10 Apr 2015

பூப்பதெல்லாம்,,,,,,

பத்தில் ஐந்து உதிர்ந்துவிடும் போலிருக்கிறதே/உதிர்வென்றால் உதிர்வு அப்படி யொரு உதிர்வு.பட்டுக்கம்பளம் போர்த்தியது போலல்ல,வெள்ளையாய் போர் வை போர்த்திய மாதிரி.

ஒன்று,இரண்டு,மூன்றுமரங்களிருந்துஉதிர்பவைஇவ்வளவா?பார்க்கவும்,கேட்க
வும்ஆச்சரியமாய்இருக்கிறது.ஓருவேளைஇவையெல்லாம்உதிராமல்பூப்பவை யெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்?என்கிற கேள்வியையும் உட்படுத் திச் செல்கிறது .மரம் பார்க்கும் போதும், அது நிலைத்து நிற்கிற தரை பார்க்கிற போதுமாய்.

மஞ்சளும் அது ஒரு நிறமுமாய் கைகோர்த்து சிறு கற்களும்,பெருங்கற்களு மாய் காட்சிப்படுகிற மண் பரப்பின்மீதுவீட்டின்பின்பக்கமற்றும்பக்கவாட்டின் கொல்லை காட்சிப்பட்டு தெரிகிறது.

வேப்பமரங்கள் மூன்று,பன்னீர் மரங்கள் இரண்டு,புங்க மரம் ஒன்று என வகை க் கொன்றாய் நின்ற மரங்கள் உதிர்கிற இலைகளஅன்றாடம் கூட்டி அள்ளு கையில் தோனுகிற யோசனையுடன் இப்போது வேப்பமரம் ஒன்றை வெட்டி விடலாம் என்பதும் கைகோர்த்துக் கொண்டதாய்/

வீட்டின் கொள்ளைவெளியில்தன் ஆகுருதி காட்டி,உடல் பருத்து நிற்கிற மரமாய்அது.மிகவும்பருத்துவிடவில்லை.அதற்காகஅப்படியில்லைஎனவுமாய் சொல்லி விட முடியாது.

நேராகவும்,சீராகவும் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை பருத்து வளர்கிற வேப்ப மரம் நல்ல விலை போகும் என்பார்கள். ஏறக்குறைய அந்தமரத்தைபார்க்கிற கணங்களில் எல்லாம் அப்படித்தோணாமல்இல்லைஇவனுள்ளாக/ ஆனாலும் அவசரமாக வெட்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது.என்பதை ஆராய்ந்த கணங்களில்மரம் பருத்து போகும் போது அதன் வேர்கள் வீட்டின் அஸ்தி வாரத்தில்நுழைந்து விட வாய்ப்பு இருக்கிறது.எனவே,,,,/என முடியாத முற்றுப் புள்ளியாய்இவனும்இவனது மனைவியும் பேசிகொண்ட நாட்களின் இரண்டு காலையின் சூர்ய அஸ்தமனம் கழித்து மரம் வெட்டுபவர் ஒருவர் வந்தார். டீக்கடைக்காரர் சொல்லி விட்டார் என/

பேசினார்கள் இருவரும்.அவர் வந்த வேளை ஒரு பதினோரு மணி இருக் கலாம். காலை வேளை விடை பெற்று மதியத்தைவரவேற்க தயாராய் இருந்த நேரம். அந்த நேரமே அவரது பேச்சில் சாராய வாடை வீசியது.

”இன்னைக்கு ஞாயித்துக் கிழமை சார்.பொழுது போகமா நான் குடிக்கிற தில் லை .என்னமோ ஒடம்பு வலிக்குஆத்தமாட்டாமத்தான்இப்பிடி, வீட்ல கோழி வெந்துக் கிட்டு இருக்கு சார்.போய் சாப்புட்டு படுத்தாத்தான் அடுத்தவாரம் ஓட முடியும் .பொழப்பு அப்பிடி.நாயில பாதி எங்க ஓட்டம் பத்துக்கிடுங்க”என்றார்.

அவரது பேச்சில் கயத்தாறு பாஷையின் வாடைவீசியது “டீக்கடைக்காரரு எனக்குமாமந்தான்,எங்க தங்கச்சியதான் கட்டீருக்காரு,வந்துட்டோம் பொழப்பு தேடிஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி.ஊருலஒண்ணும்நெலை கொண்ட பொழப்பாத்தெரியல, மனசக் கழக்கிட்டுவந்துட்டோம், பொழக்கணுமில்ல சார், வந்தயெடத்துல அவரு வீட்டாள்களும் நாங்களும் ரொம்ப நெருக்கமாயிட் டோம். இத்தனைக்கும் சொந்தஊர்லசண்டைக் கோழி மாதிரிவெடச்சிகிட்டு திரிஞ்சோம் நாங்க ரெண்டு குடும்பமும்,ரெண்டு வீட்டு பெரியாள்களும் பாத்த பார்வ அது.கஞ்சிக்கு இல்லை -ன்னாலும்வைராக்க்கியம்ங்குறபேர்ல அவுங்க போட்டுக்கிட்டசண்டகடபுடிச்சவேத்துமஇன்னும்,இன்னுமான நெறஞ்சு போன கெட்டிதட்டிப்போனபழக்கவழக்கங் க ,,,,,எல்லாம்எங்கள்ரொமபவும்தூரமாக்கி வச்சிருச்சி. முணுக்குண்ணுறதுக்குள்ள சண்டதான்,போலீஸ்ஸ்டேசந்தான்னு இருந்தவுங்க இங்க வந்த ஒடனே சுத்தமா மாரிப் போனோம்”

”இத்துப்போன மனுசங்க,இத்துப்போன பொழப்பு அவுங்களது, அவுங்கள என்ன செஞ்சாலும் கேக்க ஆளு கெடையாதுன்னு நாங்க இங்க பொழப்பு தேடி வந்த புதுசுலஒருசளதாரி நாயிஏங்மச்சான்வீட்டுக்குள்ளபுகுந்துட்டான் .அன்னைக்கு அரிவாள தூக்கிட்டு நாந்தான் அவன வெரட்டுனேன்.மறு நா விடிஞ்சு எந்திரிச்சு வீட்டவிட்டுவெளிய வரயில ஏங் மச்சான் வீட்டு வாசல்ல நாலுபேரோட நிக்கிறாரு. என்னான்னு கேட்டதுதான் தாமதம். படக்குன்னுகண்ணுல தண்ணி வடிச்சிட்டுஎங்கையப்புடிச்சிக்கிட்டாரு.அப்புறம் பெரியாள்க பேசி முடிச்சாங்க. ஏங்தங்கச்சிய அவரும்,அவரு தங்கச்சிய நானுமா கட்டிக் கிட்டோம்.குண்டாம் மாத்து சம்பந்தம். நல்லாத்தான் இருக்கோம்ரெண்டு குடும்பமும்/

இப்ப ஏங்மூத்த பையன் பத்தாவது படிக்கிறான்,சின்னப் பொண்ணு எட்டாவது படிக்கிறா, அவருக்கும் இதே வயசுல ரெண்டு பொண்ணு நிக்குறாங்க/ சின்னவ படிக்கிறா,போன வருசமே பெரியவபடிப்பநிறுத்திட்டாரு.நாங்க,,,,,, ஆளகதான், ஒங்களுக்குத்தெரியும்ன்னுநெனைக்கிறேன்”எனச்சொன்னவரைஏறிட்டபோது கருத்துமேனிவாடிஒட்டித் தெரிந்தார். கை,கால்கள் மெலிந்தும், விரைத்தும் நரம்புகள் புடைத்து தெரிந்துமாய்/

கட்டம் போட்ட கைலியை மடித்துக்கட்டியிருந்தார், வெள்ளைச்சட்டை அழுக் கும்,ஆங்காங்கேகரைபடிந்துமாய்/அப்பொழுதுதான்தலைக்குகுளித்து விட்டு வந்திருப்பார் போலும்,முடிகள் சிலும்பிக்கொண்டு நட்டுக்கொண்டு தெரிந்தது. அவர் நீட்டிய கையிலிருந்த முடிகள் வியர்வை பூத்து தெரிந்ததாய்/கையில் நிறைந்து தெரிந்த முடிகளின் மேலேவர்ணம்காட்டியவியர்வைத் துளிவெயில் பட்டுமின்னியது.அவர்கைகாட்டிபேசிய திசையிலிருந்துபச்சைகாட்டி சிரித்த ஒற்றை மரத்தை மட்டுமே வெட்டுவதுநல்லதல்ல, மற்ற இந்த இரண்டையும் கூடவெட்டிவிட்டுபுதிதாக வேறு கன்று வையுங்கள்.நீங்கள் சொல்கிற ஒற்றை மரம்தவிர்த்துஇதுஎதுவும்தேறாதுபோலிக்கிறது,நாங்கள்மூன்றுபேர்வருவோம் வெட்டுவதற்கு,வெட்டிவிறகாக்கிகொடுத்துவிட்டுப்போய்விடுகிறோம். .
 
அதற்கு இவ்வளவு ஆகும் கூலி என அவர் சொன்னதற்கும்,இவன் இல்லை யில்லை.எனக்கு நீங்கள் விறகாக வெட்டி யெல்லாம் தர வேண்டாம். வெட்டிய மரத்தைநீங்களேவிலைபேசிஎடுத்துக்கொள்ளுங்கள்,அதற்குவிலையாய்எவ்வ ளவு கொடுப்பீர்கள்என்றதாவாவில்முடிந்து போனது. நிலையற்ற பேச்சாய் அன்றுமுடிந்து போன மரம் வெட்டை பற்றி திரும்பத்திரும்ப நாலைந்து முறை கேட்டுவந்துவிட்டார்மரம்வெட்டுபவர்,இவன்தான்இருக்கட்டும்பார்த்துக்கொள் ளலாம் எனவிட்டுவிட்டான்.அவரிடம்வேறுவேறாகசாக்குசொல்லியவனாய்/

சரியாகப் பார்க்கப் போனால் அந்த மரம் மண் பிளந்து துளிர்த்துவளர்ந்து இலை யும்,கிளையுமாய்நின்றநாட்களிலிருந்துஇன்றுவரைஅவன்அதன்அருகாமையி லேயோஅல்லதுசற்றுத்தள்ளியோநின்றுதான்பல்விளக்கிஇருக்கிறான்பெரும் பாலான நாட்களில்/

பாத்ரூமின்பின்பக்கக் கதவை திறந்தால்தென்படுகிற வேப்பமரம் சுமந்து நின்ற தரை வீட்டின் பின்பக்க கொல்லைவெளியாய்காட்சியளிக்கிறது.

முள்மரங்களின்நடுவில்ஊனப்பட்டிருந்தவீட்டைதனியாகவீடாககாட்சிப்படுத்தி
க்காட்டஇவன்எடுத்துக்கொண்டமுயற்சிகளில்முள்மரங்களைவெட்டுவதே முக்கிய மாயும்முதன்மையாயும் பட்டது.இடம்வாங்கும்போதே இடத்தைமூடி மறைத்திருந்த முள்மரங்களை பிளந்து வந்துதான் இடம்பார்த்தார்கள். தரகர், இவன்மற்றும் இவனது மனைவி, பிள்ளைகள் இருவருமாய் கால் பதித்த இடம் பிடித்துப்போக விலையைக் கேளுங்கள் ஓருநாட்களில் அட்வான்ஸ் போட்டு விடலாம்என்றமுடிவைஅங்கேயே முள் மரங்களுக்கு நடுவாக எடுத்து விட்டா ர்கள்.தவிர இம்மாதிரியான இடத்தை வாங்கினால் விலையும் சற்று குறைத்து வாங்கலாம் என்கிற உள் மன எண்ணம் ஒரு பக்கம்.அன்றே முடிவு பண்ணி னான்.

தச்சுபண்ணுவதற்குமுன்பாகஇடத்தைசுத்தம்செய்யவேண்டும்,தன்இடம்மட்டு
மே சுத்தப்பட்டால் போதுமானது என அன்று எடுத்த முடிவில் சிறிதேமாற்றம் பண்ணி தன் இடத்திற்கு அருகே இருக்கிறஇடத்தையும்சுத்தம் செய்தால் தேவ லாம் என்கிற முன் வரைவை முன் மொழிந்து கொண்டான் இடம் தச்சுப் பண் ணிய நாளன்றில்/

அன்று கையில் எடுத்த அரிவாள்தான் வீடுகட்டி முடிக்கும்வரைகீழேவைக்க மன மின்றி வெட்டிக்கொண்டிருந்தான்,வீடு கட்டிய இடம்,அதைஒட்டிஉள்ள சிறியவெளிஎன்பதுமாறிவீடுகட்டப்பட்டுக்கொண்டிருந்தஇடம்அதைஒட்டியும், எதிர்த்தாற் ப் போல் இருக் கிற வெளியும் வெட்டுவது என்கிற எண்ணத்துடன் வெட்டஆரம்பித்தான்.அப்படிசுத்தப்படுத்தப்பட்டவெளியில்கட்ட பட்ட வீட்டின் சரித்திரம் இன்றோடு பத்து வருடங்கள் என்பதாய்/

பச்சையும் ,மஞ்சளும்அடர்ப்ரவ்னும்,நீலமும்,மெரூனும்இன்னும்,இன்னுமாய் பிற நிறங்களை சுமந்து கொண்டிருக்கிற வீடுகளை காண நேர்கிற சமயங்களில் நம் வீட்டிற்கும் இப்படித்தான் பெயிண்ட் அடிக்க வேண்டும் என மிகவும் பிரயாசைப் பட்டிருக்கிறான். ஆனால் வீடு கட்டி முடிந்ததும் இப்போ தைக்குபெயிண்ட் அடிக்க வேண்டாம்,வொயிட் சிமிண்ட் மட்டும்ப்பூசி கொள் ளுங்கள் போதும்,ஒருவருடம்கழித்துப்பார்த்துக்கொள்ளலாம்என்றார் வீட்டை கட்டியராசுகொத்தனார்.

வீட்டிற்கு தச்சு பண்ணியதிலிருந்து ,அஸ்திவாரம் தோண்டிய நாளது வரை ராசுக்கொத்தனார்யார்எனத்தெரியாது.அவரைமனதாலும்கூடநினைத்ததில்லை. இவனது மனதில் உதித்து முடிவுபண்ணியதெல்லாம் வேறொருவர், கட்டிடக் காண்ட்ராக்டர்,சௌகரியமாக வேலையைமுடித்துத்தருகிறேன் எனச்சொல்லி நம்பிக்கை காட்டி பேசியவர்.நிலத்தைகொடுத்தால் போதும்வீட்டைக் கட்டி சாவியைகையில்கொடுத்துவிடுவார்,நாம்எதுவும்பார்த்துக்கொள்ளவேண்டியதி ல்லை எனநம்பிக்கொடுத்தான்.

கல்லும்மண்ணுமாய்நிலைகொண்டிருக்கிறகரிசல்பூமியில்செங்கலும்,சிமெண் டுமாய் புதிதாக வீடொன்று நிலைகொண்டு எழுந்து நிற்பதை காண்கையில் பட்டகஷ்டமும்,அடைந்தவேதனையும் கண்காணாமல் போய்விடும். பேங்கில் வைத்த மனைவியின் நகைகலையெல்லாம் கூடமீட்டுவது இரண்டாம் பட்ச மாகித்தெரியும்.நண்பர்களும்,தோழர்களும்,உறவினர்களும்பண்ணியஉதவியும் செய்த நற்செயலும் நல்லதாகிப்படம் காண்பிக்கும்.மனது சந்தோ ஷிக்க பால் காய்ச்சிபுது வீட்டுக்கு குடி வருகையில் எல்லாமுமாய் கைகூடிவந்தநிம்ம தியும்திருப்தியுமாய் இருக்கலாம் என்கிற நினைப்பின் வேரிலும் நம்பிக்கை யிலும்ஆசுவாசத்திலும்ஊற்றியவெந்நீராய்வீட்டுவேலைகள் மும்பரமாக நடந் து கொண்டிருந்த நாளில்காண்ட்ராக்டர் கோணக் கலப்பை சாத்தி விட முன் வந்து உருத்தரித்தவர்தான் ராசுகொத்தனார்.

பக்கத்துதெருவில்ஒருநடந்துகொண்டிருந்தபுதுவீட்டுவேலையில்இருந்து தன்னை பிய்த்துக்கொண்டுவந்தவர்.நான்அங்கு இல்லையென்றாலும் நஷ்டமி ல்லை அவர்க ளுக்கு, அங்கு கிடக்கிறார்கள் வேலை செய்ய ஆட்கள் நிறைந்து போய்.ஆனால் இங்கு நிலைமை அப்படியில்லை என இப்போது நீங்கள் கட்டிக் கொண்டிருக்கிற வீட்டில் வேலைபார்க்கிற மட்டக்கொத்தனார் பையன் வந்து சொன்னான்,மனது கேட்கவில்லை,வந்து விட்டேன், எனக்கும் ஒரு ஆசை. நானாகஎன்கீழ்ஆள் வைத்து ஒரு வீட்டைகட்டிமுடித்துப் பார்க்க வேண்டும் என,அனுமதிப்பீர்களா.என அவர் கேட்ட நாளிலிருந்துவீட்டின்சாவி இவனது கைக்கு வரும் வரை அவர்தான் தலைமைக்கொத்தனார்.

அவர்அப்படியொன்றும்வேலையில்முற்றுமாககற்றுத்தெளிந்தவரில்லை.ஆனா லும்கையும்வாயும்சுத்தம்.அவர்குடியிருக்கிறNGOகாலனியிலிருந்துதுருப்பிடித்த சைக்கிள் ஒன்றில் தான் வருவார்.இத்துப்போன சைக்கிள்அது.முக்கால் வாசி நாள்அந்தசைக்கிளை இவர்தான்சுமந்துசெல்வார்.இவர் நினைத்ததற்கு மாறாக நடந்த நிகழ்வாய் சொல்வார்கள் அதை. அவரும் இம்மாதிரியான கேலிப் பேச்சு க்களுக்கு சிரித்துக்கொள்வார், தலைமை கொத்தனார் என்கிற எந்த ஒரு சிறு பந்தாவும் இருந்ததில்லை.எந்த ஒரு கோபமும் பட்டதில்லை, ஒரே ஒரு முறைஅந்தசொல் உடைத்து கோபப்பட்டுவிட்டார், அதானே மனிதன் என்றால் கோபப்படவேண்டுமே? கணேஷனின்காலவாசலில்சுண்ணாம்புவாங்கவேண்டும்என்கிறஅவரதுசொல் லை மீறி சுண்ணாம்புக்கார சேட்டிடம் வாங்கியமறுநாள்மிகவும்கோபப்பட்டு விட்டார். இரண்டு நாள்பேசக்கூடஇல்லை,உடன் வேலை பார்க்கிற பையன் கள்மூலம்தான்எல்லாம்புறா விடுதூதாகஇருந்தது. மிகவும் சங்கடமாகக் கூடப் போய்விட்டது. இரண்டாம் நாள் மாலை வீட்டிற்கு வந்தான் மட்டக்கொத்தனார் ஒருவன்,சார் அவர் மனதில்ஒன்றும் வைத்துக்கொண்டு கோபப்படவில்லை. அவர் சொன்ன இடத்திலிருந்து சரக்குவந்திருந்தால் வேலை கொஞ்சம் நன்றாகஇருக்கும்என நினைத்துதான் அப்படி நடந்து கொண்டார் என்றான்.மறு நாள் அவர் வேலைக்கு வருவதற்கு முன்பாக இரவோடு இரவாக அவர் சொன்னகாலவாசலிலேயேசுண்ணாம்பு வாங்கி அங்கிருந்தே ஆட்களை வேலைக்கு பேசி கூட்டி வந்து குழைத்துப் போட்டு விட்டான் சுண்ணாம்பை. சந்தோஷப்பட்டுப்போனார் மறு நாள்வேலைக்கு வந்தவர். மனித மனம் புரிந்த ,மனிதர் என ராசுக் கொத்தனார் சொன்னதாகக் கேள்வி.

அப்போதெல்லாம்இப்போதுமாதிரிஇல்லை.கொத்தனார்,சித்தாள்வீடு,அவர்கள து வீட்டுப் பிள்ளைகள் என்றாலே தனியாய் அடையாளப்பட்டு தெரிந்த காலம் அது. அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு தன் குடும்பத்தை வைத்திருந்தவர். தண்ணி வெண்ணி என்கிற பழக்கத்திலிருந்து தன்னைவிடுவித்துக் கொண்ட வர். அப்படியே இருந்தாலும் அது தப்பில்லை என்கிற கருத்துக் கொண்டவர். உடல் அலுப்புக்காக வாரத்தில் ஒரு நாள் குடிக்கிறார்கள் தப்பில்லை அது ஆனால் அதே வேலையாக திரியும் போதுதான் தப்பாகிப் போகிறது என்பார். அந்தபேச்சும் தெளிவுமே அவரை அத்தொழிலில்தக்கவைத்திருந்தது எனலாம். கரண்டியைப்பிடித்துஒருசின்னசுழட்டு சுழட்டினாலே வீட்டின் சிமெண்ட் பூசப்பட்டிருக்கிற சுவரில் சிரிக்கிற டிசைன் அவரது கைநேர்த்தியை அறிவித்த நாட்களின் நகர்வுகளில்தான் அவனதுவீட்டு வேலைகளைப்பார்த்து வந்த ராசுக்கொத்தனார்தான் ஒருநாள் வேலைக்கு வருகை யில் அரிவாளைகொண் டு வந்துகொடுத்தார்.இதுநல்லாயிருக்கும்.வெட்டுங்க என/

“மொட்ட அரிவாள வச்சிகிட்டு நீங்க இப்பிடி லொட்டு,லொட்டுனு வெட்டிகிட்டு திரியிரத பாக்கும்போது ரொம்ப பாவமா இருக்கு சார்.இது ஏங்வீட்டம்மா வச்சி ருந்த அருவாளு/ அவளும் ஒங்களபோலதான்,வீட்ட சுத்தி எதுவும் மொள ச்சி இருக்கக் கூடாதுன்னு பார்ப்பா.நாங்க குடியிருக்குற ஏரியாவுல எங்க வீடு கொஞ்சம்தள்ளி இருக்கும்.அவுட்டர் மாதிரின்னு வச்சிக்கங்களேன். வாடக வீடு தான்.கொறஞ்சவாடக, அவ வேலைக்கு ப்போற சம்பளமும் ஏங் சம்ப ளமும் குடும்பம் நிக்காமஓட உதவி பண்ணுச்சி.சுண்னாம்புக்கால வாசல்ல வேலசெஞ்சா.ஏதோபேர்தெரியாதநோயிஅவள கொண்டு போயிருச்சி,. படுத்த படுக்கையா ஒரு மாசம் கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரி பெட்ல கெடந்தா,எந்த வைத்தியமும் அவ நோயசரிபண்ணல. போயிச் சேந்துட்டா. ஒத்தப் பொம்பளப் புள்ளய கையில குடுத்துட்டு,

”அவ இப்ப பத்தாவது படிக்கிறா?அவ எட்டாம்வகுப்புபடிக்கும்போதுஏங் வீட்ட ம்மா யெறந்து போனா, சொந்தக்காரங்கள்லயிருந்து கூட வேலபாக்குறவுங்க வரைக்கும்எல்லாரும்சொன்னாங்க,சொல்லாதவுங்கபாக்கிஇல்லைன்னுசொல் லாம்.இன்னொருகல்யாணம்பண்ணிக்கவேண்டியதுதானன்னு.நாந்தான்விட்டு
ட்டேன்அப்பிடியே,இப்பத்தோணுது, பண்ணிருக்கலாமோன்னு/இல்ல பண்ணா ம இருந்ததுதா சரின்னும் தெரியுது,இப்பிடி மாத்தி,மாத்தி கெடந்து அல்லாடுது மனசு.கல்யாணம்ன்னுபண்ணுறதுபெருசில்ல,எங்மகபாடுரொம்பத்திண்டாட்ட
மா போயிரும். அதை நெனைச்சும் மருகி நிக்க வேண்டியிருக்கு.சமயத்துல சீன்னு ஆகிப் போயிரும் சார் பொழப்பு. அப்பிடியே மொடங்கி போயிருது மனசு. என்ன செய்ய பொழப்புன்னு ஒண்ணு இருக்கே,உதறி எந்திரிச்சு ஓடிக்கிட்டு இருக்கேன் சார்”என்று சொன்ன ராசு அண்ணன் வீடு கட்டிபால் காய்ச்சியஅன்றுவரவில்லை.ஏதும்கோபதாபமா?அல்லதுஏதேனும் குறைபாடு வைத்து விட்டோமாஅவருக்கு என்கிற மண்டைக் குடைச்சலுடன் மறு நாள் அவரது வீட்டிற்கு போய் விட்டான், அவருக்கும், அவரது மகளுக்கும் எடுத்து வைத்திருந்த புதுத் துணிக ளுடன்/

அவரதுகல்யாணநாள்நேற்றுஎன்றும்அவரதுமனைவியின்நினைவேநேற்று முழுவதும் தன்னை சுற்றிக் கொண்டும், நிறைத்தும் இருந்ததாகவும் சொன்ன அவர்டீப்போட்டுக்கொடுத்தார்.சாப்பாடுதண்ணிஎல்லாம்நம்மகையாலதான் சார். என்னத்தையோவெந்து வேகாம,திண்ணும்,திங்காம,,,,/எங்மகளுக்குதான் ரொம்பசங்கடம்சார்.நல்லாசாப்புடுறவயசுபாத்திக்கிங்களா?ஏன்அண்ணன்கூட சொல்றான்கொண்டாந்துஏன்வீட்லவிட்டுருன்னு,இவதான்போகமாட்டேங்கி
றா, நானும் வற்புறுத் தல விட்டுட்டேன். காலகாலத்துல இவள ஒருத்தன் கையிலபுடிச்சிக்குடுத்துட்டா நிம்மாதியாப் போகும். அப்பறம் ஏங்பாடுதான எப்பிடியாவது உருண்டு பெறண்டு பொழச்சிக்கிற வேண்டியது தான்.பறந்து கெடக்கு உலகம்ன்னுவாங்க,என்ன நம்ம ளுக்கும் வயசாச்சு,கைகாலு நல்லா யிருக்குற வரைக்கும் தான் சார்எங்கபொழப்பெல்லாம்,,,,,,,,,,,,/என மிகவும் வருத்தமாக பேசிய ராசு அண்ணன் ரோடு வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார். ஏதாவது வேலைஇருந்தா கூப்புடுங்க சார் என்கிற பேச்சுடன்/அன்று அவரிடம்பேசிவிட்டு வந்ததுதான்,அதற்கப்புறமாய் ரோட்டில் ஓருசில தடவை பார்த்திருக்கிறான்.என்கிறநினைவுடனும்வேலைகளின்நினைப்புகளில்அவரை மறந்துபோய் விட்டுருந்தநாட்களுக்கு இடையிலுமாய் தூங்கி எழுந்த ஒரு நாள் காலை இவனை வீட்டின் பின்புற வெளியை கூட்டி விட வேண்டும் என யோசிக்க வைக்கிறது.

மேனி பெருத்த வேப்ப மரம் . அது உதிர்த்த பூக்கள்,மஞ்சளும் வெள்ளையும் கலர்காண்பித்துகிடப்பவைகளைஇன்றுஎப்படியும்கூட்டிவிடவேண்டும்நேற்று நினைத்துமுடியாமல் போனதை இன்று செயலாக்கி விட வேண்டும். பூப்பவை யெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ராசுக் கொத்தனார் நேரில் பேசினார் போல...

அருமை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/