21 Apr 2015

ஒரப்பு,இனிப்பு,,,,

 நான் முன்னால் போகிறேன். நீ வா பின்னால் மெதுவாக/

இருசக்கரவாகனத்தின்வேகத்திற்குஈடுகொடுக்காதுசைக்கிள்,உட்கார்ந்துகொண் டேஆக்ஸிலேட்டரைதிருகுவதற்கும்,உடல்நோகசைக்கிள்மிதிப்பதற்கும்மிகவும் வித்தியாசம்இருக்கிறதுதான்.

அதுவும் இந்த பசி மிகுந்த மதிய வேலையில்வயிறு எக்கி இழுக்க உடலை வளைத்து குறுக்கி உன்னி,உன்னி மிதிக்கையில் உடலும் மனதும் விதிர் விதிர் த்துப் போகிறதுதான்.

ஆதலால் இதெல்லாம் வேண்டாம்.நான் முன்னால் போக பின்னால் அடியெ டுத்து வைத்து அல்ல, சைக்கிளை மெதுவாக மிதித்துவா, நான் போய்க் கொண் டிருக்கிறேன் மிதமாகவும், வேகமாகவும் அல்லாமல்/

நான்வேண்டுமானால்இருசக்கரவாகனத்தின்மென்னியைப்பிடித்துஅதன்உறும லைசற்றேஅமர்த்திவிட்டுஉன்னோடுநடந்துவரட்டுமா உனது தோள் தொட்டுக் கொண்டும்உரசிக் கொண்டுமாய்.

இதில் முக்கியமாக சொல்ல வேண்டிய விசயம் ஒன்று உள்ளது.இப்பொழுது இருக்கிற பையன்களுக்கும்,பிள்ளைகளுக்கும் தனது நண்பர்களுடன் தோள் உரசிச் செல்வதில்இருக்கிற பிரியம் தனது பெற்றோர்களுடன் வருவதில் இருப்பதில்லை.

சரி அதுதான் இன்றைய இளைய தலைமுறையின் விருப்பமாய் உள்ளபோது நான் என்ன செய்ய முடியும்.

அதுசரி உனது சைக்கிளின் பின்சக்கரத்தில் கோட்டம் விழுந்தும்,இரண்டு கம்பி கள் காணாமல் போயும் இருந்தததே.அழகான வாயில் இருந்த பற்கள் இரண்டு விழுந்து விட்டதைப்போல/

அதை கடையில் கொடுத்து சரி செய்தாயா? நான் நினைக்கிறேன் உனது வேகத் திற்குசைக்கிள்ஈடுகொடுக்கமுடியவில்லைஎன.அப்படி ஈடுகொடுக்கமுடியாத சைக்கிள்வேஸ்ட் என நினைக்கிறாய் நீ. அதை வெளிப்படையாக சொல்வதில் தயக்கமும் காட்டுகிறாய்.

இதுமட்டுமல்லஎதையுமேவெளிப்படையாகபேசுவதில்உன்னிடம்இருக்கிறதய
க்கம்சரியானதில்லை. என்னிடம்சொல்லாமல்யாயிடம்சொல்வாய்நீ/

இன்னும் சின்னப் பிள்ளையைப் போல அம்மாவின் முந்தானை முனையைப் பிடித்துதிருகிக்கொண்டுஉனதுகோரிக்கையைஅவளிடம்சொல்லிஅவள்அதை என்னிடம்கொண்டுவந்துசேர்ப்பிக்கிறமுறையைகையாள்கிறாய்நீ,அதுசரியில் லை. அதுபோலதான் சைக்கிளின் விசயத்திலும் இருக்கிறாய் நீ என நினைக்கி றேன்.

உனது வேகத்திற்கு ஈடு கொடுக்காத சைக்கிள் என்னதான் செய்யும் பாவம். அதை கொஞ்சம் சூதானமாக கையாளப் பழகிக்கொள்.நமது சத்திற்கு சைக்கி ளுக்கு அடிக்கடி செலவு செய்து மாளாது. ஆதலாலே சொல்கி றேன், கொஞ்சம் கேட்டு வாங்கி காதில் வைத்துக் கொள்.அதை முடிந்த வரை அமல் செய். அல்லது முயற்சியாவது செய்.


நமக்கெனசைக்கிளை ரிப்பேர் செய்யவும் சரி செய்யவுமாக இருக்கவே இருக்கி றதுP.Rசைக்கிள்கடை.சைக்கிள்டயரில்இருக்கிறபட்டன்களின்தன்மையைக்கூட அவர்கள்அறிவார்கள்.அனுதினமும்சைக்கிளோடுபேசிக்கொண்டு இருப்பவர்க ளாய்அவர்கள்தெரிகிறார்கள்.அவ்வளவு தூரம் நுட்பம் வாய்ந்தவர்க்களாகவும்,  மென் மனதினராகவும் இருக்கிறார்கள்.

அதுவும் நம்மைப்போல வாடிக்கையாளர்களுக்கெனதனிகவனம் எப்போதுமே அவர்களிடம் இருந்ததுண்டு .அப்புறம் என்ன கவலைஉனக்கு..கையில் காசு இல்லை என்கிற கவலையும், பேச்சும் அனாவசியம் உனக்கு.நம்மை நம்பி ஆயிரங்களில் கூட கடன் எழுதிக்கொள்ள தயாராய் இருக்கிறவர்கள் அவர்கள். அது நமது நடப்பின் பால் வந்த நம்பிக் கையில் விளைந்தது. உனக்கு எப்போது கடைக்குபோக வேண்டும்எனதோணுகிறதோஅப்போதுபோய் வாதயங்காமல்/

நான் போய் அம்மாவிடம் சொல்கிறேன் மகன் வருகிறான் மடல் எதுவும் எழுதாமல் சாப்பாடுஎடுத்துரெடியாகவை என/


இன்றைக்கு காலையில் இட்லியும் சட்னியும்/பூப்போன்ற இட்லி,அதற்காக எடுத்து தலையில் எல்லாம் சூடிக்கொள்ள முடியாது அதை. நாலு இட்லி, கொஞ்சமாக சட்னி, தோய்த்து அவசரம், அவசரமாக விழுங்கிவிட்டு ஓடினேன் அலுவகத்திற்கு/நீயும் அப்படித்தான் என நினைக்கிறேன்.

சாப்பாட்டு நேர அவசரம் என்பது நமதுசமூகத்தில் தவிர்க்க முடியாத மிக மிக்கியமான ஒன்றாக மாறிப்போகிறது. வீட்டிலும், அலுவலகத்திலும், பள்ளி, கல்லூரிகளிலும் அப்படித்தான் என ஆகிப் போனது.

இட்லிக்கானஅரிசிஇந்ததடவைசரியாகவாய்க்கவில்லைஎன்பதுஉனது அம்மா வின் மிக முக்கிய கவலையாக இருக்கிறது .என்ன செய்ய? இது உனது அம்மா வினதுகவலைமட்டுமல்ல,நம்சமூகத்தில் உள்ள பெண்களின் கவலை.

பெரும்பாலும் ஆர்களது கவலையும்,அன்றாடப்பாடுகளும் அடுப்பை சுற்றிய தாகவே இருக்கிறது.கேட்டால்ஆண்களைகுறை சொகிறார்கள். அவர்கள்தான் நாக்கை ருசிக்கு அடகு கொடுத்து விட்டு இப்படி வீட்டில் உள்ள பெண்களை சமையலில் அது சொட்டை, இது சொட்டை எனகுறைசொல்லித்திரிகிறார்கள். ஆகவேஇப்படிபெரும்பாலம்அடுப்பிலேயேவெந்துபோவதுஎங்களதுவிதியாக உள்ளது என்கிறார்கள்.

என்ன செய்ய சொல்கிறாய்?உறக்கிற உண்மையாக இது உள்ள போது/

இன்று மதியம் உறைப்பும் இல்லாமல் ,புளிப்பும் மிகாமல் மொச்சைக் குழம்பு வைத்து சாப்பாடு ஆக்கி வைத்திருக்கிறேன் முடிந்த அளவுசீக்கிரம்வாருங்கள் அலுவலகத்தில் இருந்து என அவள்சொன்னசொல்நெஞ்சாக்கூட்டின்உள்ளில் இன்னும் இழுபட்டுக் கொண்டும், இனித்துக் கொண்டுமாய்/

விரைந்து வந்து கொண்டிருந்த என் முன்னே பத்தடி இடைவெளில் நீ சைக்கி ளில் உடல் தளர்த் தி அமர்ந்து சென்ற போது உன்னை கவனிக்கிறேன் நான்.

உன்னிடம் சொல்லிவிட்டிதான் இப்போது வந்து கொண்டிருக்கிறேன். வீட்டு க்கு வா அவள் செய்துவைத்திருக்கிற மொச்சைகுழம்பையும் சாப்பாட்டையும் ஒரு கை பார்க்கலாம் என்கிற நினைப் புடனும் அடகு வைத்து விட்ட நாக்கின் ருசியுடனுமாய் போய்க் கொண்டிருக்கிறன்.

ஆனாலும் வர வர சாப்பாடு எல்லாம் கூட பின்னாடிதான்.முதலில் அவளது முகம் பார்க்க வேண் டும். நாலு வார்த்தைகள் பேசவேண்டும் அவளைப் பார் த்து. அப்புறம்தான் சாப்பாடு. அப்படித்தான் எங்களுக்குள்.அது,,,,,,,,,,,,,,,,,,/

சரி வா நான் போய்க்கொண்டிருக்கிறேன் முதலில்.அவளை உனது அம்மா என சொல்லிக் கொள் வதை விட முதலில் எனது மனைவி என சொல்லிக் கொள்வ தில் எனக்கு விருப்பம் அதிகம்.

அதுஅப்படித்தான்திருமணமானநாளிலிருந்துஇன்றுவரைதனதுவிருப்புவெறுப்புகளை ஓரம் கட்டி வைத்துவிட்டுஎனக்கானவளாய் தன்னை உருமாற்றிக் கொண்ட வள்.

அப்படிஅதிகமாகிப் போன விருப்பு வெறுப்புகளுடனும், பிரியங்களுடனுமாய் இன்று வரை நெசவிட்டு ஓடிக்கொண்டிருக்கிற வாழ்க்கை இனிப்பும்,கசப்பும் விரக்தியும் கலந்த கலவை யாய் கலர் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. சாதக, பாதகமற்று.

சரி,சரி வா, நான் போய்க்கொண்டிருக்கிறேன் மகனே/

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிலருக்கு விதியாக... சிலருக்கு விருப்பமாக...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் அருமையான யதார்த்தமான ஒரு பதிவு! ஆம் பிள்ளைகள் இப்பொதெல்லாம் நண்பர்கள் குழுக்களில்தான்...பெற்றொர்களிடமிருந்து விலகல் தான்...

பெண் பற்றி சொன்னது அருமை....சமைப்பதிலேயே வெந்துவிடுகின்றார்கல்// அருமை...

அதுஅப்படித்தான்திருமணமானநாளிலிருந்துஇன்றுவரைதனதுவிருப்புவெறுப்புகளை ஓரம் கட்டி வைத்துவிட்டுஎனக்கானவளாய் தன்னை உருமாற்றிக் கொண்ட வள்.// உண்மையே!