2 Feb 2015

மூங்கில் காத்து,,,,,,

பார்க்கபல்லாரிவெங்காயம் போல் தெரிந்த அது என்னவாய் இருக்கும் என அருகில் போய் பார்த்தபோதுதான் தெரிந்தது..

வெளிர் சிவப்பாயும் அல்லாமல்அடர்த்தியானரோஸ்க்கலராயும்அல்லாமல் வெளிர்க்கலர்காட்டிபார்க்கஅழகாயிருந்த,சிறியதொருரோஸ்க்கலர்உருண்டை ஒன்றுயாரோலோஉருட்டிவிடப்பட்டுஓரிடத்தில்நிலைகொண்டுநிற்பதுபோல் தெரிந்தது.

முளைவிட்டுக்கிடந்தபுற்களுக்கும்செடிகளுக்கும்மத்தியிலாகசிக்கிக்கொண்டு தன்உடல்காட்டியஅது என்னவாய் இருக்கும் என பார்க்கும் முன்பாய் தெரி ந்து என்னவாகிவிடப்போகிறதுஎனஎண்ணாமல்கையெலெடுத்துப் பார்க்கும் போதுதான் தெரிகிறது,அது சைக்கிளின் ஹேண்ட் பாரில் இருக்கிற கை பிடி உரையின் சிவப்புக்கலர் நுனி என/

அதுதானே,திக்எனஆகிப்போனதுஒருநிமிடத்தில்/வெங்காயம்விற்கிறவிலையில்இப்படிஒரு முழு வெங்காயம் குப்பையில்கிடந்தால்நம்பொருளாதாரம்என்னாவாகிறது என்கிறயோசனைதவிர்த்துவேறில்லை.எனமனதிற்குள்ளாகசொல்லிக்கொண் ட போது நேற்று மாலை வெங்காயம் வாங்கி வந்ததுஞாபகம் வருகிறது.

இவன்,மனைவிமற்றும் இரண்டு மகள்கள் காட்சிப்பட்டவீட்டில் மகள்கள் இருவரைமட்டும்விட்டுவிட்டுமனைவியைகூட்டிக்கொண்டு கிளம்பி விட்டா ன்பஜாருக்கு,அப்படியாய்மனைவியுடன்தனித்துப்போவதுஇவனுக்குஎப்பொழு தும் மனம் பிடித்துப்போன ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.தலை நரைத்துப்போனஇந்தவயதில்துள்ளிவிளையாடும்பிள்ளைகளற்றகிழவர்களாக இரண்டுபேரும்ஜோடிசேர்ந்துகொண்டுபோகாவிட்டால்என்னஎனஎதிர்ப்பை செய்வார்கள்இரண்டுமகள்களுமாய்/அவர்கள்இருவரின்பேச்சுக்குதலையசை த்தவாறேசெல்வதுஇன்னும்கொஞ்சம்கூடுதல்இன்பமாய்இருக்கும்தான்.மனைவி பின்னால்அமர்ந்துவரஇவன்வாகனம்ஓட்டசுழல்கிறஇரண்டுசக்கரங்களுக்கடி யில்சறுக்குகிறசாலையைப்பார்த்தவாறுசெல்வதும்,சாலையின்பக்கவாட்டாய் முளைத்துத்தெரிகிறகடைகளையும்சாலையின்மனிதர்களையும்பஸ்களையும் இன்னும்பிறவாகனங்களையும்கூடவேசாலையின்அழுக்கையும் வேடிக்கை பார்த்தவாறுசெல்வதுஇவனுக்குஇன்னும்அலுக்காதஒன்றாகவே/

பண்ட்ஆபிஸிற்குஎதிர்த்தாற்போல்இருக்கிறபெட்ரோல்பங்கில்ஆரம்பிக்கிற

பேச்சுஇ.எஸ்.ஐஆஸ்பத்திரி,கௌவர்மெண்ட்ஆஸ்பத்திரி,டாஸ்மாகக்கடை,

சினிமாதியேட்டர்,கல்யாணமண்டபம்காதிவஸ்திராலயம் எனபஜார் போகிற வரைநீண்டுகொண்டேசெல்கிறஇவனதுபேச்சும்பார்க்கிறவற்றைப்பற்றியதான இவனதுசொல்பதிவும்பஜார்வரும்வரைநிற்காது,இன்னும்கொஞ்சம்கூடுதாய்க் கூடநினைப்பதுண்டுஇவன்.அப்படியேமனைவியைக்கூட்டிக்கொண்டுபஸ்ஸேறி போய் விட்டுவந்துவிடலாம்பக்கமாய் எங்காவதுஎன/

ஆனால்வீட்டில்இரண்டுவயதுவந்தபெண்பிள்ளைகளை விட்டு விட்டு வந்து இப்படியெல்லாம்யோசிப்பதுசற்றுசிறுபிள்ளைத்தனம்தான்/எனமுன்னறிவித்த மூளையின்யோசனையைஏற்றுவந்தவேலையைமுடித்து விட்டு எவ்வளவு சீக்கிரமாய்கிளம்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் கிளம்புவதேநல்லது என முடிவுசெய்துகிளம்பியும்விடுவான்.

இவனதுஇம்மாதிரியானஎண்ணங்களைமனைவியிடம்சொல்லும்போதுஒன்றும் சொல்லாமல்சிரிப்பாள்.இதுஇன்றுநேற்றல்லஇம்மாதிரியாய்சரக்குவாங்க
போகிற தருணங்களெங்கும் இப்படியாய் நடப்பதுதான்,சரக்கு வாங்கபோன நேற்றும்இதைச்சொன்னபோதுஇன்னும்கொஞ்சம்கூடுதாய்சிரித்தாள்மனைவி.

அவளதுசிரிப்பைப்பார்த்துகேலிசெய்கிறமகள்களைப்பார்த்துஏய்சும்மாஇருங்கடி ரொம்பத்தானதாளிக்காதீங்க,நாளைக்கிநீங்களும்அப்படித்தான், நான் ஏங்புரு சன்இன்னொருதடவக்கூடகல்யாணம்பண்ணிக்கிருவேன்/ஒங்களுக்குஎன்னடி பொறாமைவேண்டிக் கெடக்கு,போங்கடிவீட்டுக்குள்ள என்பாள். நாங்க வர்ற வரைக்கும்அடிச்சிக்கிறாமபேசாமஇருங்க எனவுமாய்சேர்த்துக் கோர்பாள் வார்த்தைகளை/

நேற்றுக்காலைஅலுவலகத்திற்குகிளம்பும்போதேசொல்லியிருந்தாள்,பருப்புஎண்ணெய்பொரிகடலைஎதுவும் இல்லவீட்லஎல்லாம்தீந்துபோச்சுரெண்டுநாளாஇங்கனதெருக்கடைகள்லதான் வாங்கீட்டுஇருக்கேன்.இன்னைக்கிசாய்ங்காலம்வழக்கம்போல எங்கயாவது வேலை இருக்குன்னுகெளம்பீராமஏங்கூடவாங்க,சரக்குகளவாங்கீட்டு வந்து ருவோம்.அப்புறம் எங்கயாவதுபோங்க ஒங்க சௌகரியத்துக்கு என்றாள்.

அவள்சொல்வதும்வாஸ்தவமே,அலுவலகம்விட்டுவரும்மாலைவேளைபையை வீட்டில்போட்டதுதான்தாமதம்.கிளம்பிவிடுவான்.ஏதாவதுஒருவேலையை சாக்காய் வைத்துக்கொண்டு/

தோழர்கள்நண்பர்களைப்பார்க்கப்போகவேண்டும்என்கிறசொல்லைஉதிர்த்து விட்டுஇனிமேல்கிளம்புவது உசிதமாகாது, வீடு வாசல்,மனைவி மக்கள்,,, இன்னும் இன்னுமானபொறுப்புகள் நிறைய இருக்கிறதுதான் உங்களுக்கு இப்படியெல்லாம்காலில்சக்கரத்தைக்கட்டிக்கொண்டுஅலையாதீர்கள் ஆமாம் சொல்லிவிட்டேன்என்பாள்மனைவி.கூடவேஇன்னொன்றையும்சேர்த்துக்கொள் வாள்வீட்ல இருக்குற ஜன்னல் கம்பி வழியாவும்வெளிஒலகத்தப்பாருங்க, அத விட்டுட்டு வெளியில இருந்துமட்டும் வீட்டப்பாக்காதீங்க, ஜன்னல்க் கம்பி கூடத் தெரியாது சொல்லீட்டேன் என்பாள்.

அவள்சொல்வது,,,,,,,,,,,,,?????சிரித்துக்கொள்வான்,ஆமாம்ப்பாநீங்கஒண்ணும்

பெரிசா வேலை, கீலைண்ணு எதுவும் செய்ய வேணாம் நீங்க பாட்டுக்கு சம்மணம் போட்டு ஒக்காந்துக்கங்க,நடு வீட்டுல அக்கா,தங்கச்சிங்கநாங்க ரெண்டுபேருமா ஆளுக்கொருபக்கமா மடியில படுத்துக்கிட்டுபடிக்கிறோம். எழுதுறோம்.தங்கச்சி+2பாடத்தையும்,நான்காலேஜ் பாடத்தையுமா. ஞாயமாப் பாக்கப் போனா ஒங்க மடி அம்மாவுக்குள்ள யெடம்தான்.ஏதோ நாங்க அவுங்க கிட்டகஷ்டப்பட்டுஅனுமதி வாங்கி படுத்துக்கிறோம். பெரிய மனசு பண்ணுங்கஎன்பார்கள்.நேற்று அப்படி எதுவும் இல்லாமல் அரை நேர அலுவலகம்முடிந்துவந்து சாப்பிட்டு விட்டு படுத்ததுதான் தெரியும். மாலை எழுந்திருக்கும்போதுமணிமாலைஐந்தைரையாகிப்போனது.கூடவே மனைவி என்னது இது இப்பிடித்தான எந்திரிக் கிறது ஆம்பள.ஒழுக்கமா எந்திரிச்சி சீக்கிரம் குளிச்சி முடிச்சி கெளம்புங்க, கூட்டம் வந்துறப்போகுது கடையில, அப்புறமாவீட்டுக்குவரநேரமாகிப்போகும்பாத்துக்கங்க,என்கிறஅவளது சொல் தாங்கிவாங்கிவந்தபலசரக்கும்,வெங்காயமும்ஞாபகம்வந்ததுதான்இப்படிஒன் றைப் பார்க்கையில்/

ஆனால்நேற்றுமாலைஇவன்குளித்துமுடித்துக்கிளம்புகையில்இருந்த மனோ நிலைவேறு, அப்படியே சும்மாபோய்விட்டுவருவோம்,நண்பர்களைசந்தித்து விட்டும்,டீசாப்பிட்டுவிட்டுமாய் வரலாம்என.முடிவுசெய்துவைத்திருந்தான், செய்த முடிவை அமல்ப்படுத்தமுடியவில்லை.இன்றைக்குபலசரக்குவாங்கா விட்டால் வேலைகள் அனைத்தும் கெட்டுவிடக்கூடும்,செய்து முடிக்காத ஒரு வேலைமற்றொருவேலையைதுணைக்கழைத்துக்கொண்டு கூட்டம் மொத்தம் சேர்ந்து கொண்டு பயமுறுத்தும்.வேண்டாம்,மனைவியுடன் போய் பலசரக்கு வாங்கி வருவதேஉசிதம்,

நேற்றுசெய்தமுடிவுமிகச்சரியானதுஎனக்கணிக்கிறான்இன்று.சீமைக்கருவேலை முள்வளர்ந்த பகுதியில் வளர்ந்து தெரிகிற செடிகள் அவ்வளவாய் ஒன்றும் புதர்அடைந்துதெரியாவிட்டாலும்கூடபூச்சிகள்அடையுமளவிற்குபோதுமான தாய்இருந்தது,

சுற்றிகொடிபடர்ந்திருக்கசெடிகள்அடர்ந்திருக்கஉயரமாய்வளர்ந்துநின்றசீமைக் கருவேலைமரம்ஒற்றையாய் வளர்ந்து பெரியதாய் நின்றாலும் கூட அதன் படர்வு தரைமுழுக்கப்பரவிகிடந்ததாக,வீடுகட்டிஇங்குகுடிவந்த புதிதில் முள் மரத்திற்குள்தான் வீடு இருந்தது,

வீடுகட்டப்பட்டுக்கொண்டிருக்கும்நாடகளில்கொத்தனார்சித்தாள்களைமேற்பார் வைபார்க்கிறேன்பேர்வழிஎனசும்மாஎப்படிநிற்க,,,,,?என்கிறமனகூச்சம்பொறுக்க மாட்டாதவனாய்வீட்டின்முன்இருக்கிறவெற்றுவெளியில்வளர்ந்தும்அடர்ந்தும் கிடந்தமுள்மரங்களையும்முட்செடிகளையுமாய்வெட்டுகிறான்,முதல்நாள்அரிவாள் எடுத்துக்கொண்டு போனபோதுதான்தெரிந்தது, இது காணாது இங்கிருக்கிற முட்களை வெட்ட என/

பிறகென்ன அரிவாள் வாங்கிய கடையிலேயே போய் துரட்டியும் அதைக் கட்டகம்பும்வாங்கிவந்தான்,வாங்கும்போதுகடையில் ஒரு பெண்தான் இருந் தாள். பரந்து விரிந்த பொட்டலில் மண் தரையில்தார்ப்பாய்விரித்துஇரும்பு வியாபாரங்களைப்பரப்பிவைத்திருந்தாள்,அரிவாள்மனை,.அரிவாள்,தொரட்டி, கத்தி,முள்க்கரண்டிசட்டி,இரும்புப்பாத்திரங்கள்எனவிதவிதமாய்இரும்புவியா பாரங் களை வைத்திருந்தாள்,

அவள்தான்கேட்டாள்,என்னய்யாமுள்ளுமரம்வெட்டவாஅருவாளும்தொரட்டி
யும்,,,,,,?நேத்துநீங்கவாங்கும்போதேஒருசின்னசம்சயம்வந்ததுஎன்னடா ஐயா சம்பந்தமில்லாமவந்துஅவசரமாஅருவா வாங்கீட்டுப் பொறாருன்னு, அதான் சுதாரிச்சிமுள்ளுவெட்டுறஅருவாளாஎடுத்துக்குடுத்தேன்.குடுத்தது நல்லதாப் போச்சுஅதுவும்ஒங்களமாதிரிதேவைக்குவேலைசெய்யிறஆட்களுக்குஅது
போதும்ன்னுநெனைச்சிதான்குடுத்தேன்,வழக்கமாதொழில்முறையா முள்ளு வெட்டுவேலைசெய்யிறவுகளுக்குதர்றஅரிவாஇந்தாஇருக்குபாத்தீங்களா,அவு
ங்கஇதவாங்குனஒடனேஅப்பிடியேவீட்டுக்குக் கொண்டு போக மாட்டாங்க, இந்தாகோயில்கிட்டஇருக்குறபட்றையில் போயி தொழிஞ்சி கூறு வச்சிட்டு தான் போவாங்க/ அவுங்கமாதிரியெல்லாம் மாதிரியெல்லாம்நம்ம பொருள் வச்சிக்கிறமுடியாது,அப்படிவச்சிருப்பாக.அவுகமாதிரிநம்மளாலமுள்ளுவெட்ட வும்முடியாது,தரையொட்டிமிசின்வெட்டுனமாதிரியில்லவெட்டுவாங்க, எனச் சொன்னவள் இந்தா ங்கய்யா கொண்டு போங்க கொஞ்சம் நடுவாந்திரமான தொரட்டியத்தான்குடுத்துருக்கேன்,ரொம்பகூறாஇல்லையேன்னுவருத்தப்பட்டு
க்கிடாதீங்க,இது போதும்நீங்கவாட்டுக்குகையிலகால்ல போட்டுக்கிட்டாலும் ரொம்ப சேதம் ஆகாது. என அவள் எடுத்துக்கொடுத்த தொரட்டிகொண்டு தான் வீட்டின் முன் புறவெளியெங்கிலுமாய் இருந்த முட்களை வெட்டினான்,

வெட்டினான்,வெட்டினான்,வெட்டிக்கொண்டேஇருந்தான்,வீட்டுவேலைநடந்து கொண்டிருக்கும்போதேஇந்தவேலையும்நடந்துமுடியவேண்டும்என.நினைத்து நினைத்ததுபோல்வெட்டியும்விட்டான்.பலவருடங்களாய்வெட்டாமல்விடப்பட்
டிருந்தவெளிமுட்களை,பரவாயில்லை,வெட்டியதும்அதுவும்அழகுபட்டேகாட்சி தந்ததாய்/இத்தனைக்கும் அது இவன் இடமில்லை வேறொரு ஊரார் இடம். ஏன்இதைப்போய் வெட்டிக் கொண்டு என நினைக்காமல் நாம் வந்து வாழப் போகிறஇடம்கொஞ்சமாவதுசுத்தமாகஇருந்தால்நன்றாக இருக்குமே என்கிற எண்ணத்தில்செய்ததுதான்.அது போல்இதைவேறெதாவதுசெய்ய வேண்டும். என்கிறஎண்ணம்மேலிட்டசமயங்களில்ஒன்றுநேரம்கிடைக்காமல் போயிருக் கிறதுஅல்லதுமிதமிஞ்சியசோம்பேறித்தனத்தில் பேசாமல் ஒன்றும் செய்யா மல்விட்டிருக்கிறான்.ஆனால்இன்றுஎப்படியும்செய்துமுடித்துவிட வேண்டும் வேலையைஎன்கிறமுடிவுடன்ஆரம்பித்தான்வீட்டின்பின்புறவெற்றுவெளியில் முளைத்துக் கிடந்த செடிகளைப் பிடுங்க/

காலையில்எழும்போதுஇப்படியெல்லாம்ஏதேனுமாய்திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால்நடந்ததெல்லாம்சரியாகவே.காலையில்ஐந்தரைமணிக்கெல்லாம்

எழுந்துமெலிதானஒருவாக்கிங்அல்லதுஇளம்தேநீருடனானஒருசைக்கிளிங்,, ,,எனதிட்டமிட்டயாவும்காலைஏழரைமணிக்குஎழுந்தபோதுகாணாமல் போன பரிதாபத்துடன்முகம்கழுவிதேநீர்அருந்திவிட்டு.சைக்கிளைஎடுத்துக்கொண்டு சென்றான்.போறதுதான்போகிறீர்கள்அப்படியேவரும்போதுகறிஎடுத்துக்கொண் டுவந்துவிடுங்கள்எனபையையும்பணத்தையும்கொடுத்தனுப்பினாள்மனைவி. கோழிக்கறிஎடுத்துக்கொண்டும்சைக்கிளைசரிசெய்துகொண்டுமாய் வீடுவந்த போதுமணி9.00ஆகிப்போனது,பல்ப்பொடியையும்பிரஷ்ஷையும்எடுத்துக்கொண்டு வீட்டுக்குப்பின்னால்போனபோதுபின்வெளியில்முளைத்துத்தெரிந்தசெடிகளை ப்பிடுங்கவேண்டும்எனஏற்பட்டமனமுனைப்பு இப்பொழுதுமுழுஉருப்பெற்று செயல்பட்டுக்கொண்டிருந்தவேளையில்தான் பார்க்க பல்லாரி வெங்காயம் போல்தெரிந்தஅதுஎன்னவாய் இருக்கும் என அருகில் போய் பார்த்த போது தான்தெரிந்ததுஅதுசைக்கிளின்ஹேண்ட்பார்முனையில்இருக்கிறகைபிடியின் முனை என்பது./

5 comments:

 1. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
  2. நன்றி வாக்களிப்பிற்கு சார்/

   Delete
 2. முடித்த விதத்தை எதிர்ப்பார்க்கவே இல்லை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,.கருத்துரைக்குமாக/

   Delete