7 Feb 2015

பிஞ்சு நீர்,,,,,,

இறங்கிச் சொட்டிய நீரின் வரிகள் சொல்லிச் சென்ற சேதியை அறிய காத்திருந்தபறவைகள்,வண்டுகள்,பூச்சிகள் எல் லாம்இடம்பெயர்ந்து போய்விட்டநேரத்தில்கீழேநின்றிருந்த எனது மகனின் மீது இறங்கிச் சொட்டிய நீரின் துளி வெடித்த சப்தம் “டப்”என வெடித்துக் கேட்கிறது.

வெடித்துக்கேட்டசப்தம்அங்கிருந்தயாருக்கும்கேட்காததாய் இருந்தி ருக்கும் போல.யாரும் அப்படியெல்லாம் ஆச்சரி யமாக திரும்பிப் பார்த்துவிடவில்லை.காக்கா,குருவி,மைனா,இன்னும் நிறைய, நிறை யனவாய்நிறைந்துபோனவைகள்எல்லாம்எதையும்அறியும்ஆவலற்று திரிந்ததாய் எனது மகன் சொல்கிறான்.

“அப்படியெல்லாம்இல்லை,அததற்கானவேலைஅததற்கு,விட்டுவிடு,-- அதைப்போய் தொந்தரவு செய்து கொண்டு”

எனநான் பதிலுரைத்த எனது மகனுக்கு வயது பதிமூணு. ஒன்பதாம் வகுப்புபடிக்கிறான்.காக்கி பேண்ட்,ஊதா சட்டைகொண்ட பள்ளியின் யூனிபார்மில் பார்க்க நன்றாக இருந்தான்.
அவனது கலருக்கு ஏற்ற யூனிபார்ம் என எனது மனைவி அடிக்கடி சொல்லுவாள்.கேலிகூடப்பண்ணுவாள்.அந்தகேலிக்குஅவன் சிணுங் கும் சிணுங்கல் இருக்கிறதே ,அடே யப்பா,பார்க்க கண்கள் இரண்டு போதாது.

காலையில் எழுந்து பள்ளிக்குக் கிளம்பி அந்த புத்தக மூட்டையை தூக்கி சுமக்கும்பிள்ளைகள் எல்லோருமே வருத்தப்பட்டு சுமப்பவர் களாகிப்போகிறார்கள்.போதாத இரண் டு கண்களுடனேயே அதை பார்த்தவனாகிப் போகிற நான் அதன்படியேதோற்றமளித்தஅவனைப் பார்க்கிறேன்.

அவன்சொல்கிறான்.“அப்பா திரும்பவும் மழை ஆரம்பித்து விட்டது” என.
“ஆகாஎன்னசெய்வது மழை பெரியதாக பெய்ய ஆரம்பித்து விட்டால் நமது பாடு சங்கடமே,ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்கிக் கொள்ளலாம். இங்குவரிசையாகநிற்கிற கட்டிடங்க ளில்,இருந்தாலும் அவை எவ்வ ளவு தாங்கும் இங்கு காத்து நிற்கிறமனிதர்களை அவர்களின் எண்ண ங்களை,ஆசைகளை,நிராசைகளை,வெறுப்புகளைஇன்னும்,இன்னுமா
னவைகளை.”

மாலைஆறு பதினைந்துக்குப் போகவேண்டிய வண்டி மணி 6.40 ஆகியும் இன்னும் கடந்து போகவில்லை. தென்காசி பாசஞ்சர்.6.15க்கு கிளம்பி இரண்டரை மணி நேரத்தில் தனது இலக்கை அடையும். அந்தவண்டியின் கிளம்பல் என்று தாமதம் போலும்.அதன் பாதிப்பு கேட்  அடைப்பிலும் தெரிகிறது.

கால் மணி நேரமாய் ரயில்வே கேட்டின் அடைப்பு நிலை கொண்டி ருக்கிறதுஎனகோபப்பட்டவர்கள்யாரையும்கவனிக்காதவர்களாய்எங்க ளது பேச்சு ஒருஓரமாக ஓடிக் கொண் டிருக்கிறது. மழை காலம் இது எங்கிருந்துவருகிறதுநீரின்வரிஎனஅறியும்ஆவல்கிளம்பியநேரத்தில் ரோட்டை,ரோட்டோரகட்டிடங்களை,சினிமாதியேட்டரைமனிதர்களை, பேருந்துகளை,சுற்றிநின்றஇருசக்கரவாகனங்களைமற்றும்எல்லா வற்றையுமாகவும்,அவைகள்நின்றரோட்டடியிலுமாகப்பார்க்கிறேன்.

வேஷ்டிதுண்டு,கைலிசட்டை,பேண்ட்இன்சர்ட்,டீசர்ட்ஜீன்ஸ்என்கிற ஆடைகளில்பொதிந்துகொண்டு,இருசக்கரவாகனங் களில், பேருந்து களில்,சைக்கிள்களில்,பாதசாரிகளாககாட்சிதருகிறார்கள். வடிவமை த்துசெதுக்கி,உதிர்ந்ததுகள்கள்போக மிஞ்சிய மனிதஉருவாய் காட்சி தந்த அவரவர் களின் மீது யாதொருகுற்றமும் இல்லை இந்த கணம் வரை.மூடிய ரயில் வே கேட்டில் காத்திருப்பதை தவிர்த்து.

அவர்களது காலடியிலும்,பக்கவாட்டிலுமாகவும்,நின்று கொண்டிருந் தவண்டிகளின்ஓரமாயும்முழுவதுமாகபறந்துஅமர்ந்திருந்த தூசியும், அழுக்குமாய்காட்சியளித்ததார்ச்சாலையில்பறந்தகொசுக்கள் ,ரீங்கா ரமிட்டவண்டுகள்,மாலையின்மயங்கலில்அடர்ந்தமரம்தேடிஅடைந்த பறவை களின் சப்தம்,,,,,,,,என காட்சியளித்த நேரம்தான் இந்த காட்சி யும் பதிவாகிறது.

மழைபெய்யவில்லையே,.காணோமே மழையைஎன அவனிடம் சொ ன்னபோது“இல்லைஎனதுதலையின்மீதுஇப்போதுதான்இறங்கிச்சொட் டியது” என்கிறான்.

சுற்றிலுமாகபார்த்துவிட்டு“இல்லை,மரத்தின்இலையிலிருந்துஇறங்கிச் சொட்டியிருக்க வேண்டும்.பெய்து முடித் திருந்த மழையின் மிச்சம் மீதி மரஇலைகளின் மீது ஒட்டி இருந்திருக்க வேண்டும்,அவைதான் இப்பொழுது உன்மீது மழை நீர் வரிகளாக இறங்கிச் சொட்டுவதாய் அறிகிறேன். மற்றபடிமழையெல்லாம்இல்லை”என்கிறேன்.

ரோட்டடி,வண்டிகள்,கார்கள்,மனிதர்கள்,மற்றஎல்லாவற்றையுமாகபார்க்க
ச்சொல்கிறேன்,ஆமாம்மழைபெய்யவில்லை,என்பதை உறுதி செய்த அவன்என்னைப்பார்க்கிறான்.நான்அவனைப்பார்க்கிறேன்.திரும்பத் திரும்பஎனது பார்வை அவன் மீதும்,அவனது பார்வை எனது மீதுமாக மாறி,மாறி மோதிக்கொண்டநேரத்தில் மரத்தை அண்ணா ந்து பார்த்த நான் அதன் நீள,நீளமானஇலைகளையும், அதன் அடர்த்தியையும், அதன் ஆகுருதியையும்,அதன் வளர்ச்சியையும்,,, ,,,,,, கண்டு வியக்கா மல்இருக்க முடியவில்லை. ஐம்பது வருட சரித்திரம் உண்டு என்கி றார்கள்.அந்த மரத்திற்கு.

ராமமூர்த்திரோடுஉருவானகாலத்திலிருந்துஇருக்கிறதுஎன்கிறார்கள்.

இருக்கலாம்,ஐம்பதுவருடங்கள்மட்டும்இல்லை.அதற்கும்கூடுதலாக இருந்தாலும்ஆச்சரியப்படுவதற்குஇல்லை.அவ்வ ளவு பெரியதாக தனது தோற்றம் காட்டி நின்றதை நான்கு பேர் சேர்ந்தால்தான் சுற்றி வளைக்க முடியும்.
“ஆத்தி எத்தத்தண்டி”என்கிற இலக்கணத்துக்கு மாறாததாய் காட்சிய ளித்தது.நான்குபேர்சுற்ற,நாற்பதுபேர்அதைபார்க்க,பூக்கள்பூக்க,இலைகள் உதிர,காய்கள் வெடிக்க, மறுபடியும்மறுபடியுமாய்இவையெல்லாம்சு ழற்சியாய்நிகழ,,,,,,,பார்ப்பவர்க்கும்,கேட்பவர்க்கும்ஒரேசந்தோஷமாகிப் போகிறது.அந்தசந்தோஷம்நிலைக்கநான்,எனதுஎன்றில்லாமல்,நாம்,  நமதுஎனயோசித்துஅல்லதுநிலைகொண்டுமரங்களைவளர்க்காவிடில்கூடஅதிலிருந்துசொட்டும்நீரைரசிக்க,ஏற்ககற்றுக் கொள்வோம் வாருங்கள்.
அடுத்துமழைநின்றகணங்களில்மரத்தடியில்நிற்கும்யாரும்மழை நீர் சொட்டுவதைக்கண்டுஅஞ்சிஒதுங்கிவிடவேண்டாம்எனஇதன்மூலம் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

8 comments:

 1. ஆகா... நாம் நமது சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. மரத்திலிருந்து மழைநீர் சொட்டுவதை ரசித்தால் அந்த அனுபவத்தை மறக்கமாட்டார்கள். ஸ்லோமோசனில் இந்தக்காட்சியை படங்களில் காண்பிக்கும்போது ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விச்சி சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. நன்றாயிருக்கிறது.

  வரிகள் உடைத்து, பிரிந்து ஒதுங்கி விலகி தெரிவது எனக்கு, என் கணினியில் மட்டுமா? DD அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே? என் கணினியின் ஃபாண்ட் சைஸை நான் குறைத்துக்கொள்ள வேண்டுமோ? அவைகளைச் சரி செய்து விடலாமே... உதாரணத்துக்கு,

  //கூடுதலாகஇருந்தாலும்ஆச்சரியப்படுவதற்குஇல்லை.அவ்வ ளவு பெரியதாக//

  //

  ரோட்டடி,வண்டிகள்,கார்கள்,மனிதர்கள்,மற்றஎல்லாவற்றை

  யுமாகபார்க்கச்சொல்கிறேன்,ஆமாம்மழைபெய்யவில்லை,//

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஸ்ரீ ராம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. அருமையான எழுத்து அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete