21 Feb 2015

மசால் கடலை,,,,,

நேற்றை விடஇன்றையநாள் மாலைநன்றாகவேஇருந்ததுபோல்தோன்றியது.

மஞ்சள் பூத்த செந்நிற வானமும் வானத்தில் ஊடாடித்தெரிந்த பறவைகளும் பார்க்க நன்றாகவே/

தவிர ஒருவர்அழைப்புவிடுத்தஇடத்திற்குப்போகாமல் அதற்கான கற்பிதங்கள் ஆயிரங்களைமனதில் விதைத்து ஒளித்துவைத்துக் கொண்டு திரிவதும் நன்றா கவே இருக்கிறது.

ஆயிரம்தான் இருந்தாலும் சமாதானம் என்கிற ஒற்றை இலக்க வார்த்தையை முன்வைத்து வெள்ளைக்கொடி பிடிக்காமல் முரண் பிடித்துக்கொண்டே திரிவ தும்அவ்வளவாய்நல்லதில்லைதான்என்ற போதிலும் கூட இப்படியாய் முரண் கொண்டு திரிவதில் இருக்கிறசுகம்நாவின் சுவையறும்புகளில் தடவிய இனிப் பாய் இனிக்கத்தானே செய்து தொலைக்கிறது சமயங்களில்/

இனிக்கட்டும் இனிக்கட்டும் எத்தனை காலம்தான் இனிக்கிறது எனப்பார்த்து விடலாம் என்பான் நண்பன் ஒருவன் .அவனுக்கும்இப்படியெல்லாம் நேர்ந்தது ண்டுசமயத்தில்/ ஆனால்அவன் மனதில் முடிந்து வைத்துக்கொண்டு அலைய மாட்டான்.முளைத்துக் காணப் படுகிற முரண்களை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவோமறைமுகமாகவோசொல்லிவிடுவான்.அதனால் என்னபிரச்ச னை வந்த போதும் கூட/

பறக்கும்பறவைதனது இறகு சுருக்கி இருப்பிடம் வந்தடைந்த மாலை வேளை தான் இவனது பயணவேளையாகவும் இருக்கிறது.

சாலையும் சாலையில் தென்பட்டமனிதர்களும்கனரகஇலகுரகவாகனங்களும் பேருந்துகளும் அதனுள்ளாய் குடிகொண்டிருந்த மனிதர்களுமாய் புலப்பட்டுத் தெரிந்தார்கள்.

போனவாரம்இம்மாதிரியாய்வந்துகொண்டிருந்தவேளைஇரவு 9.00அல்லது 9.30 மணிக்குள்ளாய்இருக்கலாம்.என்பதாய்நினைக்கிறான். ரயில்வேகேட் அடை ப்புக்குக்காய் காத்திருந்தான்.மினிபஸ் முதலாய் டவுன் பஸ் இரண்டாவதாய். இரண்டுக்கும் இடையிலாய் நிறைபாரத்துடன் நின்றிருந்தட்ரைசைக்கிள்என மாறிமாறியும் இடைவெளி விட்டும்அருகருகாமையாகவும் நின்றிருந்த பஸ்க ளும்,லாரிகளும் கார்களும் மற்றும் இரு சக்கரவாகனங்களுமாய் நின்றி ருந்த வேளையில்தான் இவன் சென்ற வேளையாயும் இருக்கிறது.

இந்நேரம்வரை பசிதாங்குவது ஆச்ச்சரியம்தான். இத்தனைக்கும் சாயங்காலம் குடித்தஒருடீயோடுசரி.மகளின் சடங்கிற்கு வாருங்கள் என கூப்பிட்டிருந்த சொந்தக்காரர் வீட்டிற்கு போய் சாப்பிடாமல் கூட வந்திருக்கிறான்.

பெரும்பாலுமாய்திருமண வீடுகளிலோ அல்லது வேறெதாவது விசேஷ விடுக ளிலோ சாப்பிடுவதை தவிர்த்திருக்கிறான்.அதையும் மீறி கண்டிப்பாக சாப்பி டேஆகவேண்டும் என்கிற நிலை வரும்போது இவன் சாப்பிடுவது ஒன்று தோ ழமை அல்லது நட்பு பூத்த நண்பர்களின் வீடாய் இருக்கும் அல்லது மிகவும் ஏழ்மை பூத்தவர்களின் வீடாய் இருக்கும்.

அப்படித்தான் வாழ்ந்தும் வளர்ந்துமாய் பழகி விட்டான்.அந்தப்பழக்கம் இப்பொ ழுது வரை இரண்டு பெண்பிள்ளைகளுக்கு தந்தையானப்பிறகும் கூட இப்படி யாக இருக்க வைத்திருக்கிறது.அது படித்தான் இன்றும் இப்படி இருந்து வருகி றான்..அதற்குப்பெயர் அப்புராணித்தனம். பிழைக்கத் தெரியாதவன், பந்தியில் உட்கார்ந்துவிட்டுபாயாசம்வாங்கிக்குடிக்கத்தெரியாதசாதுர்யமற்றவன்என்கிற பெயர்களை இவன் தாங்கியிருந்த போதும் கூட அதனால் இவனுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஒன்றும் கிடையாது.ஆனால்இவனைப்பற்றிபேசுபவர்க ளுக்கு பேச்சும் புரணியும் நாக்குத் தடித்தவார்த்தைகளும் லாபம்.

அப்படியானஎல்லாவற்றையும்தாங்கிக்கொண்டும் ஓடிக்கொண்டுமாய் திரிந்த நன்நாளானஇன்றுமாலைஉறவினர் அழைப்பிற்கிணங்கிபோனவிசேஷத் தில் கை நனைக்க மறந்து மொய் மட்டும் செய்து விட்டு வெளிக் கடையில் டீ சாப் பிட்டுவிட்டு வந்தது இப்பொழுதும் ஞாபகம் வருவதாய்/

கூடவே பந்தியில் அமர்ந்திருந்த சிலரின் பேச்சும் வெளியில் இருந்த சிலரின் பேச்சும் இவனை கேலிபண்ணியும்,தோலுரித்து தொங்க விட்டதுபோலவுமாய் ஆகித்தெரிகிறது.

“அப்படித்தானப்பாஇவன். என்னவோ நம்மளையெல்லாம் சோத்துக்குச் செத்துப் போயி திரியிற மாதிரியும் அவன் என்னவோ எனக்கு அதெல்லாம் வேணாம் ஒன்னும் தெரியாது அதப்பத்திங்குறது மாதிரியில்ல நடந்துகிறான். பெரியஇவன்போல”/,,,,என்கிறசொல்தாங்கிரயில்வேகேட் வந்து நிற்கிற நேரம் வரை பசியெடுக்காததும் ஆச்சரியமாகவே/

ஒரு டீ இரண்டு வடைகள் எனபதல்ல இவன் கணக்கு.ஒரு டீமட்டும்தான் எப்பொழுதும்.என்றாவது ஒருநாள் குடிக்கிற டீ ஒன்றுடன் கடிக்கிற வடை ஒன்றாகவும் இருக்கும்,இன்று அது இரண்டாக மாறிப்போனது, இருக்கலாம் நாவின் சுவையறும்புத்தூண்டுதல்+மனம் தோணிவிட்ட ஆசை இவைகளில் ஏதாவது ஒன்றாய் இருக்கலாம்.

வடைகள்இரண்டைசேர்ந்தாற்ப்போல்சாப்பிட்டுவிட்டான்.உளுந்தவடை மட்டு மல்ல டீக்கடையில் முன் மேஜையில் இருந்த கண்ணாடிப் பெட்டிக் குள் ளா ய் குவித்துப்போடப்பட்டிருந்த பருப்புவடை,காய்கறி வடை,மசால் வடை என இருந்தவைகளில் உளுந்த வடை இவன் கண்ணைப்பறித்ததாக,அது அப்படித் தான் வடைக்கடை என்று தான்சொன்னார்கள்அதற்கு அப்படித்தான் பெயராகி காட்சிப்பட்டது.

எப்பொழுதுமே வடை சுமந்தே காட்சிப்பட்ட அந்தக்கடை ஒயின் ஷாப்போல் நல்லஅடையாளமாகியும்போனது.அந்தக்கடையில்வாங்கித்தின்ற வடையும்,  குடித்த டீயும்தான் இப்பொழுது பசி தாங்குகிறது.

என்னதோழர்என்னசெய்யிறீங்கஎன்கிற அக்குரலைஇப்பொழுதெல்லாம் தவிர் க்கமுடியவில்லை, தவிர்க்கவும் விரும்பவில்லை இவன்.

நல்ல ஆதர்சப் பூர்வமான குரல், அதை ஒட்டிவருகிறவாஞ்சையான பேச்சும், மதிப்பும்குணமுமானசொற்கட்டுகளுடனானவார்த்தைபிரோயகம்எல்லாம்மனம் பிடித்துப்போகிறதுதான்,அவர்கள்அப்படியாய்பேசும்போதுகேட்கும்போதுமாய்/

இப்பத்தான்வந்தேன்தோழர்,வீட்லமோட்டுவளையப்பாத்துட்டு சும்மா ஒக்காந் துருக்குறது பொழுது போகாத மாதிரிதெரிஞ்சிச்சி அதான் கொஞ்சம் மசால் கடலப்பருப்பு சாப்புடுவோம்ன்னு சாப்புட்டுகிட்டுஇருக்கேன்.

அதுலபாத்திங்ன்னா டவுனுக்குள்ளயெல்லாம் அலைஞ்சி திரிஞ்சிட்டு இப்ப இங்க வந்து ஏரியாவுல இருக்குற கடையில வாங்குனேன்.அது என்னமோ மசால் கடலைன்னு பேராகி இருக்குறதுனால மசால்ரொம்பஇருக்கணுமின்னு நெனைச்சிட்டாங்காளாஎன்னன்னுதெரியல,ஒரேசெவப்புகலராஇருந்துச்சி,பாக்கவேகண்ணுபூத்துப்போச்சி,கண்ணீர்வராததுதான்பாக்கி அப்படியானததின்னுட்டுஒக்காந்திருக்கேன்வர்ரேன்இதோநீங்கசொல்றயெடத் துக்கு,பாத்துக்குருவோம் ,பேசிக்கிருவோம்,,,,,,,

6 comments:

 1. வணக்கம்
  சொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. கண்முன் நிறுத்தியக் காட்சிகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதா எம் மேடம்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete