24 May 2015

ரோட்டடி,,,,,

ஏகாந்தம்நிறைந்தபார்வையாய்இப்படிபார்த்துக்கொண்டேஇருக்கவேண்டியதாகிப் போகிறதுதான்,விட்டேத்தியாயுமாய் சேர்த்து/

அகலவிரித்திருந்த விழிப்படலங்களில் படர்ந்து ஒன்றாய் இரண்டாய் அதற்கு மேலுமாய் மடிப்பு விழுந்திருக்கிற காட்சி போலும்,மடித்து விரிக்கப்பட்ருந்த நீள் சதுரப்பேப்பரைப்போலவுமாய் காட்சிப்பட்டநிகழ்வு பஸ்ஸின் பின் பக்க கண்ணாடிகளாயும் அதன் ஒற்றுமையான கலர்ப்பூச்சாயும்,கோடுகளாயும் கைகோர்த்துத்தெரிந்தது.கூடவே இருக்கி றேன் நானும் என பஸ்ஸின் பெயர் பொறித்த போர்டும்/

பட்டைபட்டையாய்ஊடுபாவாய்இழுக்கப்பட்டிருந்தகோடுகளும்அடர்வண்ணத்தி ல்பஸ்ஸில் பூசப்பட்டிருந்த கலரும்,அதை ஒட்டிய வெளிர்க்கலரும் நன்றாகத் தான் இருக்கிறது பார்ப்பதற்கு/

இது போலா கலர் காம்பினேஷனில்தான் பஸ்ஸின் உள்ளே இருக்கைகளும், அதன் உள் கூடுமாய் இருந்தது.

அதை பிரவ்ன் என்றும் வெளிர் பிரவ்ன்கலர்எனவுமாய் சொன்னார்கள். பொது வாக இவன் வெளியூரில் வேலைபார்த்த நாட்களில் பயணம் செய்த தனியார் பேருந்து ஒன்றில் இது போலான கலர் காம்பினேஷனைப்பார்த்திருக்கிறான்.

இது போலாய் பயணம் செய்த ஒரு நாளொன்றின் காலைப்பொழுதில் பஸ்சீட் மற்றும் பஸ்உள்கலரின் ஒற்றுமை, பஸ்ஸினுள் சப்தமாக ஒலித்த பாட்டு என்கிற கலவையுடன் வந்து கொண்டிருந்தவன் இறங்க வேண்டிய ஊர் வந்த பிறகுதான் நினைக்கிறான் டிக்கெட் எடுக்க மறந்து போனதை.

அகலவிரிந்தகையகலகூலிங்கிளாஸீம்,பையில்குத்திவைத்திருந்தபேனாவும், பையினுள்ளாய் கனம் கொண்டு தெரிந்த செல்போனும் ஓரளவிற்கு பொருத்த மானஉடையும் பெரும்பாலானநாட்களில் அந்த பஸ்ஸில் நிகழ்ந்த இவனது வருகையும் ஒன்று சேர்ந்துஇருக்கப்போய் அன்றுகண்டக்டரின்வசவிலிருந்து தப்பித்தான்.

நல்லவேளையாய் என மனதில் பட்டதை கண்டக்டரிடம் சொன்ன போது பஸ்ஸினுள் ஒலித்த பாட்டுச்சப்தத்தை மீறி சிரித்த அவர் தெரியும் சார் எங்களுக்கும் ஆட்களோட தராதரமும்,மதிப்பும் என்றார்,கூடவே ”இப்ப நீங்க டிக்கெட்எடுக்காட்டாலும் ஒண்ணும் சொல்லப் போறதில்ல” என அவர் இறக்கி விட்ட இடம் குரங்கு முக்காக இருந்தது.

வரிசையாய்எதிரும்புதிருமாய் சாலையின் இருபுறமுமாய் நின்ற தூர் பெருத்த நான்கு புளிய மரங்களையும்,ஆல மரங்களையும் கொண்டிருந்த அந்த கண் மாய்க்கரை முக்கு டீக்கடைகள் நான்கையும்,மரத்தடி சலூனையும் ரோட்டிற்கு இடது பக்கமாய் ஹோட்டல்கள் சிலவற்றையுமாய் அறிமுகப்படுத்தியது.

அங்கிருந்தகடைகள்,ஹோட்டல்கள்,சலூன்கள்,இன்னும் இன்னுமாய் பூத்துத் தெரிந்த சைக்கிள் கடைகள்,ப்ரவுசிங் சென்டர் ஆகியவற்றின் மேற்க்கூரை மீது எளந்தைமுள்மற்றும்குத்துக்கம்பிகள் சிலவற்றை நட்டு வைத்திருந்தார்கள். இல்லையெனில் அங்கிருந்த கடைகளும்,அதை ஒட்டியிருந்த வீடுகளும் படும் பாடு சொல்லி மாளாது.

கொஞ்சம் அசந்தால் விடுகளின் ஓடுகளைப்பிரித்து வீட்டிற்குள்ளாய் இறங்கி விடும் குரங்குகள்.அது இறங்கிய வேளை வீட்டில் ஆள் இல்லையென்றால் இரண்டு பட்டுவிடும் வீடு.

அதிலும் ஆண்கள் இருந்து கம்பை எடுத்து விரட்டினால்தான் போச்சு,பெண்கள் இருந்து விளக்குமாரை தூக்கிக்காட்டினால் எதிர்த்துப்பாயும்.அதற்குபயந்து வீட்டைவிட்டுவெளியேவரும் பெண்களை விடாமல் துரத்திக்கொண்டு வரும். அந்நேரம்தெருவிலிருக்கிறபெண்கள்ஒன்றுகூடிவிரட்டினால்கத்திக்கொண்டே போகும்.விடாமல் விரட்டிசென்றால் வீட்டிலிருந்து தூக்கிப்போன சோற்றுச் சட்டியை அல்லது குக்கரை அல்லது ஹாட்பேக்கை மரத்தின் மீதேறியபின் தூக்கி எறியும் எல்லாம்காலிசெய்துவிட்டு/

அப்படியெல்லாம்அலம்பல் பண்ணி தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்கிற அவைகளின்உறைவிடமாய்அந்தமுக்கின்மரங்களும்,மரங்களைக்கொண்டிருந்த கண்மாய்க்கரையும்கடைகளைஅடையாளப்படுத்திக்கொண்டிருந்தஅந்தமுக்கு குரங்குமுக்காகிப்போனதில்யாருக்கும்எந்தவிதஆச்சரியமும் இருந்திருக்கவி ல் லை இது நாள்வரை.

அந்த ஆச்சரியம் தாளாமல் அப்படியாஎனக்கேட்டவர்களும் அடங்கிப்போன தனமையுடனான முகங்களைக் கொண்டிருந்தவர்களாய் காணப்பட்டார்கள் இவ்விஷயத்தில்/

இறங்கியதும்டீக்குடிக்கலாம்எனத்தோணியது.வழக்கமாககுடிக்கிறகடையில். அதற்குக்காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை.டீ கொஞ்சம் நன்றாக இருக்கும். அண்ணனும் தம்பியும்அவரது மாமனாருமாக சேர்த்துவைத்திருந்த கடையது.

இட்லி,தோசை,பூரிபொங்கல்என்கிறவழக்கமானஐயிட்டங்கள்போக காய்கறிக் குருமாவுடன் புரோட்டா கிடைக்கிற கடையது.காலை மதியம் மாலை இரவு எந்நேரமுமாய்கிடைக்கிறபுரோட்டாவும்அந்தக்கடையைதக்கவைத்துக்கொண் டிருக்கிறது எனச்சொல்லலாம்.அக்கா,தங்கை இருவரையும் அண்ணன் தம்பி இருவரும்திருமணம் செய்து கொண்ட நாளில் பெண்ணைக் கொடுத்த அவர்க ளதுமாமனார்ஒன்று சொன்னார்.இப்ப சமையல் மாஸ்டர் ஏதோ பேர் தெரியாத கடையிலபோயிஇருக்குறதுக்குநாமளேசொந்தமாஒருகடைவச்சாஎன்னான்னு தோணுது.எனக்குரொம்பவருசமாவேஇந்தஆசைஇருந்துச்சி.ஆசைஇருந்துஎன்ன செய்ய,ஒத்துழைப்புக்குஆள்இல்ல.எனக்கு பொறந்தது ரெண்டும் பொம்பளப் புள்ளையாபோச்சி.அன்னைக்கிமுடிவுபண்ணுனதுதான்.வீட்டுக்குவர்றமருமகன்க ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு சின்னதா ஒரு ஹோட்டலாவது ஆரம்பிக்க ணும்ன்னு/

அதுபடி இப்ப காபியும், டீயும் டிபனும் சாப்பாடுமா ஓடிக்கிட்டிருக்கு. கல்யாண த்துக்கு முன்னாடி நான் கொஞ்ச நாள் வச்சிருந்த டீக்கடைப்பக்கம் எட்டிக்கூட பாக்கத மகள்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு அப்புறம் பேர்பாதி நேரம் கடையிலதான்இருக்காங்க.

இப்பமருமன்க ரெண்டு பேரு கண்டக்டராயிட்டாங்க,ஆனாலும் வேலைக்குப் போனநேரம் போக கடையப்பாத்துக்குறாங்க எனச்சொன்ன சொல்லின் உச்சம் காதிலும் மனதிலும் ஒலிக்க,ஒலித்த அழைப்பொலிகள் மணியோசைகளாய் நகரநகன்றுநகன்றுகிண்ணாரமிட்டுகடையையும்சுற்றுப்புறத்தையுமாய் பார்க்கச் சொல்கிறது.

அங்கிருந்தவர்கள்யாரும்கவனித்தார்களாஎன்னவெனத்தெரியவில்லை,இவன் கவனித்தான்.ரோட்டோரமாய் நின்ற புளிய மரத்தை/

ஓங்கி உலுக்கினால் ஒரு சாக்கு,கொஞ்சம் லேசாக உலுக்கினால் முக்கால் சாக்கு என்கிற கணக்கில் பழம் காய்க்கும் மரத்தை ஊர் ஏலம் விட ஏலம் எடுத்த வர் இரண்டு கூலியாட்களை விட்டு உலுப்பி எடுத்தால் எடுத்த ஏலத் தொகை க்கு மேலாகவே பலன் கிடைத்துவிடும்.

ஊர் முழுவதுமாய் ஓடித்திரிகிறபிள்ளைகள்தனதுபிராயத்திற்குள்ளாய் ஒரு தடவையாவதுஅந்தபுளியமரத்தில்ஏறிவிடவேண்டும்என்பதுதான்அவர்களின் உயரிய ஆசையாய் இருந்தது.

நாலாபக்கமுமாய் அகலக் கால் விரித்து வீறுகொண்டு நின்றது போல் இருந்த அம்மரத்தை பார்த்து ஓடிவராதபிள்ளைகளும்அதில் ஏற விரும்பாத பிள்ளை களும் ரொம்பவே கம்மி எனலாம்.ஆகவேபிள்ளைகளுக்கும் மரங்களுக்குமான நிறைந்திருந்த உறவைப் போலவே புளியம்பழம்காய்த்தகாலங்களில் அதை ஏலம்விடுகிறஊர்ப்பஞ்சாயத்திற்கும்,ஏலம்எடுப்பவர்களுக்குமாய்இருந்தது.

ஆனால்பழம்உலுப்புகிறகாலங்களில் மரத்தின் கீழாக சலூன் வைத்திருக்கும் முருகனுக்கு மிகவும் சிரமமாகிப் போவதுண்டு.

டீக்கடையில்நிற்கிறநேரங்களிலும்எப்பொழுதாவது பார்க்கிறபொழுதிலுமாய்  மடித்துக்கட்டியிருக்கிற கைலியை அவிழ்த்து விட்டு விட்டு உடல்குனிந்து வணக்கம் தெரிவிப்பார்.அதில் இருந்தது இவன் வகித்த பதவிக்கான பணிவு அல்ல.பரஸ்பரம் பிரியமே என இவனும் பார்ப்பவர்களுமாய் சொன்னார்கள்.

பரவாயில்லையே,நல்லாயிருக்கே பழக்கம்,நல்லா பழகுறாங்கய்யா,,,எனச் சொல்கிற அளவிற்கும், லேசாக பொறாமைப் பெருமூச்சு விட்டவர்களின் முகங்களில் லேசாய் கரி பூசினது போலவுமாய் இருந்தது.அவர்களின் நட்பு. நட்பில் விளைந்து விழுது விட்ட மூச்சுச்சுழலாய் அவர்கள் இருவரின் கரம் கோர்ப்பு இருக்கிறதினங்களில்இவன் அவராகவும் அவர் இவனாகவும் உருக்கொண்டதுண்டு சமயத்தில்/

டீக்கடையில் நிற்கிற வேளைகளில் இவனுள்ளாய் அந்த நினைவு வராமல் இருந்ததில்லை.என்றைக்குமாய் இரண்டாவது பஸ் நிறுத்த வளைவில் தென் படுகிற தனியார் பஸ்சின் கண்டக்டர் இன்று இங்குநின்றார்,கடையின் எதிர்புற மாய்/

இவன் கையசைத்து வணக்கம் சொல்லவும்முழுசிரிப்பில்வந்தார்.இவனுக்கும் அவருக்குமான நட்பின் முடிச்சு எந்தப்பாவிலிருந்து முடியிடுகிறது எனத் தெரியவில்லைசரியாக,நினைவும்இல்லை.நெசவின்வேர்ஆழப்பாயவில்லை யானலும் கூட ஓரளவிற்காய் நட்பு விட்டு பூத்திருந்தது எனலாம்.

இவன்வேலைபார்க்கும் தனியார் நிதி நிறுவனத்தில் அவர் வைத்திருந்த நகை ஏலத்திற்கு வந்த போது இவன் அந்த நகையை ஏலம்போகாமல் காப்பாற்றிக் கொடுத்த தினத்திலிருந்து அவரது நட்பின் வேர் முடிச்சு மிகவும் இறுக்கம் விழுந்தது கண்கூடு/

டீக்கடை முன்பு மட்டுமல்ல,எங்குஎப்போதுபார்த்தபோதும்சரி உற்சாகமாய் பேசுவார். பழகுவார். அப்படியான பழக்கங்களின் நடுகல் இவனில் இப்போது பட்டுத்தெரிய அவருடன் பேசியவாறு நின்றான்.

அவன் போகிறான்,அவள் வருகிறாள் இவன் பஸ்டாப்பில் நிற்கும் போது/

யாருக்கான அவள் யாரோவுக்கான ஒருவனுக்காவும்,யாரோவுக்கான அவன் யாரோவுக்கானஅவளுக்காகவும் அன்றாடங்களின் நகர்வுகளில் பயணித்துக்
கொண்டேதான் இருக்கிறார்கள் ஜன்னலோரப் பயணத்தின் இனிப்பாய்/

தூங்கு மூஞ்சி மரத்தின் அடர்த்தியும் கைகெட்டிய தூரமாய் தொங்கிய அதன் பச்சைஇலைகளும்நெடித்துக்காணப்பட்டமரத்தின்உயரமும்ஆகுருதியும், ஈரம் படர்ந்து கருத்து பாசி படர்ந்த அதன் மரப் பட்டைகளையும் பார்த்த முதல் நாள் அதுஎன்னமரம்எனக்கேட்ட மகனிடம் இன்ன மரம் எனச்சொல்லத் தெரிய வில்லை.

தூங்குமூஞ்சிமரமாய்த்தான்இருக்கும் என உத்தேசம் பூசிய வார்த்தைகளை உதிர்த்தஅவனுக்குஅதைருசுப்படுத்தி விடத்தெரியவில்லை. தெரியவில்லை மகனேஎன்கிறவார்த்தைகைகொடுத்ததைரியம்கொஞ்சம்தெம்பைவரவழைத்து காலூன்றி நிற்க வைத்தது தைரியமாக/

ஆனால்இவ்வளவெல்லாம் தெரிந்திராத அவன் மாலைநேரத்தில்அம்மரத்தின் இலைகள்சுருங்கிபோகும்எனஅறிந்திருந்தான்.அதைமகனிடம் சொன்ன போது இன்று மாலை நேரம் கிடைத்தால் வந்து பார்க்க வேண்டும் என்றான்.

மாலைஎப்படி வர,,,?அதுதான் பள்ளியிலிருந்து வந்ததுமே வீட்டுப்பாடம் எழுத வும் படிக்கவுமே நேரம் சரியாகிப்போகிறதே .படிப்பு,படிப்பு,படிப்பு,,,, விட்டால் எழுத்து,எழுத்து,எழுத்து,,,,,எனநிரம்பிப்போனமூளையின்பக்கங்களில்யாவுமாய் வீட்டுப்பாடம்,படிப்பு,புத்தகம்,,,,,நோட்டு தவிர்த்து வேறெதுவும் இல்லை.

மீறிவேறெதையாவதுவைத்துக்கொண்டால்உரித்துஉப்பைத்தடவிவிடுகிறார்கள். அதன் எரிச்சல் தாங்கமாட்டாமலேயே ஓய்வு நேர பொழுது போக்காய்க்கூட விளையாட்டு சினிமா,பேச்சு வெளியூர் ,,,,என செல்லத்துணியவில்லை மனது துணியவும் மாட்டேன் என்கிறது.

உஸ்மூச்,செய்துவைத்திருக்கிறதயாரிப்புகளைசந்தைவிரிக்கநினைக்கிறவர்க ளைப் பார்த்தும் அவர்களுடன் போட்டியிட்டுமாய் இங்கே இவர்கள் எங்களை வதைத்தெடுக்கிறார்கள்எனச்சொல்லமுனைகிறமகனின்மனம்அறிந்தவனாய் பார்வையை ஓட்டிய போது ரோட்டிற்கு வலது புறமாய்இருந்த வெற்றிடமான மண் தரை தாண்டி இறங்கிய சரிவான பள்ளத்தில் முளைத்திருந்த மரத்தின் கிளையில் ஒருதாங்கு கம்பு வைத்தும் தரையில் கம்புகளை ஊன்றியும் கயிறுகளால் கட்டப்பட்டுமாய் இருந்த ஒரு அழகு நிலையத்தின் விளம்பரம் பிளக்ஸ் போர்டாய் நின்றது.

நகர் முழ்வதும் சிறியதும் பெரியதுமாய் இது போலான பிளக்ஸ் போர்டுகள் ஆங்காங்கேஇருந்ததைபார்த்திருக்கிறான்.ஆனால்இதுஅதற்கெல்லாம்திருஷ்டிப் பொட்டு வைத்தது போல் பெரிதாக இருந்தது.

நேற்றைக்குமுன்தினம்டவுனுக்குள்ளாய்போனபோது விளம்பரத்திற்குட்பட்ட கடையைப்பார்த்தான்.

இவன் வழக்கமாக டீக்குடிக்கிற கடைக்குப் பக்கத்தில்இருக்கிறகாம்ளக்ஸை இடித்துரீமாடல் பண்ணி கட்டியிருந்தார்கள்.

டீக்கடை மாஸ்டரிடம் கேட்டான். கடைக்கு கூட்டமெல்லாம் வருகிறதா என/ அதெண்ணண்ணேஅப்பிடிகேட்டிட்டீங்க,ஆணும்,பொண்ணுமாகுடும்பத்தோட வர்றாங்கநெறையா,குறிப்பாசின்னப்புள்ளைகளுக்குமுடிவெட்டத்தான்நெறையப் பேரு வர்றாங்க.இப்ப நம்ம பேசிக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல யாரவது ரெண்டு கொழந்தைகளுக்கு உள்ள முடிவெட்டு ஓடிக்கிட்டுதான் இருக்கும்.

முடிவெட்ட,பேஸ் பிளிச்சிங் பண்ணன்னு நெறைய வச்சிருக்காங்க, அதான் ஓடிக்கிட்டு இருக்கு போல/

இப்ப டீக்கடையில இருக்கில்லயா,அது போலதான்,டீ குடிச்சா வடை எடுத்துக் கிறதில்லையா,அது போல வடை வாங்க வர்றவுங்க டீக்குடிக்கிறதில்லையா, அதுபோலதான்ஒண்ணவச்சிதான்ஒண்ணுன்னுவச்சிருப்பாங்கண்ணே, இப்பத் தான் கடை வச்சிருக்காங்க இனிம போகப்போகத்தான் தெரியும் நெலம எனச் சொன்னவரிடம்எவ்வளவுஇருக்கும்முடி வெட்டிக்கொள்ளக்கூலி எனக் கேட்ட போது அதான்முடி வெட்டீருக்கீங்களே அண்ணேஅப்புறமா எதுக்கு அதப்பத்தி எனச்சொன்னமாஸ்டர்தான்இப்பொழுது இரண்டாவது முறையாக இவனைக் காப்பாற்றியது போல் தோன்றியது.

மீசை மயிர் காற்றில் பறக்கிற ஆசையுடன் சைக்கிளில் எங்கும் சுற்றித்திரிந்த காலமது.இங்கிருந்துசாத்தூர்வரைகூடசென்று வந்திருக்கிறான்.இவன் எப்பொ ழுதாவதுசெல்கிறஉறவினர்வீட்டிற்குபக்கவாட்டுச்சந்தில்இருக்கிறமூணாவது வீட்டு வீட்டுப்பெண் இவனை ஈர்த்ததுண்டு.சமயங்களில்/

அப்படியாய்ஈர்ப்புக்குள்ளாகிறநாட்களில்முருகன் கடையில் எடுக்கிற கேரியர் இல்லாதவாடகை சைக்கிளில்சுற்றித்திரிவதும்”ஊலல்லா”பாடுவது ம் இவனு க்கு மிகவும் சுகமாகவே இருந்திருக்கிறது.அந்த சைக்கிள் சுற்றலிலும் மிகவும் ஊலல்லாவிலும்மனம்பறிபோன நாட்களின் நகர்வொன்றில் டீக் கடை மாஸ் டரிடம்பேசிக்கொண்டிருக்கையில்அவர்சொன்னார்.வேண்டாம்ண்ணேஇப்பிடி யெல்லாம்நெனைப்போட அலையாதீங்க, எதுக்கு வெட்டியாப் போட்டுக் கிட்டு அலைபாயுறாமனசஇறுக்கமாஒருகயிறுஎடுத்துகட்டிப் போடுங்க, மத்த மத்த வேலகளப்பாருங்க.மொதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் அப்புறம் போகப் போக சரியாகிப்போகும்.மொதல்ல ஒரு நெலையான வேலையில உக்காருங்க,அப்புறமாஇந்தமாதிரி நெனைப்பெல்லாம் வச்சி கோட்ட கட்டுங்க, என்றுசொன்ன மாஸ்டரின் பழக்கம் இப்போது வரை விழுது விட்டுக் காணப் படுவதாய்/

அந்த விழுதின் மென் கரங்கள் சற்றே ஆற்றுப்படுத்தி ”வேண்டாம் இப்போது தங்களுக்கு இது போலான ஆடம்பர வேலைகள் என எச்சரித்துச் செல்கிறது. மேலும்சொல்கிறார் அவர்,அண்ணே 200 ரூபாயாம் ஒரு ஆளுக்கு முடிவெட்ட, இது போக பேஸியல்,அதுஇதுன்னு தனி,,,,,எதுக்கு இது 50 ரூபாயில் வேலைய முடிக்கிறத விட்டுட்டு எதுக்கு இப்பிடி,,அந்தக்காசுக்கு புள்ளகுட்டிகளுக்கு ஏதாவது வாங்கித்தரலாம்ல,இல்ல கடைக்குள்ள இருக்குற ஆடம்பரத்தையும் படோடோபத்தையும் பாக்கணுன்னு ஆசையிருந்தா தடை போட முடியாது. அப்படிப்பாக்குறதா இருந்தா எத்தன விதமான ஆடம்பர விஷயத்த எப்பபெப்ப பாப்பீங்க,அதுன்னு எவ்வளவு செலவழிப்பீங்க,என்ற மாஸ்டரின் பேச்சில் வாழ்க்கையின் யதார்த்தம் உறைத்தது.

உறைத்த யதார்த்ததின் சூடு உடல் முழுவதுமாய் பரவி மூளைக்கு எட்டும் போது நிலை கொள்கிற மனதுமீட்டெடுத்துப்போகிறதுதான்சிலவிஷயங்களை என்பது போலான அவரது பேச்சு இவனைக்கொஞ்சம்புதுப்பித்ததாய்தெரிந்தது.

கரும்பச்சையாயும்பொடிப்பொடிவட்டங்களாயும்உருத்தாங்கிதொங்கித் தெரிந் த இலைகளைக்கொண்ட மரம் புஷ்பித்து வைத்திருந்த பூக்களும் காய்களும் மிகவும் ரம்யம் கொண்டவையாய்த்தெரிந்தன.

ஆறு மாதங்களுக்கு முன் இந்த மரத்தினடியில் நிற்க இடமில்லாத இடத்தை சுத்தம்செய்தார்கள்சாலைப் பணியாளர்கள்.

அவர்களில் ஒருவராக அண்ணன் வேட்டையும் இருந்தார்.அவரைப்போலாய் நெருக்கடியான நேரங்களில் குடிகொண்டவர்களை பார்க்க முடிகிறதுதான் நிரந்தரமாக அங்கொன்றும்,இங்கொன்றுமாக என்கிற நினைவுடனாய் நின்றிரு ந்த மரத்தடியிலிருந்து சற்றுதள்ளி இடது புறமாய் இருந்த செக் போஸ்ட், அதைஒட்டியஆட்டோ ஸ்டாண்டும் அதன் எதிர்ப்புறம் இருந்த டீக்கடை அதில் எப்பொழுதும் டீக்குடித்துக்கொண்டிருக்கும்பத்திற்கும்குறையாதவர்கள் அதை ஒட்டி தன் பிடிவாதம் காட்டி வேகமாய் ஓடுகிற சாலை,சாலையின் இருபுறமு மாய் இருக்கிற கட்டிடங்கள் மண்,மனிதர்கள் இலகு ரக கனரக வாகனங்கள், இரு சக்கரவாகனங்கள் என எல்லாம் காட்சிப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறவை யாய்பதிவானதருணங்களில்தான்வருகிறாள்அவள்தன்மகளைக்கூட்டிக்கொண் டு/

அவள்ஓட்டுகிறசைக்கிள்அவளுக்குஉண்டானதுதானா,அவளதுமகளுக்குஉண்டா னதுதா என எண்ண வைக்கிற அளவிற்கு சிறியதாக இருந்தது.பள்ளிக்கூட சைக்கிள் போலும்,தாய் உருட்டி வர மகள் பின்னால நடந்து வந்தாள்.தாயும் மகளுமாய்அப்படிவந்து கொண்டிருக்கும் போது பேசினார்களா அல்லது பேசிக் கொண்டேவந்து கொண்டிருந்தார்களா எனத் தெரியவில்லை. அப்படி அவர்கள் வந்ததும்போகிற முதல் இடம் பஸ்டாப்பாய்த்தான் இருந்தது.

காலைஒன்பதுமணி முதல்பத்துமணிவரைக்குமாய்அந்த வழி செல்கிற பஸ்க ளிலும் மாலை நாலு மணி முதல் ஆறுமணிவரையுமாய் ரிட்டர்ன் வருகிற பஸ்களிலுமாய் கல்லூரிக்கூட்டம் அப்பிக்கொண்டு வரும் என்பது ஊரறிந்த நிதர்சனம்.அந்த நிதர்சனத்தின் முகம் கொஞ்சம் எரிச்சலைக் கூட ஏற்படுத்தி விடுவதுண்டு சமயத்தில்/.

அப்படியெல்லாம் இருக்காது இன்று கல்லூரி லீவாகத்தான் இருக்கும் என நினைத்துப்போனவன்ஏமாந்துதான்போனான்.கல்லுரிக்கூட்டம்ஏறிய பஸ்சில்  இவன் பையனும் ஏறி வேண்டு வந்ததை எண்ணி.

விற்கிறஎழனியில்ஒன்றிரண்டுதவிர்த்து மற்றதெல்லாம் ஞாயமான விலைக் கு விற்கிற அவர் தருகிற தகவலும்,சொல்லும் அவரது கடைக்கு அருகில் பஸ் டாப்பில்பஸ்ஏறக்காத்திருப்பவர்களுக்குசற்றேபிரயோஜனமாகஇருந்ததுண்டு .எந்த ஊருக்குப் போகிற பஸ் எந்நேரம் வரும் எனச்சொல்லி விடுவார்.அது தவிர்த்து எந்த ஊருக்கு எந்த பஸ்சில் போனால் எவ்வளவு டிக்கெட் என சொல்லிவிடுவார்.கேட்போருக்கும் கேட்காமல் இருப்போருக்கும் கூட/

நீண்ட தாழ்வாரம் விரித்தது போலும் வெள்ளையாய்பட்டுப்பாய் விரித்தது போலும் டைல்ஸ் ஒட்டி சுற்றிலுமாய் மூன்று பக்கமும் கடப்பக்கல் கட்டப் பட்டிருந்த பஸ்டாப்பில் நின்றிருந்த ஒரு மழை நாளின் காலையில் இரு சக்கர வாகனம் இருக்கட்டும் இங்கே போய் வந்து விடுகிறேன் பக்கத்து ஊர் வரை எனச்சொன்னவனிடம்முடியாதுஅதெல்லாம்உங்கள்ஒருவரைஅனுமதித்தால் இன்று ஒன்று என்பது நாளை பத்து நூறு என வளர்ந்து நிற்கும். அப்புறம் அதில் வருகிற பிரச்சனை வியாபாரத்தைக்கெடுத்து என் நிலைகொள்ளலை இங்கிரு ந்துஅகற்றிவிடும்.ஆமாம்பார்த்துக்கொள்ளுங்கள்.எனசொல்லியசொல்இன்றள வும் அவரைப்பார்க்கிற கணங்களிளெல்லாம் நினைவுக்கு வரமால் இருந்ததி ல்லை.

“என்னமோண்ணே போலீஸ் வேலைக்கிப் போனவன லாரி அடிச்சி தூக்கலை ன்னாஇன்னைக்கிநானும்போலீசாகிஊர்பூராவும்ரோந்துவந்துக்கிட்டுஇருப்பேன். ஏதோகொறக்காலோடஒங்களை யெல்லாம் பாக்கணுன்னு இருக்கு, கல்யாண மாகிரெண்டு புள்ளைகளோட வாழணுன்னு விதிச்சிருக்கு.அத மாத்த முடியுமா எனசொல்கிறஅவரதுபேச்சில்எழனிவெட்டுகிறஅரிவாளின்பளபளப்பும்கூர்மை  யும் பட்டுத் தெரிந்தது,

அவரைப்பார்க்கிற கனங்கள் தோறும் ஞாபகத்திற்கு வருகிற அவரது பேச்சு இன்றும் மனம் சுற்றி வருவதாய்.

தடித்துமுரடுவிழுந்தஜீன்ஸ் பேண்ட்டின் இடதுபுற பாக்கெட்டில் இருந்து சாவி யைஎடுத்துவாறுவந்தவன்இன்னும்பாக்கித்தவணைகட்டாதஇருசக்கரவாகனத்தை திறக்கிறான்.

6 comments:

 1. வணக்கம்
  கதை நகர்வு நன்றாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார், நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. அருங்கதை அருமை நண்பரே!
  த ம 4
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் யாதவன் நம்பி சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete