18 Apr 2015

சாயம் ,,,,,2

சிவப்புஎன்றால்அப்படி ஒரு சிவப்பு என்று சொல்லலாம்.அது ஏனோ தெரிய வில்லை.சிவப்பு நிறத்தின் மேல் இருக்கிற ஈர்ப்பு தவிர்க்கஇயலாமல் போவ தாக/

இருக்கட்டுமே என்ன அதனால் குறைந்து போனது. ஒவ்வொருவருக்கும் ஒவ் வொருநிறம்பிடித்திருந்ததுபோலவும்,அதன்மீதுஅபிமானம்இருக்கிறது போல வும் இவனுக்கு இந்த நிறத்தின் மீதாய்/ அதையார்குற்றம் சொன்ன போது பரிக சித்து இகழ்ந்த போது கூட இவன் கவலைப்பட்டதில்லை.

வேலைக்குவருவதற்குசிலவருடங்களுக்குமுன்பிலிருந்தேராஜேந்திரன்,வாச ன்சோமசேகர்,பாண்டிமுருகன் ,,,,என இன்னும்இன்னுமாய்நிறைந்து போன நண்பர்கள்இருக்கிறஇயக்கத்தில்இவன்உடலும்உள்ளமும் இருந்தது. உடல், பொருள்ஆவிஆன்மாஎனஎங்குதிரும்பினும்தென்படும்இவனானமுகம்தாங்கியி ருந்தஇவன்அவர்களுடன்இயக்கவேலையாய்போனபோதும் கொண்ட கொள் கையைமனதில்ஏந்திசைக்கிளின்ஹேண்ட்பாரில்ஒற்றைக்குச்சியில்படபடத்த கொடியுடன்கிராமங்கள் தோறும் ஊர்வலங்கள் போன போதும் சரி,அப்பொ ழுதுமனம்பிடித்தஅதேநிறம்பின்வேலையில்சேர்ந்தபின்னுமாய்தொழிற்சங்கம் மூலமாய்நெசவிட்டு,பாவுதரித்துவருவதாகவேஉருக்கொண்டான்.உருக்காட்டிக் கொண்டான்.

அவரதுமாமாகூடகேட்டார்.ஏண்டாஇப்பிடிஇதிலிருந்துகொண்டு,,,,?இதிலிருப்ப
தால் லாபம் என்ன உனக்கு?உன்ஆன்மசுத்தி தவிர்த்துஏதும்காசுபணம் வரப் போகிறதா,கிறுக்குப்பயலே,வீடு,மனைவி,மக்கள்,சம்பாத்தியம்,நீ,நான்உறவுகள் அவர்களின் கை,கால்உடலுக்குவருவது ஆஸ்பத்திரி சாப்பாடுஅரிசிபரு ப்பு இத்தியாதிஎனகவலைகொள்.அதுவிடுத்துஎன்னடாகொடிகொள்கை,கோஷம் ,,,,எனபுடலங்காய்பயலே,இருஒழுக்கமாய்எல்லாவற்றையும் விட்டொழித்து விட்டு,,,,,,எனச்சொன்னமாமாவைஏறிட்டுபோதுநீவீட்டிற்குள்ளிருந்தால்வீட்டை யும் பார்க்கலாம்,வெளிஉலகத்தையும் பார்க்கலாம். வெளியிலிருந்தால் வெளிஉலகம்மட்டுமேகண்ணுக்குத்தென்படும்.அங்கிருக்கிறஅழகும்அவலமும் மட்டுமேபிரமாண்டப்பட்டுஉன்கண்ணையும்மனதையும்கட்டிப்போட்டுவிடும். ஆக்ரமித்து நின்று கொண்டுவீட்டை கவனிக்கமறந்து போகவைத்துவிடும். அப்புறம் +2படிக்கிறமகளின் பரிட்சைமார்க்என்ன என கேட்கத் தோணாது. வலது கையின் புஜத்தோரமாய் கிழிந்து போன மனைவியின் மனைவியின் ஜாக்கெட்கிழிசல்கண்ணுக்குதட்டுப்படாதுபோகும்.இன்னொருபுடவைக்குகாத்து நிற்கிறஅவளதுமென்மனதும்பிடிபடாமல்போகும்.தவிரமென்மனதுக்குசொந்தக்
காரனானநீமுரடுபட்டுத்தெரிவாய்,நடிப்பைஉண்மைஎனபேசவும்,உண்மையை நடிப்பு எனபேசவும் நிர்பந்திக்கப்படலாம்.மனது கல்மிஷம் பாய்ந்து போகும். ஜாக்கிரதை வா விட்டு வெளியே,சரியாக நில்,உன் உடல் மனம் ஆன்மா மூன்றையும் ஒன்றாக நிறுத்தி அதனிடமே கேள்,படுக்கையில் விழுந்ததும் உன்தலைநெற்றிமுகம்,கழுத்துநெஞ்சுவயிறு,தொடைகணுக்கால்உள்ளங்கால்,,, எல்லாவற்றின்வழியாகஉன்னைஉள்ளிறக்கிப்பார்,அப்புறமாய்தெரியும் எனச் சொன்னஅவரிடம்எனதுஆன்மாசுத்தப்பட்டு இருக்கிறதே இங்குகுடிகொண்டு இருப்பதன்மூலம்தான்,அது சுத்தப்பட்டு இருந்தாலேநீங்கள்மேற்ச் சொன்ன எல்லாவற்றையும்நல்லவிதமாய்கவனிக்கிறமனோநிலை வந்து விடும்.பின் வெளியிலிருந்து வீட்டையும் வீட்டிலிருந்து வெளியையும் கலந்துகட்டி கவனிக்கிற மனோநிலை வாய்க்கப்பெறும்ஈஸியாகஎனச்சொன்ன இவனை ஏறிட்டுப்பார்த்தஅவர்அடுத்தடுத்துபேசியநாட்களில்இவனிடம்இதுபற்றிஎதுவும் பேசுவதில்லை.

ஒன்றுஇரண்டுமூன்றுஎனவரிசைகட்டிஇறங்கியபடிகள்வீட்டின்நடையில்முட்டி சாயம் காட்டி விரிகிறது.

அழகாய் இறங்கிச் சரிகிறது படிகளில் நான்காவதாய்இறங்கிய படி தரைக்குள் ளாய் முங்கிப்போனது. மேடேறிய வீதி தரைக்குள்ளாய் முங்கிப்போன படியை யும் சேர்த்து ஐந்து எண்ணம் காட்டி கணக்குச்சொன்னார் கொத்தனார்.

ஐந்தென்றால்மேலேஇருக்கிறவராண்டாநடைவெளியையும்சேர்த்துகணக்குச் சொன்னார்.மழையில்நனையவும்வெயிலில்காயவும்இதுதான்தோதாக இருக் கும்என்றார்கொத்தனார்.அதிகப்படியாய்இருப்பதினால்ஒருசௌகரியம்ஒன்று பெயர்ந்துபோனால்மற்றொன்றைவைத்துசமாளித்துக்கொள்ளலாம்.எனலாஜிக் பேசினார்.

படியின்இரண்டுபக்கமுமாய்இறங்கிநிற்கிறகைபிடிகூஜாக்களில்இரண்டுஇடது பக்கமாய்இடது பக்கம் உடைந்துபொறிந்துநொறுங்கித் தெரிந்தது. வெள்ளை வேஷ்டியும்,வெள்ளைச்சட்டையுமாய் தென்படும் பாக்கியநாதன் சிமிண்ட் கடை முதலாளி யிடம் எடுத்ததுதான்.

பேச்சில்சர்க்கரையைவைத்துகொண்டிருக்கிற அவரை ரிட்டையர்ட் கொத்த னார்என்றார்கள்ஊருக்குள்.அவர்கைதூக்கிய நாட்களில் அவரை போலவே லை செய்ய ஆட்களில்லை இந்த சுத்து ஊர்களில் எங்கும்/

ஆனால்நிற்கவேண்டுமேஉருப்படியாகஎதிலும்,வித்தைக்காரர்நன்குகற்றரிந்த வேலைக்காரர்என்கிறஇத்தியாதி,இத்தியாதிகள் ஒரு பக்கம் மண்டை வீங்க ஆரம்பிக்க ஏற்கனவே இருந்த தலைக்கு அருகிலாய் இன்னொரு தலை எட்டிப்பார்க்கிறது மென்மையான கர்வம் காட்டி.

நான்இப்படித்தான்வித்தைதெரிந்தஎன்னைஓரிடத்தில்வேலைபார்க்க வைத்து யாசகம்கேட்பது போல கையேந்த வைத்து விடாதீர்கள்.நீங்கள், நான்,எனது பிள்ளைகள்குடும்பம் வாழ்க்கை வெளி சமூகம் என்கிற பிணைப்பு அறுத்து வாழத்துடிக்கிறஅல்லதுவாழமுயற்சிக்கிறவன்தொழிலுக்குப்போகமாட்டேன் நான்இனிஎனஅவர்முடிவுசெய்தபோது உருவெடுத்த கடையாய் இருந்த அது முழுஉருப்பெற்றுநின்றபொழுதுதான் இவன் அங்கு போய் நின்றான் கிராதி வாங்க/

அன்றுஅவரிடம்வாங்கியகிராதிகள்இன்றுபல்லிளித்துஉடைந்துநிற்பதாக/ஆசை
ப்படுஓயாதுநினைத்திருஅதுபற்றி நினைத்தது கைகூடும் வரை அந்த நினை வினில்உயிர்த்திரு,உயிர்த்திரு,உயிர்த்திரு,,,,,,,,,எனஇடிந்துவிழுந்திருக்கிறகூஜா வை பார்க்கிறபோது சரி,வீட்டைசுற்றியிருக்கிறவெட்டவெளியையும் அதன் வெறுமையையும்பார்க்கிறபோதும்சரி,இவனுள்ளாய்வீட்டைப்பராமரிக்கவும், வீட்டைச்சுற்றிஇருக்கிற வெற்று வெளி சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டவும் வேண்டும்என்கிறதானநினைவு எழுந்திராமல்இல்லை.

ஞாயமாகமுளைவிட்டஆசைக்குஅணையெல்லாம்வேண்டாம்.பிள்ளைகளின் படிப்பு,பெரியதானவீட்டுச்செலவுமருத்துவம்என்கிறபெரியதானஎந்தஒன்றும் இல்லாமல் வரவு செலவு கட்டுக்குள்ளாய் இருக்கிற நேரம்.இது போலான வேலைகளுக்குஇப்படியானதொருவாய்ப்புஇருந்தால்போதும்வேலைஅழைக் கிறதுஎனவீட்டுக்கடன்வாங்கிமுடிக்கலாம்வேலைகளை என்கிறதான ஆசை தள்ளிக்கொண்டேபோகிறதுகாரணம்என்னவெனத் தெரியவில்லை.

திரிதிரியாய், சடை சடையாய் இறங்கிப் போகிற முடிக்கற்றைகள் போலவாய்
அவ்வளவுஅழகாய்த்தெரிந்தது,ராசையா கொத்தனார் படிகளில்தேய்த்தசிவப்பு வீடுகட்டும் போது/

ராசையக்கொத்தனார்தான் சொன்னார்.இதுபோல வேலை செய்ய இப்பொழுது ஆட்கள்இல்லை.வலைபோட்டுத்தேடினால்பத்தில்இரண்டுபேர்அல்லதுஒருவர் கிடைக்கக்கூடும்.அப்படிகிடக்கிறவருக்கும்வயதாகிப்போயிருக்கும் என.

வயதும் அனுபவமும்மனமுதிர்வும்கையாள்கிறஒருவிஷயம்மிகத்தெளிவான
தாகவே இருந்திருக்கிறது,

VAO தனபாலன்சார்தான் வீடுகாட்சிப் படுகிற இந்தநிலத்தை வாங்கிக் கொடு த்தார்

15 குழி,ஐந்துசெண்ட்என்றார்கள். குழி ரூ3000எனபேசிமுடித்துஅட்வான்ஸீம், பாதிப்பணமும்கொடுத்தபிறகுபத்திரம்பதிவானதுஇவனதுபெயருக்கு/நடுவில் நான் ஒருவனாய் நின்று வாங்கித்தருகிறேன் மீதிப்பணத்தை என VAO பொறுப் பேற்றுக்கொண்ட பின்பு/

நகைவைத்துக் கொஞ்சம், பி.எப்பில்கொஞ்சம் என வாங்கித்தந்தான். பி எப் லோன் சற்று தாமதமானதும் நிலம்விற்றவர் கோர்ட் கேஸ் என்றார்.V A O சாரின் மூலமாக/

இவனும்பொறுத்து பதில் சொல்லி சமாளித்துப் பேசிப்பார்த் தான், ம்ஹீ ம், முடி யவில்லை. கேட்கவில்லை அவர், கொஞ்சமாய் நிமிர்ந்து கொண்டான் இவன்,
இல்லை என் நிலை இது அவர் கொஞ்சம் பொறுப்பாரானால் பொறுக்கட்டும், இல்லையானால்என்னிடம்அவர்விற்றநிலைத்தைஅவரேகிரையம்பேசிவாங்கி
க் கொள்ளட்டும். பத்திரச் செலவைக் கூடநான் ஏற்றுக் கொள்கிறேன் என்றான். என்பணத்தைஎன்னிடமேகொடுத்துவிடச்சொல்லுங்கள்.வாங்கிக்கொள்கிறேன் முழுமனதுடன், சம்மதம் கேட்டுச் சொல்லுங்கள் எனவிஷயம் சொன்ன VAO விடம் இவன் சொன்ன நாளிலிருந்து அவர் எதுவும் பேசுவதில்லை,

வீட்டுக்குபூமி பூசைசெய்து குச்சி நட்டஅன்றுமீதிப்பணத்தைகொடுத்த போது கூடசுணக்கமாகிப் போகவில்லை மாமனிதராய் நின்று காட்சிப்பட்ட அவர்/ வீடு கட்டும் போதே வீட்டிற்கு அருகாமையிலாய் சின்னதான கோயில் ஒன்று கட்டிவிடவேண்டும் அவருக்குஎனநினைக்குமளவிற்கு/

ஊன்றியபூஜைபுனிதப்பட்டது.கொட்டப்பட்டமணலும்,இறக்கப்பட்டசெங்கற்க ளும் தோண்டப்பட்ட அஸ்திவாரமும்வீட்டுவேலைவேகம்கட்டும் என சடுதி யில் கட்டியம் கூறியது/

நண்பரிடம் சொல்லும் போது சிரித்தார். அப்படித்தான் சொல்லாத சொல்லெல் லாம் வரும்.செய்யாதசெயலெல்லாம்செய்துகாண்பிக்கப்படும்.பாதிக்கட்டிடம் வந்ததும்அவர்களை நம்பித்தான் இனி வேலை என்கிற நிலையில்காணாமல் போய் விடுவார்கள். எனச்சொன்ன நண்பனின் சொல் சத்தியமானது பாதி வீடுகட்டிக்கொண்டிருக்கும்போதுகாணாமல்போய்விட்டார்காண்ட்ராக்டர்.
கட்டிய கட்டிடம் அப்படியே நிற்க/

காண்ராக்டர்காணாமல்போனமறுநாளில்கையைப்பிசைந்துகொண்டு திக்குத் தெரியாதஅத்துவானக்காட்டில்கண்ணைக்கட்டிவிட்டது போல் நின்ற போது சொன்னசொல்லைநிலைநிறுத்தி விட்டார் ராசையாக் கொத்தனார்.

வங்கியில்வாங்கியிருந்தவீட்டுக்கடன்,காண்ட்ராக்டரிடம்கொடுத்திருந்தபணம் கொட்டிக்கிடந்தமணல்,செங்கல்சுண்ணாம்புஇத்தியாதிஇத்தியாதிகளுடன்இவ னில்சிதைந்திருந்தநம்பிக்கையையும்இழுத்துப்பிடித்துக்கட்டி நாங்கள் இருக் கிறோம்அதைரியம்கொள்ளாதீர்கள்நீங்கள்,எனதைரியமூட்டினார்.

அந்த தைரியமே நடக்குமாஇனிவீட்டுவேலை என பித்துக்கொண்டன் போல திரிந்தவனை தெளிவாக்கியது. நிலைகொள்ளச்செய்மனதை, வீடுகட்டுவதென்
றால் அப்படித்தான், பொதுவாக நுணுகி நுணுகி ஆராயாமல் கொஞ்சமாய் எரு மைமாட்டுத்தோலைப்போர்த்திக்கொள்மனதிற்கு,நடக்கும்செயல்கள்எதுவானா லும் அதில் நல்லது சிலவும் கெட்டது சிலவும் இருக்கத்தான் செய்யும். அதற்காக நொந்து கொள்ளாதே,உதறி எறிஎழுந்துஓடுபள்ளம்,மேடுபார்த்தறி,,,, என்கிற இன்னும்,இன்னுமான மனதின் ஓசை இவனை எழுந்தமரச்செய்தது. விழுந் தவன்எழுந்தான் வீறு கொண்டு,பட்டஅவமானங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு.அவமானங்கள்செதுக்கியிருந்ததடங்கள்உடலில் பட்ட ரணங் கள் எல்லாவற்றிலுமாய் இருந்து ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டு தெளிந்து எழுந்தான். அந்தஎழுதலேஅவனைமனநிமிர்வு கொள்ளச்செய்தது, இனியாவது கறார் காட்டிநில்,வீட்டிற்காய்நீசெலவழிக்கும் ஒவ்வொருரூபாய்க்கும்கணக்கு வை, மெத்தனமாய்இராதேஎனஇவன்மனம்சொன்னதைராசையாக் கொத்தனா ரும் வழி மொழிந்தார். ஆனால்கொஞ்சம் இலகுவாய் இருங்கள் என்றார், கறார் காட்டவேண்டும்தான்,காறாரைவிட்டமென்மைமுக்கியம்பார்த்துக்கொள்ளுங் கள்,அதுஅற்றுவெற்றுக்கறார்த்தனம்மட்டுமேகதைக்காகிவிடாதுஞாபகம்கொள் ளுங்கள்எனச்சொன்னராசைக்கொத்தனார்அல்லம்பட்டியிலிருந்து வந்தார்,

கொத்தனார்வீட்டுப்பிள்ளைகள்என்றாலேதனித்துத்தெரிகிறஅடையாளம்அவர் களுடனேயே ஒட்டிக் கொண்டு இருந்த நேரங்களில் ராசையாக்கொத்தனார் வீட்டுப்பிள்ளைகள்மட்டும்விதிவிலக்கில்லை. எண்ணைதேய்க்காத வரண்ட தலைமுடி,குளிக்காதஉடல்,பசித்த வயிறு,ஏக்கம்மிகுந்தபார்வை, அழுக்கான கிழிந்தஉடைஎனத்தனித்துத்தெரிந்தார்கள்.

அப்படியேகாட்சிப்பட்டஅவரதுவீட்டுப்பிள்ளைகளையும் இவன் ஓரீருமூறை அவரது வீட்டிற்கு வேலையாய் போயிருந்த போதுபார்த்திருக்கிறான்,என்ன செய்ய குடிநீரையும் கூத்தியாள் சகவாசத்தையும்அவரால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.விளைவுவீடுபஞ்சம்காக்கிறதுஎன்பாள்அவரதுமனைவிஒவ்
வொரு முறை போகும் போதும்/

என்ன செய்யச்சொல்கிறீர்கள் தெருவுக்கு ஒரு கடை திறந்திருக்கிறது,வா வா எனக்கூப்பிட்டுக்கொண்டு,என்ன செய்வார்கள் அதன் மேல் கொஞ்சம் ஆசைஉள்ளவர்கள்,தவிரவீட்டில்கொஞ்சம்கறார்காண்பிக்கும்போது,,,,,,,,,/என்ற போது தலை குனிந்து கொண்டாள் அவரது மனைவி/

இவன் போன விஷயம் வீட்டு வேலை தொடங்கிக் கொண்டு அப்படியே நடுவா லேயே நிற்கிறதே,அடுக்கியசெங்கல் தன்முகம் காட்டி சொரசொரப்பாய் ஏதோ விஷயம் சொல்லிச் செல்கிறதே சீக்கிரம் வந்து முடித்துக்கொடுங்கள் என, அதைதங்களிடம்சொல்லிப்போகவந்தேன்,வந்தஇடத்தில் இப்படி ஒரு சொல் சேர்ப்புதங்களதுமனைவியிடமிருந்துஎதிர்பார்க்கவில்லைஎனராசையாக்கொத்
த னாரிடம்சொன்னபோது,என்ன செய்ய சார் ,புத்தியக்கடன் கொடுத்துட்டேன் இப்ப குடுத்த கடன திரும்ப எடுத்துக்கலாம்ன்னு நினைக்கும் போது நம்ம மனசுநம்மகிட்டஇல்ல,ஆயிரம் பிரச்சனை ஆயிரம் பஞ்சாயத்துன்னு வருது என்னசெய்யஅதுக்குபேசாமா தண்ணியும் சகவாசமுமே மேல்ன்னு தோணு து என்றார்,

அவளதுஅண்ணன்தம்பியும்புருசன்காரனும்வந்துபிரச்சனை பண்ணுகிறார்கள்

விட்டு ஒதுங்குவதாய் இருந்தால் ஒரு குறிப்பிட்டதொகைகொடுத்துவிட்டு போ.இல்லையென்றால் போலீஸ்டேசன் கோர்ட் கேஸ் பஞ்சாயத்து என அசிங்கப்படுத்தி விடுவோம்,குடும்பத்தை இழுத்துநடுரோட்டில்போட்டு விடு வோம்ஜாக்கிரதை என வந்த மிரட்டல் என்னை நிலை குலையவே செய்ய நானும்சரிவேண்டாம்ஒன்றும்எனவிட்டுவிடுகிறேன்எனச்சொல்வார்அவரிடம் பேசநேர்கிற சமயங்களில் எல்லாம்.

இவனும் அவரது நிலையை அனுசரித்துகூலியைகொஞ்சம்முன்கூட்டியேயும், முன்பணமாய் ஏதேனும்தந்துகொண்டிருந்தான்.வீடுகட்டிமுடிக்கும்வரையாய்/

ராசையாக்கொத்தனார்தான்சொன்னார்சார்விடுங்ககாண்ராக்ட்காரரைஇன்னும் நம்பனுகின்னாவீடுநின்னுபோகும்.நம்பிக்குடுங்கஎங்ககையில,நீங்கஒன்னும் அப்பிடியேமுழுசாகுடுக்கவேணாம்,.அன்றாடம்செய்யிறவேலைக்குஅன்றாடம் காசுகுடுங்க,சாமான் செட்டெல்லாம் என்னவேணும்ன்னு நாங்க சொல்றோம். நீங்க மட்டும் சொனங்காம வாங்கிக் குடுத்திங்கீன்னா, அந்த காண்ராக்டர விட சூப்பரா கட்டிக்குடுக்குறம் என்றார்.

அவர் சொன்ன படியே செய்தும் கொடுத்தார்,நடுவிலேயே கையை விரித்து விட்டகாண்ட்ராக்டரைநம்பிஇனிபயன்இல்லை என உறுதியானபிறகு/

ராசையாக்கொத்தனார்தந்தகையைநம்பிக்கையைபற்றாமல்இருக்கமுடியவில்
லைஅன்றுபற்றியகையின்இருக்கம்வீடுகட்டிமுடியும்வரைகுறையவில்லை.
கொஞ்சம்சிமிண்டாசெலவானதுவீடுகட்ட,?சிமிண்ட்டில்வீட்டைக்கட்டினார்களா அல்லதுவீட்டைசிமிண்ட்கொண்டுமொழுகினார்களாஎன்றார்கள்வீட்டைக்கட்டி
முடித்தபின்பார்க்கவந்தவர்களும்பால்காய்ச்சிக்குவந்தவர்களுமாய்ஒன்றுசேர்
ந்துகொண்டு/கணக்கு வைத்துபாக்கியநாதன் சிமிண்ட்க்கடையில்சிமெண்ட் வாங்கிகொண்டிருக்கும்போதுஇடையில்வந்துஆட்டையைக்கலைத்தஏற்பாடாக கொத்துவேலைக்குவந்தவர்ஒருகடையில்சிமிண்ட்தூக்கிவந்துவிட்டார்.

கடைக்காரரும்அவரைநம்பிக்கொடுத்துவிட்டார். இன்னாருக்குத்தானே நம்பிக் கொடுக்கலாம்என,ஆனால்உள்கமிஷன்வைத்துவிட்டார்,இவனுக்குத் தெரிந்த போதுசிமிண்ட்தூக்கிவந்தவரை சப்தம் போட்டுவிட்டு கடைக்காரிடம் பணம் கொடுத்துவிட்டுவந்தான்.கடைக்காரர்தொடர்ந்துஎன்னிடம்தான்சிமிண்ட்எடுக்க வேண்டும்எனவும்நான் இன்னார் இந்த ஏரியாவில்இந்தமாதிரிஎனமிரட்டல் தொனியில் சொன்னார்,

இவன்மசியவில்லை.பின்னர் இவன் யார் எனத் தெரிந்ததும்வந்துவருத்தம் தெரிவித்துக்கொண்டார்.இப்படியாய் கட்டப்பட்ட வீடுக்கொஞ்சம் சிமிண்டை தூக்கிக்கொண்டிருந்ததில் ஆச்சரியம் இல்லை.

விரிந்தநடைநேரடியாய்இறங்கிவீதிகாண்பிக்கிறது.வீதியின்அகலம்நீளம்பற்றி யெல்லாம் பேச இதுவா நேரம். குடியிருக்கிற வீதி சுத்தம் சுமந்தும் சாக்கடை
இன்னும்  பிற வசதிகளுடன் இருக்கிறதாஎனமட்டுமே பார்ப்பதை விடுத்து 
இன்னும் இன்னுமாய் சுற்றிலுமாய் குடிகொண்டிருக்கிற மனிதர்கள் அவர்க ளின் வீடு குணம்ஆன்மாஇவர்களுடன்தொடர்புபடுத்தியே ஒருவீதியைபார்க்க வேண்டி இருக்கிறது நண்பா என்பார் சமீபத்தில் மரணித்துப் போன தோழர் ஒருவர்.

அவரின்வீடு இருக்கிற ஏரியாவும் அதில் குடிகொண்டிருக்கிற மனிதர்களும் இன்னும்பிறபிறவானவைகளுமாய்கொண்டிருக்கிற மனம் பிடித்து ஒன்றிப் போன ஒன்றாகவே இருக்கிறது என்னுள்ளே என்பார் எப்பொழுது பார்க்கும் போதும். காரணம் அவர் குடிகொண்டிருந்த ஏரியா அன்றாடங்காய்ச்சிகளின் சொர்க்கமானஇருப்பிடம்/

எவ்வளவுதான்சண்டையும் சச்சரவுமாய் அந்தஏரியாபடம் பிடித்து காண்பிக்கப்
பட்டபோதும்கூடஅங்கிருக்கிற ரத்தபந்தமும் மனித மனப் பரிமாறல்களும் மிகவும் பிரசித்திப்பெற்றஒன்றாகவே/

அப்படியானவீதிகளில்குடியிருக்கவாய்க்கப்பெறுவதுமிகவும்பாக்கியம்பெற்ற ஒன்றாகவே என்பது இவன் மட்டுமல்ல நண்பரின் கருத்துமாய் இருந்தது.

காண்பித்தவீதிதார்ச்சாலையாய் விரிந்து காட்சிப்படுகிறது கண்ணின் விழிப் ப டலங்களுக்கு/ கடந்துபோனமூன்று வருடங்களுக்கு முன்னாய்ஊராட்சியால் விரித்துவிடப்பட்டசாலைபெரியஅளவிலானசேதம்ஏதும்கொள்ளாமல்இன்னும் மிளிர்வாக இருப்பது நன்றாகவே இருக்கிறதுதான்.

ஊர்ந்து செல்கிற எறும்பிலிருந்து நடந்து செல்கிற பாதசாரிகள்வரை ஒற்று மை காட்டியும் நெசவிட்டுமாய் மண் நேசித்து விட்டுச்செல்கிற தெருவாய் இருந்தது அது.

இப்பொழுதான்தெருக்களில்சாலைகளில்எங்குபார்த்தாலும்டிசைன்கற்களின் அணிவரிசையைப்பார்க்கவாய்த்துப்போகிறதுதானேகண்ணுக்குஅழகாகவும் லட்ணமாகவும்.

இரண்டுபக்கமுமாய்ஒட்டிவைக்கப்பட்டதுபோல் இருந்த வீடுகளை வகிந்து உச்சி எடுத்தது போல்சென்றவீதி இடதுபக்க கடைசி முனையில் இவனது வீட்டை நட்டு வைத்து அடையாளப்படுத்தியிருந்தது.

சிவப்பு,பச்சை,மஞ்சள்எனவும்அதற்குஒத்ததுபோலானவர்ணங்களைக்கலந்து கட்டிபூசிக்கொண்டிருந்தவீடுகள்இளந்தளிர்மரங்களின்பூத்துநின்றமலர்களைப் போல்அழகாகவும்மிளிர்ந்துமாய்காட்சிப்பட்டதாய்/

வெறும் செங்கலும் சிமெண்டும் கொண்டது மட்டுமா வீடு?குழைத்துப் பூசப்பட் டிருக்கிற சிமிண்டும் அடுக்கப்பட்டிருக்கிற கற்களும் மனித ஆன்மாவையும் 
எண்ணங்களையுமல்லவாசுமந்துகொண்டிருக்கிறது.கட்டிமுடிக்கபட்டவீடுகளு
க்குள் மட்டுமல்ல,இழுத்துப்பூசப்பட்டிருக்கிற அடர்வர்ணத்தின் துளிகளில் கூட  வீட்டுச் சொந்தக்காரரின் உள்ளம் கலந்திருக்கிறதே ரத்தமும் சதை யுமாக. என்பார் நண்பர் ஒருவர்.

அவர்கட்டியிருக்கிறவீட்டில்வீட்டைவிடசெடிகளும்மரங்களும்அடைத்திருக்கும் பரப்புஅதிகமாய் அடைத்துக்காணப்படும்.சுற்றி  அடைத்திருக்கிற காம்பவுண்ட்
சுவரையும் மீறி காணப்படுகிறஉயர்ந்துநின்றமரங்களின்பூக்களும்இலைகளும் அந்தவழியில்போவோரையும்வருவோரையும்சுண்டிஇழுப்பவையாய்இருக்கும். கொஞ்சம்நின்றுஎன்னையும்எனதுஅழகையும்பார்த்துவிட்டுச்செல்லுங்கள். எனது காற்றுப்பட்டாலேதங்களதுஉடலுக்கும்சுவாசத்திற்குமாய்நல்லது என கையசைத்துகூப்பிடுவதுபோல்இருக்கிறஅந்தச்சூழலில்இளம் காதலர்களோ அல்லதுமனம்முதிர் தம்பதிகளோ நடை பயின்றால் எப்படி இருக்கும்? என யூகிக்கமுடிகிறதுஎனவும்காதலர்கள்ஒருவரின்அருகாமையில்ஒருவர்அமர்ந்து பேசிக்கொள்ளவும்தம்பதிகள்மிச்சமிருக்கிறஉணர்வுகளையும் பிரியங்களை யும்பாசத்தையும்பகிர்ந்துகொள்ளவுமாய்ஏதுவானஇடமாய்ஆகிப்போகிறதுதான் அதுஎனவுமாய்சிறப்புசெய்துகொள்ளுங்கள்பூரிப்புடனாய்,,,,,என்கிறஅடைமொழி தாங்கி அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து வந்தவன் வீட்டிற்குள்ளாய் போகமனமில்லாமல்அங்கேயேவீட்டுநடைமீதுஅமர்ந்துவிடுகிறான் சிவப்புச் சாயம்தாங்கிய படிகள் மூன்றையும் ,வீட்டிற்கு எதிர்த்தாற் போல் விரிந்து கிடக்கிற வெற்று வெளியையும் வெறித்துப்பார்த்தவனாய்,,,,,,,,,,,/

8 comments:

Kasthuri Rengan said...

ஐயா , வார்த்தைகளுக்கு நடுவே இடைவெளி இல்லாது இருக்கிறது...
தம +

திண்டுக்கல் தனபாலன் said...

வீதியின் காட்சி அப்படியே கண்முன்னே...

vimalanperali said...

வணக்கம் மது சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கு,கருத்துரைக்குமாக/

balaamagi said...

அய்யா அருமையாக சொல்லியுள்ளீர். அப்பிறம் அந்த பஞ்ச் சூப்பர்.

vimalanperali said...

வணக்கம் மகேஸ்வரி பால்ச்சந்திரன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

yathavan64@gmail.com said...

வணக்கம்
வாருங்கள் நண்பரே!
பதிவினை காண்பதற்கு!
பாரிசில் பட்டிமன்ற தர்பார்
http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/