சுவிட்சைப் போட்டால்
லைட் எரிகிறது. லைட்டைப் போட்டால் சுவிட்ச் எரியுமா,,,,,,,,?தெரிய வில்லை அல்லது எரியாது
என்பதுதான் இதன் பதிலாக இருக்கிறது.எதைப் போட்டாலும் எதுவும் எரியும் அல்லது எரியச்
செய்யலாம் எனச் சொல்லிச் செல்கிறதுஇன்றைய முன்னேறிய விஞ்ஞான உலகம்.
அவர்கள் அவன்
வேலை பார்க்கிற அலுவலகத்திற்கு வந்த காலை 10.15 மணிக்கு தந்தை மற்றும் இரண்டு மகன்கள்
கூட இன்னமும்ஒருவர்எனவாய்பிரிந்து நான்காய் காட்சிப் பட்டார் கள்.
தந்தைக்கு இருக்கலாம்வயது
55.மகன்கள் இரண்டு பேருக்குமாய் சேர்த்து 50 க்குள்ளாய் இருக்கலாம் வயது என வைத்துக்கொள்ளலாம்.
அண்ணன் அவன்
எனக்கு எனச்சொன்னவருக்கு 22 இருக்கலாம் வயது. இன்னும் திரும ணமாகவில்லை. ஒருதனியார்மில்லுக்குவேலைக்குச்செல்கிறேன்என்கிறார்.நெடித்த ஒல்லியா ன உருவம். பூசினார் போலத்தெரிந்த அவருக்கு
சிவப்புக்கலர் போட்ட சட்டையும் ஆஸ்க்கலர் பேண்டும் நன்றாகத்தான் இருந்தது.
நாம் கூட இப்படி
ஒரு காம்பினேஷனை முயற்சி செய்து பார்க்கலாமோ? எடுத்து வைத்த துணியும்,ரெடிமேடில்எடுத்தசட்டையும்தைப்பதற்கும்,போடுவதற்கும்
நேரமில்லாமல் இருக் கிறதுதான்.
mrpnஜவுளிக்கடையில்
எடுத்தது.தவணைக்கு வாங்கிய துணி.”கறுப்புக்கலர் பேண்ட் போட்டு நாளாகிப்போனதுதான் ரொம்பவுமே”
என்கிற ஆதங்கத்தில் எடுத்தது. தைக்க இனி ஒரு நல்ல முகூர்த்த நாளாய் பார்க்க வேண்டும்.
முன்பு வழக்காமாய் தைத்த டெய்லர் இப்போது மனதுக்குள்ளாய் வந்து போகிறார் பேண்ட தைக்க
வெண்டும் என நினைக்கையில்,பழைய மேனேஜர் ஒருவர் சொன்ன சொல் ஒன்று மனதினுள்ளாய்/அவரெல்லாம்
பேண்ட் தைப்பது பிளாட்பாரம் கடையில் தானாம். அதுவும் நன்றாகத்தான் இருக்கும் உயரம்
சற்றே குறைந்து தெரிந்த அவருக்கு/ இதில் உயரம் என்ன?உயரம்கம்மிஎன்ன,,,,,,?பொருந்திப்போவதுதானே
முக்கியமாய்/ அந்த முக்கியம் பேண்ட் சர்ட்டில் மட்டும்தானா?இல்லை ,,,,,,,என்றார் ஜவுளிக்கடை
யில் அவனுக்கு பேண்ட் பிட் எடுத்துக் கொடுத்த கடையின் வேலைக்காரர்.
அவர்அப்படித்தான்இப்படிவிலைக்குறைவாய்துணிகள்அமைவதுஎப்பொழுதாவதுதான்.
இதெல்லாம் லாட்டில் வருகிற துணிகள்.மொத்தம் காட்டும் இவற்றை தனியாய் பிரித்தெடுத்து
கொண்டு வருகையில் இந்த விலைக்கு நாங்கள் கொடுக்கவும், நீங்களும் உங்களைப் போறவர்களும்
வாங்கிக்கொள்ள முடிகிறது.இதெல்லாம் ஒரு விதஅதிர்ஷ்டமே/எனச்சொன்ன கடைக்காரர் அடர்க்கலரில்
சட்டை அணிந்திருந்தார்.
துணிக்கடையில்
வேலை செய்கிறவர்கள் தனது சட்டை பேண்டின் நிறம் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள் போலும். சரி என்ன இப்போதுஅதனால் என
நினைத்துக் கொண்டி ருந்த வேளையில் துணியை மடித்துக்கொடுத்து
மிக கவனமாய் அதற்கு பில் எழுதிக் கொடு த்த கடை
வேலையாளின் நிறத்தைதான் இவரும் கொண்டிருந்தார். உழைப்பாளிக ளுக் கு ஏது தனி நிறம்.எல்லாம் ஒரே கலர்தான் போலிருக்கிறது.என்கிற
நினைப்புடன் அவரை பார்த்த போது அவரதுகறுத்தநிற கையில்முளைத்துத்தெரிந்த முடிகளுக்குள் புடைத்துத் தெரிந்த
நரம்புகள் அவர் கை யை ஆட்டிப்பேசுகையில் வேர்வையுடனும்,
எண்ணை பிசுக்கு பட்டுமாய்/
அவ்வளவு எளிதாய்
யாருக்கும் வாய்த்து விடாத முகம் அவரது முகம்.சிரித்த முகம். ஒரு அடி எடுத்து வைத்தாரானால்
ஒன்பதடிக்கு அவரது நடை நீளும் போல/ அவ்வளவு பரபரப்பாய் தெரிந்தார்.
அவர் நடுவாய்
நிற்க அவரது தந்தை அவரின் இடது பக்கமாயும்,அவரது அண்ணன் வலது பக்கமாயும் உடன் வந்தவர்
அவர்கள் மூவரின் பின்னாலுமாய் நின்றார்.
தொங்கு மீசை
வெள்ளையாய் நரைத்துத் தெரிய பளீச்சென்ற
சிரிப்பில்
கரை ஓடிய பற்களு டனும்,கல்லி ஜிப்பா வேஷ்டியுடனுமாய்காட்சிப்பட்டுத்
தெரிந்தார் தந்தை.கல்லிஜிப்பா அந்தக்
காலத்தில்மைனர்களுக்கும்,நிமிர்ந்துதெரிந்தவர்களுக்குமாய்சொந்தமானஉடையாய்
அடை யாளப் படுத்திப்பார்க்கப்பட்டது.
அவர்களின்பிரதிபலிப்பாய்கணுக்காலுக்குஏற்றிக்கட்டியவெள்ளைவேஷ்டியும்,கல்லிஜிப்பாவுமாய் கைகால்களில்முளைத்துத்தெரிந்தநரைத்தோடிய
முடியுடனுமாய் தெரிந்தார். அவர் கையில் வைத்திருந்த சேமிப்புப்பத்திரங்கள் இரண்டும்
பணம் போட்டிருந்த தவணைக்காலம் முடிந் ததை அறிவித்தது.ஆகவே மறுமுறையுமாயும் திரும்பவுமாய்
இதை கால நீட்டிப்பு செய்து தாருங்கள் எனக்கூறுகிறார்.
ஒன்று எனது பெயரிலும்,மற்றொன்று
எனது மூத்தமகன் பெயரிலுமாய் இருக்கிறது” என அவர் தந்த இரண்டு சேமிப்புப்பத்திரங்களும்
தலா 50ஆயிரம்,50ஆயிரம் எனச் சொல்லிச் செல்கிறது.
அதில் ஒன்று
பத்திரத்தைக்கொடுத்த தந்தையின் பெயரிலும் மற்றொன்று அவரது மூத்த மகன் பெயரிலுமாய் இருக்கிறது.இப்போது
தந்தை சொல்கிறார்,எனது பெயரில் உள்ள பத்திரதை எனது பெயரிலேயே புதுப்பித்தும்,காலநீட்டிப்பு
செய்தும் தாருங்கள் ,எனது மூத்த மகன் பெயரிலுள்ளதை எனது எனது இளைய மகன் பெயருக்கு மாற்றிக் கொடுங்கள். ஏனெ ன்றால்
அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்கிறார். சரியில்லாமல் போன உடல் நிலை எப்பொழுது சரியாகும்,அதற்கு
என்ன வைத்தியம், அவரது உடலில் ஓடோடி வந்து ஒட்டிக் கொண்ட நோய் என்ன?எதுவும் அவர்க ளுக்கு சொல்லத்தெரியவில்லை.
”இப்பக்கூட ஆஸ்பத்திரியில
போயி காம்பிச்சுட்டுதான் வர்ரோம்.நாளுக்கு நாள் மெலிஞ்ச் சிட்டே போறான்.சோறு தண்ணி எதுவும்
சரியா சாப்புடமாட்டேங்குறான். ஆஸ்பத்திரியில என்னமோ பேரு சொல்லி அந்த நோயின்றாங்க/ஒண்ணும்
புரியல,ஏற்கனவே ரெண்டு காதும் கேக்க மாட்டேங்குது.இப்பத்தான் ஒரு வாரம் பெட்ல படுத்தெந்திருச்சி
வந்துருக்கான்” எனச்சொன்ன அவனது தந்தை மிக உறுதியுடன் மூத்த மகன் பெயரிலுள்ள பத்திரத்தை இளைய மகன் பெயருக்கு
மாற்றிக் கொடுக்குமாறு கூறிவிட்டும் பத்திரங்கள் இரண்டை கொடுத்து விட்டுமாய் அமர்கிறார்.
அவர்கள் அனைவரும்
ஒன்றாக அமரவும் தனித்து நின்ற நோய்வாய்ப்பட்டவர் என சித்தரிக்கப்பட்டமூத்தமகன்மட்டும்தனியாகஅமர்கிறார்.நீட்டாகதேய்த்த
வெள்ளைக் கலரில் கோடு போட்ட சட்டை,பூப்போட்ட டிசைன் கைலியுடன் காட்சிப்பட்ட அவர் அவர்கள்
சொன்னது போலவே மிகவும் மெலிந்தேதான் காணப்பட்டார்.அவர் படித்திருந்த 8ஆம்வகுப்பு வரையான படிப்பு அவரது நோயைப்பற்றிய
அறிவை அவருக்கு தெளிவு படுத்தியிரு ந்தது. பெரிதாக ஒன்றுமில்லை சரிபடுத்திவிடக்கூடிய ஒன்றாகத்
தான் தெரிகிறது என்பது புலனாகிறது அவர் பேசிய பேச்சின் மூலக்கூறிலிருந்து/
முன்னேறிய நவீன
மருத்துவ உலகம் கேன்சர் நோயாளியைக்கூட புத்துருவாக்கம்
செய்து அவர்களை மனம் நிறைந்த நம்பிக்கையுடன் உலகில் நடமாடவிட்டி ருக்கிறபோது மூத்த
மகன்,,,அவருக்குள் குடிகொண்டிருக்கிற நோயெல்லாம் பெரிய விசயமே இல்லை என்றே படுகிறது.
அவ்வப்போதோ சிற்சில
சமயங்களிலோ அவர் சாப்பிட முடியாமல் போவதும்,காது கேட்காமல் இருப்பதும்,மெலிந்து கொண்டே
போவதும் அவர் குணப்படுத்த முடியாத நோயாளி என
முடிவு செய்ய வைத்து விடுகிறது.
7 comments:
ஒதுக்கி வைக்கும் நிலை தான் அதிக வேதனை...
மனித மனம் தான் பெரிய வியாதி. இது தெரிந்தால் வியாதி இல்லை.
உடல் காயம் ஆற்றி விடலாம். ஆனால் மனக் காயம்....
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வண்அக்கம் மகேஸ்வரி பாலச்சந்திரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் எழில் மேடம்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ஒதுக்கி வைத்தல் கொடுமையினும் கொடுமை
தம +1
Post a Comment