24 Jun 2015

மென்காற்றாய்,,,,,,,,

சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே நுழைந்த காற்று திறந்திருந்த கதவை தனது சின்னக்கால்களால் சற்றே பலமாய் எட்டி உதைத்து விட்டு வந்த வழியா கவே திரும்பிச்சென்று விடுகிறது.

நண்பர் இளம்முருகுதான் இந்தக்கதவை செய்து கொடுத்தது.அங்கு இங்கு என மரம்தேடுவதெல்லாம் வேஸ்ட்.காண்ட்ராட்டில் விட்டு விடுங்கள்.நான் செய்து தருகிறேன்எனஅறிமுகமானஅன்றுசொன்னார்.

அவர் நண்பராகிப் போனதில் இருக்கிற விருப்பம் அதிகப்பங்கு நண்பர் ரவிச் சந்திரனுடையதாய் இருக்கிறது எனச்சொன்னால் மிகையாய் இருந்து விட முடியாது. ரவிச்சந்திரனும்இளமுருகும் ஒன்றாக ITI யில் படித்தவர்கள். இவர்களோடு இன்னும் மூன்று பேர் படித்தார்கள் என நண்பர் இளமுருவைப் பார்க்கும் போதெல்லாம் சொல்வார்.என்ன இவுங்க கார்பெண்டர் கோர்ஸ் படிச்சிட்டு வேற வேலைக்கு போயிட்டாங்க.வேற வேலைக்குப்போறதுக்கு எதுக்குஇவுங்ககார்பெண்டர்கோர்ஸ்படிக்கணும்.வேறஏதாவதுகோர்ஸ்படிக்கப் போயிருந்தா வேற யாருக்காவது ஒதவீருக்குமில்ல அந்தப் படிப்பு.

படிச்சி வெளிய வந்தகொஞ்சநாளு ஒண்ணா வேலை செஞ்சிக்கிட்டுத் திரிஞ் சோம்/ அந்த வேகத் துலயே அவுங்க எல்லாம் வேற வேற வேலைக்குப் போயிட்டாங்க. நாந்தான் இந்தத்தொழில செஞ்சிட்டுத்தனியா இருக்கேன். இப்ப அவுங்க படிச்சி வந்ததெல்லாம் வேஸ்டு,அந்த நேரத்துல டிமாண்ட இருந்த கோர்ஸ் அது. அவுங்க யெடத்துல வேற யாராவது இருந்து படிச்சிரு ந்தா இப்ப தொழிலுக்கு உபயோகமாஇருக்கும் .என்கிறசொல்க்கட்டு பகிர்தலு டன்அறிமுகமானஇளமுருகுஇந்தமாதிரியானபேச்சின்மூலமாகத்தான் நண்ப ராகிறார்.கதவுவேலைக்காக யாய்யாரிடமோ கேட்டுகடைசியில் வேண்டாம் இந்த வேலை புளிக்கா விட்டாலும் கூட தேடி அலைய முடியவில்லை. என தற்செயலாக ரவிச்சந்திரனி டம் சொல்லிக்கொண்டிருந்த நாடகளொன்றின் நகர்வில்தான் இளமுருகுவை அறிமுகப்படுத்தினார்ரவிச்சந்திரன்,

இளமுருகுவிற்கு படிக்கிற காலத்திலிருந்தே ரவிச்சந்திரனின் தங்கை மீது தனிப்பிரியம்இருந்தது,அவளுக்கும்கூடஅப்படித்தான்என அறுதியிட்டுச்சொல் லி விடமுடியாவிட்டாலும் கூட ஊசலாட்ட மன நிலையில் இருந்தாள். அவளைப்பார்ப்பதற்காக ரவிச்சந்திரன் வீட்டிற்குவலியப்போயிருக்கிறான்.

அல்லது ரவிச்சந்திரன் வீட்டிற்குஇளமுருகு கூட்டாளிகளுடன் போகிறசமயங்
களில் மற்றவர்களையெல்லாம்அண்ணன்எனக் கூப்பு டுகிற ரவிச்சந்திரனின் தங்கைஇளமுருகுவைமட்டும் இந்தாங்க வாங்க,போங்க என்றுதான் கூப்புடு வாள்.சீராக செதுக்கி மைக்கா ஒட்டி வைக்கப்பட்டிருந்த மரப்பெஞ்வாசலில் ஒட்டியவராண்டாவில்கிடக்கும்.அதில்தான்உட்கார்வார்கள் வீட்டிற்கு போகிற நேரங்களில்.ரவிச்சந்திரனைப்பார்க்கப்போகிறநேரங்களில்இளமுருகுவும்நண் பர்களும்மிகவும்உற்சாகபட்டுப்போவதுண்டு அவர்களது வீட்டிற்கு/

அந்த உற்சாகம் திடீரென்றாய் இல்லை என்ற போதிலும் கூட ஏதோ ஒன்று அவர்களது நடவடிக்கையில் வித்தியாசப்பட்டுத்தெரிய ரவிச்சந்திரனிடம் சொல்லிநண்பர்களைஇனிமேல்வெளிப்பழக்கத்தோடுவைத்துக்கொள்இளமுரு குவின் பழக்கத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தென் படுகிறது. பெண் பிள்ளை இருக்கிறவீடுஇதுலாயக்குப்படாது.இதுஜாக்கிரதைஎனசொல்லிவைத்துசொல்லி வைத்தாள்.அன்றிலிருந்து ரவிச்சந்திரனின் வீட்டிற்குப் போக முடியாத இளமுருகுதனது ஆசைகளையும் கனவுகளையும் மட்டுமே அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான்.இதற்குள்ளாகவிஷயம்எப்படியோரவிச்சந்திரனின்மாமனுக்குத் தெரிந்து போனது,வந்து விட்டான், சண்டைக்கு எக்கிக் கொண்டு/

என்னபிரண்டு புடிச்சி வச்சிக்க அவன் என்ன பெரிய ம……………. தொலைச்சிரு வேன் தொல்லைச்சி,ஒழுக்கமா இருக்கச்சொல்லு அவன,ஆள் நிதானம் தெரி யாமதிரியிறான,கிருக்கு,,,,,,,,,,,,அவனஆளக்காட்டு,வீடுஎங்கஇருக்குன்னுசொல்லு, அவன்அப்பன்என்னபண்றான்,ஆத்தாக்காரிஏதுனாச்சும் வேலைக்குப் போறாப் லயா,,,/எந்தஊர்ப்பக்கத்துக்காரங்கெ,,,,என ரவிச்சந்திரனின் மாமா கோவப்பட்ட போது”அய்யோ மாமா நீங்க நெனைக்கிற அளவுக்கெல்லாம் இல்ல மாமா, அவனும்அவுங்கவீட்டுக்காரங்களும்ரொம்பஅப்புராணி மாமா,ஏங்கிட்ட அம்மா சொன்னப்ப நேரா அவுனப்போயி கேட்டேன்,ஆமாம் எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்குறது வாஸ்தவம்தான்,ஓங்தங்கச்சிக்கும் அப்பிடியானஆசை இருக்குன்னு நெனைக்கிறேன், இதுல ஒங்களுக்கு சம்மதம் இல்லைன்னு தெரிஞ்சிபோச்சி.ஒதுங்கீட்டேன் ரொம்ப நாளைக்கி முன்னாடியே. நல்லா கவனிச்சியாரொம்ப நாளாச்சி நான் ஒங்க வீட்டுக்குவந்து.நேத்துத்தான் ஒங்க வீட்டுக்கு வந்தேன்.அதுக்கு இத்தனை களேபரமா,,,? சரி வுடு,நடந்த தப்புக்கு நான்காரணமாயிட்டேன்.மன்னிச்சிக்கப்பா,,,,/எனச்சொல்லிவிட்டுப்போனவன்
தான் அதற்கப்புறமாய் இந்தபக்கமாய் தலை வைத்துக்கூடப்படுக்கவில்லை என ரவிச்சந்திரன் சொன்ன போது அமைதியானார்.

சொல்லுங்க யாரு ரவி அனுப்பிவிட்டாப்லயா, அவன் சொன்ன க்ரெக்டாத் தான் இருக்கும் ,சரியான ஆளத்தான் அவனும் கையக்காட்டுவான்,ஏன்னா சில வீடுங்கள்ல வேலை முடியிற வரைக்கும் சுத்திச்சுத்தி வருவாங்க,வேலை முடிஞ்சதும் சம்பளத்துக்கு இழுவையா இழுப்பாங்க,நான் ஒத்த ஆளு மட்டுன்னா பரவாயில்ல,நான் நாலு பேருக்கு சம்பளம் தர்ற யெடத்துல இருக் கேன். அதுனாலத்தான் நாலையும் யோசிக்க வேஎண்டியதிருக்கு.நீங்க அங்க இங்க அலையிறதுக்கு நேரா ஏங்கிட்ட வந்துருக்கலாம்.நீங்க போயி கேட்ட தெல்லாம் நம்ம சொந்தக்கார பையங்ககிட்டதான் கேட்டிருக்கீங்க தகவல் வந்துருச்சி,,சொந்ததுல இல்லாத பையன்ங்க கிட்டயும் நாலஞ்சி பேருகிட்ட கேட்டிருக்கீங்க,இப்பிடித்தான் எவனும் பிடிகுடுத்து பேசீருக்க மாட்டானே,,,?

அவன்ல ஒருத்தன் இந்த  ஊர்தான் பாபநாசம் பக்கம்தான் பெண் எடுத்தது. முதல்ல எங்க அம்மா வழி சொந்தத்துலதான் பெண்ணு பாத்தாங்க, பெண் ணுன்னா,பெண்ணு அப்பிடியாக்கொந்த பெண்ணு/அவமுழுக்குடும்பத் தையும் பொறுப்பா இருந்து பாத்துக்குவா, அவளப் போயி வேணாம்ன்னு புட்டு எங்கிட்டோஇருந்துஒருவெளங்காதகழுதைய கட்டிக் கிட்டு வந்தான்.அதுஇப்ப வந்து வீடரெண்டுபடுத்திக்கிட்டுகெடக்கு. நல்லாயிருக்கட்டும் எங்கன இருந் தாலும் ஆமா,,,,என்ற இளமுருகு வீட்டிற்கு வேலைக்கு வந்த பொழுது ஒரு பாம்பே சேர் செய்ய எவ்வளவு ஆகும் எனக் கேட்டிருந்தான்இவன்.அதெல்லாம் ஒங்களால முடியாது சார்.நீங்க ரிடையர் ஆகி வரும் பொழுது ரிட்டையர் மெண்ட் பணம் முழுவதையும் போட்டால்தான் உங்களால் அப்படிப் பட்ட சேர்செய்யமுடியும் என்றார்,ஆனால் அவர் சொல்லி விட்டுப் போனஇரண்டு வருடத்தில்மதுரை ரோட்டில் இருந்த காதி கிராப்ட்டில் வாங்கிப் போட்டான், இருபத்திமூணுசில்லறைஎன/இன்னும்நன்றாகஇருக்கிறது நாலை  ,பெரிதாக ஒன்றும்பழுதில்லை.அந்தச்சேரைப்பார்க்கும்போதெல்லாம்இளமுருகுசிரித்துக் கொள்வார்.அந்தசிரிப்பு காற்றை இழுத்துக் கொண்டு வந்து விட்டுப் போட்டு விட்டுப்போனது.

வெண்பஞ்சுப்பொதிபோல்மிதக்கிற மேகங்களும் அதன் கை விரித்து அலை கிறகாற்றும்மெல்ல மெல்ல கூட்டுச்சேர்ந்து கொண்டதால் கீழிறங்கி வந்து முகம் காட்டிச்சென்றதாய்/



மனிதன்போல்,மிருகம்போல்,இன்னும் கைகோர்த்து நடந்து போகிற பெரிய கூட்டம் போலுமாய் உருவம் காட்டி மறைகிற மேகங்கள் இப்பொ ழுது மழைக்கான அறிகுறி காட்டி நாட்கள் ரொம்பவும்தான் ஆகிப்போனது,மிதம் மிஞ்சிப்போனவெப்பமாய் இருக்கிறது வீடுகள், இரவெல்லாம்தூங்க முடிய வில்லை,வேர்க்கிறது,உடல்வெப்பம்கூடிப்போனது.வயிறு வலிக்க ஆரம்பிக் கிறது,அல்சர் இருக்கிறாவர்களின் பாடு சொல்லி மாளவில்லை.சுக்கர் பி.பி இருக்கிறவர்கள் தூக்கம்பிடிக்காததினால் கொஞ்சம் மறு நாட்களின் பகல் பொழுதுகளில்வேலையில்கவனம்செலுத்தி அலைய முடிவதில்லை. டல்ல டித்துப்போகிறதுதான்உடலும்மனமும்/என்கிறகவலையுடன்தான்நாட்களை நகற்ற வேண்டியுள்ளது.என்ன செய்ய,வெப்பசலனம் என்கிறார்கள்.ஆவணி முடியப்போகிறதுமழைமாதங்கள் ஆரம்பிக்கப்போகிறது, எப்பொழுது மழை பெய்து எப்படி இருக்கப்போகிறது எனத்தெரியவில்லை. 


அவசரத்தில் அது எந்தக்காலால் உதைத்தது எனப்பார்க்க மறந்தே போகிறான். எந்தக்காலாய் இருந்தால் என்ன, எட்டி உதைத்தது உதைத்ததுதானே?பட்ட மிதி பட்டதுதானே,,,,?எட்ட நின்று சட்டென்று அடித்தால் என்ன,,,?அல்லது பக்கம் வந்து லேசாக கன்னம் வருடி செல்லமாய் தட்டிபோனால் என்ன, என இல்லா மல் மெல்ல வந்து கிள்ளிப் போ,,மெல்ல வந்து கிள்ளிப்போ,,,,, என்கிற மனப் பாட்டுடன்இரண்டுக்குமானவித்தியாசம்உணர்கிறதருணமாய்அதுஆகிப்போகி றதுதான்.
*
காட்டிச்சென்றமுகமும்கூட்டிச்சென்ற திசையும் காட்சிப்படுத்தியது வீட்டின் கொல்லைப்புறத்தையும் அது தாண்டி குறுக்கு வெட்டாய்சென்று வீடுகள் தாங் கிய தெருக்களையுமாய்/

குறுக்குவெட்டாய்ஓடியவெளிமுன்புஇருந்ததைப் போல் இப்பொழுது சீமைக் கருவேலை மரங்களைச்சுமந்து காட்சி தரவில்லை.

இந்தஏரியா உருவாகும் முன்பாக கம்பும், சோளமும் விளைந்த காடுகளாய் இருந்த வெளிகளில் ஒரு காட்டைத்தான் அப்படியே முழுமையாக விலை பேசி வாங்கிப்போட்டார் ஒச்சாண்டி,

25,அல்லது30குழிக்குள்ளாகஇருக்கலாம்,தொட்டியப்பனிடமிருந்துஅவர்வாங்கு கையில்விளைந்துநின்றகம்பங்கதிர்களைசுமந்துநின்றகாட்டைத்தான்வாங்கி னார்,வாங்கிபத்திரம்பதிந்தமறுநாளே காட்டைவாங்கிய ஒச்சாண்டி கூலிக்கு ஆட்களைப்கூட்டிப்போய் கம்பங்கதிரை அறுத்துக்கொண்டுபோய் தொட்டிய ப்பன் வீட்டில்போட்டுவிட்டுவந்தபிறகுதான் மற்ற வேலைகளைப்பார்த்தார்.

இது தொட்டியப்பனின் மூத்த சம்சாரத்திற்கு பிடிக்கவில்லை,இளைவள் சரி என்றாள்,மூத்தவளுக்கு தன் தம்பிக்கு விற்றிருக்கலாம் என்கிற ஆதங்கமே மனம் ஓங்கி நின்றது.

இளையவள்நாலையும்பகுத்துப்பார்பவள்.அவள்வந்தபிறகுதான்தொட்டியப்பன் கொஞ்சம்நிம்மதியாய்சாப்பிடுகிறார்,கைபிடித்தகணவனைநோய்க்குக்கொடுத்து விட்டுஇரண்டுபிள்ளைகளோடுபுயலில்சிக்கியமரமாய்அவள்அல்லாடிக்கொ ண்டு நின்றபோது ஆதரவுக் கரம் நீட்டியவராய் தொட்டியப்பன் இருந்தார்.

இவரதுபக்கத்துதெருவில்தான்அவளதுவீடுஇருந்தது.இவருக்குத்தான்முதலில் அவளைபேசிமுடிப்பதாக இருந்தது.அவரது வீட்டில் எல்லோருக்கும் பிடித்த போதுஅவரதுஅம்மாவுக்குமட்டும்அவளைபிடிக்கவில்லை.பிடிக்கவில்லை எனஇல்லை.அவள்வீட்டிற்குவந்தால்உன்னால் தீனிவாங்கி போடமுடியாது என்கிற காரணத்தைச்சொல்லி தட்டி விட்டு விட்டார்.வேறுவழியில்லாமல் இவர்பக்கத்துஊரில்பெண்பார்க்கவேண்டியதாகிப்போனது.திருமணமான மறு நாள்தான் சொன்னார் அவரது தாய்,இவளுக்கு அவளே பரவாயில்ல போலி ருக்கு என.

அந்த பரவாயில்லைகளே பல சமயங்களில் அவள் மேல் இவருக்கு ஈர்ப்பு ஏற்படச்செய்திருக்கிறது.

ஊரில்கூடஅரசல்புரசலாய்சொல்வார்கள்.எதுக்குஇது பேசாம இவுக ரெண்டு பேரும் சேந்து வாழ்ந்துட்டு போக வேண்டியதுதான,இப்பிடி கண்ணாலேயே பாத்துக்கிட்டு ஏக்கமெடுத்துப்போயி திரிஞ்சா எப்பிடி,,,,,,,,,,,,,,?

ஊர்க்கார்களின்சொல் அவளது கணவன் இறந்த பிறகு பலித்தது,அவள் குடி இருக்கும் வீட்டிலேயே அவளைவாரத்திற்கு ஒரு தடவை போய் பார்த்து விட்டுவந்தார்.அதுபொறுக்காது மூத்த சம்சாரத்திற்கு, தொட்டியப்பன் அங்கு போய் வந்த மறு நாள் ஆட்டமாய் ஆடி விடுவாள் காவடி தூக்காமல்/

என்னசமாதானம்சொன்னபோதும்கேட்கமாட்டாள்,இப்படியே வளர்ந்து நின்ற பிரச்சனைஒருநேரத்தில் அவர் போய் அங்கேயே நிரந்தரமாக இருந்து விட முடிவெடுத்தபோதுமட்டுப்பட்டபிரச்சனைஇதுநாள்வரைஅப்படியேதான்ஓடிக் கொண்டிருக்கிறது

அந்தஓட்டத்திற்குசொந்தக்காரரிடமிருந்துவாங்கியநிலத்தில்மிகச்சரியாகஒரு வருடம் வளர்ந்த சீமைக்கருவேலை மரங்களை பதிவாக கொடுக்கும் மரக் கடைக்காரருக்குகாண்ட்ராக்ட்பேசிவிட்டுவிட்டுஒதுங்கிக்கொள்வார்

தொடர்ச்சியாகஐந்தோஆறுவருடங்கள்அப்படிச்செய்தவர்சும்மாக்கெடக்குற நெலம்தானேஅப்படிச்செய்தால்கசக்கிறதாஎன்னஎனச்சொல்லாமல்தொடர்ந்து சீமைக்கருவேலைமரங்களைவளரவிடாமல்அதன்மூலமாய்பலனும்எடுக்காமல் ஜே சீ பி மிசின் வைத்து தோண்டி எடுத்துவிட்டார் தூரோடு/

விசாரித்தபோதுதான்தெரிந்தது,அவரதுமூத்த மகள் சொன்னதால் மட்டுமே நிறுத்திவிட்டார்முள்மரங்கள்வளர்ப்பதைஎனச்சொன்னார்கள்தகவல் அறிந்த வட்டாரங்களில்உலவியவர்கள்.அதுதான்உண்மைஎனவும் தெரிந்தது. கொஞ்ச நாட்களில்/

கட்டற்ற வெளியில் துண்மனம் கொண்டு வருகிற பெருவெளி சுமந்த தீயைப் போல்எங்கும் வியாபித்திருந்த காற்று இவனதும்,இவனது மகனதுமான உடல் தொட்டுஇவர்கள்சென்றுகொண்டிருந்தஇருசக்கரவாகனத்தை ஓட்ட விடாமல் திணறச் செய்து விடுகிறதுதான் சற்றே/

சீராக ஒரே வேகம் காட்டி செல்ல முடியவில்லை.வண்டியை சாலையின் ஓரம்கட்டிவிலக்கி விடுகிறது அல்லது கொஞ்சம் ஜாக்கிரதை காட்டி ஓட்டு என்கிறது.

முந்தாநாள் பார்க்கும் போது முன் சக்கரத்தில் கொஞ்சம் காற்று கம்மியாக இருந்தது.பின்சக்கரம் கொஞ்சம் அமுங்கித் தெரிந்தது. அன்றைக்கே சக்கரத் தில்காற்று அடித்திருக்க வேண்டும்.இன்று வரை விட்டது இப்பொ ழுது வண்டியைசீராகஓட்டமுடியாததில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. வண்டி யைசர்வீஸீற்குவிடவேண்டும் என்றால்நேரம் வாய்க்கமாட்டேன்என்கிறது.

அலுவலகம்செல்கிறவழியில்தான்வொர்க்ஷாப்இருக்கிறது.காலையில்அலுவ லகம்செல்லும்போது வண்டியை அங்கே விட்டு விட்டு போய்விட்டு சாயங் காலம்வந்துஎடுத்துக்கொள்ளலாம் என நினைப்பதுதான், நடை முறையில் அதுசாத்தியமாகமாட்டேன்என்கிறது.சைக்கிளிங்க்,வாக்கிங் எக்ஸர்ஸைஸ் இன்னும்.இன்னுமாய் யோகா,,,என பண்ண நினைப்பதுண்டு தான் தினசரி களின் காலை மாலை வேளைகளில்.

ஒன்றுமிகுந்துபோனசோம்பேறித்தனம்ஆகிப்போகிறது அல்லது முதல் நாள் இரவு விழிப்பு மறு நாள் காலை எழுதலை தாமதமாக்கி விட்டுச்சென்று விடு கிறது.

ராகவன்டாக்டர்கூடசொல்வார்,ஏதாவதுஉடல்தொந்தரவுஎனப்போகும் போது. தூக்கம்இல்லைன்னாஎல்லாத்தொந்தரவும்வரும்இலவசமாமொதல்லநல்லா தூங்குங்க,நிம்மதியாஇருங்கஎல்லாம்சரியாகிப்போகும்என்பார்.அது உண்மை தான்போலிருக்கிறது.ஏதோஒருபேப்பரில்படித்தஞாபகம் இருக்கிறது. முதல் நாள் தூக்கம் கெட்டால் உடல் நடுக்கம்,மந்த நிலை,படபடப்பு இன்னும் இன்னு மானஎல்லாம்வரும் எனப் போட்டிருந்தார்கள்.அதுதான் இப்பொழுது இவனது நிலையாயும்/

முதலில் பழைய படிக்குமாய் சைக்கிள்ஓட்டுவதை பழக்கத்திற்குகொண்டு வர வேண்டும்.தினமும் பத்துக்கிலோ மீட்டாராவது சைக்கிள்மிதிக்க வேண் டும்.

முதலிலெல்லாம்செய்தவன்தானேஅப்படி,இப்பொழுதுஉடல்கனமாகிப்போனது, பேன்காற்றுட்யூப்லைட்வெளிச்சம், ஏசிசுகந்தம் எக்ஸெட்ரா,எக்ஸெட்ரா என பழகிப்போன உடல் கனம் கொண்டு விட்டது.உடல்வருத்திச் செய்யும் வேலை கள்கொஞ்சம்கஷ்டமாகித்தெரிகிறது. எங்கு போனாலும் இரு சக்கர வாகனம், நடைகூடஇல்லை உடலைவிட்டகன்ற ஓர்அம்சமாய்ஆகிப்போனது,

வேலைக்குச்சேர்ந்து இருபத்தி ஐந்து வருடங்கள் சைக்கிள் தவிர்த்து வேறு வாகனம்ஏதும்கிடையாது.இவனுக்கு/ஒன்றுசைக்கிள் அல்லது நடை, எப்பொ ழுதாவதுபஸ்,எனஇருந்த காலங்களில் சளைக்காமல் சைக்கிள் மிதித்திருக் கிறான்,ஒரு முறை இங்கிருந்து வடமலைக்குறிச்சிக்கு போய்விட்டு இரவு பத்துமணிக்கு மேல் பசியோடு வந்து கொண்டிருந்த பொழுது கனமான போலீஸ்காரர் லிப்ட் கேட்க உடன் வந்தவர்கள் அனைவரும் மறுத்து விட இவன் அந்த போலீஸ்க்காரரை ஏற்றிக்கொண்டான்,பத்துக்கிலோ மீட்டர் சைக் கிள் மிதியும் வயிற்றில் கிள்ளும் பசியுமாய்,,,,,,/

இன்னொரு முறை ஆறு ஏழு தடவைக்கு மேல் வயிற்றுப்போக்கு போய் விட்ட அன்று மாலை பஜாருக்கு சைக்கிள் போகும் போது பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபாண்டுரொம்ப நேரமாய் பஸ் வரவில்லை என லிப்ட்க் கேட்டு ஏறிக்கொண்டான்,வெறும் வயிற்றுடன் அவனையும் வைத் துக் கொண்டு இரண்டும்,இரண்டும்நான்கு கிலோ மீட்டர்கள் சைக்கிள் ஓட்டியது ரொம்பவும் தான் களைப்பாக இருந்தது

அன்றுஅதுஒருவயதுதெரியவில்லை.இப்பொழுதுபடுகிறஆசையின்அளவிற்குக் கூடசைக்கிளைமிதிக்கமுடியவில்லை.

அப்பொழுதெல்லாம் வேலைக்குப்போய்விட்டால்இரு சக்கர வாகனம், ஒரு டேப்ரிக்கார்டர்என்பதுகௌரவஅடையாளமாகிப்போனது,அந்தநேரத்தில்
இவனை கேட்காத ஆட்கள் கம்மி எனலாம்.வண்டி வாங்கலையா என/

அப்படியானபொழுதுகளில்இவனுக்கும்இருசக்கரவாகனம்வாங்கிவிட ஆசை தான்.ஆனால்இவன் பார்க்கிற கடை நிலை ஊழியஉத்தியோகசம்பளத்திற்கு ம் வீட்டின் நிலைக்குமாய் அது ஒத்து வரவில்லை,ஆசையை தூரக் காற்றில் விட்டு விட்டான்,

சொக்கலிங்கம்சார்ஒரு முறை தலைமை அலுவலகத்தில் நின்று கொண்டி ருந்த வண்டியை எடுத்து வரச்சொல்லி சாவியைக்கொடுத்து அனுப்பிய போது இவன்வண்டியை எடுத்துக்கொண்டுஉருட்டிக் கொண்டேவந்தான், அவர் கூடக் கேட்டார்,ஏன் ஓட்டிக் கொண்டு வர வேண்டியதுதானே என,,,/ இவன் பதிலுக்கு சமாளிப்பாய் ஒரு சிரிப்புமட்டும் சிரித்து விட்டு வந்து விட்டான், உண்மையில் இவனுக்கு அப்பொழுது வண்டி ஓட்டத் தெரியாது. அது நடந்துஐந்து வருட ங்கள் கழித்து இரண்டாவதுகையாகஒருஇருசக்கரவாகனம் வாங்கினான். அடுத்தடுத்துப்பெரிய வண்டி,ஸ்கூட்டர்,எம் 80 என பாய்ச்சல் வேகத்தில் வண்டியை வாங்கி வாங்கி சிறிது நாள் ஓட்ட பின் விற்க என இருந்து இப்பொ ழுதுதவணைக்குவாங்கியஇருசக்கரவாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறான்

இன்னும்பத்துத்தவணைக்குமேல்பாக்கிஇருக்கிறது.இவனுக்குக் கூட ஆசை. கையிலிருந்துபோட்டுமுடித்துவிடலாம்என.நெருக்கிபோய்முடித்து விடலாம் என நினைக்கும் போது கொஞ்சம் கைபிடிக்கிறது,சரிஎனபல்லைக்கடித்துக் கொண்டும்பொறுத்துமாய்போகவேண்டியிருக்கிறது.

ஜாக்கிரதைகாட்டிஓட்டச்சொல்லும் அந்த வண்டிதான் இப்பொழுது இவனது கைவாகனமாக/ 

அதற்கென்ன,,,,எத்தனைபேர்போய்க்கொண்டும்வந்துகொண்டும்தான்இருக்கிறா ர்கள், நீண்ட நாற்கரச்சாலையில்,,,,,

இவனும் மகனுமாய் விடுமுறை தினமான இன்று காலை மதுரை வரை போய் வந்துவிடலாம் என்கிறதான நினைப்பில் இருந்தான்.அந்த நினைப்பை செயலா க்கி கேட்ட சிலரிடம் கூட சொல்லி வைத்திருந்தான்.அந்தசொல்லேசெயலாய் மாறும் போது விளைவு வேறொன்றாய் ஆகித்தெரிகிறது. மறுநாள்காலை கிளம்ப வேண்டும் மதுரைக்கு நினைத்து நின்ற போதும் சரி,நான் இல்லை அவன்தான் அது என்கிற மனோநிலையுடன் இருந்தபோதும் சரி, ஞாயிற்றுக் கிழமையின்விடுப்பைவிட்டுக்கொடுக்கமனம்முழுவதுமாய்ஒப்புக்கொள்ளவில் லை, இதற்காகவா இப்படிச்சொன்னோம் ,நேற்றுநண்பர்களிடம்/

அடப் பாவித்தனமே,இப்பொழுது ரெண்டுங்கெட்டானாக அல்லவா ஆகிப்போ னது, நெருங்கிய நண்பரது உறவினர் வீட்டுக்கல்யாணத்திற்கு போய் வரலாம். வா குற்றாலம் வரை எனக் கூப்பிட்டவரிடம் இல்லை இன்று மதுரையில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது,போகவேண்டும் எனச்சொல்லி விட்டு இப்பொழுது இதற்கும்போக முடியாதமுட்டாள்த்தனமாய்,,,,,முதலில் செருப்பைக் கொண்டு நாலுபோடவேண்டும்இப்படியாய்யோசித்துவைத்திருந்த மனதை/ என நினைத் துக் கொண்டிருந்தவனுள் மனம்தோனியயோசனையாய் அப்படியே வண்டி யை எடுத்துக்கொண்டு சாத்தூர் வரை போய் விட்டு வந்து விடலாம் என்கிற நினைப்பு மனம்குடிகொண்டதாகிப்போகிறது,

நல்ல யோசனைதான் பொதுவாகவேமனைவிமகன்களிடம்சொல்வதுண்டு இவன்.போரடித்தால் அல்லது சற்றே வெறுமை கூடிப்போனால் மனம் விட்டே த்திகொண்டுவிட்டால்வாருங்கள்அப்படியேபோவோம் பஸ்ஸேறிக் கூட பக்க த்து ஊர் வரை,அங்கிருக்கிற ஏதாவது கடையில் சின்னதாய் ஒரு டீ சாப்பி ட்டுவிட்டு வருவோம்.ரிலாக்ஸாகிப்போகும் மனது என்பான்.

உண்மை தான் அது.சாப்பிடுவதும் போவதும் மட்டுமல்ல விஷயம்.வேற்று இடம்,வேற்றுமனிதர்கள்வேற்றுக்காற்றுவேறானதொரு புதுப்பழக்கம் என்பது தான் அங்கு பதிவாகிப்போன விஷயமாகிப்போகிறதாய்/

இப்படித்தான்கிராமத்தில்இருக்கிற அலுவலகக்கிளையில் பணி புரிந்து கொண் டிருந்த நாட்களில் அலுவலக பணிச்சுமை காரணமாகவும் அதில் ஏற்படுகிற மனப்பிணக்குகளிலுமாய்மனம்மையம்கொண்டுசுழல்கிறவேளைவிட்டேத்தி
யாகிப்போன மனதை தேற்ற அலுவலகம் விட்டு வருகிற வேளை பஸ்சை விட்டுஇறங்கியதும் ஏதாவது ஒரு கடையில் புகுந்து விடுவான், பெரிய கடைக ளெல்லாம் கிடையாது, ரோட்டோரக்கடைகளில்தான் இவனது தஞ்சம் இருந் திருக்கிறது பெரும்பாலுமாய்,

அப்படியான வேலைகளில் நினைத்துக்கொள்வதுண்டு.இது போலாய் மனம் கோணலாகிப்போகிறபோதுபழக்கம்உள்ளவர்கள்ஒயின்ஷாப்ப்பக்கம் போய் விடுகிறார்கள்.இவனைப்போலானவர்கள்டீக்கடைகளிலும்டிபன் செண்டர்களி லு மாய்,,,,,,/

சாப்பிட்டடிபனும்ஆற்றிக்கொடுத்தடீயும்சிறிதளவுஆசுவாசம்கொள்ள வைத்து ரீ சார்ஜ் பண்ண வைத்து ஓட வைத்து விடுகிறதாய்/

மகனிடம்சொன்னபோது சரி என்றான், வாருங்கள் அப்படியே செல்வோம் கை கோர்த்துக் கொண்டும் மனம் இணைந்துமாய் எனச்சொன்னவன் உடனே இரு சக்கர வாகனத்தின்சாவியைவாங்கிக்கொண்டுவண்டியைக்கிளப்பிவிட்டான். 
அவனுக்குஒருஆசைமனதினுள்ளாக.இவன்வயதுபையன்களைப்போல்பெரிய வண்டிஓட்டவேண்டும்,என/

இந்தகம்பெனி வண்டி வாங்குனா ஹேண்டிலிங்குக்கு ஈஸியா இருக்கும்பா என்பான்.வருவதும்,போவதும்,இடுப்பொடித்துசாகசம்காட்டுவதுமான வித்தை கண்ணாமூச்சி அவனுக்குப்பிடித்துப்போனது போலும்.ஏறிக்கொண்டு போகிற வயதும் கூடிகொண்டு போகிற படிப்பும் இதையும் கற்றுத்தருகிறது போலும்.

மீசை அரும்புகிற வயதில் ஆசை அரும்பி விடுகிறதுதான். அவன் பத்தாம் வகுப்பு படிக்கிற சமயம் ஒரு நாளில் பள்ளீக்கு லீவு போட்டுவிட்டு உடன் படிக்கிறவனுடன்பொருட்காட்சிக்குப்போய்விட்டான்.அதற்குமறுநாளாய் அவன் பள்ளிக்குப்போன போது பள்ளியே இரண்டு படும் படியாய் அதகளப் படுத்தி விட்டாள் அவளது வகுப்பு ஆசிரியை/அப்புறமாய் இவன் மறு நாள் போய் சொன்னபிறகுதான்அமைதியானாள்.இயல்பிலேயே நல்ல பையன்தான் அவன். இது போலாய்ஏமாற்றவேண்டும்என்பது கூடத்தெரியாதுஅவனுக்கு/ கொஞ்சம் தட்டிக்கொடுத்தலும் ஊக்கப்படுத்துதலும் இருந்தால் குஷியாகிப் போவான் எனச்சொன்னபிறகுதான் சமாதானமானாள் ஆசிரியை/

ரோட்டில்அவனுடன்போகும்போது அது தெளிவு பட்டுத் தெரியும்,இவன் வயது பையன்கள் சிலர் சாலையில் பெரிய வண்டி ஓட்டிச்செல்கிற சமயம் விரிவு கொண்டஅவனதுவிழிகளில்பட்டுத்தெரிக்கிற ஏக்கம்இவனை வெகுவாகவே பாதித்ததுண்டு.சமயங்களின்சில வேளைகளில் அவனறியாமல் வார்த்தைகள் வந்து விடுவதுண்டு.பெரிய வண்டி ஒண்ணுவாங்கிப்போட்டா நல்லாத்தான் இருக்கும் என/

இது போலாய் மனதில் குடிகொண்ட எண்ணங்கள் ஏக்கங்களாய்,ஏக்கங்கள் எண்ணங்களாய்மனம்நிறைந்து குடிகொள்கிறபோதும்,எண்ணங்கள் ஏமாற்றம் கொள்கிற போதும், வேதாந்தியாய் மனம் திரிகிற போதும் நன்றாக இல்லை தான்.அப்படியான நன்றாக இல்லையை சரிக்கட்டவே இப்போது சாத்தூர் வரை போய் வரலாம் எனகிளம்புகிறான்.ஆத்திர அவசரத்திற்கு என முத்திரை குத்தி வைக்கப் பட்டிருந்தவண்டிவிசை பெற்று போய்க்கொண்டிருந்த சாலை நால்வழிச் சாலையாய்காட்சிப்பட்டும்,படம்பிடித்துக்காண்பிக்கப்பட்டுமாய்/

இப்படியாய் இருசக்கர வாகனத்தில் எல்லையில்லா காற்றை எதிர் கொண்டு பயணிப்பதும் குதூகலிக்கும்எண்ணங்களின் குவியல்களை மனம் வியாபிக்க விட்டுக்கொண்டு அலைவதும் நன்றாகவே இருந்திருக்கிறது இது நாள்வரை, என்றான்மகன்/

இருசக்கரவாகனத்தில்ஏஆர் நகர் வரை சென்றார்கள். அங்கு ஒருகடையில் டீசாப்பிட்டுவிட்டுதிரும்பிவிட்டார்கள்,டீநன்றாகஇல்லை.

ராமரின்குழந்தையைப்பார்க்கப்போனபோதுஇந்தக்கடையில்தான்டீசாப்பிட்டான், ஆறு மாதத்திற்கு முன்பாய்நடந்த கொடுமை சாப்பிட்ட டீயின் ருசியாய் இன்னும் மனம் ஒட்டிக் கொண்டிருந்ததாகவே பட்டது இப்பொழுது கடையில் டீ சாப்பிடும் போது.

ராமரின் மாமனார் வீடுஅங்குதான்இருந்தது,சொல்லியிருக்கிறான் ஏற்கனவே மாமனார்பற்றியும்மாமனாரின்வீட்டார்களைப்பற்றியுமாய்.தலைமுறைதலை முறையாய் ஒன்றுக்குள் ஒன்றாய்இருந்த சம்பந்தம்தாண்டிமுதன்முறையாய் அந்நியத்தில் சம்பந்தம் செய்திருந்தான்.ராமரின் அம்மாவுக்குக்கூட இதில் ஒரு சின்ன வருத்தம் இருந்தது,எனது தம்பி பெண்,,,,என ஆரம்பித்து ஒரு பாட்டம் பாடித்தீர்ப்பாள்.அந்தப்பாட்டையெல்லாம் காற்றோடு காற்றாய் போகும் படி செய்து விட்டான் ராமர்.கட்டுனா அந்நியத்துலதான்,இல்லைன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்ற அவனது பிடிவாதம் ஏ ஆர் நகரில் அவனை சம்பந்தம் செய்ய வைத்தது.

தாய் வீட்டில் பாதி நாள் என்றால் மாமனார் வீட்டில்மீதி நாள்எனஇருந்தவன் திடீரென ஒரு நாள் அதிகாலை நான் அப்பா ஆயிட்டேன் என அறிவித்து விட்டான் எல்லோருக்கும் கேட்டும் படி,அது இவனுக்கும் கேட்டுவிட்டது.

இவனுக்கு குழந்தை பிறந்த நேரம் கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் உடல் நலமில்லாமல் சேர்க்கப்பட்டிருந்த ராமரின் அம்மா இறந்து போகிறாள்.அம்மா இறந்தது அவசர வார்டின் அருகில் இருக்கிற பொது வார்டில்,குழந்தை பிறந் தது பிரசவ வார்டில்/ என்ன செய்வான் பாவம்,பெற்ற தாய் இறந்ததற்கு வருத்தப் படுவானா இல்லை மனம் பூரிக்க வைத்த குழந்தை பிறப்பிற்காய் சந்தோஷம் கொள்வானா?அம்மாவின் காரியம் முடிந்து வந்துதான் குழந்தை யைதூக்கிகொஞ்சுகிறவனாகிப்போகிறான்.அன்றிலிருந்துஇன்றுவரை தூக்கிக் கொஞ்சிய குழந்தையைகீழேவிடமனமில்லாமல் தூக்கிக்கொண்டு திரிகிற வனாகிப்போகிறான்.

இவன் போனதும் ஒரு பாலீதீன் பை நிறைய பிஸ்கட் இதர வகையறாக்கள் மற்றும்கூல்ட்ரிங்க்ஸ்எனவாங்கி வந்து விட்டான். கைநிறைய அள்ளி தின்னக் கொடுத்தால் எப்படி,,,?வட்டமான பேப்பர் தட்டில் கொஞ்சம் மிக்சர், இரண்டு மூன்றுபிஸ்கட்கள்,கூடவேஒருடம்ளரில்நிறையகூல்ட்ரிங்க்ஸ்எனக்கொண்டு வந்துகொடுத்தான் ராமர்.

வீட்டிலிருந்துஅப்பொழுதான்சாப்பிட்டுவிட்டுப்போனதுவயிறுஇன்னும்திம்மெ ன்றே இருந்தது.ராமரின் மாமியார், மச்சினர்கள் இரண்டு பேர்,ராமர் மற்றும் ராமரின் மனைவி கைக் குழந்தையுடன்/இவர்கள் மத்தியில் மிக்சர் அள்ளி சாப்பிடுவது ரொம்பவும் சங்கடமாகவே இருந்தது.இவனுக்கு.கொஞ்சம் மன நெளிசலுடன் மிக்சரை கொஞ்சமாய் அள்ளிச்சாப்பிட்டு விட்டு கூல்ட்ரிங்ஸை ஒரே மடக்கில் குடித்து விட்டு குழந்தையின் கையில் இருநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டுவந்தான்,

ஆண் குழந்தைநல்லவிரைப்பாக இருந்தது.வரும்போதுராமரின்மாமியாரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தான்.பையன் நல்லா இருக்கான், நல்லா வளங்க என/

ராமரின்மனைவிபார்ப்பதற்குபாந்தமாய்இருந்தாள்சுடிதாரில்பூத்திருந்தசின்னப் பூச்செடிபோல/இவனுக்குமகள்இருந்திருந்தால்இந்நேரம்இப்பெண்ணின்வயது தான் இருக்கும்.ஒரு வேளை கல்யாணம் செய்து கொடுத்து பேரன் பேத்தி எடுத்திருக்கலாம்.

பெண்பிள்ளைஇல்லாதஏக்கம்பார்க்கிறபிள்ளைகளைஎல்லாம்மகளாய்நினைத்துப் பாவிக்கச் சொல்கிறது,சமயத்தில் அது சம்பந்தமான நினைவு கண்ணீரைக் கூடவரவழைத்துவிடுவதுண்டு.

தனியாளாகஎங்கும்விசேசங்களுக்குப்போனானால்இன்னும்கூட்டத்தில்இணையத் தெரியவில்லை,,மீ,,,,மீஎனஏதாவதுபேசிவிட்டுவந்துவிடுகிறதனம் இருக்கிறது, கேட்டால் மனக் கூச்சம்என்கிறான், என்ன ஆளு நீங்க, ஊரெல்லாம் சுத்தி ஏங்பேரு,,,,,,,,,,,ங்குறகதையாஎங்கபோனாலும்நண்பர்களோடயும்,தோழர்களோட யும் நெசவு நூத்துக்குற ஆளு இப்பிடி கூச்சத்த மடியில கட்டிக்கிட்டே திரிஞ்சா எப்பிடி,,, ஊருல்ல இல்லாத பேச்செல்லாம் ஏங்கிட்டமட்டும்தான் போலயி ருக்குஎன்பாள்மனைவிஅடிக்கடி,ஏஆர் நகர்கடையில் சாப்பிட்ட டீமகனு க்கு ஒத்துக்கொள்ளவில்லை போலும் வீட்டுக்குவந்ததும்வாந்தி எடுத்து விட் டான்.”என்ன மனுசன் நீங்க, எங்க போனாலும் இந்த டீய விட மாட்டீங்க போலயிருக்கு, ஆசையா மகன வெளியில் கூட்டிக்கிட்டு போயிருக்கீங்க ,வேற ஏதாவது வாங்கிக் குடுக்குறத விட்டுட்டு இப்பிடி டீய வாங்கிக்குடுத்து கூட்டி வந்துருக்கீங்களே, இந்த கொடுமைய எங்கயாவது கண்டமா”,,,,?எனடீ டம்ளரை நீட்டியவாறே சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.

“வேற ஒண்ணுமில்லை நாங்க போகும் போது நல்ல காத்து ஒத்துக்கல போல யிருக்கு.அதான் இப்பிடி ஆகிப்போச்சு என்கிறசொல்லுடன் அன்று நிகழ்ந்த பேச்சு இப்பொழுது ஞாபகம் வருகிறதாக/

மஞ்சள்க்கலரில்இருந்தபிளாஸ்டிக்கதவுஅது.சுற்றிநான்குபக்கமுமாய்அறையப் பட்டிருந்த மரப்பிரேம்கள் நான்கிலும் பிடிமானம் பிடித்துச்சென்ற குறுக்குச் சட்டங்களும் கதவின் நிலை ஓரப் பிடிமானக்கீழ்கள் இரண்டுமாய் சேர்த்து அதை லேசான பாத்ரூம் கதவு என அறிமுகப்படுத்தியது.

சமையலறையிலிருந்து தெற்கு நோக்கியதாய் வாசல் வைத்திருந்த பாத்ரூம் பார்ப்பதற்க்கும் புழக்கத்திற்கும் சற்று சிறியதாகவே இருந்தது.போதும் இது போதும் சதுர அடி வீட்டில் பாத்ரூம் எந்தப்பக்கம்.அதற்கு இடம் எவ்வளவு என யோசிக்கும் போது வராண்டா,ஹால் சமையலறை ஒரு ரூம் என எல்லா வற்றிற்கும்போக பாத்ரூமிற்கெனஒதுக்கிக்கட்டப்பட்டிருந்ததக்ணூண்டு இடத் தில் தக்ணூண்டு ரூமாய்அமைந்துபோனதும்கையடக்கத்துடனேயே/

சமையலறையின் தளத்திலிருந்து ஒரு அடிக்கும் கீழாய் தளம் இறக்கி கட்டப் பட்டிருந்தது பாத்ரூம்.பெரிசா ஒண்ணும் யோசிக்க வேணாம் சார்.சிமிண்ட் பூசி பால் ஆத்திவிட்டு கோடு அடிச்சி விட்டமுன்னா சரியாப் போகும் .டைல்ஸ், கியில்ஸுன்னுயோசிச்சிங்கின்னாசெலவுஇழுத்துரும்பாத்துக்கங்க,,,, என்றார். வீடுகட்டிக்கொடுத்தகொத்தனார்.அவர்சொல்லிஇருந்தவாஸ்தவம்பளிச்சிட்டுத் தெரிய சரி என ஒத்துக்கொள்கிறான் மன முரண்டு பண்ணாமல்/

காரணம்அவரது பேச்சிலும் நடப்பிலுமாய் இருந்த யதார்த்தம்.அந்தயதார்த்தம் தாங்கி பாத்ரூமின் பின் வாசலைத்திறந்தால் கொல்லைப்புறத்தில் இன்னும் ஒரு அடிப்பள்ளமாய் இறங்குகிற தளம்.

வீடு கட்டவேண்டும் என முடிவெடுத்த போதே இவனாகத்தான் வீட்டிற்கு வரைபடம்போட்டான்.பெயருக்குஇஞ்ஜினியரிடம்ப்ளூபிரிண்டவாங்கவேண்டும் என்கிறகட்டாயத்திற்காய் வாங்கிக் கொண்டுவந்தான்.மற்றபடி இவனுக்குள் ளாய் குடிகொண்டிருந்த ஆசையே பெரு வடிவமாய் எடுத்து வீட்டின் பிளான் மற்றும் இதர விஷயங்களில் கறார் காட்டி நின்றான்,காண்ட்ராக்டர் கூடச் சொன்னார்,இல்லை சார்.சிலவிஷயங்கள் சில மாதிரி செய்தால்தான் நன்றாக இருக்கும் என/இவன் ஒரேயடியாய் மறுத்துவிட்டான்.இல்லை சார் இது என் வீடு,என் கனவு,என் லட்சியம் அது எப்படிஇருக்க வேண்டியதெனதீர்மானிப்பது நானாகத்தான் இருக்க வேண்டும். என/

டைல்ஸ்பார்க்கஇவனும்மனைவியும்பிள்ளைகளுமாகப்போனார்கள்,மூத்தவன் படிக்க வேண்டியதிருக்கிறது என வீட்டில் இருந்து விட்டான். சின்னவனுக்கு இவனும் மனைவியுமாக பார்க்கும் டைல்ஸ்கள் பிடிக்கவில்லை. கடைசியாக விலைக்குறைச்சலாகஇருந்தாலும்மகன்கைகாட்டியடைல்ஸ்கள் மனதுக்குப் பிடித்ததாய்இருந்தது.சொல்லிவைத்துவிட்டுவந்தான்கடைக்காரரிடம்,நாளைப்
பின்னாய் வந்து எடுத்துக்கொள்கிறோம் என/ஆனால் நினைத்தது எல்லாமா முடிந்துவிடுகிறது,கையில்காசுஇல்லைஎனடைல்ஸ்வேண்டாம்எனமுடிவெடுத் து விட்டார்கள். இருக்கிறகாசில் டைல்ஸ் வாங்கி விட்டால் அப்புறம் சிமிண்ட் மூடைதூக்க காசு காணாமல் போய் விடும்,தவிர சனிக்கிழமை வேறு, வேலை பார்த்தவர்களுக்குசம்பளம்தரவேண்டும்.சிமிண்ட்மூடைக்குக்கூடசொல்லிக்

கொள்ளலாம்.வேலைபார்த்தவர்களுக்குசம்பளம்.பாவம்அவர்களைக்காக்க வைத்து விட்டு அப்படியெல்லாம் வீட்டை அலங்கரிக்க வேண்டாம் தான்

கொல்லைப் புறத்தில் பன்னீர் மரங்கள் இரண்டும், வேப்ப மரங்கள் இரண்டும் கொன்றைப்பூ மரம் ஒன்றுமாய் நின்றது.தூத்துக்குடி ரோட்டில் இருந்த நர்சரி கார்டனில்வாங்கி வந்தகன்றுகள்தான்இன்று மரங்களாய் வளர்ந்து கொண்டும் ஆகுருதி காட்டிக்கொண்டுமாய்நிற்கிறது.அங்கில்லாதமரக்கன்றுகள் இல்லை எனலாம்.

இரண்டுஏக்கர்பரப்பளவில்இருந்தஇடத்தில்ஒருஓரமாய்குப்பையைக்கொட்டி
வைத்திருந்தார்கள்.இயற்கைமுறையில்மண்ணைக்கொட்டிகுப்பையைஅதனுள் ளாய்க்கலந்து மக்க வைத்து சுற்றிலுமாய் பாத்தி கட்டியது போல் குப்பை மேட் டின் மீதுகரைகட்டிதண்ணீர்ஊற்றி வைத்திருந்தார்கள். ஊற்றியிருந்த தண்ணீர் இஞ்சியிருந்தது.இந்தகுப்பைஒருமாதம்இப்படியேஇருக்கும்.அடுத்தமாதம்ஒரு குப்பை மேட்டை ரெடி பண்ணிவிடுவோம் என்றார், நர்சரி கார்ட னின் ஓனர்.

“இப்பஎன சார் ஒரு காலத்துல கெட்டி ஆண்டோம் சார் விவசாயத்த, பருத்தி, கடல, மொளகா, வத்தல், தொவரை, உளுந்துன்னு,,,,, நஞ்சையில கொஞ்சம், புஞ்சையிலகொஞ்சம்ன்னுநெறைஞ்சிகெடந்தநேரம்,வீட்டுலபுள்ளைகளுக்கும் பஞ்சமில்லாத நேரம்,ஒரு போகம் விவசாயம் எடுத்தா ஒரு பொபளப்புள்ளயக் கட்டிக்குடுக்கலாம்ங்குறதுகணக்கு.சமயத்துல ரெண்டு புள்ளைகளுக்கு நகை செஞ்சிரலாம்.எங்க தலைமுறைக்கு ரெண்டு தலைமுறை முந்தியெல்லாம் ஏதுகாசுக்குமதிப்பு,தேவையும் வ்வளவா இருந்ததில்லை,ஏதாவது வெளியூர்ப் போகணும்ன்னாபிரயாணத்துக்கும்,ஏதாவதுபண்டிகைன்னாபுதுத்துணிஎடுக்கவும் வீட்டுக்கு வெள்ளையடிக்க வுமா நல்லது பொல்லதுண்ணு வாங்கவும் காசு வேணும்,அரிசி பருப்பு அரசலவுல இருந்து சேவு மிச்சருன்னு ஏதாவது திண் பண்டம் வாங்குற வரைக்கும் பண்ட மாத்து மொறதான,மீறி ஏதாவது வேணு மின்னா இப்பிடி விளைச்சல்வர்ற நேரத்துல கணக்குப்பண்ணிக்கிற வேண்டி யதுதான்.அப்டி ன்னுஇருந்தநெலமைகொஞ்சம் மாறிபோயிஎதுக்கெடுத்தாலும் காசுபணம்ன்னு ஆகிபோன பெறகு எங்க தலமொற தலை எடுக்குது.

அப்பயும்விவசாயம்ஒண்ணும்அழிஞ்சிபோகல,சார்ரொம்பயெல்லாம்கெடையாதுஏதோசொல்லிக்கிறாப்புலக் கொஞ்சம் விவசாயநெலம் இருந்து ச்சி. அதுலபேர் பாதி நல்ல தண்ணி ஊத்து இருந்தகெண று இருந்த நெலம். இருந்தரெண்டுப்பொம்பளப் புள்ளங்களையும் அதுலவிவசாயபலன்எடுத்துத்தான்கல்யாணம்பண்ணிக்குடுத்தேன்.உள்ளூர்ல
ஒருபுள்ளையையும்,வெளி யூர்லஒருபுள்ளையையுமா/

உள்ளூர்லக்கட்டிக்கொடுத்தபுள்ளஇப்பஆறுமாத்தையிலவந்துநிக்குதுஏங்கிட்ட, மொதல்ல குடிமட்டும் ன்னு இருந்தவன் பின்ன கூத்தியாவையும் சேத்துக் கிட்டான். சொல்லிப்பாத்த ஏங்மகளோட சொல் அவன் காதுல ஏறல/ ஏறாத சொல்ல வச்சிக்கிட்டு என்ன செய்வா பாவம்,புருசனப்பிரிஞ்சி வர்றது பாவன் னு தெரிஞ்சும் கூட வந்துட்டா, என்ன செய்ய அவளும்தான் எத்தன நாள் புடுங்கத்தாங்குவா,,,,?வந்துட்டா ஒரு நா விடிகாலமா எந்திரிச்சி,

வெளியூர்ல பொறந்த வீடு இருந்தாலும் கொஞ்சம் யோசிக்கலாம். தோதா உள்ளூறாப்போச்சா,இன்னையோடஅவவந்துஒருவருசத்துக்குப்பக்கத்துல ஆகப் போகுது,அதோ அந்தா குப்பை மேட்டுக்கு பக்கத்துல நிக்குறா பாருங்க அவதான், அவ்வளவுநெலத்த வச்சிக்கிட்டு விவசாயம் பண்ணுணப்ப இருந்த தெளிவு இல்ல இப்ப, ,வயசும் ஆகிப்போச்சி நெலத்துல உழைச்ச பலன எடுக்க முடியல ,நஷ்டமாகத்தான் ஆகிபோச்சி.ஒரு வருசம் ஆறு மாசம்ன்னு நெலத்துல இருக்குற மண்ண அள்ளி தலையில போட்டுக் கிட்டு திரிஞ்சும் கூட உரிய பலன் கெடைக்கல. கடுமையான உழைப்பு, கடுமையான செலவு கடுமையான மன ஒளச்சல் இத்தனையும் இருந்து கூட நெலத்துல போட்டத எடுக்கமுன்ன உயிர் போயி உயிர் வருது. சரி ஆனது ஆகுது இனிம வச்சிட்டு செலவழிக்க முடியாது அதுன்னு போன வெலைக்கி வித்துட்டு இப்ப இந்த நர்சரி கார்டனப் பாத்துக்குறேன், அவ் வளவுதான்.ஏங்கூட இருக்குற ஏங் மக எப்பதிரும்பிப் போறான்னு தெரியல, ஏங் கண்ணு இருக்கமட்டும், பாத்துக் கிருவேன் அதுக்கப்பறம்,,, ,,,கடவுளே அவளுக்குஒருநல்லகாலம்வரணும்.

இந்தக்கொல்லையிலஆறுதலானஒரேஒருவிஷயம்.அவமாமியார்காரிஅவளப் பாக்க டெய்லி வந்துட்டுப் போயிற்ரா,இப்பக்கூட மத்தியானம் என்னமோ மொச்சைபயிருகொளம்புவச்சேன்னுகொண்டு வந்தா,ரெண்டும் சேத்து தின்னு புட்டு நல்லா திரியுதுக கெட மாடுக கணக்குட்டா,என்ன இப்படியே மருமக ளுக்கு சோறு தண்ணி கொண்டு வந்து குடுத்தா மட்டும் போதுமான்னு கேட்ட துக்கு இல்லண்ணே ஒரு நல்ல சங்கதி நடந்துக்கிட்டு இருக்கு,ஏங் மகன்இப்ப கூத்தியாவீட்டுபக்கமெல்லாம்போறதுமில்ல,குடியவும்கொறச்சிட்டான்,அவன் ஒண்ணும் அப்பிடி பறப்பெடுத்துப் போயி திரியிற வுனும் இல்ல, இதுல ஓங் மகளோட தப்பும் இருக்கு.நாள் முழுக்க இழுத்துப் போத்திக்கிட்டே திரிஞ்சா ஒருஆம்பளஎன்னாவான்,அதான்பாஞ்சிட்டான்,அங்கிட்டு,இப்பசீரழஞ்சிசெங்கச் சொமந்து வந்து நிக்கிறான்,

அத வுடுண்ணே,காலகாலத்துல ஒரு நல்ல விஷயம் நடக்குண்ணே, அதப் பாத்துட்டுதான் நம்ம ரெண்டு பேரும் கண்ணு மூடுவோம்ண்ணே,முடிஞ்சா அதுக ரெண்டும் ஒண்ணு சேந்தப்பறம் பேரன் பேத்திகள பாத்துட்டு சாவோம், இல்லஅதுகூட பாக்க வாய்க்கலைன்னாலும் சரிதான்னு போயிச் சேரவேண்டி யதுதான்னு சொல்லீட்டுப் போறா தெனம் தெனம் அவ வர்ற நாள் பூராம்/ நல் லது நடக்கட்டும்ன்னு காத்திருக்கேன்,நடக்கும் நல்லது அதுக்கான சமிக்சை தெரியுது சார் என அவர் அன்று பைநிறைய அள்ளிக்கொடுத்தமரக்கன்றுகளை இவன் கொல்லையில் நட்டது போக மிச்சத்தை அக்கம் பக்கத்தவர்களிடம் கொடுத்தான்.அதெல்லாம் இப்போது எப்படி வளர்ந்து நிற்கிறதெனத் தெரிய வில்லை.

அடிபம்புநின்றஈசானமூலையில்மோட்டார்போட்டதற்கானகுழாய்கள்குழிக்குள் இறக்கப்பட்டுமூடப்பட்டிருந்தது.நேற்றுவரைஒற்றையாய் அரை ஆள்உயரத் திற்கு நின்றிருந்த அடிகுழாய் கழட்டி எடுக்கப்பட்டு தரையோடு தரையாய் மூன்று குழாய்களை இறக்கியிருந்தார்கள் போர்க் குழிக்குள்.

பிளம்பர் நாகராஜனின் தந்தை மணிதான் அடிகுழாயை மாட்டிக் கொடு த்தார்.அவரிடம்அடிகுழாய்போடுவதற்காய்போய்பேசியபோதுஅவரதுவீட்டிற்கு கூட்டிப்போய் வீட்டின் பின்புறம் போட்டு வைத்திருந்த அடிகுழாய் ஒன்றை காட்டினார்.புதிதாய்வாங்குகிறஅடி குழாயில் பாதி விலையைத்தான் சொன் னார்.

இவனும்இப்படியானதைத்தான்தேடிக்கொண்டிருந்தான்.இதுபோல்இரண்டாவது கை மாற்றி வாங்க வேண்டும் என்கிற நினைப்பில் பஜார், பிளம்பர்கள்,அடி குழாய் ரிப்பேர் செய்பவர்கள்,அனைவரிடமும் கேட்டு அலைந்த போதுதான் மணியண்ணன் கிடைத்தார்.படித்துறை இறக்கத்தில் இருக்கிற ஒரு அடிபம்பு ரிப்பேர்செய்கிற பிளம்பரிடம் அடி குழாய் செட்டாக இருக்கிறது என கேள்விப் பட்டுபார்க்கப்போனபோதுஇவன்மணியண்ணனைப்பற்றிகேள்விப்பட்டதையும் சொல்லிவிட்டான்தெரியாத்தனமாக/சொன்ன பின்தான் தெரிந்தது ஏன்இப்படிச் சொன்னோம்என/இவன்த்தேடிப்போனவர்சொன்னார்மணியண்ணனைநம்பாதீர்
கள்,  அவரிடம் இருக்கிற பொருள் தரமாய் இருக்காது.தவிர எங்காவது பொருள் வாங்கி எங்காவது விற்கிற பழக்கம் கொண்டவர்.வேண்டாம் என்றார் கொஞ்சம் ஆற்றாமை பெரு மூச்சுடன்/இதை மணியண்ணனைபார்த்தநாட்களி ல் அவரிடம் சொன்ன போது கடகடவென சிரித்தவர் அது ஒண்ணுமில்ல சார் மொதல்ல அவர்கூட சேந்துதான் தொழில் பண்ணிக்கிட்டு இருந்தேன்.இப்ப அவர விட்டு பிரிஞ்சி வந்து இன்னையோட ஆச்சு வருசம் மூணு/நம்ம கை சுத்ததுக்கும் பேச்சு சுத்ததுக்கும் தொழில் தெறமைக்கும் அவர் கஸ்டமர்க பாதிப்பேரு நம்மகிட்ட வந்துட்டாங்க.அந்தக்கடுப்புத்தானே ஒழிய பெரிசா வேறொன்னுமில்ல.இப்பநான் கூட என்னைய பெரிய உத்தமன்னு சொல்லிக்க வரல/நீங்க என்னையப் பத்தி முழுசா விசாரிச்சிட்டு வாங்க அப்பறம் பேசலாம் யேவாரம் என அவர் சொன்ன இரண்டு நாட்கள் கழித்து அவர்முன்போய்நின்ற போது ஒருஉண்மைசொன்னார்அவர்.

சார் கம்பெனி பேருக்காக சில பம்புக வெலக் கூடஇருக்கும்.அதேமாதிரி பம்போட சிலலோக்கல்மேட்க சமயத்துல சில கம்பெனி மோட்டாரவிட சூப்பரா ஓடிரும்.விலையும் கம்பெனி மோட்டார் வெலையில பாதிதான் இருக்கும்.இப்ப ஏங்கிட்ட இருக்குறது ஒருகம்பெனி அடிபம்புதான்,பார்ட்டி அடி குழாயைகழட்டிப்போட்டு விட்டு மோட்டார் மாட்டப் போறேன்னு சொல்லீட் டாரு.அதை அப்பிடியே ஒரு வெலைப்போட்டு நானே எடுத்து வந்துட்டேன். அத நான் ஒங்களுக்குக்காட்டுறேன்.அப்புறம் சொல்லுங்க என வீட்டின் பின் புறம் அழைத்துப்போய் காண்பித்தார்.பார்ப்பதற்கு புதிது போல்இருந்த குழாய் பெயிண்ட்கூடஇன்னும்உதிராமல்இருந்தது.இன்னும் பெயிண்ட் கூட கழறலை ன்னு பாக்குறீங்களா,அது நாங்க அடிச்சது. என்றார். பொருளப் பாருங்க பொரு ளோடதரத்தப்பாருங்க,வாங்கிப்போடுங் நானே வந்து மாட்டித் தர்ரேன். கொழா யோட வெலை, மாட்டுக்கூலி யெல்லாம் டாக்டர வச்சிப் பேசிக்கிருவோம் என்றார்.

டாக்டர் இவனது சொந்தக்காரர் .அவர்தான் மணியண்ணை அறிமுகம் செய்த வரும் கூட/அவர்தான் பேசி முடித்தும் வைத்தார்.இவன்முடியாமல் கிடந்த போதுஇவனை செப்பனிட்டு சரி செய்தவரும்,வாழ்வின் வழி ஒளியாய் நம்பிக் கைஊட்டியவரும்அவர்தான். அவர்சொல் மீறியதில்லை இதுநாள்வரை பொது வான தொரு நல்ல விஷயங்களுக்கு.

அதுபோல்அடிகுழாய்போடுவதும்நல்லவிஷயம்தானே?அடிகுழாய்போட்ட புதிதில்கொல்லையில்இருந்தமரக்கன்றுகள்ஒவ்வொன்றுக்குமாய்தினமும் இத்தனை வாளி நீர் என இவன்தான் அடித்து ஊற்றுவான்.

செடி அதன் வளர்ச்சி பூப்பு காய்ப்பு பின் அதன் ஆகுருதி என்கிற பரிணாமம் தண்ணீர் ஊற்றுகிற போதே இவன் மனக்கண்ணில் பட்டு விரியாமல் இருந் ததில்லை.

அதன் விரிவு கொல்லைதாண்டி எல்லை விரித்திருக்கிற பக்கத்து வீடுகள் அதன் கம்பி வலைகள் காம்பவுண்டு சுவர்கள் கட்டிய கொல்லை வெளிகள் எனக்காட்சிப்படுத்தி தெரு தாண்டிய ரோட்டைக்காட்சிப் படுத்தும்.

ரோட்டின் இருபுறமுமாய்ய் நடு வைக்கப்பட்டது போலிருந்த காம்ளக்ஸீம் கடைகளும் அது அல்லாத வெற்று வெளியான இயக்கத்தை கண் முன் காண்பித்துக்கொண்டே/

இதைஅத்தனையையும்தாண்டிகைபிடித்துவந்தகாற்றின்கைபிடித்து என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய்எங்கிருந்தாய்/ எனக் கேட்டுவிடத் தோணுகிறது.கைகொள்ளாமல் அள்ளியநீரில்பட்டுத்தெரிகிற முகம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை விட நன்றாக இருப்ப தாகவேச் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டதாய்/

ஷேவிங் பண்ணப் படாதமுகம்,முள்ளுமுள்ளாய் குத்திட்டு நின்ற முடிகள் அதில் வெள்ளைக்குள் கறுப்பும்,கறுப்புக்குள் வெள்ளயுமாய் ஒளிந்து கண்ணா மூச்சி காட்டுகிற அழகு என எல்லாம் தாண்டி கைஅள்ளிய நீரை அடித்துக் கொள்ளும் போதுதான் தெரிகிறது முகம் கொள்ளாமல் குத்திட்டு நிற்கிற தாடி முடியின் அழகும் படர்வுமாய்,/

நேற்று இரவு தூங்குவதற்கு சற்று நேரமாகிப்போனது.சற்று நேரமென்றால் அதிகபட்சமாய் . ஆகிப்போனது.இது போலாய் இன்றைக்கு நேற்று வருவதி ல்லை.அடிக்கடிநிகழ்வதுதான்.அப்பொழுதெல்லாம்பெரிதாகஒன்றும்தோன்றியதில்லைதான்.

நிகழ்வின் இடைவெளிகளற்று மனது சும்மா இருப்பதில்லை.தூக்கம்வராத இரவிலும் அப்படித்தான் நினைக்கிறது,பேசுகிறது, நூர்க்கிறது,அது போலவே நேற்று இரவும்/

தலைக்கட்டு வரி இவ்வளவு என சாமி கும்பிட வாங்கிப்போனார்கள், கும்பாபி ஷேகம் மற்ற மற்றதிற்கான எல்லாவற்றுகுமாய்வந்துஇது நாள்வரை பணம் கேட்டிருக்கிறார்கள்.இவனும்கொடுத்திருக்கிறான்.ஆனால்அதுபோலானவிஷேச த்திற்குஒருநாள்கூடப்போனதில்லை. குடும்பத்தி னரை அனுப்பிவைத்திருக்கி றான்அல்லது யாரும் போகாமல் இருந்திருக் கி்றார்கள்.அந்நேரம் வந்து விடு கிற வேலை அல்லது படக்கென எதிலாவது ஒன்றில் ஆட்பட்டு விடுகிற தன்மை எனஒரு பெரு நிகழ்வு முன்னெடுத்து வந்து நின்று விடுகிற பொழுது ,,,,

இந்தத் தடவை அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போகமுடியவில்லை. அம்மா ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடக்கிற பொழுது கோயில்,பொங்கல், கொண்டாட்டம்,,,, என கரைந்து போகம்முடியவில்லை.மாமியார் வீட்டிலிரு ந்து வந்திருந்த ஆடுக்கறியுடன் ஊர்ப்பொங்கல் கொண்டாட்ட நினைவு கலை ந்தும் கரைந்துமாய்போய்விடுகிறது.என்கிற நினைவு தூக்கம்வராதநேற்றைய இரவில் நெசவு கொண்டபொழுது என்ன செய்யவெனத்தெரியாமல் படுத்துக் கிடந்திருக்கிறான் வெறுமனே/

இதுமாதிரியானநேரங்களில்படுக்கையிலிருந்துஎழுந்தமர்ந்தோஅல்லதுபடுத்த வாறோ புத்தகம் படிப்பான் அல்லது டீ வி பார்ப்பான்.அல்லது கம்ப்யூட்டரின் முன் விடிய விடிய உட்கார்ந்திருந்து விட்டு விடிந்ததிலிருந்து விடியலின் கரம் பிடித்து கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு எழுந்து அலுவலகம் செல்கிறவனாய்/

சில தினங்களில் அதற்கு நேர்மாறாய் நன்றாக இருந்ததுண்டு. அன்றைக்குத் தான்வேலைவேகமாகநடக்கும்.எழுத்து கொஞ்சம் பார்க்கிற மாதிரியாய் இருக் கும். பேச்சுகொஞ்சம் கேட்கிறமாதிரியாய் இருக்கும். உடலும் மனது சுளுக் கெடுத்ததுபோல்இருக்கும்.தவிரகாலைவேலைகளில்மனைவியுடன் அல்லது தனியாகவாக்கிங் செல்கிற பொழுதுகிடைக்கிறமனநிம்மதி வேறெதிலுமாய் கிடைப்பதில்லை.என்றுதான்எண்ணிவிடத்தோணுகிறது.அதுநிதமும் நிகழ்வ தில் லை என்கிற போதிலும் கூட நிகழ்கிற கணங்களில் சந்தோஷம் கொண்டு விடுகிறது மனது. 
                                                                   
                                                                     பாகம் 2


பரப்பிப்போட்டிருந்த மண் சிறிது சிறிதான கற்களையும் பெரிதான பாறை போன்றகல்லையும் காட்சிப்படுத்தி காண்பித்துக்கொண்டு சென்றதாய்/

உற்றுப்பார்த்தலும்,உள்ளின் உள் சென்று பார்த்தலுமாய் காட்சிப்படுகிற கணங் களில் நன்றாகவே இருந்தது. 
  
வீதியில் கிடந்த சுக்கான் கல் வீட்டிற்குள் வந்து விழுந்த கதையாய் ஊரின் வீதியெங்கும்சுக்கான்மண்ணைபரப்பிவிட்டிருந்தார்கள்.ஊர்பஞ்சாயத்திலிருந்து.

ஊர் மந்தையிலிருந்து விரிந்த மண் ஊருக்குள்ளாய்இருந்தசிறுசிறுவீதிகளில் பட்டுப்பூபோல விரித்துக்காணப்பட்டிருந்தது.சிறு மலையென  குவிந்து கிடந்த கிணறுதோண்டப்பட்டசுக்கான்மண்ணைமாட்டுவண்டிவைத்துஅடித்துப் போட் டிருந்தார்கள்.பெருமழைபெய்தால் மந்தையின் பள்ளமெங்கும்  தேங்கி நிற்கிற தண்ணீர்இனிநிற்காதுமண்அடித்துப்போட்டால்எனநினைத்துகூடஅடித்திருக்க லாம்,அப்படிஅடிக்கப்பட்டிருந்தசுக்கான்மண்ணில்கிடந்தகல்மீதுஏறிப்பார்த்தால் பக்கத்து ஊர் தெரிந்தது.

சுக்கானில்ஊர்ந்த எறும்பிலிருந்து புழுப்பூச்சிகள் வரை எல்லாம் தெரிந்தது. பேசிக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக உழைப்பையும், ஒற்றுமையையும் காட்டிச்செல்கிறஎறும்புகள்,புழுப்பூச்சிகளுக்குஇடம்விட்டுஒதுங்கியே செல்கி ன்றன,எந்தவிதட்ராபிக்சிக்னல்இல்லாமலும்,யாருடையவழிகாட்டலும்தேவைப் படாமலுமே/ஆனால்அதுபற்றியெல்லாம்கந்தசாமியண்ணனுக்குகவலையி
ல்லை எந்தவிதத்திலும்/குவித்துப்போடப்பட் டிருந்தசுக்கான்மண்ணைமண் வெட்டியால்இழுத்துப்பரப்பும்வேலையில்காண்பிக்கும்பரபரப்பில் எறும்பும் புழுப்பூச்சிகளும்ஒன்றுஓரம்ஒதுங்கிப்போய்விடும்அல்லது மண் வெட்டியில் மண்ணோடு மண்ணாய் இழுபட்டு சமப் படுத்தப்படுகிறதளத்தில்கலந்து விடும்.

கோவிந்தண்ணந்தான்அந்தவேலைக்குலாயக்குஎன்பதுஊர் தெரிந்து வைத்தி ருந்ததைப்போல்நாட்டமையும்அறிந்துவைத்திருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான், எனென்றால் கந்தசாமியண்ணின் மண்வெட்டி அவருடனும் அவர் செய்யும் வேலை யுடனும் பேசும் என்பார்கள்.கையில் இருக்கிற மண்வெட்டிஇழுக்கிறமண்ணுக்குத்தகுந்தாற்போல்தன்உடல்வலுவைவையும் வேகத்தையும்மண்வெட்டியுடன்சேர்ந்துதபாலில்அனுப்பிவைப்பதைப் போல அனுப்பி வைப்பார், என்னஇது போதுமா இன்னும் வேணுமா என்கிற விசாரிப்பு வேறு. ஆகா என்ன இது வம்பாய் இருக்கிறதே என போதும் என்பது போல் அவரது தலை ஆடும்,இழுக்கிற கையும் இழுபடுகிற மண் ணும் கையில் இருக்கிற மண்வெட்டியும் ஒரே பாவில் நெய்யப்பட்டிருந்த நெசவு போல கண் பட்டுக்காணப்படும் அந்நேரம்,இதை மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே அறிந்து வைத்திருந்த நாட்டாமை அவரிடம் கூப்பிட்டு ஊர்தெருக்களில்பூராம் மண் அடிக்க வேண்டும்.மழை பெய்தால் தெருக்களில் இருக்கிற பள்ளங்களில்  நீர் நிற்கிறது பிடிவாதம் காட்டி/ 

அதுவும் வீடுகளீன் முன் இருக்கிற பள்ளங்களில் நீர் நிறந்து நிற்கிற போது சங்கடமாய் இருக்கிறது சற்றேயும் பலமாயும் என அவர் சொன்ன போதுஇதுதான் சாக்கு என தன் தோட்டத்தில் இருக்கிற கிணறு தோண்டிய சுக்கான்மலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்என்றார் கோவிந்தண்ணன். சரிஅதனால் என்ன சேர்த்துக் கொண்டால்போகிறதுவேண்டாமென்றால் நீ என்ன விடவா போகிறாய்  என்ற நாட்டாமையின் சிரிப்பிற்கும்,பேச்சிற்கும் மறுப்பேதும்சொல்லாமல் காண்ட்ராக்டாய்அந்தவேலையை பேசி முடித்த கந்தசாமியண்ணன் தன்னுடன் சேர்த்து இன்னும் மூன்று வண்டிகளைச் சேர்த்துக்கொண்டார். கந்தசாமியண்ணனுக்கு இருக்கிறபெரும்கவலை தன் தோட்டத்தில்கிணறு தோண்டிய சுக்கான் மண்ணை எங்கு கொண்டு போய் தட்டுவது என்பதும் தோட்டத்தில் பெரும் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கிற இடத்தை காலி செய்தால் ஏதாவது செய்யலாம் என்பதுமாய் இருந்தஅவரது நீண்டநாள் சிந்தனைக்கு கிடைத்த பெரும்வரப்பிரசாதமாய் இருந்தது இது.நாட்டாமைன் பேச்சு கோவிந்தண்ணனுக்கு மிகவும் பிடித்துப் போனதாய்இருந்தது.காரணம்ஒரேகல்லில்இரண்டுமூன்று மாங்காய்களை சேர்த்து வைத்து கட்டி அடித்தது போல் ஆகிப்போனது.தன் தோட்டத்தில் இருந்துஅள்ளப்போகிற கிணற்று மண்ணுக்கு பணம் கிடைத்துப் போகும். சுக்கான் மலையாய் குவிந்து கிடக்கிற மண்ணும் காலியாகிப்போகும், மண் பரப்புகிற வேலைக்கு கூலியும் கிடைத்து விடும்.என்கிற சந்தோஷமான எண்ணங்களில்கொஞ்சம்மிதக்கவும் செய்தார்.இப்படியான மிதப்பிலும் கால் பரவாத அந்தரத்திலுமாய் இருந்தவரை ”நானும் வண்டி மாடு வச்சி பண் ணையம் பண்ற வந்தான்,எதுக்குஎன்ன ஆகும்ன்னு எனக்குத்தெரியுமப்பா, ரொம்பத்தானஅகலக்காலுவிரிக்காத,இதுஊருவேலைங்குறதையும்கொஞ்சம் மனசுல வச்சிப் பேசு/”என்கிற நாட்டாமையின் சொல்கட்டு ஏற்று கந்தசாமி யண்ணன் மற்ற மூன்று வண்டிகளுடன் அள்ளிக்கொண்டு வந்து சேர்த்த சுக்கான்மண்ஆல்இண்டியாரேடியோபோல்எல்லோரையும்பேசவைத்துவிட்ட து. 

மூன்றுடன்ஒன்றாய்கந்தாமியண்ணனும்ஒன்றானநான்காவதுவண்டி, வண்டி யோட்டுபவர்கள் இவர்கள் மண் அள்ளிப்போட பெண்கள் ஐந்தாறு பேர் என இருந்தார்கள். கந்தாமியண்ணனின் சுக்கான் மேட்டில்தான் முதலாய் மண் அள்ளினார்கள்.மண் நிரப்பப்பட்ட வண்டி முதல் வண்டி முன்னால் போய்க் கொண்டிருக்கும்,இப்படி இரண்டாவதாய்,மூன்றவதாய் என போய்க் கொண் டிருந்த வண்டிகளில் கடைசி வண்டியாக கந்தசாமியண்ணனின் வண்டி போகும் மண் நிரப்பப்பட்டு/ இப்படியாய் மாற்றி மாற்றி போய் வண்டிகள் மண்ணுடனும் வியர்வையுட னுமாய் போய்க்கொண்டிருந்த போது மதியம் சாப்பாட்டுக்குப்பின்னான ஒரு வேளையில்கடைசிவண்டியாய்மண்ணள்ளிக் கொண்டிருந்தகந்தசாமியண்ணனின் வண்டிக்கு அவரும் பெண்களுமாய் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டிருந்த பொழுது பெண்களின் கொச்சைப் பேச்சு கந்தசாமியண்ணை சூழ்ந்து கொண்டது, ஏய் கழுதகளா,ஒரு ஆம்பள இருக்கேங்குறத மனசுல வச்சிப்பேசுங்க,என்றதும் ,போலும் ஆம்பள இருக்காறாம்த்தா,இப்பிடி எல்லா யெடத்துலயும் ஆம்பளக இருந்தா நாங்க எங்கிட்டுத்தான் போயி பேசுறது,இது மாதிரி பேச்சுகள் ஏன் காதுல வாங்குறீங்க,நாங்க ஒங்கள மாதிரி நென்னைச்ச யெடத்துல நின்னு பேச முடியுமா,இதுமாதிரி வேலைக்கு வந்தயெடத்துல,அதுலயும் எங்கள மாதிரி மனசு ஒத்துபோற ஒரு சில ஆட்களோட மட்டும்தான பேச முடியும், இதப் போயி பெருசா சொன்னா எப்பிடி,,,,என பெண்களில் ஒருத்தி சொல்லவும், அங்கதான்மாடு மிதிச்சிருச்சாம்ல,பின்ன ஏன் நான் ஆம்பள,நான் ஆம்பளை ன்னு சொல்லிக்கிட்டுத்திரியணும். என்றாள் கந்தசாமியண்ணனின் மேல் சற்றே ஈர்ப்புக்கொண்டிருந்தபெண் ஒருத்தி/

அடபாதகத்தி மக்கா,என்றவாறு கந்தசாமியண்ணன்மண்ணள்ளிய இடத்தை விட்டுகொஞ்சம்தூரப்போய்க் கொண் டிருந்த போது போன வண்டி ஒன்று திரும்பிவந்துகொண்டிருந்தது.திருப்தி ஆகி விட்டார்மனிதர்.அப்போதைக்கு தப்பிவிட்டதானநினைவுடன் திரும்பவும் மண்ணள்ளுகிற இடத்திற்கு வந்து விட்டார்மனிதர்.வரட்டுமேஎன்ன இப்பொழுது என்பது போலாய் நின்றிருந்த கேலிபேசியபெண்ணைஅப்பொழுதுவந்தவண்டிக்காரர் முறைத்துப் பார்த்துக் கண்டித்தார்,இப்படியான பேச்சுகளு டனும்,செய்கைகளுடனுமாய் வந்து சேர்ந்த சுக்கான் மண் எல்லோரையும் ஆல்இண்டியா ரேடியோ அளவிற்கு பேசவைத்ததில்ஆச்சரியம்இல்லைதான்.அதிலும் லோகு அத்தை பேச்சிற்கு கேட்கவா வேண்டும்.கட்டாந்தரை கீறி நெல் நட்டுவிடுவாள், மண்ணை திரித்துமாவாக்கி விடுவாள்.அவளின் எல்லை மீறிய பேச்சு காதுக்கு எட்டிய ஒரு நாளில் லோகு அத்தையின் வீதி வழியாக சென்ற நாட்டமை லோகுஅத்தையின்வீட்டிற்குள்புகுந்துஅவளதுதலைமுடியைபிடித்து வீதிக்கு இழுத்து வந்து அடி அடியென்று அடித்து விட்டார். நானும்போனா போகுது தங்கச்சிதான,தங்கச்சிதானன்னு பாத்தா ரொம்பத்தான துள்ளிக்கிச் சுத்திரி யிறகழுத,எனச்சொன்னவாறேலோகுஅத்தையைநாட்டாமைஅடித்துக்கொண்டி ருந்த போது லோகு அத்தையின் கணவர் வந்து விட்டார்.அவள அடிக்கிற தோட விட்டுறாதீங்க, முடிஞ்சா அவ நாக்க அறுத்து நடுவீதியில நட்டு வையிங்க,அப்பா பேச்சி பேச்சு என்னா பேச்சுன்னு நெனைக்கிறீங்க, அன்றி லிருந்து லோகு அத்தை வம்பு பேசுவதையே நிறுத்திக்கொண்டாள்.


மண்ணும்கல்லும்சுக்கானும்போதும்போதும்என்கிறஅளவிற்குகலவைகாண்பி
த்து கலர்க்காண்பித்தும்நின்றதாய்/கரிசல்மண்ணில் தோண்டிய கிணற்றுச் சுக்கான்ஒருபுறமும்செவல் தரை கிணற்றிலிருந்து கொண்டு வரபட்ட சுக்கான் மண்மறுபுறமும்,கூடவே ஊடுபாவாய் வண்டல்மண்ணும் பரவியிருந்த காட்சி கண்ணுக்குள் நின்ற கொலாஜ் ஓவியமாய்/

பொதுவாகவே இப்படி ஒரு கலப்பு எங்கும் வாய்க்கபெறாததாகவே.இவனும் பார்த்திருக்கிறான்,கேட்டிருக்கிறான் அல்லது கேள்விகூடப்பட்டிருக்கிறான். இந்த மாதிரியாய் கலப்பு மண் கொண்ட பூமி இருக்கிற ஊர் ரொம்பவும் குறைவு என்கிறார்கள். 
கண்மாய்க்கரை இறக்கத்திலிருந்து மந்தையின் பரப்பு முழுக்கவுமாய் பரவியும் பொன்னம்மா கடை வாசல் வரையும் பரவி நின்ற மண் வெட்டியின் செதுக்கலிலும் வியர்வை நனைவிலும் ஒன்று போல் பாய் விரித்துக் காணப் பட்டிருந்தது.

இவ்வளவு அகலத்திற்கும் இவ்வளவு பரப்பிற்குமாய் காட்சிப்பட்ட கல்லும் மண்ணும்ஊர்எல்லைமந்தையின்மீதுராமுஅண்ணனின்வண்டியையும்பிச்சை மாமாவின் வண்டியையும் காட்சிப்படுத்தி நின்றதாய்/

வண்டிப்பைதாவிலும்ஆரக்காலிலுமாய்ஊதாப்பெயிண்ட்அடிக்கப்பட்டுநின்றிரு ந்தது ராமு அண்ணனின் வண்டியாகவும்,அது அல்லாது நின்றிருந்தது பிச்சை மாமாவின் வண்டியாகவும் இருந்தது.

”ஆமா சொல்லு,அந்த நொட்ட யெழவுக்குத்தான் இந்த இது வேணான்னு சொல் றதுன்னு என்கிற குறை சொல்லோடு எந்தப்பேச்சையும் சலிப்போடு ஆரம்பி க்கிற ராமு அண்ணனிடம் ஒற்றைமாடுதான்இருந்தது. பெரிய மகள் செண்ப கம் வயசுக்கு வந்த போது ஜோடியில் ஒன்றை பிரித்து விற்று விட்டார், அவருக்கும் மனதில்லைதான் பாவம் என்ன செய்ய எதையோ விற்று எதை யோ வாங்கிய கதைதான்.

அன்றிலிருந்து இவர் வண்டி பூட்டும் போதெல்லாம் ஒற்றைக்க்காளையை தேடி அலைய வேண்டியிருக்கும். ஊருக்குள் அவரைப் போல ஒற்றைக்காளை வைத்திருந்தது கிழக்குத்தெரு தாஸ்தான்.ஆனால் அவரிடம் போய் நிற்க இவருக்கு தயக்கம். காரணம் தாஸிடமிருந்தது வலது பக்கமாய் வண்டியில் பூட்டி ஓட்டிய மாடு.ராமு அண்ணனதும் வலது பக்க மாடுதான்.இடது வலது மாய் எந்தப்பக்கமாய் மாற்றி மாற்றி கட்டினாலும் ஓடக்கூடிய காளைகள் பிச்சை மாமாவிடம்தான் இருந்தன.ராமு அண்ணன் போய்க் கேட்டால் பிச்சைமாமா காளைகளை உடனே அவித்துட்டுப்போ என்பார்.

ஆனால் ராமு அண்ணனுக்குத்தான் அவரிடம் போய் நிற்க ஒருவித மனக் கூச்சம்.காரணம் பிச்சை மாமாவின் மகன் ராமு அண்ணனின் மகளை போன மாதம் நிறை வெள்ளிக்கிழமையன்று நல்லதண்ணீர் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கப்போன போது ஏதோ கேலி பேசிவிட்டான் என சண்டை போட்டு விட்டார்.

ராமு அண்ணனின் அவ்வளவு கோபப்பேச்சையும் கேட்டுக் கொண்ட பிச்சை மாமா டேய் கிறுக்கா ஓம் மக ஒரு வகையில் ஏன் மகனுக்கு தங்கச்சி மொற வேணும்டா,,,,,/ஏதோ சின்னப்புள்ளைகசண்டைக்குஇப்பிடி வரிஞ்சி கட்டீட்டு வந்து முருக்கிட்டு நிக்கிறீயே வெக்காமாயில்ல ஒனக்கு போடா அங்கிட்டு சின்னப்பயலே என சப்தம் போட்ட நாளிலிருந்து அவரிடம் போய் ஒத்தை மாடு கேட்பது ராமுஅண்ணனுக்கு பிடித்தம் இல்லாததாகவே/

ஆனால் இரண்டு பேரும் வண்டிகளின் சக்கர இரும்புப் பட்டையையும் இறுக்கிப்பிடிக்கஅடிக்ககொடுப்பது சுந்தரம் இரும்புப்பட்டறையில்தான்/ பொறி பறக்கிற இரும்புப்பட்டறையில் கரைகிற கங்கு போல் எப்பொழுதும் பசித்த வயிருடன்தலைநிறைந்தசிந்தனையுடனுமாய்த்தான்இருப்பார்.நல்ல மனிதர்,

கூர் மழுங்கிப்போனப்போன கோடாலியை தொழுவதற்காய் போன போது கோடாலியைபட்டறையில் காயவைத்துவிட்டு இவன் கையில் சம்மட்டியைக் கொடுத்து விட்டார்,

பழுக்கக்காய்ந்திருந்த கோடாலியை இவன் முன்னாய் சதுரமான இரும்புப் பட்டையில் வைத்து விட்டு சம்மட்டி யைதூக்கி அடிக்கச் சொன்னார்,, இவனுக் கானால்அம்மாதிரியானவேலைகளில்பழக்கமில்லை.

இதற்குமுன்னால் கோடாலி தூக்கிவிறகுபிளந்திருக்கிறான்.பெரிய பெரிய மரத் தூர்களைப்பிளக்க சம்பள ஆள்வேண்டும் இதற்கு லாயக்கு மரம் வெட்டிய வர்கள்தான் என சித்தப்பா சொன்ன போது வேண்டாம் நானே செய்கிறேன் என ஒப்புக்கொண்டு வெட்டி வந்த மரங்களைப்பிளந்தான்,

முழுதாக ஒரு வேப்ப மரமும்,ஒரு முருங்கை மரமும்/முருங்கை மரம் புழு விழுந்து முத்திப்போய் இனி காய் காய்க்க லாயக்கற்ற நிலையில் இருந்தது. வேப்ப மரம் நடு தோட்டத்தில் பரந்து விரிந்து கிளை பரப்பி இடத்தை அடைத்துக்கொண்டு நின்றது,அது அடைத்துக் கொண்டு நின்ற இடத்தில் வெள்ளாமை எதுவும் விளையவில்லை.ஆகவே இரண்டையும் வெட்டி விட லாம் என முடிவெடுத்து மரம் வெட்டுகிற முத்துச் சாமியை வைத்து வெட்டி தொழுவம் கொண்டு வந்து சேர்த்தார்கள்,

மரம் வெட்டும் போது இவனுக்கு ஒரு ஆசை,ஆனால் மரத்தின் மீதேறி வெட்ட முடியாது,மரமேறத்தெரியாது,அப்படியே தெரிந்திருந்தாலும் இவனுக்கு கூட மரத்தின் மீதேறி அரிவாள் வைத்து வெட்டுமளவு வேலை தெரியாது,தரையில் என்றால் சரி வேலையை கச்சிதமாய் செய்து விடுவான். அது போலவே மரத்தை வெட்டிகொண்டு வந்து தொழுவத்தில் போட்ட தினத்தன்றைகு மறு நாள் முருங்கை மரத்தை வெட்டுக்கம்பி வைத்து பிளந்து விட்டான்,

பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வந்த முழு முருங்கை மரத்தையும் கம்பியால் வெட்டிப் பிளப்பது ஈஸியாய் இருந்தது. கொஞ்சம் கடினமான வேலையாய் இருந்த போதும் கூட நீர் மரம் கம்பியைக்கொண்டு குத்திப் பிளப்பது ஈஸியாக அமைந்துபோனது.ஆனால் வேப்ப மரத்தை அப்படிப்பிளக்க முடியாது, பச்சை மரமாய் இருக்கும் போது வெட்டினால் ஈஸியாய் இருக்கும் அல்லது காய்ந்துபோனால் கடினம் எனச்சொன்ன முத்துச்சாமி மறு நாள் இவன் வேப்ப மரத்துண்டுகளைப்பிளக்கும் போது வந்து விட்டார்.

மொட்டையாய் இருக்கும் கோடாலியைப்பாத்தவுடன் முதலில் இரும்புப் பட்டறையில் கொண்டு போய் தொழிந்து விட்டு அப்புறமாய் விறகை வெட்டு ங்கள், அப்பொழுதான் ஈஸியாக இருக்கும் என்றார்.சரி கோடாலியைத் தொழிய இப்பொழுது சுந்தரம் பட்டறை வைத்திருப்பாரா,,,என்கிற சந்தேகத் துடன் பட்டறைக்குப் போனதுமாய் காலையில் ஆறு மணிக் கெல்லாம் பட்ட றை யை ஆரம்பித்திருந்த சுந்தரம் இவனை சம்மட்டி அடிக்கச் சொன்னார், இவனுக்கானால் சம்மட்டி அடிப்பது ஒன்றும் புதிதில்லை, ஆனால் பழுக்கக் காயவைத்தகோடாலி முனையை பொத்தி அடிக்க வேண்டும், இவனுக்கு அதுவரவில்லை,இவனது சம்மட்டி அடி கோடாலி முனையில் பள்ளம் பறித்தது,இவன் அடிக்கிற ஒவ்வொரு அடிக்குமாய் விழுந்த பள்ளம் கோடாலி முனையை சிதைத்து விடும் என சொல்லிப் பார்த்த சுந்தரம் கடைசியில் இவனிடமிருந்து சம்மட்டியை வாங்கி கோடாலி முனையை பதமாக்கித்த ந்தார்.

கோடாலியைஇவன் பதமாக்கிவாங்கி வரும் வரை முத்தையாதான்விறகை வெட்டிக்கொண்டிருந்தார். ரோமக்கட்டைதட்டாததினசரிஷேவிங்கில் மழு மழு வென இருக்கும் அவர் வெள்ளைவேஷ்டி வெள்ளைச்சட்டையில் பளிச் சென்று தான் இருப்பார்,வேலை செய்கிற போது கழட்டி வைத்து விடுகிற சட்டை,வேஷ்டி தூசு படாத இடத்தில் பத்திரமாய் இருக்கும் இவர் சாயங் காலம் வேலை முடித்து எடுத்துப்போடுகிற வரையிலுமாய்.

வேர்வைக்கோடுகள் வழிகிறஅவரதுகறுத்த முகத்தில் வேலைத்தளத்தில் எப்பொழுதும் அலுப்பு ஒட்டிக் கொண்டு வெளித்தெரிந்ததில்லை.அது போல் தான் இவன்கோடாலியை தொழிந்து கொண்டு போவதற்குள்ளாய் விறகை வெட்ட ஆரம்பித்திருந்தார். ஏன் எனக் கேட்டதற்கு நீ இப்பொழுதுக்கெல்லாம் வருவது போல் தெரியவில்லை. அதான்நான்பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பி த்து வைத்தேன்.போட்ட சுழியை நீ தொடர்ந்து கொள் எனக்கு இன்னோர் இடத்தில் வேலைஇருக்கிறது என போய் விட்டார்.கையில் வைத்திருக்கிற அரிவாளைக் கொடுத்துவிட்டு.

பொதுவாக முத்துச்சாமி அவ்வளவு ஈஸியாக யாரிடமும் அரிவாளை தர மாட்டார்.அரிவாளைகொடுத்து விட்டுப்போகும் போது சொல்லி விட்டுத்தான் போனார்,பாத்து சூதானமா வெட்டுப்பா,நான் யாருக்கும் இதைத்தர்றதில்லை, ஓங்ஆர்வத்தப்பாத்துதான்குடுக்குறேன்ஆமாம்என்றார்.அவரின்இந்தச்சொல்லில் இவனுக்குஒரு பெருமை,ஆகா யாருக்குமே தராத அவரின் தொழில் ஆயுத த்தைஇவனிடம்நம்பிஒப்படைத்துவிட்டுப்போகிறார்என/

ஆனால் இவனுக்குத் தெரியாது அவரது தொழில் ஆயுதமாய் வீட்டில்இருக்கிற கோடாலியையும், அரிவாளையும் தனது பெண்டு பிள்ளைகளைக்கூட தொட விட மாட்டார்.

யாராவது கேட்டால் இல்லை எனச்சொல்லாமல் கொடுப்பதற்கு ஒரு கோடா லியும் அரிவாள் ஒன்றும் வைத்திருந்தார்,சம்சாரிகள் நிறைந்தி ருக்கிற ஊர். இப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு முன் கடைசித்தெரு ராமையா கேட்ட போது அரிவாள் இல்லை எனச்சொல்லி விட்டார் முத்துச்சாமி .அவர் உடனே கையோடு இவனது சித்தப்பாவிடம் போய் சொல்லிவிட்டார் கூட ரெண்டு சொல் சேர்த்து/

சித்தப்பா முத்துச்சாமியிடம் கேட்ட போது அருகில் ராமையா இல்லாதது அவருக்கு சௌகரியமாய் போய் விட்டது.சொன்னார் முத்துச்சாமி சித்தப்பாவிடம் இல்லை,அவருக்கு பொருள் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை,ஆனால் தொழில் செய்கிற பொருளை பத்திரமாக கையாள வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வு அவரிடம் இல்லை, போன தடவை என்னிடமிருந்து வாங்கிப்போன அரிவாளை கல்லில் வைத்து வெட்டி இருப்பார் போலும். அரிவாள் பூராவும்அங்கங்கே சிதைவு,என்ன செய்ய பின்னே, சுந்தரம் பட்டறையில் போய் தொழிந்து விட்டு வந்துதான் தொழிலுக்கு பயன் படுத்தினேன் அந்த அரிவாளை அது மரம் வெட்டும் போது சைடு கொப்புகளை அருவவும்வெட்டவும்தான் ஆகிறது என்றாலும் அது இல்லையானால் எனக்கு கை ஒடிந்தது போல் இருக்கும், அதனால்தான் யாரிடமும் கொடுப்பதில்லை, வீட்டில் இன்னொன்று மொன்னை அரிவாள் கிடக்கிறது.அதுதான் வெளியில் யாருக்கும் கொடுப்பது அவர் அரிவாள் கேட்டு வந்த அன்று அந்த அரிவாளை எடுத்துக்கொண்டு எனது வீட்டம்மாள் முள் வெட்டப்போயிருந்தாள்.என்ன செய்ய பின்னே அப்படித்தான் சொல்ல வேண்டியிருந்தது,அவரானால் எனது மரம் வெட்டும் அரிவாளையாவது கொடு என்றார்,இல்லை என்று விட்டேன் அதுதான் உங்களிடம் வந்து பிராது வாசித்து விட்டார்.என முத்துச்சாமி சொன்ன உண்மை கேட்டு விட்டு ராமையாவை ஒரு பிடிபிடித்து விட்டார் சித்தப்பா,அன்றிலிருந்து ராமையா முத்துச்சாமியின் வீட்டுப்பக்கம் தலை வைத்துக்கூடப் படுப்பதில்லை. படுத்தால் முத்துச்சாமி கனவில் வந்தார். கூடவே பட்டறை சுந்தரமும் வந்தார், முத்துச்சாமி வருவது சரி.சுந்தரம்,,,,? என்ன இது கோளாறு கனவிலா,அல்லது கனவு காண்பவர் மனதிலா,,,,?புலன் விசாரணையில் கனவில் இல்லை, கோளாறு மனதில் எனத்தான் தோணியது,

பக்கத்தில்சுந்தரம்நிற்க,அவர்பக்கம்சித்தப்பாநிற்கஅவரதுபக்கமாய் முத்தையா நிற்க சுற்றிய புகையினூடாக வந்து போன ராமையா இது லாயக்கில்லை என நமக்கு என நினைத்துக்கொண்டிருக்கையில் இவர்களுடன் பேசிக் கொண் டிருந்தசுந்தரம்எங்கோமறைந்து போவார். அவர் போய் பிச்சை மாமாவையும் ராமுஅண்ணனையும் சந்தித்து யப்பா பக்கத்துல பக்கத்துல வண்டி வச்சிருக் குற புண்ணியவாண்களா ரெண்டு பேருக்குமே ஒண்ணு சொல்றேன். ”வண்டிப்பட்ட ரொம்பதேய்ஞ்சிபோச்சிப்பா, அடுத்த தடவைக்கெல்லாம் வேற தான் போடணும். இல்ல இருக்குறத சரிக்கட்டி ஓட்டணும்ன்னு நெனைச் சிங்கின்னா போயிக்கிட்டு இருக்குற வண்டிச்சக்கரத்துல இருந்து பட்டை தனியா கழண்டுக்கிட்டு வந்துரும். பாத்துக்கங்கங்க.

புதுசாபோடுங்க நம்மள மாதிரிதான அதுகளும்,ஆயுள் காலம் இவ்வளவுன்னு இருக்குல்ல.அதவுட்டுட்டு,,,,,,,என்கிற அவரது பேச்சை கேட்ட அன்றிலிருந்து ராமுஅண்ணனும்,பிச்சைமாமாவும்பேசிக்கொண்டார்கள்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. ராமண்ணன் வேலையாய் வெளியூர் போயிருந்த போது வீட்டிற்குவந்தராமண்ணனின்உறவினர்கள்ராமண்ணனின் அம்மாவை அடித்துப் போட்டு விட்டு போய்விட்டார்கள்.தள்ளாத வயதில் உடல் முழுவதும் காயங்களுடன் படுத்திருந்த தாயாரைப்பார்த்ததும் அழுதே விட்டார் ராமு அண்ணன்.

அவரது எதிர் வரிசை வீட்டிலிருந்த பிச்சை மாமாவின் வீட்டிற்குப்போய் இப்பிடி ஒரு சம்பவம் நடந்தப்ப ஒங்க வீட்டு பொம்பளபுள்ளைங்க பாத்துக்கிட்டுதான் இருந்தாங்களாம்ல,ஏன் அப்பிடி ஏங் மேல இருக்குற கோவத்துல அவுங்க அடி படுறதக்கூட கேக்காம வுட்டுட்டீங்களே என வந்து புலம்பியிருக்கிறார். எப்பிடி ய்யா கேப்பாங்க ,வாய்ப்பேச்சு வாய்ப்பேச்சா இருக்கும் போது பொசுக்குன்னு கைநீட்டுறஆளுஇல்லைய்யா நீயி,,? சாதரணமா மறக்குற மாதிரியான செயலாயா நீயி செஞ்சது,, சொல்லு/ என்னவோ ஒரு வேகத்துல நடந்த சண்டையில எங்க வீட்டு ஆம்பளய மண்டைய ஒடைச்சவன்ல்லய்யா நீயி/மண்டைய ஒடச்ச தோட மட்டும் நில்லாம அவன வண்டி கட்டி தூக்கீட்டுப் போகும்போது ஆட்களோட வந்து வழி மறிச்சவன்ல்லயா நீயி,,?அன்னைக்கி ஊர்க்காரங்க மட்டும் வந்து தடுக்கையிலன்னா ஏங் புள்ள செத்துல்லய்யா போயிருப்பான். எங்க வீட்டு வெள்ளாமையில ஒங்க வீட்டு ஆடுகஎப்பிடி விழுந்துச்சின்னு கேட்டதுக்காயா இவ்வளவு அளப்பற,,,? அப்புறம் எப்பிடி நாங்கஒனக்கு ஆதரவா நிப்போம்ன்னு நெனைக்கிற,,,,?என பிச்சை மாமாவின் அம்மா சொன்ன போது கையெடுத்துக் கும்பிட்ட ராமு அண்ணன் அன்றிலிருந்து இன்று வரை அவரது வீட்டின் நடு ஹால்வரை போய் வருமளவிற்கு நெருக்கமாகிப் போகிறார்.

ஆனாலும் இன்றுவரை பிச்சை மாமாவிடம் ஒத்தை மாடு கேட்பதில் இருக்கிற தயக்கம் ஊரந்ததாக இருக்கிறது. இருந்தாலும் விடுவதில்லை பிச்சை மாமா ,அட வாப்பா சும்மா என மாட்டை அவிழ்த்துக்கொண்டு போகச்சொல்லி விடுவார். பிச்சை மாமாவின் மாடுகளில் ஒரு சௌகரியம் வலத்து மாட்டை இடது பக்கமும், இடத்து மாட்டை வலது பக்கமுமாய் பூட்டலாம்,இழுத்த இழுவைக்கு வரும். வண்டியிலும் சரி,ஏர்க்கலப்பையிலும் சரி ஒன்றும் பிரச்சனை பண்ணாமல் ஓடிக் கொள்ளும்/பிச்சை மாமாவின் குணத்திற்கு தகுந்தாற்ப் போல மாடுகளும் அமை ந்துள்ளது அவரது ராசி என்றார்கள் ஊர்க்கார்கள். ராசிதான் இல்லை எனச் சொல்லவில்லை,அந்த ராசியிலும் கொஞ்சம் கரும்புள்ளி வைத்தாற்போல ஆகிப்போனதே,,,,,?

உழைப்பதெல்லாம்சரிதான்,சொன்னபடியெல்லாம்கேட்கிறது,போகச்சொன்னால் போகிறது,வரச்சொன்னால் வருகிறது,படுக்கச்சொன்னால் படுக்கிறது,எழுந்து ஓடச் சொன்னால் ஓடுகிறது,எல்லாம் சரிதான்,ஆனால் முரண்டு பிடித்தால் ஒரே பிடிவாதம்தான்.தூக்கி எறிந்து விடும் அல்லது கீழே தள்ளிவிட்டு விடும்.யார் என்ன எனவெல்லாம் பார்க்காது.

இப்படித்தான் நல்ல வெயில் மாதத்தின் ஓர் நாளில் குப்பை அடித்துக் கொண்டி ருந்தார்,பிச்சை மாமா, பெத்தவாடு அப்பாவி தோட்டத்திற்கு குப்பை போக வேண் டும், வண்டி போவதற்கு செம்மையான வழி இல்லை, பெத்தவாடு அப்பா குப்பை அடிக்கச்சொன்ன முதல் நாள் இரவு இவன் வீடு தேடி வந்து விடுகிறார் பிச்சை மாமா,என்னடா மாப்புள என பேச்சை ஆரம்பித்தவர்,,,, சொன்னார்குப்பை அடிக்க வேண்டியிருப்பதையும்,அதற்கான வழியி ல்லா மல் இருப்பதையும்/ரோட்டு வழி போய் வந்தால் ஒரு நாளைக்கு மிகச் சொற்பமாகத்தான் நடைஅடிக்கவேண்டி வரும்,இதேது கண்மாய்கரைபோய் இறங்கி சுந்தரம் பட்டறை வழி போனால் கொஞ்சம்பக்கம்.கொஞ்சம் நடையைகூட்டி அடிக்க லாம்,

ஆனால் அதில் இருக்கிற கனமான பிரச்சனை கண்டு யாரும் அந்தப்பக்கமாய் வண்டிகட்டிப்போனதில்லை.சுந்தரம்பட்டறையைத்தாண்டியதும் ஓடுகிற சாக்க டையை தாண்ட வேண்டும்.அதில் வண்டியை இறக்கினால் வண்டி சாக்கடை கடந்து மேலேறாது. அப்படியேமேலேறிப்போனாலும்வயக்காட்டுக் கரைகளைக் கடந்தும் அதன் ஊடாகப்போகும் பெரிய வாய்க்காலைக்கடந்து திரும்பவுமாய் நம்பி வயலில் இறங்கி மேலேறிப்போக வேண்டும்,இத்தனை சிக்கல் இருக்கும் போது எப்படி ?

பெத்தவாடு அப்பா பிச்சை மாமாவிடம் சொன்னதை பிச்சை மாமா இவனிடம் அப்படியே சொன்னார்.நீயிஎன்னசெய்வயோஏது செய்வயோ எனக்குத் தெரி யாது நாளைக்குஅவருதோட்டத்துக்குநம்மகுப்பை அடிக்கிறோம். என பிச்சை மாமா சொல்லி விட்டுப்போன நிமிடத்திலிருந்து தூக்கம் பிடிக்க வில்லை இவனுக்கு.

மறுநாள்அதிகாலைநான்குமணிக்கெல்லாம்எழுந்துமண்வெட்டியோடும்கண்ணன் கடை டீயுடனுமாய்கிளம்பியவன்நேராக கண்மாய்க் கரை இறக்கம் முடிந்து அம்புக்குறியிட்ட சுந்தரம் பட்டறையில்தான் போய் நின்றான்.

இப்பொழுது இதுதான் பெரும் பிரச்சனை ,சுந்தரம் பட்டறைக்கு எதிர்த்தாற் போலி ருந்த இடத்தில் கட்டிக்கிடந்த குட்டை சாக்கடை நீரால் நிரம்பியிந்தது.

இவனுக்குத்தெரிந்து மழை நேரங்களில் மழைத்தண்ணீரும், மற்ற நேரங்க ளில் சாக்கடை நீருமாய் வந்து கட்டி நிற்கும்/குட்டையைச்சுற்றி நின்ற சீமைக்கருவேலை மரங்கள் சாக்கடை தண்ணீர் குடித்து அவ்வளவு செழிம் பாக இருக்கிறதா அல்லது மழைத்தண்ணீர் குடித்து அப்படி இருக்கிறதா என சொல்லாடல் செய்யலாம்.

ஆனால் இவன் அதற்கெல்லாம் தயாராக இல்லை.இவனது ஒரே பிரச்சனை இப்போதைக்கு ஊரின் கழிவு நீரில் பாதியை இங்கு குட்டையாக தேக்கி வைத்து காட்சி தருகிற இதிலிருந்து பிரிந்து போகிற சாக்கடையை வண்டி கடக்க வழி செய்ய வேண்டும்.அதற்கானதை எப்படி செய்வதெனவே இப்பொ ழுது யோசிக்க வேண்டும்.

என்னசெய்யலாம்,சொல்லுங்கள்எனஅந்தஅதிகாலை நேரத்திலேயே பட்டறை போடஆயத்தமாய் இருந்தசுந்தரத்திடம்கேட்டு அருகிலிருந்த அவரது சொந்தக் காரரின்படப்பிலிருந்துகம்மந்தட்டை கட்டுகளைஉருவி எடுத்துக்கொண்டான்.

இவனேநேரடியாய்சென்றுஎடுத்திருக்கலாம்,படப்புக்காரன் ஒன்றும் சொல்லப் போவதில்லைதான், இருந்தாலும் கூட ஒரு ஆளை சேர்த்துக் கொண்டு போய் எடுப்பதுஉசிதமாய்ப்பட்டது,படப்புக்காரன்ஒரு சிடுமூஞ்சி.ரெண்டும் கெட்டான் வேற/எந்நேரம் என்ன பேசுவான் எனத் தெரியாது, ரெண்டாவது ஈஸியாக சண்டை இழுத்து விட்டுவிடுவான் யாரும் எப்படியும் சண்டை போட்டு சாகட்டும் என,

ஆனால் அவனது செய்கைகளைப்பார்க்கும் போது அப்படி இருக்காது. ரொம்ப வும் நாகரிகமாகப்பேசுவான்,ரொம்பவும் நாகரிகமாக சிரிப்பான், ரொம்பவும் நாகரீக மாக கைகொடுப்பான்.ரொம்பவும் நாகரீகமாக தோள் தட்டிக் கொடு ப்பான்,

அவன் போட்டிருக்கிற வெள்ளைச்சட்டைக்கும், அவனது செய்கைக்கும் துளியும் சம்பந்தம்இல்லாதது போல் நடந்து கொள்கிற படப்புக்காரனின் செய்கை இவனுக்குத்தெரியும் ஆகவே இப்படி,,,?

பத்துகட்டுகளாவதுதேறும் சின்னச்சின்ன கட்டுகளாய் இருந்தது.போதும் தேவையானால் பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்கிற மனோ நிலையில் கம்மந் தட்டை கட்டுக்களோடு வந்தவன் சாக்கடையில்பெரிதுபெரிதான கற்களை எடுத்துப் போட்டான், வண்டியின் அகலத்திற்கு வழி அமைத்தது போல இரண்டு பக்க முமாய்/ அது இருந்தது சாக்கடை குட்டையின் ஓரமாய் முளைத்துக்கிடந்த முட்செடிகளின் கீழாக,,வீடு கட்டுபவர்கள் வேறுமண் சுவர் வைத்து தொழுவம் கட்டுபவர்கள் தேவை போக மிஞ்சியவற்றை தேவை யில்லை என அங்கு கொண்டு வந்து போட்டிருந்தார்கள்.அதுவே ஒரு சிறு குவியலாய் காட்சிப் பட்டு தெரிந்தது. பாலம் பாலமாக அகலமாய்த் தெரிந்த கற்கள் சாக்கடையின் வழவழப்பையும் நெளு நெளுப்பையும் குறைக்கும். அதன் மீது கம்பந்தட்டை கட்டுகளைப் போட்டு பரத்தினான். கம்மந்தட்டை விரித்துப் போடப் பட்டிருந்த ரோட்டைப் போல் பரத்தி அகலம் காண்பிக்கவும், கரடு முரடாய் தெரிந்த கற்களின் மீது மாடுகள் மிதிக்க ஏதுவற்றதாய் இருப்பத்தைத் தவிர்க்கவுமாய்,,/

இப்பொழுது இரண்டடிஆழத்திற்கும்மூன்று அடி அகலத்திற்குமாய் வாய் பிளந் திருந்த சாக்கடைபாதைஅமைந்து வழிகாட்டியது,இப்பொழுது பரப்பி வைத்திருந்த கம்மந்தட்டைகளின் மீது சாக்கடையில் இருந்து அள்ளிய கட்டியான மண்ணை பரப்பிய கம்மந்தட்டை மீது மண்வெட்டியால் அள்ளி பரப்பிப் போட்டான், அள்ளிப்போட்ட மண் கம்மந்தட்டை வழுக்காமல் இருக்க என்கிறகைகோர்ப்பில் சாக்கடையில் போடப்பட்டிருந்த பெரிய கற்களும் ,அதன் மீது பரப்பட்டிருந்த கம்மந்தட்டைகளும், அதன் மீது போடப்பட்டிருந்த கெட்டியான சாக்கடை மண்ணும் எல்லாம் ஒன்று சேர்ந்து கை கோர்த்து கட்டிப்பட்டுப் போனது,

கட்டிப்பட்டுப்போன மண்மீது ஏறி காலை அழுந்தப்பதித்து நடந்து பார்த்தான், இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கமாய் நடந்து பார்த்தான், அந்தப் பக்கமிருந்து இந்த பக்கமாய் நடந்து பார்த்தான்,எப்பிடி இருந்து எப்பிடிநடந்து பார்த்தாலும் இவன் போட்டப்பாதை இவனுக்கு பழுது பட்டுத் தெரியவில்லை,

கொஞ்சம் நெலு நெலுப்பு பட்டுத்தெரிந்த மண் மீது இரண்டு தடவை வண்டி ஏறி இறங்கினால் சரியாகிப்போகும்.தடம் விழுந்து விடும் அப்புறமென்ன ஈஸி யாக வண்டி போகும் என்கிற நினைப்புடன் வயக்காட்டின் கரைக ளில் இருக்கிறமேடுபள்ளங்களைசரிசெய்துவிட்டுகையோடுகொண்டுவந்திருந்த
மிச்சகம்மந்தட்டை கட்டுகளை கரையில் இருந்த வாய்க்காலில் போட்டு விட்டுநிரப்பி விட்டு நம்பியின் வயக்காட்டில் இறங்கி வயக்காட்டின் இரண் டரை அடி உயரக்கரை மண்வெட்டி கொண்டு இழுத்து சரி செய்து பாதை உருவாக்கி விட்டு பிச்சை மாமாவுக்கு தகவல் சொல்லி விட்டான்.

பிச்சை மாமா இந்நேரம் வண்டியில் குப்பையுடன் ரெடியாய் இருப்பார்.முதல் வண்டி குப்பை மட்டுமே பிச்சை மாமா அடித்தார்,இரண்டாவது வண்டியிலி ருந்து இவன்தான் அடித்தான்.பிச்சை மாமா கூடச்சொன்னார். வேண்டாம்டா மாப்பிள, மொரண்டு பண்ணுற மாட்ட வச்சிக்கிட்டு நா படுற பாடு போதாதா,,,,? நீ வேற பாடா படணுமா,,,,,?என்கிற பிச்சை மாமாவின் பேச்சையும் மீறி இவன் குப்பை அடித்ததை விட குப்பை அடிப்பதற்காய் போடப்பட்டிருந்த பாதை பெத்த வாடு அப்பாவிற்கு மிகவும் பிடித்துப்போனது.

என்னதான்மனம் பிடித்துப்போனாலும் சிலவற்றை கலைக்கத் தானே வேண் டியி ருக்கிறது.கலைத்தான். 

சாக்கடையிலிருந்துகம்மந்தட்டைகளையும்கற்களையும்எடுத்துபோட்டுஅப்புற
ப் படுத்தினான்.இவன் அப்புறப்படுத்திய தினத்திலிருந்து சாக்கடை நன்றாக ஓடியதாகச்சொன்னார்கள்.

இவன் அப்படியாய்சாக்கடையிலிருந்து கம்மந்தட்டைகளையும் கற்களையும் அப்புறப் படுத்திய தினத்தன்று நிறை கண்மாய் நீரில் மாடுகளை குளிப்பாட்டப் போன போது வழக்கம் போலவே சண்டித்தனம் பண்ணிய முரட்டு கூர்க்கொம்புக் காளை பிச்சை மாமாவை தண்ணீருக்குள்ளாய் தூக்கி தள்ளி விட்டது.சுதாரித்து எழுந்த அவர் எட்டி மாட்டின்மூக்காணங்கயிற்றை பிடித்துக் கொண்டு மாட்டை விளாசி விட்டார் விளாசி.

தண்ணீருக்குள் கிடந்ததற்கும் அதற்கும் உடம்பெல்லாம் தடிப்புத்தடிப்பாய் வீங்கிப்போய் விட்டது.அதை வாங்கிய யாரும் ஒரு மாதத்திற்கு மேல் வைத்தி ருந்ததாய் சரித்திரம் இல்லை.இல்லாத சரித்திரத்தை புனைந்து உருவாக்கிய வராய் ஆகிப்போனார் பிச்சைமாமா அந்த மாட்டை வாங்கிய நாளிலிருந்து/

அது போலத்தான் பி.டி வாத்தியாரும் அடங்காத மாடு ஒன்று வைத்திரு ந்தார், ஒரு நாள் களத்தில் புனையல் போடும் போது முன்னால் போய்க் கொண் டிருந்த மாட்டுக்காரரை தூக்கி தள்ளிவிட்டு விட்டது. கோவங்கொண்டு ஓடி வந்த பி டி வாத்தியார் களத்தின் அருகில் கீழே கிடந்த கல்லை தூக்கி மாட்டின் கொம்பு மீது போட்டு விட்டார்.மாட்டின் ஒற்றைக் கொம்பு அந்த இடத்திலேயே ஒடிந்து போனது.கொம்பு ஒடிந்த அந்த கணத்திலேயே மாடு அந்த இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தும் போனது. அதற்கப்புறமாய் பி டி வாத்தியார் வேறொரு மாட்டை வாங்கவில்லை.இருந்த ஒற்றை மாட்டையும் விற்று விட்டு பேசாமல் இருந்து விட்டார்,என்ன செய்யப்பா அது கொஞ்சம் சண்டித் தனம் பண்ணுற மாடுன்னாலும் கூட அது இருந்த யெடத்துல இன்னொரு மாட்ட யோசிச்சி பாக்க முடியல/

அது போலவே இப்பொழுது பிச்சை மாமாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார் சிறிது நாட்களாக/சொன்ன சொல் அப்படியேநிற்கமனம்சம்மதத்திற்குள்ளாக வில்லை முழுமையாக/

முட்டைவிட்டதண்ணீர்முழுமையாகவெளித்தெரியவில்லையாயினும் கூட கட்டி நின்ற தண்ணீர் தன்னை காட்சிப்படுத்திச் சென்றது.

நேற்றைக்கு முன் தினம் இரவு வந்த கனவில் பெரிதான கண்மாய் வந்தது. கலங்க லான புதுத்தண்ணீர் பார்க்க கலங்கலாக இருந்தது.மழை நாட்களில் கரிசல் காட்டுத்தண்ணீரும்,செவல் தரைத் தண்ணீரும் ஒன்று சேரும் கண் மாய் அது. அப்படி சேரும் நீருக்கு தனிகுணம்இருக்கும் எனச்சொன்னார் கள்.

வடக்கே உன்னி பட்டிகாடுகளிலிருந்து செவல் தண்ணீரும் கலுங்குக் காடுக ளிலி ருந்து இருந்து வருகிற கரிசல்க்காட்டுத் தண்ணீரும் மழை நாட்களில் கை கோர்த்து கலக்கும் போது கண்மாய்க்கும் கலக்கிற தண்ணீருக்கும் கூடுதல் பலம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்/

கொண்டு போன இரு சக்கர வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு நீண்டுபோனகண்மாய்க்கரையில்ஒருதடவைபோய்திரும்பியபோது கண்மாய் சுருங்கி பெரிய கிணறாய்த்தெரிந்தது.

இப்போது கண்மாய்க் கரையின்இருமருங்கிலுமாய்தெரிந்ததூர்பெருத்த இச்சி மரங்களைக்காணோம்.கரைதுவங்குகிறஇடத்தில்இருந்தஅய்யனார்கோவிலைக் காணோம்.நன்றாகஎடுத்துக்கட்டியிருந்தார்கள்முன்புஒருமுறைபார்த்தபோது.

முன்னெல்லாம்கோயிலுக்குள்போகமுடியாது.நெருஞ்சிச்செடிகளும்,கோரைப் புற்களும், இன்னும் பெயர் தெரியாத செடிகளுமாய் கைகோர்த்தும் உடல் உரசியுமாய் கிடக்கும். சாமி சிலையும் மற்ற சிலைகளுமாய் நிற்க வைக்கப் பட்டிருக்கிற இடத்தில் மட்டும் கொஞ்சம் இடம் விட்டு செதுக்கியிருந்தார்கள்.

பரவாயில்லை அந்த அளவிற்கு என நினைக்காமல் இப்பொழுது தைரியமாக கோயிலுக்குள் போய் வரலாம் ,நெருஞ்சியும் கோரைப்புல்லும் சிமெண்ட தரை யாக மாறியிருந்தது.

வழக்கமானடிசைன்போட்டஹாலோபிளாக்கற்கள்தான்.கோயிலின்கேட்டைப் பூட்டியிருந்தார்கள்.உள்ளேபோகமுடியவில்லை.எப்பொழுதோஎதற்காகவோ நினைத்து வேண்டியிருந்த தேங்காயை அன்று போன பொழுது உடைத்து விட்டு வந்தான்.உடைந்த தேங்காயின் சின்ன சில் ஒன்று இடைவெளி விட்டுத் தெரிந்த கிரில் கேட்டு வழியாக உள்ளேபோய் விழுந்தது.

இப்போது அன்று விழுந்த தேங்காய்ச் சில்லைக்காணோம். கோயிலையும்
காணோம். கோயில் இருந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி கண்மாயாக காணப் பட்ட இடம் கிணறாக உருமாறித்தெரிந்தது.

நிறைகிணறாகதெக்தெக்கென நிறைந்து நின்ற தண்ணீர் கலங்கலாகவும் புதுத் தண்ணீர் போலவுமாய் தெரிந்தது.மழை பெய்து காடுகளில் தண்ணீர் புரண்ட நாட்களில் கரிச ஊருணியில் இது போலாய் புதுத் தண்ணீரைப்பார்க்கலாம்.

அந்தப் பக்கமாய் காட்டுக்கு வேலைக்குப்போகும் போது ஊருணியில் தண்ணீர் மோந்து கொண்டு போயிருக்கிறான்.

இவனிடம்இவனதுபாட்டியோஅம்மாவோசொன்னதாகநினைவு.அந்தஊருணிக் கரையில் இருக்கிற சுத்தமான கரிசல் மண்ணை எடுத்து தலைக்குத்தேய்த்து க்குளித்தால் தலை முடி பஞ்சு போல இருக்கும் என்பாள். இவனும் அப்படியாய் ஒரு சில தடவை ஒரு சிலருக்கு அங்கிருந்து மண் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறான்.

ஒரு தடவை அப்படி மண் எடுப்பதற்காகப்போன போது கரையின் ஓரம் மண் கிடைக்காமல் தண்ணீருக்குள் இறங்கி பிசுபிசுப்பான கொழகொழவென்ற மண்ணை தண்ணீருக்குள் இருந்து அள்ளி துண்டில் கட்டிக்கொண்டு முழங் காளவு அப்பியிருந்த கரிசல் மண்ணுடன் கரையேறி வந்த பொழுது தற்செய லாய்அந்தப்பக்கம் போன கிருணன்னன் இவன் கரையேறும் வரைகாத்திருந்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே கூடவே வந்தார்.

“ஊர் இருக்குற நிலையில இந்த மாதிரி அந்தி நேரத்துல ஒத்த சத்தையில வராத,இப்ப என்னகரிசமண்ண தேய்ச்சி குளிக்காட்டி குடியா முழுகிப் போகுது. ஆளுதாவளந்துருக்கயே தவிர இன்னும் வெளி ஒலக நிதானம் தெரியலையே, எங்கயும் எல்லா யெடத்துலயும் ஒரே மாதிரி இருக்காது புரிஞ்சிக்க.இப்ப நம்ம ஊருக்குள்ல நாலஞ்சி ஊரு இருக்கு புரிஞ்சிக்க.கொஞ்சம் சூதானமா இரு மண்ணள்ளவந்தேன்,,,,,,,,,,,,,,,,வந்தேன்னுபேசீட்டுத்திரியாதலூசுப்பயலே,அங்க பாத்தியா ஊரணிக்கரைக்கு அந்தப்பக்கம் ரெண்டு பேரு திரியிரத,இந்நேரம் நான்இங்க வரலையின்னா ஒருவேளை தண்ணியோட தண்ணியாபோயிருப்ப எனஅவர்சொன்னபிறகுதான்கவனிக்கிறான்.ஆமாம் உண்மையிலுமே ரெண்டு உருவங்கள் தெரிந்தன கரையின் அந்தப்பக்கமாய்/ அதைப்பார்த்த கணத்தில் மனதுதிக்கெனஆகிப்போனது.வாஸ்தவம் தானே, கிருஷ்ணன்னன் சொன்னது என நினைத்தவாறே தலையைக்குனிந்து கொண்டு நடந்தநாட்கள்நினைவுக்கு வந்தன.

மனம் நிறைந்த நினைவுகளுடன் தண்ணீருக்குள் குதிக்கிறான்.தலை துவட்ட கையில்துண்டுஇல்லை.பனியனைப்பிழிந்துஅரைகுறையாகவாவது துவட்டிக் கொள்ளலாம்.அல்லது இவன் கையிலிருந்த கர்ச்சிப்பே அரைத் துண்டு அளவி ற்காய் இருக்கிறது.

ராமநாதன் அண்ணன் இப்படித்தான் வைத்திருப்பார்.அவரது ஊர்பக்கமாய் ஒரு துஷ்டிவீட்டிற்குபோயிருந்த போதுதான் தெரிந்தது,அவர் மட்டுமல்ல அவரைப் போலவே பேண்ட் பாக்கெட்டில் பாதித்துண்டும் மீதித்துண்டு வெளி யிலுமாய் கர்ச்சிப் போலதொங்குகிறகாட்சியைப்பார்க்கலாம்.

சிலநேரம் பேண்ட் பாக்கெட்டின்னுள்ளாக சில வேளை வலது அல்லது இடது தோளில்தொங்கிக்கிடக்கும்.அந்தவகையில்இவன்வைத்திருக்கிறகர்ச்சீப் (துண்டு)பரவாயில்லைபோலிருக்கிறதுதான்,அவரிடம்கேட்டால்சொல்லுவார். இது மட்டுமில்லை இந்தா பாரு என தோள்பையினுள்ளாக இருக்கிற தண்ணீர் பாட்டிலின் அருகாமையாய் இருக்கிறதுண்டைஎ டுத்துக் காட்டுவார். இருக்க ட்டும்எதற்கும்எனவைத்துக்கொள்வதுதான்.எதற்காவதுஆகும்எனக்குஇல்லை யானால் கூட இதோ உன் கூட்டாளிகளுக்கு ஆகிப்போகும் பார் எனச் சிரிப்பார்.

அதாவதுப்பா என ஆரம்பித்தால் அவராட்டம் தண்ணீர் குடிக்காமல் பேசுவார், அவரது பேச்சில் கள்ளம் கபடம் இருக்காது,அதை விட பேச்சின் ஊடாய் அவர் சிரிக்கிறசிரிப்பிருக்கிறதே,அடேயப்பாகேட்கவும்காணவும்கோடிப்புண்ணியம்  செய்திருக்க வேண்டும்.

அவரது பேச்சுடனான துண்டும் ஞாபகத்திற்கு வர தண்ணீரில் குதித்தான், உட லும் மனதும்ஒரு சேர நனைந்துகுளித்து வருடங்கள் ஒரு சில ஆகிப் போயின.

காலையில் ஐந்தே முக்கால் அல்லது ஆறுமணிக்கு எழுந்ததுமாய் குடிக்கிற ஒரு ஸ்டார்ங் டீயுடன் சட்டையை போடுக்கொண்டோ அல்லது வெற்றுட ம்புடனோமல்லப்பனின்டீக்கடையில்போய்தான்நிற்பான்.அங்கும்ஒருஸ்டாரங்,  முடிந்தால் இன்னொன்று என அடுத்தத்ததாய் குடிப்பான்.

டீக்கடைக்காரர் கூட வைவார்.ஏண்டா இப்பிடிச்செய்யிற எப்பிடிச்சுத்தியும் வீட்ல ஒரு டீக்குடிச்சிருப்பயில்ல.அப்பறம் இங்க வந்து ஒரு டீ,சமயத்துல சேந்தாப்புல அடுத்தடுத்தாரெண்டு டீ க்குடிச்சிப்புடுற,ஒடம்பு என்னத்துக்கு ஆகும்ப்பா,,நீ எத்தன டீக்குடிச்சாலும் எனக்குத்தேவை காசுதானப்பா,இப்ப ஒண்ணும் தெரியாது,ஒடம்பு எல்லாத்தையும் வாங்கி வச்சிட்டு மொத்தமா திருப்பிக்குடுக்கும்.அப்புறம் ஐய்யோன்னாலும் வராது,அம்மான்னாலும் வராது பாத்துக்க என்பார்.பதிலுக்கு சிரித்துக்கொள்வான் இவனும்/அந்த சிரிப்பிற்கும் பேச்சிற்கும் ஊடாக இரண்டு டீ கைமாறியிருக்கும் கடைக்காரரிடமிருந்து /கையில் வாங்கியதை வாயில் ஊற்றிவிட்டு காசு கொடுத்து முடிக்கிற மாயக்கணத்தில் வேறொரு லோகம்/
அப்படித்தான்தெரிந்தது பக்கத்து ஊரிலிருந்து காளியப்பனை அடிப்பதற்காய் ஆட்கள் வந்து நின்ற அன்றும்/
உடம்புதுடைத்தஈரத்துண்டைசைக்கிளின்ஹேண்ட்பாரில்காயப்போட்டவாறு அன்றாடம் கூலி தேடிபோய்வருகிறகாளியப்பனை அப்புராணி என்பார்கள்.
அவன்வேலைபார்க்கிறமில்லில்ஏற்பட்டசின்னப்பிரச்சனை பெரிதாகி அடிக்க வரும் வரை கொண்டுவந்துவிட்டிருக்கிறது.நல்ல வேலை அவர்கள் வந்த நேரம் காளியப்பன் அங்கு இருக்கவில்லை.
மில்லுக்குஇரவுலாரியில்வந்தலோடைஇறக்கஆளில்லாததால்மில்முதலாளி ஷிப்ட்முடிந்துபோகும்போதுஒருலோடுசரக்கையும் இறக்கி விட்டுப் போகச் சொன்னார், இவனும்உடன்வேலை பார்க்கிற பரமசிவனும்தான் இறக்கினா ர்கள்.
விஷயம் மறுநாள்வேலைக்கு வந்த லோடு மேன்களுக்குத்தெரிந்து போன து, மில் முதலாளிசொல்லிக்கூட கேட்கவில்லை அவர்கள்,எப்படிஅவர்கள் எங்களது வேலையைச்செய்யலாம்என்பதேஅவர்களது மிகப்பிரதானமான கேள்வியாயும் லோடு இறக்கியதன் மூலமாய் கிடைத்த கூலியை எங்க ளுக்குத்தந்தேஆகவேண்டும்என்பதேஅவர்களின்மிகப்பிரதானமான பேச்சாய் இருந்தது.
இதை முதலாளி உட்பட யாரும் ஏற்கவில்லை.தப்புதான் ,அவர்கள் லோடு இறக்கியது.லோடு வந்ததும் உங்களைத் தேடி னோம்நீங்கள் ஆள்கிடைக்க வில்லை.எங்களுக்குஒரு அவசரம். இறக்கி விட்டோம் இவர்களை வைத்து, அதனால் உங்கள் உரிமை பறிபோய் விட்டது எனச்சொல்வது எப்படி ஞாயம் ஆகும்,இது சரியில்லை, வேலை நடக்கிற இடத்தில் இப்படி வந்து பிரச்சனை பண்ணுவதுநல்லதில்லைஎனமில் முதலாளி சொன்னதும் அவர் களதுவார்த்தைக்கு மடங்கி சரி சரி எனப்போனவர்கள்இப்பொழுது காளியப் பனை வந்து பிடித்துக் கொண்டார்கள்.
லோடைஇறக்கியதும்அதன்மூலம்கிடைத்தகூலிபறிபோனதும்மட்டுமில்லை, இதுவரைதாங்கள்நிலைநாட்டிவந்தஉரிமை பறிபோய்விட்டது இதன் மூலம், நாளைப்பின் யார் வேண்டுமானாலும் மில்லில்வந்துலோடுஇறக்குவார்கள் ஏற்றுவார்கள்,ஆகவே இவனை ரெண்டு தட்டு தட்டினால் கொஞ்சம் பயம் இருக்கும்எனநினைத்துநாலுபேர்வந்திருக்கிறார்கள்முரட்டுத்தனமும்போதை யுமாக/
வந்தவர்கள் அங்கு நின்றிருந்த மாட்டு வண்டியிலிருந்த ஊணு கம்புகளை ஆளுக்கொன்றாய் பிடுங்கிக்கொண்டு சப்தம்போடஆரம்பித்திருக்கிறார்கள் நாரசவார்த்தைகளால்/பக்கத்துவண்டியில்பக்கத்துவண்டியில்படுத்திருந்த தங்கவேலு மாமாவிற்கு விஷயம் புரிய கொஞ்சம் தாமதமானது. 
என்னஏது என போய் கேட்ட அவரைசப்தம்போட்டவைதஇளவட்டங்களில் ஒருவன் அவரது நெஞ்சைப்பிடித்துத்தள்ளி விட்டு விட்டான்.
மெலிந்துஒடிசலானஉருவம்.இழுத்துக்கட்டிய கட்டம் போட்ட கைலி. கள்ளி ஜிப்பா,அரைஜான்நீளத்திற்கு முகத்தில் ஒட்டவைக்கப்பட்டது போல் தொங் குகிற தாடி,ஆனால் அவரது தோற்றத்திற்கும் அவரது குரலுக்கும் சம்பந் தம் இருக்காது.அதிலும் இரண்டு சொட்டு ஜலம் உள்ளே போய் விட்டால் போதும்.ஏயப்பா மந்தையையே ரெண்டு படுத்தி விடுவார்.அடப்பாவி மூடிய மோந்து பாத்ததுக்கே இந்தப்பாடா,,?என வையாதவர்கள் பாக்கி இருக்காது,
எப்பொழுதுமே மிகக்குறைச்சலாகவே குடிக்கும் தங்கவேலு அன்று கொஞ் சம் கூட போலும்,அவரைப்பொறுத்தவரை கூடுதல் என்றால் ஒரு மடக்கு ஜாஸ்தி அவ்வளவே,,,,,,,,/அப்படியான மறுநாளின் மறு நாட்களில் என்ன மாப்புளரொம்ப ஓவராசத்தம் போட்டுட்டேனா,,,,?என்பார்,இவனிடம்,அட போ மாமாநீஒண்ணு,பேசாமகெடக்காமகழுதையப்போயிக்குடிச்சிக்கிட்டு ரெண்டு சத்தம்போட்டுக்கிட் டு ஒடம்ப வேற கெடுத்துக்கிட்டு திரியாட்டித் தான் என்னவாம் இப்ப என்கிற இவனது பேச்சிற்கு ஆட போண்ணா மாப்புள அங்கிட்டுநீஒண்ணு/என்னத்தக்கண்டம்இப்பிடியேஇருந்து, கழுதை இருக்குற வரைக்கும் ஆண்டனுபவிச்சி செத்துப்போக வேண்டியது தான என்பார். அதுசரி செத்துப்போனா பரவாயில்ல, இழுத்துக்கிட்டுக் கெடந்தா, நேத்து போதையிலசளம்பீட்டுகீழவுழுந்துருக்க,நீயிவிழுந்தயெடத்துக்குபக்கத்துலயே கல்லுஒண்ணு பெரிசா கெடந்திச்சி.ஓன் தலை மாட்டுல கெடந்த கல்லு தலையிலபட்டுருந்துச்சின்னாபோகவேண்டியதுதாபரலோகத்துக்கு அப்புறம் ஓங் மக ஒத்தக்கதிராஆள்தொணையில்லாம நிப்பா ஆமா சம்மதமா ஒங்க ளுக்கு அது.செய்யிறது எதையும், யோசிச்சி செய்யி மாமா,எனச்சொன்ன இவனுக்கு தங்க வேலு மாமாவின் மகள் மீது ஒரு பிரியம் இருந்தது.
கட்டினால் அவளைத்தான் கட்ட வேண்டும்எனஅம்மாவிடம்சொன்ன போது அடசண்டாளப்பயலே,ஒங்கப்பாஇந்நேரம்உயிரோடஇருந்திருந்தாஇந்தப்பேச்சுப்பேசுவயா,,ஆம்பளஇல்லாதவீடுதான்,என்னவேணாலும் அம்மாகிட்டவரைமுறையில்லாமபேசாலாம்ன்னுநெனைச்சிகிட்ட,/ அப்பிடித் தானலூசுப்பயலேஒன்னையெல்லாம்,,,,கேட்டநாக்கக்கொள்ளிக்வச்சி பொசுக் கணும். பொசுக்கி/
அவுங்களும்ஒங்கப்பாவும்ஒருகாலத்துலஒண்ணாகூலிவேலைசெஞ்சிக்கிட்டுத் திரிஞ்சவுங்கடா,ஒங்க அப்பா எது செஞ்சாலும் அவருகிட்ட ஒரு யோசனை கேட்டுக்கிட்டுத்தான் செய்வாரு. அவரும் ஒங்க அப்பாவ கலக்காம எதுவும் பண்ணமாட்டாரு.நம்மபோதாதகாலம்ஒங்கப்பா அல்பாயிசுல போயிட்டாரு. அவரு இப்ப ரெண்டு ஆட்டுக் குட்டிகள் வச்சிக்கிட்டுபொழப்பஓட்டிக்கிட்டு இருக்காரு.அவரோடமகளையெல்லாம்நம்ம வீட்ல வச்சி பொத்திப் பொத்தி பாதுகாக்கணும்டா,அத வுட்டுட்டு கிறுக்கன் மாதிரி ஏதாவது பேசிட்டுத் திரியாத தெரிஞ்சுதா மொகத்துல முடி மொளக்கிற வயசுல வர்ற ஆசை தான் இது.முடிய சவரம் பண்ணி விட்ட மாதிரி இதையும் வெட்டி எரியத் தெரியணும் என்றாள் அம்மா/
ஒருதடவைஅம்மாவிடம் இது பற்றிப்பேசியதுதான் அடுத்து பேசவில்லை. தங்கவேலுமாமாவின்மகளைவேறுஎதற்காகவும்இவனுக்குப்பிடித்திருக்கவில் லை.அவள்வாயில் சப்புக் கொட்டியவாறே தாளம் இசைத்துக்கொண்டு அழகாகப்பாடுவாள்.அவள்பாடுகிறவேலையில் அவளது கருத்த ஒடிசலான உருவம்மறைந்துகுரல் மட்டுமே காதுகளையும் மனதையும் நிறைக்கும், ஒரு தடவை கம்மங்காட்டில் கருதருத்துக்கொண்டிருக்கும் போது மெய் மறந்து பாடிக்கொண்டிருந்தவளின் பின் புறமாய் பெரிய நல்லபாம்புஒன்று நெளிந்துஓடியதைஅவள் கவனிக்கவில்லை.கவனித்து விட்ட இவன் அவள் அவளது கையைப்பிடித்து இழுத்து வந்து தூரத்தள்ளி விட்டு விட்டான்.கூட வேலை பார்த்தவர்கள் பதறி ஓடிவர நடந்த விசயம் ஒன்ன இவனை உச்சி மோந்து கொண்டாடி விட்டார்கள்.அட பாதகத்தி மகளே செத்த ஒடத்துல ஓங்பாட்டுச்சத்தம்நிக்கத்தெரிஞ்சிச்சேடி.யாருபண்ணுனபுண்ணியமோ, தம்பி வந்துகாப்பாத்துச்சி,என்னாஅப்பிடிப்பாக்குறவ,நாங்களும்கவனிச்சிக்கிட்டுதான் வர்ரோம்ஒங்கரெண்டு பேரோட நடவடிக்கைய,தம்பி காட்டுக்கு வேலைக்கு வரும் போது ஓன் மனசுக்குறெக்கமொளச்சிருது.ஓன் பாட்டுல கூடுதல் ஒட்டுதல தெரியுது. தம்பியும்அப்பிடியே யெழஞ்சிக்கிட்டே திரியுது. என்ன மோ பாத்து இருந்துக்கங்க,ரெண்டுபேரும் மனசுலஆசையவளத்துக்கிட்டு அப்பறம்கெடைக்காதஒண்ணுக்காகதொண்ணாந்துக்கிட்டுதிரிஞ்சகதையாகிப் போகும் என்பாள் எப்பொழுதுமே வாய்த்துடுக்காகப் பேசும் நாகவள்ளி அக்கா.
அவளதுபேச்சின்சூடும் ஆத்தாமையும் தங்கவேலு மாமாவிடம் போக தங்க வேலுமாமாசொன்னகணத்தில்தங்கவேலுமாமாஇவனதுஅம்மாவிடம்சொல்ல இவனதுஅம்மாஇவன்ஆசையை சொன்ன கணத்தில் ஆசையின்முனையை தீ வைத்து கருக்கி விட்டாள்.
அன்றிலிருந்துஒருவாரம்வரைசரியாக சோறுதண்ணிஇறங்காமல்அம்மாவி டமும் தங்கவேலு மாமாவிடமும் பேசாமல் இருந்தவன் வேற்றுஊர்க்கார் கள்வந்துதங்கவேலுமாமாவின்நெஞ்சில்கைவைக்கவும் முன்னால் போய் நின்றிருக்கிறான் கோபமாகவும் முறைப்பாகவும்.
ஏ பெரிசு நீ என்ன ஒங்க ஊருல பெரிய ஆளா ஒன்னைய தொட்ட ஒடனே அவன் வாரான்,ரெண்டும் பேரும் ஒழுக்கமா இங்கனயிருந்து போயிருங்க, இல்லவகுந்துருவம்வகுந்து என தங்கவேலு மாமாவின் நெஞ்சை பிடித்துத் தள்ளியவனை ஓங்கி அறைந்து விட்டார்.போதையில் இருந்த அவன் அடி தாங்காமல் சுருண்டு விழுந்து விட்டான்,
அந்நேரம்வரை வாய்ச்சண்டையாகஇருந்தது கைகலப்பாக மாற அந்நேரம் மந்தையில் இருந்தவர்கள் அவசரத்திற்கு கண்மாய்க்கரைப்பக்கமாய் போய் வந்தவர்கள்என கூடிவிட்ட கூட்டம்விலக்கிவிட்டும்சண்டைநிற்கவில்லை. விஷயம் கேள்விப்பட்டுதங்கவேலுமாமாவின்மகள் கையோடு காளியப்ப னைகூட்டிக்கொண்டுவந்துவிட்டாள்.கையில்அரிவாள்மனையைதூக்கிக்கொண் டு/ 
ஏண்டாநாய்களாஎங்கவந்துயாருகிட்ட தகராறு பண்ணிக்கிட்டு இருக்கீங்க/ அவள்சப்தம்போடவும்சேர்ந்துவிட்டஆட்களில் சிலர் அவளுடன் கைகோர்த் துக் கொண்டு தகராறு செய்ய வந்தவர்களை துவைத்து விட்டார்கள் துவை த்து/அப்புறம்தன்காளியப்பன்சொன்னான்.விஷயத்தை/அப்புறமாய்சமாதானம் பேசி அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
அப்படியாய் சமாதானம் பேசி அனுப்பிவைத்த அடுத்த முகூர்த்ததில் தங்க வேலு மாமாவின் மகளுக்கும் காளியப்பனுக்கும் கல்யாணம், நடந்தது.  
சொல்லாமல்கொள்ளாமல்உள்ளேநுழைந்தகாற்று திறந்திருந்த கதவை தனது சின்னக்கால்களால்சற்றேபலமாய் எட்டி உதைத்து விட்டு வந்த வழியாகவே திரும்பிச்சென்று விடுகிறது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தென்றல் ஆறுதலாய் வருடும் என்று நினைத்தால்...

ஆரம்பமும் முடிவும் இணைக்கும் விதம் தென்றல் காற்றாய்...

Thulasidharan V Thillaiakathu said...

ஆரம்பமும் முடிவும்...இணைத்துச் சொன்ன விதம் அருமை.....தென்றல் பலரது வாழ்க்கையிலும் இதமாக இருப்பதில்லைதான்....வாழ்வின் நுண்ணிய அலசல்....விவரணம் அருமை...