலைந்து போக வேறு வழியற்று போகக்கூடாது என நினைத்து மெக்கானிக்கிடம் போய் நிற்கிற மாதிரி ஆகிப்போனது.

அவன் அன்று பண்ணிய கிராக்கி உலகக்கிராக்கி எனலாம். வண்டி உங்களதுதானாசார்,எங்கிருந்ததுஇதுநாள்வரை.ஏன்இப்படிஆகிப்போனது. சாவியைஇவ்வளவுஅஜாக்கிரதையாகவா வைத்திருப்பது. உங்களை நம்பி அரசு ஒரு வேலையையும் கொடுத்திருக்கிறது.ஹீம்”என்கிறது மாதிரியானஅவனதுஅலட்சியபார்வையுடனானபேச்சுக்கும்எடுத்தெரி தலுக்குமாய் சேர்த்து அங்கேயே நாண்டு கொண்டு விடலாம்போல தோனியது.

அவன்தான் சொன்னான். பின்டயர் மிகவும் தேய்ந்து வழுக்கை விழு ந்து மோசமாக உள்ளது, சீக்கிரம் மாற்றி விடுங்கள். இல்லை யேல் எங்காவதுநடுவழியில்சிரமப்படவேண்டியிருக்கும்,பார்த்துக்கொள்ளு ங்கள்”என அலட்டலாய் சொன்னது ஏனோ இப்பொழுது நினைவுக்கு
வருகிறது.

போனவாரம்தான் வண்டியில் ஹெட்லைட் டூமை மாற்றினேன் வாக னக் காப்பகத்தின்சீரில்லாதமேடு பள்ளமான தரை வண்டிகள் வைக்க லாயக்கற்றதாய் தன்னை நிலை நிறுத்திக் காண்பித்தது.போன நாட்க ளில் பெய்த மழைக்குவடிகாலாய்தடம் காண்பித்த தரை வாய் பிளந் து ம், பள்ளம் காட்டியும், வாய்க்காலாய் ஓடி விரைந்துமாய் இன்னும் சரி செய்யப்படாமல் தன் மேனி காட்டியும் அடைகாட்டி சிரித்துமாய்.

அப்படியான சீரற்றதரையில் வண்டிகள் ஒழுங்காக அமர முடியாமல் தன் நிலையி லிருந்து தவறியும்,ஓரங்கட்டி எடுத்து வைக்கும் போது நிலைதடுமாறிஅருகிலிருக்கிறவண்டியின்மீதுசாய்ந்தும்சேதப்பட்டு விடுகிறது,அப்படியாய்சேதப்பட்டுஉடைந்ததுதான் எனது வண்டியின் ஹெட்லைட்டூம். இதைவாகனக்காப்பக உரிமையாளரிடம் சொன்ன போதுநாங்கள்ஏலத்திற்குஎடுத்ததொகைக்குமேல்ரொம்பவும் இல்லா விட்டாலும்கொஞ்சமாவது லாபம்பார்க்கவேண்டும். இதெல்லாம் சரி செய்து கொண்டிருந்தால் எங்களது பிழைப்பும் இப்படி ஆகிப்போகும்” என பெயர்ந்து ஒடி விரிந்திருந்த வாக்கனக்காப்பகத்தின் தரையை காட்டிச்சிரிக்கிறார்.

காப்பகத்தின்அருகிலிருந்தகடையில் டீக்குசொல்லிவிட்டு மதிய சாப்பட்டிற்காக ஒரு வடை வாங்கிபையில்போட்டுக் கொள்கிறேன். குடித்துக்கொண்டிருந்தடீயின்மிடறுகள்ஏனோமிகருசியாகதெரிந்தது அன்று.கடைக்காரரிடம்சொன்னபோது மேலும், கீழுமாய் என்னை ஏறஇறங்கப்பார்த்தார்.”எப்பொழுதும்இப்படிசொல்லாதவன்சொல்கிறான்
என்றால்ஏதும் விசயமிருக் குமோஎன்பதுபோலிருந்த பார்வையுடன் நான் நீட்டிய ஹெல்மெட்டை வாங்கிகொண்டான்.(ஹெல் மெட் கொ டுப்பதற்காகத்தானே இத்தனையும்)

சிவா வாங்கிக் கொடுத்தஹெல்மெட் இது.ஊரெல்லாம் ஹெல்மெட் கெடுபிடியிலும்,போலீஸ் சார்ஜ் பண்ணிகொண்டிருந்த நாட்களொன் றின் நகர்வில் வாங்கியதிந்த ஹெல் மெட்.

பிடித்தால்ஸ்பாட்பைன்,எங்குபார்த்தாலும்பிடிக்கிறார்களாம்.விரட்டி,
விரட்டியும் கூட,,,,,,,,என்பது மாதிரியான உபரியான தகவல்களை சுமந்து கொண்டு எத்தனை நாட்கள்தான் ஹெல்மெட் இல்லாமல் தப்பிப்பது,அல்லதுபோலீஸார்நிற்காத பாதையாய் தேர்ந்தெடுத்து செல்வது?பலநாள்,,,,,,,,,என்கிறசொல்படிஒருநாள்ஹெல்மெட்வாங்கி விட்டேன்,ரோட்டோரம்போட்டுவிற்றுக்கொண்டிருந்தார்கள்.கையில் 250க்குமேல்இல்லை.தோள்ப்பையின்உள்ளறையெல்லாம்தேடிப்பார்த் தும்அகப்படவில்லைரூபாய் என்றதும் ஹெல் மெட் வாங்கும் பொறு ப்பை சிவாவிடம் விட்டுவிட்டேன்.
பழக்கமானடீக்கடையது.இதற்குஎதிர்த்தாற்ப்போலரோட்டின்அந்தப்
பக்கம் உள்ள கடையில் டீ இன்னும்கொஞ்சம்நன்றாகவேயிருக்கும், ஆனால்இந்தப்பக்கம்வந்தால்இந்தக்கடையில்தான்டீ,வடைஎல்லாம். வீட்டுக்கு வடை பார்சல்என்றால்கூடஅது இங்குதான்.பழக்கமுறிப்பு வேண்டா மே என்கிற உயர் நவிற்சி மனோ பான்மை காரணமாக்கூட இருக்கலாம்,அது இப்போது ஹெல் மெட் கொடுத்து வாங்குகிற அளவுக்குஉதவுகிறது,இல்லையெனில்இதைஒருகைக்குழந்தையைப் போல தூக்கிக்கொண்டு திரிய வேண்டும் எங்கு போனாலும். வண்டி யிலேயே வைத்துப்பூட்டலாம் என்றால் அது அவ்வளவு பாதுகாப்பா னதாய் தெரியவில்லை. நம்பி வாகனக்காப்பகத்திலும் கொடுத்து விட்டு வர முடியவில்லை.ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஹெல் மெட்டின்மீதுஇழுக்கப்பட்ட கோடு கோடு களாய்த் தெரிகிறது மாலை யில் வண்டியை காப்பகத்திலிருந்து எடுக்கும் போது. இல்லையென் றால்முன்பக்கம்முகத்திற்குநேராகதொங்குகிறபைபர்கிளாஸ் உடை ந்து போகிறது.மனதுக்கு மிகவும் சங்கடமாகி விடுகிறது இதையெ ல்லாம்பார்க்கையில்.இது இரண்டாவது ஹெல்மெட், இனியொரு முறை என்னால் 350 ரூபாய் செலவழிக்க முடியாது அல்லது அந்த மனோநிலைக்குநான் தயாராக இல்லை.ஆனால் என்னதான் செய்ய? அவசியம் வரும் பொழுதும் நெருக்கடி வரும் பொழுதும் செலவு செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது.தவிர அவசிய மற்றதையும் சில நேரம் சுமந்து அனாவசியத்திற்கு அல்வா சாப்பிட்ட கதையாக ஆகிப்போகிறது.

கதிரேசன் மாப்பிள்ளை அந்த டீக்கடையில் வேலை செய்தபொழுது வடைகளில்ஐந்துரகங்களும்,இனிப்புகளில்இரண்டுமாய்இடம்பிடித்து
இருந்தகடையாக.அந்த இரண்டில் ஒன்றுஅல்வா/

அதுஅவர்கள் தயாரிப்பா அல்லது வெளியிலிருந்து வாங்கி விற்கிறா ர்களாதெரியவில்லை. மாப்பிளையிடம் கேட்ட பொழுது அது தொழி ல் ரகசியம் என்றான்.ஒரு நாள் ஆசை மிகுதியில் வாங்கித் தின்று விட்டேன்.கூட ஒன்றுசேர்த்துத் தின்றதாலோஎன்னவோவயிற்றால் எடுத்து விட்டது ஒரு நாள் அலுவகத்திற்கு விடுமுறை சொல் கிற மாதிரி/அதை சரி செய்ய அவர்களது கடை வடையையே சாப்பிட வேண்டியதாகிப்போனது.

மாப்பிள்ளைகதிரேசன்தான்சொன்னான்.”ரொம்பப்போகலயில்லமாமா, இந்தாங்க, இந்த மாவு வடைய சாப்புடுங்க, சரியாப்போகும்”என.” அனுபவ மருந்து இது,இத மிஞ்ச ஒரு இங்கிலீஸ் வைத்தியமும் கெடையாது தெரிஞ்சுக்கங்க மாமா,,,, என்றான்.
அவனது ஆலோசனையின் பெயரில் அன்றிலிருந்து நான் அல்வா சாப்பிடுவதில்லை.நல்லவேலையாய்போனவயிற்றோட்டம்அதிகமா யில்லாததால்அல்வாவினால்மனபாதிப்பெல்லாம்ஒன்று மேற்பட்டு விடவில்லை.

மாப்பிள்ளையென்றால்கதிரேசன்சொந்தமெல்லாம்ஒன்றுமில்லை.
வேற்றுஜாதிகளுக்குள்உறவுமுறையைமுடிந்துவைத்துக்கொண்டிருக் கிற கிராமமாக இன்றளவும் இருக்கிற ஊரில்மாப்பிள்ளை வடக்குத் தெருவிலும்,நான் கிழக்குத் தெருவிலுமாககுடிகொண்டுஇருந்தவன். நல்லஊர்,நல்லமக்கள்,நல்லபழக்கமென்கிறஅடிப்படையில்நான் அவனது மாமாவாகவும்,அவன் எனக்கு மாப்பிள்ளையாகவும்இருந்த நாட்களும் கொஞ்சம் வினோதிப்பானவையாகவே/

அப்போதெல்லாம்அவன்சரக்கடித்துவிட்டு எங்காவது மட்டையாகி விழுந்து கிடப்பான்.அப்படி விழுந்துகிடக்கிறஅவனைவீடு சேர்க்கிற வனாகநான்தான் பெரும்பாலுமாய் இருந்திருக்கிறேன். அப்படியான நாட்களில் முளைத்தபழக்கம் இன்று கிளைவிட்டு டீக்கடை வரை வந்து நிற்கிறது.

அவன் வேலை பார்க்கிற ஐந்தாவது கடையிது. சொல்வார்கள் பொது வாக டீமாஸ்டர்கள்இப்படித்தான் எனஅதை நிரூபித்துவிட்டான் மாப்பிள்ளை என நான் சொல்லிவிடவில்லை.

கதிரேசன் அல்லம் பட்டியிலேயே வீடு பார்த்துக்கொண்டு இங்கேயே வேலை பார்க்கிறேன் என்கிறான்.கடையில் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடத்திற்கும் மேலாகிப் போனது,இப்போதுதான் உங்க ளைப் பார்க்கிற மாதிரி இருக்கிறது என்கிறான். மேலும் நேரம் கிடைக்கையில் ஒரு நாள் வீட்டுக்கு வாருங்கள் என்கிறான். கடை யிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது வீடு எனவும் ஒத்தி க்குத்தான்வீட்டை வாங்கி குடியிருப்பதாகவும்,ஒத்தி முடிய இன்னும் ஒருவருடம்தான் இருப்பதாகவும் அதற்குப்பிறகு வீட்டிற்கு என்ன செய்ய?எங்கு போய் குடியிருக்க எனத்தெரியவில்லை எனவுமாய் பேசியஅவனுக்குஆண்ஒன்றும்,பெண்ஒன்றுமாய்6வயதிலும்8 வயதி லுமாய் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றான்.

அன்று அவனுடன் பேசிய பேச்சுக்கப்புறமாய் இன்றுவரை அவனைப் பார்க்கமுடியவில்லை.கொத்தனார்வேலைக்குப்போகிறானாம்.வேறு வேலை காரணமாக நாங்களும்கடையை இரண்டு மாதம் மூடி விட்டோம்.தவிர உங்கள் மாப்பிளையின் போக்கு,,,,,,,,,என இழுத்த டீக்கடைக்காரரிடம் சரி சரி அப்பிடியே பழகீட்டான் என சொல்லி முடித்து விட்டு ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு கிளம்புகிறேன் பஸ் நிறுத்தத்தை நோக்கி.கடையின் அருகிலிருந்த மரத்திலிருந்து உதிர்ந்த பூ ஒன்று எனது தலையில் பட்டு கீழே விழுந்து சிரிக்கிறது என்னைப் பார்த்து/

10 comments:

 1. நிலத்தால் வேறு பட்டாலும் போக்குவரத்துப் போலிசாரின் கெடுபிடிகள் இங்கும் அங்கும் ஒன்றுதான்

  வறுமையை வெளிப்படுத்திய விதம் நன்று

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஆத்மா அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. //உங்கள் மாப்பிளையின் போக்கு,,,,,,,,,என இழுத்த டீக்கடைக்காரரிடம் சரி சரி அப்பிடியே பழகீட்டான் என சொல்லி முடித்து விட்டு ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு கிளம்புகிறேன் பஸ் நிறுத்தத்தை நோக்கி.கடையின் அருகிலிருந்த மரத்திலிருந்து உதிர்ந்த பூ ஒன்று எனது தலையில் பட்டு கீழே விழுந்து சிரிக்கிறது என்னைப் பார்த்து//

  எதார்த்தமான வாழ்வைப் பேசும் கதை...
  அருமை அண்ணா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. பத்து நாட்களாக கணினி கோளாறு நண்பரே
  நேற்றுதான் கணினி சீரானது
  அதனால் தங்களது பல பதிவுகளை படிக்காமல் விட்டிருப்பேன் என
  எண்ணுகின்றேன்
  இனி தொடர்வேன்
  நன்றி நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,தொடர்புக்கும்,

   வாக்களிப்பிற்குமாக/

   Delete
 4. யதார்த்தமான நிகழ்வு கண் முன்னே...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுகல் தனபாலன் சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. ஹெல்மெட் தலைக்கு மட்டும் கவசமல்ல.. நம் பணத்துக்கும். பூ தலையில் விழுந்த முடிவும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விச்சு சார்,
   நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/

   Delete