சற்றே உயர்ந்து
பளிச்சிடுகிறது சாலை.இந்நேரம்வரை ஈரமேறி இருக்க வேண்டும்,தண்ணீர் கூட உருண்டு ஓடியிருக்கலாம்.
மதியம் மூணு மணி
வாக்கில் பெய்த மழை.கனமும் இல்லை,மிதமும் இல் லை.சரசரவெனமெலிதாய்இறங்கியதூறல்கனமெடுத்துப்பெய்தவேளைஎப்பொ ழுதென சரியாகத்தெரியவில்லை,
ஆனால் மழைபெய்கிறதுஎன்பதைமட்டும்
புரிந்து கொண்டான். அலுவகத்தி ற்குள்ளாக இருந்து கொண்டு/
மாலை வேளையாய் அலுவலகம்
விட்டு வரும் பொழுதுதான் சாலை இப்படியாய் விரிவுபட்டு/ நிச்சலனமற்ற ,மனித எண்ணம் போலவும்
விரல் கள் முளைத்து உருக்கொண்ட கரங்கள் போலவுமாய் அதன் இயக்கத்தில் துரித கதியும் முனைப்பு
காட்டியும், சற்றே மந்த கதியாகவும்/
ஒருசைக்கிள்,இரண்டுஇருசக்கர
வாகனங்கள் மூன்று பேருந்துகள் நான்கு கார்கள்,,,,,என்கிற எண் சுவடி
தாங்கியல்லாதுஇலகு ரகங்களிலிருந்து, கனரகவாகனம் வரை தன்
மார்மேல்தாங்கிச்செல்ல விட்டுக்கொண்டிருப்ப தாக/
சென்ற வாரம் அதிகாலை
வேளையாய் எழுந்து குளித்துக்கிளம்பும்போது இளைய மகனும் கூட வந்தான். அவனுக்கும் அப்படி
ஒரு ஆசை. நீண்ட நாட்களாய் கைவிட்ட பழக்கம் இப்பொழுது திரும்பவுமாய் துளிர்விட ஆரம்
பித்திருக்கிறதாய்/
பெரிதாய் வேறொன்றுமில்லை.அதிகாலை
நான்கு மணிக்கு எழுந்திருக்கிற திட்டம்தான்.திட்டம் திட்டமாயிருக்க நீண்ட பண்ணிய முயற்சி
தோல்வி யடைந்துபோனது தொடர்ச்சியாக.
காரணம் முதல்நாள்
இரவு தூங்க ஆகிப் போகிறதாமதம்மறுநாளின் எழுத லை தாமதப்படுத்திவிடுகிறது அல்லது சோம்பலாக்கிபடுக்கைதான்
கதி என கிடக்கச்செய்து விடுகிறது.
இதை எல்லாம் மீறி
சென்ற ஞாயிறின் அதிகாலையாய் எழுந்து குளி\த்து விட்டுகிளம்பும்போதுமகன் வருகிறேன்
உடன்என்கிறான்.,அவனையும் தவி ர்க்க இயலவில்லை. ஒரு பழக்கத்திற்காகவாவது இப்படிவெளியே
எங்கா வது கூட்டிக்கொண்டுபோகவேண்டியிருக்கிறது.
முதலில் எம்ஜியாய்
சிலை அருகில் இருக்கிற டீக்கடைக்கு சென்று டீக் குடித்து விட்டு அப்படியே சாத்தூர்
ரோடு வரை போகலாம் என நினைத் தான்.பின் இன்னும் நேரமிருக்கிறது இன்னும் அங்குகடைதிறக்க/
மணி 5.05 தானே ஆகிறது .அதற்குள் எப்படி அங்கு கடை திறந்திருக்க முடியும்? அங் கு போவதற்குமுன்பாய்மதுரை
ரோட்டுபக்கமாய்போய்விட்டு வந்து விட லாம் என்கிற நினைப்புடன் மனது மாறி போன இடம் மதுரை ரோடாக இருந்தது.
பையன்நான்ஓட்டுகிறேன்வண்டியைஎன்றான்.இவனுக்கானால்
ஒரு பயம், அவனை நம்பி எப்படி வண்டியை கொடுப்பது என? கள்ளிக்குடி வரை போய் வந்தார்கள்..இந்த
வெயில் நேரத்திலும் கூட குளிர்ந்தது,அதிகாலை
அமைதியில் இப்படி அத்துவான வெளியில் இப்படி ஏகாந்தமாய் பயணிப் பது நன்றாகவேஇருக்கிறது.
சத்திரரெட்டியபட்டி
நெருங்குகையில் பெருந்தூறலாய் பெய்துகொண்டிருந்த
மழை பெரிதாய்உருவெடுத்து.எங்காவதுஓரமாய்நிற்கலாம்
என நினைக்கை யில் இன்னும் கொஞ்ச தூரத்தில் சாலையோரக் கடைகள் வந்து விடும். அங்கு நின்று
விட்டுப்போகலாம் எனமகனிடம்சொல்லிக்கொண்டிருந்தான்.
நேற்று காலை இவனும்
மனைவியுமாய் திருமங்கலத்திற்குஒருகல்யாண த்திற்கு செல்ல வேண்டியிருந்தது,பிஆர்சிக்கு
எதிர்த்தாற்போல் இருக்கிற பஸ்டாப்பில் பஸ்ஸேறி போய் விடலாம் என் இருசக்கரவாகனத்தை அங்கிருக்கிற சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு
பஸ்ஸேறப் போனா ர்கள்,.
நல்லமுகூர்த்தமானதால்
அன்று பஸ்ஸேதும்அங்கு நிற்கவில்லை.கிட்டத் தட்டபத்துக்கும்மேற்பட்டபஸ்கள்நிற்கவில்லை,எண்ணிப்பார்த்ததில்
பதினை ந்துபஸ்,இவர்களைகடந்திருந்தது.எல்லாவற்றிலும்சொல்லிவைத்தாற்போல் கூட்டம்.படிகளில்
உட்கார்ந்து கொண்டுபோனார்கள்.சரி இனி மேல் காத்துக் கொண்டு நிற்பதில் எந்தவித பிரயோஜனமும்
இல்லை திரும்பவுமாய் சைக்கிள்ஸ்டாண்டிற்குச்சென்று இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு
கிளம்பி விட்டார்கள்.திருமங்கலம் வரை வண்டியிலேயே போய்விடலாம் என நினைத்து/
கள்ளிக்குடிவரவும்
சொல்லி வைத்தாற் போல பெட்ரோல் இல்லாமல் போனதுகள்ளிக்குடியில்இருக்கிறசைக்கிள்ஸ்டாண்டில்வண்டியை
போட்டு விட்டு திருமங்கலத்திற்கு பஸ்ஸில் சென்றுவந்தார்கள்,அன்று கள்ளிக்குடி யில்
நிறுத்திய வண்டி நேற்று கள்ளிக்குடியில்நிறுத்தியவண்டியை இன்று எடுத்துவந்தார்கள்.
புதுபஸ்டாண்டில்
பஸ்ஸேறி இருவருமாய் கள்ளிக்குடி சென்று இருசக்கர
வாகனத்தை எடுத்து வருகையில்தான் மழை பெய்ய ஆரம்பித்து விடுகிற தாய்/
இவர்கள் ஒரு சலூன்
கடை வாசலில்தான் நின்றார்கள். கூரைபோட்டிருந் தார்கள்,சிவப்புஅரைவெள்ளை,பச்சை,பிரௌன்எனகலர்காட்டிஇருந்தசேர்கள் கலருக்கு ஒன்றாய்/
உட்காருங்கள் சார்
என்றார் கடையின் உரிமையாளர்,வெள்ளை வேஷ்டி வெள்ளைச்சட்டையிலிருந்தார்.இல்லைஇருக்கட்டும்
சும்மா என நின்றவா றே இருந்த நேரத்தில்தான் தோன்றியது.பேசாமல் இங்கேயே முடி வெட்டி
விட்டுப்போகலாமே என/
அவர் அமரச்சொன்ன
நேரமும் இவனுக்கு முடிவெட்டுகிற எண்ணம் வந்த நேரமும்சற்றுமுன்பின்னாய்இருந்த நேரத்தில்
மழைகொஞ்சம் ஓய்ந்ததாகத் தெரிந்தது்,
கூரைக்கு வெளியே
வந்து கை நீட்டிப்பார்த்தான் லேசாக தூறிக்கொண்டிரு ந்தது/மகனைப்பார்த்தபோது தலையாட்டினான்
போய்விடலாம் என/
வண்டியை எடுத்த
நேரம் சற்று பூந்தூறலாகவே மழை இன்னும்/
5 comments:
ச்சும்மா
அருமை நன்றி ந்ண்பரே
தம 1
ரசித்தேன்...
ஏகாந்தமான பயணம் இனிமை....
தம +1
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் உமையாள் காயத்திரி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment