24 Apr 2015

ஆகவே,,,,,,,



கன்னத்தில்கறுப்புவைத்த ஆடு என்னதான் சொல்லிச்செல்கிறது,என்னமும் சொல்லிவிட்டுப்போகட்டுமே என்னதான்கெட்டுப்போனது இப்பொழுது?

தலையில்வைக்கபூஇல்லைஎன்றால்என்ன/வாங்கிகொள்ளலாம்ஒரு முழம்/ வைத்துக்கொள்ளலாம்தலையில்.பார்க்கவும்மணம்பரப்பும்அதன் நறுமணம் முகரவும் நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில் வாங்கிய மல்லிகைப்பூ அப்படியே இருக்கிறது இன்னும் பையினுள்ளாக/

ஏதோஒருநினைவில்தலைக்கிறுக்குபிடித்துவாங்கியதல்லஅந்தப்பூ.மனைவியி ன்மீதுஇருக்கிறஅன்பும்பாசமுமாய்பூத்தொடுத்தபூக்காரின்கைபட்டுதுலங்கவாங் கியதுதான்,தவிரகேட்டாள்.காலையில்வீட்டைவிட்டுக்கிளம்பும்போதே,அதனா லும் சற்று சேர்த்தே வாங்க வேண்டியதாகிப் போனது.

பழமும்,பாலும் அருகருகாய் வைத்திருந்த கணங்களில் நாசி துளைத்தபூ  மல்லிகையாய்உருவெடுத்து இப்பொழுது இவன்கண்முன்னாகவும் பையிலு மாய் அடைபட்டுக்கிடக்கிறது.

பூக்கள்அடைகொண்டிருக்கும்சாலையில்அதன்மணம்கழன்றுஎங்குபோனது
எனத்தெரியவில்லை,தினந்தோறுமாய்இவன்நடைபயிற்சிக்குபோகிறசாலை யின்இடதுபக்கமாய்தன்உயரம் காட்டி நிற்கும் காம்பவுண்ட்சுவரினுள்ளாய் குடிகொண்டிருக்கும்உயர்ந்தபன்னீர் மரங்கள் சொல்லிச் செல்கிற கதையும் சேதியும்திரும்பத்திரும்பஒன்றாகத்தான்இருக்கிறது,பூத்திருக்கிறேன்,மலர்ந்தி ருக்கிறேன்,உதிர்ந்தும்கொண்டிருக்கிறேன்,இடையிலாகசிறுவர்கள்நூலில்கட்டி விளையாடபயன்கொள்கிறேன்.இதுதான்அவைஅன்றாடம்இவனுக்குச் சொல் லும் சேதி.

அப்படிஉதிர்ந்துகிடக்கிறஎன்னைகூட்டிஅள்ளிப்போடஉயர்ந்தசுவர்கள்கொண்ட நந்தவனத்திற்குகாவலாய்இருக்கிறஅவர்தினந்தோறுமாய் சலித்துக் கொள்கி றார் இப்படி.

“என்ன இது இவர்கள் கொடுக்கிற சம்பளத்திற்கு தினந்தோறுமாய் கூட்டி அள்ளிப்போடவேசரியாகிப்போகும்போலிருக்கிறதே/அதுவும்பூபூக்கிறசீசனில் தானேஎனநினைத்துஇருந்துவிட்டுத்தான்போகட்டுமேஎனவிடமுடியவில்லை அப்படியெல்லாம்அள்ளிப்போட,எனநினைத்தாலும் கூட உடல் ஒத்துழைக்க மறுக்கிறதுதான்இந்தவயதில்.இருந்துவிட்டுப் போகட்டும் இப்படியே புலம்ப லோடு தொடர்வது தானே வாழ்க்கை/ 

மாடசாமி அண்ணன் வளர்த்த ஆடுகளில் ஒன்றுதான் கன்னத்தில் கறுப்பு வைத்துக்கொண்டு அப்படியாய் அழகுகாட்டிக்கொண்டு திரிகிறது. அலைந்து ஆட்டமும் காட்டிகொண்டிருந்தது. மேயப்போகையில் ஒரு தரம் ,மேய்ந்து வந்து திரும்பவுமாய் தொழுவம் வந்து அடைய வருகையில் ஒரு தடவை எனகண்சிமிட்டி,கண்சிமிட்டி செல்கிற ஆடு என்னதான்சொல்லிச்செல்கிறது ,என்னவும் சொல்லிவிட்டுப்போகட்டும்என்னதான்கெட்டுப்போனதுபெரிதாய் இப்பொழுது.அது இவன் பையில் அடைபட்டுக்கிடக்கிற பூ மல்லிகையாய் பெயரெடுத்து நிலைகொண்டு வந்து விட்ட பின்னே உயரம் கொண்ட சுவர் களுக்குப் பின்னே அன்றாடம் மரங்களிலிருந்து உதிர்ந்த பன்னீர் பூக்களை கூட்டி அள்ளி குப்பையில் போடுகிறவர் தினசரிகளின் சாயங்காலங்களில் தனது மகள் சூடிக்கொள்வதற்காய் ஒருமுழம்மல்லிகைபூவாவது வாங்கிச் செல்கிறார் தெருமுக்கில் பூ விற்கிற பூக்காரம்மாவிடமிருந்து/

ஆகவேகண்சிமிட்டிச்செல்கிறஆடும்,அலுத்துக்கொள்கிறமனிதரும்தன்தேவை நிமித்தமாய்மனம்திறக்கிறார்கள்தான் அன்றாடம்,அர்த்தமுள்ளதாகிச் சிரிக்க ட்டும் வாழ்க்கை. வாழ்க வளமுடன்/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்துக் கொண்டே இருந்தேன்...!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல்தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே தமிழ் மணம் 3

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/