10 Jan 2015

நாய்வால்,,,,,,

முன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தி பின்னங்கால்கள் இரண்டையும் மடக்கி அரைச்சம்மணமிட்டது போல அமர்ந்து காணப்படுகிற நாயின் சப்தத் தையும், நாயின் இருப்பையும்  இப்போதைய சமீப நாட்களில் காண முடியவி ல்லை. 
எங்கும் தூர தேசங்களுக்கு சென்று விடவில்லையாயினும் கூட பக்கத்தில் இருப்பதாயும் தகவல்அறிந்தவட்டாரங்களிலிருந்துசேதி இல்லை. பின்என்ன விட்டுவிடவேண்டியதுதானே, என்னாத்துக்கு அனாவசியமான விசாரணை யெல்லாம்என நீங்கள் கோடிட்டுக்காட்டுவது புரிகிறதுதான், என்ன செய்ய அப்படியெல்லாம்விட்டுவிடமுடியவில்லை.அதற்காகவிட்டு விடாமல் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கவும் முடியவில்லை.இது ஒரு இதந்தரும் விஷயமாக வும் மனதில் மையம் கொண்டிக்கிற புயலாகவும்/ 
அதற்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாய் இவர்களது வீட்டின் நடையே இருந்திருக்கிறது. அதற்கடுத்ததாய் எதிர்வீட்டின் வாசல்.
நிலைத்து நிற்கிற மார்பில் படுக்கட்டுகள்மூன்றைத்தாண்டிவீட்டிற்குள்ளாய் நுழையும் முன்பூட்ட கதவின் முன்பாய்நான்காவதாய்தென்படுகிறவாசலில்  கால் நீட்டி படுத்துக் காணப்படும்.
 நீண்டு நாற்செவ்வகமாய் இருக்கிற தெருவின் இரண்டு பக்கமுமாய் முளை த்துக் காணப்படுகிற வீடுகளில் அனைத்தின் முன்பாகவும் நின்றும், படுத் தும்காணப்படுகிறஅது அவர்களது வீட்டு கோலத்தின்  மீது படுக்கும் அளவு  உரிமை எடுத்துக்கொண்டதில்லை.
இவனது மனைவி கூடஅடிக்கடி சொல்வாள் அடிக்கடி,”இதுக்கு படுக்குறது வேற யெடம் கெடைக்கலையா,எப்பப்பாத்தாலும் போட்டு வச்சிருக்கிற கோல த்து மேலதான் வந்து உக்காருது.இல்லைன்னா படுத்துக்கிருது, அதுக்கு எப்பிடிஅப்பிடியெல்லாம் தெரியுதுன்னு தெரியல.கரெக்டா நம்ம வீட்டு கோல த்துக்கு  நடுவுல மட்டும் வந்து படுக்க” என்பாள். 
இவனது  வீட்டின் முன்பாய் இருக்கிற கோலத்தில் நடுவில் படுத்தபோதும், தெருவிலிருக்கிற அத்தனை வீட்டின் முன்பாய் நின்ற போதும் அது சாப்பிட போவது எதிர் வீட்டுக்குத்தான்,அதற்கென தனியாக தினமும் இரவில் பால் ஊற்றிய சாதத்தை பிசைந்து வைத்து விடுவார்கள்.எங்கு சுற்றிக் கொண் டிருந்த போதும்,மற்ற நாய்களுடன்கூட்டுச்சேர்ந்துவிளையாடிக் கொண்டோ, சண்டை போட்டுக்கொண்டோ இருந்த பொழுதும் கூட சரியாய் வந்து விடும் அந்தவீட்டின் அம்மா அழைக்காமல்/
அப்படி வந்து சாப்பிட்டு சமர்த்து காண்பிக்கும் அது பால்சாதம்,பிஸ்கட் தவிர வேறெதுவையும் சாப்பிடுவதில்லை.அதன் காரணமாகவே என்னவோ மற்ற வீட்டுக்காரர்கள் அதற்கு சாப்பாடு வைக்க யோசிப்பதுண்டு.அப்படியே வைத் தாலும் கூட அதை புறந்தள்ளிவிடும் மிக எளிதாய்/
அதைப்பொறுத்தவரை அந்த தெருவிற்கே காவல்தெய்வம் என்கிற நினைப்பு தான் அதனுள்ளாய் ஊறிக்கிடந்திருக்கும் போல.தெருவாசிகள் தவிர வேறு யாரையும் அண்டவிட்டதில்லை பக்கத்தில்/
இப்படித்தான் பேப்பர் போடும் பையனை ஒருநாள் காலை உண்டு இல்லை எனபண்ணிவிட்டது.சின்னப்பையன்அவன்.நன்றாக இருந்தால் பதி மூன்று வயதிருக்கும்,பாவம் ஒருவாரம் காய்ச்சலில் படுத்துவிட்டான், வேற்று மனித ர்கள் என மட்டுமில்லை.வேற்று ஜந்துக்கள் வேறு ஏதேனும் தட்டுப் பட்டா லும் கூட இப்படித்தான் பாடாய்ப்படுத்திவிடும்,தெருவில் காலுன்றி சென்று கொண்டிருக்கும் மாட்டின் முன்னால் போய் நின்று கொண்டு குறைக்கும். அது போலசகநாய்கள்,அந்தப் பக்கமாய் போகிற கழுதை,பன்றி ,எருது என எதையும் விட்டுவைப்பதில்லை.
இப்படித்தான் மழை நின்ற ஒரு நாளின் மாலை வேலையாய் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தபாம்பைப்பார்த்துக் குறைத்து அதை விரட்டியே விட்டது. இப்ப டியாய் காட்சிபடுகிற அதன் வருகை எங்கிருந்து நிகழ்ந்தது என்பது சமீப நாட்களில்தான் இவனுக்குத்தெரிந்தது.இவனதுதுப்புத் துலக்கும் மூளைக்கு சவாலாய் இருந்த அந்தப்பிரச்சனையின் முடிச்சு அவிழ்ந்ததில் இவனுக்குள் ளாய் தாங்க முடியா சந்தோஷம்.
இத்தனையுமாய் மாறி,மாறி காட்சிப்படுகிற அதைப்பார்க்கிறசிலசமயங்களில் கோபமாகவும், சிலசமயங்களில் சந்தோஷமாகவுமே இருந்திருக்கிறது.
நல்லதொரு ஜாதி நாயைப்போல காணப்படுகிற அதன் பெயர் தெரியவில் லையாயினும் கூட அதன் ப்ரௌன் கலர் நன்றாகவே இருந்தது.கலர் கொண் டு வரைந்தது போல வாய் முனையில் இருக்கிற கருப்புக்கலர் கால்கள் நான் கின் கீழ்ப்பகுதியிலுமாய் காணக்கிடைக்கிறதுண்டு.ஆழ உன்றபட்ட குச்சிக ளைப்போல அசைவு காட்டித்திரியும், கால்களின் நகங்கள் வாலிலுள்ள நகங் களின்நிறத்தைபிரதிபலித்ததாக/எந்நேரமும்மடங்காமல்விரைப்பாய்வளைந்து காணப்படுகிற வாலின் முடிகள் வெண்மையாய் வளைந்து தொங்குகிற போது பார்க்கசற்றுஅழுக்காயும், சிக்குப் பிடித்துப்போயுமாய்/ 
வேறோரு வர்ணம் பூசப்பட்ட வளைந்த பிரேமிற்கு அடியில் தெரிகிற வெள் ளைக் கலர் போல/அது கை தேர்ந்த ஓவியனின் வரைவு போலவும், மெரு கூட்டி செதுக்கப்பட்டிருந்த சிற்பியின் சிற்பம் போலவுமாய்/ 
அதுவாக வந்து சேர்ந்ததுதான் யாரும் அதை கால் பிடித்தோ வால் பிடித்தோ கூட்டிவரவில்லை.அவனுக்குத்தெரிந்து இது இரண்டாவது தெருவிலிருக்கிற மாடு வளர்ப்பர்களது வீட்டு நாய் என்பதாய் நினைவு/
முன்பெல்லாம் அந்தப்பக்கம்செல்கையில்ல் கவனித்துள்ளான். அவர்களது வீட்டில் நான்கு மாடுகளும் இரண்டு கன்றுக்குட்டிகளும்,இரண்டு ஆடுக ளும் நிற்கும். ”இவற்றிற்கு காவல் வேண்டும் கண்டிப்பாக ஒரு நாய்” என அவர்கள் விலை கொடுத்தோ அல்லது தெரிந்தவர்களிடமிருந்தோ வாங்கி வந்த நாய்கள் மூன்றும் வீடு தங்கவில்லை.
வாய் முனையிலும்,நெற்றியிலும் வெண்மை பூசித் தெரிந்த நாய் கொண்டு வந்த பத்தாவது நாளே ஒடிவிட்டது என்றும் அதற்கடுத்ததாய் வந்த செந் நிறநாயும்,வெள்ளை நிற நாயும் வீடு தங்கவில்லை என்றும் சொன்னார்கள். மாடு வளர்க்கிற அம்மா/
“பின்ன நடு வயசுல கூட்டீட்டு வந்தா எப்பிடி வீடு தங்கும் சொல்லுங்க” என்றாள் மனம் நிரம்பிய ஆதங்கத்துடன்/ 
எங்கு பிடித்தார்கள் இதை என்று தெரியவில்லை .எங்கோ குட்டிகள் ஈன்ற நாய் ஒன்று பசிக்காய் உணவு தேடிப்போன போது தூக்கி வந்தது எனச் சொன்னாள்மாட்டுக்காரம்மா,மாட்டுகாரம்மாவின் இளையமகன்தான் அவன் ஜோடிப்பையன்களோடு சென்று தூக்கிவந்தான்.நாய் தேடிப்போன பள்ளி லீவு நாளன்றின் மதியம் வீடு வந்து சேர்ந்த அந்த நாய்க்குட்டி இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணியும் அழகு காட்டியும் கட்டுப் பட மறுத்துமாய்/
யாருக்கும் தெரியாமல் அரும் பாடுபட்டு தூக்கி வந்த நாய் நிலப்பரப்பெங் குமாய் முளைத்துத்தெரிகிற புல் பூண்டுகளும், நீர்க்கருவேலைச்செடிகளும் அதனூடாய் ஊர்ந்து திரிகிற புழுப்பூச்சிகளும், இன்ன பிறஜந்துக்களுமாய் அதிர்வுறுமாறு சப்தம் செய்தும்அங்கு இருக்க மறுத்துமாய்/
”புதுஇடம்தானே அப்படித்தான் இருக்கும் மிஞ்சிப்போனால் ஒரு வாரம்வரை சப்தமிடும் கழுத்தில் கட்டிய கயிற்றை இழுத்தவாறு,பின் பழகிப் போய்விடும், புது இடத்திற்கு தகுந்தாற்ப்போல் தன்னை மாற்றிக்கொள்ளும்”, என அவர் கள் போட்ட மனக்கணக்கு தப்பாகிப்போகிறது.
குட்டி நாயாயிற்றே,எனபால்வைத்தார்கள்.குடிக்கவில்லை,திரவமான உணவு வைத்தார்கள் சாப்பிடவில்லை.ஈன்று பத்து நாட்கள் கழித்து தூக்கி வந்த குட்டிதானே என்கிற நினைப்பில் பிஸ்கட் கூட கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்,,, எதையுமே சாப்பிட மறுத்த அது தன் முன் இருக்கிற அலுமினிய தட்டையும் அதற்குள்ளாய் வைக்கப்பட்டிருந்த உணவையும் தட்டிவிட்டு விட்டது அல்லது சாப்பிட மறுத்தது.
ஒரு நாள் இரண்டு நாளானால் பரவாயில்லை. தூக்கி வந்த நாளிலிருந்து குரைத்துக்கொண்டிருந்த பத்துநாட்களும் ஒன்றும் சாப்பிட மறுத்தது.இது எப்படி சாத்தியமாகிப்போகிறது அதற்கு. ஒரு இளங்குட்டி பசி தாங்கியும், உயிர்பித்தும் இந்த பத்து நாட்களும் அதற்கு மேலுமாய் எப்படி?,,,,,,,,என்கிற கேள்வியும் ஆதங்கமுமாய் மாட்டுக்காரம்மாஇருந்த வேளையில்தான்அவரது மகள் சொல்கிறாள்.”தெனத்துக்கும் வந்து இந்த குட்டிக்கு அதோட தாய் நாய் வந்து பால் குடுத்துட்டுபோகுதும்மா” என/
எந்நேரம் வருகிறது,என்ன ஏது என,,,,, கேட்டபோது அது வருகிற  வேளை இரவு வேளையாகவும் தனது பிள்ளையின் பசிதாங்கா அல்லது கட்டுக்குள் கிடக்கிற அதன் கெஞ்சலான இரைஞ்சல் மொழி கேட்டு இப்படி வருகிறது என அர்த்தப்படுத்திக்கொண்ட மகள் சொல்கிறாள்.”வேண்டாம் விட்டுமா, இதுக்கு மேல அது இங்க இருந்தா கத்தியே செத்துப்போகும் போல” என.
வாஸ்தவம்தான் அவள் சொன்னது என்கிற நிரூபணத்தில் அவர்கள் இருந்த நாட்களில் அவர்கள் வீட்டின் மாடு ஒன்று அதன் இடது பின்னங்காலை மிதித்து விட்டது.நல்ல வேளை நாயின் கால் மிதிபட்ட இடம் கொஞ்சம் சகதியாய் இருந்தது.நாயின் காலுக்கு ஒன்றும் ஆகவில்லை, அந்நேரமே நாயின்காலைக்கழுவிஒத்தடம்கொடுத்தார்கள்,கட்டைஅவிழ்த்துஓடவிட்டுப்  பார்த்தார்கள்.முதலில் கொஞ்சம் காலை தாங்கிதாங்கி ஓடியது நடந்தது ,படுத்தது.ஒன்றும்பிரச்சனைஇல்லை  என விட்டு விட்டார்கள்.
அப்படி விட்ட அன்றிலிருந்து சிறிது நாட்கள் மாடுகளின் அருகாமயிலும் பின் எங்கெங்கெல்லாமோ சுற்றித்திரிந்து விட்டு இந்தத் தெருவே கதி என வந்து தங்கிப் போனதாய் நாயின் வளர்ச்சி சொல்லிச்செல்கிறது.
அப்படியெல்லாம் தங்கிப்போனதாய் சரித்திரம் கொண்ட அது இப்பொழுது சிறிதுநாட்களாய் அதன் சப்தததையும் ,இருப்பையும் வெளிப்படுத்திக் கொள் ளவில்லை.புள்ளிகளைவெளிப்படுத்தும்கலர்,வெள்லைக்கோலத்தின் நடுவாக வும் வந்து படுப்பதும் இல்லை.
அது ஏன்எனவும்தெரியவில்லை.தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

4 comments:

 1. "எனக்கு என்னாயிற்று...?" என்று படமும் கேட்கிறது...

  ReplyDelete
  Replies
  1. வனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete

 2. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசிராஜலிஙம் சார்,
   நன்றி வருகைக்கும்கருத்துரைக்குமாக/

   Delete