10 May 2015

ரூவாத்தாளு,,,,,,

ஐம்பதுரூபாய்நோட்டுக்களைதிரும்பவுமாய் வைத்துப்புழங்குகிற பாக்கியமும் கொடுப்பினையும்இப்பொழுதான்கைவரப்பெற்றிருக்கிறதுமூன்றரைஆண்டுகள் கழித்து/

எதெதுஎப்பொழுது கைவரப்பெறவேண்டுமோ அப்பொழுதான் கைவரப் பெறும் என்பதுசரிதான்போலும்.இவ்வளவு நாட்களின் இடைவெளியில் அதைப்பற்றி நினைத்துப்பார்க்கக்கூட நேரமிருந்தது இல்லை,அல்லது நினைத்துப் பார்த்தது இல்லை எனலாம்.

நினைவும் கனவும்சரிவிகிதசதமானங்களில் கலந்து கலர்க் காட்டும் ஒரு வித ரசவாதவித்தைஇங்குநிறைவேறப்போவதாய்நினைத்துஇன்புற்றுக்கொள்கிறான் இது போலான சமயங்களில்/

உண்மைதான் இன்று அலுவலகத்தில் சம்பளம் எடுக்கும் போது நூறு ரூபாய் கட்டுஇருக்குமாஎனப்பார்த்தான்தேறவில்லை.சரித்தான்எனஅதற்குப்பதிலாய் ஐம்பதுரூபாய்க்கட்டுகளைஎடுத்துக்கொண்டுபோயிருந்தான்வீட்டிற்கு/அதிலிரு ந்துதான்இரண்டு தாள்களைஉருவிக்கொண்டு வந்து பெட்ரோல் போட நின்ற போதுசூழ்கொண்ட நினைவுகள்தன்னைத்தானேஉருவிக்கொள்வதாய்/

இங்கு போல் அங்கெல்லாம் தனியார் பஸ்கள் அவ்வளவாகக்கிடையாது. சாத்தூர்ரோடுமுக்குபஸ்டாப்பில் நின்றால் பாலத்தில் இறங்குகையில் பட்டுத் தெரிகிறபஸ்கள்அருகில்வரவர R R S ட்ரான்ஸ்போர்டாகவும்,S K R பஸ் சர்வீ ஸாகவும்,கள்ளப்பன்பஸ்ஸாகவும்இன்னபிறடிரான்ஸ்போர்ட்டாகவும்உருமாறி
யும் ஊர்ப்பெயர் பொறித்த போர்டுடனுமாய் வந்து பஸ்டாப்பில் நிற்கிற போது இத்தனை பஸ்களா இந்நேரம் என எண்ணத்தோணும்/

அந்நேரம் போய் பஸ்டாப்பில்நிற்பதுதேவைக்குத்தான்என்றபோதிலும் கூட அதில் ஒரு அரை மணி நேரம் காலியாகிப் போகிறதுதான்.என்ன செய்ய ஆனாலும்பண்ணித்தான்ஆகவேண்டிஇருக்கிறது.

அதிகாலைஆறு மணிக்கு எழுவதென்பது எல்லா நேரங்களிலும் இயலாத காரி யமாகவே,இருந்தாலும்தள்ளிமுள்ளிக்கொண்டுதேவையைஒட்டிஎழுந்திருப்பது தான்அன்றாடப்பழக்கமாகிப்போகிறது,இவனதுவேலைமகளைக்கிளப்புவதும் மனைவினதுவேலை அவளுக்காய் சமையல் செய்வதுமாய் இருக்கும். அந்தா, இந்தா என வேலை செய்து முடித்து அவள்சாப்பிட்டுக்கிளம்பஆரறைஅல்லது ஆறே முக்கால் ஆகிப்போகும்.

ஏழு ஐந்துக்கு பஸ்,வழக்காய் ஏழுபத்து அல்லதுஏழே காலுக்குத்தான் வரும் அந்தபஸ்.சரிவைத்துக்கொள்வோம்அந்நேரம்போய் பஸ்சிற்காய் காத்திருந்து அவள் ஏறப்போகிற பஸ் வந்ததுமாய் ஏறிப்போய் எங்கு போவாள் அவ்வளவு தூரத்திற்கும்அவ்வளவுசீக்கிரமாயும்எனக்கேட்பவர்களுக்கு பள்ளியின் இறுதி வகுப்பிற்கான கோச்சிங்கிற்கும்,அவள் படிப்பை முன் வைத் துமாய் ஓடிக் கொண்டிருக்கிறாள் எனத்தான் சொல்லவேண்டியிருக்கிறது.

உடல் நலமில்லை என ஒரு நாள் எடுத்த விடுப்பிற்கு மறு நாளின் மறு நாள் இவன் போய்நிற்க வேண்டியாதாக்கிப்போனது.தகப்பன் என்கிற முறையில்/ பிள்ளை செய்ததுதவறுதான்,இனிமேல் உடல் நலமாகவே இருக்கும் படிநான் பார்த்துக் கொள்கிறேன், என்கிற நிபந்தனையற்றமன்னிப்புப் பேச்சுடனேயே
அவளைஅன்றுஸ்கூலில்தக்கவைத்துக்கொண்டுவரவேண்டிஇருந்தது,இல்லை யென்றால் அன்றைக்கு கிளாஸீற்கு வெளியே முட்டிபோட்டிருப்பாள்,

இவன்ஒருமுறைஏதோஒருகாரணத்திற்காய் பள்ளிக்குப்போனபோதுஇவனது மகள்படிக்கிறவகுப்பிற்குஇரண்டுவகுப்புத்தள்ளி வகுப்பிற்கு வெளியே ஒரு மாணவி முட்டி போட்டுக் கொண்டிருந்தாள்.அவளை பார்க்க வந்திருந்த அவ ளதுஅம்மாடீச்சரிடம்ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தாள்.”ஏம்மா,பொம்பளைங்க தானநீங்களும், இப்பிடியா வயசு வந்த பொம்பளப்புள்ளைய முட்டி போட வைப்பீங்க,,,எல்லாப்புள்ளைங்களும்எல்லாநேரமும்ஒண்ணுபோலஇருக்குமா ம்மா,இதுலபீரியடுடயத்டோடவர்ர புள்ளைங்களும் இருக்காங்க/ அதுகளப் போயி இப்பிடிப் பண்ணுனீங்கன்னா எப்பிடிங்கம்மா,இவளுக்கும் நேத்துத்தான் ஆரம்பி ச்சிருக்கு.அதுல கொஞ்சம் அசதியாகிப்போனா,அதுனால ஸ்கூலுக்கு வர லேட் டாகிப் போச்சி, அதுக்குப்போயி இப்பிடிபத்துபேரு பாக்க முட்டிப் போட வச்சி ருக்கீங்களேம்மா, கொஞ்சமாச்சும்மனசாட்சிப்படி நடந்துக்கங்க, இல்ல நாங்க சொல்றது தப்புன்னாசொல்லுங்க,ஏதும்பேசலம்மாமாணவியின் அம்மா சொன்னபிறகு அந்த மாணவியின் வகுப்பு ஆசிரியை அவளை எழுந்து நிற்குமாறுசொல்லி விட்டுதனதுதவறுக்கு வருந்துவதாகச்சொன்னாள்.

தண்டிக்கும் மனோநிலையும்,கறார் காண்பித்தலும் மட்டுமே கண் முன்னாய் நிற்கிற பொழுது இம்மாதியானவைகள் எல்லாம் தெரிவதில்லை, ஆகவே,,,,,,, , என முடித்த ஆசிரியை அம் மாணவியை வாஞ்சை பொங்க வகுப்பினுள்ளே அழைத்துகொண்டு போனாள். எனக்கும்இவள் வயதில் ஒருபெண்பிள்ளை இருக்கிறாள்எனச் சொன்னவாறே/

ஆனால் தஞ்சாவூர்ப்பள்ளியில் சேர்க்கைக்கு சென்ற பொழுது இப்படியான வம்பு எதுவும் அங்கிருப்பதாகத்தெரியவில்லை.அங்கிருந்த ஒரே வம்பு ”என்ன சார் போயும் போயும் தமிழ் மீடியத்துலயா சேக்கப்போறீங்க புள்ளையக் கொண்டுபோயி”என்பதுதான்,,,உடன்வேலை பார்த்தவர் சொன்ன பள்ளி இவன் குடியிருந்த வீட்டின் பக்கத்திலேயே இருந்தது.இன்னொன்று டவுனுக் குள் இருந்தது, மற்றொன்று ஐந்து கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தது.தினமும் இவன் போய் விட்டு விட்டு வரவேண்டும்.போய் கூட்டி வர வேண்டும்.என்கிற மனக்கணக்கு போட்டுநகர்ந்த நாட்களாய் இருந்த பொழுதது.மென்மையும் கனமும்சேர்ந்தகணங்களாய்வாய்த்துப்போனதருணங்களாய் அவை.

மாப்பிள்ளைகுமாரின் வேனில் தான்பொருட்களைஏற்றிக்கொண்டுக் கொண்டு சென்றார்கள்.பொருட்களை இறக்கி வைக்கும்போதுஅவன்தான் சொன்னான். வீடு நன்றாக இருக்கிறது.நல்ல சூழல், நல்ல காற்றோட்டம்,சுற்றிலுமாய் மரங்கள் வீடு தோட்டம் குடியிருப்பு என மட்டும்எனவழக்கம்போல் நிலை கொண்டுவிடாமல்கொஞ்சம்பொதுஜனத்திரளில்கலந்துகொள்ளுங்கள்,நன்றாக இருங்கள்,எனச்சொல்லிவிட்டுப்போனான்.சரியாகஊருக்குப்போனதும் போன் பண்ணினான்.ஊர்வந்துசேர்ந்து விட்டேன் என/

அவன் அப்படியாய் தகவல்சொன்ன பொழுதுவீட்டின்சாமான்களைஒதுங்க வைத்துக்கொண்டிருந்தார்கள்,இவனும் மனைவியுமாக/அல்சர் நிறை வயிறு அப்படித்தான்செய்யும்எனவிட்டுவிட்டான்,முதலாய் தண்ணீராய் ”ஆய்”போன போது.அப்புறம் அப்புறமாய் சாமான்களை ஒதுக்கி வைக்கமுடியாதஅளவிற்கு பாத்ரூம் போய்க்கொண்டிருக்கவும் பதறிப்போனாள் மனைவி.மாடியிலிருந்து கீழே போய் கீழ் வீட்டில் குடியிருந்தவர்களை கூட்டி வந்து விட்டாள்.வந்தவர் சிறிது நேரத்தில் ஆட்டோ வந்துவிடும் பதறாதீர்கள், என்றார். கூடவே இலவச இணைப்பாக குடிவந்தமுதல்நாளேவயிற்றுப் போக்கா,விளங்கி போகும் வீடு என அவரதுமனைவியின்காதில்முணு முணுத்துக் கொண்டிருந்தார்.

புதுவீடுபுது மண் புது மனிதர்கள் புது வாசம் இப்படித்தான்இருக்குமோ,,,,,? என எழுந்தஐயப்பாடுசிறிதுநாட்களில்ருசுவாகிப்போனதுஇவன்குடும்பத்தை திரும் பவுமாய் ஊரில் கொண்டு வந்து வந்து விட்டு விட்டு தனியாய் திருமணமான பிரம்மச்சாரியாய் அங்கு தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டகாலங்களில்/

அப்படி தங்கியிருந்த நாட்களின் நகர்வொன்றின் பொழுது இன்னொரு இவன் பணிபுரியும்அலுவலகத்தின்ஒருகிளையிலிருந்துபேசியபெண்ணின் பேச்சைக் கேட்டு அழுது விட்டான்,அந்தப்பெண்ணிற்கு நன்றாக இருந்தால் இவனது இரண்டாவது மகளின் வயது இருக்கும்.

அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வாக்கில் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் பஸ் ஏறினால்மூன்றரை அல்லது நான்கு மணி நேரமாகும் தஞ்சாவூர் போய்ச்சேர/

இவன் பஸ் ஏறியதும் தட்டுப்படுகிற சீட் டிரைவர் சீட்டாய் இருக்கும். ஒன்று முன்னால்ஏறுவான்அல்லதுஅதுவிடுத்துபின்னால்ஏறிக்கொள்வான்.முன்னால் ஏறிக்கொள்வதில் இருக்கிற சௌகரியம் பின்னால் ஏறிக்கொள்வதில்இருப்பதி ல்லை.

ஒருமுறைஊர்திரும்பிவரும்போதுமுன்படியோரம்சற்றுதள்ளிநின்றுகொண்டே பஸ்ஸின் கண்ணாடி வழியாக ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்ததில் தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை வந்த ஒண்ணரை மணி நேரமும் எப்படிப்போனது எனத்தெரியவில்லை.

பொதுவாகவேஇவனுக்குபெறாக்குப்பார்ப்பதில்ஒருஆர்வம்இருந்ததுண்டு.சாலை யோரமாகஇருக்கிறடீக்கடையில்டீவாங்கிக்குடித்துக்கொண்டேசாலையையும், சாலைஉள்வாங்கிக்கொண்டமனிதர்களையும்வாகனங்களையும்பார்த்துக்கொண் டே இருக்கலாம் என நண்பர்களிடம் சொன்னபோது சிரிக்கிறார்கள்.

”ஹலோ சார்,டீக்கடை டீக்குடிக்க மட்டுமே ஏற்பட்டது அங்கு போய் நின்று கொண்டு ரோட்டைப் பார்க்கிறேன்,பஸ்ஸைப்பார்க்கிறேன் எனநிற்கக்கூடாது, என்கிறார்கள்.

கூடவேஇன்னொன்றுமாய்சொல்கிறார்கள்.இருபதுவருசமாகூடவேஇருக்குற எங்களப்பாத்தாநல்லாயில்லாமப்போச்சி,ரோட்டப்பாத்தாநல்லாயிருக்காம்,
மூஞ்சியையும்மொகரக்கட்டையும்பாரு,டேய்வாங்கடாபோவோம்,எனக்கிளம்பி விடுகிறார்கள்.

ஆனால் அதெற்கெல்லாம் அசருகிற ஆளா இவன்.குமார்,கண்ணன்,வாசன் மற்றும் இவனுமாக சேர்ந்த கூட்டணியாக டீ சாப்பிடுவதுதான் இவர்களது பழக்கமாய்இருப்பதுண்டு.இதில்வாசன்எப்பொழுதுமேஏற்பாடானஉடைகளுடன் சிகரெட் சேர்த்து காணப்படுவார். கண்ணன் எப்பொழுதும் உடைகள் மீது மோகம் கொண்டிறாதவராகவும்,சிம்பிளி பெஸ்டாக,,,,,/குமார் அப்படியில்லை தனது புது நிற மேனிக்கு ஏற்ற கலரில் பேண்டும்,டீ சர்ட்டுமாய் அணிந்து காணப்படுவார்.பரவாயில்லை என இவன் அப்புராணியாக இதையெல்லாம் ஏற்றுக்கொள்கிற நேரங்கள் இருந்ததுண்டு. ஆனால் எப்பொழுதுமே அப்படி யாய் இருக்க முடிவதில்லைதான்.சற்றே உற்று நோக்கத்தோணுகிறதுதான் அவர்களது உடைகளை.

பார்க்கவும் பழகவும் பேசவுமாய் இருக்கிற இவர்களுள் இப்பயெல்லாமா ஒன்று இருக்கிறது என வியப்படைந்த நேரங்களில் கூட அவர்கள் எடுக்கப் 
போகிறகுறும்படடிஸ்கஸனில்இவன்கலந்து கொண்டதில்லை.எப்பொழுதோ ஒரு முறைவம்பாகவும் வேண்டா வெறுப்பாகவும் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் காமிராவுக்கு லென்ஸ் வாங்க வேண்டும் புதிதாக என பேசிக்  கொண்டிருப்பது போல்பட்டது.அதற்கப்புறமாய்என்னானதுகுறும்படவேலை எனத்தெரியவில்லை. லென்ஸ் வாங்கினார்களா அத்தைக்கு மீசை முளைத்து விட்டதா எனத் தெரி யவில்லை.இதை அடுத்தடுத்தாய் டீ சாப்பிடும் நாட்களில் கேட்க வேண்டும் அவர்க ளிடம்.

தஞ்சாவூரில் அலுவலகத்திற்க்கு எதிராய்வண்ணமீன் தொட்டி வைத்திருக்கிற டீக்கடையில்தான்எப்பொழுதுமேடீக்குடிப்பார்கள்இவனும்அலுவலகசகாக்களும். அலுவலகநேரங்களில்பெரும்பாலுமாய்பார்சல்வந்துவிடுவதுண்டு,அதுவிடுத்து இவன்தனியாய்ப்போய்க்குடிக்கிறமாலைவேலைகளிலும்காலைவேலையிலு மாய் வண்ணமீன்தொட்டிகுள்ளாய்நீந்திக்கொண்டிருக்கிற மீன்களையும்,மீன் தொட்டிக்கு அருகாமையாய் அதனுள்ளாய் விழுகுமாறு சற்றே மேல் நோக்கி ஒண்ணுக்குபெய்துகொண்டிருக்கிறசிறுவனைபார்க்கபார்த்துக்கொண்டிருப்பான், இதில் உயிருள்ள மீன்களும்அதை அடை காக்கும் தொட்டியும்பொம்மையாய் நிற்கிற சிறுவனும் பார்க்கப்பார்க்க நன்றாக இருப்பது போல் தோணுவதுண்டு, ஒவ்வொன்றைப்பார்க்கும் போதும்தோணுகிற ஒவ்வொரு நேர அழகு போல,,,/

டீக்கடைக்கார்தான்சொல்வார்என்ன சார்,இப்பிடிபாத்துக்கிட்டிருக்கீங்க, அதுல என்ன இருக்கு,எங்களப்பொறுத்தவரைக்கும் அது தூசி தொடைக்கும் போது நகத்தி வைக்கிற ஒரு பொருள் அவ்வளவுதான் என்பார்.

ரூபங்கள்அரூபங்களாயும்,அரூபங்கள்ரூபங்களாயும்பார்க்கப்படுகிறஉண்மை  அவரது பேச்சில் தெரிந்தது.

சரி அப்படியெல்லாம் பட்டுத்தெரியாத இந்த டீக்கடையிலிருந்து ஒரு அரைக் கிலோமீட்டர் தூரம்காலாரநடந்தால் வந்து விடுகிறதுண்டு பஸ்டாப்.இரு சக்கர வானத்தில் போனாலும் அரைக் கிலோ மீட்டர் தூரமே,,,, என்பான் நண்பன் குமார்.

இவனுக்குத் தெரிந்த நாளிலிருந்துகொஞ்சம்சேட்டைக்காரனாகவே இருந்திரு க்கிறான் அவன். இப்பொழுது வரை அந்தசேட்டையின்வீரீயம்குறையாமல் அதைக்கட்டிக்காப்பாற்றுகிறவனாயும்பொத்திப்பாதுகாக்கிறவனாயும்/திடீரென எங்காவது போய் விட வேண்டும்.எங்கு போவது என்ன செய்வது குடும்பம், குட்டி,தனிச்சொத்து,,,, என்கிற இத்தியாதிகளை என்ன செய்ய..,,? எனக் கேட் டால் அவனிடம் பதில்இருக்காது.ஏன்அப்படி எனக்கேட்டால் 100 நாட்கள் சாமி யாராகிஒரு இடத்தில் போய் உட்கார்ந்து விட வேண்டும்என்பான். ஆமாமா, ஒன்னையக்கட்டுனதுக்குஓங்வீட்டம்மால்லசாமியாராப்போயிருக்கணும் என் பான்நண்பன் பதிலுக்கு/

இதையெல்லாம்கேட்டுக்கொண்டிருக்கும்டீமாஸ்டர்சொல்வார்.எங்கசாமியாரா
ப்போறதும் குறும்படம் எடுக்குறதும் இப்பதைக்குள்ள நடக்காது போலிருக்கே என/வாஸ் தவம்தான் குறும்படம்ங்குறது எதுக்காக ஏன்னு யோசிக்கும் போது நல்ல விஷயமாத்தான்படுது.மொத்ததில் எனச்சொல்கிறவர் அண்ணா நகரில் இருக்கிறேன்எனஅறிமுகம்ஆனார்.அவரதுசொல்லும்செயலும்குறும்படம்,குறும்படம் பற்றியதாக மட்டுமே இருந்தது.நண்பர் குமார்தான் அறிமுகப்படுத்தினார் அவரை.நமதுநட்புவட்டாரத்தின்புது வராவு அவர் எனச்சொன்னவர் நம்முடன் இணைந்து செயலாற்றுகிற எண்ணங்களை ஊக்குவிக்கிறவராகவும் இருக்கி றார். இருக்கட்டும்அவர்நமக்கும்நாம்அவருக்கு ம் ஆவோம் எனச்சொல்லிக் கொண்டிருந்தநாள் ஒன்றின் நகர்வில் நான் சென்னையில்இருக்கிறேன் புது முக இயக்குனர்ஒருவரிடம்உதவிஇயக்குனராக என/

வைக்கிறபெயரும்எடுக்கிறபடமும்எப்படிஇருக்கவேண்டும்என்கிற ஒன்றைத் தவிர எங்களுக்கு இப்பொழுது வேறு ஒரு சிந்தனையும் இல்லை என்றார்.

நேற்றைக்குமுன்தினம் இவனது மகளுடன் பஜார் போய் விட்டு திரும்பி வரும் போது ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிற படத்தைப் பார்த்து கை நீட்டி படம் எப்படியிருக்கிறதாம் என்றாள்,இவன் பதிலுக்கு படத்தின்கதையை ஒன் லைனாகசொல்லிவிட்டுபடம்ஓடாதுபோலிருக்கிறதேஎனதியேட்டரில்வேலை செய்பவர்சொன்னதைச்சொன்னான்.அப்படியாஎனதலைகுலுக்கிக்கொண்டவள் நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் ,ஒரு நாள் தியேட்டருக்குப் போய் வருவோம்குடும்பத்தோடுஎன்றாள்.சரி அவளது ஆசையையும் நிறைவேற்றத் தான் வேண்டும்,

நிறைவேறா ஆசைகள் தாங்கிய மனம் கூடு கட்டிவசிக்கிறவித்தை எத்தனை பேரில்எப்படியெல்லாம்வாய்த்திருக்கிறதுஎன்பதுதெரியாமலேயேஇப்படிபோய் விடுகிறஅவலமும் கூத்தும்,அன்றாடங்களின்நகர்வாய் கண் முன்னாக/

சாராய போத்தல் மீது கண் வைத்திருக்கிற நண்பன் கேட்டபோது இவன் சொன்னது மறந்து போகாமல் ஞாபகம் வருவதாக/ என்ன நண்பா இப்படி இரு சக்கர வாகனத்தின் முன்னாய் பச்சைக்கலர் வர்ணம் தாங்கிய பாட்டிலுடன் வலம் வந்தால்எப்படி,அதில் இருப்பது பச்சைத் தண்ணீரா அல்லது,,,,,என அவர்

இழுத்த போது இவனது பதில்வேறொறாய் இருந்தது. கொஞ்சம் உள்ளீடாய் பார்க்கிறபொழுதுஅதைஒட்டியவிஷயம்தான்அது எனத் தெரிகிறது.

வேப்பமரம்வைத்தாலென்ன,புளியமரம்வைத்தாலென்ன,வைக்கிறமரங்களின் பலந்தானே முக்கியமாய்ப்படுகிறது இங்கு.தவிர புஷ்பிக்கிற பூக்கள் யாவும் நன்றாகவும் அன்றலர்ந்துமாகவா காணப்படுகிறது .அது போல இரு சக்கர வாகனத்தின் முன்னால் தொங்கவிடபடுகிறபாட்டிலை மாற்ற வேண்டும். சாராயம்தாங்கிய உயர உயர பாட்டில்களை தொங்க விட்டுக்கொண்டும் ஆள்க் காட்டி விரல் நீளம் உள்ள சிகரெட்டைப்பிடித்துக்கொண்டுமாய் திரிய வேண்டி யதுதான் என்ன குறைந்து போனது இப்பொழுதுஎன்றான் நண்பனிடம்/ தலை யிலடித்துசிரித்துக்கொண்டவன் வெளியேசொல்லிவிடாதே சப்தமாய் சிரிக்கப் போகிறார்கள்.என்றான்.

உண்மைதான்நண்பன் சொன்னதும்,பிராந்திக்கடையின் முன்பு கூட இரு சக்கர வாகனத்தை நிறுத்த நினைக்காதவன் சாராயம் குடிகொண்டபோத்தல்களோடு அலைய வேண்டும் எனச் சொன்னால்,,,,,,,?

அலைந்தால் என்னஇப்பொழுது கெட்டாபோனது என நினைக்கிற வேலையில் மனம் முளைக்கிற நல்லதனம் கெட்டது செய்யவிடாமல்தடுத்துவிடுகிறதும் உண்டு.

கைநிறைய காசு இருந்தது சாப்பிடுவதற்கும் செழவலிப்பதற்கும், தங்குவதற்கு ரூம் இருந்தது,பார்ப்பதற்கு அரசுப்பணி இருந்தது.போவதற்கு கோவில் சினிமா தியேட்டர் பக்கத்து ஊர்கள் என நிறைய இருந்தது ,இத்தனைக்கும் மேலாக பேசுவதற்கும்பழகுவதற்கும்நண்பர்கள்இருந்தார்கள்.அப்படிஎல்லாம்இருந்தும் எதுவுமேஇல்லாததுபோல்இருக்கும்நிம்மதியற்றதனம்நிறைந்திருந்த கல்யா ணமான பிரம்மச்சரிய வாழ்க்கையில் ஐம்பது ரூபாய்நோட்டுக்களைவைத்துக் கொண்டு செலவு செய்தான்.

ஊரிலிருந்து போய் தஞ்சாவுர் இறங்கிய திங்கள் கிழமை சந்தோஷமாய் இருக் கும்,இரவுநிம்மதியாய்தூக்கம்வரும்,செவ்வாயும்கொஞ்சம் அப்படியே, புதனில் அதுகொஞ்சம்டல்லடிக்கும்,வியாழன்,வெள்ளியில்ஊரையும்குடும்பத்தையும் எதிர் கொண்ட மனது தூக்கத்தை தொலைக்க வைத்துவிடும்.

அப்படி இருந்த பொழுதுகளில் கையில் மாற்றி வைத்திருக்கிற ஐம்பது ரூபாய் நோட்டுக்களைஹோட்டலுக்கும்ரூம்வாடகைக்கும்,புத்தகங்கள்வாங்குவதற்கும்,பஸ் செலவிற்குமாய் வைத்துப் புழங்கிய புழக்கம் மூணறை ஆண்டுகள் கழித்து திரும்பவுமாய் வாய்க்கவும் கைவரப்பெறவுமாய்/

6 comments:

 1. கெட்டது செய்யவிடாமலே தடுக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. தஞ்சைநினைவுகள் அருமை நண்பரே
  கெட்ட செயல்களை செய்ய விடாமல் தடுக்கும் மனம்நன்று
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. ஐம்பது ரூபாய் நோட்டுக்களை வைத்து
  சிறந்த படைப்பு
  படிக்க தூண்டும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete