அவர் ஏன் அப்படி கோபப்பட்டார்?அவரது கோபம் எங்கிருந்து சுளியி டுகிறதுஎனத்தெரியவில்லை. ஆனால் கோபப்பட்டு விட்டார்.
“கோபம்என்றால்கோபம்அப்படிஒருகோபம்”எனசொல்கிறஅளவில்
உஷ்ணமாகிப்போகிறார்.பக்கத்தில்ஏதேனும்சின்னஞ்சிறுஉயிரிகள்
இருந்தால் கருகிப் போயிருப்பார்கள் போலும்.
முதலில் நாலாம் எண் கவுண்டரில்
உள்ள கிளார்க்கைப் பார்க்கிறார். அவர் கூறிய பதிலில் திருப்தியடையாமல்
இரண்டாம் நம்பர் கவுண் டருக்குவருகிறார்.அங்கேயும்அவருக்கானபதில்இல்லைபோலும். பின் வாங்கியவராய் 5 ஐயும்,6 ஐயும் 1 ஐயும்
பார்க்கிறார். அவர்களெ ல்லாம் பிஸியாக/
கடை நிலை ஊழியரைபோய்ப்
பார்க்கிறார். அவர்7 எண் கவுண்ட ரைக்காட்டஅங்கேயும்போய்விபரம்கேட்கிறார்.மெலிந்தஉடல். தளர் ந்த நடை,உப்பிப்போன கன்னம்.50வயதிற்கு
மேலிருக்கலாம் அவரு க்கு. சிவந்த நிறத்திற்கு அவர் அணிந்திருந்த
சட்டைமுழுதாக பொரு ந்திப் போய் விடவில்லை. கண்ணாடித் தட்டிலிருந்த
மலர்செடி போ ல துருத்திக்கொண்டு ஒட்டாமல்/
தொளதொளவென வெளிர்நிறத்தில்
அணிந்திருந்த சட்டைக்கு கீழி ருந்த வேஷ்டியில் ஓடித்தெரிந்த ப்ரெவ்ன்க்கலர்
கரை அவரது பாதம் தட்டி நிற்கிறது. கையில் எந்நேரமும் ஒலிக்கலாம் அல்லது
எந்நேர மும் பேசிக்கொள்ளலாம் என தயார் நிலையில் இருந்த செல்போன்.
மேல் புறமாய் திறந்திருந்த சட்டை பட்டன் வழியாக அவரது நெஞ்சி ன் வெள்ளை ரோமங்கள் வெளிப்பட்டுத்தெரிந்தது.
படிய வாரியிருந்த தலையிலிருந்து நான்கு வெள்ளை முடிகள் சிலு ப்பி நின்றது. முகத்தில்மாட்டியிருந்த
கண்ணாடி இளம் கருப்புக்கலர் காட்டி சிரித்தது.சிரித்த
கண்ணாடியின்பிரேம்களில் பெயிண்ட் உதிர்ந் துஉரிந்து நின்றதுஅவருக்கான
உடலையும்எடையையும்தாங் கிய வாறு இருக்கையிலிருந்து ஊன்றி நின்ற இரண்டு கால்களில் சூவும், ஸாக்ஸீம்/
வலதுகால்பாதத்தில்பின்பக்கத்தில் பாதியை காணவில்லை. அரைப் பாதம் வரை வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.
“சுகர்ரொம்பகூடிப்போச்சுசார்.சின்ன புண்ணாத்தான் மொதல்ல இந்த
யெடத்துலமொளைச்சதுகாலைகாட்டிசொல்கிறார்..அப்பறம்பெருசா கிக்கிட்டேபோயி ஒரு
கால கட்டத்துல ஆறல,என்ன செய்ய?டாக்டர் கிட்டப்போயி நின்னப்ப
“ஒனக்கு சுகர் ரொம்ப கூடிப்போச்சு,புண்ணு வந்த பகுதிய ஆபரேசன்
பணிஎடுத்துரலாம்அப்படின்னாரு,நம்ம ஏரி யா டாக்டருதான் சார்,இல்லைன்னா
முழுக்காலுக்கும் பரவி மொழ ங்கால்லஇருந்துஎடுக்கவேண்டி வரும்ன்னாரு.
அப்பத்தான் எனக்கு சுகர் இருக்குற விஷயமே தெரிய வந்துச்சு.சங்கடப்பட்டு
என்ன செய்ய சார்அந்தடாக்டர்சொன்னஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆயி
ஆபரேஷன்பண்ணிக்கிட்டேன்.இப்ப அரப்பாதத்தோட அலையுறேன்” சார்என்றார்,
நேற்றைக்கு முன் தினம் அவர் எனது வண்டிக்கு பின்னால் லிப்ட கேட்டு ஏறி வரும் போதுதான் இதெல்லாம் சொல்கிறார்.
“நம்ம ஊருல இருக்குறஒரு தனியார்
மில்லுலதான் வேலை பாத்தேன் சார்.நான் அங்க போயிவேலைக்குசேரும்போதுஎனக்கு
வயசு23 சார்.ஒரு 4
வருசத்துக்குமுன்னாடி தான்அங்கயிருந்து வந்தே ன்,ரிட்டையர்டாகிஇல்ல, மில்ல
மூடிட்டாங்க,லாக் அவுட்டுன்னு அறிவிச்சுட்டாங்க,என்ன செய்ய?நஷ்டம்,யூனியன்
நடவடிக்கை,அது இதுன்னு கைவிரிச்சாங்க,காரணம் சொன்னாங்க?அதை நம்பி 27 வருசம்
ஓடிருச்சு.என்னய மாதிரி கிட்டத்தட்ட 200 குடும்பம்.அவுங்க கதியெல்லாம்
என்னாச்சுன்னு தெரியல.பல பேரு பலபக்கம் பொழப்பப்பாக்க போயிட்டங்க சார்.பல
பேரு குடும்பத்த மட்டும் இங்க விட்டுட்டு மெட்ராஸீ,பாம்பேன்னு
பொழப்புக்காக அலையுறா ங்க சார்.மாசம் ஒரு தடவ ரெண்டு தடவைன்னு வந்து
குடும்பத்தப் பாத்துட்டு போய்யிறாங்க.
அவுங்க
அங்கயிருந்து வரும் போது இருக்குற சந்தோசம் புள்ள குட்டிகள் விட்டு
பிரிஞ்சிப் போறப்ப இருக்குறதில்ல சார்.என்னதான் வசதியான ஊருல இருந்தாலும்
வேலபாத்தாலும் கூட இங்க பழைய சாப்பாட்ட சாப்ட்டுட்டு இருந்த மாதிரி
இருக்குமா சார்?
எனக்கு ஏதோ குடும்ப பலம்,
பூர்வீக சொத்து கொஞ்சம்ன்னு இருந்துச்சி,அத வச்சி ஒரு பொண்ண
கரையேத்தீட்டேன், இப்ப திருப்பூர்ல இருக்காங்க,ஏதோ அவுங்க பொழப்பு ஓடிகிறுது
நிக்கா மலும்,பழுது படாமலும்,/
இன்னொரு
பொண்ணுக்கு யெடம் பாத்துகிட்டு இருக்கேன், மிச்சம்
நிக்கிறதுபையன்தான்சார்.அவன்கையஊணிகரணம்பாஞ்சிக்கிறுவா ன். அந்த அளவுக்கு
அவங்கிட்ட தெறம
கெடக்கு. பெருமைக்காக சொ ல்லலசார்,சின்ன வயசுல
நான்எப்பிடிஇருந்தேனோஅப்பிடியே இருக் கான் சார்.கழுத கொணத்துலயாவது
கொஞ்சம்மாற்றம் இருக்கக் கூடாது.சொன்னாலும் கேக்கமாட்டேங்குறான்,
நாலுயெடத்துல போ யி அனுவப்பட்டு வந்தா தன்னால தெரியும்.நானும் சும்மா
இல்லாம
இந்த ஒடம்ப வச்சிக்கிட்டு ஒரு யெடத்துல வாட்ச் மேனா இருக்கேன் சார்.
எனக்கு மாதிரி இங்க எத்தன
பேருக்கு வாய்க்கும் வாய்ப்பு சொல்லு ங்க?200
குடும்பங்களதெருவுக்குகொண்டுவந்த அந்த மில்லு நிர்வா கம் இதையெல்லாம்
யோசிச்சிருக்குமான்னு தெரியல சார். எப்பயு மே வலியும் வேதனையும் நம்மள
மாதிரி ஆட்களுக்குதான் சார், அவுங்களுக்கு என்ன?
எங்க யூனியன் தலைவர் கூட ஆளு காலமாயிப் போனாருன்னு சொன்னாங்கஎல்லாம்கேள்விப்பட்டதுதான்எங்கயிருக்காருஎன்னன்னு
தெரியல,துஷ்டிக்குக்கூடபோகமுடியல,அவருஇல்லாட்டிஎங்களுக்கு
மில்லுல,அந்த சம்பளமில்ல,அந்த மரியாதை இல்ல, அந்த வாழ்வு இல்ல,,,,,,
ஆனாஅப்பிடியெல்லாம்எங்களுக்கு கௌரவமும், நெஞ்சு நிமிர்வும் குடுத்தவரு
இப்பசாம்பலாபோனப்பெறகும்எங்க
மனசுல நிக்குறாரு சார். சும்மா சொல்லக்கூடாத் சார்,எங்களோட
ரததமும் சதையுமாஇருந்தாருஅவரு,எங்கஎல்லார்வீட்டுவிசேசங்கள்லையும்
முடிஞ்சஅளவுகண்டிப்பா கலந்துக்கிருவாரு/
சுருக்கமா சொன்னா எங்கள்ல ஒருத்தரா இருந்தாரு அவரு. அப்படி யெல்லாம் இனி ஒரு மனுசரப்பாக்குரது அபூர்வம் சார்.”
என்னைப்பார்த்த, எனது இருசக்கர
வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த ஒரு சில பொழுதுகளிலேயே எப்படி அவரால்
இப்படி யெல்லா ம் பேசிவிடமுடிகிறது எனத்தெரியவில்லை.
நேற்றைக்கு முன்தினம் காலை நான்அலுவலகம்செல்கிற வழியில் தென்பட்டு
என்னுடன் ஏறி வந்தவர்தான்இதெல்லாம் சொல்பவராக மாறித்தெரிந்தார்.
அவரின் சப்தம் இன்னும்
கூடிக்கொண்டே போனது.முடி அடர்ந்த கையை ஆட்டி,ஆட்டி வேகமாகவும் தொடர்பு
விட்டுப்போகக்கூடாது என்பவராயும்பேசுகிறார்.அவர்சப்தமிடும்போதுஅவரதுஉடல்ஆடிப்
போகிறது.பேச்சுஅறுந்துஅறுந்து வார்த்தைகள்தொடர்பற்றுதெறிக்கிறது.
அவர் வெளிப்படுத்திய வார்த்தைகள் அந்த பரந்த வெளியில் பட்டுப் பரவுகிறது.
5 comments:
கண் கலங்க வைக்கும் நிகழ்வுகளை அவர் கோர்வையாகவும் உணர்ச்சி வசப்பட்டும் சொன்னதும், தாங்கள் அதனை இங்கு பதிவிட்டதும் அருமை. பாராட்டுக்கள்.
தலைப்புத்தேர்வும், தேர்ந்தெடுத்துள்ள மின்னல் படமும் மேலும் அழகு ! பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான நிகழ்வு நண்பரே மனம் கணத்து விட்டது புகைப்படம் அருமை.
தமிழ் மணம் 1
வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மிகவும் கலங்கினேன்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment