3 Jan 2015

சொல்லூக்கி,,,,


வணக்கம் நண்பரே இறந்து இரண்டுதினங்களாகிப்போன தங்களுடன் பேசலா மாகூடாதாஎனத்தெரியவில்லை.சரியாக/ஆனாலும்பேசிப்பார்க்கலாம்அல்லது இப்படியாய்எழுதியும் வணக்கம் சொல்லியுமாய் மகிழலாம் என்றிருந்த நீண்டு போன பொழுதுகளின் மதியம் ஒன்றில் தோன்றி மறைந்த யோசனையின் படி யாய் தங்களுக்கு எழுதுகிறேன்.அல்லது எழுத்து மூலமாய் பேசுகிறேன்.

நண்பர் முத்தமிழன்தான் தகவல் சொல்கிறார் தாங்கள் இறந்து போனதாக. சரியானநபர்சரியானநேரம்பார்த்துசொன்னதகவலாகவேபதிவாகிறதுஎன்னுள்.

காலையின்8.45ற்குஅவசரமானஅலுவலகப்புறப்பாடுஇருந்துகொண்டிருக்கிறது தான்.

பையனைஸ்கூலுக்குக்கொண்டுவிட்டுவந்தது,பாத்ரூம்,குளியல்,சாப்பாடு,
மனைவியுடனானபேச்சு,,,,எனஇன்னும்இன்னுமாய்நீண்டுகொண்டிருந்தபொழு
தில் தான்அவரிட மிருந்து வருகிறது தகவல்தொலைபேசி மூலமாக/

எந்நேரம்உடல்அடக்கம்என்ன,ஏதென்றதகவலைமட்டுமாய்சேகரித்துக் கொண்டு வருகிறேன்சாயும்காலமாய்அலுவலகம் முடித்து என அவரிடமாய்ச் சொல்லி விட்டு வழக்கம் போல் சாப்பாடு சுமந்த பையை தூக்கிதோளில் போட்டுக் கொண்டு படியிறங்குகையில் தென் படுகிற வீட்டுற்கு எதிரான வெட்டவெளிப் பரப்பின் பச்சைபசும் வெளி தவிர்க்க முடியாததாய்.

இரண்டுமழைபெய்தால் போதும் அடர்ந்துகொண்டு முளைத்து விடுகிறது புற்களும்இன்னபிறசெடிகளுமாக,சீமைக்கருவேலைச் செடிகள் அடர்ந்து கிடக் கிற வெளியில் சிறிது நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் முளைத்துத் தெரி ந்த செடிகள் முழங்கால்உயரத்திற்கு வளர்ந்து காட்சிப்படுவதாக/

இங்கெனஇல்லைபொதுவாகவேகண்படுகிற வெளிகள் யாவிலும் இப்படியாய் செடிகளும்பச்சைகளுமாய் முளைத்து அடர்ந்து தெரிவதாக/

போனவாரம்பாலவனத்தம்ரோட்டில்போய்கொண்டிருந்தபோதுவிரிந்துகிடந்த தார்ரோட்டுக்குமட்டுமாய்வழிவிட்டுரோட்டின்இருபக்கமுமாய்பச்சை முளை த்துவிரிந்துகிடந்தது.முளைத்துக்கிடந்தபச்சைபெரியமனதுபண்ணிரோட்டுக்கு வழி விட்டது போல இருந்தது பார்ப்பதற்கு/

அதேபார்வையுடன்இப்பொழுதுவிரிந்தவெளியைக்கடந்துசென்றுகொண்டிருந்த பொழுதுகடந்து போனநாய்க் குட்டிபார்க்கஅழகாகவேஇருந்தது,எத்தனைதான் பச்சைமுளைத்துஅடர்த்தியாய்த்தெரிந்தபோதும்கூடஅதனுள்ளாய்கிடந்தஉழப் பித்திரிகிற பன்றிகளும்,கழுதைகளும் இன்னபிறவைகளுமாய் வழக்கம் போல் வந்துபோய்க்கொண்டுதான்இருந்தன,ஆனால்பச்சைகளைச்சாப்பிடஎந்தஆடுக
ளும் இதுவரைவந்து போனதாய் எந்தத் தகவலும் இல்லை எனக்குத்தெரிந்து/

இது நாள்வரை தங்களின் நினைவு எனக்கு வரவில்லையா,அல்லது நீங்கள் வெளியூர்ஏதேனும்போய்விட்டதாய்நினைத்துஇருந்துவிட்டேனாதெரியவில்லை.இரண்டும்கலந்துதங்களைகிட்டத்தட்ட மறந்து போய் விட்ட ஒரு நாளன்றில் தான் நண்பர் முத்தமிழன் சொன்னார் தங்களைப்பற்றி/

அடசண்டாளத்தனமே,அவர்சொல்கிறநாள்வரைஇல்லைஇந்தஊரில் தாங்கள், எனநினைத்துக்கொண்டிருந்தமுட்டாள்த்தனத்தைஎண்ணிநொந்துபோகிறேன் கிட்டத்தட்ட./

நொந்துஎன்னசெய்யலாம்.நடந்துவிட்டஒன்றுக்காவும்தவறாய்தோணிப்பதிந்த நினைவுக்காவும் மனம் சுருண்டுநொந்துகிடப்பது பரிகாரமாகிப்போகாதுதான்.

நான்தான்கேட்டேன்.முத்தமிழனிடம்.அவரைப்பார்க்கவேண்டும்எங்கிருக்கிறார், எப்பொழுது போகலாம் என/கேட்டநாளன்றிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து தங்களைப்பார்க்க வருகிறோம்.

நீண்ட நாட்கள் கழித்துப்பார்க்க வருவதாலும் மறந்து போன ஒருவரை பார்க்கப் போவதாலும் ஏதாவது வாங்கிப்போகலாம் என்கிற நினைவை தடுத் தாண்டவராய் அப்பொழுது முத்தமிழன் காண்கிறார்,சாப்பிடுவதற்கும் செல வழிப்பதற்குமாய் அவருக்கு ஒன்றும் பஞ்சமில்லை தட்டுப்பாடும் இல்லை பேசுவதற்கும்அரவணைப்பதற்கும்தான்மனிதரும்உள்ளமும் இல்லை இப்பொ ழுது அதுதான் தேவையாயும் ஆகிப்போகிறது இந்தநிமிடம் அவருக்கு. ஆகவே கடும்மனம்படைத்தோர்களே,,,,,,,நீங்கள்நலமாய்உள்ளதுபோல்எல்லோரும்
இருக்கவிரும்புங்கள்எனஒருசின்னஉரைதாங்கியும்எண்ணம்சுமந்துமாய்வந்த வேளை ஒருவேலைநாளின் சாயும் காலமாய் இருக்கிறதுதான்.

அண்ணாநகர்க்காரர்அவர்என்கிறதனித்தஅடையாளத்துடன்இருந்தஉங்களைப் பாக்கவந்த சமயம் காற்றைக்கிழித்து வந்த பறவைகள் இரண்டு சிறகு விரித் தும், இறகுதிர்த்துமாய் வருவது போல தங்களைப்பார்க்க வருகிறோம்.

பத்துக்குப்பத்து இருக்கலாம் என்கிறதான நினைவு தாங்கள் இருந்த அறை, உள்ளே நுழைந்தபின்தான் தெரிந்தது,அது அறைஅல்ல.ஒட்டு மொத்த வீடே அதுதான் என.ஓடு வேயப்பட்ட வீட்டில் சமையலறையும்,இன்னபிற பொருட் களும் வைத்திருந்த இடம் போக மிச்சமிருந்த இடத்தில் போடப்பட்டிருந்த வயர்க்கட்டிலில்கருப்புஜமுக்காளம்விரித்துப்படுத்திருந்தீர்கள்.நாங்கள் இருவ ருமாய் வீட்டிற்குள் நுழைந்ததுகூடத்தெரியாத அளவிற்கு தூக்கத்தின் நீட்சி தங்களுக்குள்ளாய் குடிகொண்டிருந்தது போலும் அந்நேரம்.என்ன செய்வது இப்போது தெரியவில்லை.நான் முத்தமிழன் அவர்களைப்பார்க்க,முத்தமிழன் அவர்கள் என்னைப்பார்க்க என இரண்டு ஜோடிக்கண்களும் இரண்டு கோடி கேள்விகள்தேக்கிப்பார்த்துக்கொண்டிருந்தபோதுஎழுப்பிவிடலாம்இப்பொழுதே ,இனியொருநாள்வந்து பார்க்க வாய்க்காது தங்களை என்கிற முனைப்புடனும், எண்ணத்துடனுமாய் தங்களை எழுப்புகிறோம்/

பச்சை,மஞ்சள்,சிவப்பு கலர் காம்பினேஷன் காண்பித்த வயர்க் கட்டில்வலது பக்கமாய் செயலிழந்து போன தங்களது கையையும் காலையும் கொண்ட முழுஉடலையும்தாங்கிஉருக்கொண்டதாய்/அப்படியாய்உருக்கொண்டு காட்சி பட்டகட்டிலில் இருந்து வலது பக்கக்கைக்கு முழு பலத்தையும் கொடுத்து கையைஊன்றிஎழுந்தமர்ந்துவிடுகிறீர்கள்.

உடலின்முழுக்கனத்தையும்தாங்காதகைலேசாய்தடுமாற்றம்காண்பிக்கிறதாய், கண் முன்னாய் காண்பிக்கப்பட்டஉடலின்தடுமாற்றம் மிகவும் கனம் கொண்டு தெரிய பதறிப்பாய்ந்து பிடிக்க வந்த என்னை கையமர்த்தி இருக்கச் சொல்லி விட்டு உதட்டோரமாய் கசிந்த புன்னகையுடன் எழுந்தமர்வர்கிறவராக/

நண்பரே,,,,,,,அப்படியாய்தங்களைஅழைக்கலாமாஎனத்தெரியவில்லை.எனக்கு வயது35,தங்களுக்கோ வயது70 ஐ எட்டித்தொடப்போவதாய் அறிந்தேன்/ இப்படி யாய் நம் இருவருக்கும் இடையிலாய் நீண்டு தெரிந்த கால இடைவெளியை இட்டு நிரப்ப முடியாத வயதுடைய நான் எப்படி தங்களை அப்படி அழைப்பது இருந்தாலும் கூட அப்படியே அழைத்துகொள்கிறேனே, அனுமதியுங்களேன் சற்றே,,,/

நண்பரேதங்களைஅந்தநாளின் முந்தைய கணம் வரை பார்த்ததாகவோ பேசிய தாகவோஎந்தநினைவும் எந்த சரித்திரப்பதிவும்இல்லைஎன்னுளாய்,,,,,எங்களது தொழிற்ச்சங்க ஐம்பது ஆண்டு விழாவை ஒட்டி பழைய பேருந்து நிலையத்தி லிருந்து கல்லூரிச்சாலைவரை ஒட்டுவதற்காய் அச்சடிக்கப்பட்டு சைக்கிள் கேரியரில்உருண்டையாய்சுருட்டிவைக்கப்பட்டிருந்தபோஸ்டர்கள்நூறையும் ஒட்டி விட வேண்டும் என நான் உட்பட நான்கு பேர் பஸ்கி தண்டாலெல்லாம் எடுக்காமல்கிளம்பினோம்.நேரமென்னஇரவுஒன்பதுமணிஇருக்கலாம்அல்லது கூட ஒரு அரை மணிசேர்த்துக்கொள்ளுங்களேன்நாங்கள் கிளம்பியநேரமென/

பொட்டலில்இருக்கிறதேர்முட்டிக்கடையில்சாப்பிட்டுவிட்டுத்தான்கிளம்பினோம் இரவு பணிரெண்டு மணிக்கு சூடான் பூரியும் மசால் மொச்சையும்கிடைக்கும் கடை அது ஒன்றாகத்தான் இருக்கிறது நகரில்/

ஆளுக்குஇரண்டு செட்பூரி ஒருமொச்சை என சூடாக ஒருடீஎனவரையறுத்துச் சாப்பிட்டு விட்டு கிளம்புகிறோம்.கிளம்புகிற நேரம் டீ ருசியாக இருந்ததால் சிறப்பு அனுமதி வாங்கிக்கொண்டு இன்னொரு டீ சேர்த்துகுடித்துக் கொண்டி ருக்கும் வேளையில் கடைக்காரர் சொன்னதை கவனிக்கவில்லை. கடைக் காரர் சொல்லவருகிறார்ஏதோ,,என்றதும்காதைக் கழட்டிஅவர்அமர்ந்திருந்த கல்லாவின் மீதுவைத்துவிட்டுவாங்கியடீயைவிட்டஇடத்திலிருந்துதிரும்பக் குடிப்பவனாகிப் போகிறேன்.நாவின் சுவையறும்புகளில் பட்டுப்படர/

தோளைச்சுரண்டியவன்தான்முதலாவதாககுடித்துமுடித்துகிளாஸைவைக்கிறான்.அவன்எப்பொழுதுமேஅப்படித்தான்.சூடானதைசீக்கிரமாகவும்,குளிர்ச்சியானதை மணிக்கணக்காவும் குடிக்க பழகிக் கொண்டவன். அவனது குணத்திற்கும் செய்கையின்வெளிபாட்டிற்கும்சம்பந்தம்இருக்காது.மென்மையாய் இருக்கிற நேரம்முரட்டுத்தனமானசொற்களைப்பயன்படுத்தியும்முரட்டுத்தனமாய்இருக் கிறநேரம்மென்மைகாத்தசொற்களைப்பயன் படுத்தியுமாய் பழகிப் போனவன். இது அவனதுஎல்லாநடவடிக்கையிலுமாய் வெளிப்படும். சாப்பிடுவ தில், உடுத்துவதில்,சைக்கிள் ஓட்டுவதில் மற்ற மற்ற எல்லாவ ற்றி லு மாயும்,,,,/ அப்படியான அவனது குணம் அவனை உற்றுநோக்குகிறவர்களுக்கே தெரியும் அல்லதுஅவனுடனாய்நெருங்கிப் பழகுகிறவர்களுக்கு மட்டுமே புரியும். ஏனோ எனக்குத்தெரிந்திருந்தது அது.

சாப்பிட்ட பூரிக்கும் குடித்த டீக்குமாய் காசு கொடுத்து விட்டு நகரும் போது அவரது கடை வாசலில் வால்போஸ்டர் ஒன்றை ஒட்டிவிட்டு நகர்கிறோம். கடைக்காரரும் ஒன்றும் சொல்லவில்லை பெரிதாக,போஸ்டர் ஒட்டியதும் கடைக்காரர் வந்து பார்ப்பார்.அது சினிமா போஸ்டராக இருந்தால் கிழித்து எரிந்து விடுவார் உடனடியாக/ .போஸ்டரில் இருக்கிற வாசகங்களின் ஞாயம் அவர் மனம் தொட்டால் கிழிக்க மாட்டார் போஸ்டரை.தவிர அதன் மேல் யாரையும் போஸ்டர் ஒட்ட அனுமதிக்க மாட்டார்.ஆகா இவ்வளவு பெரிய நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்க என வாழ்த்தி விட்டுத்தொடங்கினோம் போஸ்டர் ஒட்டும் பணியை.

பழைய பஸ்டாண்ட்தான் ஆரம்பக்குறி,அப்படியே அங்கிருந்து ஆரம்பித்து பஜார் வழியாக வந்து பின் மார்க்கெட் சந்தில் தென்பட்ட இடங்களிலெல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கையில்கூர்காசிரித்தார்ஸ்நேகமாய்.அவரதுஸ்நேகத்திற் க்கு பத்து ரூபாயை பதில் ஸ்நேகமாய்க்கொடுத்துவிட்டு தொடர்கிறவர்களாய் பணியை.

மில்லில்இரவுசிபட்முடிந்துபோகிறவர்கள் லேட்டாய் வீட்டுக்குப் போகிறவர்க ளில்சிலர் அந்த வழியாய் போய்க் கொண்டிருந்தார்கள்.செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டுப்போகிறவர்களும் இதில் சேர்த்தி/

வானம்அடர்த்தியாய்இருண்டுபோய்/அதில்மின்னித்தெரிந்தநட்சத்திரங்களில் ஒன்றுஎனது காதலியை ஞாபகபடுத்திச்சென்றதாயும்,லேசாக கண் சிமிட்டி கண் சிமிட்டி காணப்பட்டதாயும்/

ஒன்று இரண்டு மூன்று என ஒட்டிய போஸ்டர்கள் காலியாகிக் கொண்டிருக்க ஒட்டப்பட்ட இடங்கள் கடந்து நாங்கள் கடைசியாய் வந்து சேர்ந்த இடம் காலேஜிற்கு அருகிலாய் இருந்தது.

நன்றாகஇருந்தால் இன்னும் பத்து அல்லது பதினைந்தே போஸ்டர் இருக்கும் நேரமும் நள்ளிரவைத்தாண்டிசிறிது மணிகளாகிப்போகிறது.ப்ளாஸ்டிக் வாளி யில்இருந்தபசையும்காலியாகப்போகிறது. கூடவே உடல் தெம்பும். மெதுவாக பசைதடவிஒட்டப்போகிறபோஸ்டரைகையிலெடுத்துசுவற்றுக்குமுகம்காட்டி யும்ரோட்டுக்குமுதுகு காட்டியும் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது பின்னாலி ருந்து முதுகைத் தொட்டகரத்தின்வாஞ்சை மேனி படர திரும்பிப் பார்க்கிறேன். மெதுமெதுவாக.

ஆகா யாரிவர்முன் பின்பார்த்தறியாத மனிதராய்த்தெரிகிறாரே/என்கிறகேள்வி க் குறிதாங்கி பார்த்த பொழுது பசைதாங்கிய கரம் எனது கரம் எனத்தெரிந்தெ ரிந்திருந்தும்வேகமாய்கைநீட்டுகிறீர்கள்என்னைநோக்கிபார்வையில்நட்பு
படர்ந்திருக்க/

நண்பரேஎன்னைஉங்களுக்குத் தெரியாது,ஆனால் உங்களை எனக்குத்தெரியும் நன்றாக இல்லாவிட்டாலும்கூடஓரளவிற்காவதுஎன்கிறீர்கள்.

கொண்டகொள்கையில்உறுதியும்இருக்கிறதொழிற்சங்கத்திற்க்காய்இரவுபகல் பாராது உழைக்கிற அர்ப்பணிப்பும் மிகப் பெரியதுஎன்கிறவார்த்தையை தங்க ளின் கைகுலுக்கலின் போது சேர்த்து கோர்த்து விடுகிறீர்கள் ஸ்னேகத் துட னாய் சிரித்துக் கொண்டு/

அப்பொழுதுதான்கவனிக்கிறேன்தங்களை. வெள்ளை வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் தாங்கி இருந்த நீங்கள் கைகுலுக்கிவிட்டு சிறிது நேரம் நின்று பேசிவிட்டு நகரும் போது தங்களது இடுப்பிலிருந்த கத்தி கழன்று கீழே விழுகிறதுவேஷ்டியைஇறுக்கிக்கட்டும்போது,என்னடாஇதுஎன உற்று நோக்கி தரைதொட்ட கத்தியை எடுத்துக்கொடுத்த நான் இது எதற்கு எனக் கேட்ட போதுஇப்படித்தான்இருக்கமுடிந்ததுஎங்களால்முன்னொரு நேரத்தில் இப்பொ ழுதும் கூடசிற்சில சமயங்களிலுமாய்.அதனால்தான் இந்த,,,,,,,, எனச் சொன்ன நீங்கள் அந்த இடத்தில் நிற்காமல் வேகமாய் போய்விடுகிறீர்கள் அங்கிருந்து.

போகட்டும்சரி என தாங்கள் போன காலடித்தடத்தையேஉற்றுப்பார்த்தவனாய் சிறிது நேரம் இருந்து விட்டு ஒட்டிமுடித்த போஸ்டரின் வண்ணம் பார்த்த வாறும்,அதைப் பற்றி பேசியவாறுமாய் கலைகிறோம்.திரும்பவும் தேர் முட்டி டீக்கடைக்குப்போய்விட்டுபோகவேண்டும்வீட்டிற்கு என்கிற எண்ணம் தாங்கி/

அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து தங்களை அதே பஜாரில் வைத்து பார்த்தபொழுது இப்பொழுதெல்லாம் நான் கத்தி வைத்துக்கொள்வதில்லை. என்கிறீர்கள், மற்ற மற்றவான விஷயங்களைபேசிக்கொண்டிருக்கும் போது,/

ஆமாம் கத்தி வைத்துக் கொண்டிருந்த பொழுதுகளில் என்னைசுற்றி நான் மட்டுமே இருந்த மாதிரி இருந்தது,இப்பொழுது கத்தி இல்லாத சமயங்களில் என்னைச்சுற்றி பத்து பேர் இருக்கும் ஆச்சரியம் நிகழ்ந்து போனது,அந்த ரசாயன மாற்றம் என்னுள்ளாய் ஏற்படகாரணமாய்இருந்த முக்கியக் காரணி யாய் நீங்கள் இருந்தீர்கள் என்பதை நினைக்கும்போதுமிகவும் பெருமிதமாய் இருக்கிறது நண்பரே, நீங்கள் வெறும் தொழிற்சங்கவாதியாய் மட்டுமல்ல, தங்களது விசாலப்பார்வைக்கு நிச்சயம் நிச்சயம் ஒரு பொது நலவாதியாய் பரிணமிப்பீர்கள்,வாருங்கள்இன்னுமொருடீசாப்பிடுவோம்எனஏற்கனவேடீக்குடித்துவிட்டுகாய்கறிக்கடையில்நின்றுகொண்டிருந்தஎன்னைகூப்பிட்டுப்போகிறீர்கள், மதியநேரத்தில் எதற்கு டீ என்கிற சொல்லையும்தாண்டி./

அதற்கப்புறமாய்எத்தனையோமுறைநிகழந்ததற்செயல்சந்திப்புகளில்எத்தனை யோ பேசியிருக்கிறோம் என்பதாகவே நினைவு.அந்த அத்தனை பேச்சுகளிலும் ஒரு நிமிடம் ஒரு முறை கூட தாங்கள் ஆகவே நண்பரே,,,,,,,என ஆரம்பிக்கிற கடினப்பேச்சு பேசியதில்லை, இல்லைநாங்களெல்லாம் அந்தக்காலத்திலே,,,,,,, என்பது மாதிரியுமாய்சொல்லிக் கொண்டதில்லை.எல்லாம்யதார்த்தப் பேச்சு கள் யதார்த்தகண்ணோட்டங்கள், யதார்த்த அனுகல்கள்,,,,எனஇன்னும் இன்னு மான தனங்களுடன் இருந்த தாங்கள் ஒன்றை மட்டுமாய் திரும்பத்திரும்ப என்னிடம் சொன்னதாய் நினைவெனக்கு.விடாதீர்கள் ஓட்டத்தை ஓடிக்கொண் டே இருங்கள்,ஓட்டம் உங்களை செம்மைப்படுத்தும் என/

அதன்படிஓடிக்கொண்டேஇருக்கிறேன்,அந்த ஓட்டம்தான்என்னைமுனைப்புப் படுத்தி பொது நலவாதியாய் ஆகியிருக்கிறதோஇல்லையோநான் அப்படியாய் காட்சிபட்டுத் தெரிவதாய்ச் சொல்கிறார்கள். அதுதங்களின்சொல்ஊக்கம் தந்த பலனானக்கூடஇருக்கலாம்.இருக்கட்டும்எதுவானபோதிலும்அந்தப்பேச்சுமண் ணில் விதைக்கத் தூண்டுகிறவனின் முனைப்பையும்,விதை போடுகிறவனின் வேகத்தையும் கூட்டிக்கட்டிக்கொண்டிருந்ததாய்/

அதுஅந்த முனைப்பையும் வேகத்தையும்பிடித்து அப்படியாய்காட்சிப்பட்டு நிற் கிற நான் அன்று தங்களது சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட இரண்டு தினங் களாகிப்போனபின்னாய்இறந்துபோனதங்களுடன்பேசலாமாகூடாதாஎன
சரியாகபட்டுத்தெரியாததனத்துடன்பேசிப்பார்க்கலாம்அல்லதுஇப்படியாய் எழுதியும்வணக்கம் சொல்லியுமாய்மகிழலாம்எனஒரு நாளின் நீண்டு போன மதியம் ஒன்றில் தோன்றி மறைந்த யோசனையின்படிதங்களுக்கு எழுதுகி றேன்.

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இறந்துபோன நண்பருக்குக் கடிதம்
எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை நண்பரே
உயிரோடு இருப்பவர்களுக்கே இப்பொழுது கடிதம் எழுத ஆளில்லை

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு சார்.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இறந்துபோனவருக்கு கடிதம் எழுதுவது,,,,,,,
இதுவும் ஒரு எழுத்து முறைதானே?

திண்டுக்கல் தனபாலன் said...

இணைத்த படமும் பலவற்றை சொல்கிறது...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையான பகிர்வு அண்ணா.... கலக்கல்.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/