14 Jun 2015

பூப்பூ,,,,

புழுதி பூத்திருந்த வீதி தன் அகலநீளம்காட்டிகண்ணடித்துச் சிரிக்கிறது அன்றா டம் நடந்து போகையிலும்,இரு சக்கரவாகானத்தில் பயணிக்கையிலுமாய்.
பூத்திருந்த புழுதி ஒற்றையாய்,இரட்டையாய்பொழு பொழுவென உதிராமல் நெசவிட்ட பிரியமானவளின் சேலைபோல ஒன்றாக பறந்து எழுந்து கடலலை போல வளைந்து நெளிந்து செல்கிறது.
இருசக்கர வாகனம் கொர,கொர,டொர,டொர சப்தத்துடனும்,உதறலுடனுமாய் ஓடிக் கொண்டிருக்கிறது சீரற்று/
நடை,,,,,,,,,சமாய சமயங்களில் வாய்த்துப்போகிற வரப்பிரசாதமாய்/அன்றாடம் அதிகாலைஎழுந்துசுத்தமான(?/)காற்றைசுவாசித்தபடிநடக்கலாம்என்கிறபடியெ ல்லாம்ஆசைப்படுகிறதுண்டுதான்எங்கேநடப்பில்அதுஇயலாமல்போகிறது. உறக்கமற்றவெயில்நேரஇரவுகள்தூக்கத்தின்நீட்சியைஅதிகாலையில்அதிகமா யும்அழுத்தமாயும்பிரயோகிக்கிறசமயங்களில்வாக்கிங்கா,தூக்கமாஎன்கிற தர்க்கம்எழுந்துதூக்கத்திற்குவிழுந்துவிடுகிறஅதிகவாக்குகளின் காரணமாக தூக்கமே ஜெயித்துவாக்கிங்தற்காலிகமாய் பின் வாங்கி நிற்கிறது பரிதாபமாக/ பின் எங்கிட்டு வாக்கிங்?
பக்கத்தில் இருக்கிற கடைக்கு போவதானாலும்கூட இருசக்கர வாகனத்தில் பயணித்து சுகம் கண்டு போன உடல் நிலையையும்,மனோ நிலையையும் கொண்டவனாய்/
பறக்கிற புழுதி மெனமையாய் மேலெழும்பி படர்ந்து அடங்குகிற போது பார்ப் பதற்கு நன்றாகவே இருக்கிறது.புழுதியினுள் புகுந்து ஊர்கிற எறும்புகளும், புழுக்களும், பூச்சிகளும் இன்னும் பிறஜீவராசிகளுமாய் நாங்கள் ஊர்ந்து செல்கிற வழியில்நீங்களும் வந்தால் எங்களின் நடமாட்டமும்,ஊர்ந்தெழலும் நடப்பதுஎங்கு?நால்வழிச்சாலைபோலஎங்களுக்கெனதனிட்ராக்ஒதுக்குங்கள் எனகுரல்கொடுத்துமகஜர் சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும் போலிருக்கிறது. அப்படி சமர்ப்பித்தாலும் கதை ஆகுமா,ஆகாதா என்பதுஉறுதியற்ற நிலையே எனஅவை உரக்கவும்,கோபமாகவும்சொன்னவார்த்தைகளைசெவியுற்றவனா ய் வீதியின் இருபுறமுமாய் முளைத்து காற்றின் இசைவுக்கு தலையசைத்து உக்கிரம் கொண்டு தன் இருப்பை உறுதி செய்து நிற்கிற சீமைக் கரு வேலை மரங்களைப்பார்க்கிறேன்.
பச்சை நிறம் காட்டிய இலைகளும்,கிளைகளுமாய் சொன்னவார்த்தைகளும் காட்டிய கையசைவுமாய் ”என்னருகே வா நீ”என்கிறதாய்த்தெரிய அந்த வார்த்தைகளையும் மீறி முள்நீட்டித்தெரிந்தமரங்கள்தன் மேனியில்படர்ந்து ஊர்கிறகட்டெறும்புகளையும், சிவப்பெறும்புகளையுமாய் கணக்கில் சேர்த்து முள் முனையை இன்னும் கூர்மை காட்டி நீட்டு நிற்கிறது.
வீதியில் டீத்தூக்கோடு நடந்து வந்த பையன் அத்தனை முட்செடிகளிலும் முன் வரிசையிலிருந்து சற்றே தள்ளி பின் வாங்கி நின்ற மூன்றாவது மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தேனடையைப்பார்க்கிறான்.
தேனடை ,,,,,,இழுத்து பிழிந்து எடுத்தால் இனிப்பாய்திரவம்தருகிற கூடு. உழைப்பை மட்டுமே தங்கள்முழுநேர வேலையாய்க்கொண்ட சோர்வறியா தேனீக்கள் எங்கிருந்தோசிறிது,சிறிதாய் கொணர்ந்து சேர்த்த தேனை சேகரம் செய்து வைத்திருக்கிற பெட்டக மாய் இருக்கிற தேனடையை சுற்றிச்சுற்றிப் பறக்கிறதே,அதோ இருக்கிற தேனீக்கள் இரண்டு,அவைகளின் மேல் ஒரு கண்ணாக இருக்க வேண்டும்.காதல் கொண்ட களியாட்ட மனோநிலையில் உள்ளவை போலிருக்கிறது/அடேயப்பா,அவை ஒட்டிக் கொள்வதும்,உரசிக் கொள்வதும்ஆள்அரவமற்றசமயங்களில்குழைந்துகொள்வதுமாய்,,,,ஒரே கொண்டாட்டம்தான் போங்கள்.அவைக்ளின் மனம் கொண்டஈரம்எல்லாவற் றிலுமாய்பற்றிப்படர்ந்துதொற்றிக்கொள்கிறசமயத்தில்டீத்தூக்கைப்போட்டு விட்டு அப்படியே போய் விடலாமா என்கிற மனோநிலை வந்தவனாய் ஆகி விடுவான் போலிருக்கிறதே/
ஒன்றின்பாதிப்புஒன்றின்மீதுதொற்றிக்கொள்கிறபொழுதுடீத்தூக்குகொண்டு போனவன் என்ன,,,?அந்த வழியில் செல்கிற இளம் உள்ளங்கள்அனைத்தும் அதற்கு ஆட்பட்டு விடும் போலிருக்கிறதே?
பச்சையும்,பிங்கும்,மஞ்சளும்,,,,,இன்னமும்பிறவர்ணங்கள்சுமந்துமாய்கலர்க் காண்பித்தும்,உயர்ந்தும்,தாழ்ந்துமாய்நின்றவீடுகளையும்அதன்மனிதர்களை யும்.சுற்றி நின்று காவு காக்கிற சீமைக்கருவேலைமரங்களையும் பார்க்கிற பொழுது அங்கு நின்று தன் ஆட்சி செய்து கொண்டு பரந்துவிரிந்து கிளை பரப்பி நிற்கிற சீமைக்கருவேலை மரங்களுக்குப்பதில் பூமரங்களும், பூச்செடிகளும் இன்னும் பிற மரங்களுமாய் நின்று காட்சி தந்தால் அந்த இடமே சோலை வனமாகவல்லவாகாட்சிப்படும்.அப்பிடிகாட்சிப்படுகிற போது கண்களில் தெரி கிறகுளுமையும்,மனம்கொள்கிறமகிழ்ச்சியும்அளவற்றல்லவா இருக்கும்.
களிகொள்கிற மனது விரிகிற விரிபுக்கு அளவேதுமில்லையே என்கிற உயர் நவிற்சி மனோநிலையில் பயணிக்கிற வேளை தன் அகலம்,நீளம் காட்டிய புழுதி பூத்திருந்த சாலை மனிதர்களையும் இன்னும்,இன்னமுமான பிற ஜீவ ராசிகளையும் தன் மேனி மீது நடமாடவிட்டவாறு/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் வரிகளில் ஆட்பட்டு விட்டேன்...

சசிகலா said...

தேனடை வர்ணிப்பில் தேங்கிப்போனதென் மனமும்... அப்பப்பா எத்தனை அழகிய வர்ணிப்பை தந்திருக்கிறீர்கள்.

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/